Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Charumma
Charumma
Charumma
Ebook276 pages2 hours

Charumma

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466916
Charumma

Read more from Devibala

Related to Charumma

Related ebooks

Related categories

Reviews for Charumma

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Charumma - Devibala

    1

    "மூணாவது குழந்தை வேண்டாம்னு சொன்னேன்."

    எதுக்கு?

    இருக்கற ரெண்டையும் வளர்க்கறதே கஷ்டம். நாக்குத் தள்ளிப் போகுது!

    சரிடீ! இப்ப வயித்துல வந்தாச்சு. என்ன பண்றது?

    கலைச்சிரலாம்மா. அதைச் சொல்லத்தான் காலைல ஓடி வந்தேன் இங்கே!

    பாலாஜிகிட்டச் சொன்னியா?

    எதுக்குச் சொல்லணும்?

    என்னடி இந்து பேசற? அவன்கிட்டச் சம்மதம் கேக்க வேண்டாமா? வரவர உனக்குத் திமிர் அதிகமாகுது!

    வாயை மூடும்மா! இது உருவாகக்கூடாதுனு நான் சொன்னப்ப கேக்கலை. ஆம்பளைக்கு என்னா? அனுபவிக்கறது நம்ம வர்க்கம் தானே!

    சிவசிவா! நீ பெத்தவகிட்ட பேசறமாதிரியா இருக்கு? உங்கப்பா சாயங்காலம் வரட்டும். தீர்மானிக்கலாம்! மூத்தது ரெண்டையும் ஸ்கூல்ல விட்டுட்டு வந்தியாக்கும்?

    ம்!

    ஏண்டீ இந்து, உன் கண்ணுக்கடில. கருவளையம் விழுந்திருக்கு?

    இந்து பேசவில்லை.

    எங்கோ பார்த்தபடி நின்றாள்.

    இந்து... நீ சந்தோஷமாத்தானே இருக்கே?

    சடாரெனத் திரும்பினாள்.

    வயித்துல இருக்கற இதுவும் பொறந்த பின்னால நிதானமாக் கேளு! ஏம்மா... சந்தோஷம்னா உன் அகராதில என்னம்மா அர்த்தம்?

    அம்மா கொஞ்சம் கவலையுடன் அவளைப் பார்த்தாள்.

    பெருமூச்சு விட்டாள்.

    உன் மாமனார்கிட்ட சொல்லிட்டுத்தானே வந்தே?

    எல்லாத்துக்கும் அனுமதி வாங்கிட்டு நிக்கவா முடியும்? வந்துட்டேன்!

    சரி சரி சாப்பிட வா! அப்பா வர்றவரைக்கும் இருப்பியோ?

    தெரியலை! குழந்தைங்க ரெண்டும் இருக்கே அங்கே!

    சரி! நான் அப்பாக்கிட்டப் பேசிக்கறேன். நீ மூணு மணிக்குப் புறப்பட்டுப் போயிரு!

    இதை உன்கிட்டக் கேக்கவா நான் இங்கே வந்தேன்? புறப்படு உடனே! நம்ம லேடி டாக்டரைப் பார்த்து இதைக் கலைக்கற வழியைத் தேடணும்!

    இந்து நீ முடிவே பண்ணிட்டியா?

    நான் தப்பான வழில சுமக்கற குழந்தையா இருந்தா கலைக்கப் பயப்படணும். இது சட்டபூர்வமானது. மூணாவதைக் கலைச்சா, அரசாங்கமே சந்தோஷப்படும்! புறப்படு!

    இல்லைடி இந்து! பாலாஜி அனுமதி இல்லாம நான் இதுக்கு சம்மதிக்கமாட்டேன்!

    வேண்டாம். எனக்கு லேடி டாக்டரைத் தெரியும். நான் தனியாப் பார்த்துக்கறேன். உன்னைத் தேடி வந்தேன் பாரு! என்னைச் செருப்பால அடிக்கணும்!

    எழுந்துவிட்டாள் இந்து.

    வாசலை நெருங்கினாள்.

    ஆட்டோ வந்து நின்றது.

    பாலாஜி இறங்கி அவசரமாக உள்ளே வந்தான்.

    அவனிடம் ஒரு படபடப்பு இருந்தது.

    வாப்பா பாலாஜி!

    அம்மா அழைத்தாள்.

    நம்ம சந்துருமேல ஸ்கூல்ல ஏதோ ஒரு சைக்கிள் மோதியிருக்காம்!

    அய்யோ! இந்து அலறினாள்.

    காயத்தோட வீட்டுக்குத் தூக்கிட்டு வந்திருக்காங்க. அப்பா மட்டும் இருந்திருக்கார். அவசரமா அவனை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்கார். எனக்குப் போன் பண்ணினார் ஆபீசுக்கு!

    கடவுளே! அடி பலமா?

    சைக்கிள் மோதிக் கீழே விழுந்தப்ப, முழங்கால் ஒரு கல்லுல மோதியிருக்கு. எலும்பு முறிவு. இப்ப ஆஸ்பத்திரியில் இருக்கான். நீ இங்கேதான் இருப்பேனு ஓடி வர்றன். சீக்கிரம் வா!

    அம்மா நான் வர்றேன்!

    நானும் வர்றேண்டி இந்து!

    கதவைப் பூட்டிக்கொண்டு அம்மா புறப்பட்டாள்.

    அதே ஆட்டோவில் ஆஸ்பத்திரியில் போய் இறங்கினார்கள்.

    கட்டிலில் காலை ஒரு மாதிரி தூக்கி நிறுத்தி கட்டுப் போட்டிருந்தார்கள்.

    ஆறு வயது சிறுவன் சந்துரு! லேசான மயக்கம். பாலாஜியின் அப்பா அருகில் வந்தார்.

    பாலாஜி!

    என்னப்பா?

    கையில் பணம் இருக்காப்பா?

    என்னிக்குப்பா கையில் பணத்தை வச்சிட்டு பிரச்சனைகளைச் சந்திச்சிருக்கோம்? கடன் தான் வாங்கணும். போறேன்! யார்கிட்ட வாங்காம விட்டிருக்கேன்னு யோசிக்கறேன்!

    தூரத்தில் இந்துவின் அம்மா நின்றாள். அவள் காதில் இது விழுந்தது.

    இந்து, பாலாஜியின் சொந்தத் தாய்மாமனின் மகள் தான்!

    அம்மா போய் அந்தக் காரிடாரின் கோடியில் இருந்த பூத்துக்குள் நுழைந்து ரிசீவரை எடுத்தாள்.

    ஏற்கனவே வாங்கின கடனுக்கு வட்டி கட்டத் தெரியாம முழி பிதுங்குது. இப்ப புதுக்கடன்!

    குழந்தையை விட்டுவிட்டு இந்து வந்தாள்.

    என்னங்க!

    சொல்லு இந்து!

    ஜெனரல் வார்ட்ல இருக்கான் சந்துரு! தனி ரூம் தரச் சொல்லுங்க டாக்டரை!

    தனி ரூமுக்கு வாடகை அதிகம் இந்து!

    குரலைத் தழைத்தபடி சொன்னான் பாலாஜி.

    இருக்கட்டுமே! குழந்தைக்கு வசதி வேண்டாமா? மாத்தச் சொல்லுங்க!

    பாலாஜி பேசவில்லை.

    எங்கம்மா போன் பண்றாங்க. அப்பா வருவார், அவரைப் பணம் குடுக்கச் சொல்றேன்!

    பாலாஜியின் முகம் சுருங்கியது.

    மூத்ததைப் பராமரிக்கவே மூச்சு முட்டுது. இந்த அழகுல மூணாவதும் தேவைதான்!

    ஓர் ஓரமாப் போய் உட்கார்ந்து கொண்டாள்.

    நான் வெளில போய் பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன்பா! பாலாஜி எழுந்தான்.

    இந்துவின் அம்மா வந்துவிட்டாள்.

    பாலா... உங்க மாமா இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவார். உன்னை இருக்கச் சொன்னார்!

    நிமிர்ந்து அத்தையைப் பார்த்தான்.

    சரி அத்தே!

    மாமா அரைமணி நேரத்தில் வந்துவிட்டார். அவர் தலை கண்டதும் எழுந்து ஓடினாள் இந்து.

    என்னம்மா?

    அழத் தொடங்கினாள்.

    ஏம்மா... எதுக்கு அழற? மனுஷ வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் தானே! குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை. வா!

    அவரோடு நடந்தாள்.

    பாலாஜியும் மாமா அருகில் வந்தான்.

    அவர் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தார்.

    அப்பா... ஸ்பெஷல் வார்டுக்கு மாத்திருங்க... தனி ரூம் வேணும். இந்த நர்ஸிங் ஹோமே சரியில்லை.

    சரிம்மா!

    காரிடாரின் கோடிக்கு வந்தவர், பர்ஸ் திறந்து பணத்தை எடுத்தார்.

    பாலாஜி!

    என்ன, மாமா?

    இதுல ரெண்டாயிரம் ரூபா இருக்கு. ஆஸ்பத்திரி செலவுக்கு வச்சுக்கோ!

    வேண்டாம் மாமா! நான் சமாளிச்சுக்கறேன்!

    எங்கிட்ட குடுங்கப்பா. இந்த வெட்டி ஜம்பத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. வெளிய பணம் தர எவன் காத்துக்கிடக்கான்? அப்படியே தந்தாலும் வட்டியோட திருப்பித் தரவேண்டாமா?

    மாமாவுக்கும் திருப்பித் தரவேண்டாமா?

    கிழிச்சோம். கல்யாணமாகி ஏழு வருஷமாச்சு. அப்பாகிட்ட வாங்கின பணத்தை என்னிக்குத் திருப்பித் தந்திருக்கோம்?

    பாலாஜி சொல்லடி வாங்கிச் சுருங்கிப்போனான்.

    அத்தை முகம் சுளித்தாள்.

    இந்து... பேசாம இருக்கமாட்டே?

    பாலாஜி வாசல் வரை மாமாவுடன் வந்தான்.

    மாமா!

    சொல்லு பாலா!

    கடனோ, உடனோ வாங்கி என்னால முடிஞ்ச மட்டும் நானும் குடும்பத்தை நடத்திட்டுத்தான் வர்றேன். சொற்ப சம்பளம். நான் என்ன மாமா செய்ய முடியும்?

    உன்னை நானோ அத்தையோ ஒண்ணும் சொல்லலியே பாலா!

    இல்லை மாமா! உங்ககிட்ட விரும்பி உதவிகள் ஒரு நாளும் நான் வாங்கிக்கலை. சந்தர்ப்பம் அப்படி இருக்கு. இந்து அதைக் குத்திக்காட்டும் போது மனசு ரணமாகுது மாமா!

    மாமா பெருமூச்சு விட்டார்.

    அவன் தோளில் தட்டினார்.

    நான் வர்றேன் பாலா!

    சரி மாமா!

    பாலாஜி திரும்பி வருவதற்குள் குழந்தையைத் தனி அறைக்கு மாற்றிவிட்டாள் இந்து.

    இங்க வாங்க சாத்துக்குடி, ஹார்லிக்ஸ் எல்லாம் வாங்கிட்டு வாங்க. அப்பாதான் நிறையப் பணம் தந்துட்டுப் போயிருக்காரே!

    சரி இந்து!

    பணத்தை வாங்கிக்கொண்டு பாலாஜி! வெளியேற,

    இந்து!

    என்னம்மா?

    பாலா... உன் புருஷன்! அவனை அளவுக்கு மீறி நீ அவமானப்படுத்தறே! சரியில்லை!

    ஏம்மா... குழந்தையோட வசதியைப் பார்க்கணும்னு நான் சொன்னா தப்பாம்மா?

    என்னடீ பண்ண முடியும்? சொல்ப சம்பளம்தான் அவனுக்கு. தெரிஞ்சுதானே கட்டிக்கிட்டே?

    நான் எங்கே கட்டிக்கிட்டேன்? அப்பா சின்ன வயசுல அத்தைக்கு வாக்கு தந்திருந்தாராம். வெங்காயம் புடிச்சுக் கட்டி வச்சீங்க! சரி படிப்படியா முன்னேறுவார்னு அப்பாவும் சொல்ல நான் நம்பினேன். ஏழு வருஷமாச்சு! இன்னும் இருந்த இடத்தை விட்டு புறப்பட்ட பாடில்லை. இவர் ஓடி, ஜெயிச்சு... எனக்கு நம்பிக்கை இல்லை!

    நீ அவன்கிட்ட அன்பா இரு! ஏற்கனவே பயந்த சுபாவம்! மனைவியாகப்பட்டவள் அனுசரிச்சு நடந்தாத்தான் புருஷனால ஜெயிக்க முடியும் எதுலயும்!

    பாலாஜி சாத்துக்குடி, ஹார்லிக்ஸ் சகிதம் வந்தான்.

    நான் போய் லீவு எழுதிக் குடுத்துட்டு வர்றேன்!

    எதுக்கு? நானும் அம்மாவும் பார்த்துக்கறம். நீங்க பாட்டுக்கு நாளைலேருந்து ஆபீஸ் போங்க. புரியுதா!

    இந்து நான்...!

    நீங்க இங்கே இருந்தா, உடனடியா பையன் எழுந்து நடந்துரப் போறானா?

    அடுத்த அடி.

    பாலாஜி மௌனமாக வெளியே வந்துவிட்டான்.

    அப்பா பேசாமல் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்.

    அப்பா போகலாமா?

    இங்கே இருக்க வேண்டாமா பாலா?

    இந்துவும், அத்தையும் இருக்காங்களே! நீயும், நானும் எதுக்கு?

    சரி!

    பாலாஜியைவிட அப்பா இன்னும் பரமசாது.

    அதிர்ந்து பேசக்கூட மாட்டார்.

    பாலாஜி ஒரே மகன்...

    அவனை வளர்க்க அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல! அவரும் சொற்ப சம்பளக்காரர் தான்.

    பாலாஜிக்கு பதினோரு வயதில் அம்மா சாவதற்கு முன்னால் அப்பாவிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தாள்.

    பாலாஜி வளர்ந்து பெரியவன் ஆனதும், தம்பி பொண்ணு இந்துவைத்தான் அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்.

    அப்பா தலையசைத்தார்.

    குழந்தைப் பருவத்தில் ஆசைகளும், முடிவுகளும், சுலபம். ஆனால் வளரும்போதுதானே சங்கடம் புரிகிறது!

    இந்துவும் அவர்களுக்கு ஒரே பெண்.

    அவள் அப்பாவும் அப்படி ஒன்றும் பெரும் பணக்காரர் அல்ல! இருந்தாலும் ஓரளவு கண்ணியமான வாழ்க்கை. அக்காமேல் உயிரையே வைத்திருந்தவர். அவளுக்காக அவ்வப்போது நிறையச் செய்யும் மனிதர்.

    அதனால தன் பிள்ளைக்கும் மாமன் ஆதரவு இருக்கட்டும் என்று அம்மா நினைத்தாள்.

    ஆனால் தம்பி மகள் தன்னிச்சையான பெண்... யாருக்கும் அடங்கமாட்டாள் என்று அவளது ஏழாவது வயதிலேயே அம்மாவுக்குத் தெரியுமா என்ன?

    இப்போது பாலாஜி பட்டுக்கொண்டு முழிக்கிறான்.

    எலியும் பூனையுமாக இருந்து இரண்டு குழந்தைகள் பிறந்ததே ஆச்சர்யம்.

    மூன்றாவது வேறு கர்ப்பத்தில்!

    தாம்பத்யத்தில் மனது ஒன்று சேர்கிறதோ இல்லையோ, உடம்பு சேர்ந்துவிடுகிறது!

    ஆசைக்கு வெட்கமில்லை!

    பாலாஜி வீடு வந்துவிட்டான்.

    குழந்தை சத்யா அழுதுகொண்டிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து யாரோ கொண்டுவந்து அப்போதுதான் பக்கத்து வீட்டில் விட்டிருந்தார்கள்.

    பாலாஜி போய் எடுத்து சமாதானப்படுத்தினான்.

    அம்மா எங்கேப்பா?

    பாட்டி வீட்டுக்குப் போயிருக்காங்க. வருவாங்க!

    அண்ணா?

    அவனும் வருவான்!

    திரும்பவும் அழத் தொடங்கியது.

    சரி, வா! கடைல போய் உனக்கு பிஸ்கட் வாங்கித் தர்றேன்.

    அதைத் தூக்கிக்கொண்டு பிரதான சாலைக்கு வந்தான் பாலா.

    ஒரு பெட்டிக் கடையிலிருந்து பிஸ்கட் வாங்கினான். திரும்பி சாலையைக் கடக்க முயல, ஓர் ஆட்டோ அருகில் வந்து நின்றது.

    பாலா! பெண் குரல் கேட்டுத் திரும்பினான்.

    ஆட்டோவிலிருந்து இறங்கிய அவளைப் பார்த்ததும் உடம்பு முழுக்க சந்தோஷ அலைகள் குபீரென எழும்பின.

    சாரு நீயா?

    அவனைப் பரவசத்துடன் நெருங்கினாள் சாரு!

    2

    "என்ன பாலா அப்படிப் பாக்கறே? என்னை மறந்து போச்சா உனக்கு?"

    அருகில் வந்துவிட்டாள் சாரு.

    நீ... நீதானா சாரு? யப்பாடா! உன்னைப் பார்த்து ஏழு வருஷங்கள் ஆயாச்சு!

    இது உன் மகளா பாலா?

    ஆமாம் சாரு!

    உன்னையே உரிச்சு வச்சிருக்கு. இந்த ஒரு குழந்தைதானா?

    இல்லை சாரு. ஆறு வயசுல ஒரு பையன் இருக்கான்!

    வீடு பக்கத்துலதானா பாலா?

    அவன் பேசவில்லை!

    ம்! இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாச்சே! பழைய பாலாவை இனிப் பார்க்க முடியுமா?

    அவனுக்கு சுருக்கென்றது.

    உன் விலாசம் குடு சாரு! உனக்கு எத்தனை குழந்தைகள்?

    ஜோசியரைத்தான் கேக்கணும்!

    புரியலை!

    கல்யாணம் ஆனா எத்தனை குழந்தைகள் பிறக்கும்னு ஜோசியராலச் சொல்ல முடியாதா பாலா?

    சாரு. நீ இன்னும் கல்யாணமே செஞ்சுக்கலையா?

    இல்லை பாலா! இதுவரைக்கும் நடக்கலை. இனிமேலும் நடக்க வேண்டாம்!

    குற்றவாளி நான்!

    தோள்ல உன் குழந்தை இருக்கு. இது நடுரோடு! நான் புறப்படட்டா பாலா?

    உன் அட்ரஸ் தரலை இன்னும்!

    அவள் கைப்பை திறந்து ஒரு விசிட்டிங் கார்ட் எடுத்துத் தந்தாள்.

    நான் வர்றேன் பாலா! அதுல போன் நம்பர் இருக்கு. கான்டாக்ட் பண்ணு!

    ஆட்டோவில் ஏறிவிட்டாள்.

    அது புறப்பட்டுப் போயேவிட்டது.

    அது புள்ளியாகும்வரை பார்த்துக்கொண்டு நின்றான் பாலா.

    விசிட்டிங் கார்டைப் பார்த்தான்.

    ‘சாருசித்ரா!

    பர்சனல் ஆபீசர்’

    நீல எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு, அவளது அலுவலக, வீட்டு முகவரிகள், தொலைபேசி எண்களுடன்.

    ‘நீ இந்த அளவுக்கு உயர்ந்துவிட்டாயா சாரு?’

    ‘உன்னை விட்டு நான் விலகியதால்தான் உனக்கு இந்த உயரமா?’

    ‘ஆம்! நான் ஒரு துக்கிரி! நான் இருக்கும் இடத்தில் தரித்திரம்தான் இருக்கும்!’

    ‘என்னோடு இணைந்தவர்களும் அதை அனுபவிக்கத்தான் வேண்டும்.’

    அப்பா போகலாமா?

    ம்! வாடா கண்ணா!.

    யாரந்த ஆன்ட்டி?

    அப்பாவோட சிநேகிதி!

    ஸ்நேகிதின்னா?

    ஃப்ரண்ட்! உனக்கு ஸ்கூல்ல ஃப்ரண்ட்ஸ் இருக்கற மாதிரி இது அப்பாவோட ஃப்ரண்ட்!

    அந்த ஆன்ட்டியோட கண்கள் அழகா இருக்குப்பா... பெரிசு... பெரிசா இருக்கு!

    குழந்தையை ஆச்சர்யத்துடன் பார்த்தான் பாலா.

    ‘உனக்கு மட்டும் பெரிசு பெரிசா இருக்கே ரெண்டு...’

    ‘ய்யோ முடிச்சிடு பாலா வாக்கியத்தை!’

    ‘கண்கள்னு சொல்லத்தானே போறேன்! என்ன அவசரம்?’

    ‘கஷ்டம் பாலா உன்னோட! தமிழ் எப்பவுமே உனக்குத் தகராறுதான். ஜாக்கிரதையா பேசலைனா கவுத்துடும்.’

    ‘உன் கண்கள் சமுத்ரம் மாதிரி இருக்கு சாரு! சேர்ந்த மாதிரி மூணு நிமிஷம் என்னால பார்க்க முடியல!’

    கலைந்தான்.

    வாம்மா போகலாம்!

    வீட்டுக்குள் நுழைந்தான்.

    அம்மா எப்பப்பா வருவாங்க?

    அண்ணாவுக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரில இருக்கான். அம்மாகூட இருக்கணும். நீ வீட்ல அப்பாகிட்ட. சமத்தா இருப்பியாம்!

    பிஸ்கட்டுகளைத் தின்று முடித்திருந்தது.

    அழத் தொடங்கியது.

    அம்மாகிட்டப் போகணும் எனக்கு!

    இன்னிக்கு ஒருநாள் சமாளிடா!

    இல்லை. இப்பவே போகணும் எனக்கு. கொண்டு போய் விடு! கை, கால்களை உதைத்துக்கொண்டு தரையில் புரண்டு அழத் தொடங்கியது.

    பாலா தவித்தான்.

    பாலா இங்க வாப்பா?

    என்னப்பா?

    கொண்டுபோய் விட்ருடா! அழுது அழுது குழந்தைக்கு ஜுரம் வந்துட்டா?

    ஆஸ்பத்திரில இவளை எப்படீப்பா?

    அழுது அழுது இருமத் தொடங்கியது.

    அடுத்தபடியாக வாந்தி எடுக்கும்.

    வேண்டாம்.

    சத்யா! அழக்கூடாது! புறப்படு! அம்மாகிட்டப் போகலாம்!

    அழுகை சுவிட்ச் போட்டாற்போல நின்றது.

    அதற்கு வேறு உடைமாற்றி முகத்தைத் துடைத்து, பவுடர் போட்டு பொட்டு வைத்தான்.

    அப்பா நீங்க காலைல சாப்பிட்டதுதானே?

    இருக்கட்டும் ராஜா!

    "நான் இவளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வரும் போது

    Enjoying the preview?
    Page 1 of 1