Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poorva Jenma Bandham
Poorva Jenma Bandham
Poorva Jenma Bandham
Ebook116 pages50 minutes

Poorva Jenma Bandham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466701
Poorva Jenma Bandham

Read more from Devibala

Related to Poorva Jenma Bandham

Related ebooks

Related categories

Reviews for Poorva Jenma Bandham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poorva Jenma Bandham - Devibala

    1

    "அகிலா போன் பண்ணினா! என்னையும், அப்பாவையும் வரச் சொல்லியிருக்கா!" அம்மா மங்களம் மெல்லச் சொல்ல -

    ரகு விசுக்கென திரும்பினான்! ஏன்? அவ இந்த வீட்டுப் பக்கமே வர மாட்டாளா? பெரியவங்க, பெத்தவங்க இங்கே இருக்கும்போது அவ வந்து பார்க்கிறதுதானே முறை?

    ஏன்டா அப்படி சொல்றே? அவளும் நாங்க பெத்த பொண்ணுதானே? கூப்பிட்டா, வர முடியாதுன்னு சொல்ல முடியுமா?

    அப்படி நான் சொல்லலம்மா! இப்ப எதுக்கு கூப்பிடறா?

    தெரியலப்பா!

    என்னங்க! இப்படி வர்றீங்களா?

    உள்ளிருந்து ஜெயா குரல் கொடுக்க, ரகு உள்ளே போனான். நாலு வயதுப் பையனை ஜெயா பள்ளிக்கூடத்துக்கு தயார் செய்து கொண்டிருந்தாள்!

    அவங்க எப்பப் போறாங்க! எப்ப வருவாங்கன்னு கேளுங்க!

    எதுக்கு?

    ராகுலை ஒண்டரை மணிக்கு ஸ்கூல்லேயிருந்து கூட்டிட்டு வரணுமில்லையா? பொண்ணு வீட்டுக்குப் போய் உக்கார்ந்துடப் போறாங்க! அப்புறமா நான் திண்டாடிப் போவேன்!

    சரி பாத்துக்கலாம்!

    பார்க்கிறது என்ன! வரணும்! சரியா...? கரண்ட் பில் கட்டணும்! ரேசன் வாங்கணும்! புள்ளையக் கூட்டிட்டு வரணும்! இதையெல்லாம் யாரு செய்யறது?

    ரகு வெளியே வந்தான்.

    அப்பா! அம்மாவை மட்டும் அனுப்பிட்டு, நீங்க இங்கேயே இருங்களேன்! நிறைய வேலை இருக்கு!

    ரெண்டு பேரையும் வரச் சொன்னாடா அகிலா!

    இங்கே உங்களுக்கும் பொறுப்பு இல்லையா? சரி! போயிட்டு இரண்டு மணிக்கு நேரா ஸ்கூலுக்கு வந்து ராகுலை அழைச்சிட்டு வந்துருங்க!

    ரகு ஜெயா இருவரும் மகன் ராகுலுடன் பரபரவென புறப்பட்டு காரில் ஏற, ஜெயாதான் காரை ஓட்டத் தொடங்கினாள்.

    ரகுவுக்குத் தெரியாது!

    தியாகு - மங்களம் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் ரகு அவன் மனைவி ஜெயா. நாலு வயது மகன் ராகுல்!

    அடுத்தது அகிலா- அவள் கணவன் சுபாஷ்! ஒருவயதுப் பெண் குழந்தை ஷாலி!

    தியாகு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து குடும்பம் நடத்தியவர். தன் உடன் பிறப்புகளை ஆளாக்கி, பெற்றவர்களை பராமரித்து, பிள்ளைகளையும் வளர்க்க படாதபாடுபட்டவர்!

    பல கஷ்டங்களை அனுபவித்தவர்!

    மங்களம் சகலத்துக்கும் ஈடு கொடுத்த நல்ல ஒரு மனைவி! தியாகுவுக்கு முன் கோபம் உண்டு. அதற்கு மேல் பாசமும் உண்டு. ஆனால் தப்பாக மனசுக்குப் பட்டால் படக்கென சொல்லி விடுவார்! யாராக இருந்தாலும் கவலைப்பட மாட்டார்.

    மங்களம் அதை தடுத்து பூசி மெழுகி, யாருக்கும் பாதகமில்லாமல் குடும்பத்தை நடத்தப் படும்பாடு கொஞ்சமில்லை!

    மங்களத்தைப் போல சகலத்துக்கும் அனுசரித்து, யாரிடமும் கோபப்படாமல், யாருக்கும் பாதகமில்லாமல் வாழும் ஒருதாயை பார்க்க முடியாது!

    இந்த நல்ல மனுஷிக்கு மகனும் சரியாக அமையவில்லை! மருமகளும் அனுசரிக்கவில்லை! அதுதான் விதி!

    தியாகு இரண்டு பிள்ளைகளையும் நன்றாகத்தான் படிக்க வைத்தார்!

    ரகு இன்ஜினீயரிங்- அகிலா எம்.காம். படிப்பு. ரகு, கம்பெனியில் வேலை. அகிலா அரசு வங்கி ஒன்றில் அதிகாரி!

    ஏற்கனவே உள்ள கடன்கள்- குடும்பம் நடத்த பட்டபாடு பிள்ளைகளின் படிப்புச் செலவு- அகிலாவின் கல்யாணம்- பிரசவம் என எதிலும் அவர் குறை வைக்கவில்லை.

    அதனால் ரிடையர் ஆகி வரும்போது சொல்லும்படி கையில் எதுவும் நிற்கவில்லை.

    தனியார் நிறுவனம் என்பதால் பென்ஷன் இல்லை! எல்லா கடனும் போக மொத்தப் பணம் ஆறு லட்சம் கைக்கு வந்தது!

    அதில் அவசர மருத்துவ தேவைக்கு இரண்டு லட்சம் கரைந்து விட்டது. மீதி நாலு லட்சம் மட்டும் தான். அதில் வரும் இன்றைய மாத வட்டி ரெண்டாயிரத்து அறு நூறு! சொந்த வீடு கட்ட முடியவில்லை. இந்த ரெண்டாயிரத்து சொச்சத்தை வைத்துக்கொண்டு தனியாக வாழ முடியாது! அதனால் மகனையோ, மகளையோ சார்ந்துதான் வாழ வேண்டிய கட்டாயம்!

    இங்கே மகன் ரகு- மருமகள் ஜெயா இருவரும் ஒரே ஐ.டி. கம்பெனி! காதல் கல்யாணம்! ஜெயா- கணவனை விட பத்தாயிரம் அதிகம் சம்பாதிக்கும் பெண். கார் ஓட்டுவதிலிருந்து குடும்பம் நடத்துவது வரை எல்லாம் அவள் கையில்!

    அவளது பெற்றோர் மும்பையில்- உடன் பிறப்புகள் வெளிநாட்டில் கல்யாணமான அடுத்த வருடமே குழந்தை ராகுல் பிறந்து விட்டான்.

    பிரசவத்துக்கு கூட அவள் மும்பைக்கு போகவில்லை. அவளது பெற்றோர் இங்கே வந்துவிட்டார்கள். மகளை பார்த்துக் கொள்கிறேன் பேர்வழி என்று அவர்கள் ஓடாத ஓட்டம் பாக்கியில்லை!

    வெளி வேலைகள் அத்தனையும் தியாகு! வீட்டில் சமையல், மற்ற வேலைகள் மங்களம். உட்கார்ந்து சாப்பிடும் ஜெயாவின் பெற்றோர். மனைவியை எதிர்க்க துப்பில்லாமல் மாமனார்- மாமியாருக்கு ஜால்ரா போடும் வெட்கம் கெட்ட ரகு!

    பிரசவம் முடிந்து ஆறு மாதம் வரை அவர்கள் இங்கேதான் இருந்தார்கள். அதன் பிறகு ஜெயாவே பேக் செய்து விட்டாள்.

    நீ ஆபீசுக்குப் போனா புள்ளைய யார் பார்த்துக்கிறது?

    அத்தை, மாமாவுக்கு என்ன வேலை? அவங்க வம்சம்தானே இது? - கடமை அவங்களுக்குத்தான்! பார்த்துக்கட்டும்!

    "இத்தனைக்கும் ஜெயா பிரசவம் ஆகி வந்த முதல், பிள்ளையைக் குளிப்பாட்டி சகல வேலைகளையும் செய்தது மங்களம் தான்.

    ரகுவுக்கு முன்னாலேயே திருமணமான அகிலா கர்ப்பம் தரிக்கவில்லை! மூன்று வருடங்கள் கழித்துத்தான் பிள்ளை உண்டானாள்!

    கல்யாணம் ஆனதுமே அவள் தனிக்குடித்தனம் வந்து விட்டாள்! பெரியவர்களுடன் அவளும் சேரவில்லை. அவர்களும் பேசக்கூடியவர்கள். இவளும் விட்டு வைக்கமாட்டாள்!

    சுபாஷ்- ரகு அளவுக்கு பெண்டாட்டி தாசன் இல்லை. அவனுக்கு பெற்றவர்கள் ஒத்துழைப்பு இல்லை. அகிலா உண்டானதும், அம்மா! நீ இங்கே வந்து இரு! என்னோடது தனிக்குடித்தனம் தானே!

    எப்பவும் இருக்கிறது கஷ்டம்டி! ஜெயாவும் வேலைக்குப் போறா! - அங்கே சமைச்சு, ராகுலையும் பார்த்துக்கணும் இல்லையா?

    அவளைப் பெத்தவங்க வரட்டுமே! என்ன கேடு?

    அதை நான் சொல்ல முடியுமா?

    என் மகளை நான் பார்த்துக்கணும்னு சொல்லேன்மா! அதை சொல்லக்கூட உனக்கு உரிமை இல்லையா?

    சரி டீ பேசறேன்!

    இங்கே வந்து மெதுவாக ஆரம்பித்தாள்!

    ரகு! அவ பிள்ளை உண்டாகியிருக்கா! நானும், அப்பாவும் அவகூடவே இருந்து பார்த்துக்கிறோம்!

    "எப்படிம்மா! இங்கே வீட்டு வேலைகளை,

    Enjoying the preview?
    Page 1 of 1