Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Magaa Sathi
Magaa Sathi
Magaa Sathi
Ebook156 pages45 minutes

Magaa Sathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Magaa Sathi

Read more from Rajeshkumar

Related to Magaa Sathi

Related ebooks

Related categories

Reviews for Magaa Sathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Magaa Sathi - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    இந்திய ராணுவ வீரர்கள் பதவி உயர்வுகளுக்கு ஆசைப்படுவது இல்லை. அவர்கள் ஆசைப்படுவதெல்லாம் போரின் போதுதான் மரணம் நிகழ வேண்டும் என்பதே! ஒரு இந்திய ராணுவ வீரரின் மன உறுதி உலகத்தில் எந்த நாட்டு ராணுவ வீரனுக்கும் இல்லை.

    - 'வார் ஃபீல்ட்' என்ற புத்தகத்தில் இருந்து.

    இந்தியா — பாகிஸ்தான் எல்லைக்கோடு. முன்னிரவு நேரம்.

    எல்லைக்கோடு இதுதான் என்று அறுதியிட்டு கூறும் கம்பிவேலி பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வளைந்து வளைந்து போயிருக்க ஆகாயத்தின் நட்சத்திர வெளிச்சத்தில் இந்திய எல்லையின் கிராமமான மால்கானி. ராணுவ முகாம்கள் சாம்பல் நிற அவுட்லைன்களாய் தெரிந்தன. உயரமாய் அமைக்கப்பட்டிருந்த விஜிலென்ஸ் டவர் மேல் இரண்டு ராணுவ வீரர்கள் டார்க் ஃப்ரூப் டெலஸ்கோப்புகளை கண்களில் பொருத்திக் கொண்டு அம்னீஷியன்களை, கர்ப்பம் தாங்கிய எல்.எம்.ஜி. ஜாதி துப்பாக்கிகளை தோளில் தொங்க விட்டபடி உட்கார்ந்திருந்தனர். எதிரே இருந்த கம்ப்யுட்டரின் மானிட்டர் திரை பொதுவான ராணுவக் கட்டளைகளை நிதானமாய் எழுதிக் காட்டிவிட்டு நிதானமாய் அழிந்து கொண்டிருந்தது.

    நேரம் பதினோரு மணியைத் தொட்டிருந்தபோது மானிட்டர் திரை சிவப்பு எழுத்துகளில் 'ALERT என்று வார்த்தையை அவசர அவசரமாய் ஒளிக்க வைத்துவிட்டு கீழே அடிக்கோடிட்ட வார்த்தைகளில் 'கம்யூனிகேஷன் டவரை தொடர்பு கொள்ளவும்' என்று எழுதிக் காட்டியது.

    இரண்டு வீரர்களில் ஒருவன் மற்றவனை ஏறிட்டான்.

    குரூப்பால் சிங்...

    ம்...

    சி.டி.யை நீ தொடர்பு கொள்....

    தலையாட்டிய அந்த குருபால்சிங் பக்கத்தில் இருந்த வயர்லெஸ் கேபினுக்குள் நுழைந்து ஹெட்போனை தலையில் கவிழ்த்துக் கொண்டு வாய்க்கு முன்னால் நீட்டிக் கொண்டிருந்த சிறிய மைக்கில் பேச ஆரம்பித்தான்.

    ஸார்... திஸ்... ஈஸ் விஜிலன்ஸ் டவர். நான் குருபால்சிங். ஏதாவது தகவல் உண்டா...?

    ஆமாம்...

    சொல்லுங்கள்...

    சரியாய் 11.30 மணிக்கு பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஜீப் ஒன்று பவுண்டரி லைன் ரோட்டில் ஐந்தாவது கிலோ மீட்டரில் தட்டுப்படலாம்... ஜீப்பின் பதிவு எண் PA — ATB 575, டார்க்ஃப்ரூப் டெலஸ்கோப்பில் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

    எஸ்... ஸார்...

    ஜீப்பில் வருவது பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த அஷ்ரப். அவர் ஒரு பிரிகேடியர் ரேங்க் அதிகாரி.

    அவருடைய வருகையின் நோக்கம்...?

    தெரியவில்லை. நம்முடைய மேஜர் ஜெனரலைச் சந்தித்து முக்கியமான விஷயம் ஒன்றை பேசப் போகிறாராம். அந்த ஜீப்பை நுழைவு வாயிலில் நிறுத்தி வழக்கமான சோதனைகளை செய்து உள்ளே அனுமதியுங்கள்...

    எஸ்... ஸார்...

    இன்னொரு விஷயம்...

    சொல்லுங்கள் ஸார்...

    அனுமதி பாகிஸ்தான் பிரிகேடியர்க்கு மட்டும்தான். ஜீப்பில் வேறு யார் வந்தாலும் என்கொய்ரி செல்லில் தங்க வைத்து விடுங்கள்.

    எஸ்... ஸார்...

    விஷயம் அவ்வளவுதான். இனி நீங்கள் உங்கள் கடமையைச் செய்யலாம்....

    மறுமுனையில் வயர்லஸ் அணைந்ததும் காபினை விட்டு வெளியே வந்தான் குருபால்சிங்.

    தயாள்...

    ம்...

    செய்தி என்ன தெரியுமா?

    சொல்....

    பாகிஸ்தான் பிரிகேடியர் அஷ்ரப் சரியாய் 11.30 மணிக்கு நம் ராணுவ பாரக்ஸுக்கு வந்து நம்முடைய மேஜர் ஜெனரலைச் சந்தித்து ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசப் போகிறாராம். அவர் வரும் ஜீப்பை சோதனை செய்து அனுப்ப வேண்டியது நம் வேலை...

    தயாள் கோபப்பட்டான்.

    எதுக்கு வருகிறான் அந்த பாகிஸ்தானியன்..?

    பண்ணிய தப்புகளுக்கு ஏதாவது விளக்கம் சொல்ல வரலாம்....

    அப்படி எனக்குத் தோணவில்லை.

    எதுவாகவோ இருந்துவிட்டு போகட்டும். கம்யூனிகேஷன் டவர் நமக்கு இட்ட வேலையைச் செய்து முடிப்போம். நீ டவரின் மேலேயே இரு. நான் நுழைவு வாயிலுக்குப் போகிறேன் சொன்ன குருபால்சிங் எல்.எம்.ஜி. துப்பாக்கியை தோளில் தொங்கவிட்டுக் கொண்டு டவரின் படிகளில் இறங்கினான்.

    உலோகப்படிகள் அவனுடைய பூட்ஸ் கால்கள் பட்டு கீறிச்சிட்டன. கீழே வந்தான்.

    நூறு மீட்டர் தொலைவில் நுழைவு வாயில் பெரிய இரும்புக் கிராதியோடு தெரிந்தது.

    காவல் காத்துக் கொண்டிருந்த செண்ட்ரீஸ் இரண்டு பேர் குருபால்சிங்கை பார்வையில் வாங்கியதும் சல்யூட் அடித்து தளர்ந்தார்கள்.

    சி.டி.யிலிருந்து உங்களுக்கு தகவல் வந்ததா?

    வந்தது ஸார்...

    டிடெக்டர்கள் தயார் நிலையில் இருக்கிறதா?

    இருக்கிறது ஸார்...

    செயல்பாடு...?

    துல்லியம்....

    இப்போது சரியான ரிப்போர்ட்டை கொடுத்துவிட்டு பிறகு தப்பு நேர்ந்த பிறகு சொத்தை காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.

    இல்லை ஸார்... எல்லா டிடெக்டர்களும் மிகச் சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    வா... ஒரு முறை சரிபார்த்து விடுவோம்...

    நுழைவுவாயிலுக்குப் பக்கத்தில் இருந்த டிடெக்டர்ஸ் இருந்த செல்லுக்குள் நுழைந்தான் குருபால்சிங்.

    செல்லில் இருபது நிமிஷம் கரைந்திருந்தபோது டெலிபோன் கிணுகிணுத்தது.

    எடுத்தான்.

    விஜிலென்ஸ் டவரிலிருந்து தயான் பேசினான்.

    குருபால்சிங்....! ஜீப் வந்து கொண்டிருக்கிறது. பி அலர்ட் அண்ட் டூ த ஃபார்மாலீடீஸ்...

    எஸ்...

    மைண்ட் இட் எவ்ரிதிங்க்...

    குருபால்சிங் டிடெக்டர்ஸ் செல்லைவிட்டு வெளியே வந்து எண்ட்ரன்ஸ் கேட்டின் விக்கெட் டோர்க்கு முன்பாய் நின்றான்.

    அடுத்த சில நிமிடங்களில் கேட்டுக்குப் பின்னால் ஒரு வாகனத்தின் இரைச்சல் கேட்டது.

    தொடர்ந்து ஹாரன் சப்தம்.

    டோரைத் திறந்தான் குருபால்சிங். ஓர் ஆர்மடோ ஜீப் வெளிச்சக் கண்களோடு தெரிந்தது.

    ட்ரைவர் இறங்கி வந்தான்.

    மைதா மாவு நிறத்தில் பாகிஸ்தானிய முகம்.

    சொன்னான்.

    பிரிகேடியர் வந்திருக்கிறார்...

    முதலில் ஜீப்பை டிடெக்ட் செய்ய வேண்டும்.

    தாராளமாய்...

    குருபால்சிங் இரண்டு செண்ட்ரிகளை அழைத்துக் கொண்டு டிடெக்டர்களோடு ஜீப்பை நோக்கிப் போனான்.

    பிரிகேடியர் அஷ்ரப் ஆறடி உயரத்தில் சீசா பச்சை நிற

    Enjoying the preview?
    Page 1 of 1