Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appa Kuruvigal
Appa Kuruvigal
Appa Kuruvigal
Ebook149 pages59 minutes

Appa Kuruvigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Mekala Chitravel
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466770
Appa Kuruvigal

Related to Appa Kuruvigal

Related ebooks

Reviews for Appa Kuruvigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appa Kuruvigal - Mekala Chitravel

    1

    காற்றுத் தோழனுடன் ஓடிப் பிடித்து விளையாடி மூலைக்கொருவராக ஓடிய நட்சத்திரக் குழந்தைகளை ஒன்றாக அணைத்துக் கொண்டு நிலவு அம்மா, வானத் தரையில் நடந்து மேகவீட்டுக்குப் போகும் பின்மாலைப் பொழுது.

    வீட்டுக்கு முன்பக்க ஷெட்டில் பைக்கை நிறுத்திய அழகர் லேப்டாப் பையையும் சாப்பாட்டுப் பையையும் எடுத்துக் கொண்டு படியேறினான். கிரில் கதவு வழியாக அவனைப் பார்த்த மாதுரியும், பாலாஜியும், அப்பா... அப்பா... என்று கத்தினார்கள்.

    அம்மா எங்கடா செல்லங்களா? என்று கேட்டுக்கொண்டே பூட்டைத் திறந்தான் அழகர்.

    அம்மா சுகந்தி பெரிம்மா வீட்டுக்குப் போயிருக்காங்கப்பா. உங்களை காபி போட்டு குடிக்க சொன்னாங்க. அப்பறமா குக்கர் வைச்சி நம்ம மூணு பேரையும் சாப்பிட சொன்னாங்க. அவங்க பெரிம்மா வீட்டுலயே சாப்பிட்டுட்டு வருவாங்களாம். - மாதுரி சொன்னாள்.

    உடம்பும் மனமும் அலுத்து களைத்திருந்ததை மறைத்துக் கொண்டு பிள்ளைகளைப் பார்த்து சிரித்தான். நீங்க ரெண்டு பேரும் ஏதாவது குடிச்சீங்களாடா? என்று கேட்டுக் கொண்டே ஷூவைக் கழற்றினான்.

    ஆமாம்ப்பா... அம்மா பூஸ்ட் கலந்து குடுத்திட்டுதான் போனாங்கப்பா... இரண்டும் கோரசாகக் கூவின.

    சரிடா... நீங்க ரெண்டு பேரும் வீட்டுப் பாடம் எழுதிக்கிட்டே இருங்க. அப்பா குளிச்சிட்டு வந்து குக்கர் வைச்சிடறேன்... நாம மூணு பேரும் சூடா சாப்பிடலாம்.

    அப்பா எனக்கு ஆம்லேட் வேணும்ப்பா என்று பாலாஜியும் எனக்கு அப்பளம் வேணும் என்று மாதுரியும் கொஞ்சலாய் கேட்டார்கள்.

    ஓ.கே... செய்திடலாம்... நீங்க எழுத ஆரம்பிங்க... என்றபடி குளிக்கப் போனான் அழகர்.

    குக்கர் வைத்து, பிள்ளைகள் கேட்டதை செய்து மூவரும் சாப்பிட்டு பிள்ளைகளை தூங்க வைத்து விட்டு அவன் உட்கார்ந்தபோது மணி ஒன்பதாகிவிட்டது.

    வாசல் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. செருப்பு சப்திக்க உள்ளே வந்த சுமித்திரா கைப்பையை சோபாவில் எறிந்தாள். சாப்பாடு இருக்கா? பசியில தலைவலி வந்திடும்னு நினைக்கிறேன். என்று சொன்னபடி உணவு மேசையருகில் போனாள். என்ன இது? எல்லாத்தையும் வழிச்சி வைச்சிருக்கீங்க? வெளிய போனவங்க எப்படி வருவாங்களோன்னு யோசிக்க மாட்டீங்களா? என்று சிடுசிடுத்தபடி குளிர்சாதன பெட்டியைத் திறந்து தோசை மாவு பாத்திரத்தை எடுத்தாள். சே.... நானே செய்து நானே தின்னணுமா? எல்லாம் என் தலையெழுத்து.... என்று புலம்பிக் கொண்டே தோசை ஊற்ற ஆரம்பித்தாள்.

    அவளுடைய புலம்பலைக் கேட்ட அழகருக்கு கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. இந்தா... என்ன தனியா பெனாத்திக்கிட்டிருக்கறே? நீதானே உங்கக்கா வீட்டுல சாப்பிட்டுட்டு வர்றதா பசங்கக்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கே? அப்பறம் எப்படி அதிகமா சாதம் வைக்கிறது? அப்பறம் அதுக்கு உன்கிட்ட யாரு திட்டுவாங்குறது? உங்க அக்கா வீட்டுல சாப்பிட்டுட்டு வரேன்னு ஜம்பமா சொல்லிட்டுப் போனியாமே... அங்க சாப்பிடலியா?

    ஆமாம்... நான் திட்டித்திட்டிதான் உங்க ஏழடி உயரத்தில இருந்து நாலடியா குறைஞ்சு போனீங்க... வேணாம். நல்லா வாயில வருது. எங்கக்காவையும், என்னை மாதிரி மாச சம்பளத்துக்கு மாரடிக்கிறவரோட பெண்டாட்டின்னு நினைச்சிக்கிட்டீங்களா? அவ புருஷன் வெளிநாட்டில் வேலை செய்து கொள்ளை கொள்ளையா பணம் அனுப்பி வைக்கிறாரு. எங்கக்கா அதை சந்தோஷமா செலவு பண்ணிக்கிட்டிருக்கா. கொடுத்து வைச்சவ. இன்னிக்கு பெரிய ‘பைவ் ஸ்டார்’ ஓட்டல்ல அவ பிரண்டுங்களுக்கு டின்னர் குடுக்கறா. என்னையும் கூட வரத்தான் சொன்னா. ஆனா எனக்குத்தான் கூடப் போக அவமானமா இருந்தது. இந்த பழைய புடவையும் கழுத்தில ஒத்தை செயினும், இத்துப் போன வளையலும், எண்ணெய் இறங்கின தோடும் போட்டுக்கிட்டு அந்த பணக்காரங்கக்கூட போக முடியாது. எங்கக்காகிட்ட ஒரு வார்த்தை கேட்டிருந்தா புதுசே குடுத்திருப்பா. ஆனா.. அவகிட்ட உங்களை விட்டுத்தர முடியாம வந்துட்டேன். போதுமா? என்று கத்திய சுமித்திராவைப் பார்த்து சிரித்தான் அழகர்.

    பரவாயில்லையே.. புருஷனோட கவுரவத்தைக் காப்பாத்தணும்னு நினைச்சிருக்கியே... தேங்க்ஸ். ஏன்னா, எப்பவும், இருக்கறதை விட்டுட்டுப் பறக்கறதைப் பிடிக்கிறவளாச்சே நீ? ஒண்ணு மட்டும் நிச்சயமாத் தெரியுது. உன் அக்காவோட ஏமாளிப் புருஷன் அந்த முத்து இருக்காரே, அவரு பாடுபட்டு அனுப்பி வைக்கிற பணமெல்லாம் வெட்டி ஜம்பத்துக்கு செலவாகுதுன்னு புரியுது. அந்த மனுஷன் திரும்பிவரும் போது நிலமை மோசமா இருக்கும் போலிருக்கே... சரி... சரி. இது உன் பிறந்த வீட்டு விஷயம். எனக்கு எதுக்கு அடுத்தவங்க வீட்டுக் கதை? எனக்கு தூக்கம் வருது. குட்நைட் - சொல்லிவிட்டு அழகர் சோபாவிலேயே படுத்து விட்டான். எண்ணி ஐந்து நிமிடத்துக்குள் தூங்கிடவும் செய்தான்.

    சுமித்ராவுக்கு அதற்கு மேல் தோசை சுடவோ சாப்பிடவோ பிடிக்கவில்லை. மாவைத் தூக்கி குளிர்பதனப்பெட்டியிலே வைத்துவிட்டு படுக்கப் போனாள். ஆனால் தூக்கம் தான் வரவில்லை. கூடப் பிறந்த இரண்டு அக்காவும் பணத்தில் புரளுகிறார்கள். சின்னவளோ கோடீஸ்வர குடும்பத்து மருமகள். தான் மட்டும் இப்படி வாடுகிறது அவளுக்கு வேதனையாக இருந்தது. தலையெழுத்து என்று தள்ளவும் முடியவில்லை. இரவெல்லாம் தூங்காமல் இருக்கத்தான் முடிந்தது.

    காலையில் வேலை மும்முரத்தில் எது நினைவுக்கு வரும்? பிள்ளைகளும் கணவனும் வெளியில் போன பிறகு வீட்டை ஒழுங்கு செய்து பெருக்கித் துடைத்துக் கொண்டிருக்கும் போது வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. கையிலிருந்த ‘மாபை’யும் வாளியையும் ஒதுக்கி வைத்து விட்டு வெளியில் வந்தாள்.

    அம்மாவும் சின்னக்காவும் வந்து கொண்டிருந்தார்கள். வாம்மா.. வாக்கா... இப்பதான் இங்க வர வழிதெரிஞ்சுதா? என்று சொல்லிக் கொண்டே அம்மாவின் கையைப் பிடித்தாள். அம்மா முகம் சுளித்தாள். ஏன்டீ... நீ மாறமாட்டியா? சின்ன வயசில இருந்த அதே சுத்தமில்லாத நடத்தை... வீடு தொடைச்சிக்கிட்டிருந்த அழுக்குக் கையோட வந்து என் கையைப் பிடிக்கிறியே... போய் கையைக் கழுவிக்கிட்டு வா... சே.. புடவையெல்லாம் அழுக்குபட்டிருக்கு பாரு...

    ஆசையாக ஓடி வந்த தன்னை அம்மா இப்படி முகம் சுளித்து சிடுசிடுத்தது சுமித்திராவுக்கு முகத்திலடித்தது போலிருந்தது. சமாளிக்கும் விதமாக அசட்டுத்தனமாக சிரித்துக் கொண்டே ஓடினாள்.

    கைகழுவித் திரும்பி வரும் போது ரெண்டு டம்ளர் நிறைய பெப்ஸி ஊற்றிக் கொண்டு வந்தாள். அம்மா.. எடுத்துக்கம்மா... என்று முகம் மலர சொன்னாள்.

    எடுத்துக்கறேன்.. எடுத்துக்கறேன்.. வீட்டு வேலையெல்லாம் நீ தான் செய்யணுமா? ஒரு வேலைக்காரி வைச்சிக்கக்கூடாதா? உன் புருஷன் என்ன தலையை வாங்கிடுவானா? எப்படி இருந்தவளை இப்படி போட்டு பாடா படுத்தறானே.. பெத்த வயிறு எரியுதே... இப்படி கறுத்து இளைச்சிப் போயிட்டியேடி... அன்னம்மாவின் குரலில் கோபமும் கவலையும் தெரிந்தது.

    அம்மா தனக்கு சார்பாக பேசுவதைக் கேட்டதும் சுமித்திராவுக்கு அழுகை பீறிட்டது. வென்று அழக்கிளம்பினாள்.

    இப்ப அழுது என்ன பண்றது? இவன் வேணாம்னு எவ்வளவோ எடுத்து சொன்னேன். கேட்டியா? இவனோட அழகைப் பார்த்து இவனைத்தான் பண்ணிக்குவேன்னு நின்ன கால் நிலை காலா நின்னே... இப்ப கிடந்து அல்லாடறே. உன் தலையில நீயே அட்சதை போட்டுக்கிட்டதுக்கு யார் என்ன பண்றது? அம்மாவின் குரலில் அழுகை.

    நீ ஏம்மா அவளைத் திட்டறே? ஏற்கனவே வேதனைப்பட்டுக்கிட்டிருக்கா... வேலைக்காரி வைக்காம சிக்கனம் பிடிச்சாள்னா வீட்டுல பணக்கஷ்டம்னு தெரியுதில்லே? எதுக்கு வாடகை வீட்டுல இருக்கிறது? என்னோட வீடு சும்மாத்தானே பூட்டிக்கிடக்கு? அதுல போய் இருந்துக்கலாமில்லே? எத்தனை மாசமா சொல்லிக்கிட்டிருக்கேன்? எல்லாத்துக்கும் உன் புருஷன் பிரிஸ்டீஜ் பார்த்துட்டிருக்கானே... சுந்தரி அலுத்துக் கொண்டாள்.

    என்னை என்னக்கா செய்யச் சொல்றே? வீட்டுல அவரு வைச்சது தான் சட்டம். ஏதாவது எதிர்த்துப் பேசினா பத்து நாள் பேசாம... வீட்டுல சாப்பிடாம இருப்பாரு... அந்தத் தொல்லைக்குத்தான் நான் வாயைமூடிக்கிட்டிருக்கேன். பசங்க எந்த விதத்திலேயும் வருத்தப்பட்டுடக்கூடாதுன்னுவேற எல்லாத்தையும் அனுசரிச்சிக்கிட்டுப் போக வேண்டியிருக்கு... - சுமித்திரா திரும்பவும் விம்மினாள்.

    நல்லா அனுசரிச்சே போ.. அதுக்குன்னு இப்படியா வாய் இல்லா பூச்சியா அடங்கிப் போவே? என்னடி சுந்தரி... இவ இப்படியே இருக்கா? ஏதாவது செய்யணுமே... அன்னம்மா சொன்னதைக் கேட்டு சுந்தரி ஆமாம்மா.. நாம இருக்கும் போது இவ இப்படி கஷ்டப்படக்கூடாதும்மா. எங்க வீட்டுக்காரரைக் கலந்துக்கிட்டு ஏதாவது செய்யப் பார்க்கிறேன் என்றாள்.

    இவளைப்பத்தி பேச்செடுத்தாலே அப்பாவுக்குப் பிடிக்கறதில்லை. ‘திமிர் பிடிச்சி நம்ம பேச்சைக் கேட்காம போனா இல்லே? படட்டும்’னு சொல்லிடறாரு.. எனக்குத்தான் இது பெரிய பாடா இருக்கு. கட்டினதையும் கடிஞ்சிக்க முடியலை. பெத்ததையும் விட முடியலை. அன்னம்மா அழுதாள். சுமித்திரா அவள்கூட சேர்ந்து கொண்டாள்.

    என்னம்மா நீ? ஆறுதல் சொல்ல வேண்டியவ, கூட சேர்ந்துக்கிட்டு அழுதா சரியாபோச்சா? அப்பாக்கிட்ட நான் பேசறேன். சின்ன வயசில ஆளு அழகா இருக்கான்னு நினைச்சிட்டா.... அவனும் முடிஞ்சவரையும் பார்த்துக்கறான்தான். இருந்தாலும் இது போதாது... நல்லபடியா வசதியா வாழணும் இல்லையா? கூடிய சீக்கிரமே இதுக்கொரு முடிவு பண்ணலாம்...

    சுந்தரி கடிந்து கொண்டாள்.

    சுமித்ரா முகத்தை துடைத்துக் கொண்டு, "என்னவோ மனசு தாங்காம

    Enjoying the preview?
    Page 1 of 1