Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasai Aasai Aasai
Aasai Aasai Aasai
Aasai Aasai Aasai
Ebook132 pages46 minutes

Aasai Aasai Aasai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466688
Aasai Aasai Aasai

Read more from Devibala

Related to Aasai Aasai Aasai

Related ebooks

Related categories

Reviews for Aasai Aasai Aasai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aasai Aasai Aasai - Devibala

    1

    "இந்தப் பொண்ணை உனக்குப் பிடிச்சிருக்கா மதன்?"

    புகைப்படத்தை வாங்கிப் பார்த்தான் அவன்.

    தெரியலை அண்ணி!

    இது என்ன பதில் ஈரெட்டா? உண்டு அல்லது இல்லைன்னு ஏதாவது ஒரு பதில்தான் வரணும்.

    ம்! இன்னும் பத்து வருஷம் போகட்டும்.

    இப்பவே உனக்கு வயசு இருபத்தெட்டு. உனக்கொரு குடும்பம், குழந்தைங்க... இதெல்லாம் வேணாமா?

    சித்தப்பா- அரீஷ் ஓடி வந்தான்.

    என்னடா கண்ணு?

    எனக்கு ‘ஸ்பைடர் மேன் துணி வேணும். ரஜினி அங்கிள் மாதிரி ஒரு ‘ஜர்கின்’ போடணும்.

    அலுவலகம் முடிஞ்சு வரும்போது வாங்கிட்டு வர்றேன். நீ போய் விளையாடு. அண்ணி... இந்தக் குடும்பம் போதாதா எனக்கு?

    ரேவதி... என்னோட ஒரு சாக்ஸை காணலை. இந்த வீட்ல வெச்ச எடத்துல எதுவுமே இருக்காது- சீனிவாசன் எரிச்சலுடன், வெளிப்பட...

    ரேவதி சிரித்துவிட்டாள்.

    என்ன சிரிப்பு. இப்ப

    அண்ணா... உன் தோள் மேல ஒரு சாக்ஸ் கிடக்குது பாரு

    மதனும் சிரித்தான்.

    உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கு.

    என்னங்க! இப்படி வாங்க கொஞ்சம்.

    என்ன?

    மதனுக்குப் பெண் பார்க்கப் போறோம்.

    அதுக்கு நான் ஏன்?

    ரொம்ப நல்லா இருக்கு. நீங்க வராம...? அவனுக்குப் பெத்தவங்க இல்லை. அந்த ஸ்தானத்துல இருக்கறது இப்ப நீங்களும், நானும்தான். மதனுக்கு காலா காலத்துல ஒரு நல்ல வாழ்க்கையைத் தர்றது நம்ம பொறுப்பு இல்லையா...?

    எனக்கு நாளைக்கு ஆபீஸ்ல ‘ஆடிட்’. அசைய முடியாது. நீயும், மதனும் போய் பார்த்துட்டு வாங்க.

    என்னங்க நீங்க?

    உஷ்... நேரமாச்சு. ‘டிபன் பாக்ஸ்’ எங்கே?

    அடுத்த சில நிமிடங்களில் தெருமுனையில் ஓட்டமாகப் போய்க்கொண்டிருந்தார் சீனிவாசன்.

    மதன், நீ லீவு போட்டுடு.

    அண்ணி.

    நீயும், நானும் நாளைக்கு போறோம். உனக்கு இந்தப் பொண்ணைப் புடிச்சிருக்கா... இல்லையா?

    எனக்குன்னு எந்த விருப்பமும் தனியா இல்லை அண்ணி! உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் எனக்கும் பிடிக்கும். பெத்த தாயைவிட உசத்தியா பாசம் காட்டறவங்க நீங்க...! என்மேல உங்களைவிட யாருக்கு அண்ணி அக்கறை இருக்கும்?

    நெகிழ்ந்து போனாள் ரேவதி.

    சரி... சரி! சாப்பிட வா. உனக்குப் பிடிச்ச பாகற்காய் பொறியல் பண்ணி இருக்கேன்.

    அவளை அறியாமல் கசிந்த கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

    அவள் இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்து சரியாக ஏழு ஆண்டுகள். அவளுக்கும், மதனுக்கும் ஆறு வயதுதான் வித்தியாசம். அவள் நுழைந்த மறுமாதமே மதனுக்கு வேலை கிடைத்ததால், அவளை அதிர்ஷ்ட தேவதையாக நம்பத் தொடங்கிவிட்டான்.

    அம்மா...!

    என்ன மதன்?

    அண்ணி நம்ம வீட்டுக்கு வந்து எத்தனை மாசமாச்சு?

    ஆறு மாசம்.

    எனக்கு அண்ணியை சுத்தமா பிடிக்கலை.

    அம்மா திடுக்கிட்டாள்.

    ஏன்டா? ரேவதி எல்லார்கிட்டேயும் நல்லாத்தானே நடந்துக்கறா... உனக்கு என்னாச்சு?

    ரேவதி கலக்கத்துடன் அடுக்களைக்குள் நின்றாள்.

    என்னை அந்நியனா நினைக்கிறாங்க அண்ணி.

    அப்படி யார் சொன்னது?

    அவங்களைவிட ஆறு வயது சின்னவன் நான். என்னை எதுக்கு வாங்க, போங்கன்னு தள்ளி நிறுத்தணும்?

    நீ அவ மச்சினன்டா. ஒரு மரியாதை வேணாமா?

    நான் அண்ணியை அம்மாவா நினைக்கும்போது, அவங்க மட்டும் என்னைப் பிள்ளையா நினைக்க வேண்டாமா?

    ரேவதி அழுதுவிட்டாள்.

    உள்ளே அம்மாவும் ஒரு மாதிரி நிலைகுலைந்துவிட்டாள், ரேவதி, இப்படி வாம்மா.

    இதோ அத்தே.

    கேட்டியா இவன் சொன்னதை?

    ம்.

    இத்தனை பெரிய உருவத்துல உனக்கொரு மகன் கிடைச்சிருக்கான். என்ன செய்யப்போறே நீ?

    மதனை நெருங்கினாள்.

    அவனது வலது கையை எடுத்து, புறங்கையில் மெல்ல முத்தமிட்டாள். கேசத்தை மெல்லக் கலைத்துவிட்டாள்.

    அவன் உற்சாகமாக விசில் அடித்தபடி குளிக்கப் போனான்.

    அம்மா, ரேவதியைப் பார்த்தாள்,

    அம்மாடீ.

    சொல்லுங்க அத்தே.

    என்னோட ரெண்டு பிள்ளைகளும், சின்ன வயசுலயே தன்னோட தகப்பனாரை இழந்துட்டாங்க. சீனிவாசன் எதிலும் ஒட்டாத ரகம். தன் தொழில், வருமானம், வாழ்க்கைன்னு எந்திரமயமா மாறிட்டான். காரணம், அதிகப்படியான பொறுப்புகள். ஆனா, மதன் குழந்தை. எனக்குப் பின்னால இவங்க ரெண்டு பேரும் எப்படி வாழப்போறாங்களோன்னு ரொம்பவும் கவலைப்பட்டேன்.

    .....

    நான் ஒரு இதய நோயாளி. சீக்கிரம் செத்துடுவேன்னு நேத்துவரைக்கும் நினைச்சேன். ஆனா, இனிமே எனக்கு மரணமே இல்லைம்மா.

    அத்தே.

    உடம்பை நான் சொல்லலை. நான் உனக்குள்ளே நுழைஞ்சாச்சு. உன்னைவிட ஒரு நல்ல தாயா மதனுக்கு நான்கூட இருக்க முடியாது. நீ நல்லா இரும்மா!

    அத்தை அடுத்த வருடமே மாரடைப்பால் ஒரு நாள் காலமாகிவிட்டார்.

    அந்தப் பாதிப்பு அதிகம் தாக்காமல், மதனை பொத்திப் பொத்தி அன்பு காட்டினாள் ரேவதி.

    காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை அவனது சகல தேவைகளையும் - அம்மாவைவிட அற்புதமாக கவனித்தாள்.

    அரீஷ் வயிற்றில் வந்தபோது, பிரசவத்துக்குக்கூட பிறந்த வீட்டுக்குச் செல்லவில்லை. தன் தாயாரை இங்கே வரவழைத்தாள்.

    சீனிவாசன்கூட ஒரு மாதிரி ஆடிப் போய்விட்டான்.

    ஒரு நொடி கூட அண்ணி இல்லாமல் முடியாது என்று ஆகிவிட்டது, மதனுக்கு.

    அன்று இரவு. அடுக்களை வேலைகள் சகலமும் முடித்து மதனுக்கு பால் ஆற்றிக் கொடுத்துவிட்டு, அரீஷை உறங்க வைத்த பின்னர் தன் படுக்கை அறைக்குள் நுழையும்போது... நேரம் பத்தரை.

    சீக்கிரம் வா.

    என்ன அவசரம்?

    நான் இன்னிக்கு நல்ல ‘மூட்’ல இருக்கேன்.

    ஒண்ணும் வேண்டாம்.

    நிறையப் பேசணும் உங்கக்கூட.

    உஷ்! சும்மா இருங்க- தோளில் பதிந்த அவன் கைகளை விலக்கிவிட்டாள்.

    எரிச்சலுடன் அவளைப் பார்த்தான்.

    நாளைக்கு மதனுக்குப் பெண் பார்க்க நீங்க வரலைதானே?

    அதான் சொல்லிட்டேனே!

    அந்த வரனைப் பற்றின. விவரம் உங்களுக்கு தெரிய வேண்டாமா?

    உனக்குத் தெரிஞ்சா போதாதா? உன் பிள்ளையாச்சு, நீயாச்சு.

    .....

    போற போக்குல என்னையையும், என் பிள்ளையையும் மறந்துடாம இருந்தா சரி.

    ஏன் பிரிச்சுப் பேசுறீங்க? மதன் நமக்கு முதல் பிள்ளை. அரீஷ் ரெண்டாவதுதான்... நினைவில் இருக்கட்டும்.

    எனக்கு கவலையா இருக்கு ரேவதி- சீனிவாசன் முகம் திடீரென வெளுத்தது.

    எதுக்கு...?

    மதன்மேல நீ உயிரையே வச்சிருக்கே. அவனும் அப்படித்தான் வரப்போற பொண்ணு இதை சரியாப் புரிஞ்சுக்கமே!

    என்ன அர்த்தம்... உங்க பேச்சுக்கு

    தன் புருஷன்கிட்ட தனக்குத்தான் உரிமை அதிகம்னு அவ போர்க்கொடி உயர்த்திட்டா

    சிரித்துவிட்டாள் ரேவதி.

    ஏன் சிரிக்கிற?

    எனக்கு இங்கிதம் தெரியாதா? நானே விலகி நின்னுப்பேன். யார் சந்தோஷத்துக்கும் நிச்சயம் நான் நந்தி இல்லை. என் மதன் சந்தோஷமா இருந்தா, என்னைவிட மனம் பூரிக்கிறது யாரு?

    எல்லோரோட சந்தோஷமும் முக்கியம் உனக்கு, என்னைத் தவிர.

    ஏன், உங்களுக்கு என்ன செய்யலை நான்?

    மனுஷனுக்கு ஒரு ஆத்திர அவசரம்னா, அனுசரிச்சுப் போகமாட்டியே நீ.

    "உங்களுக்கு தினமும் ஆத்திர அவசரம்தான். அரீசுக்கு நாலு வயசுகூட

    Enjoying the preview?
    Page 1 of 1