Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Seetha
Seetha
Seetha
Ebook127 pages56 minutes

Seetha

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466947
Seetha

Read more from Devibala

Related to Seetha

Related ebooks

Related categories

Reviews for Seetha

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Seetha - Devibala

    அத்தியாயம்-1

    "அதுக்குத்தான் சொன்னேன். அப்பவே"

    இறைந்து கூச்சலிட்டான் சேஷாத்திரி.

    ஏன் இப்ப கோவப்படறீங்க? என்ன நடந்து போச்சு?

    அமைதியாகக் கேட்டாள் சீதா.

    கடன் வாங்கணும். பட்ஜெட்ல துண்டு விழலை. வேட்டியே விழத் தொடங்கியாச்சு. ரெண்டு பேரும் சம்பாதிக்கறம்னு பேரு... பற்றாக்குறை கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய். என்ன செய்யப் போறோம்?

    கொஞ்சம் இருங்க. பதட்டப்படாதீங்க. போன மாசம் குழந்தைக்கு உம்புக்கு முடியலை. அத்தைக்கும் பிரச்சினை. ரெண்டு பேருக்குமா ஆன மருத்துவச் செலவு கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்

    .....

    நாலு கல்யாணம்... அதுல ஒண்ணு வெளியூர்

    அதனால?

    அதிகச் செலவுதானே இதெல்லாம்?

    வீட்ல வயசானவங்க, குழந்தைனு இருந்தா எதிர்பாராத செலவுகள் வரத்தான் செய்யும். அவங்களை என்ன செய்ய முடியும்?

    எதுவும் செய்ய முடியாது. குடும்பம்னா இழுபறி இருக்கத்தான் செய்யும்ன்னு சொல்றேன்

    எப்படி இருக்கும். நம்ம ரெண்டு பேருக்குமா பிடித்தம் போக கையில ஆறாயிரத்துக்கு மேல சம்பளம் வருது. இப்ப வீட்டு லோன் மட்டும் மூவாயிரம் போகுது. மீதி மூவாயிரத்துல எப்படி குடித்தனம் நடத்தறது?

    .....

    இதுவே வீடு கட்டாம இருந்தா, இந்த கஷ்டம் இல்லை

    யாரும் பணத்தைக் கட்டி வச்சிட்டு வீடு கட்டலை

    அவசரத்துக்கு ஒரு நகையை அடமானம் வைக்கலாம்னா அதுக்கும் வழியில்லை. முன் பணம் கட்டணும்னு ஒண்ணு பாக்கியல்லாம வித்தாச்சு. இப்ப வெளில கடன் வாங்கினா, எப்ப திருப்பித் தர்றதா உத்தரவாதம் தர்றது? என்ன கியாரண்டி?

    புலம்பிக் கொண்டிருந்தான், சேஷா.

    சீதா பேசாமல் இருந்தாள்.

    மாமியார் முனகியபடி எழுந்து வந்தாள்.

    சேஷா சொல்றதும் நியாயம் தான். இப்ப அவன்தானே பட்டுக்கிட்டு முழிக்க வேண்டியதாயிருக்கு,

    சீதாவுக்கு எரிச்சல் வந்தது.

    ‘அவா மட்டுமென்ன? சமத்துக்கு சமம் சம்பாதிக்கும் நானும் தான் கஷ்டப்படுகிறேன். நானும், என் சம்பளமும் இல்லாவிட்டால் உன் பிள்ளைக்கு ஏது இத்தனை சுகபோகம்?’

    நாக்கு துடித்தது.

    கணவனை வைத்துக்கொண்டு மாமியாரிடம் பேச முடியாது.

    சேஷா அதை ரசிக்கமாட்டான்.

    சரி விடுங்கப்பா. ஏதாவது செய்யலாம். கொஞ்ச நாள்ல ரெண்டு பேருக்கும் சம்பளம் உயரும். அப்ப சரியாகும்

    விலைவாசியும் கூடவே உயரும். நினைவு வச்சிக்கோ.

    சரி... வீடு கட்டி முடிச்சா முதல்ல ஒரு அஞ்சு வருஷத்துக்கு இழுபறிதான்

    அப்புறம்?

    அதுவே பழகிப் போயிடும் அவள் சொல்ல,

    சட்டென சிரித்து விட்டான். சேஷா.

    ஜோக் அடிக்கறியா?

    துன்பம் வரும் வேளையில் சிரிங்கன்னு வள்ளுவர்தான்பா சொல்லியிருக்கார்

    சரிதான். அவர் சொல்லிட்டுப் போயிடுவார். இங்கே நாம தானே அவஸ்தைப்படறது

    நீங்க சாப்பிட வாங்க

    ஆச்சு

    குழந்தை எங்கே

    தூங்கியாச்சு

    இப்பல்லாம் ரொம்ப சீக்கிரம் தூங்கிடறாளே குழந்தை?

    ஸ்கூல் போறா. நாள் முழுக்க அங்கே இருக்கறதால களைப்பா இருக்கு போலிருக்கு. பாவம்

    நாலு வயசு தான் ஆச்சு. பாவம் குழந்தை

    அவனுக்கும் பரிமாறி விட்டு தானும் சாப்பிடத் தொடங்கினாள் சீதா.

    சீதா

    சொல்லுங்க

    இன்னும் கொஞ்சம் கூடுதலா நாம சம்பாதிக்கணும். அப்பத்தான் வசதிகளை பெருக்கிக்க முடியும்

    அது எப்படீப்பா முடியும்

    ஏன் முடியாது? இப்பல்லாம் நிறைய பேர் பார்ட் டைமா ஏதாவது செஞ்சு கை நிறைய சம்பாதிக்கிறாங்க. புடவை வியாபாரம், ஊறுகாய் பிஸினஸ் இது மாதிரி...

    நமக்கு நேரம் இருக்கா?

    நேரத்தை வகுத்துக்கணும்

    சரிப்பா... பிஸினஸ்னா மூலதனம் வேண்டாமா?

    கடன்தான் வாங்கணும்

    பிஸினஸ் நல்லபடியா நடக்கணும். நஷ்டம் வந்துட்டா, இந்தக் கடனும் சேரும். இன்னும் நிலைகுலைஞ்சு போவோம். நாமெல்லாம் உத்யோகஸ்தர்கள். பிஸினஸ்ல பழக்கம் போதாது. அதுக்குன்னு கொஞ்சம் சாதுர்யமும் வேணும். வேண்டாம்பா

    உனக்கு எதையெடுத்தாலும் பயம்தான்

    பயமில்லை. நியாயம். அவசரப்பட்டு எதிலும் மாட்டிக்கக்கூடாதுங்கற கவலை

    சரி. சிக்கல்லேருந்து மீள என்னதான் வழி?

    ஒரு தையல் மிஷின், ரெண்டு டைப் ரைட்டர் வாங்கிப் போட்டு ரெண்டு பேருமா தொடங்கலாமா?

    ஆபீஸ் விட்டு வந்ததும் தைப்பியா? ஊர்ல ஆயிரம் டெய்லர்’ கள். உன்கிட்ட யாரு வரப்போறாங்க?

    போகப் போகப் பிக்கப் பண்ண முடியாதா?

    வேண்டாம். வேற யோசிப்போம்

    சாப்பாடு முடிந்தது.

    இருவரும் உள் அறைக்கு வந்தார்கள்.

    குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது.

    அதை முத்தமிட்டான் சேஷா.

    சீதா

    ம்...

    நமக்கு இந்த ஒரு குழந்தை போதுமா?

    வேண்டாம். நீங்க பாக்கற பார்வையே சரியில்லை

    அவசியமே இல்லை. விக்கிற விலைவாசிக்கு ஒரு குழந்தையை ஒழுங்கா பராமரிச்சா போதாதா?

    உன்னை நான் தொட்டு ஒரு வருஷமாச்சு

    தப்பே இல்லை. மனசை அடக்கறவன்தான் இங்கே மகாத்மா ஆக முடியும். படுங்க பேசாம. குட் நைட்

    விளக்கை அணைத்துவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள் சீதா.

    சேஷா பெருமூச்சுடன் கண்களை மூடிக்கொண்டான்.

    அத்தியாயம்-2

    மறுநாள் அலுவலகத்திலிருந்து நுழைந்ததுமே, பரந்தாமன் எதிர்ப்பட்டான்.

    இந்தா சேஷா, ஸ்வீட்ஸ் எடுத்துக்கோ

    தேங்க்யூ. உன் பிறந்த நாளா?

    இல்லை சேஷா. நான் நடிச்ச படம் இன்னிக்கு ரிலீஸ் ஆகுது

    வாவ். இது உன் முதல் படம் இல்லையா?

    ஆமாம். அதனாலதான் ஸ்வீட்

    பரந்தாமனை ஏற இறங்கப் பார்த்தான் சேஷா.

    டி.வி. நாடகங்களில் சின்ன சின்ன வேஷங்கள் செய்து வந்த பரந்தாமன், தன் நடிப்புத் திறமையால் ஓரளவுக்கு பெரிய வேஷங்கள் செய்யத் தொடங்கி விட்டான்.

    பார்க்கவும் நன்றாக இருப்பான்.

    அடிக்கடி ஆபீசுக்கு லீவு போடத் தொடங்கிவிட்டான்.

    ஆறு மாதம் முன்பு லீவு இல்லாமல் சம்பளம் கட் பண்ணும் நிலை வந்து விட்டது.

    சம்பள பில் போடுவது சேஷா தான்.

    பரந்தாமனை அழைத்தே கேட்டுவிட்டான்.

    இந்த மாசம் பாதி சம்பளம் உனக்கு அடிபடும் பரந்தாமா?

    படட்டும்

    என்னப்பா நீ? உன் மனைவி கூட சம்பாதிக்கலை. உன் ஒரு சம்பளம் தானே

    இதை இப்ப நான் நம்பறதே இல்லை பல. டி.வி. சீரியல நிறைய கிடைக்குது. பணத்துக்கு என்ன பஞ்சம்? என் ஆசை பெரிய திரை. அதுல கால ஊனிட்டா, வேலையை ராஜினாமா செஞ்சிடுவேன்?

    சொல்லி வாய் மூடவில்லை.

    அடுத்த மாதமே

    Enjoying the preview?
    Page 1 of 1