Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Solle Vedham
Un Solle Vedham
Un Solle Vedham
Ebook127 pages44 minutes

Un Solle Vedham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466701
Un Solle Vedham

Read more from Devibala

Related to Un Solle Vedham

Related ebooks

Related categories

Reviews for Un Solle Vedham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Solle Vedham - Devibala

    1

    "சிந்து! இப்படி வாடா!"

    சுடிதாருடன் ஆளுயரக் கண்ணாடியில தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்ட சிந்து,

    வந்துட்டேன் அண்ணா! அதற்குள் அண்ணி, டிபன் பாக்ஸுடன் சிந்துவின் அறைக்குள் வந்தாள்.

    சிந்து! வெஜிடபுள் புலாவ் வச்சிருக்கேன் பாக்ஸல!

    சரி அண்ணி!

    நீ சாப்பிட வா! நேரமாச்சு!

    வந்துட்டேன் அண்ணி!

    தன் மேக்கப்பை ஒருமுறை சரிபார்த்துக் கொண்ட சிந்து, வெளியே வந்தாள்.

    அண்ணன் உணவு மேஜையில் காத்திருந்தான்.

    வா சிந்துமா! ரவா இட்லி சூடா இருக்கு! உங்கண்ணியோட ஸ்பெஷல் டிபன்?

    சரி சரி! சிந்து சிரித்தபடி அண்ணன் அருகில் வந்து உட்கார்ந்தாள்.

    சிந்துமா! நம்ம தரகர் ஒரு ஜாதகம் கொண்டு வந்தார். தற்செயலா பொருத்தம் பார்த்தேன். பிரமாதமா பொருந்துது! மேற்கொண்டு போகலாமா?

    திரும்பி அண்ணனைப் பார்த்தாள்.

    ரெண்டு வருஷம் கூடப் போகட்டுமேண்ணா!

    அப்படீங்கறே? அப்ப சரி!

    ரொம்ப நல்லா இருக்கு! அவ சொல்லிட்டா, நீங்களும் சரிங்கறதா? இப்பவே இருபத்தி மூணு! இனிமே தள்ளக்கூடாதுங்க! அதது காலா காலத்துல நடக்கணும்!

    என்னை இந்த வீட்டை விட்டு விரட்டறதுலேயே அண்ணி முனைப்பா இருக்காங்க! இல்லியாண்ணி?

    பல்லை உடைச்சிருவேன். உன்னை விரட்ட அவளால முடியுமா?

    எம்பல்லை அப்புறம் உடைக்கலாம்! தபாரு சிந்து! இனிமே தள்ளிப் போடக்கூடாது. நான் சொல்றதைக் கேளு!

    சிந்து பேசலை!

    என்னடீ பேசலை? உம்மனசுல யாருக்காவது இடம் தந்திருக்கியா?

    அதெல்லாம் இல்லைண்ணி!

    பின்ன?

    அவள் பேசாமல் இருந்தாள்.

    சொல்லுடா சிந்து! எதுவானாலும் உன் விருப்பப்படிதான் நடக்கும்!

    எனக்கு காதல்ல நம்பிக்கை இல்லைண்ணா! நிச்சயமா அதில்லை!

    அப்புறம்?

    சுதந்திரம் போயிருமே, கல்யாணம் செஞ்சுகிட்டா!

    யாருக்கு?

    எனக்குத்தான்!

    அதெல்லாம் ஒண்ணும் போகாது! ஆம்பிளைக்குதான் சுதந்திரம் போகும். இப்ப நானில்லையா? இவ உங்கண்ணி என்னை ஆட்டிப் படைக்கறாளே!

    ஆமா! நான் சொன்ன உடனே கேக்கற ஆளைப்பாரு! அதுக்கெல்லாம் குடுத்து வைக்கணும் சிந்து. எனக்கந்த அதிர்ஷ்டம் இல்லை! ஏதோ உங்கண்ணன் சுமாரா சமைக்கறார். அவ்ளோதான்!

    கேட்டியாம்மா? அடுத்தது சுமாரா துணி தொய்க்கிறார்... அப்புறம் பாத்திரம் தேய்க்கறார்னு ஒண்னொண்ணா வருவா! இந்த வீட்ல எல்லாம் நான்தான் செய்யறேன்னு இப்பத் தெரியுதா?

    நீயே செய்ணா! கேக்கவே சந்தோஷமா இருக்கு!

    அடிப்பாவி! கூடப் பொறந்தவனை குபீர்னு கவுத்துட்டியே!

    நாங்க ரெண்டு பேரும் ஒரே இனம்!

    அண்ணி பெருமிதமாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டாள்.

    சரி! விஷயத்துக்கு வா!

    இன்னொரு இட்லி போட்டுக்கோ சிந்து! சூடா இருக்கு!

    என்னம்மா! தொடர்ந்து போகலாமா?

    நான் சொல்றேன். நீங்க போங்க! அந்தப் பையன் வீட்ல போய் நாம பேசலாம். அப்புறம் பொண்ணு பார்க்க வரச் சொல்லலாம்!

    அண்ணி! இங்கே இருந்த சந்தோஷம், அங்கே எனக்குக் கிடைக்குமா?

    இதைவிடக் கிடைக்கும்! சிந்து! ஆரம்ப காலத்துல கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போ! எல்லாம் சரியாகும். மாப்ளை உன் கைக்குள்ள வந்துட்டார்னா, அப்புறம் நீ வச்சதுதான் ராஜாங்கம் அங்கே! நீ உத்யோகம் பாக்கற பொண்ணு! உன் கால்ல நிக்கற! யார் உன்னைக் கட்டுப்படுத்த முடியும்?

    அவள் பேசவில்லை!

    என்னங்க! அவ குழந்தை! இந்த விஷயத்துல சட்டுனு அவளால முடிவெடுக்க முடியாது. நீங்க பாருங்க! அந்தப் பையன் பெண் பார்க்க வரட்டும். தபாரு சிந்து! உனக்குப் பிடிக்கலைனா, வேண்டாம். உன் விருப்பத்தை மீறி எதுவும் நடக்காது!

    எனக்கு நேரமாச்சு! நான் புறப்படறேன்!

    சிந்து மொபெட் சாவியை எடுத்துக்கொண்டு, அவசரமாகப் புறப்பட்டாள்.

    சிந்து அழகான, வாளிப்பான பெண்.

    இருபத்தி இரண்டாவது வயதில் தனது முதுகலைப் பட்டத்தையும், ஒருசில கம்ப்யூட்டர் டிப்ளமாக்களையும் சொந்தமாக்கிக் கொண்டவள்.

    ஒரு இந்திய- ஜெர்மன் கூட்டு நிறுவனத்தில் படிப்பை முடித்த ரெண்டாவது மாதம் வேலை கிடைத்து விட்டது. இதோ ஒரு வருடமாகப் போய்க் கொண்டிருக்கிறாள்.

    ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளம்!

    பெற்ற தாய்- தகப்பனை தனது ஏழாவது வயதில் இழந்தவள். அவளுக்கும் அண்ணன் துரைக்கும் பன்னிரண்டு வயது வித்யாசம்! அது முதல் அண்ணன் பராமரிப்பில்தான்.

    தனது கடைசி வருட பட்டப்படிப்பில் இருக்கும்போது அப்பா, அம்மாவை விபத்தில் இழக்க, ராஜதுரையால் பட்டப்படிப்பைக் கூட முழுசாக முடிக்க வழியில்லை!

    அப்பா பார்க்கும் வேலை கிடைத்து விட்டது.

    அங்கு பல பரீட்சைகளை எழுதி, இடைவிடாமல் உழைத்து தனது முப்பதாவது வயதில் அதிகாரியாகி விட்டான். அந்த நேரம் சிந்து பி.எஸ்சி படித்துக் கொண்டிருந்தாள்.

    சாதனாவுக்கும் துரைக்கும் கல்யாணம் நடந்தது. ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.. குழந்தைகள் ஏதும் இல்லை!

    என் தங்கைதான் எனக்கு எல்லாமே என்று சொல்லித்தான் அன்று முதல் சிந்துவிடம் பெற்ற தாயை விட பரிவாக நடக்கிறாள் சாதனா!

    சிந்து மூன்றாவது வருடம் பட்டப்படிப்பை படிக்கும்போது துரைக்கு மாற்றல் வந்துவிட்டதால், வட இந்தியாவுக்கு போக வேண்டி வந்தது.

    அந்த ஒரு வருடம் முழுக்க முழுக்க காலேஜ் ஹாஸ்டலில் தங்கியிருந்தாள் சிந்து!

    சாதனா, சிந்துவைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்றுதான் சொன்னாள்.

    ஆனால் துரைக்கு ஓட்டல் சாப்பாடு ஒருவேளை கூட உடம்புக்கு சேராது! அதனால் சிந்து கட்டாயப்படுத்தி அண்ணியை அனுப்பி வைத்தாள்.

    ஒரே வருடத்தில் திரும்பி வந்துவிட்டார்கள்.

    அழகான குடும்பம்!

    ஒரு போட்டி பொறாமை இல்லை!

    நேசம் ஒன்றுதான் சகலமும் என்று வாழ்பவர்கள்.

    இவர்களைப் பார்த்து கண் போடாதவர்கள் இல்லை!

    மாலை ஏழு மணிக்கு துரை திரும்பிய சமயம், சாதனாவும் சிந்துவும் செஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

    அவன் முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு வந்தான். சாதனா காபி கொண்டு வந்தாள்.

    அவங்க வீட்டுக்குப் போனேன் சாதனா! நல்ல குடும்பமா இருக்காங்க! பையனும் அவனோட விதவைத் தாயாரும் மட்டும்தான். ஒரே ஒரு சிஸ்டர் ஸ்டேட்ஸ்ல இருக்காளாம்! கல்யாணத்துக்குக் கூட வரமாட்டாளாம்! கொஞ்சமா சொந்த பந்தம். சொற்பமா நண்பர்கள்!

    சரி! பையன் எப்படி?

    களையா, அடக்கமா இருக்கான். ஃபாரின் பேங்க்ல வேலை பாக்கறான். அஞ்சு இலக்கச் சம்பளம். வீட்ல எல்லா வசதிகளும் இருக்கு!

    வாடகை வீடு தானே?

    "இப்போதைக்கு! ஒரு ஃப்ளாட் புக் பண்ணியிருக்கான் பக்கத்துத் தெருவுல! ஆறு மாசத்துல முடிஞ்சிருமாம். நம்ம பொண்ணுக்கு அந்த

    Enjoying the preview?
    Page 1 of 1