Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Kan Theduthe
Unnai Kan Theduthe
Unnai Kan Theduthe
Ebook67 pages44 minutes

Unnai Kan Theduthe

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Unnai Kan Theduthe

Read more from Devibala

Related to Unnai Kan Theduthe

Related ebooks

Related categories

Reviews for Unnai Kan Theduthe

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Kan Theduthe - Devibala

    9

    1

    அந்த ஆங்கில தினசரியை பிரசன்னா பிரித்த போது, டெலிபோன் சிணுங்கியது. கை நீட்டி ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

    மிஸ்டர் பிரசன்னா இருக்காரா?

    யெஸ் ஸ்பீக்கிங்... நீங்க யாரு?

    நா ஈஸ்வரமூர்த்தி. அகல்யா கார்மெண்ட்ஸ் ப்ரொப்ரைட்டர்!

    சொல்லுங்க!

    நீங்க உடனே என் வீட்டுக்கு வரணும், உங்க உதவி எனக்கு அவசியமாயிருக்கு!

    அட்ரஸ் சொல்லுங்க.

    இன்னிய ஹிண்டு பேப்பர்ல வெதர் ரிப்போர்ட்டுக்குக் கீழே என்னோட விளம்பரம் ஒண்ணு வந்திருக்கு. முகவரி அதுல இருக்கு, உடனே வாங்களேன், ப்ளீஸ். பதிலை எதிர்பாராமல் - அவன் வருவான் என்ற நம்பிக்கையில் - எதிர் முனையில் ரிசீவர் சாத்தப்பட, ஹிண்டு தாள்கள் ஒன்றோடொன்று அவசரமாக உரசிக் கொள்ள, அந்தக் குறிப்பிட்ட பகுதியைக் கண்களால் தேடினான் பிரசன்னா.

    இருந்தது. புகைப்படத்தோடு கூடிய ஒரு விளம்பரம். ஈஸ்வர மூர்த்தியால் தரப்பட்டிருந்தது. புகைப்படத்தில் மார்பளவு சைஸில் கறுப்புக் கட்டம் போட்ட சட்டை அணிந்து, துரு துருவென ஒரு இளைஞன். மீசைகூட முழுவதும் அரும்பாத நிலையில் பெரிய கண்களைப் பெற்று, குழந்தை முகத்தோடு ‘மனோஜ்’ என்ற பெயர் தாங்கி புகைப்படத்தில் சிரித்தான் அவன்.

    அதனடியில் சுருக்கமான ஆங்கில வாசகங்கள்.

    ‘டியர் மனோஜ்’

    அம்மா படுக்கையில் இருக்கிறாள். நடந்ததை மறந்துவிடு. உன் விருப்பம் போலவே ஏற்பாடு செய்கிறேன். உடனே வந்துவிடு - ஈஸ்வரமூர்த்தி.

    கீழே வீட்டு விலாசமும், தொலைபேசி எண்ணும். இந்த மனோஜ் யாரு? ஈஸ்வரமூர்த்திக்கு மகனா? ‘நடந்ததை மறந்துவிடு!’ என்ன நடந்திருக்கும்? ‘விருப்பம் போலவே ஏற்பாடு செய்கிறேன்.’ விருப்பம் என்னவாக இருக்கும்? லுங்கியைக் களைந்துவிட்டு பேண்ட்டுக்குள் நுழைந்து, ஜிப்பாவை மாட்டிக் கொண்டான். தலையைக் கைகளால் சரிப்படுத்திக்கொண்டு, சிகரெட் பாக்கெட்டை உதறியதும் அது காலியாகக் கொட கொடத்தது.

    ‘ப்ச், போற வழில வாங்கிக்கணும்.’ ஃபேனை அணைத்து விட்டு, பூட்டைக் கையிலெடுத்ததும் கதவு இருமுறை தடதடத்தது உள்ள வா லதா.

    எங்க தலைவரே அவசரமா கிளம்பிட்டீங்க?

    வந்து சொன்னாப் போதுமா? கிண்டலாகக் கேட்டான்.

    உதைபடுவீங்க.

    சொன்னான்; விளம்பரத்தைக் காண்பித்தான். கண்களை உருட்டி வாயிலிருந்த சிக்லெட்டை பலூன் போல ஊதினாள். இன்ட்ரஸ்டிங். ஆனா ஒண்ணு கவனிச்சீங்களா, பயங்கரமா உதைக்குது.

    .....................

    விலாசமும் டெலிஃபோனும் எதுக்காக இதுல வரணும்?

    புரியலை?

    இந்த விளம்பரம் யாருக்கு?

    மனோஜ் கவனத்துக்கு.

    அவனுக்குத் தன் வீட்டு முகவரியும், டெலிஃபோன் நம்பரும் தெரியாதா?

    நீ என்ன சொல்ல வர்ற?

    மனோஜ் திரும்பி வரணும்ங்கற நோக்கம் மட்டுமில்லை... இதுல வேற ஏதோ கலந்திருக்கு. எனிவே, நீங்க போய் அந்த ஈஸ்வர மூர்த்தியை ஒரு இன்டர்வ்யூ பண்ணினா ஏதாவது தட்டுப் படலாம்!

    புறப்பட்டான் பிரசன்னா.

    ஒக்காருங்க மிஸ்டர் பிரசன்னா... நா உங்களைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஹாட் ஆர் கோல்ட்? - கேட்டார் ஈஸ்வரமூர்த்தி.

    சுற்றிலும் பார்வையைச் சுழல விட்டான் பிரசன்னா. எளிமையை அலட்சியப் படுத்திக்கொண்டு ஒரு பணக்காரத்தனம் அந்த வீட்டில் தெரிந்தது. நேர்த்தியான இன்டீரியர் டெக்ரேஷன். பொருத்தமான வால்பேப்பர். கார்ப்பெட்டை காதலிக்கும் கர்ட்டன்கள். சின்னதாக சாண்ட்லியர். மூலையில் வி.ஸி ஆரை துணி போர்த்தியிருக்க, உரசிக்கொண்டு நின்ற ஷோகேஸ், ஏராளமான கேசட்டுகளை சேகரித்து வைத்திருக்க, ஐஸ் வாட்டர் இருக்கா? என்றான்.

    மாதங்கி! என்று இவர் அழைக்க, ஐஸ் வாட்டரைய்ச் சுமந்து - எட்டு வயது இருக்கலாம் அழுக்கான பெண் வந்து நின்றது.

    வாங்கி, உறிஞ்சி, டீபாயில் வைத்தான், "கேன்

    Enjoying the preview?
    Page 1 of 1