Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Washindonil Vivek
Washindonil Vivek
Washindonil Vivek
Ebook109 pages49 minutes

Washindonil Vivek

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Washindonil Vivek

Read more from Rajeshkumar

Related to Washindonil Vivek

Related ebooks

Related categories

Reviews for Washindonil Vivek

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Washindonil Vivek - Rajeshkumar

    24

    1

    விவேக்கிற்கு ஹாட்லைன் டெலிபோன் மூலமாக அந்த செய்தி வந்தபோது அவர் டி.வி.ஸ்டார் ப்ளஸ்ஸில் மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியை ரூபலாவோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

    க்ளோஸப்பில் தன் முல்லைச்சர பல்வரிசையைக் காட்டி சிரித்த அழகியை லட்சியம் செய்யாமல் தன் உத்யோக ட்ரஸ்ஸான க்ரீம்நிற சஃபாரிக்கு மாறினான்.

    சுவர்க் கடிகாரம் ராத்திரி பத்தரை மணியை முட்களை அகட்டி வைத்துக் காட்டியது.

    ரூபலா ஷுக்களை துடைத்துக் கொண்டே கேட்டாள்:

    போன் எங்கிருந்து...?

    சி.பி.ஐ.யிலிருந்து...

    எதுக்கு...?

    போனாத்தான் தெரியும்... ரொம்பவும் அவசியம் அவசரம் இல்லாமே இந்த அகால நேரத்துல ஹாட்லைன் டெலிபோனை யூஸ் பண்ணமாட்டாங்க...

    வர லேட்டாகுமா...?

    அங்கே இருக்கிற நிலைமை தெரியாம எப்படி சொல்றது?

    ரெண்டு நாள் ஃப்ரீயா இருந்தீங்க... டிபார்ட் மெண்ட்டுக்கு பொறுக்கலை. உடனே ஹாட்லைன் டெலிபோன்

    கடமை கண்ணே...! கடமை...!

    நீங்க பேசாம ஒரு தாலுகா ஆபிஸ் க்ளார்க்கா இருந்திருக்கலாம். இந்த ராத்திரி வேளையில் இப்படி உடுப்பை மாத்த வேண்டிய அவசியம் இருக்காது...

    விவேக் சிரித்தான். அடுத்த ஜென்மத்துல நான் தாலுகா ஆபீஸ் க்ளார்க்தான்... மறக்காம கல்யாணம் பண்ணிக்கோ... மாம்பலம் ரங்கநாதன் தெருவில ஒரு சின்ன வீட்டை வாடகைக்கு எடுத்துகிட்டு ஒண்டிக் குடித்தனம் நடத்தலாம்...

    அது உத்தமமா இருக்கும்...

    விவேக் ஷுக்களை மாட்டிக்கொண்டு நிமிர்ந்தான்.

    எங்கே என் காதலி...?

    வேணுமா...?

    இது ராத்திரி நேரம் இல்லையா...? காதலி கைவசம் இருக்கிறது அவசியம்...

    ரூபலா பக்கத்து அறைக்குப் போய் சுவரோடு அப்பியிருந்த வார்ட்ரோப்பைத் திறந்து - தொங்கிக் கொண்டிருந்த துணிகளுக்குப் பின்னால் கையை நுழைத்து அந்த வெர்கார்ட் மெட்டாலிக் ரிவால்வரை எடுத்தாள்.

    விவேக் அறைக்குள் எட்டிப் பார்த்துக் கேட்டான்.

    காதலி கர்ப்பமா இருக்காளா...?

    ரூபலா புல்லட் சேம்பரைத் திறந்து பார்த்துவிட்டு புன்னகையோடு நிமிர்ந்தாள்.

    முழு கர்ப்பம். ஆறு தோட்டாவும் இருக்கு...

    கொண்டா... விவேக் வாங்கி சஃபாரியின் உள் பாக்கெட்டில் பதுக்கிக் கொண்டு புன்னகைத்தான்.

    வரட்டுமா...?

    ம்...

    விவேக் வயர்லஸ் ஹெட்போன் இணைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை தலையில் கவிழ்த்துக் கொண்டு - அறையை விட்டு வெளியே வந்தபோது டி.வி. திரையில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வாங்கிய பெண் பாதி மார்புடன் தெரிய தலையில் கிரீடத்தை அணிந்து கொண்டு உலக மகா சந்தோஷத்தோடு காமிராவுக்கு பற்களைக் காட்டிக் கொண்டிருந்தாள்.

    விவேக் பைக்கிற்கு வந்து பரவி கிக்கரை உதைக்க - அது ஸைலன்ஸரில் நீலப்புகையை சிதற வைத்து ‘பகபக’ என்று அலறியது. ஆக்ஸிலேட்டரை முறுக்கி வெளியே வந்து குளிர் காற்று உடம்பைத் தழுவ பறந்தான்.

    ரூபலா கதவைச் சாத்தி தாழிட்டுக் கொண்டு ட்யூப் லைட் வெளிச்சங்களை அணைத்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பாரத்துக்கு பக்கத்தில் வந்து படுத்தாள்.

    கண்களை மூடினாள். தூக்கம் வரவில்லை. புரண்டு படுத்து நிமிடங்களைக் கரைத்துக் கொண்டிருந்த வளை - பக்கத்திலிருந்த டெலிபோன் முனகி கூப்பிட்டது.

    எழுந்து உட்கார்ந்து ரிலீவரை எடுத்தாள்.

    ஹலோ...

    மறு முனையில் கோகுல்நாத் சிரித்தார்.

    என்னம்மா ரூபலா... இன்னும் தூங்கலையா? டெலிபோன் முதல் ரிங் கொடுத்ததுமே ரிஸி வரை எடுத்துட்டியே...?

    என்ன... அங்கிள்... இந்த நேரத்தில... போன்...?

    நாளைக்கு ஒரு கேஸ் விஷயமா. விவேக்கும் நானும் பெங்களுர் வரைக்கும் போகவேண்டியிருக்கம்மா... அதைப்பத்தி விவேக்கிட்ட பேசணும்... அவர் பக்கத்துல இருந்தா ரிஸீவரை குடும்மா...

    அங்கிள்... அவர் வீட்ல இல்லை...

    எங்கேயாவது வெளியே போயிருக்காரா

    இல்ல... அங்கிள்... அவர் வந்து... சி.பி.ஐ.யிலிருந்து போன் வந்ததுன்னு சொல்லி புறப்பட்டுப் போனார்

    என்ன... சி.பி.ஐ.யிலிருந்து போனா...?

    ஆமா... அங்கிள்...

    போன் எப்ப வந்தது...?

    பத்தரை மணி சுமார்க்கு...

    இப்போ மணி பத்து ஐம்பது. விவேக் புறப்பட்டுப் போய் இப்போ இருபது நிமிடமாகுது...

    ஆமா... அங்கிள்...

    சி.பி.ஐ. எதுக்காக கூப்பிட்டிருக்காங்கன்னு உனக்குத் தெரியுமாம்மா...?

    தெரியாது அங்கிள்...

    பத்து விநாடி மவுனத்துக்குப் பின் கோகுல்நாத் தொடர்ந்து பேசினார்.

    ரூபலா... நீ இப்போ ஒரு காரியம் பண்ணணும்

    சொல்லுங்க அங்கிள்...

    சி.பி.ஐ. ஆபிஸ் போன் நெம்பர் தெரியுமா?

    தெரியும்...

    போன் பண்ணி விவேக் அங்கே வந்தாச்சான்னு கன்ஃபர்ம் பண்ணிக்கம்மா

    ஏன் அங்கிள்...?

    இந்த அகால நேர அழைப்பு என் மனசுக்குக் கொஞ்சம் வித்தியாசமா படுது...

    என்ன அங்கிள் ஏதேதோ சொல்லி பயமுறுத்தறிங்க!

    பயமுறுத்தலையம்மா... சி.பி.ஐ.யின் சீஃப் ஆபிஸர் வாத்ஸல்யன் டெல்லி மருத்துவக் கழக ஹாஸ்பிடல்ல ஹார்ட் ப்ராப்ளத்துக்காக ட்ரீட்மெண்ட் எடுத்துட்டிருக்கார்... இதனால் சி.பி.ஐ. சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளும் கடந்த ஒரு வாரமா முடமாகியிருக்கு... எந்த அஃபிஷியல் வேலையும் அங்கே நடக்கலை... எனக்கு வேண்டிய சி.பி.ஐ. ஆபீஸர் ஒருவர் கிட்டே இன்னிக்குக் காலையில் பேசிட்டிருக்கும் போது இந்த விபரங்கள் எல்லாமே தெரிஞ்சது.

    அப்படீன்னா... இவர்க்கு வந்த போன்கால் சி.பி.ஐ. ஆபீஸிலிருந்து வந்திருக்காதுன்னு சொல்ல வர்றிங்களா அங்கிள்!

    அப்படி உறுதியாயும் சொல்லிட முடியாது... இது ஒரு சந்தேகம்தான்... நீ போன் பண்ணிக் கேளம்மா...

    நீங்களே போன் பண்ணி விசாரிக்கலாமே அங்கிள்

    "நோ... நோ அது சரியில்லை... ஒருவேளை அந்த அழைப்பு உண்மையானதாயிருந்து அது விவேக்குக்கு விடுக்கப்பட்ட ரகசிய அழைப்பாகக் கூட இருக்கலாம். இந்த விஷயத்துல நான் மூக்கை நுழைக்கக் கூடாது. நீ விவேக்கோட ஒய்ஃப்ங்கிற முறையில்

    Enjoying the preview?
    Page 1 of 1