Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

புதிராக ஒரு பூ!
புதிராக ஒரு பூ!
புதிராக ஒரு பூ!
Ebook73 pages23 minutes

புதிராக ஒரு பூ!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யுவராணியின் கையிலிருந்த தொலைபேசி கிடுகிடு வென ஆடியது.
மெல்ல நழுவியது.
அவள் உடலும் மெல்ல சோபாவில் அமர்ந்தது.
‘சாந்தகுமார் கொலை செய்யப்பட்டானா? கடவுளே...’ கொஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.
இன்னும் காதில் அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன அந்த வாசகங்களே திரும்பத் திரும்ப ஒலித்தன.
கைகால்கள் நடுநடுங்க என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறினாள்.
நம்ப முடியாத அந்தச் செய்தி அவளைத் தலைகீழாகப் புரட்டிப்போட, சாந்தகுமாரின் முகத்தை உடனே பார்த்து விடத் துடித்தது இதயம்.
அவசரமாக வாசலுக்கு ஓடினாள்.
போர்டிகோவில் நின்றிருந்த காரை எடுத்துக் கொண்டு அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்திற்கு விரைந்தாள். கடற்கரையை ஒட்டிய ஆள் நடமாட்டமில்லாத பகுதி அது. சவுக்குக் காட்டின் தொடக்கத்தில் அந்த விடிந்தும் விடியாத பொழுதிலும் சிறு கூட்டம் இருந்தது. போலீஸ் ஜீப் தெரிந்தது.
சாலையை ஓட்டிப் பிரிந்த மணற் பாதையில் தெரிந்தது சாந்தகுமாரின் கார்.
தன் காரை நிறுத்தி இறங்கிய யுவராணியை நோக்கி வந்தார் இன்ஸ்பெக்டர் சத்யம்.
எதையோ பேச வாயெடுத்தவர், எதுவுமே பேசாமல் சாந்தகுமாரின் காரைக் காட்டினார்.
யுவராணி காருக்கருகே ஓடினாள்.
பின் இருக்கையில் பிணமாகக் கிடந்தான் சாந்தகுமார்பார்த்ததுமே அலறினாள் யுவராணி. வாலிலேயே அடித்துக் கொண்டு அழுதாள்.
கூட்டம் வேடிக்கை பார்த்தது.
ஃபோட்டோகிராபரும் கைரேகை நிபுணரும் அவர்களுடைய பணியைத் தொடங்க, இன்ஸ்பெக்டர் சத்யம் போஸ்ட்மார்ட்டத்திற்கு பாடியைக் கொண்டு போக உத்தரவிட்டார்.
அழுது கொண்டிருந்த யுவராணியை நெருங்கினார்.
‘மேடம்... உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கணும். நீங்க உங்களைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டா...”
“கேளுங்க சார்!” கண்ணீரை துடைத்துக் கொண்டு அவரை ஏறிட்டாள்.
“உங்க கணவரைக் கயிறால கழுத்தை நெரிச்சுக் கொலை செய்து அவரோட கார்லயே கொண்டு வந்து இங்க போட்டுட்டுப் போயிருக்காங்க. கொலை செய்தவனோ... இல்லை, அவனோட ஆளோதான் காரை ஒட்டிக்கிட்டு வந்திருக்கானுங்க. உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா?”
யுவராணி உதடு பிதுக்கினாள்.
“தெரியலை சார். யார் இப்படிப் பண்ணினாங்கன்னு எனக்குத் தெரியலை.”
“உங்க கணவர் ஒரு தொழிலதிபர். தொழில் முறையில போட்டியாளர்கள் இருக்க வாய்ப்பிருக்கு. அப்படி யாராவது...”
“தெரியலை சார். நான் அவரோட கம்பெனி விஷயத்துல எதிலேயும் ஈடுபடறதில்லை. கம்பெனி விவகாரங்களையும் அவர் இதுவரை வீட்ல பேசினதில்லை. அவர் பேசாதத்துக்குக் காரணம் நான் எப்பவுமே கம்பெனி விஷயங்களை இன்ட்ரஸ்ட்டா கேட்கறதில்லை. அதனால எனக்கு அவரோட தொழில் ரீதியான எந்தப் பிரச்னையும் தெரியாது.”
“ஐ...ஸீ... நேத்து அவர் எப்போ வீட்டைவிட்டுக் கிளம் பினார்?”
“வழக்கம் போல ஒன்பது மணிக்கு.”
“கம்பெனிக்குத்தானே போனார்.”“ஆமா!”
“வேற எங்காவது போறதா சொன்னாரா?”
“வந்து... ஆமா சார். மதியம் வீட்டுக்குச் சாப்பிட வர மாட்டேன்னு சொன்னார். யாரோ சாப்பிடக் கூப்பிட்டிருக்கறதா சொன்னார். யாருன்னு கேட்டப்ப அவரும் ஒரு தொழிலதிபர் தான்னு சொன்னார்.”
“பேர் சொன்னாரா?”
“நான் கேட்டிருந்தா சொல்லியிருப்பார். நான் கேட்கலை.”
“அதுக்குப் பிறகு அவர் வீட்டுக்கு வரவே இல்லையா?”
“ வரலை. ஒரு போன் கூட அவர்கிட்டேயிருந்து வரலை கம்பெனி விஷயமா சில நாள் ராத்திரி வர மாட்டார். அது மாதிரி வரலைன்னு நினைச்சேன். கடைசியில... இப்படி...” அழத் தொடங்கினாள்.
போட்டோகிராபர், கைரேகை நிபுணர்களின் வேலை முடிந்ததும், போஸ்ட்மார்ட்டத்திற்குத் தயாரானான் சாந்தகுமார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
புதிராக ஒரு பூ!

Read more from ஆர்.சுமதி

Related to புதிராக ஒரு பூ!

Related ebooks

Reviews for புதிராக ஒரு பூ!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    புதிராக ஒரு பூ! - ஆர்.சுமதி

    1

    அலுவலகத்திற்குத் தயாரான சாந்தகுமார் தன்னறையிலிருந்து வெளிப்பட்டபோது பூஜையறையிலிருந்து மணி யோசை கேட்டது, சிரித்தபடியே சோபாவில் அமர்ந்தான்.

    சாம்பிராணி, ஊதுபத்தி வாசனை சூழப் பூஜையறையிலிருந்து அம்பாளே புறப்பட்டு வருவதைப் போல் வெளியே வந்தாள் யுவராணி.

    யுவராணியின் முகத்தில் தெய்வீகக் களை சுடர் விட்டது. உச்சி எடுத்துப் பின்னி விரித்து விட்டு நுனியில் கொண்டை போட்டிருந்த கூந்தலழகும் வட்ட முகத்தில் குங்குமமும் அதன் மேல் விபூதியும் பக்திப் பரவசமாக அவளைக் காட்டியது.

    என்ன டார்லிங், பூஜை யெல்லாம் முடிஞ்சுதா?

    அச்சுங்க.

    கம்பெனிக்கு டயமாயிட்டது. பசி வயித்தைக் கிள்ளுது. சீக்கிரம் டிபன் எடுத்து வை.

    வாங்க... எனச் சாப்பாட்டு மேஜையை நோக்கி நடந்த வளைப் பூஜைக் குட்டு போல் பின் தொடர்ந்தான். சட்டெனப் பின் பக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டான்.

    ஐயோ... என்னயிது? கம்பெனிக்குப் போற நேரத்துல...

    சரி... கம்பெனிக்குப் போகலை.

    போதும். ரொம்ப வழியாதிங்க. உட்காருங்க.

    உட்கார்ந்தவன் மெல்ல அவளுடைய இடுப்பைக் கிள்ளினான்.

    ச்சீ! சும்மா யிருக்க மாட்டிங்க?

    தட்டில் அவள் உப்புமாவை எடுத்து வைத்துத் தேங்காய்ச் சட்னியை ஊற்றினாள்.

    சுவைத்த சாந்தகுமார் அவளுடைய கையைப் பற்றிக் கொண்டான்.

    எவ்வளவு அருமையா யிருக்கு தெரியுமா? எப்படித் தினம் தினம் வித விதமா டிபன் பண்றே?

    எல்லாம் இதோட தயவாலதான்! மேஜையின் ஒரு பக்க மாயிருந்த சமையல் புத்தகம் ஒன்றை எடுத்துக் காட்டினாள். அந்தப் புத்தகத்தை வாங்கி ஒரு பக்கமாகப் போட்டவன், அவளை இழுத்து அருகே யிருந்த இருக்கையில் அமர்த்தினான்.

    இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டிய ஆளா?

    பின்ன வேற எந்தப் புத்தகத்தைப் படிக்கணும்? கண்ணடித்தாள்.

    உனக்கு எப்பவும் தப்பான அர்த்தம்தான் எடுக்கத் தெரியுமா? நீ படிச்ச படிப்பு என்ன! செய்யற வேலை என்ன படிச்ச படிப்புக்குத் தகுந்த மாதிரி மதிப்பா கம்பெனிக்கு வா நிர்வாகத்துல பொறுப்பெடுத்துக்க. எனக்கு உதவியா யிருன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது!

    ம்... இதோட நூறாவது தடவைன்னு நினைக்கிறேன்.

    என்ன, விளையாட்டா? நூறு தடவை என்ன, ஆயிரம் தடவை சொன்னாக் கூட நீ கேட்கப் போறதில்லே. கையில சமையல் கரண்டியைப் பிடிச்ச நேரம் போகப் பூஜை மணியைப் பிடிச்சு ஆட்டிக்கிட்டிருக்கே.

    கணவனுடைய தோளில் கைபோட்டு முகத்தோடு முகம் வைத்துக் கொண்டாள் யுவராணி.

    எனக்கு வீட்டைக் கவனிச்சுக்கறது, உங்களைக் கவனிச்சுக்கறது - இதுவே மனசுக்குத் திருப்தியா யிருக்கு. புருஷனுக்கு விதவிதமா சமைச்சுப் போடறதுல உள்ள சந்தோஷமும் திருப்தியும் வேற எதிலேயும் இல்லை, தெரியுமா?

    ம்... உன்னைத் திருத்தவே முடியாது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்குன்னு சொன்னாங்க, ஒரு காலத்துல. அந்த நிலைமை மாறிவிட்டது. ஆனா... நீ படிச்ச படிப்பை வீணாக்கிட்டு அடுப்படியே கதியா கிடக்குறே!

    அப்படியே கிடந்துட்டுப் போறேனே! அது போகட்டும். மதியம் உங்களுக்காக ஒரு புதுச் சமையல் பண்ணப் போறேன்.

    நீ புதுசு புதுசா கத்துக்கிற சமையலையெல்லாம் டெஸ்ட் பண்ணிப் பார்க்க என் வயிறுதானா கிடைச்சது?

    என்னங்க... நீங்க... அவள் சிணுங்க, அவளுடைய இடுப்பை அணைத்தவாறே...

    கோவிச்சுக்காதே டார்லிங். உன்னோட புதுச் சமையலை இன்னொரு நாள் செய். மதியம் ஒருத்தர் என்னைச் சாப்பிடக் கூப்பிட்டிருக்கார். மாட்டேன்னு சொல்ல முடியாது.

    யாரு?

    அவரும் ஒரு தொழிலதிபர்தான். நீ எனக்காகக் காத்திருக்க வேண்டாம். சாப்பிட்டுடு.

    ம்...போங்க. நீங்க இல்லாம எனக்குச் சாப்பிடவே பிடிக்காது...

    Enjoying the preview?
    Page 1 of 1