Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இந்து சிரிக்கிறாள்..!
இந்து சிரிக்கிறாள்..!
இந்து சிரிக்கிறாள்..!
Ebook165 pages57 minutes

இந்து சிரிக்கிறாள்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஈச்சனாரி விநாயகர் கோயிலின் பின்புறம். ஆள் அரவமற்ற மத்தியான வேளை. பரப்பப்பட்ட ஆற்று - மணல். வளர்ந்த அரசமரத்தின் நிழல். நிழலில் இந்துவும் பிரசாத்தும். இதமான புன்னகைள்.
 "என்ன எழுதிட்டிருக்கீங்க பிரசாத்?"
 பிரசாத்தன் டயரியில் எழுதுவதை நிறுத்திவிட்டுச் சிரித்தான். ஆராக்கியமான சிரிப்பு.
 "புதுக்கவிதை"
 "அட! நீங்ககூட புதுக்கவிதை எழுதுவீங்களா? எங்கே படியுங்க பார்க்கலாம்."- அவனையொட்டி அமர்ந்து டயரியை எக்கிப் பார்த்தாள்.
 "கொஞ்சம் பொறு... இன்னும் எழுதி முடிக்கலை."-பிரசாத் கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்து டயரியை இந்துவின் பார்வையிலிருந்து மறைத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தான்.
 "சரி... சரி. அவசரப்படாமே நிதானமாகவே எழுதுங்க. அதுக்குள்ள நான் இந்த சிப்ஸ் பாக்கெட்டை முடிச்சுடறேன். பசி வயத்துல கபடி ஆடுது."
 "எனக்கும் கொஞ்சம் மிச்சம் வை! நாம சந்திச்சுப் பேச என்னமா ஒரு இடத்தை செலக்ட் பண்ணியிருக்கே நீ? சாப்பிட ஒண்ணுமே கிடைக்காத இந்த அத்துவானக் காட்டுக்கு உன்னை நம்பி வந்தது பெரிய தப்பு. டவுன்ஹாலில் பஸ் ஏறப்பவே சிப்ஸ் பாக்கெட் வாங்கினோமோ பொழைச்சோம்!"
 சிப்ஸ் பாக்கெட்டைப் பிளந்து உப்பும் மிளகாய்த் தூளும் தூவப்பட்ட மொறு மொறு சிப்ஸில் ஒன்றை எடுத்து மென்றாள் இந்து.
 "போன மாசம் எங்க அண்ணா அண்ணியோடு இந்தக் கோயிலுக்கு வந்தப்ப, எதிர்த்தாப்புல ரெண்டு டீக்கடை இருந்தது. இன்னிக்கு அந்த ரெண்டு டீக்கடைகளும் இல்லே. அதுக்கு நானென்ன பண்றதாம்?"சரி சரி. அப்படி திரும்பி உட்கார்ந்துகிட்டு சிப்ஸை சாப்பிடு. நீ - சிப்ஸை மெல்லற சத்தத்திலே புதுக்கவிதை எழுதவே வரமாட்டேங்குது!"
 "முடியாது. நான் இப்படித்தான் உட்கார்ந்துட்டு சாப்பிடுவேன். உண்மையான கவிஞனுக்கு பசி, ருசி எதுவும் தெரியக்கூடாது."
 "எப்படியோ தின்னு தொலை!"
 "ராஜபாளையத்துக்காரரான உங்களுக்கு இந்த ஈச்சனாரி கோயிலோட மகத்துவம். தெரியலை. நம்ம காதல் கைகூடணும்னா இந்த மாதிரி கோயில்லதான் நாம சந்திச்சுப் பேசணும். பார்க்குக்கு போனா வேலை கிடைக்காத பட்டதாரிக்கும்பல் ஒவ்வொரு சிமெண்ட் பெஞ்சிலேயும் தூங்கிக்கிட்டிருக்கு. சினிமாவுக்கு போனா மத்தவன் வாயால் விடற சிகரெட் புகையையும். மூக்கால் விடற கார்பன்-டை-ஆக்ஸைடையும் சுவாசிச்சிட்டு, நெத்திக்கு ரெண்டு பக்கத்திலேயும் கணிசமான தலைவலியை வாங்கிட்டு வரணும்! இந்த ஆளில்லாத அமைதியும், சில்லுன்னு அடிக்கிறகாத்தும், உடம்பு மேல விழற இந்த நிழலும்..."
 பிரசாத் தன் இரு கைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டான். "சரி. நான் ஏத்துக்கறேன். கோயில்ல சந்திச்சு பேசறதுதான் உத்தமம். கொஞ்ச நேரத்துக்கு பேசாம அந்த சிப்ஸைத் தின்னு. நான் இந்தக் கவிதையை முடிச்சுடறேன்."
 "முடிங்க! முடிங்க!"
 அவன் தீவிரமாய் எழுத ஆரம்பித்தான். அவனைப் பார்த்தபடியே ஒவ்வொரு சிப்ஸாய் மென்று கொண்டிருந்தாள் இந்து.
 பிரசாத்துக்குத்தான் எவ்வளவு அடர்த்தியாய் தலைமுடி, அதுவும் சுருள் சுருளாய். அந்த சாய்வான வகிடும், காதுவரை சீராய் இறக்கியிருக்கிற கிருதாக்களும் இவருடைய முகத்துக்கு ரொம்பவும் பாந்தம். சிவப்பும் இல்லாமல், கறுப்பும் இல்லாமல் இதென்ன ஒரு புதுநிறம்! கோதுமை நிறம் என்று சொல்லலாமா? உம். சொல்லலாம். மையைத் தீட்டின மாதிரி அடர்த்தியான புருவங்களும், பெண்மைத்தனம் தெரிகிற கண்களும் தீர்க்கமாய் அளவாய் எழுந்த நாசியும். சிகரெட் கறை படியாத ரோஸ் நிற உதடுகளும் லட்சத்தில் ஒரு ஆணுக்குஅமையுமா? பேனாவை பிடித்திருந்த அந்த நீண்ட விரல்களில் முகத்தை புதைத்துக்கொள்ள சில சமயங்களில் மனம் பிடிவாதமாய் அடம் பிடிக்கும்.
 "இந்து. என்ன அப்படி பார்க்கறே? நான் கவிதையை முடிச்சுட்டேன். படிச்சுக் காட்டவா?"
 பார்வையை சுதாரித்து. "உம்..." கொட்டினாள் இந்து.
 பிரசாத் பந்தாவாய் முகத்தை வைத்துக் கொண்டான். தொண்டையை ஒரு முறை செருமிவிட்டு மெல்லிய குரலில் படித்தான்.
 தனிமையே உனக்கு
 வேறொரு பெயர்
 உண்டு-நெருப்பு.
 இனிமையே உனக்கு
 இன்னொரு பெயர்
 உண்டு -இந்து .
 இந்து அவனைப் புன்னகையோடு பார்த்தாள். "இந்த இந்து இனிமையானவள்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? என்னைக் கடிச்சுப் பார்த்தீங்களா?"
 "ஒரு ஊகந்தான். இப்ப வேணுமானா கடிச்சு பார்க்கட்டுமா?"
 "ச்சீ இது கோயில்!"
 அவன் சுற்றுமுற்றும் பார்த்தான்.
 கோவிலும் பிரகாரமும் வெறிச்சோடி இருந்தன. தரிசனத்துக்கு யாரும் வரக்காணோம். இன்னும் கொஞ்ச நேரமாகும்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 15, 2023
ISBN9798223538875
இந்து சிரிக்கிறாள்..!

Read more from Rajeshkumar

Related to இந்து சிரிக்கிறாள்..!

Related ebooks

Related categories

Reviews for இந்து சிரிக்கிறாள்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இந்து சிரிக்கிறாள்..! - Rajeshkumar

    1

    "கதிரேசன்! உங்களுக்குப் பம்பாயிலிருந்து எஸ்.டி.டி. கால். உங்க ஃபாதர் பேசறார்."

    ஆபீஸ் அக்கவுண்டண்ட் வேணுகோபால், முயல் குட்டியின் காதைப் பிடித்துத் தூக்குவது போல் டெலிபோன் ரிஸீவரை உயரத் தூக்கி, அறையின் மறு கோடியில், மேஜையடியில் உட்கார்ந்தபடி பைல் ஒன்றினுள் ஆழமாய் மூழ்கியிருந்த கதிரேசனைப் பார்த்து கத்தினார்.

    வெற்றுடம்பில் சவுக்கின் நுனி சீறினாற்போல் விருட்டென்று எழுந்தான் கதிரேசன்.

    பம்பாயிலிருந்து அப்பா பேசுகிறாரா? அதுவும் எஸ்.டி.டி. காலா? இடைவேளையின்போது-எதிர்த்த ஓட்டலில் சாப்பிட்ட தயிர் வடையும், காப்பியும் ஜீரணமாக மறுத்து சங்கடமாய் அடிவயிற்றில் புரண்டன. அரை நிமிஷ நேரத்தில் முகம் பூராவும் எண்ணெய் தடவின மாதிரி வியர்வை மினுமினுக்க. நாக்கும் தொண்டையும் உப்புத்தாளாய் உலர்ந்து கொண்டு போனது.

    நேற்றைக்கு முன்தினம்தான் பம்பாயிலிருந்து அவனுடைய அப்பா சேதுபதி ஒரு இன்லண்ட் கவரில் அவருக்கே உரித்தான கிறுக்கல் எழுத்துக்களில் எழுதியிருந்தார்.

    ‘உன்னுடைய அம்மாவுக்கு மறுபடியும் ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருக்கிறேன். டாக்டர் கவலைப்பட, ஒன்றுமில்லை என்று சொல்கிறார். எனக்கென்னவோ உள்ளுக்குள் பயமாய் இருக்கிறது. உனக்கு ஆபீஸில் லீவு கிடைத்தால் ஒரு நடை வந்துவிட்டு போகவும். முடிந்தால் ஷைலஜாவையும் இந்துவையும் கூட்டிக்கொண்டு வரவும்.’

    இந்த ஜூக்’ மாதத்தின் கடைசி பத்து நாட்களில் - அரையாண்டு ஆடிட்டிங்கை முடிக்க வேண்டிய பரபரப்பில்-யாராவது லீவு என்று முனகினாலே ஆபீஸ் மானேஜர் ஐராவதம் ஹிப்போபொடாமஸ் மாதிரி வாயைத் திறந்து அனலைக் கக்கிவிடுவார் என்பது ஆபீஸில் பிரசித்தம். ஆகவே வாயை மூடிக்கொண்டு மனசுக்குள் கடந்த இரண்டு நாட்களாய்-தண்டு மாரியம்மனை துணைக்கு அழைத்தபடி புலம்பிக் கொண்டிருந்தான்.

    ‘தாயே! மாரியம்மா. அம்மாவுக்கு விபரீதமா ஒன்றும் ஆகிவிடக்கூடாது. அவளைத் திரும்பவும் சௌக்கியமாய் பழையபடி வீட்டுக்கு கொண்டு போய்ச் சேர்த்துரு. சேர்த்துட்டியானா வர்ற வருஷம் சித்திரை மாதம் உன்னோட திருவிழாவை என்னோட மனைவி ஷைலஜாவை பூவோடு எடுக்கச் சொல்றேன்.’

    அந்த மாரியம்மன் கைவிட்டுவிட்டாளா?

    அம்மாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?- நினைப்பே அழுகையாய் கண்ணில் கீறியது.

    சீக்கிரமா வாங்க கதிரேசன்! கால் லோக்கல் கால் இல்லை. எஸ்.டி.டி. கால். ஒவ்வொரு செகண்டும் ஒவ்வொரு ரூபாய். பிடிங்க ரிஸீவரை.

    வேணுகோபால் ரிஸீவரை நீட்ட கைகள் நடுங்க வாங்கிக் கொண்டான் கதிரேசன்.

    ஹலோ!- காதுக்கு ரிஸீவரைக் கொடுத்தான்.

    பேசறது யாரு கதிரேசனா?-மறுமுனையில் சேதுபதி கரகரத்தார்.

    ஆமாப்பா நான்தான் கதிரேசன் பேசறேன். என்னப்பா விஷயம்? கதிரேசனின் பின்னங்கழுத்தில் வியர்வை சொதசொதத்தது. நடு முதுகில் கால்வாய் பறித்துக்கொண்டு ஓடியது.

    கதிரேசா! நீ உடனடியாய் இந்துவையும். ஷைலஜாவையும் கூட்டிக்கிட்டு பாம்பே வரணும்!

    அப்பா!-குரலில் பதற்றம் அப்பிக் கொண்டது. அம்மாவுக்கு ஒன்றும் இல்லையே? நெஞ்சுக்கூடு திருவிழாக்கால தாரை தப்பட்டையாய் அதிர ஆரம்பித்தது.

    மறுமுனையில் சேதுபதி சிரித்தார்.

    அம்மாவுக்கு ஒன்றும் இல்லேடா. அவ ஹாய்யா வீட்லதான் இருக்கா. நேத்தைக்கு ஆஸ்பிடலிலிருந்து வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். இப்போ அம்மா நார்மலா இருக்கா. நான் இப்போ உனக்கு போன் பண்ணினது வேற ஒரு விஷயத்தைச் சொல்லத்தான்!

    ‘அம்மாடி’- மனசுக்குள் தேன் சுரந்த மாதிரியான உணர்வு கதிரேசனை ஆக்ரமித்தது. வியர்வை நின்று முகத்தில் காற்று வீசியது. தயிர் வடையும் காப்பியும் ஜீரணமாக ஆரம்பித்தன. இயல்பாய் பேச ஆரம்பித்தான்.

    என்னப்பா, என்ன விஷயம்?

    மறுமுனையில் சேதுபதி குரலை உயர்த்திக் கேட்டார்: ஆறு மாசத்துக்கு முன்னாடி நம்ம இந்துவைப் பெண் பார்த்துட்டு போனவங்க திரும்பவும் இன்னிக்கு வந்திருக்காங்க!

    யார்? அந்த இஞ்சினியர் மாப்பிள்ளை சதானந்தா?

    ஆமா! அவர்களேதான். இந்த ஆறுமாசமா பல பெண்களைப் பார்த்தும் அவங்களுக்குப் பிடிக்கலையாம். கடைசியா இந்துவையே பண்ணிக்கலாம்ங்கிற முடிவுக்கு வந்துட்டாங்களாம்.

    அப்பா! அவங்க என்ன காரணத்துக்காக நம்ம இந்துவைப் பண்ணிக்க மறுத்தாங்கன்னு உங்களுக்குத் தெரியுமில்லே?

    கதிரேசன் சீறினான்.

    தெரியுண்டா கதிரேசா! பத்தாயிரம் ரூபாய் வரதட்சிணை கேட்டாங்க. பெண்ணையும் குடுத்து வரதட்சிணை கொடுத்துக் கல்யாணம் பண்ற வழக்கம் நமக்கில்லேன்னு சொன்னோம். மூஞ்சிகளை திருப்பிகிட்டு போயிட்டாங்க. இப்போ... ஆறு மாசம் கழிச்சு வரதட்சிணை எங்களுக்கு ஒருபைசாகூட வேண்டாம். பெண்ணைக் கட்டிக்க எங்களுக்கு சம்மதம்ன்னு சொல்றாங்க. மாப்பிள்ளைப்பையன் அடுத்த மாசம் ஸ்டேடஸ் போறானாம். அதுக்கு முந்தி கல்யாணத்தை முடிக்கணுமாம்!

    நகை விஷயம்: சீர் விஷயம் எல்லாத்தையும் விவரமா தெளிவா பேசிட்டீங்களாப்பா?

    ம்... பேசிட்டேன். நம்ம சக்திக்கு தகுந்த மாதிரி செஞ்சா போதும்ன்னு சொல்லிட்டாங்க. இந்த வாரத்திலேயே நிச்சயதார்த்தத்தை நடத்திடலாம்ன்னு சொல்றாங்க. நீ உடனடியாக இந்துவையும் ஷைலஜாவையும் அழைச்சிட்டு வா. விவரமாப் பேசிக்கலாம்.

    கதிரேசன் பேச்சில் குறுக்கிட்டான். அப்பா! எனக்கு ஆபீஸில் கண்டிப்பா லீவு கிடைக்காது. ஹாப் இயர்லி ஆடிடிங்!

    நிலைமையைச் சொல்லிக் கேட்டுப் பாரேன்!

    வாயையே திறக்க முடியாதுப்பா.

    அப்படீன்னா இந்துவோட ஷைலஜாவை அனுப்பி வை. ஜெயந்தி ஜனதாவில் லேடீஸ்’ கம்பார்ட்மெண்டில் ஏற்றி அனுப்பிச்சுரு.

    தலையைச் சொறிந்து கொண்டான் கதிரேசன். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு தயக்கமான குரலில் சொன்னான்: ஷைலஜாவும் வரமுடியாத நிலைமையில் இருக்காப்பா. மன்த்லி சிக். இடுப்பு வலின்னு நாலு நாளா சமையல்கூட பண்ணாமே படுக்கையா இருக்கா. லேடிடாக்டர் கிறிஸ்டி கணபதி கம்பளீட் ரெஸ்ட் வேணும்ன்னு சஜஸ்ட் பண்ணியிருக்கா!

    மறுமுனையில் சேதுபதி எரிச்சல்பட்டார்.

    என்னடாது? மங்கள காரியத்துக்கு வராமே சாக்குபோக்கு சொல்லிட்டு? ஷைலஜாவை எப்படியாவது அனுப்ப ஏற்பாடு பண்ணு!

    வேண்டாம்பா. ரெண்டு நாள் ட்ரெயின் ஜர்னியை அவளோட உடம்பு தாங்கிக்காது. நான் இந்துவை மாத்திரம் ரயிலேத்தி அனுப்பிச்சு வைக்கிறேன். நீங்க வந்து ஸ்டேஷன்ல ரிஸீவ் பண்ணிக்குங்க.

    என்ன? இந்துவைத் தனியா ரயிலேத்தி அனுப்பறியா?

    ஏம்பா பயப்படறிங்க? உங்க மக இந்து என்ன சின்னக் குழந்தையா? எம்.ஏ.யை முடிச்சுட்டு ஒரு பெரிய கம்பெனியில் ஸ்டெனோவா வேலை பார்த்துக் கொண்டிருப்பவள். உலகத்தில் எந்த இடத்துக்கும் அவளைத் தனியா அனுப்பலாம். நாளைக்கு சாயந்திரம் அவளை ஜெயந்தி ஜனதாவில் அனுப்பிடறேன். நீங்க வி.டிக்கு வந்து கூட்டிட்டு போங்க.

    ம்… ம்... ம்... என்ற சேதுபதி, அப்பறம் இன்னொரு விஷயம். இந்துகிட்டே பேசி முடிவு பண்ணு! என்றார்.

    அவளுடைய உத்தியோக விஷயம்தானே? கழுத்துல தாலி ஏறின நிமிஷமே ராஜினாமா லெட்டரை அனுப்பிச்சுட வேன்டியதுதான்!

    போனை வெச்சுட்டுமா? இந்துவை பத்திரமா ரயிலேத்தி அனுப்பிச்சுடு நகையெல்லாம் போட்டுக்கொண்டு வரவேண்டாம் என்று சொல்லு

    ம்... ம்… அம்மாவை கேட்டதா சொல்லுங்கப்பா. மருந்தை வேளா வேளைக்கு குடிக்கச் சொல்லுங்க.

    மறுமுனையில் சேதுபதி போனை வைத்துவிட்டார். கதிரேசன் ரிஸீவரை வைத்துவிட்டு மனம் லேசாகி நடந்தான். அம்மாவின் உடம்புக்கு ஒன்றுமில்லை. தங்கை இந்துவுக்கு தட்டிப்போன சம்பந்தம் மறுபடியும் வாய்த்திருக்கிறது. மாப்பிள்ளை சதானந்த் இஞ்சினியரிங்கில் உயர்தரப் பட்டம் பெற்றவன். ஸ்டேட்ஸில் வேலையாகியிருக்கிறது. கமலஹாசனை நினைவுபடுத்தும் தோற்றம். அதிர்ந்து பேசாத தன்மை. இந்துவுக்கு ஏற்றவன்தான்.

    என்ன. தங்கச்சிக்கு கல்யாணமா?-ஹெட்கிளார்க் ரங்கபாஷ்யம் யானைக்குட்டி சைஸில் இருந்த லெட்ஜரைப் புரட்டிக்கொண்டே மூக்குக்கண்ணாடியை மேலேற்றியபடி கேட்டார்.

    ஆமா ஸார்! இந்த வாரத்திலேயே நிச்சயதார்த்தம் நடத்தணுமாம். மாசக் கடைசிக்குள்ளே கல்யாணத்தையும் முடிக்கணுமாம். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அவசரப்படறதா அப்பா சொல்கிறார்.

    முடிச்சுடச் சொல்லு. என்று அலட்சியமாய் சொன்னவர் லெட்ஜரை டப்பென்று மூடிவிட்டு கோட்டுப் பையிலிருந்த மூக்குப் பொடி டப்பாவை உருவிக் கொண்டார். அதன் மண்டையைத் தட்டிப் பிளந்து ஆட்காட்டி விரலையும். கட்டை விரலையும் உள்ளே நுழைத்து மூக்குப்பொடியை அள்ளிக் கொண்டார்.

    ஸார்....- கதிரேசன் மெல்லிய குரலில் அழைத்தான்.

    ம்...

    ஒரு ஒன் அவர் பர்மிஷன் வேணும் சார்.

    எதுக்கு?

    என்னோட சிஸ்டர் இந்து வேலை பார்க்கிற ஆபீசுக்குப் போய் அவளைப் பார்த்து இந்தக் கல்யாண விஷயத்தை கன்வே பண்ணிட்டு வரணும்.

    ஏன், போன் பண்ணிச் சொல்லிடலாமே?

    வேறொரு விஷயமா இருந்தா போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிடுவேன் ஸார். இது அவளோட கல்யாண விஷயம். நான் இந்த விஷயத்தை சொல்றப்ப அவ முகத்தில உண்டாகிற எக்ஸ்பிரஷனைப் பார்க்கணும் போல் இருக்கு ஸார்.

    சரி, போய்ப்பாரு. ஆனா ஒன் அவர்ல திரும்பிடணும். இப்போ மணி பன்னிரண்டரை. ஒன்றரை மணிக்கெல்லாம் நீ ஆபீஸ்ல இருக்கணும். மானேஜர் லஞ்சுக்கு போயிட்டு வர்றதுக்குள்ளே நீ வந்துடணும்.

    நிச்சயமா வந்துடுவேன் ஸார்! அப்படியே உங்ககிட்ட ஒரு பர்சனல் ஹெல்ப் கேக்கலாமா ஸார்?

    ம்... கேளு

    உங்க லூனா மோட்டார் சைக்கிளைக் கொஞ்சம் தர்றீங்களா ஸார்?

    அடப்பாவி! கடைசியில் எம்மடியிலேயே கையை வெச்சுட்டியே! சிரித்தபடி மோட்டார்சைக்கிளின் சாவியை

    Enjoying the preview?
    Page 1 of 1