Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி
பணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி
பணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி
Ebook277 pages1 hour

பணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாணிக்கராஜின் இதயத்துக்குள் பயம் சடுகுடு ஆடியது. நெற்றியிலும், பிடரிலும் அவசர அவசரமாய் வியர்த்தார். தோளில் போட்டிருந்த மேல் துண்டால் வியர்வையை அவசர அவசரமாய் ஒற்றிக் கொண்டு "பரமானந்தம்" என்று கூப்பிட்டார்.
 "ஸார்..."
 "ஒரு டம்ளர் ஐஸ் வாட்டர் கொண்டாய்யா..."
 பரமானந்தம் வாட்டர் கூலரில் தண்ணீர் பிடித்து வந்தார். மாணிக்கராஜ் டம்ளரை வாங்கி, ஐஸ் வாட்டரை வயிற்றுக்குள் வார்த்துக் கொண்டார். காலி டம்ளரை நீட்டிவிட்டு மறுபடியும் மேல்துண்டால் முகத்தை ஒற்றிக் கொண்டார்.
 பரமானந்தம் கேட்டார்.
 "ஏன் ஸார்... என்னவோ மாதிரி ஆயிட்டீங்க."
 "சீ... இந்த லேட்டரைப் படிச்சுப் பார்ய்யா" வாங்கி படித்த பரமானந்தமும் வியர்த்தார்.
 என்ன ஸார்... இப்படி எழுதியிருக்கான்? போலீசுக்கு போன் பண்ணிச் சொல்லட்டுமா?"
 "வேண்டாம்... நாம விஷயத்தை போலீஸுக்கு கொண்டு போனா... இந்த லெட்டரையும் அவங்ககிட்டே கொடுக்க வேண்டியிருக்கும். லெட்டர் பேப்பர்ல பப்ளிஷானா அசிங்கமா இருக்கும். அப்புறம் தலைவர் எனக்கு மந்திரி பதவி கொடுக்க யோசிப்பாரு... இந்த விஷயத்தை இப்படியே விட்டுடுவோம்."நாளைக்கு ஏதாவது ஆபத்து உங்களுக்கு வந்தா?"
 "மந்திரியானதும் வீட்டைச் சுற்றி போலீஸ் வந்துடுவாங்க. எங்கே போனாலும் போலீஸ் கூட வருவாங்க. எந்தப் பய என்னைத் தொட முடியும்?"
 "அப்போ... இந்த லெட்டரை என்ன பண்றது?"
 "கிழிச்சுப் போடய்யா."
 மாணிக்கராஜ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசல் பக்கமிருந்து - தொண்டர்கள் வாழ்த்தொலி கிளம்பியது.
 "தலைவர் மாணிக்கராஜ்"
 "வாழ்க!"
 "வெற்றிக்கனி பறித்த வேந்தன்"
 "வாழ்க!"
 மாணிக்கராஜ் வெளியே வந்தார். வீட்டின் முன்னறைலும் வாசலிலும் தொண்டர்களின் கூட்டம் கணிசமாய் உயர்ந்திருந்தது. நிறைய பேர்களின் கைகளில் மாலைகள்.
 யாரோ சொன்னார்கள். "தலைவரே! அதிகாரப்பூர்வமான  நியூஸ் வந்தாச்சு. நீங்க அறுபதாயிரம் வோட்டு வித்தியாசத்துல ஜெயிச்சுட்டீங்க. உங்களை எதிர்த்து நின்ற ஏழு பேர்ல ஆறு பேருக்கு டிபாசிட் கழண்டுகிச்சு."
 எல்லோரும் கைகளைத் தட்டினார்கள்.
 மாலைகளோடு மாணிக்கராஜை நோக்கி ஓடி வந்தார்கள்.
 "யோவ்! வரிசையா வந்து மாலையைப் போடுங்கய்யா! தலைவரைத் தள்ளாதீங்க." சொன்னவரைத் தள்ளிக் கொண்டு எல்லோரும் மாலைகளைப் போட்டார்கள்.
 பத்திரிகை நிருபர்கள் நாலா பக்கமும் விழுந்து சூழ்ந்தார்கள். கேள்விகள் மளமளவென்று பீறிட்டன
 "உங்க கட்சி இவ்வளவு மகத்தான வெற்றி பெறக் காரணம் என்னமக்கள்தான்..."
 "இதே மக்கள்தான் போன எலக்ஷன்ல உங்களை தோற்கடிச்சாங்க."
 "அப்போ அவங்களுக்கு விழிப்புணர்ச்சி இல்லை."
 "இப்போ விழிப்புணர்ச்சி வந்துடுச்சுன்னு சொல்ல வர்றீங்களா?"
 "நிச்சயமா..."
 "உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்குமா?"
 "நான் பதவிக்காக தேர்தலில் நிற்கவில்லை. என் தொகுதி மக்களுக்கு உழைக்கத்தான் தேர்தலில் நிற்கிறேன்."
 "மந்திரி பதவி கிடைத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?"
 "மக்கள் ஆணையிட்டால் ஏற்றுக் கொள்வேன்"
 "தேர்தல் சமயத்தின்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா?"
 "கண்டிப்பாக... அதற்காகவே "வாக்குறுதி வாரியம்" என்று ஒன்றைப் போட்டு மக்களுக்குத் தொண்டாற்ற போகிறோம்."
 "எதிர்க்கட்சிகளின் மேல் ஊழல் விசாரணையைக் கொண்டு வருவீர்களா?"
 "பழி வாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை."
 "உங்களுக்கு என்ன இலாகா?"
 "பொறுத்திருந்து பாருங்கள்"
 "மந்திரி சபையில் பெண்கள் இடம் பெறுவார்களா?"
 "பொறுத்திருந்து பாருங்கள்"
 "சென்னைக்கு எப்போது போவீர்கள்?"இன்று இரவே புறப்படுகிறேன். நாளை காலை தலைவரை சந்தித்து மாலையணிவித்து ஆசி வாங்குவேன்."
 தொண்டர்கள் கைதட்டினார்கள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223304456
பணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி

Read more from Rajeshkumar

Related to பணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி

Related ebooks

Related categories

Reviews for பணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பணம், பதவி, பலி! & இருட்டில் வைத்த குறி - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    ஆளுயர ரோஜா மாலையை கழுத்து வலிக்க சுமந்து கொண்டு - பல்செட் உபயத்தால் அழகாக புன்னகைத்தார் மாணிக்கராஜ். சுற்றிலும் பிளாஷ் காமிராக்கள் பளிச்சிட்டு - பளிச்சிட்டு அடங்கின. அருகே நின்றிருந்த தொண்டர்களிடம் சொன்னார்.

    வோட்டு எண்ணிக்கை இன்னமும் நடந்திட்டிருக்கு. அதுக்குள்ளே எனக்கு மாலையைக் கொண்டார்ந்து போட்டுடீங்களே?

    என்னா தலைவரே... இன்னுமா உங்களுக்கு சந்தேகம்? அம்பதாயிரம் வோட்டு லீடிங்க்ல போயிட்டிருக்கீங்க. இனி எண்ணறதுக்கு எட்டு பூத் வோட்டுதான் இருக்காம். அத்தினியோட்டும் எதிராளிக்கு விழுந்திருந்தா கூட நீங்க தோக்க மாட்டீங்க. தகிரியமா சிரிச்சு, போட்டோவுக்கு போஸ் கொடுங்க தலைவரே...

    மாணிக்கராஜின் வீடு பூராவும் கசகசவென்று கூட்டம். வாசலில் பட்டாசு பொரிந்து கொண்டிருந்தன. தொண்டர்களின் முகங்களில் பரவசம் பாலிஷ் மாதிரி மினுமினுத்தது.

    காலையில எட்டுமணி ந்யூஸ் கேட்டியா... சோமு?

    ம்... கேட்டேனே?

    மெஜாரிட்டியான தொகுதிகளில் நம்ம வேட்பாளர்கள்தான் லீடிங்க்ல இருக்காங்களாம். என்னோட கணக்குப்படி நூத்தி எழுப்பத்தஞ்சு சீட்டாவது வரும்...

    வரும் என்ன? வந்தாச்சு...

    நாம இப்படி ஜெயிப்போம்ன்னு நம்ம தலைவரே நினைச்சுப் பார்த்திருக்கமாட்டார். தென் மாவட்டங்கள்ல கூட நம்ம ஆட்கள்தான் முன்னணியில் இருக்காங்களாம்.

    மாணிக்கராஜின் கழுத்தில் மாலைகள் விழுந்து கொண்டிருந்த - அதே நேரம் - அவருடைய பி.ஏ. பரமானந்தம் வேக வேகமாய் நெருங்கினார்.

    ஸார்."

    என்ன?

    மெட்ராஸிலிருந்து போன் வந்திருக்கு. தலைவர் லைன்ல காத்திட்டிருக்கார் ஸார்...

    ஏய்யா... இதை முதலிலேயே சொல்ல வேண்டாமா? மாணிக்கராஜ் பரபரப்பாகி அடுத்த அறைக்குள்ளே போனார்.

    மேஜையின் மேல் ரிஸீவர் ஒருக்களித்து படுத்திருந்தது. ஆர்வமாய் ரிஸீவரை எடுத்து காதுக்குள் கொடுத்தார்.

    ஹலோ...

    "யாரு மாணிக்கராஜா?'

    நான்தாங்க.

    அமர்க்களமா ஜெயிச்சுட்டே.

    எல்லாமே நீங்க போட்ட பிச்சை.

    ஜனங்க இன்னும் நம்ம பக்கம்தான் இருக்காங்க. கிராமப்புறம் பூராவும் அள்ளிக்கிட்டு வருது. போற போக்கைப் பார்த்தா... இருநூறு இடம் நம்ம கைக்கு வந்துடும் போலிருக்கு.

    நீங்க மட்டும் சூறாவளி சுற்றுப்பயணம் தமிழ்நாடு பூராவும் பண்ணாமே இருந்தா நமக்கு இந்த வெற்றி கிடைச்சிருக்காது...

    சரி... இன்னைக்கு சாயந்தரம் புறப்பட்டு நாளைக்கு மெட்ராஸ் வந்துடு. மினிஸ்ட்ரி அமைக்கிறதைப் பத்தி பேசிடலாம்.

    எனக்கு பதவி உண்டா இல்லையா?

    மாணிக்கராஜுக்கு இல்லாத மந்திரி பதவியா? உனக்கு பிடிச்ச போர்ட்போலியாவை எடுத்துக்க.

    ரொம்ப நன்றிங்க.

    வெறும் நன்றி மட்டும் போதாது மாணிக்கராஜ். பெரிய்ய நோட்டுல பத்து நோட்டு கட்சி நிதிக்கு கொடுத்துடணும்.

    எலக்ஷனுக்கு நிறைய செலவு பண்ணிட்டேன். கிட்டத்தட்ட இருபது லட்சம்...

    என்ன...பெரிய இருபது லட்சம்? மந்திரி பதவிக்கு வந்தா...இருபது லட்சமும் இருபது ரூபாய் நோட்டு மாதிரி... நாளைக்கு காலையில மெட்ராஸுக்கு வா... பேசிக்கலாம். வெடிச்சத்தம் அமர்க்களமா கேட்டுது. எல்லாம் உன்னோட ஏற்பாடா?

    ஆமாங்க.

    மாணிக்கராஜ் சிலிர்த்துக் கொண்டிருக்கும்போதே மறுமுனையில் தலைவர் ரிஸீவரை வைத்துவிட்டார். இவரும் வைத்துவிட்டு பரமானந்தம் என்று கூப்பிட

    பி.ஏ. பரமானந்தம் எட்டிப் பார்த்தார்.

    ஸார்

    நான் நாளைக்கு காலையில மெட்ராஸ்ல இருக்கணும். ட்ரெயின் டிக்கெட்டுக்கோ... பிளைட் டிக்கெட்டுக்கோ ஏற்பாடு பண்ணு.

    சரி, ஸார்.

    மாணிக்கராஜ் நகர முயன்ற விநாடி - மறுபடியும் டெலிபோன் கூப்பிட்டது. அவரே போய் ரிஸீவரை எடுத்தார்.

    ஹலோ.

    யாரு மாணிக்கராஜா?

    ஆமா.

    ஜெயிச்சிட்டோம்ன்னு ரொம்பவும் சந்தோஷப் பட்டுக்கிட்டு இருக்காதே... உன்னோட சந்தோஷம் எந்த நிமிஷமும் அணைஞ்சு போகலாம்.

    யார்ரா...நீ?

    உன் வீட்டு காம்பௌண்ட் கேட்ல தபால்களை போடறதுக்கு சின்னதா ஒரு பெட்டி பண்ணி வச்சிருக்கியே... அந்தப் பெட்டியில் உனக்காக ஒரு லெட்டர் எழுதி போட்டிருக்கேன். ஆள் யாரையாவது அனுப்பி எடுத்துட்டு வரச் சொல்லி படிச்சுப் பாரு... நான் யார்ங்கிறது புரியும்... ஜெயிச்சிட்டோம்ங்கிற வெறியிலே ரொம்பவும் துள்ளாதே.

    டே...டேய் - மாணிக்கராஜ் ஆத்திரமாய் கத்திக் கொண்டிருக்கும் போதே - ரிஸீவர் மறுமுனையில் சாத்தப்பட்டது.

    பரமானந்தம்

    ஸார்...

    நம்ம காம்பௌண்ட் கேட் லெட்டர் பாக்ஸைத் திறந்து லெட்டர்களை அள்ளிட்டு வாய்யா.

    பரமானந்தம் வாட்சைப் பார்த்தார்.

    இந்நேரத்துக்கு போஸ்ட்மேன் வந்திருக்கமாட்டானே ஸார்?

    எவனோ பொறுக்கிப் பய... லெட்டர் எழுதி - நம்ம லெட்டர்பாக்ஸில் போட்டிருக்கானாம். போய் எடுத்துட்டு வாய்யா... நான் அந்த லெட்டரை படிச்சு முடிக்கிற வரைக்கும் - எவனையும் என்னோட ரூமுக்குள்ளே விடாதே.

    சரி ஸார்.

    பரமானந்தம் உள்ளேயிருந்து - வெளியே போனார். இரண்டு நிமிஷ அவகாசத்தில் - ஒரு வெள்ளைநிறக் கவரோடு உள்ளே வந்தார்.

    இந்த ஒரு லெட்டர்தான் இருந்தது ஸார்.

    மாணிக்கராஜ் லெட்டரை வாங்கிப் பார்த்தார். வெள்ளைநிறக் கவரின் ஒரு மூளையில் - 'ஒரு இந்திய குடிமகனின் வேண்டுகோள்.' தமிழ் டைப் வாசகங்கள் பளிச்சென்று தெரிந்தன.

    கவரின் வாயைக் கிழித்து - லெட்டரை உருவினார் மாணிக்கராஜ்.

    துரதிர்ஷடவசமாக ஜெயித்துக் கொண்ட மாணிக்க ராஜுவுக்கு,

    ஒரு இந்தியக் குடிமகனின் - அதிலும் ஒரு தமிழ் குடிமகனின் - மகோன்னதமான வணக்கம்.

    நீ செலவு செய்த இருபது லட்ச ரூபாயும் - உன்னுடைய ஆட்கள் போட்ட கள்ள வோட்டுகளும் - உன் கழுத்துக்கு ரோஜா மாலையைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த தமிழ்நாட்டின் குடிமகனாக இருக்கக்கூட தகுதியில்லாத நீ - அரசியல் விபத்தினால் ஒரு சட்டமன்ற உறுப்பினராகி விட்டாய். இது இத்தோடு நிற்க வேண்டும். நீ சட்டமன்ற உறுப்பினராக இருப்பதில் எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. ஆனால் நீ மந்திரியாகக் கூடாது. இப்போதே நிருபர்களை அழைத்து - எனக்கு மந்திரி பதவி வேண்டாம் என்று நீ சொல்ல வேண்டும். ஏனென்றால் மந்திரியாகக் கூடிய தகுதி உனக்கு இல்லையென்று நான் நினைக்கிறேன். என் பேச்சை மீறி நீ மந்திரியானால் - அடுத்த நாளே உன் பூத உடலுக்கு மலர்வளையம் வைக்க வேண்டிய நிலைமை வந்துவிடும். இது என் பணிவான எச்சரிக்கை.'

    கடிதம் இத்தோடு முடிந்து போயிருக்க மாணிக்கராஜ் அதிர்ச்சியோடு நிமிர்ந்தார்.

    2

    மாணிக்கராஜின் இதயத்துக்குள் பயம் சடுகுடு ஆடியது. நெற்றியிலும், பிடரிலும் அவசர அவசரமாய் வியர்த்தார். தோளில் போட்டிருந்த மேல் துண்டால் வியர்வையை அவசர அவசரமாய் ஒற்றிக் கொண்டு பரமானந்தம் என்று கூப்பிட்டார்.

    ஸார்...

    ஒரு டம்ளர் ஐஸ் வாட்டர் கொண்டாய்யா...

    பரமானந்தம் வாட்டர் கூலரில் தண்ணீர் பிடித்து வந்தார். மாணிக்கராஜ் டம்ளரை வாங்கி, ஐஸ் வாட்டரை வயிற்றுக்குள் வார்த்துக் கொண்டார். காலி டம்ளரை நீட்டிவிட்டு மறுபடியும் மேல்துண்டால் முகத்தை ஒற்றிக் கொண்டார்.

    பரமானந்தம் கேட்டார்.

    ஏன் ஸார்... என்னவோ மாதிரி ஆயிட்டீங்க.

    சீ... இந்த லேட்டரைப் படிச்சுப் பார்ய்யா வாங்கி படித்த பரமானந்தமும் வியர்த்தார்.

    என்ன ஸார்... இப்படி எழுதியிருக்கான்? போலீசுக்கு போன் பண்ணிச் சொல்லட்டுமா?"

    வேண்டாம்... நாம விஷயத்தை போலீஸுக்கு கொண்டு போனா... இந்த லெட்டரையும் அவங்ககிட்டே கொடுக்க வேண்டியிருக்கும். லெட்டர் பேப்பர்ல பப்ளிஷானா அசிங்கமா இருக்கும். அப்புறம் தலைவர் எனக்கு மந்திரி பதவி கொடுக்க யோசிப்பாரு... இந்த விஷயத்தை இப்படியே விட்டுடுவோம்.

    நாளைக்கு ஏதாவது ஆபத்து உங்களுக்கு வந்தா?

    மந்திரியானதும் வீட்டைச் சுற்றி போலீஸ் வந்துடுவாங்க. எங்கே போனாலும் போலீஸ் கூட வருவாங்க. எந்தப் பய என்னைத் தொட முடியும்?

    அப்போ... இந்த லெட்டரை என்ன பண்றது?

    கிழிச்சுப் போடய்யா.

    மாணிக்கராஜ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசல் பக்கமிருந்து - தொண்டர்கள் வாழ்த்தொலி கிளம்பியது.

    தலைவர் மாணிக்கராஜ்

    வாழ்க!

    வெற்றிக்கனி பறித்த வேந்தன்

    வாழ்க!

    மாணிக்கராஜ் வெளியே வந்தார். வீட்டின் முன்னறைலும் வாசலிலும் தொண்டர்களின் கூட்டம் கணிசமாய் உயர்ந்திருந்தது. நிறைய பேர்களின் கைகளில் மாலைகள்.

    யாரோ சொன்னார்கள். தலைவரே! அதிகாரப்பூர்வமான நியூஸ் வந்தாச்சு. நீங்க அறுபதாயிரம் வோட்டு வித்தியாசத்துல ஜெயிச்சுட்டீங்க. உங்களை எதிர்த்து நின்ற ஏழு பேர்ல ஆறு பேருக்கு டிபாசிட் கழண்டுகிச்சு.

    எல்லோரும் கைகளைத் தட்டினார்கள்.

    மாலைகளோடு மாணிக்கராஜை நோக்கி ஓடி வந்தார்கள்.

    யோவ்! வரிசையா வந்து மாலையைப் போடுங்கய்யா! தலைவரைத் தள்ளாதீங்க. சொன்னவரைத் தள்ளிக் கொண்டு எல்லோரும் மாலைகளைப் போட்டார்கள்.

    பத்திரிகை நிருபர்கள் நாலா பக்கமும் விழுந்து சூழ்ந்தார்கள். கேள்விகள் மளமளவென்று பீறிட்டன

    "உங்க கட்சி இவ்வளவு மகத்தான வெற்றி பெறக் காரணம் என்ன?

    மக்கள்தான்...

    இதே மக்கள்தான் போன எலக்ஷன்ல உங்களை தோற்கடிச்சாங்க.

    அப்போ அவங்களுக்கு விழிப்புணர்ச்சி இல்லை.

    இப்போ விழிப்புணர்ச்சி வந்துடுச்சுன்னு சொல்ல வர்றீங்களா?

    நிச்சயமா...

    உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்குமா?

    நான் பதவிக்காக தேர்தலில் நிற்கவில்லை. என் தொகுதி மக்களுக்கு உழைக்கத்தான் தேர்தலில் நிற்கிறேன்.

    "மந்திரி பதவி கிடைத்தால் ஏற்றுக்

    Enjoying the preview?
    Page 1 of 1