Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அன்பிற்குப் பஞ்சமில்லை
அன்பிற்குப் பஞ்சமில்லை
அன்பிற்குப் பஞ்சமில்லை
Ebook133 pages46 minutes

அன்பிற்குப் பஞ்சமில்லை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த பெரிய துணிக்கடை எதிரில் நின்றுகொண்டு ஆதிரையும், குகனும் வாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் புற்றீசலாய் பறந்து கொண்டிருந்தது. அதை மீறி ஆதிரை பேசினாள்.
“இதோப் பாருண்ணே அடம்பிடிக்காமல் உனக்கும் ஒரு பேண்ட் சட்டை வாங்கிக்க. எனக்கு பட்டுச்சேலை வேண்டாம். நீ துணி எடுத்துக்காட்டி நான் அப்படியே திரும்பி போய்விடுவேன்” என்று மிரட்டினாள்.
“நான் சொல்றதை நீ கேளு. எனக்கு ஒண்ணும் வேண்டாம்” என்றான் குகன்.
அதேநேரம் பின்னால் ஒரு குரல் அவர்களின் உரையாடலுக்கு இடையில் புகுந்தது.
“அலோ... குகன்...”
குரல் அதிரடி தாக்குதலாய் கேட்க சண்டைக்கிடையில் சட்டென அமைதியாகி திரும்பினான் குகன். மறுகணம் பற்பசை விளம்பரமாய் சிரித்தான்.
அவனுடைய அலுவலக மேனேஜர் சந்திரன் நின்றிருந்தான்.
“அலோ சார் நீங்களா? எங்கே இந்த பக்கம்?” என்றான்.
“சும்மாதான்... தீபாவளிக்கு துணி எடுக்கலாம்ன்னு வந்தேன்.”
ஆதிரை அவனைப் பார்த்தான். நல்ல உயரம். உயரத்திற்கேற்ற சதை பிடிப்பு. ஒழுங்காய் வாரிய தலை. கண்களில் சுடர்விடும் படிப்பறிவு. முகத்துக்கேற்ற மீசை. லேசாக தொப்பை தெரிவதைப் போன்ற தோற்றம். கருப்பு கலர் பேண்ட். வெள்ளை நிற சட்டை. அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தான்.
ஆதிரையை பார்த்ததும் “இவங்க...” என்று இழுத்தான்.
“என்னுடைய ஒரே தங்கை ஆதிரை” குகன் அறிமுகப்படுத்தி வைக்க,“அலோ...” என புன்னகை புரிந்தான். கூடவே அவளை அளந்தான்.
‘எப்படியும் என் தோள் உயரம் இருப்பாள். என்னைவிட நிறம். இறுக்கிப் பின்னாமல் தளர்ந்த சடை. வட்ட முகத்தில் ஒட்டும் பொட்டு பளிச்சென இருந்தது. முத்தமிடும் உணர்வை தூண்டுகிற இதழ்கள். என்னவோ மந்திரவித்தை கற்ற விழிகள். இழுத்துக் கொண்டதே என் பார்வையை. திணறடிக்கும் இளமைகள். வளைந்த வாகான இடை. தரைவரை புரளும் சேலை. அழகு மான் ஒன்று சாலையில் நிற்பதைப் போல் நிற்கும் இவள் குகனின் தங்கையா? இப்படி ஒரு தங்கை இருக்கிறாளா இவனுக்கு?”
இப்படியெல்லாம் எண்ணினான் சந்திரன். ஆதிரை அடக்கமாகப் புன்னகைத்தாள். அவளின் அடக்கமான புன்னகைக்குள் அடங்கிப் போனான் சந்திரன். அவள் சிரித்தது நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. ஒருவித மென்மையான துடிப்புகள். அவசரமாக, ஏதாவது பேசியாக வேண்டுமே என
“உங்களுக்கு ஒரு தங்கை இருக்கிறதா சொல்லவே இல்லையே...” என்றான்.
“ஆமா. சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கலை. ஆதிரை இவர் எங்கள் மேனேஜர் சந்திரன்” என்று அவனை அறிமுகப்படுத்தினான்.
அவன் மேனேஜர் எனத் தெரிந்ததும் ஒரு மதிப்பு வந்தது அவன் மேல்.
“என்ன படிக்கறீங்க?” என்று அண்ணனை விடுத்து நேரடி உரையாடலில் இறங்கினான் சந்திரன்.
“படிச்சு முடிச்சிட்டேன். பி.ஏ. இப்ப ஒரு பள்ளியில வேலை பார்க்கிறேன்.”
“ஓ...” என்றவன் மேற்கொண்டு என்ன பேசுவதென அண்ணன் பக்கம் திரும்பி “என்ன தீபாவளிக்கு துணி எடுக்க வந்தீங்களா?” என்றான்.
“ஆமாம். அதான் துணிக்கடை வாசலில் நின்னுகிட்டு ரெண்டு பேரும் விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கோம்” என்று குகன் சொல்ல ஆதிரை பானுப்பிரியா கண்களில் கோபம் காட்டினாள்.
“விவாதமா... சண்டை! நீங்களே இதைக் கேளுங்க மிஸ்டர்...” என்று அவன் பெயர் தெரியாமல் நிறுத்தினாள்.
“என் பெயர் சந்திரன்” என்றான் சந்திரன்“மிஸ்டர் சந்திரன்” என்று தொடங்கியவள் - “இங்க பாருங்க, எங்க அண்ணனோட சம்பளம் மூவாயிரம்.”
“தெரியும்.”
“என் சம்பளம் அறுநாறு”
“அடப் பாவமே...”
“இதுல மாசா மாசம் சேர்த்த பணம் கொஞ்சம். மொத்தமா இப்ப கைவசம் ஐய்யாயிரம். இதுல தீபாவளி டிரஸ் எடுக்கணும். சுவீட், பட்டாசு... இப்படி நிறைய. இந்த அண்ணன் என்னன்னா எல்லாப் பணத்துக்கும் எனக்குப் பட்டுச்சேலை எடுத்தாலே எடுத்தபடின்னு ஒத்தக்கால்ல நிக்கிது. எங்க அண்ணனுக்கு டிரஸ் வேண்டாமாம்.
தீபாவளின்னா சந்தோஷமா கொண்டாடணும். நான் மட்டும் பட்டுல நிக்கணும். இவர் பழைய டிரஸ்ல நிக்கறதை பார்த்துகிட்டு நான் எப்படி சந்தோஷமா இருக்கமுடியும். பட்டு வேண்டாம். வேற சேலை எடு. உனக்கும் பேண்ட், சட்டை எடுத்துக்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறார். நீங்கள் சொல்லுங்க சார்...”
அவளின் கண்ணில் அதற்குள் கண்ணீர் தளும்பியது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 14, 2024
அன்பிற்குப் பஞ்சமில்லை

Read more from ஆர்.சுமதி

Related to அன்பிற்குப் பஞ்சமில்லை

Related ebooks

Reviews for அன்பிற்குப் பஞ்சமில்லை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அன்பிற்குப் பஞ்சமில்லை - ஆர்.சுமதி

    1

    "ஏய்... ஆதிரை, கொஞ்சம் இங்கே வாயேன்" என்ற குரலுக்கு சமையலறை வாசலில் முகம் நீட்டி,

    இருண்ணா, குழம்பை தாளிச்சு கொட்டிட்டு வர்றேன் என்ற ஆதிரைக்கு வயது இருபத்தி ஒன்றோ இரண்டோ இருக்கலாம். அழகான பானுப்ரியா கண்களை அப்படியே கண்களில் காப்பியடித்திருந்தாள். தற்சமயம் அந்த பெரிய விழிகள் புகையால் ஓரம் சிவந்திருந்தன.

    சில நிமிடங்களை குழம்பு தாளிப்பிற்கு செலவழித்து விட்டு அடுப்பை நிதானமாக எரியவிட்டு வெளியில் வந்தவள் முந்தானையால் காற்றை வரவழைத்தபடி அண்ணன் அருகில் வந்தாள்.

    அண்ணன் குகன் காலைத் தூக்கி எதிரே இருந்த பலகை மேல் போட்டபடி நாற்காலியில் சாய்ந்து கொண்டு சலவை குறையாத புது பணக்கற்றையை எண்ணிக் கொண்டிருந்தான்.

    அண்ணா... மெதுவா எண்ணு... நோட்டு கிழிஞ்சுட போவுது என்றவாறே அவன் கால் நீட்டியிருந்த பலகையில் அமர்ந்தாள்.

    நிமிர்ந்து ஆதிரையைப் பார்த்தவன் மீண்டும் எண்ணுவதில் குறியாய் இருந்தபடியே, ஆதிரை, உன் சம்பளக் கவரை கொண்டா என்றான்.

    ஆதிரை எழுந்து போய் சுவரில் ஆணியில் அனாதையாய் தொங்கிய தோள்பையை எடுத்து அதன் ஜிப்பை எதிர்ப்புறம் செலுத்தி கவரை கொண்டுவந்து கொடுத்தாள்.

    அதை வாங்கி பணத்தை வெளியே எடுத்து எண்ணத் தொடங்கிய அண்ணனை பார்த்தாள்.

    நானே பத்து தடவை எண்ணித்தான் வாங்கி வந்தேன். சரியா அறுநூறு ரூபாய்க்கு பத்து காசு அதிகமில்லை. நீ வேற இதில் என்ன எண்ணுறே? என்ற தங்கையை ஏறிட்டுப் பார்க்காமல் எண்ணி ஒரே உறையில் போட்டு அவளுடைய பையிலேயே வைத்து நிமிர்ந்தான்.

    அவன் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.

    நாளைக்கு, தீபாவளிக்கு துணி எடுக்கப் போறோம் என்றான்.

    அய்... ஆதிரை துள்ளினாள் சிறு குழந்தையாய்.

    குகனும் அவளின் குதூகலத்தில் கலந்து கொண்டான்.

    உனக்கு என்ன கலர்ல சேலை வேணும்?

    அண்ணா, என்கிட்ட மஞ்சள் கலர்லதான் சேலையே இல்லை. அதனால இந்த வருஷ தீபாவளிக்கு மஞ்சள் கலர்தான்.

    டேய்... மஞ்சள் கலர்ல பட்டுச்சேலை அவ்வளவு எடுப்பா இருக்குமா? வேற கலர் பார்ப்போம். அரக்கு கலர் பார்டர் போட்ட சந்தனக் கலர் புடவை. இல்லாட்டி மயில் கழுத்து கலர்... இல்லாட்டி... அவனுடைய இழுப்புக்கு இடைவெட்டினாள் ஆதிரை.

    பட்டுச்சேலைன்னா என்ன சும்மாவா? அதுக்கெல்லாம் துட்டு இருக்கா? என்று விரலை சுண்டினாள்.

    ஏன் இல்லை? இப்ப மொத்தமா ஐயாயிரம் இருக்கு. அதில் அப்படியே நிறைய சரிகைப் போட்ட மயில் கழுத்துக் கலர் சேலை எடுத்து தன் தங்கச்சிக்கு கட்டுனா... அடா... அடா...

    அவன் கண்களை மூடி கண்ணுக்குள் பட்டுச்சேலையில் தங்கையைப் பார்த்தான்.

    அவன் முகத்துக்கு நேரே கையை தட்டி அவனை கண்திறக்க வைத்தாள் ஆதிரை.

    ஐயாயிரத்துக்கும் அப்படியே எனக்கு சேலை எடுத்திட்டா உனக்கு டிரஸ் எந்தக் கடையில் திருடறது?

    எந்தக் கடைக்குப் போறோமோ அந்தக் கடையிலேயே திருடுறது. டேய்... ஆதிரை எனக்கென்னடா? தீபாவளி அன்னிக்கு நீ தேவதை மாதிரி இருக்கணும்!

    அண்ணா ஒருகணம் பாசம் பொங்க உருகினாள் ஆதிரை, பின் -

    இதோப் பாரு எனக்கு பட்டுச்சேலை வேணாம். வேற நல்ல சேலையா பார்த்து எடுத்துக்கிட்டு வருவோம்.

    என்னை விடுறா, எனக்கென்ன? கிடக்குற சட்டைப் பேண்ட்டை இன்னும் ஏழு குகன் வந்தா கூட போட்டுக்கலாம்.

    ஆமா, அதான் பார்க்கிறேனே, கிழிஞ்ச சட்டையை நீ திருட்டுத்தனமா தைக்கிறதை. எனக்குத் தெரியக்கூடாதுன்னு நீ தைச்சாலும் துவைக்கிறப்ப உலகமே தெரியிற பனியனை பார்க்காமலா இருக்கேன்.

    அது கிடக்கட்டும் ஆதிரை. உனக்கு அவசியம் பட்டுச்சேலை வேணும். ஏன்னா திடீர்ன்னு யாராவது உன்னைப் பெண் பார்க்க வந்தா நீ எதைக் கட்டிக்கிட்டு நிற்பே. அதனால உனக்கு தீபாவளிக்கு பட்டுதான்.

    குகன் தீர்மானமாக சொல்ல கோபத்துடன் எழுந்தாள் ஆதிரை.

    உனக்கு டிரஸ் தைக்காமல் எனக்கு எதுவும் தேவை இல்லை. எடுத்தா ரெண்டு பேருக்கும் எடு. இல்லாட்டி விடு. தீபாவளியே வேண்டாம்.

    சரி. முதல்ல உனக்கு பட்டுச்சேலை எடுப்போம். அப்புறம் பணம் வந்தா எனக்கு எடுத்துக்கலாம்.

    பணம் எங்க குதிருக்குள்ளிருந்தா அப்புறம் வரும்? உனக்கு குடும்ப நிலவரமே புரியமாட்டேங்குது. என்னை அம்பாளாட்டம் அலங்கரிச்சுப் பார்த்துட்டா எல்லாம் சரியாயிடுமா? அரிசியில்லை. பருப்பு இல்லை. எண்ணெய் இல்லை. ஒரு எழவும் இல்லை வீட்ல. ஐயாயிரத்துக்கு பட்டுச்சேலை எடுத்து ஒரு நாள் கட்டி அழகுப் பார்த்துவிட்டு தூக்கி பீரோவில் போட்டுட்டு துண்டை நனைச்சு வயித்துல வைச்சுக்கிட்டு கிட என்று வெடுக்கென சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

    சாம்பாரை இறக்கி வைத்துவிட்டு நிமிர்ந்தபோது அவளின் நெஞ்சம் பாசத்தால் விம்மியது.

    தனக்கு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் தங்கைக்கு பட்டு எடுக்க நினைக்கும் அந்த அண்ணனின் உள்ளத்தை எண்ணிய போது இதயம் உருகியது.

    கண்ணில் துளிர்த்த நீரை முந்தானையால் துடைத்தபடி வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றினாள்.

    அவளுக்கும் ஆசைதான் பட்டுச்சேலை கட்டிக்கொள்ள. ஆனால் அவனுக்கு எடுக்காமல் தான் மட்டும் பட்டு கட்டுவது மகிழ்ச்சியைத் தருமா? அவளும் அவன் மேல் உயிரினும் மேலான பாசத்தையல்லவா வைத்திருக்கிறாள்?

    இரவு அண்ணனுக்கு பரிமாறும்போது அவள் மென்மையாகப் பேசத் தொடங்கினாள்.

    அண்ணா...

    சொல்லு...

    தீபாவளிக்கு வெறும் துணி மட்டும் எடுத்துட்டா சரியா போச்சா? பலகாரம் பண்ணணும்.

    பலகாரம் நீ பண்ணப் போறியா?

    பின்னே, நான் பண்ணாமல் வேற யார் பண்ணுவா?

    நீ ஒண்ணும் அதெல்லாம் பண்ண வேண்டாம். எண்ணெய் மேல தெறிச்சா என்ன ஆகறது? அதெல்லாம் கடையில் வாங்கிக்கலாம்.

    சரி, அதுக்கு பணம் வேணும். உனக்கும் எனக்கும் துணி எடுக்க பட்டாசு வாங்க.

    இதுக்கெல்லாம் என்ன இலட்ச ரூபாயா ஆகிடும்.

    அண்ணா, இதோ பார். சிம்பிளா ரெண்டு பேரும் டிரஸ் எடுத்துக்கிட்டு மீதப் பணத்தை உபயோகமா செலவு பண்ணுவோம். நீ பாவம். இராத்திரியெல்லாம் வியர்வையில் என்ன கஷ்டப்படறே? அதனால ஒரு பேன் வாங்கிடுவோம்.

    இதைக் கேட்டு அவன் சிரித்தான்.

    கிடப்பதெல்லாம் கிடக்கட்டும். கிழவனை தூக்கி மனையில் வைங்கிறமாதிரி இருக்கு உன் பேச்சு. பைத்தியம். என்ன செய்யணுமின்னு எனக்குத் தெரியும்.

    ஆதிரைக்கு சுருக்கென வந்தது.

    நீ எதுவேணா பண்ணு. ஆனா ரெண்டு பேருக்கும் துணி எடுத்தாத்தான் தீபாவளி. தெரிஞ்சுக்க என்று வெடுக்கென கூறிவிட்டு சாம்பாரை எடுத்து சுடச்சுட வேண்டுமென்றே அவன் கையில் ஊற்றினாள்.

    ஆ... என அலறினான் குகன்.

    2

    அந்த பெரிய துணிக்கடை எதிரில் நின்றுகொண்டு ஆதிரையும், குகனும் வாய்ச்சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் புற்றீசலாய் பறந்து கொண்டிருந்தது. அதை மீறி ஆதிரை பேசினாள்.

    இதோப் பாருண்ணே அடம்பிடிக்காமல் உனக்கும் ஒரு பேண்ட் சட்டை வாங்கிக்க. எனக்கு பட்டுச்சேலை வேண்டாம். நீ துணி எடுத்துக்காட்டி நான் அப்படியே திரும்பி போய்விடுவேன்

    Enjoying the preview?
    Page 1 of 1