Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தென்றலே என்னைத் தொடு!
தென்றலே என்னைத் தொடு!
தென்றலே என்னைத் தொடு!
Ebook126 pages43 minutes

தென்றலே என்னைத் தொடு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“மாமா...”
புத்தகப் பையை முதுகில் மாட்டிக் கொண்டு வந்த ஜான்சியை நோக்கி ஓடினான் அசோக்.
“ஜானுக்குட்டி...” என அவளைத் தூக்கிக் கொண்டான்.
ஒரு கையில் அவளையும் இன்னொரு கையில் அவளுடைய ஸ்கூல் பேகையும் தாங்கியபடி தன்னுடைய பைக்கை நோக்கி நடந்தான்.
“மாமா... இன்னைக்கு எங்களுக்குப் புது மிஸ் வந்தாங்க தெரியுமா?” - என அசோக்கின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் ஜான்சி.
“அப்படியா! வெரி குட் நல்லாப் பாடம் நடத்தினாங்களா?”
“பாடமா?” - என்றவள் கலகலவெனச் சிரித்தாள்.
“ஏன்... பாடம் நல்லா நடத்தலையா?”
“நாங்க இன்னைக்கு மிஸ்கிட்ட படிக்க மாட்டோம், எழுத மாட்டோம்னு சொல்லிட்டோம்.”
“ஐய்யோ... அப்ப உங்களையெல்லாம் சரியான மக்குப் பசங்கன்னு நினைக்க மாட்டாங்களா?”
“இல்லையே! இன்னைக்குப் பூரா எங்க கூட மிஸ் பாட்டு, டான்ஸுன்னு ஒரே ஜாலியா இருந்தாங்க.”
“அப்படியா!. வந்தவுடனே ஸ்கேலைக் கையில் எடுக்காம இப்படி ஜாலியா இருந்திருக்காங்களே! அப்ப உண்மையிலேயே நல்ல மிஸ்தான்!” என்றபடி அவளைப் பைக்கில் உட்கார வைத்துத் தானும் அமர்ந்து இயக்கியபோது...
“மாமா... எங்க மிஸ் பேர் என்னன்னு உனக்குத் தெரியுமா?”அவங்களுக்குப் பேர் வைக்கிற விழாவுக்கு என்னைக் கூப்பிட்டிருந்தா ஒருவேளை தெரிஞ்சிருக்கும். என்னை அவங்க கூப்பிடலையே?”
“போ... மாமா!” - அவள் சிணுங்கிய அதே நிமிடம்... ஒரு சில ஆசிரியைகளுடன் சந்திரபிரபா வந்து கொண்டிருந்தாள்.
“மாமா.. மாமா... அங்க பார். அதுதான் எங்க மிஸ்...”
கைநீட்டிய திசையில் பார்த்தான் அசோக்.
“அங்கே மூணு டீச்சர் வர்றாங்க. அதுல யாரு உன் புது டீச்சர்?”
“அதோ நடுவுல சிவப்பா உயரமா ரொம்ப அழகா இருக்காங்களே... அவங்கதான்.”
அதற்குள் அவர்கள் நெருங்கி விட்டனர்.
நடுவில் வந்தவளைப் பார்த்தான். நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் வந்த நிலவைப் போல்...
மலர்ந்த முகம். கவர்ந்த அழகு. எடுக்க முடியாமல் போனது பார்வை.
தொடுக்க முடியாமல் உதிர்ந்த பூக்களாக உணர்வுகள்.
வாகனத்தை இயக்க முனைந்தவன் இயக்க முடியாமல் மயக்கமுற்றதைப் போல் ஒரு நிலை...!
தயக்கமாக இழுக்க வேண்டியிருந்தது புத்தியை.
“மாமா... எங்க மிஸ் எப்படி?”
“ம்...”
உள்ளுக்குள் எதுவோ நிகழ்ந்த நிலையில் அவன் உயிர் இல்லாத உடல் வாகனத்தை இயக்கும் அதிசயத்தை செய்து கொண்டிருந்தான்.
பள்ளி வளாகத்தைக் கடந்தபின் சாலையில் பரவியபோது கேட்டான்.
“ஜானு...”“என்ன மாமா?”
“உங்க மிஸ் பேர் என்ன?”
அசோக் அப்படிக் கேட்டதும் ஜான்சி கலகலவெனச் சிரித்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
தென்றலே என்னைத் தொடு!

Read more from ஆர்.சுமதி

Related to தென்றலே என்னைத் தொடு!

Related ebooks

Reviews for தென்றலே என்னைத் தொடு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தென்றலே என்னைத் தொடு! - ஆர்.சுமதி

    1

    அம்மா... நான் ஸ்கூல் போயிட்டு வர்றேன்.

    உடுத்தியிருந்த காட்டன் சேலையைச் சரி செய்தவாறே சந்திரபிரபா கைப்பையை எடுத்துக் கொண்டாள்.

    அம்மா பூஜையறையிலிருந்து வெளியே வந்தாள்.

    பொட்டிற்கும் கீழே அழகாகக் குங்குமத்தை வைத்தாள்.

    முதல் முதலா வேலைக்குப் போறே. நல்லபடியா ஒரு குறையும் வராம இருக்கணும். சங்கரி... அக்காவுக்கு டிபன் பாக்ஸ் எடுத்து வச்சியா?

    உள்பக்கம் நோக்கிக் குரல் கொடுத்தாள்.

    சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள் சங்கரி. சந்திரபிரபாவின் தங்கை.

    பிளஸ்டூ படிக்கிறாள். கையில் டிபன் பாக்சுடன் வந்தவள்... அதை அக்காவின் கைப்பையில் வைத்து விட்டு பெஸ்ட் ஆஃப் லக்! என்றாள்.

    சந்திரபிரபா மென்மையாகச் சிரித்துக் கொண்டாள்.

    உனக்கு ஸ்கூல் டயமாகலையா?

    இதோ... கிளம்பிட்டேன். யூனிஃபார்ம் போட வேண்டியதுதான் பாக்கி.

    அவசரமாக உள்ளே ஓடினாள்.

    ஓடிய வேகத்திற்குத் திரும்ப வந்து நின்றாள்.

    அக்கா... இரேன். நானும் உன் கூடவே வந்துடறேன்.

    ஏய்... சீக்கிரம் வர்றதுன்னா வா. முதல் நாளே லேட்டா போய் நின்னா நல்லாயிருக்காது.

    ரெண்டே நிமிஷத்துல வந்திடறேன்க்கா...

    சொன்னபடியே யூனிஃபார்மில் சீக்கிரமே வந்து நின்றாள்.

    அம்மா... போய்ட்டு வர்றோம்! - இருவரும் கோரஸாகச் சொல்லி விட்டுப் படியிறங்கினர்.

    அவர்கள் தெருமுனை வரை சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு வேதா உள்ளே சென்றாள்.

    சந்திரபிரபாவும் சங்கரியும் பேசியபடியே வந்தனர்.

    இருபது நிமிட நடைக்குப் பிறகு சந்திரபிரபா வேலை பார்க்கப் போகும் பள்ளிக்கூடம் வந்து விட்டிருந்தது.

    காலை நேர பரபரப்பு பள்ளி வளாகத்தில் தெரிந்தது.

    சின்னச் சின்னச் சிட்டுக்களாக குழந்தைகள் ஆட்டோக்களிலிருந்தும் வேன்களிலிருந்தும் இறங்கிக் கொண்டிருந்தனர்.

    அக்கா... நான் வர்றேன்! - சங்கரி கையாட்டி விட்டுக் கிளம்பிச் சென்றாள்.

    சந்திரபிரபா பள்ளியினுள் நுழைந்தாள்.

    அது ஒரு தனியார் பள்ளி. ஒரு அழகான தோட்டம் போல் இருந்தது. மரத்தைச் சுற்றிக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    சந்திரபிரபா பிரின்சிபலின் அறைக்குள் நுழைந்து வணக்கம் தெரிவித்து விட்டு வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு... சில நிமிடங்கள் அவர் சொன்ன சட்டதிட்டங்களைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்த போது காலை வணக்கக் கூட்டத்திற்கான மணியோசை கேட்டது.

    மாணவ, மாணவிகள் வரிசையும் ஒழுங்குமாக வந்து நின்றனர்.

    காலை வணக்கம் முடிந்தது.

    மாணவ - மாணவிகளும், ஆசிரியர்களும் அவரவர் வகுப்பிற்குச் சென்றனர்.

    எதிர்பட்ட ஆசிரியைகளிடம் வணக்கம் கூறிச் சிரித்து விட்டு... தான் செல்ல வேண்டிய வகுப்பு எந்தப் பக்கம் எனக் கேட்டுத் தெரிந்து கொண்டு நடந்தாள் சந்திரபிரபா.

    அப்பொழுதுதான் - வரிசையாக வகுப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த குழந்தைகள் மத்தியிலிருந்து ஒரு சிறுமி மட்டும் ஓடி வந்தாள்.

    நேராக சந்திரபிரபா வந்து கொண்டிருந்த இடத்திற்கு ஓடி வந்து நின்று ரோஜாவாக மலர்ந்து சிரித்தாள்.

    மிஸ்... நீங்க ஃபர்ஸ்ட் ஸ்டேன்டர்ட்க்குத்தானே வர்றீங்க?

    ஆமா!

    அது எங்க க்ளாஸ்தான். வாங்க நான் கூட்டிட்டுப் போறேன்... என உரிமையோடு கையை இறுகப் பற்றிக் கொண்ட அந்தச் சிறுமி இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு ஓடினாள். ஓடும்போதே திரும்பித் திரும்பிச் சிரித்தாள். பேசிக் கொண்டேயிருந்தாள்.

    எங்களுக்குப் புது மிஸ் வருவாங்கன்னு சொன்னாங்க. எப்படி வருவாங்களோன்னு பயந்துக்கிட்டே யிருந்தேன். மிஸ்... உங்களை எனக்கு ரொம்பப் பிடிச் சிருக்கு. நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க...

    ஓ... தேங்க் யூ! - சிரித்தாள் சந்திரபிரபா.

    வாங்க மிஸ்.... இதுதான் என் க்ளாஸ்... ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தாள். நம்ம புது மிஸ் இவங்க தான். நான்தான் அழைச்சிக்கிட்டு வந்தேன்.

    அந்தச் சிறுமி பெருமையாகத் தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.

    குழந்தைகள் கொஞ்சமும் பயமும் தயக்கமும் இன்றி கைதட்டிக் குதூகலித்தனர்.

    மரியாதையாக ‘குட் மார்னிங் மிஸ்...’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘ஹையா...’ எனக் கைகளை உயர்த்திக் குதித்தனர்.

    மிஸ்... மிஸ்... நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க. எங்களுக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு! என்றபடி பயமோ தயக்கமோ இன்றி சூழ்ந்து கொண்டனர். ஆளாளுக்கு அவளுடைய கையைப் பற்றிக் கொண்டனர்.

    மிஸ்... உங்க பேர் என்ன ?

    சொல்றேன். முதல்ல நீங்க எல்லாரும் அவங்கவங்க இடத்துல போய் உட்காருங்க. உங்களோட பெயரை வரிசையாச் சொல்லுங்க. சரியா...

    ஓ.கே. மிஸ்!

    மறுகணம் பட்டாம்பூச்சிகள் பறந்து சென்று பூக்களில் அமர்வதைப் போல் அவரவர் இடங்களில் அமர்ந்தனர். வரிசையாகப் பெயர்களைச் சொல்லிக் கொண்டு வந்தனர்.

    மை நேம் இஸ் சசி.

    மீனா...

    சுமன்...

    வெங்கட்...

    தீபிகா...

    அவளை வகுப்பிற்கு அழைத்து வந்த அந்தத் துறுதுறு பெண்... என் பெயர் ஜான்சி... என்றாள்.

    வெரி குட். அப்ப தினமும் குதிரையிலதான் ஸ்கூலுக்கு வருவியா? என்று கேட்டதும்...

    எல்லாக் குழந்தைகளும் கலகலவெனச் சிரித்தனர். கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

    ஜான்சி வெட்கமாகச் சிரித்துவிட்டு, மிஸ்... பழைய மிஸ் என்னைச் செல்லமா ஜானுன்னு கூப்பிடுவாங்க... என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாள்.

    அப்படியா? அப்படின்னா நானும் ஜானுன்னே கூப்பிடறேன்... என்றாள்.

    ஜான்சி முகத்தில் சந்தோஷம் இரட்டிப்பானது.

    எல்லோருடைய பெயரும் சொல்லி முடிக்கப்பட்டபின் குழந்தைகள் அவளுடைய பெயரைச் சொல்லச் சொல்லிக் கூச்சலிட்டனர்.

    என் பெயரை நான் சொல்ல மாட்டேன். நீங்களே கண்டுபிடிங்க பார்க்கலாம்...

    ராதா...

    மீனா...

    த்ரிஷா...

    சந்திரபிரபா கலகலவெனச் சிரித்தாள்.

    என்ன எல்லாரும் சினிமா நடிகை பெயர்களையே சொல்றீங்க? ரொம்ப சினிமா பார்ப்பீங்க போலிருக்கு...

    மிஸ்... மிஸ்... நீங்களே சொல்லுங்க ப்ளீஸ்... - கெஞ்சினர்.

    ஓ.கே! ஒரு க்ளூ கொடுக்கிறேன். கண்டுபிடிங்க... என்றவள் புதிர் போட்டாள்.

    நான் வானத்துல இருப்பேன். ராத்திரியில வருவேன். ஒளி கொடுப்பேன். நான் யார்?

    நிலா...

    உங்க பேர் நிலாவா மிஸ்... ரொம்ப அழகான பேர் மிஸ்.

    பாராட்டும் விதமாகக் கைதட்டினர்.

    இல்லை... நிலாவோட வேற பெயர். கண்டுபிடிங்க பார்க்கலாம்...

    ம்... சந்திரன்!

    ஐய்யோ... அது பாய்ஸ் பெயர். அதுவா உங்க பெயர்? நல்லாவே இல்லை மிஸ்...

    சந்திரபிரபா கலகலவெனச் சிரித்தாள்.

    என் பெயர் சந்திரபிரபா...

    குழந்தைகள் கைதட்டினர். பாராட்டும் விதமாகக் கூச்சலிட்டனர். சிரித்தனர்.

    மிஸ்... உங்க பெயர் சூப்பர். ரொம்ப நல்லாயிருக்கு மிஸ்!

    தேங்க் யூ ! ஓ.கே. நாம இன்னைக்கு என்ன படிக்கலாம்?

    படிக்க வேண்டாம் மிஸ்...

    பின்னே?

    ஆமாம் மிஸ்! படிக்க வேண்டாம். போர்...

    சரி என்ன பண்ணலாம்?

    "இப்படியே ஜாலியாப் பேசிக்கிட்டிருக்கலாம்

    Enjoying the preview?
    Page 1 of 1