Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காதல் மலரும் காத்திரு...
காதல் மலரும் காத்திரு...
காதல் மலரும் காத்திரு...
Ebook135 pages46 minutes

காதல் மலரும் காத்திரு...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனதை மயக்கும் மாலை நேரம்.
அந்த அழகை மேலும் அழகூட்டுவதைப் போல் ஆதிரை அலையடிக்கும் கரையோரம் கால் பதித்து நடந்து கொண்டிருந்தாள்.
அவளுடைய தோளை உரசியபடி நடந்து கொண்டிருந்த ஸ்டீபன் அவள் அழகை ரசித்த வண்ணம் நடந்தாலும்... வழக்கமாகப் பொலிவு பொங்கும் அவள் முகத்தில் ஒருவித அமைதியும் உற்சாகமின்மையும் தங்கியிருப்பதைக் கண்டான்.
சற்றுத் தூரம் நடந்து விட்டு இருவரும் மணற்பரப்பில் அமர்ந்தனர்.
“ஆதிரை... என்னாச்சு உனக்கு?” - அவளுடைய அமைதிக்கும் குழப்பத்திற்கும் விளக்கம் கேட்டான் ஸ்டீபன்.
“ஒண்ணுமில்லை. நல்லாத்தானே இருக்கேன்...” - சிரிக்க முயன்றாள்.
“வழக்கமான - கலகலப்பையே காணோம்? காதலிச்சவன் ஏமாத்திக் கைவிட்ட மாதிரி சோகமா யிருக்கே...” சிரித்தபடியே சீண்டினான்.
“கடைசியில் நிலைமை அப்படித்தான் ஆகிடும் போலிருக்கு...” - தளர்வாகச் சொன்னாள்.
“என் மேலே உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் ஏமாத்திடுவேனோன்னு பயப்படறியா?”
“நீங்க இல்ல... நான்தான்.”
“அடிப்பாவி! என்னை விட ஸ்மார்ட்டா எவனாவது உன்கிட்ட ‘ஐ லவ் யூ’ன்னு சொன்னானா? உடனே நீ பல்டி அடிச்சுட்டியா? ஆண் பாவம் பொல்லாதது. நான் சாபம் விட்டேன்னா... நீ இந்த அழகையெல்லாம் இழந்து அவ்வைக் கிழவி மாதிரி ஆயிடுவே.”
ஆதிரை வாய் விட்டுக் கலகலவெனச் சிரித்தாள்“சொல்லு... யார் அந்த ஆணழகன்?”
“சொன்னா அவனைக் கண்டுபிடிச்சு கண்டந்துண்டமா வெட்டிப் போடப் போறீங்களா?”
“வெட்டிப் போடுறதா? அவன் கால்ல விழுந்து தயவு பண்ணி இந்தப் பிசாசைக் கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு விடுதலை கொடுன்னு கெஞ்சுவேன்...”
“என்னமோ இப்பத்தான் சாபம் தந்து கிழவியாக்கப் போறதாச் சொன்னீங்க?”
“அதுக்குத் தேவையே இல்லை. ஏன்னா நீ இப்பவே பார்க்க கிழவி மாதிரிதான் இருக்கே...”
“உங்களை...” - அவனைச் செல்லமாக மார்பில் குத்தினாள். பின் சொன்னாள்.
“எங்கப்பா எனக்குக் கல்யாணம் பண்றதா முடிவு பண்ணிட்டார்.”
“வெரிகுட்! இப்பத்தான் ஒரு நல்ல தகப்பன்கறதை நிரூபிச்சிருக்கார். நீ என்னைப் பற்றிச் சொல்லிட்டியா? அதனாலதான் கல்யாணம் பண்றதா முடிவு பண்ணியிருக்காரா?”
“உங்களைப் பற்றிச் சொல்றதா? ஐய்யோ...”
“ஏன்? நான் என்ன நாலு கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கா போயிட்டு வந்திருக்கேன். என்னைப் பற்றிச் சொல்லப் பயப்படுறே?”
“எங்கப்பா கொலைகாரனுக்குக் கூட பொண்ணு கொடுப்பார் போலிருக்கு. வேற ஜாதிக்காரனுக்குக் கொடுக்கமாட்டார். அதிலும் நீங்க மதமே வேற.”
“எங்க உங்கப்பா இந்தக் காலத்துல போய் இப்படியிருக்கார்...?”
“எந்தக் காலத்திலேயும் இப்படிப்பட்டவங்க இருக்கத்தான் செய்வாங்க. எங்கப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி ஒரு தரகர்கிட்ட சொல்லியிருந்தார். அவரும் ஒரு ஜாதகத்தைக் கொடுத்திருந்தார். மாப்பிள்ளை அழகு. அதிகச் சம்பளம்.”
“ஏய்... என்ன மட்டம் தட்டறியா?”அட... உண்மையைச் சொன்னேன். அந்தப் பையன் வேற ஜாதி. தரகர் ஏதோ அவசரத்துல ஜாதகத்தைக் கொடுத்துட்டார். அப்புறம்தான் விஷயத்தைச் சொல்லியிருக்கார். ஆனா அப்பா உடனே அந்த ஜாதகத்தைத் திருப்பி அனுப்பிட்டார்... அதான் பயமாயிருக்கு...” என நடந்ததைச் சொல்லி முடித்தாள்.
“அதான் என்னை ஏமாத்தப் போறதாச் சொன்னியா? அப்படின்னா உங்க அப்பா பார்க்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னை அலைய விடப் போறியா?”
“ச்சே! சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நீயின்றி நானில்லை. உன் நினைவே ஒரு சங்கீதம். நெஞ்சம் மறப்பதில்லை. உன் நினைவை இழப்பதில்லை.”
“சகிக்கலை. வசனம் பேசறதை நிறுத்து. வாழ்க்கையைப் பற்றிப் பேசு.”
“உங்கப்பா நம்ம காதலை ஏத்துக்கலைன்னா என்ன பண்றது?”
“விடு... ஜூட்தான்.”
“நீ ரொம்பத் துணிச்சலா இருக்கே...”
“வேற வழி இல்லை. இல்லாட்டி நம்மைக் கோழையாக்கிடுவாங்க. ஒண்ணு நம்மைச் சாகடிச்சுடுவாங்க. இல்லாட்டி அவங்க செத்துப் போறதாச் சொல்லி மிரட்டி நம்மைப் பணிய வைச்சுடுவாங்க. நம்ம காதலைச் சொல்லி நாமே நமக்குக் குழி தோண்டிக்க வேண்டாம்...
நம்ம ஃப்ரெண்ட்ஸுங்களை வச்சு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்போம். மாலையும் கழுத்துமா போய் அவங்க கால்ல விழுந்தா ஒண்ணும் பண்ண முடியாது.”
“அப்ப மட்டும் ஒத்துப்பாங்கன்னு என்ன நிச்சயம்?”
“அப்போதைக்கு ஏத்துக்கலைன்னாலும் காலப் போக்குல மனசு மாறி ஒத்துப்பாங்க. அதிலும் நான் ஒரே பொண்ணு. பாசம் விடாது. தேடிக்கிட்டு வந்துடுவாங்க.”
“ரொம்பத் தெளிவாத்தான் இருக்கே. ஆனா... என்னால அப்படி இருக்க முடியாது.
ரிஜிஸ்டர் மேரேஜல்லாம் பண்ணிக்க முடியாது.”

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
காதல் மலரும் காத்திரு...

Read more from ஆர்.சுமதி

Related to காதல் மலரும் காத்திரு...

Related ebooks

Reviews for காதல் மலரும் காத்திரு...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காதல் மலரும் காத்திரு... - ஆர்.சுமதி

    1

    பொழுது புலர்ந்தது.

    அழுத குழந்தை சிரித்ததைப் போல் இருந்தது. இந்த உவமை சரிதான் என்பதைப் போல் தலையாட்டின இரவு மழையில் குளித்து விட்டு இன்னும் சூரியத்தாய் வந்து துவட்டி விடாததால் ஈரத்தோடு சிரித்தது தோட்டத்துச் செடிகளும் மலர்களும்.

    கீழ்வான சிவப்பு காரைக்காலம்மையாரின் இலக்கிய வரிகளை, நினைக்க வைத்தது.

    ‘காலையே போன்றிலங்கும் மேனி’ என சிவனின் திருமேனியைப் பாடுவாரே...

    தினமும் அதிகாலையில் எழுந்திருக்கும் ஆதிரைக்குக் கீழ்திசையைப் பார்க்கும்போது இப்படியெல்லாம் இலக்கிய வரிகள் நினைவிற்கு வரும். இயற்கையை இயற்கையாகப் பார்ப்பதை விட இலக்கியத்திலிருந்து பார்க்கும் போது இன்பம் அதிகம்தானே!

    ஆனால் இன்றோ... வழக்கத்திற்கு மாறாக இன்னும் சற்று உறங்கலாம் போன்றிருந்தது.

    காரணம் ஞாயிற்றுக்கிழமை!

    ஆதிரையின் விடுமுறைதானே என்ற சோம்பல்... அவளுடைய ஆம்பல் விழிகளைத் திறக்க விடாமல் செய்தது.

    அம்மா மகேஸ்வரி வந்து எழுப்பிய போது, ஏதேதோ சொல்லித் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

    அம்மா திட்டிக் கொண்டே கூடத்திற்கு வந்தாள்.

    தயாளன் நடைப்பயிற்சி முடிந்து வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.

    என்ன... காலை நேரமும் அதுவுமா யாரைத் திட்டறே?

    இந்த வீட்டுல யாரைத் திட்ட முடியும்? உங்க பொண்ணை விட்டா! இல்லை... உங்களைத் திட்ட முடியுமா?

    திட்டினாலும் திட்டுவியே! நான் இருக்கும் போது திட்ட முடியாததையெல்லாம் நான் வெளியில போன சமயமாப் பார்த்து திட்டறியோன்னு நினைச்சேன். அது சரி... அவளை எதுக்குத் திட்டறே?

    தினமும்தான் வேலைக்குப் போறேன் பேர்வழின்னு ஒரு வேலையும் தொடாமப் போயிடறா. இன்னைக்கு ஒரு நாள் வீட்டுல இருக்காளே... அம்மாதான் தினமும் கஷ்டப்படுறாளேன்னு சீக்கிரமா எழுந்து வேலை செய்தா என்ன? இழுத்துப் போர்த்திக்கிட்டுத் தூங்கறா...

    தூங்கிட்டுப் போறா. இன்னைக்கு ஒரு நாள்தானே லீவு. நிதானமா எழுந்துக்கட்டுமே...

    போதும். மெதுவாப் பேசுங்க. காதுல விழுந்தா இன்னும் ரெண்டு மணி நேரம் கூடுதலாத் தூங்குவா...

    அம்மா அதட்டினாலும் இவையாவும் ஆதிரையின் காதில் விழவே செய்தது. தூக்கத்தினூடே சிரித்துக் கொண்டாள்.

    "சரி... சரி... சூடா காபி கொண்டா. ரொம்பக் களைப்பாயிருக்கு. மனுஷன் வாக்கிங் போயிட்டுக் களைச்சுப் போய் வந்திருக்கானே... அவனுக்கு ஒரு காபி டீன்னு கொடுப்போம்னு இல்லாம எப்பப்பாரு அவ மேல ஏதாவது குறை சொல்லிக்கிட்டு...

    இங்க இருக்கிற வரைக்கும் தானே இப்படியெல்லாம் இருக்க முடியும். நாளைக்கே கல்யாணமாகிப் போயிட்டா... போற இடத்துல இப்படியெல்லாம் இருக்க முடியுமா?"

    கல்யாணம்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. நேத்துத் தரகர் ஒரு ஜாதகம் கொடுத்து விட்டிருந்தாரே... நம்ம ஜோசியரை வரச் சொல்லுங்களேன். ஆதிரை ஜாதகத்துக்குப் பொருந்துதான்னு பார்த்துடுவோம்.

    அது ஒரு பெரிய கதை.

    ஏன்? ரொம்ப வசதியான இடமா? ரொம்ப அதிகமாக் கேட்பாங்களா?

    அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ போய் முதல்ல காபி கொண்டா. சொல்றேன்.

    மகேஸ்வரி அதற்கு மேல் எதுவும் கேட்காமல் உள்ளே சென்றாள்.

    ஆதிரைக்கு இப்பொழுது தூக்கம் சுத்தமாகக் கலைந்து விட்டது. விழிகள் மூடியிருந்தாலும் காதுகள் விழித்துக் கொண்டன.

    மகேஸ்வரி காபியுடன் வந்தாள். தயாளனிடம் கொடுத்து விட்டு அவருக்கு எதிரே அமர்ந்தாள்.

    சொல்லுங்க... என்றாள்.

    ஒரு வாய் காபியை உறிஞ்சிய தயாளன் சிரித்தார்.

    "அந்தத் தரகர் அவசரத்துல கொடுத்திருக்கார் அந்த ஜாதகத்தை. அந்த ஜாதகத்துக்குச் சொந்தக்காரன் நம்ம ஜாதி கிடையாது. சரியாப் பார்க்காம கொடுத்துட்டார். காலையில் போன் பண்ணிச் சொன்னார். பையன் வீட்டுல ஜாதி ஒரு பிரச்சினை இல்லையாம். உங்களுக்கும் ஆட்சேபனை இல்லைன்னா முடிச்சுடலாம்னு சொன்னார்.

    ஆனா... நான் இதெல்லாம் நமக்குச் சரிப்படாதுன்னு... அந்த ஜாதகத்தைத் திருப்பிக் கொடுத்துட்டேன். நம்ம ஜாதியிலேயே ஜாதகம் இருந்தா கொடுங்கன்னு சொல்லிட்டேன்.

    என்னங்க நீங்க? இந்தக் காலத்துல போய் இப்படி இருக்கீங்க. அந்த ஜாதகத்தைப் பற்றி நீங்க சொன்னப்ப எவ்வளவு சந்தோஷமாயிருந்தேன். பையனுக்குப் பெரிய கம்பெனியில கை நிறையச் சம்பளம். ஜாதகத்தோடு கொடுத்திருந்த அந்தப் பையனோட போட்டோவைக் கூடப் பார்த்தேன். பையன் ரொம்ப அழகாயிருக்கான். என்ன பெரிய ஜாதி. நல்ல இடமாயிருந்தா முடிச்சிட வேண்டியதுதான்...

    மகேஸ்வரி ஆதங்கமாகச் சொல்ல...

    தயாளனின் முகம் மாறியது.

    சட்டென்று இருக்கையை விட்டு எழுந்தார்.

    என்ன... ஜாதி மாறிக் கல்யாணம் பண்றதா? உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு? போய் வாயைக் கழுவு.

    நல்ல இடமா இருக்கேன்னு...

    மகேஸ்வரியின் குரல் பிசிறடித்தது. கணவருடைய கோபாவேசமான முகத்தைப் பார்த்ததுமே அவளுடைய புரட்சிகரமான பேச்சு புறமுதுகிட்டு ஓடி விட்டது.

    தயாளனின் கோபம் மட்டும் தணியவில்லை. யாரோ மானபங்கம் செய்ததைப் போல் குதித்தார்.

    நல்ல இடமாயிருந்தா... நம்ம ஜாதியை விட்டுக் கொடுத்திட முடியுமா? நல்ல இடமாம் நல்ல இடம். கலெக்டராவே இருக்கட்டுமே... அதுக்காக ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணிட முடியுமா?

    அரிவாள் மட்டும்தான் அவர் தூக்கவில்லை. மற்றபடி அவர் பேசியது... முகத்தில் காட்டிய கோபம் அனைத்தும் ஒரு ஜாதிக் கலவரத்தையே உண்டாக்கிவிடும்.

    சரி... சரி... காபியை முதல்ல குடிங்க. சும்மா ஒரு பேச்சுக்கு இப்படிச் சொன்னதுக்கே இவ்வளவு கோபப்படுறிங்க. பி.பி., ஷுகர் இருக்கு. இவ்வளவு டென்ஷன் எதுக்கு? அமைதியா இருங்க... என்றபடி தன் வேலைகளைக் கவனிக்க உள்ளே போய் விட்டாள் மகேஸ்வரி.

    இப்பொழுது ஆதிரைக்குச் சுத்தமாகத் தூக்கம் போய் விட்டது. எழுந்து உட்கார்ந்திருந்தாள்.

    சற்று முன் உதட்டில் இழையோடிய சிரிப்பெல்லாம் பிழை செய்து விட்ட குழந்தையைப் போல் ஓடிப் போய் விட்டிருந்தது. உள்ளமோ கழைக்கூத்தாடி கயிற்றில் நிற்கும் நிலையில்!

    தூக்கம் விலகிய கண்களில் ஒருவித ஏக்கம் படரத் தொடங்கியிருந்தது. எழுந்து ஜன்னலோரம் வந்து நின்றாள்.

    காற்றில் தலையசைத்த பூக்கள் காத்திருந்து காலை வணக்கம் சொல்வதைப் போலிருந்தது.

    அவள்தான் கண்டு கொள்ளவில்லை.

    சிட்டுக்குருவிகள் மெட்டமைத்துப் பாடிக்கொண்டிருந்தன. குயில்கள் குலவையிட்டுக் கொண்டிருந்தன. சோர்ந்திருந்த ஆதிரையின் மனம் கூடச் சற்றே தெளிந்தது.

    எத்தனை ஒற்றுமை? எந்தப் பறவையும் ஜாதி பார்க்கவில்லை. மதப் பிரசங்கம் பண்ணவில்லை. அந்நியம் பார்க்கவில்லை. அடித்து விரட்டவில்லை.

    இங்கு காதல் எளிது. கல்யாணம் எளிது. அரிவாள் தூக்கும் குருவி இல்லை. அசிங்கமாகப் பேசும் கொக்கு இல்லை. மனதைக் கொத்திக் கூறு போடும் மரங்கொத்தி இல்லை.

    பறவைகள் உலகத்தில் மட்டுமே காதல் இனிமை

    இந்த உலகத்தில் நானும் ஸ்டீபனும் பிறந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

    இந்தக் கொய்யா மரத்தில் கூடு கட்டிப் பொய்யா வாழ்வு வாழ்ந்திருக்கலாம். ஜாதியையே பெரிதாகப் பேசும் தந்தை கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஸ்டீபனை ஏற்றுக் கொள்வாரா?

    நிச்சயம் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

    நினைக்கையிலேயே நெஞ்சம் கலங்கியது.

    நெஞ்சில் உண்டான கலக்கத்தை மீறி ஸ்டீபன் சிரித்தான்.

    2

    மனதை மயக்கும் மாலை நேரம்.

    அந்த அழகை மேலும் அழகூட்டுவதைப் போல் ஆதிரை அலையடிக்கும் கரையோரம் கால் பதித்து நடந்து கொண்டிருந்தாள்.

    அவளுடைய தோளை உரசியபடி

    Enjoying the preview?
    Page 1 of 1