Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amma Ammamma
Amma Ammamma
Amma Ammamma
Ebook148 pages1 hour

Amma Ammamma

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466763
Amma Ammamma

Read more from Devibala

Related to Amma Ammamma

Related ebooks

Related categories

Reviews for Amma Ammamma

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amma Ammamma - Devibala

    1

    இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நாள் ஆகஸ்ட்-15.

    பெரியசாமி, இருக்கும் சுதந்திரத்தையும் இழந்த நாள் அதே ஆகஸ்ட் - 15. ஆம்! அது அவரது கல்யாண நாள்!

    ‘என்னாது? ஆடி மாசத்துல கல்யாணமா?’

    ‘அட போங்கப்பா காதலுக்கு ஏது மாசம்னு’ கேட்டு ஆடில தாலிகட்டி புரட்சி பண்ணின பெரியசாமி அப்ப ஆடத் தொடங்கினவர், இன்னமும் அந்தம்மா தாளத்துக்கு ஆடறதை நிறுத்த முடியலை!

    ‘என் சோகக் கதையைக் கேளு தந்தைக் குலமேனு பெரியசாமி ஒரு பாட்டை அடிக்கடி பாடுவார்- அந்தம்மா காதுல விழாம. விழுந்தா பிச்சிருவாங்க!’

    பெரியசாமி பற்றிய சின்ன ஆரம்பம்.

    இந்தக் கதை பெரியசாமி என்ற மனிதரின் கண்ணீரில் எழுதிய கவிதை என்று அவர் மட்டும் சொல்லிக் கொள்ளட்டும்.

    ஒரு மனிதனின் (மானங் கெட்ட) கதை என்று நாம் சொல்லப் போவதில்லை. மாறுபட்ட கதை.

    இனி பெரிய சாமி.

    நாலு மணிக்கு அலாரம் அடித்தது.

    பெரியசாமி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார். முறம் போன்ற தன் கைகளைப் பிரித்து அதில் கண்களை விழித்தார்.

    கை வறவறவென்றது.

    நேற்று ராத்திரி சாப்பிட்டுவிட்டு கை கழுவாதது ஞாபகத்துக்கு வந்தது. எழுந்து கொல்லைப்பக்கம் போய்விட்டுத் திரும்பினார். பாத்ரூமில் பல தேய்க்கிறேன் பேர்வழி என்று பேஸ்ட்டை பிரஷ்ஷில் பிதுக்கி வாய்க்குள் அது நுழைத்து தாறுமாறாக என்னவோ செய்தார்.

    வெளியே வந்த போது,

    பால் கவர்கள் வாசலில் அனாதையாகக் கிடந்தன. கூடவே ஆங்கில நாளிதழ். எடுத்து உள்ளே வைத்துவிட்டு பாலைப் பாத்திரத்தில் கொட்டி அடுப்பைப் பற்றவைத்தார்.

    நேத்து ராத்திரியே அன்னபூரணி உத்தரவிட்டிருந்தாள். என்னாங்க நாளைக்கு காலைல நாலரை மணிக்கு எழுப்பிடுங்க. ஒரு ஆறு மணிக்கெல்லாம் கலெக்டர் வரச் சொல்லியிருக்கார் என்னை

    எதுக்கு?

    கொடியேத்தணும். சுதந்திர தினம் நாளைக்கு

    நீ கொடியேத்தப் போறியா?

    அவள் முறைத்தாள்.

    இ… இல்லை கேட்டேன்

    அப்போதுதான் பெரியசாமிக்கு சட்டென அது நினைவுக்கு வந்தது.

    பூரணி.

    என்னா?

    நாளைக்கு என்ன நாள்னு சொல்லு!

    அதான் சுதந்திர நாள்னு சொன்னேனே

    இல்லை இன்னொரு முக்கிய நாள்!

    தெரியலை

    நம்ம கல்யாண நாள். நமக்கும் கல்யாணமாகி இருபத்தி நாலு வருஷம் முடியுது

    அதுக்கு என்னா இப்படி.

    ஒ… ஒண்ணுமில்லை... கல்யாண நாள்ள நீ வெளியே போகணுமா? ரெண்டு பேரும் சேர்ந்து...

    சேர்ந்து.

    சேர்ந்து ஒண்ணும் பண்ண வேண்டாம். வீட்ல சந்தோஷமா...!

    தபாருங்க! உங்களை மாதிரி வீட்ல வெட்டிப் பொழுது போக்க எனக்கு நேரமில்லை. நான் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பி.ஏ. ஏகப்பட்ட வேலை கிடக்கு எனக்கு. நாலரைக்கு என்னைக் கூப்பிடுங்க

    நொந்து போனார் பெரியசாமி.

    பாலைக் காய்ச்சி இறக்கி விட்டு, அரிசி கழுவி, குக்கரில் போட்டார். அன்னபூரணியிடம் வந்தார்.

    பூரணி எழுந்திருக்கிறியாம்மா?

    ம் சிலுக்குத்தனமாக ஒரு முறை முனகிவிட்டு புரண்டு படுத்தாள் அன்னபூரணி.

    அன்னம் குழைவாக அழைத்தார் பெரியசாமி.

    தூங்க விட மாட்டீங்களா?

    நீதானேம்மா நாலரைக்கு எழுப்பச் சொன்னே?

    அவள் மெல்ல புரண்டு எழுந்தாள்.

    கண்களை விழித்தாள்.

    பெரியசாமி வெற்றிலைக் காவியேறிய தன் முன்னிரண்டு சொத்தைப் பற்களால் அகலமாகச் சிரிக்க,

    எத்தனை வாட்டி சொல்றது உங்களுக்கு,

    என்னா

    முழிக்கும் போது எதிர்ல நிக்காதீங்கனு. காலைல உங்க தரிசனம். என்னல்லாம் கஷ்டப்படணுமோ? வருண் ஸ்நேகிதர்கள் கூட பிக்னிக் போகணும்னு சொன்னான். அவனையும் அஞ்சு மணிக்கு எழுப்பிக் குளிக்க வைங்க.

    சரிம்மா

    எழுந்து போனாள் அன்னபூரணி.

    அன்னம்

    என்னா.

    உனக்கு நாப்பத்தியெட்டு வயசுன்னு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க

    காலைல அசட்டுத்தனமா உளறிட்டு நிக்காதீங்க போய் வேலையைப் பாருங்க

    பெரியசாமி அடுக்களையில் உட்கார்ந்து வெங்காயம் நறுக்கத் தொடங்கினார். ‘உனக்கு மட்டும் வெங்காயம் நறுக்கும் போது கண் கலங்காதா பெரியசாமி?’ நண்பர் ஒருவர் கேட்க,

    ‘எனக்கு கண்ணீரே இல்லை. வற்றிப் போச்சு. வெங்காயத்தால் என்ன செய்ய முடியும் என்னை?’ என்று வேதாந்தம் பேசிய பெரியசாமி, தக்காளியை பிரிட்ஜ் திறந்து எடுத்தார்.

    பல் தேய்த்து விட்டு வந்தாள் பூரணி.

    காபி போட்டாச்சா?

    ம் ஆச்சும்மா

    டம்ளரில் ஊற்றி அவள் எதிரே பவ்யமாகக் கொண்டு வந்து நீட்டினார்.

    ஆத்தித் தரட்டுமா?

    அவசியமில்லை. எனக்குத் தெரியும். சர்க்கரை அதிகம் காபில. விக்கிற விலைல இப்படியா போடறது? சம்பாதிச்சாத் தெரியும் கஷ்டம்? வருணை எழுப்புங்க. என் உள் பாவாடையும், பாடியும் எடுத்து வைங்க. நான் குளிக்கப் போறேன்.

    படுக்கையறைக்கு வந்தார்.

    வாயில் ‘ஜொள்’ ஒழுக வருண் - அவரது இருபத்தி மூன்று வயது ஒரே மகன்- உறங்கிக் கொண்டிருந்தான்.

    எம். காம். முடித்துவிட்டு தனியாரில் அக்கவுண்ட்ஸ் அதிகாரியாக ஏழெட்டு மாதங்களுக்கு முன்புதான் வேலையில சேர்ந்தான். நல்ல சம்பளம்.

    முழுக்க முழுக்க அன்னபூரணியின் மடியில் வளர்ந்தான். அம்மா வைத்ததுதான் அவனுக்கு சட்டம். பெரியசாமியை பத்து வயது வரை அப்பா என்றே ஒப்புக் கொள்ள மாட்டான்.

    முக ஜாடையில் அப்படியே பெரியசாமிதான். சற்றே நீள வாட்டில் அமைந்த அனுமார் சாயலும், அந்தக் கிளி மூக்கும் ஒற்றியெடுத்தது போல பிள்ளைக்கு வர, பெருமிதப்பட்டார் பெரியசாமி.

    ‘நீ அப்படியே உங்கப்பாவை உரிச்சு வச்சிருக்கே’ அக்கம்பக்கத்தில் யாராவது சொன்னால்,

    பாரும்மா

    இல்லைடா! உன்னை சீண்டறாங்க ஆன்ட்டி அப்படி சொன்னா அழுவான் என் - பிள்ளை. அப்பா ஜாடைனு சொல்றதை விரும்பமாட்டான்

    வருண் எழுந்திரு மணி அஞ்சு

    குட்மார்னிங் மம்மி

    நான் அம்மி இல்லை. ஆட்டுக்கல். வாடா எழுந்து எரிச்சலுடம் உள்ளே போனார்.

    குளியல் முடித்து உடை மாற்றி, பூரண அலங்காரத்துடன் வெளியே வந்தாள் பூரணி. மெட்டல் ஷிபான் புடவையை சிக்’கென கட்டி கொண்டையின் விளிம்பில் ஒற்றை ரோஜா சொருகி, சன்னமாக ரோஸ் பவுடர் போட்டு, கைப்பையோடு வெளிப்பட்டாள்.

    நேரம் ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.

    என்னங்க நேரமாச்சு எனக்கு நான் சாயங்காலம்தான் வருவேன். சமபந்தி போஜனம் இருக்கு. வரட்டுமா?

    வாசல் வரை வந்து, தெருவில் நடக்கும் அன்னபூரணிக்கு டாட்டா காண்பித்தார் பெரியசாமி.

    அவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

    பெரியசாமிக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. யார் போனாலும் ‘டாட்டா காட்டுவது அவர் பழக்கம்.

    உள்ளே வந்தார்.

    அப்பா காம்ப்ளான் கரைக்கலை இன்னும்?

    இருடா வர்றேன்

    டாவா? மம்மி வீட்ல இல்லைனா, உனக்குத் திமிர் ஏறுது. மம்மி வர்றாங்க

    எங்கே? பெரியசாமி மிரண்டு திரும்ப,

    வருண் கலகலவென சிரித்தான்.

    எரிச்சலுடன் அவனைப் பார்த்தார்.

    இன்னைக்கு மம்மிக்கு வெட்டிங் டே வாழ்த்துச் சொல்ல மறந்து போயிட்டேன்

    உங்க மம்மி தானேவா தாலி கட்டிக்கிட்டா? வெட்டிங்டே எனக்கும் சேர்த்துத்தாண்டா வாழ்த்தை எனக்கு சொல்லக்கூடாதா?

    அவன் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் விசிலடித்தபடி விலக,

    உன்னை மாதிரி ஒரு குரங்கு பொறக்கும்னு தெரிஞ்சிருந்தா, ஆகஸ்ட் 15ம் தேதி தூக்குல தொங்கியிருப்பேன்

    அவனும் அரைமணி நேரத்தில் புறப்பட்டு போயேவிட்டான்...

    அரைமணி நேரத்தில் வேலைக்காரி வந்தாள்.

    அவளுக்குக்கூட இளப்பம்தான் அவரை...

    துணியெல்லாம் தோய்க்க நேரமில்லை எனக்கு. நீ தோச்சுக்கோ...

    வீட்டைப் பெருக்கி துடைச்சிட்டுப் போறேன்… அ… ஆங்.

    ஏன்? நீயும் கோட்டைல போய் கொடியேத்தணுமா?

    "இன்னா பேசற நீ? சொதந்தர நாளு

    Enjoying the preview?
    Page 1 of 1