Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Seerinal Chitra
Seerinal Chitra
Seerinal Chitra
Ebook89 pages33 minutes

Seerinal Chitra

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குருமூர்த்தி என்பவருக்கு இரண்டு குழந்தைகள் ஒரு பெண் சித்ரா, ஒரு ஆண் வித்யாசாகர். குருமூர்த்திக்கு ஏற்பட்ட விபத்தில் ஒரு கால் பறிபோனது. வித்யாசாகர்தான் குடும்பத்தைப் பார்த்துகொள்கிறான். சித்ரா வீட்டு வேலைகளை செய்து தனது அப்பாவையும், அண்ணனையும் பார்க்கிறாள். சித்ரா தட்டச்சு பயிற்சி செய்யும் நிறுவனத்தில் சுகவனம் என்ற பையனை காதலிக்கிறாள். வித்தியாசாகருக்கு இது பிடிக்கவில்லை, ஏனெனில், ஷீலா என்ற பெண்ணை அவன் விரும்புகிறான். ஷீலாவை திருமணம் செய்ய வேண்டுமெனில், தனது அண்ணன் சுந்தரத்திற்கு சித்ராவை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏற்படுகிறது. தன் சுயநலம் கருதி வித்யாவும் இதுக்கு ஒப்புக் கொள்கிறான் இந்த விஷயம் சித்ராவுக்கு தெரிய வந்தால் நடக்கப்போவது என்ன? சித்ரா சுகவனத்தை மணந்து கொள்வாளா? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580155610877
Seerinal Chitra

Read more from Lakshmi

Related to Seerinal Chitra

Related ebooks

Reviews for Seerinal Chitra

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Seerinal Chitra - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சீறினாள் சித்ரா

    Seerinal Chitra

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    சித்ரா வெளியே கிளம்ப ஆயத்தமாகி விட்டிருந்தாள். தண்ணீர் கூஜாவையும் டம்ளரையும் கொண்டு வந்து அப்பா உட்கார்ந்திருந்த முன்னறை மேஜை மேல் கைக்கெட்டும் இடத்தில் வைத்தாள். டெலிபோனை நகர்த்தி அருகில் வைத்தாள்.

    தோள் பையை மாட்டிக் கொண்டு பிளாஸ்டிக் கூடையைக் கையில் பிடித்துக் கொண்டாள்.

    வரட்டுமா அப்பா?

    விடை பெற்றுக் கொண்ட மகளை குருமூர்த்தி கனிவுடன் பார்த்தார். தமது இயலாமையால் மகளுக்கு ஏற்பட்டிருக்கும் பொறுப்புகளை எண்ணி பெருமூச்செறிந்தார்.

    இருட்டறதுக்குள்ளே திரும்பிடும்மா. பத்திரம். காலம் கெட்டு கிடக்கு வழக்கமான எச்சரிப்புகளுடன் அவளை வாஞ்சையாகப் பார்த்தார்.

    பத்துநாள் காமாலைக் காய்ச்சலின் கிடந்த அவர் மனைவி மரணமடைந்த பின்னர்... அந்தத் துயரத்தின் வேதனை சிறிதுகூட அடங்காத நிலையில் அவருக்கேற்பட்ட பயங்கர மோட்டார் விபத்தில் வலது காலை முழங்காலுக்கு மேல் இழந்து ஊனமாகிட்ட பின்னர்...

    சித்ரா மட்டும் இல்லாதிருந்தால்... வாழ்க்கை பெரிய நரகமாகி விட்டிருக்குமே!

    அப்பா என்று அனுசரணையாக அழைத்து, வேளைக்கு உணவு கொடுத்து, நோய்வாய்ப்பட்டபோது பணி விடைகள் செய்து... அவர் வெளியே கவனிக்க வேண்டிய அத்தனை வேலைகளையும் தான் சுமந்து... தாயாக- மகளாக – நண்பனாக - பரிவாகக் கவனிக்கும் சித்ரா மட்டும் இல்லாதிருந்தால்...

    கண் இமைகளைச் சுட்ட கண்ணீரை விழுங்கிக் கொண்டார்.

    ரொம்பப் பளுவா சாமான்களை வாங்கித் தூக்கிக் கொண்டு வராதேம்மா. நடக்க முடியாட்டா ரிக்ஷாவிலே வந்துடும்மா கனிவாகச் சொன்னார்.

    சித்ராவுக்கு வீட்டு வேலைகளுடன் அன்றாடம் வெளியே சென்று கவனிக்கப் பல பணிகளும் இருந்தன. பி.ஏ. பட்டத்திற்குப் பின்னர் அவள் தட்டெழுத்து - சுறுக் கெழுத்துப் பயிற்சியை மேற்கொண்டிருந்தாள். லோயர் பாஸ் பண்ணிவிட்டிருந்தாள். மேற்கொண்டு பயில அவள் வாரத்திற்கு மும்முறை தட்டெழுத்து நிறுவனத்திற்குச் சென்றுவர வேண்டியிருந்தது.

    அம்மா இறந்து போகுமுன் ஒரு தீபாவளிக்கு, தன் அருமைப் பெண்ணுக்குத் தையல் மிஷின் ஒன்றை வாங்கித் தந்து விட்டுப் போயிருந்தாள். தையல் எந்திரத்தை மூலையில் கட்டி வைக்க மனமின்றி, வீட்டிற்குக் கொஞ்ச தூரத்திலிருந்ததொரு மாதர் சங்கத்துத் தையல் வகுப்பில் சேர்ந்து தைக்கப் பழகிக் கொண்டிருந்தாள். அதற்காக வாரம் மூன்று தடவை வெளியே கிளம்ப வேண்டியிருந்தது? எலக்ட்ரிக் பில் கட்டவும், வீட்டு வரி, தண்ணீர் வரிகளைக் கட்டி முடிக்கவும், வீட்டுச் செலவுக்கு அப்பா கொடுக்கும் காசோலையை வங்கியில் மாற்றி எடுத்து வருவதற்குமாக... அவள் தினமும் ஒரு வேளையாவது வெளியே போய்வர வேண்டியிருந்தது.

    வீட்டிலும் அவளுக்கு வேலை ஏராளமாகத்தான் இருந்தது. விடியற்காலையே எழுந்து விடும் அப்பாவுக்கு பிஸ்கட்டும் காப்பியும் தந்து விட்டு, அவர் குளிக்க வெந்நீர் எடுத்து வைத்து, உடுக்க ஆடைகளைக் கொண்டு தயாராகக் குளியலறைக் கம்பியில் தொங்க விட்டு, அவள் முன்னதாக குளித்து மாற்றுடை அணிந்து பூஜையறையைச் சுத்தம் செய்தாக வேண்டும்.

    வீட்டுக்கு முன்னாலிருந்த சிறு தோட்டத்தில் பூக்கும் மல்லிகை... நித்யமல்லி பூக்களை அப்பாவின் பூஜைக்குச் கொண்டு வந்து வைத்து விட்டு, காப்பி பலகாரத் தயாரிப்பில் ஈடுபட வேண்டும்.

    அப்பாவிற்குப் பின் எழும் அண்ணன் காப்பிக்கு அலறு முன் கொண்டு தந்து உபசரிக்க வேண்டும். வேலைக்குப் போகும் அண்ணனுக்கும், வீட்டிலிருக்கும் அப்பாவுக்கும் காப்பி பலகாரம் தந்து, அண்ணனுக்கு கையில் எடுத்துப் போக டிபன் கட்டிக் கொடுத்து, வேலைக்காரியுடன் வளைய வந்து வீட்டைச் சுத்தப்படுத்தி, பகல் சமையலை முடித்து விட்டு, வங்கிக்கோ கடைக்கோ ஓடிச் சென்று திரும்ப வேண்டும். அநேக இரவுகள் டி.வி.கூடப் பார்க்க முடியாது அவள் அயர்ச்சியாக உறங்கி விடுவது வழக்கம்.

    ஐந்து மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பும் அண்ணன் நேரே ஒரு பொழுதும் வீட்டுக்கு வந்ததில்லை.

    வீட்டுக்கு வந்து மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருக்க வேணுமா? என்றுதான் விவாதிப்பான்.

    வேலையிலிருந்து கிளம்பி, வாலிபர் சங்கம் ஒன்று நடத்திய விளையாட்டுப் பயிற்சியில் பங்கெடுத்துக் கொண்டு விட்டு, வியர்வையில் தொப்பலாகி வீடு வரும் அவனுக்கு குளியலறையில் அண்டாவில் நீர் நிறைத்துத் தயாராக வைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் ரொம்பவே ஆர்ப்பாட்டம் செய்வான்.

    தன் சம்பாத்தியத்தில் வீடு நடக்கிறது என்கிற அகங்காரம் அவனுக்கு. அப்பாவின் பென்ஷன் தொகை ரொம்பவும் குறைவு. இந்த விலைவாசியை சமாளிக்க முடியாத சிறு தொகை.

    மீதமான சேமிப்பை அவர் கல்யாணத்திற்கு நிற்கும் தமது மகளுக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அம்மாவின் நகைகள் இரு பங்காக்கப்பட்டு மகனுக்கும் மகளுக்கும் என்று வங்கி லாக்கரில் தூங்கிக் கொண்டிருந்தன.

    குருமூர்த்தி சாதாரண மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நகரத்திலிருந்த பிரபல

    Enjoying the preview?
    Page 1 of 1