Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தேன் சிந்தும் பூக்கள்
தேன் சிந்தும் பூக்கள்
தேன் சிந்தும் பூக்கள்
Ebook113 pages40 minutes

தேன் சிந்தும் பூக்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மதிவாணன் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நளினியைப் பார்த்தான்.
 நளினி தன் கேபினை விட்டு வெளியே வந்து ப்ரியாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.
 நளினி பேரழகி இல்லைதான். ஆனாலும் சந்தானம் சொன்னதைப் போல் காதலிக்க ஏற்றவள்.
 அலை அலையான கூந்தல். களையான முகம்.
 'இருண்ட பருவ முகில்
 சுருண்டு சுழி எறியும்
 கொண்டையாள் - குழை
 ஏறி ஆடி நெஞ்சைச்
 சூறை ஆடும் விழிக்
 கெண்டையாள்'
 பள்ளிப் பருவத்தில் படித்த குற்றாலக் குறவஞ்சிப் பாடல் இந்தப் பருவ எழிலைப் பார்த்ததும் எதிரொலித்தது.
 "மச்சான்..."
 முதுகில் சுள்ளென விழுந்தது. சுதாரித்துக் கொண்ட போது மேஜையில் கைகளை ஊன்றி சந்தானம் நின்றிருந்தான்.
 "டேய்... அது என் ஆளு. இந்தளவுக்கு ஜொள்ளு விடறே..."
 "ஜொள்ளு இல்லேடா. அருவி...!"
 "அருவியா... என்ன குற்றால அருவியா?"

"இல்லே... கவிதை அருவி. அப்படியே ஊற்றெடுக்குது."
 "சரி. அந்தக் கவிதையை எழுதிச் சினிமாவுக்குக் கொடுத்துக் காசாக்கிடு. பொழச்சுப் போ. ஆனா... ஆளை மட்டும் அபேஸ் பண்ணிடாதே. கவிதை எழுதற உரிமையை மட்டும் வேணா உனக்குத் தந்துடறேன்..."
 சந்தானம் சிரித்தான். மதிவாணன் முறைத்தான்.
 "சரி... என்ன கவிதை ஊற்றெடுத்தது சொல்லு. எதுக்கும் காதலிக்கும் போது யூஸ் பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்."
 'இருண்ட பருவ முகில்
 சுருண்டு சுழி எறியும்
 கொண்டையாள் - குழை
 ஏறி ஆடி நெஞ்சைச்
 சூறை ஆடும் விழிக்
 கெண்டையாள்'
 "மண்டையில் உனக்கும் கொஞ்சம் மசாலா இருக்கு. நல்லாத்தான் இருக்கு கவிதை. சினிமாக்காரன் யார்கிட்டயாவது கொடு. வைரமுத்து மாதிரி வரலாம். காசு கிடைக்கும். புகழ் கிடைக்கும்."
 "காசும் கிடைக்காது. புகழும் கிடைக்காது. உதைதான் கிடைக்கும்."
 "ஏன்டா?"
 "குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடராசப்பக் கவிராயர் கதாநாயகி வசந்தவல்லியை வர்ணிக்கிற பாட்டு. பள்ளிக்கூடக் காலத்துல உருப் போட்டது. உன் ஆளைப் பார்த்ததும் ஞாபகம் வந்துச்சு..."
 "அதானே பார்த்தேன். எனக்கும் எங்கோ நெருடிச்சு. இந்தக் கவிதையைப் படிச்ச மாதிரி இருக்கேன்னு... இதைப் பார்... இந்தக் கவிதை ஞாபகம் வர்றது, கதை ஞாபகம் வர்றது எல்லாம் உனக்குன்னு ஒரு ஆள்வரும்போது ஞாபகம் வரட்டும். என் ஆளைப் பார்க்கும் போது வரக் கூடாது. சரி, அது போகட்டும். என் காதலை எப்பப் போய்ச் சொல்லப் போறே?"
 "நான் என்ன தூதுப் புறாவா?"
 "அப்படித்தான் வச்சுக்கயேன். ஆனா கருப்புப் புறா."
 "சரியா பன்னிரண்டு மணிக்கு..."
 "நடு ராத்திரியில அவ வீட்டுக்குப் போனா திருட்டுக் கேஸ்ல உள்ளே போயிடுவ..."
 "டேய்... மதியம் பன்னிரண்டு மணிக்கு..."
 "அதென்ன முகூர்த்த நேரமா? இப்பப் போயேன்."
 "இப்ப புறா டயர்டா இருக்கு. பறக்கச் சிறகு கூட விரிக்க முடியாத நிலையில இருக்கு. கேண்டீனுக்குக் கூட்டிட்டுப் போய் சூடா வடை, பஜ்ஜி வாங்கிக் கொடுத்தின்னா தெம்பா தூது போகலாம்."
 "வந்து தொலை..."
 முதுகில் நாலு போட்டு அவனை அழைத்துக் கொண்டு கேண்டீனுக்குச் சென்றான்.
 அங்கே சென்று சூடாக பஜ்ஜியும் டீயும் வாங்கிக் கொடுத்தான்.
 மதிவாணன் சாப்பிட்டு முடித்தான்.
 "என்ன... தெம்பு வந்துடுச்சா?"
 "வந்துடுச்சு..."
 "சரி. நேராப் போய் பட்டுன்னு என் காதலைச் சொல்லிடு."
 "ஓ.கே." - உற்சாகமாகக் கிளம்பினான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 8, 2023
ISBN9798223092407
தேன் சிந்தும் பூக்கள்

Read more from R.Sumathi

Related to தேன் சிந்தும் பூக்கள்

Related ebooks

Reviews for தேன் சிந்தும் பூக்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தேன் சிந்தும் பூக்கள் - R.Sumathi

    1

    சந்தானம் அப்பொழுதுதான் அலுவலகத்திலிருந்து தன் அறைக்குத் திரும்பி இருந்தான்.

    உள்ளே நுழைந்தவன் சோபாவில் அமர்ந்து ஷூவைக் கழற்றும் போது அலைபேசி ஒலித்தது.

    எடுத்துப் பார்த்தபோது ‘அம்மா’ என்றிருந்தது.

    உற்சாகமாக அம்மா... என்றான்.

    என்னடா எப்படி இருக்கே? - மறுமுனையில் அம்மாவின் குரல் அன்பும் அக்கறையும் சுமந்து ஒலித்தது.

    நல்லாயிருக்கேன்ம்மா. சொல்லு என்ன விஷயம்?

    ஏன்டா... நீ நல்லாயிருக்கியான்னு நான் கேட்டேனே... நீ பதிலுக்கு எப்படிம்மா இருக்கேன்னு கேட்க மாட்டியா? பெத்த தாய்டா நான்...

    என்னம்மா நீ? சரி... எப்படி இருக்கே?

    நல்லா இல்லேடா!

    ஏம்மா உடம்பு சரியில்லையா?

    உடம்பு நல்லாத்தான்டா இருக்கு. மனசுதான்டா சரியில்லை.

    அட... உன் மனசுக்கு என்னம்மா ஆச்சு?

    சந்தோஷம் இல்லைடா.

    அதான் மாசா மாசம் என் சம்பளப் பணத்தை அப்படியே அனுப்பிடறேனே... அப்புறம் என்ன?

    பணம் மட்டுமே சந்தோஷம் இல்லைடா!

    தெரியும்மா. சுத்தி வளைச்சுப் பேசாதே. தரகர் ஏதாவது வரன் கொண்டு வந்தாரா?

    சரியாக் கண்டுபிடிச்சுட்டியே... தஞ்சாவூர்லயிருந்து ஒரு ஜாதகம் வந்திருக்குடா. பொண்ணு லட்சணமாயிருக்கா. படிச்சிருக்கா. வேலை கூடப் பார்க்கிறா. நல்ல இடமாம். நீ எப்ப வர்றே சொல்லு. போய்ப் பார்த்துட்டு வந்திடலாம்.

    அம்மா... ப்ச்! இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்?

    வயசு முப்பதைத் தொடப் போகுதுப்பா... ம்

    முப்பதுதானே!

    என்ன விளையாடறியா?

    அம்மா... சொன்னாக் கேளு. கல்யாணத்துக்கு என்ன அவசரம்? ரெண்டு வருஷம் போகட்டும்.

    இதையே இன்னும் எத்தனை வருஷத்துக்குடா சொல்லுவே?

    இன்னும் ஒரு பத்து வருஷத்துக்கு...

    அடி வாங்கப் போறே! நானும் ஒவ்வொரு பொண்ணாப் பார்க்கிறேன். நீ தட்டிக் கழிச்சுக்கிட்டே வர்றே. உன் ஃப்ரெண்ட் மதி இருக்கானா? இருந்தா அவன்கிட்டக் கொடு.

    அவன் இன்னும் வரலைம்மா...

    எப்ப வருவான்?

    யாருக்குத் தெரியும்? அவன் என்ன உன் புள்ளை மாதிரியா? ஆபீஸ் விட்டதும் நேரா வீட்டுக்கு வர? சரியான ஊர் சுத்திம்மா... ஊரையெல்லாம் சுத்திட்டு ஆற அமரத்தான் வருவான்.

    சரி! அவன் எத்தனை மணிக்கு வந்தாலும் எனக்குப் போன் பண்ணச் சொல்லு.

    உத்தரவு!

    அம்மா சட்டென்று தொடர்பைத் துண்டித்தாள்.

    ‘இந்த அம்மாக்களே இப்படித்தான்...’ - சிரித்துக் கொண்டவனாய் ஷூக்களைக் கழற்றி வைத்து விட்டு உடை மாற்றிக் கொண்டு ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து வராண்டாவில் கிடந்த இருக்கையில் அமர்ந்து புரட்டினான்.

    சரியாய் அரை மணி நேரம் கழித்து மதிவாணன் தன் பைக்கில் சர்ரென உள்ளே நுழைந்தான்.

    என்ன மாப்ளே? சீக்கிரம் வந்துட்டியா? என்றபடியே பைக்கை நிறுத்தினான்.

    வழக்கம் போலத்தான் வந்தேன்.

    என்னமோ வீட்டில் கட்டின பொண்டாட்டி காத்துக்கிட்டு இருக்கிற மாதிரி ஆபீஸ் விட்டதும் தலைதெறிக்க ஓடி வர்றே?

    பின்னே உன்னை மாதிரி ஊரையெல்லாம் சுத்திட்டு வரணுமா?

    ஊரைச் சுத்திட்டு வர்றேனா? கொழுப்புடா உனக்கு? ஆபீஸ்ல எவ்வளவு வேலை தெரியுமா?

    இதை நீ வேற இடத்துல வேலை செய்து சொல்லியிருந்தா நம்பியிருப்பேன். ரெண்டு பேரும் வேலை செய்யறது ஒரே இடத்துல. என்கிட்ட கதை விடறியா?

    டேய்... போதும்டா! நான் உன்னை மாதிரி கூட்டுப் புழு இல்லை. என் வேலை நேரம் போக எல்லோருக்கும் என்னால முடிஞ்ச உதவியை வலியப் போய்ச் செய்துட்டு வர்றேன். அதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும்டா!

    எஸ். அந்தப் பரந்த மனசுக்கு உனக்குக் கிடைச்ச பெயர் என்ன தெரியுமா? ஜொள்ளுப் பார்ட்டி.

    டேய் போதும்டா... பொது வாழ்க்கையில ஈடுபடறவன் இந்த மாதிரிக் கேலிப் பேச்சுக்கெல்லாம் கவலைப்படக்கூடாது.

    பொண்ணுங்ககிட்ட வழியறதும் பொது வாழ்க்கையா? என்று சிரித்த சந்தானத்தின் எதிரே அமர்ந்தான் மதிவாணன்.

    உனக்கெல்லாம் இது புரியாதுப்பா...

    சரி! அது போகட்டும். நீ வந்ததும் அம்மா உன்னைப் போன் பண்ணச் சொன்னாங்க. என்னன்னு கேளு... என்றபடியே எண்களை அழுத்தி அலைபேசியை அவனிடம் நீட்டினான். சில நிமிடங்களில் அம்மா தொடர்பில் வந்தாள்.

    ஹலோ... அம்மா, நான் மதி பேசறேன். என் கூடப் பேசணும்னு சொன்னீங்களாம். என்ன விஷயம்?

    மதி... அவன் என்னடா நினைச்சுக்கிட்டிருக்கான். அவனுக்கு இங்கே நான் சல்லடை போட்டுச் சலிச்சு ஒவ்வொரு பொண்ணா பார்க்கிறேன். அவன் என்னடான்னா கல்யாணம் இப்ப வேண்டாம், அப்படி இப்படின்னு சொல்றான். ஏதாவது காதல் கீதல்ன்னு பண்றானா சொல்லுடா?

    இதைக் கேட்டு மதிவாணன் பெரிதாகச் சிரித்தான்.

    அடப் போங்கம்மா... நீங்க வேற? அவனாவது காதலிக்கிறதாவது? ஆபீஸ்ல லட்டு லட்டா எவ்வளவு பொண்ணுங்க தெரியுமா? யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்கமாட்டான். பேச மாட்டான்.

    டேய்... இப்படிப்பட்டவனுங்களைத்தான் நம்பவே கூடாது. மூடி வச்சுக் கழுத்தை அறுப்பானுங்க... இன்னையிலிருந்து உன் வேலை... அவன் யாரையாவது காதலிக்கிறானான்னு கண்டுபிடிக்க வேண்டியதுதான்...

    சரி... கண்டுபிடிச்சு... ஒரு வேளை அப்படி ஏதாவது இருந்தா...

    அந்தக் கழுதையையே கட்டி வைக்க வேண்டியதுதான்.

    இந்த ஜாதி...

    கண்றாவி! அதெல்லாம் யாருக்கு வேணும்?

    பாரதியார் மாதிரியே பேசறீங்க... இந்த மதம்?

    மண்ணாங்கட்டி!

    பெரியார் மாதிரியே பேசறீங்க! வசதி வாய்ப்பு?

    பிச்சைக்காரியாயிருந்தா கூடப் பரவாயில்லை.

    லெனின் மாதிரியே பேசறீங்க.

    டேய்... ரொம்பப் புகழாதே!

    உண்மையிலேயே பொறாமையா இருக்கு. எனக்கு இப்படி ஒரு அம்மா இல்லையேன்னு...

    ஏன்டா கவலைப்படறே? நீயும் ஒரு பொண்ணைப் பிடி. என்னோட செலவிலேயே ரெண்டு பேருக்கும் ஒண்ணாக் கல்யாணம் பண்ணி வச்சிடறேன்.

    ஐய்யோ... கர்ணவள்ளல் நீங்கம்மா...

    போடா... விட்டாக்க வரலாறு புத்தகத்துல உள்ள எல்லாரையும் நான்னு சொல்லுவே. நான் சொன்ன வேலையை முதல்ல செய். ஒரு வாரத்துல எனக்கு விவரம் தேவை. சரியா?

    சரிம்மா...

    அம்மா தொடர்பைத் துண்டித்தாள்.

    மதிவாணன் சந்தானத்தை ஏறிட்டான்.

    உங்கம்மா எனக்குப் பெரிய வேலை கொடுத்திருக்காங்க.

    என்ன வேலை? ஊருக்குப் புறப்பட்டு வந்து அங்க பண்ணையில உள்ள எருமையையெல்லாம் மேய்க்கச் சொல்றாங்களா?

    அடிச்சேன்னா பாரு...

    Enjoying the preview?
    Page 1 of 1