Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathal Varam
Kathal Varam
Kathal Varam
Ebook109 pages39 minutes

Kathal Varam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466695
Kathal Varam

Read more from Devibala

Related to Kathal Varam

Related ebooks

Related categories

Reviews for Kathal Varam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathal Varam - Devibala

    1

    ஓவியப் பலகையை அழகாக அமைத்துக்கொண்டான் கார்த்திக்! தூரிகையை கையில் எடுத்தான். வண்ணங்களைக் குழைத்தான். மனசுக்குள் பளிச்சென அந்தப் பெண்ணின் முகம் வந்து எட்டிப் பார்த்தது.

    அந்த பளீர் சிரிப்பும், முகத்தை ஆட்டி ஆட்டிப் பேசும்போதும் அசையும் காதணிகளும், முன் நெற்றியில் விழும் தலைமுடியும், கடல் போன்ற பெரிய கண்களும்... அப்பப்பா... இப்படி ஒரு அழகை கார்த்திக் பார்த்ததில்லை!

    பெட்ரோல் போட காரை கார்த்திக் நிறுத்தியபோதுதான் முதன்முதலில் அவளைப் பார்த்தான்.

    ஒரு வயதான மனிதரின் பின்னால் ஸ்கூட்டரில் உட்கார்ந்திருந்தாள். இவன் இறங்கி, பெட்ரோல் போடச் சொல்லிவிட்டு திரும்பியபோது நிலவு உதித்ததைப் போல தெரிந்தாள்.

    சார்! பூஜ்யம் பாத்துக்குங்க!

    பையன் சொல்ல, பார்த்துவிட்டுத் திரும்ப ஸ்கூட்டர் புறப்பட்டு விட்டது.

    பாதி பெட்ரோல் போடும்போது நிறுத்திவிட்டுப் பின்தொடர முடியாது!

    அவள் போக்குவரத்தில் கலந்துவிட்டாள்.

    ஒரு சில நொடிகள் பார்ப்பதற்குள் நெஞ்சுக்குள் அந்த உருவம் ஆழமாகப் பதிந்துவிட்டது.

    மூன்று நாட்கள் அது பாதிப்பைத் தந்தது. நாலாவது நாள் ஏதோ வேலையில் மறந்துபோய்விட்டான்!

    வாரக் கடைசியில், வாசனைப் பொருட்கள், ஓவியத்துக்கான சில உபகரணங்களை வாங்க, அந்த நவீன வணிக வளாகத்து வாசலில் காரை செருகிவிட்டு உள்ளே புகுந்தான்!

    நிதானமாக வேடிக்கை பார்த்தபடி நடந்தான்.

    பெரிய வணிக வளாகம் அது.

    இசைத்தட்டுகள், ஒலிநாடாக்கள் விற்பனை செய்யும் பிரம்மாண்ட கடை அது.

    அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நடக்க, சட்டென தாக்கப்பட்ட தினுசில் நின்றான்.

    பக்கவாட்டில் அவள் முகம் தெரிந்தது.

    ‘அவள்தானா?’

    கடைக்குள் நுழைந்துவிட்டான்.

    ‘அவளோடு இன்னும் ஒரு பெண்- நடுத்தர வயதை எட்டியவள் இருந்தாள். ஒலிநாடாக்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவள் பேசிக்கொண்டிருந்தாள்.’

    அர்ச்சனா! நேரமாச்சு வா! பக்கத்திலிருந்த பெண் அழைக்க –

    வந்துட்டேன்கா! என்று இசை ததும்பும் குரலில் பதில் சொன்னாள்.

    ஒலி நாடாக்களுக்கான கணிப்பொறி பில்லை வாங்கிக்கொண்டு, பணத்தைக் கட்டினாள்.

    வாசலை நோக்கி இருவரும் நடக்கத்தொடங்க, -

    கார்த்திக் பரபரப்பானான்.

    ‘இந்தமுறை விடக்கூடாது!’

    ஏறத்தாழ அவர்களுடன் பாய்ந்தான்.

    கடையைவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள்.

    அங்கேயே பஸ் ஸ்டாப்!

    கூட்டமாக ஒரு பஸ் வந்து நிற்க, இருவரும் ஏறிக்கொண்டார்கள். பேருந்து எண்களைக் குறித்துக்கொண்டு, காரை இயக்கினான் கார்த்திக்!

    ஏறத்தாழ இருபது நிமிடங்களுக்கு மேல் பயணித்த பிறகு, இருவரும் ஓரிடத்தில் உதிர்ந்தார்கள்.

    குறுக்கே புகுந்து நடக்கத் தொடங்கினார்கள்.

    கணிசமான இடைவெளியில் காரில் பின்தொடர்ந்தான் கார்த்திக்!

    சற்றே ஒதுக்குப்புறமான புறநகர் பகுதி அது.

    ‘இதுமாதிரி பின்தொடர்வது தப்பல்லவா?’

    ‘ஒரு கேள்வி எட்டிப் பார்த்தது இதயத்துக்குள்!’

    அதையும் மீறிக்கொண்டு அவளது வசீகரம் அலைக்கழித்தது.

    ஒரு தெருவுக்குள் இருவரும் நடந்து குறிப்பிட்ட வீட்டின் படிகளை ஏறி, கதவைத் தட்டினார்கள்.

    ஒரு வயதான அம்மா திறந்தார்கள்.

    இருவரும் உள்ளே நுழைய, கதவு மூடிக்கொண்டது.

    கதவு இலக்கம், தெரு போன்ற சகல விவரங்களையும் தன் பாக்கெட் நோட்டு புத்தகத்தில் பதிவு செய்தான் கார்த்திக்!

    காரை அரை வட்டமடித்து திருப்பிக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

    இந்த நேரத்தில் கார்த்திக் பற்றி ஒரு முன்னுரை!

    வயது 24.

    எம்.பி.ஏ. முடித்துவிட்டு அவ்வப்போது மட்டுமே அப்பாவுக்கு வர்த்தகத்தில் உதவிக்கொண்டு, பெரும்பாலான நேரம் ஜாலியாக பொழுதைக் கழிப்பவன்!

    அப்பா பெரும் பணக்காரர் அம்மா வக்கீல்!

    அக்கா பிரபலமான மகப்பேறு மருத்துவர் இதுதான் குடும்பம்.

    அக்கா திருமணமானவள்! அவள் கணவரும் டாக்டர்! கார்த்திக் படிப்பைக் கோட்டைவிடவில்லை! நன்றாகப் படித்துவிட்டான். கணிப்பொறி சம்பந்தப்பட்ட சகல சங்கதிகளும் விரல் நுனியில்.

    வீட்டுக்குள் ஆறு கணிப்பொறிகள். இண்டர்நெட் போன்ற வசதிகள்! புதிதாக ஒரு தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டால், முதலில் அது கார்த்திக் அறையில்தான் அரங்கேறும்!

    அப்பா தீவிரமாக வர்த்தகம் பார்ப்பதால் இவன் இறங்கவில்லை அதில்.

    ஓவியத்தில் வெறி!

    பலபடைப்புகள் சர்வதேச அளவில் விருதுகளை குவித்திருக்கின்றன. ஒரு கலைக்கூடமே வைத்திருக்கிறான்!

    அதுதொடர்பான கண்காட்சி அவ்வப்போது நடக்கும் பத்திரிகைகள் சகலத்திலும் அவன் பேரும், புகழும் வெளிப்படும்!

    இதுதான் கார்த்திக்!

    சமீபத்தில் இந்தப் பெண் அளவுக்கு யாரும் அவனை பாதிக்கவில்லை!

    ஓவியப் பலகையை அமைத்துக்கொண்டுவிட்டான். நெஞ்சுக்குள் முழுமையாக அவள் இறங்கி, ஆசனம் போட்டு அமர்ந்திருந்தாள்.

    கார்த்திக்கின் விரல் வழியாக விறுவிறுவென வெளிப்பட்டாள்!

    ஏறத்தாழ நாலரை மணி நேரம்!

    கார்த்திக் தன்னை, சூழ்நிலையை ஏன் இந்த உலகத்தையே சுத்தமாக மறந்து அவளுக்குள் உறைந்து போயிருந்தான்.

    பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பித்து இரவு எட்டுக்கு ஓவியம் தயாராகிவிட்டது.

    இறுதி அழகுகளை சேர்த்துவிட்டு அவன் பார்த்தபோது, பிரமிப்பின் எல்லைக்கே போய்விட்டான்.

    அத்தனை அற்புதமாக அவள் உருவாகியிருந்தாள்.

    இத்தனை உயிரோட்டமாக இதுவரை தான் வரைந்ததில்லையோ என்று தோன்றியது.

    இரவு ஒன்பதுக்கு நண்பன் கபாலி வந்தான்.

    "கார்த்தி!

    Enjoying the preview?
    Page 1 of 1