Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மெழுகுவத்திகள்
மெழுகுவத்திகள்
மெழுகுவத்திகள்
Ebook153 pages37 minutes

மெழுகுவத்திகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கையை மடக்கிக் கொண்டு - கட்டிலினின்றும் எழுந்தான் சங்கர சுப்பிரமணியன். கட்டிலுக்கு இரண்டு பக்கத்திலும் டாக்டர் சீதாராமனும், ரங்கராஜனும் புன்னகையோடு நின்றிருந்தார்கள்.
 "ரொம்ப தேங்க்ஸ். சமயத்துக்கு உன்னோட ப்ளட் கிடைக்காமே இருந்திருந்தா... பேஷண்டோட நிலைமை ரொம்பவும் மோசமாகியிருக்கும்..."
 சங்கர சுப்பிர மணியன் தோளைத் தட்டிக் கொடுத்தார் டாக்டர்.
 அவன் கட்டிலினின்றும் கீழே இறங்கினான்.
 "நான் புறப்படலாமா, டாக்டர்...?"
 "நிறைய ரத்தம் குடுத்திருக்கீங்க... தம்பி! ரெண்டு மணி நேரம் இங்கேயே இருந்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டுப் போகலாமே..."
 "இங்கே எனக்கு ரெஸ்ட்டெல்லாம் வேண்டாம் சார். வீட்டுக்கே போய் ஒரேயடியா ரெஸ்ட் எடுத்துக்கிறேன்."
 "தம்பி... நீங்க எங்கே இருக்கீங்க...?"
 "சித்தாபுத்தூர் பழைய காலனியில..."
 "கல்யாணமாயிடுச்சா...?"
 சங்கர சுப்பிரமணியனுக்குச் சிரிப்பு வந்தது. பார்வையை எங்கோ அலைய விட்டுச் சிரித்தான்.
 "என்ன தம்பி சிரிக்கறீங்க?"எனக்கே ஒருவேளைச் சோத்துக்கு வழியில்லை. இந்த லட்சணத்துல ஒரு கல்யாணத்தையும் பண்ணிகிட்டா எப்படியிருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பு வந்துடுச்சு."
 "ஏன் தம்பி... உங்களுக்கு வேலை இல்லையா...?"
 "படிச்சு முடிச்சுட்டு எல்லாப் பக்கமும் முண்டிப் பார்த்துட்டேன்... சார்! எங்கேயும் வேலை கிடைக்கிற மாதிரி தெரியலை..."
 "நீங்க என்ன படிச்சிருக்கீங்க?"
 "பி.ஏ. எக்னாமிக்ஸ்... படிச்சது பொருளாதாரமானாலும் கையில ஒரு பைசா கிடையாது."
 "இதோ பாருங்க தம்பி... என்னோட ஒய்புக்கு நீங்க ரத்தம் குடுத்தீங்க. அது உங்களுக்குச் சாதாரணச் செயலா இருக்கலாம். ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு பெரிய உதவி. இந்த உதவிக்காக நான் உங்களுக்கு, வேலை கொடுத்தா ஏத்துக்குவீங்களா?"
 "சார்... நீங்க... என்ன சொல்றீங்க...?"
 "சொந்தத்துல எனக்கு ரெண்டு டயர் கம்பெனி இருக்கு. ஒண்ணு இங்கே... இன்னொண்ணு சென்னையில், ரெண்டு கம்பெனியிலேயும் சேல்ஸ் எக்ஸிக்யூடிவ் போஸ்ட் காலியாத்தான் இருக்கு. உங்களுக்குப் பிடிச்ச ஊர்ல வேலை பார்க்கலாம். சம்பளம் மூவாயிரம் ரூபாய். சங்கர சுப்பிரமணியன் சந்தோஷத்தில் திணறினான்.
 "ச... சார்..."
 "நீங்க சென்னைக்குப் போறீங்களா? இதே ஊர்ல வேலை பார்க்கறீங்களா?"
 "செ... சென்னை வேண்டாம்... சார். இதே ஊர் - எனக்கு வேலை கிடைச்சா பரவாயில்லை..."
 அவர் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு விசிட்டி கார்டை எடுத்து நீட்டினார்.
 "நாளைக்குக் காலையில இந்த கம்பெனிக்கு வாங்க தம்பி... உடனடியா வேலையில சேர்ந்துடலாம்..."
 "நான் இதை எதிர்பார்க்கலை சார்... ரொம்ப நன்றி..." பரவசத்தோடு சொல்லிக் கொண்டே விசிட்டிங் கார்டைப் பத்திரப்படுத்திக் கொண்டான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223610489
மெழுகுவத்திகள்

Read more from Rajeshkumar

Related to மெழுகுவத்திகள்

Related ebooks

Related categories

Reviews for மெழுகுவத்திகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மெழுகுவத்திகள் - Rajeshkumar

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    பி -5 போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு, சங்கர் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டு வந்த சங்கர சுப்பிரமணியன் எழுதிக் கொள்ளும் கடிதம். நீங்கள் இந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும் நிமிஷம் நான் இந்தக் குடிசையின் உத்தரத்திலிருந்து - நாக்கு வெளித் தள்ளி - கண்கள் பிதுங்கி மகா கோரமாய்த் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பேன். என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. என் மனம் ரொம்ப நாட்களுக்கு முன்பே இறந்து போன காரணத்தினால் - இன்று உடலையும் மண்ணுக்குக் கொடுக்க விரும்புகிறேன். நான் இறந்த பிறகு என் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்குக் கொண்டுபோவீர்கள் என்பது தெரியும். போஸ்ட் மார்ட்டம் முடிந்த பின் - என் உடம்பை மூட்டையாய்க் கட்டி - குதிரை வண்டியில் ஏற்றி - நொய்யல் ஆற்றுச் சுடுகாட்டுக்குக் கொண்டு போய்ப் புதைத்து விடாதீர்கள். என் உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் - மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களாக அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு வேலையில்லா பட்டதாரியின் உடல் - மருத்துவப் பட்டதாரிகளுக்கு உதவட்டும்.

    இப்படிக்கு மனம் இறந்து போன

    சங்கர சுப்பிரமணியன்

    மெழுகுவத்தியின் வெளிச்சத்தில் கடிதத்தை எழுதி முடித்த - சங்கர சுப்பிரமணியன் - அந்தக் கடிதத்தின் வாசகங்களை மறுபடியும் ஒரு தடவை படித்துப் பார்த்தான். பிறகு அதை நான்காய் மடித்துச் சட்டைப் பையில் செருகிக் கொண்டு - சற்று முன்னால் மொய்தீன் பாய் கடையில் வாங்கிய இரண்டு மீட்டர் தாம்புக் கயிற்றுச் சுருளை எடுத்துக் கொண்டான்.

    குடிசையை இரண்டாய்ப் பிரித்த - உத்தரத்துக்குக் கயிற்றை வீசி - ஸ்டூலின் மேல் ஏறி நின்று இறுக்கமாய் முடிச்சுப் போட்டான்.

    இப்போது கயிறு '0' என்று சொல்லியபடி ஊசலாடியது. சங்கர சுப்பிரமணியன் மெதுவாய் நடந்து போய் - குடிசையின் மூலையிலிருந்த பானையில் - தண்ணீரை மொண்டு ஒரு வாய் குடித்தான். பிறகு அன்றாடம் வணங்கும் புகை படிந்து போன முருகர் படத்துக்கு முன்னால் வந்து நின்றான்.

    முருகா! சில பேர் பேசும்போது இப்படிச் சொல்வாங்க. 'அந்தக் கடவுளே வந்தாலும் கூட இதைச் செய்ய முடியாது!’ன்னு... அப்படி உன்னால் செய்ய முடியாத காரியங்களில் எனக்கு வேலை வாங்கித் தர முடியாத காரியமும் ஒண்ணுங்கிறதை நான் இப்போ புரிஞ்சுக்கிட்டேன். தினமும் உன்னோட படத்துக்கு முன்னாடி நின்னு உன்னைக் கெஞ்சிட்டிருக்க என்னால முடியாது. நான் போறேன். அடுத்த ஜென்மத்துல மனுஷனா பொறக்க வைக்காதே. சாக்கடையில் நெளியற புழுவா பொறக்க வை...

    கண்ணீரால் நிரம்பி விட்ட கண்களைத் துடைத்துக் கொண்டே ஸ்டூலின் மேல் ஏறி நின்றான், சங்கர சுப்பிரமணியன்.

    கயிற்றின் '0'வுக்குள் தலையை நுழைத்து - கயிறு கழுத்தை இறுக்கும்படியாய்ச் சுருக்கிட்டுக் கொண்டான். சாகும்போது யாரை நினைத்துக் கொள்ளலாம்?

    'என்றைக்கோ செத்துப்போன அம்மா அப்பாவையா?'

    'போன மாதம் செத்துப்போன தங்கை விஜயாவையா...?' யோசித்துக் கொண்டிருந்த அதே நிமிஷம் - குடிசைக்கு வெளியே - வாசலில் ஏதோ சத்தம். தொடர்ந்து...

    டொக்... டொக்...

    கதவை யாரோ தட்டும் சத்தம்.

    சங்கர சுப்பிரமணியன் கழுத்தில் மாட்டின கயிறோடு அப்படியே நின்றான். மனசுக்குள் யோசனை பரபரவென்று ஓடியது.

    'இந்நேரத்திற்கு யார் வந்து கதவைத் தட்டுகிறார்கள்?'

    டொக்... டொக்.

    இந்தத் தடவை கதவு கொஞ்சம் வேகமாய்த் தட்டப்பட்டது. தொடர்ந்து ஒரு கட்டையான குரல் கூப்பிட்டது.

    சங்கர சுப்பிரமணியன்!

    கழுத்திலிருந்து சுருக்கைத் தளர்த்தி - தலையை விடுவித்துக் கொண்டு வேகவேகமாய் நடந்து போய் - கதவை நெருங்கி - தாழ்ப்பாளை விலக்கினான். வெளியே இருட்டில் யாரோ நின்றிருந்தார்கள்.

    யாரது...?

    இருட்டில் நின்றிருந்த அந்த நடுத்தர வயது ஆசாமி - வெளிச்சத்திற்கு வந்தான். கலைந்த தலை. முகத்தில் மினுமினுப்பாய் வியர்வை. உலர்ந்து போன உதடுகளை அசைத்து அவன் கேட்டான்.

    நீங்கதானே சங்கர சுப்பிரமணியன்?

    ஆமா...

    உங்களை டாக்டர் சீதாராமன் கூட்டிகிட்டு வரச் சொன்னார்.

    எதுக்கு...?

    தெரியலை...

    நீங்க யாரு?

    நான் அவரோட கார் டிரைவர். கொஞ்சம் சீக்கிரம் வந்தீங்கன்னா பரவாயில்லை. டாக்டர் உங்களைக் கையோட கூட்டிட்டு வரச் சொன்னார்.

    குடிசைக்குக் கொஞ்சம் தள்ளிக் கார் நின்றிருந்தது.

    சரி... நீங்க போய்க் கார்ல இருங்க. நான் வீட்டைப் பூட்டிக்கிட்டு வந்துடறேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1