Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஏனழுதாய் என்னுயிரே!
ஏனழுதாய் என்னுயிரே!
ஏனழுதாய் என்னுயிரே!
Ebook97 pages35 minutes

ஏனழுதாய் என்னுயிரே!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்கள் நிலைகுத்திப் போக அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர்.
 அம்மா இறந்துவிட்டாளா? நம்ப முடியவில்லை. 'இந்த உலகில் நம்பவே முடியாத உண்மை ஒன்று உண்டென்றால் அது உறவுகளின் மரணம்தான்'
 வித்தியாசம் எதுவும் இல்லை. வழக்கமாக சும்மா தூங்குவாள். இப்பொழுது மாலைகள் கழுத்தில்.
 அப்பா ஒய்வு பெற்று வீட்டிற்கு வருவதற்கு முன் இவள் நிரந்தரமாக ஓய்வெடுக்கப் போய்விட்டாள். கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த அம்மாவைச் சுற்றி அக்கம் பக்கத்துக் கூட்டம். உறவினர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. யாரும் இன்னும் வரவில்லை.
 அம்மா இறந்த உடனே அவனுக்கு அவசரத்தில் ஒன்றுமே புரியவில்லை. அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று கூடத்தோணவில்லை. இரண்டு வீடு தள்ளியிருந்த மருத்துவரை ஓடி அழைத்து வந்தான்.
 அவர் வந்து நாடி பிடித்துப் பார்த்தார். இதயத்துடிப்பை கேட்டுப் பார்த்தார். வரிசையாக கேள்விகளைக் கேட்டார். பிறகு,
 "ஹார்ட் அட்டாக்கா இருக்கலாம். உயிர் போய் பல மணி நேரம் ஆகுது" என வார்த்தைக் கத்தியை வயிற்றில் பாய்ச்சி விட்டுப் போனார்.
 தன்னந்தனியாக கொஞ்ச நேரம் கதறி அழுதான். அதன் பிறகு தான் அப்பாவிற்கே சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அவன் அவருடைய சொல்லிற்கு தொடர்பு கொண்டபோது அவருக்குப் பாராட்டுவிழா நடந்து கொண்டிருந்தது. விஷயத்தைக் கேட்டதும் அவர் ஆட்டிபோய் விட்டார். உடனே கிளம்பி ஓடி வந்தவர் கையில் அவருக்குப் பாராட்டு விழாவில் போட்ட மாலை.அந்த மாலையை மனைவியின் கழுத்தில் போட்டு விட்டு அப்படியே சிலைபோல் நின்றவர்தான், பிறர் அசைத்து அவரைப் புற உலகிற்கு கொண்டு வர முயன்றும் முடியாமல் இந்த நிமிடம் வரை சிலைபோல் அமர்ந்திருக்கிறார்.
 அப்பாவின் மன ஓட்டம் எப்படியிருக்கும்? எண்ணங்களே இல்லாமல் சித்த பிரமை பிடித்தைப் போல் இருக்குமோ? காலையில் என்னவெல்லாம் சொல்லிவிட்டுப் போனார்? 'சாயந்திரம் நான் வரும்போது கல்யாணப் பெண்ணைப் போல் பட்டுப்புடவை கட்டிக் கொண்டு தலைநிறைய பூ வைத்துக் கொண்டு நிற்க வேண்டும்' என்று சொன்னாரே...
 இப்படி ஒரு கோலத்தில் எதிர்பார்த்திருப்பாரா? கணவன் வேலையிலிருந்து ஓய்வு பெறுவதையே விரும்பாதவள்... அதையே தாங்கிக் கொள்ள முடியாதவள்... இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அம்மாவின் உயிரைப் பறித்துவிட்டதா? சுந்தர் குமுறிக் கொண்டு வரும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினான்.
 அதே நேரம் - படியேறினாள் வானதி. முகம் பேயறைந்ததைப் போலிருந்தது. அவளிடமும் அம்மா இறந்த விஷயத்தை சொல்லியிருந்தான். அவளைப் பார்த்ததுமே அவனுடைய உள்ளம் உடைந்தது. தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான்.
 வானதி... தன் வருங்கால மாமனார் மாமிராயரை சந்திக்க எவ்வளவு ஆர்வமாக இருந்திருப்பாள்?
 மாமனாருக்கு பரிசளிப்பதாக கடை கடையாய் ஏறி கடிகாரம் ஒன்றை வாங்கினான். அதை வாங்கிக் கொண்டு இறங்கும் போதுதான் மறுபடியும் அவனிடமிருந்துபோன். 'என்ன... கிஃப்ட் வாங்கிட்டு வர்றேனா, வெறுங்கையோட வர்றேனான்னு தெரிஞ்சுக்க போன் பண்றீங்களா? நான் ஒண்ணும் அத்தனை கருமி இல்லை. கிஃப்ட் வாங்கியிருக்கேன்" என் அவள் சிரிக்க அவன் எதிர்முனையில் மெதுவாக விஷயத்தைச் சொல்ல நடுங்கிப் போய்விட்டாள்.
 'ஒரு வகையில் இது ஒரு பெண் பார்க்கும் படலம்.' என்று அவள் நினைத்திருக்க, விதியோ இழவுப் படலமாக மாற்றியிருந்தது. தன் மாமியாரை முதன் முதலாக உயிரற்ற சடலமாகவா சந்திக்க வேண்டும்இதோ... தன் வருங்கால மாமியாரைப் பீதி நிறைந்த முகத்துடன் பார்க்கிறாள். பாதங்களைத் தொட்டு வணங்குகிறாள். கண்ணீர் அவளையும் மீறி கன்னங்களில் இறங்குகிறது. மஞ்சள் பூசி குங்குமம் சிரித்த அந்த முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள்.
 'நான் இந்த வீட்டில் அடி எடுத்து வைப்பதற்குள் உனக்கேன் அவசரம்? எதற்காக இத்தனை சீக்கிரம் போய்விட்டாய் தாயே' சவக்கோலத்தில் ஏற்பட்ட அந்த முதல் சந்திப்பு அவளுடைய இதயத்தைப் பிசைவது போலிருந்தது.
 வானதி வீட்டிற்கு வந்தபோது மணி இரவு எட்டு அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லிற்கு தொடர்பு கொண்டு தன் அலுவலக நண்பர் ஒருவரின் தாய் இறந்துவிட்டதாகவும் அதற்கு போய்விட்டு தாமதமாகத் தான் வருவேன் என்றும் கூறியிருந்தாள்.
 அவளுக்கு இரவு முழுவதும் சுந்தருக்கு அருகிலேயே இருக்கவேண்டும் போலிருந்தது. ஆனால் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அவளுடைய காதலைப் பற்றி எதுவும் தெரியாது. அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் ஒருவருடைய அம்மா இறந்ததற்கு நீ ஏன் விடியும் வரை இருக்க வேண்டும் என்ற கேள்வி அம்மா அப்பாவிடமிருந்து வருமே என்ன பதில் சொல்வது ஏன் கிளம்பி வந்துவிட்டாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 3, 2024
ISBN9798224106370
ஏனழுதாய் என்னுயிரே!

Read more from R.Sumathi

Related to ஏனழுதாய் என்னுயிரே!

Related ebooks

Reviews for ஏனழுதாய் என்னுயிரே!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஏனழுதாய் என்னுயிரே! - R.Sumathi

    ebook_preview_excerpt.htmlZnF~gCF{6)KۤX$J, BPăI!^W$.9( 3|ˋ?_ﳋsw^xšC=ԓCU=}t꡻>T.Cgj nPw- 4'\{mn=%\A¥m5ƽnAנ7In} q0So0߿Б[~D׭[̎B)=~(URbǍWr=F|;^ 5]g0F,fCKݭ48Dw8`3,HG.\` [ru#'HymMA(-- +z='7h e0@ ǭb 2 qCAe%Nw`[!$Ī݆cilLӑEhYI #PV]elsz3(͂vHzVك&\Kde86v XĒe4ר֟Xk;3z'#)-&XtOJYa$)v%w.wf8 LM@͋c)Oy>GU~6ݧf؍KDNak^FQ*S#sB+>WBpӉ{߃wYe>qk, 8oW^̵_8N~$T1/0=Lvvfl,}%,"ޮC"BșŨdi܌ :L~H4!m5=n? I -y{EЁ02!CZq#: e\`ϗQfɝZJ+E, 1BIؗ&J ORu`ܚSʂӣ5ROmhK-6YnH@f[qB~R94-V7وs86ͽx,,J]%Q1PO1ŋ=ʠ }}~!99RFHgTء0 x{.#YJxc^#L7)=4 $E @T JPQ@A[TDvȚv#^;$z-MSvyQ/ؗ6"jeE}#¦J7ML|HMӆxs&Fub 6jANu`Tؤ7'uSGbfT(4U r4+e{' HkQ;g# Y3E?Xb sSW Uz`W>‘2?Y8{H %&d:I*?<Ғ>f)r2oD be}5pJJeo2"&},IZE rlz'A<> #toTmE²t,J'椼/IyEzN#݌7YgN!>'c[XY-e`%V񾯲' g'QRa{V"'H v +l/Z$QnO2Šk}̠}=-Pۈ%[>!$!`Hld w;s %R0V֩xaO{! zؖTlS ˠ<_.7w/iy*qvkY_.ݴ:mm_/m"M(1OOPBE/bDx|I Lv1Zs )>£UMfQ}FKn&f)fh"\˲i$zd{`ckKlT|,D}-8[9n-MȷZ~Z[0s#8Q[BͭS; }P\ҹE9ұ=&~Ѵ%{Moel=Y$3B iKaGdQ!=܍-r)'8W\Z%TޢLG`3g)c}:6mxI'Qlìp( ;T"3 iYM2jf4P 2R:cC$ZġW Hi9Jƶy, 6**sA /:VZ%+ie: 43m;_NZEIHJ W2ܛ&!3l9d^%ة&:cRcw0=ƥʇPR†] @4ov}=*EО)&)kY'1wJ7 ,Z&}L;|{hv+_RɌMBR([_5s wQ-(s ՛5T`7}ɉ)!(;SDv hf.
    Enjoying the preview?
    Page 1 of 1