Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pennaal Mudiyum
Pennaal Mudiyum
Pennaal Mudiyum
Ebook120 pages43 minutes

Pennaal Mudiyum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466701
Pennaal Mudiyum

Read more from Devibala

Related to Pennaal Mudiyum

Related ebooks

Related categories

Reviews for Pennaal Mudiyum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pennaal Mudiyum - Devibala

    1

    "இப்பவே நான் சொல்லிட்டேன். நாலு காசுதான் பெரிசுனு நினைச்சு உத்யோகம் பாக்கற பொண்ணைத் தேடாதே"

    விசுவநாதன் பேசாமல் இருந்தான்.

    அவ பாட்டுக்கு காலைல எழுந்தா காலை வீசி நடந்துடுவா. இந்த வயசான காலத்துல நான் நாய்ப் பாடுபடணும். என்னால முடியாது. இத்தனை காலம் நான் உழைச்சதே அதிகம். எப்ப ஒருத்தி வருவா, காலை நீட்டி ஒக்காரலாம்னு நான் காத்துக்கிட்டு இருக்கேன்

    அம்மா முடித்ததும் அப்பா தொடங்கினார்.

    ஆமாண்டா விசு... அஞ்சு பெத்து உங்கம்மா பஞ்சு பஞ்சா ஆயாச்சு. அவளால இனிமே முடியாது. ஒன்னோட அக்கா, தங்கச்சிங்க எல்லோரையும் ஒரு வழியா கரை சேர்த்தாச்சு. இனிமே எங்களால முடியாது

    கல்யாணத்தைக் கொஞ்ச நாள் கூடத் தள்ளிப் போடலாமா? மெல்லிய குரலில் கேட்டான் விசுவநாதன்.

    இப்ப ஒனக்கு என்ன வயசுனு நினைச்சே? முப்பத்தி அஞ்சு. முன் மண்டைல ஒரு முடி இல்லை. இன்னமும் தள்ளினா அதுக்குப் பேரு கல்யாணம் இல்லை

    தள்ளிப் போகக் காரணம். அண்ணன் இல்லையேம்மா சொன்னபடி கவுரிசங்கர் நுழைந்தான்.

    பின்ன நாங்களா காரணம்?

    நான் உங்களைச் சொல்லலை. இந்த வீட்ல மூணு பொண்ணுங்க கல்யாணம், வளைகாப்பு, பிரசவம் இத்யாதினு எல்லாம் முடிஞ்சுது போன வருஷம்தானே?

    அதுக்கு இவன் தலைல வழுக்கை விழுவானேன்?

    என்னம்மா பேசற நீ? எல்லாம் அப்பாவா செஞ்சார்? முதல் அக்கா கல்யாணம் மட்டும்தானே அப்பா பணத்துல நடந்தது? பாக்கியெல்லாம் அண்ணன்தானே

    சரிடா! அவன் செஞ்சான்னே இருக்கட்டும். நீ என்ன செஞ்ச? உனக்கு வயசு இருபத்தியேழு. இப்பவும் ஊரைச் சுத்திட்டுத்தானே இருக்கே. ஒரு வேலைல உருப்படியா நிலைக்கறதில்லை. பேச வந்திட்டான்

    அண்ணா! த பாரு, உனக்கே ஏகப்பட்ட கடன் இருக்கு. வர்ற சம்பளம் போதலைனு வட்டிக்குக் கடன் வாங்கிட்டு இருக்கே. பேசாம உத்தியோகம் போற பொண்ணா தேர்ந்தெடு. இவங்க சொல்றதைக் கேக்காதே. வாழப் போறது நீ.

    அப்பா எழுந்து வந்தார்.

    நீ யாருடா இதுல தலையிட?

    அவனோட தம்பி

    ஆமா தம்பி... திமிரு பிடிச்சவன். தண்டச்சோறு

    நிறுத்துங்கப்பா! நல்ல வேலை எனக்குக் கிடைக்கலை. நிஜம்தான். ஆனா ஏதோ ஒரு நட்டாமுட்டி வேலைல நான் இருக்கேனா இல்லையா? என் வயித்துப் பாட்டை நான்தான் பாத்துக்கறேன். அதிகமாப் பேசாதீங்க

    கவுரி! பேசாம இரு

    விசு சின்னதாக அதட்டினான்.

    ‘பாவம் விசு! சிறு வயது முதலே அப்பாவி! அதிர்ந்து பேசமாட்டான். பெற்றவர்களுக்கு அடங்கியே வாழ்ந்தவன். ஒரு கெட்டப் பழக்கம் இல்லை! பட்டதாரி. இருபது வயதில் வேலைக்கு சேர்ந்தவன். ஏதோ ஒரு அரசாங்க உத்தியோகத்திலே ஹெட்கிளார்க்காக இன்று பிடித்தமெல்லாம் போக கையில் ரெண்டாயிரத்து சொச்சம் கொண்டு வருபவன். மூன்று அக்கா, தங்கைகள். இப்போதும் வீட்டுக்குள் புகுந்து அதிகாரம் செய்யும் வர்க்கம்.

    அப்பா அம்மாவுக்கு ஓரவஞ்சனை. எப்போதும் பெண்கள் பக்கம் தான் ஆதரவு. விசு பொருட்படுத்தமாட்டான். கவுரிசங்கருக்கு வெறுத்துப் போகும்.

    கெடுபிடியான ஒரு பெண்ணாக அண்ணனுக்கு வந்து இவர்கள் வாலை ஒட்ட நறுக்க வேண்டும் என்பது கவுரியின் ஆசை. பணத்தளவில் சுதந்திரமாக இருக்கும் பெண்ணுக்குத்தான் அந்த தைரியம் வரும்.

    தரகர் வந்து விட்டார் பதினோரு மணிக்கு.

    நீங்க கேட்ட மாதிரி ஒரு பொண்ணு இருக்கு. அதோட ஜாதகம் ரொம்ப அம்சமா பொருந்தியிருக்கு விசுவுக்கு

    வேலைக்குப் போறாளா?

    வேண்டாம்னு சொல்லிட்டீங்களே. எஸ்.எஸ்.எல்.சி. படிச்ச பொண்ணு. நல்ல குடும்பம்

    வயசு?

    இருபத்தி ஆறு

    ஒன்பது வயசு வித்தியாசம் அதிகமோ? அப்பா கேட்டார்.

    உங்களுக்கும் எனக்கும் பன்னண்டு வயசு வித்தியாசம். குடும்பம் நடக்கலையா?

    இன்னிக்கே பொண்ணு பாக்க வர்றீங்களா?

    ரெடியா இருக்கம்

    இந்தாங்க விலாசம். சரியா சாயங்காலம் நாலு மணிக்கு வந்துடுங்க. நான் அங்கே இருக்கேன்

    ஒரே பொண்ணா?

    இல்ல மொத்தம் மூணு பொண்ணு. இது ரெண்டாவது

    சரி நாங்க வர்றம்

    தரகர் போய் விட்டார்.

    அப்பா அம்மா உள்ளே போய் விட –

    கவுரிசங்கர் விசுவை நெருங்கினான்.

    இந்தப் பொண்ணை வேண்டாம்னு சொல்லிடு

    ஏன் கவுரி?

    நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோ. வர்றவளும் நாலு காசு சம்பாதிச்சா நீ சவுக்கியமா இருக்கலாம். வேலைக்குப் போற பொண்ணு வேணும்னு கேக்கற தகுதி உனக்கிருக்கு. ப்ளீஸ்

    இல்லைடா! அப்பா அம்மா சொல்றதுலேயும் நியாயம் இருக்கு. வயசான காலத்துல அவங்க கஷ்டப்பட வேண்டாம்

    அண்ணா! ஏன் நீ புரிஞ்சுக்கமாட்டேங்கற? தன் சுயநலத்துக்காக உன்னை அவங்க பலி போடறது தெரியலையா?

    விசு கேட்கவில்லை.

    நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். அப்பா அம்மா இஷ்டத்துக்கு வரதட்சணையெல்லாம் கேட்டா ஒப்புக்காதே! வரப்போறவகிட்ட உன் மரியாதை சரிஞ்சிடும்

    சரி கவுரி

    அம்மா உள்ளே வந்தாள்..

    கவுரி! நீயும் வாடா.

    நான் எதுக்கு?

    மூணு பேரா போகக்கூடாது. அதனால

    ஓ... ஒப்புக்கு சப்பானியா?

    புரிஞ்சா சரி

    அம்மாவை எரிச்சலுடன் பார்த்தான் கவுரி.

    2

    "பட்டுப் புடவையா எடுத்துக் கட்டிக்கோடி வசுந்தரா"

    வேண்டாம்மா. இது போதும்

    காட்டனா கட்டிக்கப்போற? வேலைக்காரி மாதிரி இருப்பே

    இல்லைம்மா சிம்பிளா இருக்கும்

    அவ இஷ்டத்துக்கு விடேண்டி

    அப்பா கூச்சலிட்டார்.

    பொடவை, நகை, அலங்காரம் இதுல எல்லாம் ஆசை உள்ள பொண்ணைத்தான் இந்த உலகம் பார்த்திருக்கு. நீ என்னடீ சன்னியாசினி மாதிரி

    வரப்போறவன் குடுத்து வச்சவன் சொல்லிவிட்டு தங்கை மைதிலி சிரித்தாள்.

    அக்கா... உன் சங்கீத ரசனையை வரப்போறவர் ஏத்துப்பாரா?

    எப்படியும் பாடச் சொல்லுவாங்க. வசுந்தரா ஒரு பாட்டுப் பாடினா சொக்கிப் போக மாட்டாங்களா?

    மாலை நாலு மணிக்கு வாசலில் ஆட்டோ வந்து நின்றது.

    இறங்கினார்கள்.

    தரகர் ஏற்கனவே வந்திருந்தார்.

    அப்பா எல்லோரையும் வரவேற்று உபசரித்தார்.

    சம்பிரதாயப்

    Enjoying the preview?
    Page 1 of 1