Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irandaavathu Nizhal
Irandaavathu Nizhal
Irandaavathu Nizhal
Ebook83 pages43 minutes

Irandaavathu Nizhal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Rajeshkumar
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466923
Irandaavathu Nizhal

Read more from Rajeshkumar

Related to Irandaavathu Nizhal

Related ebooks

Related categories

Reviews for Irandaavathu Nizhal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    G o o o d s t o r y

Book preview

Irandaavathu Nizhal - Rajeshkumar

1

ஏர்போர்ட்.

ஏர்பஸ் விமானம் 747 வந்து ஏர்வேயில் கால்களைப் பார்த்து நிற்க –

விமானத்தின் படிகளிலிருந்து -

இறங்கிவரும் நானூத்தி சொச்ச பயணிகளில் அதிபிரகாசமாய்த் தெரிந்தாள் சில்பா. கறுப்பு பனியன். ஊதா வர்ண மிடி. காற்றில் சிலும்பும் ஷாம்பு விளம்பரக் கூந்தல்.

உற்சாகம் ததும்பும் குரலில் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த தன் அம்மாவிடம் சொன்னாள்.

அம்மா! நம்ம தேசத்து மண்ணை மிதிக்கும்போது உண்மையிலேயே உடம்பு புல்லரிக்குது.

அம்மாக்காரி லட்சுமி புன்னகைத்தாள்.

எனக்கும் அப்படித்தான்.

லட்சுமி எளிமையாய் நூல்புடவை உடுத்தியிருந்தாள். போன மாதம் டெஸ்ட் பண்ணி மாட்டின பவர் கிளாஸ் தங்க பிரேமின் கைங்கர்யத்தில் அவள் முகச்சோபையை கூட்டியது. நெற்றியில் பொட்டில்லா வெறுமை.

கஸ்டம்ஸ் சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு பெரிய பெரிய ரோலர் சூட்கேஸ்களை உருட்டியபடி லௌன்ஜுக்கு வந்தார்கள்.

ஜனக்கூட்டம் கடுகடுத்தது.

ஹலோ...

ஹாய்...!

நைஸ் டு மீட் யூ.

வெவ்வேறு சுருதிகளில் ஜனங்கள் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டார்கள். கை குலுக்கல்கள். கட்டித் தழுவல்கள், கண்ணீர் அருவிகள். சில்பா கேட்டாள் -

அம்மா! நம்மை ரிஸீவ் பண்ண மாமா வந்திருப்பாரா?

கண்டிப்பா வந்திருப்பார்.

சொல்லிக்கொண்டே லவுன்ஜ் பூராவும் கண்பார்வையை வீசி எறிந்தாள் லட்சுமி. சில்பாவும் தன் பங்குக்கு சுற்றும் முற்றும் திரும்பி பார்த்துவிட்டு, எங்கேம்மா, உன்னோட அண்ணனையே காணோமே? என்றாள்.

லட்சுமி சிரித்தாள்.

ஆறு வயதில் அமெரிக்காவுக்கு வந்த நீ பதினைஞ்சு வருஷம் கழிச்சு இன்னிக்குத்தான் மறுபடி இந்தியாவில் கால் வெச்சிருக்கே. மாமாவோட முகம் உனக்கு சுத்தமா மறந்திருக்கும்.

அண்ணனும், தங்கச்சியும் ஒரே ஜாடைன்னு எப்பவோ ஒருமுறை அப்பா சொன்ன மாதிரி ஞாபகம். அதை வெச்சு உன்னைப்போலவே ஜாடை யாருக்காவது இருக்கான்னு பார்க்கிறேன்.

சில்பா இப்படி சொன்னதுமே லட்சுமியின் கண்கள் இரண்டிலும் சில மி.லி கண்ணீர் தேங்கியது.

அய்யே...! என்னம்மா இது! அழறியா?

இல்லையே...

கர்ச்சீப்பினால் கண்களை ஒற்றினாள்.

இதுதானே ஆகாதுங்கிறது? சொல்லும்மா... எதுக்காக இப்ப கண்ணுல தண்ணி...?

அப்பாவை பத்தி நீ சொன்னதும் - நாங்க ரெண்டு பேரும் இந்தியாவைவிட்டு அமெரிக்க கிளம்பிப்போனது ஞாபகத்துக்கு வந்தது. தழையத் தழைய பட்டுப்புடவை கட்டி... நெத்தி நிறைய குங்குமம் வெச்சு... கழுத்திலும், காதிலும் மின்ன நான் ஃப்ளைட் ஏறியது ஞாபகத்துக்கு வந்தது...

லட்சுமியின் கண்களில் மறுபடி கண்ணீர்.

ஸாரிம்மா. ஐ’ம் வெரி ஸாரி...

சொல்லிக்கொண்டே நிமிர்ந்த சில்பா சற்று தள்ளி நின்றிருந்த இளைஞனைப் பார்த்து முகம் மலர்ந்தாள்.

அம்மா, அங்கே பாரு...

அந்த இளைஞனின் கையில் ஓர் அட்டை. அதில் மார்க்கர் பேனாவால் எழுதப்பட்ட தடித்த எழுத்துக்கள்

‘வெல்கம் டூ அத்தை அண்ட் சில்பா’

அவனைப் பார்த்ததுமே- லட்சுமியின் கண்ணீர் காய்ந்து போனது.

சூழ்நிலை சிரசாசனம் போட்ட மாதிரி புரண்டுவிட இருவர் முகங்களிலும் சந்தோஷ மின்னல்கள்.

டேய், வெங்கடேஷ்...!

லட்சுமியை சற்று தாமதமாகத்தான் அடையாளம் புரிந்து கொண்டான் வெங்கடேஷ். கையில் பிடித்த அட்டையை டஸ்ட் பின்னில் எறிந்துவிட்டு வேகமாய் அவர்களை நெருங்கினான்.

அத்தே...!

எப்படிடா இருக்கே வெங்கடேஷ்...?

ஃபைன்... உங்க ஆசிர்வாதத்துல நல்லாயிருக்கேன்...

சொன்னவனின் பார்வை சில்பாவின் மேல் சில விநாடிகள் தேங்கியது. ஒரு நிமிஷம் கோமா ஸ்டேஜுக்கு போய் அப்புறமாய் மூச்சுவிட்டான். லட்சுமி அறிமுகப்படுத்தியபின் சில்பா மெல்லிய குரலில் ஹலோ என்றாள்.

சில்பா சொன்ன அந்த ‘ஹலோ’ அவன் காதுகளில் ரோஸ்மில்க்கை பாய்ச்சியது. அவளின் நியான் வெளிச்சப் புன்னகையில் முழுதுமாய் நனைந்தான்.

வெங்கடேஷ். உங்கப்பா வரலையா...? லட்சுமி கேட்டாள்.

வ... வரலை அத்தே...

டெலிபோன்ல பேசினப்ப அப்பாதானே ஏர்போர்ட்டுக்கு வரதா சொன்னார்?

Enjoying the preview?
Page 1 of 1