Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பொன்னாடை
பொன்னாடை
பொன்னாடை
Ebook95 pages34 minutes

பொன்னாடை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த பெரிய பங்களாவின் முன்னால் காரை நிறுத்தினான் வைதேகியின் டிரைவர்.
“டிரைவர்...”
“சொல்லுங்கம்மா...”
“காரை விக்க ஏற்பாடு பண்ணிடு.”
“அம்மா, கொஞ்சம் யோசனை பண்ணி செய்ங்கம்மா.”
“என்ன யோசனை பண்ணச் சொல்றே?”
“அம்மா இது வாரிசு இல்லாத சொத்து இல்லை. வாணியம்மா என்னைக்காவது ஒரு நாளைக்கு உங்களைத் தேடி வருவாங்க.”
“அவ வரமாட்டா.”
“அம்மா... அப்படி சொல்லாதீங்க. வாணியம்மா மட்டும் இல்லை ஐயாவும் வருவாங்க. உறவுகள் என்னைக்கும் உடைஞ்சுடாது. அப்ப வந்து சொத்துக்களை ஏன் வித்தீங்கன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவீங்க? அம்மா பாசம்கிறது அத்தனை சீக்கிரத்துல விட்டுப் போகாதும்மா. அந்த சக்தி என்னைக்கும் ஜெயிக்கும். வாணியம்மா வருவாங்க. உங்கக்கூட இருப்பாங்க. அவங்க அனுபவிக்க வேண்டிய சொத்துக்களை இப்படி அனாதைப் பசங்களுக்கு எழுதி வைக்காதீங்கம்மா...”
“ம்... நீ சொல்றதெல்லாம் எதுவும் நடக்காது. எனக்கு நல்லாத் தெரியும். என் கணவரும், என் மகளும் திரும்ப என்கிட்ட வரமாட்டாங்க. அதுல எந்த மாற்றமும் இல்லை. ஏன்னா... நான் பண்ணின பாவம் அப்படி. அந்த பாவத்துக்கு பரிகாரமா நான் என் சொத்தையெல்லாம் தானம் பண்ணலை. என் கணவருக்கு நான் செய்யற நன்றி இதுதான். இதெல்லாம் அவர் சம்பாதித்த சொத்து. அவர் வந்து இதை அனுபவிக்கபோறதில்லைங்கிறது உறுதி. அவரோட பொண்ணுங்களும் அவரை மாதிரிதான். உயிரே போனாலும் வைராக்கியத்திலிருந்து மாறமாட்டாங்க. ரெண்டு பேருமே அதை நிரூபிச்சிட்டாளுங்க. ப்ச்! பேசி எதுவும் ஆகப் போறதில்லை. சொன்னதை செய்.”
சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். தனிமை வெறுமை அவளை எள்ளி நகையாடியது. சோர்வுடன் வந்து சோபாவில் சரிந்தாள்.
வாணியும் சரளாவும் காற்சதங்கை ஒலிக்க அந்த வீடு பூராவும் ஓடி விளையாடிய காட்சி கண்களில் தெரிந்தது.
அம்மா, அம்மா என அழைத்த அவர்களுடைய குரல் காதில் ஒலித்தது.
இப்பொழுது, வீடு சுடுகாடு போல் ஒரு அமைதியில் இருந்தது. ஒரு பேச்சுக்குரல் இல்லை. அவள் மட்டுமே தன்னந்தனியாக பேய் போல் உலவிக் கொண்டிருக்கிறாள். கண்ணீர் திரண்டது. சுவரில் பெரிதாக்கப்பட்டு மாட்டப்பட்டிருந்த அந்த புகைப்படத்தில் அவளுடைய விழிகள் நிலைத்தது.
இளம் வயது வைதேகியும் சேகரும் சரளாவையும்,. வாணியையும் அணைத்தபடி இருந்தனர். சிரிப்பு அனைவரின் முகத்திலும் குடி கொண்டிருந்தது.
மகிழ்ச்சி பூத்துக்குலுங்கியது அந்த புகைப்படத்தில். அவளுடைய நெஞ்சம் வேதனையில் வாடியது. விம்மியது. அவள் குலுங்கியபொழுதே அதே நேரம் தொலைபேசி ஒலித்தது.
முந்தானையால் கண்களை அவசரமாகத் துடைத்துக் கொண்டாள்.
“ஹலோ... வைதேகி பேசறேன், நீங்க யாரு?”
“மேடம், நான் கோபால்சாமி பேசறேன்.”
“சொல்லுங்க.”
“சொத்துக்களை விக்க ஏற்பாடு பண்ணச் சொல்லியிருந்தீங்களே! நல்ல பார்ட்டி ஒண்ணு வந்திருக்கு. அழைச்சுட்டு வரட்டுமா மேடம்.சரி. எப்ப வர்றீங்க?”
“சாயந்தரம் அஞ்சு மணிக்கு வர்றோம்.”
“சரி.” வைத்துவிட்டு வந்தாள்.
அவள் பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்த வீடு இன்னொரு கைக்குப் போகப் போகிறது. ரசித்து ரசித்து பராமரித்த தோட்டம் விலைக்குப் போகப் போகிறது. அமுத சுரபியால் விளைந்த வயல்கள் அடுத்தவர் கைக்குப் போகப் போகிறது.
நெஞ்சில் பொங்கிய வேதனை அலைகளை கட்டுப்படுத்த தெரியாமல் திண்டாடினாள்.
கோபால்சாமி சொன்னபடியே மாலை, சொத்துக்களை வாங்க ஆள் அழைத்து வந்தார்.
வீடு விலை பேசப்பட்டது. வந்தவர் பெரும் பணக்காரர். அவரே நிலங்களையும் விலைக்கு வாங்கத் தயாராக இருந்தார்.
பேசிமுடிக்கப்பட்டது. பத்திரம் எழுதவும் பணம் கொடுக்கவும் தேதி குறிக்கப்பட்டது.
வந்தவர் திருப்தியாக எழுந்து சென்றார்.
அவர் சென்றபின் வைதேகி எழுந்தாள்.
மனம் அழுதது.
இரவு உணவு இறங்கவில்லை.
படுக்கையில் புரண்டாள்.
இந்த சொத்துக்களுக்காகத்தானே எல்லா உறவுகளையும் இழந்தாய். இன்று சொத்துக்களை அனாதைகளுக்கு எழுதி வைக்க முன் வந்திருக்கிறாய்.
மனசாட்சி அவளை கேள்வி கேட்க அவளுடைய மனத்திரையில் கடந்த காலம் விரிந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
பொன்னாடை

Read more from ஆர்.சுமதி

Related to பொன்னாடை

Related ebooks

Reviews for பொன்னாடை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பொன்னாடை - ஆர்.சுமதி

    1

    அந்த அனாதை பள்ளியின் முன் வைதேகியின் கார் நின்றது.

    டிரைவர் இறங்கி கதவை திறந்துவிட்டான்.

    வைதேகி அந்த பள்ளியைப் பார்த்தவாறே இறங்கினாள். வைதேகிக்கு நாற்பது வயது. சிவந்த அழகான தேகம். சுருள் சுருளான கூந்தலை படிய சீவி கொண்டைப் போட்டிருந்தாள்.

    கழுத்தில் மெல்லிய சங்கிலி. காதில் சிறிய பவுன் தோடு. கைகளில் ஒற்றை வளையல். சாதாரண சேலையில் இருந்தாள். ஒன்றிரண்டு நரைத்த தலைமுடி குறுக்கும் நெடுக்குமாக கூந்தலில் ஓடியிருந்தது.

    பள்ளியின் பெரிய கம்பிக்கதவு திறந்தேயிருந்தது. பள்ளிக் கூடம் மிகமிக அமைதியானதொரு சூழ்நிலையில் இருந்தது. எங்கும் பசுமையான செடிகள் பூக்களுடன் காட்சியளித்தன.

    உள்ளே நடந்தபோது மருதாணி பூவின் வாசனையும், அரளிப்பூவின் வாசனையும் கலந்து மூக்கைத் தழுவியது. டிரைவர் காருக்கருகிலேயே நிற்க அவள் மட்டும் உள்ளே வந்தாள்...

    எங்கிருந்தோ வாட்ச்மேன் ஓடி வந்தான். அவளுக்கருகே வந்து உங்களுக்கு என்ன வேணும்? என்றான்.

    என் பெயர் வைதேகி. நான் உங்க ஸ்கூல் நிர்வாகி மிஸ்டர் மணிமோகனைப் பார்க்கணும் என்றாள்.

    வாங்க என நடந்தான்.

    அவன் முன்னால் நடக்க வைதேகி பின் தொடர்ந்தாள். கட்டிடத்தை நெருங்கியதும் குழந்தைகள் படிக்கும் ஓசை கேட்டது.

    எல்லாம் தாய் தந்தை யாரென்று தெரியாத, தெரிந்திருந்தாலும் அவர்களால் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள், அன்பிற்கு ஏங்கும் அபலைகள். உறவுகள் இல்லாத பறவைகள்.

    வைதேகியின் இதயம் மெல்ல நெகிழ்ந்தது. நீண்ட வராண்டாவின் வழியே அவன் அவளை அழைத்துச் சென்றான்.

    ஒரு அறையின் முன்னால் வந்து கதவைத் தட்டினான்.

    எஸ்... என்று கணிரென உள்ளிருந்து ஒரு ஆண்குரல் ஒலித்தது.

    அவன் மட்டும் உள்ளே சென்றான்.

    சார்... உங்களைப் பார்க்க வைதேகின்னு ஒரு அம்மா வந்திருக்காங்க என்ற அவனுடைய குரல் வெளியே கேட்டது...

    "உள்ளே வரச்சொல்’ என்று அந்த கணீரென்ற குரல் மறுபடியும் சொன்னது.

    வாட்ச்மேன் வெளியே வந்தான்.

    அம்மா உங்களை ஐயா உள்ளே வரச் சொல்றாரு என்று கூறினான்.

    வழவழப்பான மேசைக்குப் பின்னே மணிமோகன் அமர்ந்திருந்தார்.

    மணிமோகனுக்கு வயது ஐம்பது இருக்கும். ஐம்பது வயதிற்குரிய அம்சங்களுடன் இருந்தார். பரந்த நெற்றி, வழுக்கை இல்லாத தலை. ஆனால் நிறைய நரைத்திருந்தார். பளபளக்கும் ஃப்ரேமிட்ட கண்ணாடி வழியே அறிவு நிரம்பிய விழிகள் தெரிந்தன. கூரிய மூக்கு, மீசையில்லாத முகம் சற்றே இளமைத் தோற்றத்தை தந்திருந்தது.

    வைதேகியைக் கண்டதும் அவருக்குள் ஒரு எதிர்பார்ப்பு உண்டானது. அவளுடைய அமைதியான தோற்றம் ஒரு வித மரியாதையை உண்டு பண்ணியது.

    வாங்கம்மா உட்காருங்க என்றார்.

    வணக்கம் சார் கைகுவித்தாள்.

    வணக்கம்மா அவர் பதிலுக்கு வணக்கம் கூறினார்.

    என் பெயர் வைதேகி. என்னோட சொந்த ஊர் மயிலாடுதுறை.

    சொல்லுங்கம்மா, என்ன பிரச்சனை? குழந்தைங்க யாரையாவது கொண்டு வந்திருக்கீங்களா? இந்த பள்ளிக் கூடத்துல சேர்த்துக்கணுமா? என்றார்.

    அவளுடைய இதழில் மெல்லிய புன்னகை ஓடியது. இல்லை என்றாள்.

    சில நிமிடங்கள் மௌனமாக இருந்தாள்.

    அப்படின்னா... நீங்கள் புள்ளைங்களால நிராகரிக்கப்பட்டிருக்கீங்களா? இங்க சேர நினைக்கிறீங்களா? இது அனாதை குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம். நாங்க இங்க வயசானவங்களை சேர்க்கறதில்லைம்மா. ஆனா... உங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க என்னால உதவி செய்ய முடியும்.

    "இல்லை. நான் இங்கு சேர வரவில்லை. உங்க பள்ளிக்கூட முன்னேற்றத்திற்காக நீங்க பத்திரிகையில் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்தேன். உதவித்தொகை - கேட்டு வெளியாகியிருந்த அந்த விளம்பரத்தை படிச்சேன்.

    உதவித்தொகை என்னால் முடிந்ததை தர வந்திருக்கிறேன்" அவள் சொன்னதைக் கேட்டதும் மணிமோகனின் முகம் மலர்ந்தது. உற்சாகத்துடன் நிமிர்ந்து அமர்ந்தார்.

    அவளுடைய தோற்றம் பணக்காரத்தனமாக இல்லாமல் சாதாரணமாக தோற்றமளித்ததால் அவர் அவளை சாதாரணமாக எடைப் போட்டுவிட்டார்.

    மன்னிக்கணும், நான் உங்களை சரியாகப் புரிஞ்சுக்காம ஏதோ கேட்டுட்டேன். நீங்க எங்க பள்ளிக்கூடத்துக்கு என்ன செய்ய விருப்பப்படறீங்க? என்றார்.

    எனக்கு கணவன், குழந்தைகள்னு யாரும் இல்லை. நான் ஒரு தனிக்கட்டை. எனக்கு எந்த உறவுகளும் கிடையாது.

    அவருடைய முகத்தில் பரிதாபம் தெரிந்தது.

    ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் என்கிட்டே இருக்கு. அதை அப்படியே வித்து அந்த தொகையை இந்த பள்ளிக்கூடத்துக்கு தர விரும்பறேன்.

    வைதேகியின் சொற்கள் மணிமோகனை கிட்டத் தட்ட மயக்க நிலைக்கு கொண்டு சென்றன.

    2

    அந்த பெரிய பங்களாவின் முன்னால் காரை நிறுத்தினான் வைதேகியின் டிரைவர்.

    டிரைவர்...

    சொல்லுங்கம்மா...

    காரை விக்க ஏற்பாடு பண்ணிடு.

    அம்மா, கொஞ்சம் யோசனை பண்ணி செய்ங்கம்மா.

    என்ன யோசனை பண்ணச் சொல்றே?

    அம்மா இது வாரிசு இல்லாத சொத்து இல்லை. வாணியம்மா என்னைக்காவது ஒரு நாளைக்கு உங்களைத் தேடி வருவாங்க.

    அவ வரமாட்டா.

    "அம்மா... அப்படி சொல்லாதீங்க. வாணியம்மா மட்டும் இல்லை ஐயாவும் வருவாங்க. உறவுகள் என்னைக்கும் உடைஞ்சுடாது. அப்ப வந்து சொத்துக்களை ஏன் வித்தீங்கன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவீங்க? அம்மா பாசம்கிறது அத்தனை சீக்கிரத்துல விட்டுப் போகாதும்மா. அந்த சக்தி என்னைக்கும் ஜெயிக்கும். வாணியம்மா வருவாங்க. உங்கக்கூட

    Enjoying the preview?
    Page 1 of 1