Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Su(sa)gavasam
Su(sa)gavasam
Su(sa)gavasam
Ebook104 pages55 minutes

Su(sa)gavasam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466763
Su(sa)gavasam

Read more from Devibala

Related to Su(sa)gavasam

Related ebooks

Related categories

Reviews for Su(sa)gavasam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Su(sa)gavasam - Devibala

    1

    முன்குறிப்பு:

    சகவாசம் சரியாக அமைந்தால், வாழ்க்கையில் என்றுமே சுகவாசம்தான்! பல சமயம், பல பேருக்கு அது அமைவதில்லை. இதை மையமாகக் கொண்ட பதட்டமான, பரபரப்பான சென்டிமென்டான நாவல் இது!

    கீர்த்தி

    நம் கதாநாயகி. அழகான ஒல்லியான, நல்ல கலருடன், பெரிய கண்களுடன், இனிமையான குரலுடன் கூடிய வசீகரமான மங்கை கீர்த்தி!

    எம்.காம். படிப்பு, புத்திசாலி, சுறுசுறுப்பானவள்..

    எதுவும் தெரியாது என்று சொல்வதை விரும்பாத பெண்! முடியாதது வாழ்வில் எதுவும் இல்லை, சாதிக்க வேண்டும்! இலக்கை அடையப் போராட வேண்டும் என்று நினைக்கும் பெண்! இதெல்லாம் ப்ளஸ்.

    முன்கோபம், நினைத்ததை நடத்தியே தீர வேண்டும் என்ற பிடிவாதம். கொஞ்சமும் விட்டுக் கொடுக்காத தன்மை. இதெல்லாம் மைனஸ்!

    இதுதான் கீர்த்தியின் காரெக்டர்.

    மிடில் க்ளாஸ் குடும்பத்தில் பிறந்த பெண்!

    அப்பா - தனியாரில் உத்தியோகம். கீர்த்தியின் 15வது வயதில் பத்தாவது படிக்கும் போது அம்மா கேன்சரில் மரணித்தாள்.

    அது மிகப் பெரிய இழப்பு!

    அம்மாவுக்கு கேன்சர் வந்து 2 வருடங்களாகப் போராடி, சகல சிகிச்சைகளையும் பார்த்து, ஏராளமாக செலவழித்து, அம்மா படும் நரக வேதனை - அப்பாவின் தவிப்பு - பணச்செலவு எல்லாம் உச்சத்தை எட்ட இப்படி இருப்பதைவிட, அம்மா சாவதே மேல் என கீர்த்தியே ஒரு நாள் சொல்லி விட்டாள்.

    அப்பா, தங்கை ப்ரீத்தி உட்பட எல்லாருக்கும் இதுதான் கருத்து! ஆனால், யாரும் சொல்லமாட்டார்கள். கீர்த்தி மனதில் பட்டதை, பட்டென சொல்லி விடுவாள். அது யாரிடம் எந்தவிதமான பாதிப்பை உண்டாக்கும் என யோசிக்க மாட்டாள்! இங்கே உண்மையாக இருப்பதைவிட நடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவருக்கு முன்பு வேஷம் கட்டி ஆட வேண்டும். அப்படிப்பட்டவருக்குத்தான் மரியாதை!

    மனித வாழ்வே அரிதாரம் பூசாத நடிப்புதான்! பொய்தான் இங்கே அதிகமாக விற்கிறது!

    கீர்த்திக்கும் அது தெரியும். ஆனால், பொருட்படுத்தமாட்டாள்.

    அம்மா பற்றிய அவளது கருத்து, அதுவும் பதினைந்து வயதில் பெரிய புயலைக் கிளப்பியது!

    ‘என்ன ஒரு கொழுப்பு பாத்தியா? கமலா - இந்தப் பெண்ணை ஆளாக்க என்ன பாடுபட்டா! மூத்த மகள்னு உயிரையே வச்சிருந்தாளே! இவளுக்காக பட்டினி கிடந்து, தூக்கம் முழிச்சு, இவளை வளர்க்க அவ பட்ட பாட்டுலதான் கேன்சரே வந்திருக்கும். இதுபாரு! அவள் சாகணும்னு சாபம் விடுது!’

    அம்மாவின் அக்கா - பெரியம்மா பேச, கீர்த்தி அந்த வயதிலும் ஆவேசமாகி விட்டாள்.

    போதும் பெரியம்மா! எங்கம்மா கஷ்டப்பட்ட காலத்துல - ஒரு முறை பணப் பிரச்சனை பெரிசாகி, உன் வீட்டுப்படியேறி வந்து கடன் கேட்டப்ப, நீ கொஞ்சமா பேசினே! எப்படியெல்லாம் எங்கம்மாவை கேவலப்படுத்தினே! இப்ப தங்கைப் பாசம் பொங்கி வழியுதா? இனி அம்மா பிழைச்சு வற போறதில்லை. இந்த நரக வேதனை வேண்டாம்னு ஒரு மகள் சொன்னா, அது தப்பா! இப்பல்லாம் சாவு வீட்ல, ஆஸ்பத்திரிலதான் பல நடிகையர் திலகங்கள் ஜனிக்கறாங்க! என்னா உலக மகா நடிப்புடா சாமி?

    உடனே மற்ற உறவுக்காரர்கள் சண்டைக்குவர, கீர்த்தி அயர்ந்த பாடில்லை.

    அப்பா வந்து கீர்த்தியை அழைத்தார்.

    இப்படி வாம்மா! போதும்! இவங்ககிட்ட எதிர்வாதம் பண்ணி யாருக்கு லாபம்?

    எல்லாரும் வேஷம் போடறாங்கப்பா!

    "அது எனக்கும் தெரியுது கீர்த்தி! நீ பேசற எல்லாமே நிஜம்!

    ஆனா அதுக்கான இடம் இது இல்லை! கமலா புழுவா துடிக்கறா! வாங்காத கடன் பாக்கியில்லை வலி நமக்குத்தான்மா! பாக்கற சாக்குல இங்கே வந்து மாநாடு நடத்திட்டுப் போற வெக்கம் கெட்ட உறவுகள்! அப்பாவுக்காக விட்ரும்மா!"

    இது நடந்து நாலே நாட்களில் கமலா இறந்தாள். காரியம் ஆனது.

    அம்மாவின் உறவுகள் பெரியம்மா, சித்தி, மாமா ஒரு ரகம் என்றால் அப்பாவின் உடன்பிறப்புகள் அத்தை, சித்தப்பா, அதைவிட மோசம்.

    ஆரம்பக் காலத்தில் அம்மாவை கொடுமைப்படுத்திய புகுந்த வீட்டு பிசாசுகள்! இப்போது வடிக்கும் நீலிக் கண்ணீர்!

    காரியம் முடிந்ததும், பாவம் பரமு...! பொண்டாட்டி போயாச்சு! ரெண்டும் பொண்ணுங்க! அதிலும் இந்த வாயாடி கீர்த்தி, இவனை வாசல்ல கொண்டு வந்து வைக்கப் போறா!

    பதினாறாவது நாள் காரியம் முடிந்ததும் முதல் விமர்சனம்!

    அப்படியா! அப்பா வாசலுக்கு வந்ததும், நீங்க கட்டி வச்ச மாளிகைக்கு அவரைக் கூட்டிட்டுப் போய் மலர் மஞ்சத்துல படுக்க வைங்க! போயிருங்க! இல்லைனா, ஒவ்வொருத்தரோட ஊழலையும் நான் பேசத் தொடங்கினா, அசிங்கமாகும்!

    என்னடீ பேசுவ? சித்தப்பா பாய,

    சித்தி! இவரோட வப்பாட்டியை நீ பாக்கலியா? பூந்தமல்லியில துர்காபவன் பின்னால...!

    சித்தப்பா தெறித்து ஓட, சித்தி தலைவிரிகோலமாக அவரைத் துரத்த, அம்மாவின் சொந்தமொன்று அட்டகாசமாக சிரிக்க,

    சிரிக்காதே அத்தே! உன் பொண்ணு கல்யாணம் செஞ்சுக்காம, போன மாசம் கருக்கலைப்பு செஞ்சுகிட்டது எங்களுக்கும் தெரியும், கூட இருந்த ஆயா அடுத்த தெருதான்!

    அத்தை முகம் வெளிறி, உள்ளே போய் விட்டாள்.

    இதுதான் கீர்த்தி.

    அவளை விட நாலு வயது இளையவள் ப்ரீத்தி!

    அப்பா கஷ்டப்பட்டு பெண்களை ஒரு மாதிரி கண்ணியமாக வளர்க்கத் தொடங்கினார்!

    சொந்தக்காரர்கள் யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. கமலா மேல உயிரை வைத்ததாகவும், அவள் போனதும் அந்த உயிரே போய் விட்டதாக, நாடகமாடி ஓட்டம் பிடித்தார்கள்.

    கீர்த்தி பிரமாதமாக படித்து, ஸ்காலர்ஷிப்பில் எம்.காம் வரை முடித்து விட்டாள். உடனே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையும் கிடைத்து விட்டது.

    அதனால் தங்கை ப்ரீத்தியை படிக்க வைப்பது சுலபமானது! வாடகை வீடுதான்! எண்ணூறு சதுர அடி ப்ளாட்! திருவல்லிக்கேணியில் மாடுகள் அதிகமாக நடமாடும் நெரிசலான ஒரு ரோடு! வாகனங்கள் உள்ளே வர முடியாது. அருகில் கடற்கரை, பார்த்தசாரதி ஆலயம்.

    கீர்த்தி வேலைக்கு வந்து ஒரு வருடத்தில் அப்பாவின் சகல கடன்களையும்

    Enjoying the preview?
    Page 1 of 1