Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Antha Vanam Enthan Vasam
Antha Vanam Enthan Vasam
Antha Vanam Enthan Vasam
Ebook205 pages1 hour

Antha Vanam Enthan Vasam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அவளை தன் கை வளைவில் பிடித்து கொண்டு, கூர்மையாக அவள் முகத்தில் பார்வையை பதித்தவாறு கேட்டான்.

“இப்போது சொல். நான் வரி போட்ட கழுதையா? அல்லது உண்மையில் வரிக்குதிரை தானா?”

“இப்போது இந்த கேள்வி முக்கியமா?”

“நிச்சயமாக... எனக்கே தெரிய வேண்டி இருக்கிறதே”

தன்னோடு சேர்த்து அணைத்தவனிடம் இருந்து விலகாமலே சொன்னாள். “இப்படி ஒரு நிலையில், என்னை வைத்து பின் இந்த கேள்வியை கேட்டால் என்னவென்று பதில் சொல்வது?”

“இந்த பதில் சரியில்லை.”

“பின் வேறு எப்படி சொல்வதாம்”

“கழுதையா? வரி குதிரையா?”

உதட்டை சுழித்து கொண்டு கண்களை மூடி திறந்து பின் சொன்னாள்.

“வரி குதிரை தான்”

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580147207410
Antha Vanam Enthan Vasam

Read more from G. Shyamala Gopu

Related to Antha Vanam Enthan Vasam

Related ebooks

Reviews for Antha Vanam Enthan Vasam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Antha Vanam Enthan Vasam - G. Shyamala Gopu

    https://www.pustaka.co.in

    அந்த வானம் எந்தன் வசம்

    Antha Vanam Enthan Vasam

    Author:

    G. ஷியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    சித்திரை மாதத்தின் உக்கிரமான வெயில், அந்த மாலை நாலரை மணி வேளையிலும் மண்டையை பிளந்தது. இட்டிலி சட்டிக்குள் வைத்து அவித்தது போல ஒரே கசகசப்பு. ஒரே உப்புசமாக இருந்தது. அது நேரம் வரை ஏசி யில் இருந்து விட்டு வெளியே வரவும் வெப்பத்தின் வீச்சு அதிகமாக இருந்தது நிவேதிதாவுக்கு. வெயிலுக்கு மேனி கருத்து விடாமல் இருக்க கண்களை தவிர மீதி உடல் முழுவதும் துப்பட்டாவால் மூடி சகல பந்தோபஸ்தும் செய்து கொண்டு வந்து அவளுடைய வண்டியை வெளியே எடுத்தாள்.

    சோளிங்கநல்லூர் சிக்னலை கடக்க அரை மணி நேரம் ஆயிற்று. நடந்தே வந்திருந்தால் கூட பத்து நிமிடத்திற்கு மேல் ஆகாது அவள் தங்கி இருந்த பெண்கள் விடுதி. நகரத்தின் அதி சொகுசான விடுதி அது. மற்றைய விடுதிகளை விட கட்டணம் அதிகமாக இருந்தாலும் இருவருக்கு ஒரு அறை ஏசி வசதி, நல்ல காற்றோட்டமான அறைகள், தரமான உணவு. பாதுகாப்பு என்று அதிகப்படி படாடோபமாக தான் இருந்தது அந்த விடுதி.

    என்றைய தினத்தையும் விட அன்று சீக்கிரமாகவே வந்தவள் வண்டியை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு தலைக் கவசத்தையும் பாதுகாப்பு முஸ்தீப்புகளையும் களைந்து விட்டு வந்தவள் எதிரே வந்த காவலாளி முனியனை பார்த்தும் பார்க்காதது போல சென்று விட முயன்றாள்.

    எப்போதும் நின்று இரண்டு வார்த்தை பேசாமல் போக மாட்டாள். அன்று அப்படி போகவும், என்ன பாப்பா, சீக்கிரம் வந்துட்டே. உடம்பு கிடம்பு சரியில்லையா?என்று வாஞ்சையுடன் கேட்டார் அவர்.

    இல்லைங்கய்யா. நல்லா தான் இருக்கேன். மேல்கொண்டு பதில் சொல்லி கொண்டிருக்காமல் உள்ளே வந்தவள் சீனியம்மாவை கண்டதும், ஆயா, கொஞ்சம் சூடா டீ போட்டு கொடுத்து அனுப்பு. என்றாள்.

    "ஏன் கண்ணு, சீக்கிரமே வந்துட்டே. உடம்பு கிடம்பு சரியில்லையா?

    காவலாளி கேட்ட அதே கேள்வி. அலுப்பாக இருந்தது. பதில் சொல்லும் மனநிலையில் இல்லை அவள்.

    அதற்குள் அவளருகில் வந்து நெற்றியை தொட்டு பார்த்தாள் சீனியம்மா. என்ன கண்ணு, காய்ச்சல் கூட இல்லையே.

    ம்...

    என்ன எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்குறே?

    உக்கும்.சொல்றாங்க. வெத்திலைக்கு சுண்ணாம்பு இல்லை என்று. போ ஆயா

    சரி, இன்னைக்கு என்னவோ நீ சரியில்லை. நீ மேல ரூம்புக்கு போ. டீ கொடுத்து விடறேன்.

    படி ஏற போனவள், எதையோ நினைத்து கொண்டவளாக ஆயா ஒரு ஆறு மணிக்கா அஞ்சாறு காப்பி போடணும்.

    ஓஹோ, அப்படியா சேதி வாயெல்லாம் பல்லாக அவளை பார்த்து சிரித்தாள் சீனியம்மா.

    என்ன சேதி?

    என்னவோ புதுசா என்னை கேக்கறே?

    நீ தானே சொன்னே. மீதியையும் நீயே சொல்லிடு.

    வேறே என்னம்மா. இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீடு வருது. சரிதானே.

    ஆமா..அவளுடைய எரிச்சல் அப்பட்டமாக குரலில் இருந்தது.

    அந்த வயதான அனுபவசாலிக்கு புரியாமல் இல்லை. ஏன் பாப்பா இப்படி அலுத்துக்கறே?

    வேறே என்னவாம். எனக்கு தான் கல்யாணம் என்றாலே பிடிக்க மாட்டேங்குதே

    பொண்ணா பொறந்தவ அப்படி சொன்னா ஆச்சா?

    பின்னே எப்படி சொல்லனுமாம்?

    உங்க அப்பன் ஆத்தா அப்படி சொல்லி இருந்தா இன்னைக்கு நீ இங்கே நின்னு கிட்டு அழிச்சாட்டியமா பேசுவியா?

    அவளுக்கு ஆயாவிடம் சற்றே வம்புக்கு இழுக்கும் எண்ணம் வந்தது. எப்போதுமே ஆயாவிடம் மிகுந்த அன்பும் அக்கறையுமாக இருக்கும் நிவியை ஆயாவிற்கு மிகவும் பிடிக்கும். பதிலுக்கு நிவிக்கென்று சற்று அதிகப்படியான உபசரிப்பு நடப்பது உண்டு. சுடச்சுட உணவை தனியாக அவளுக்கு என்று எடுத்து வைப்பதாகட்டும். ஒரு தலைவலி காய்ச்சல் என்றால் கை வைத்தியம் செய்வதாகட்டும், நிவி அவளுக்கு ஸ்பெஷல் தான். அதற்கேற்றார் போல நிவியும் அவளை நல்ல நாளுக்கு என்று தனியாக கவனிப்பது உண்டு. வெளியே தெரியாத ஒரு பாசப்பினைப்பு இருவருக்கும் இடையில் உண்டு.

    கல்யாணம் எல்லாம் ஒரு பெரிய விஷயமா ஆயா?

    இல்லையா பின்னே?

    அதெல்லாம் உன் காலத்தில் ஆயா.

    என்னடி இது அதிசயமா இருக்கு. எந்த காலமா இருந்தா என்ன? பொண்ணா பொறந்தவ ஒருத்தனை கண்ணாலம் கட்டிக்கிட்டு புள்ளை குட்டி பெத்து கிட்டு.! என்று நீட்டி முழக்கியவள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயப்பட்டாள். இப்படி தானே எல்லாரும் இருப்பாங்க. நீ மட்டும் விசித்திரமா பேசறே.

    ஆயாவின் அருகில் வந்து அவள் தோள் மீது கையை போட்டு கொண்டு சொன்னாள். ஆயா, நீ கண்ணாலம் கட்டிகிட்டதாலே புள்ளைகுட்டி பெத்துகிட்டே. அப்படி கண்ணாலம் பண்ணலேனா என்ன பண்ணிருப்பே?

    ஆங். அதெப்படி கண்ணாலம் கட்டாமல் இருக்க முடியும்?’ஆயாவை பொறுத்தவரை, கிழக்கே சூரியன் உதிப்பது எப்படி நியதியோ அது போல பெண்ணாக பிறந்தவள் கல்யாணம் செய்ய வேண்டியது நியதி. ஆகையால் அவளுக்கு அதை பற்றிய கற்பனை கொஞ்சம் கூட இல்லை.

    அவளுடைய கழுத்தை ஆசையாக நெருக்கி விட்டு சொன்னாள் நிவேதிதா. ஆயா, நீ மட்டும் கண்ணாலம் கட்டாமல் இருந்திருந்தால் என்னை மாதிரி பெரிய படிப்பு படிச்சு என்னை மாதிரியே ஐ.டி. கம்பனியில் வேலைக்கு போய் என்னை மாதிரியே வண்டி ஓட்டிட்டு என்னை மாதிரியே ஜாலியா இருந்திருப்பே.

    உக்கும், இருந்திருப்பேன், இருந்திருப்பேன்.

    என்ன இப்படி நம்பிக்கை இல்லாமல் பேசறே.

    அது என்னவோ தாயி, நான் கட்டிக்க மாட்டேன்ன்னு சொன்னாலும் என் முறைமாமனுங்க விட்டுடுவானுன்களா?

    அதானே பார்த்தேன். உனக்கு முறைமானுங்க இருக்கானுங்க. எனக்கு அப்பிடி யாருமே இல்லையே ஆயா அவள் குரலில் பரியாசம் பரிபூரணமாக இருந்தது.

    அது ஆயாவுக்கும் புரிந்தது. அவள் முகவாயில் கையை வைத்து அதிசயித்தாள். என்னமோ போ பாப்பா, இன்னைக்கு வர சம்பந்தம் நல்லபடியா குதிரனும்னு அந்த முண்டகன்னிய தான் வேண்டிக்கறேன்

    விடுதிக்கு வந்த போது இருந்த எரிச்சல் சற்றே மறைந்திருந்தது.

    உனக்காக முண்டகண்ணி இறங்கினால் தான் உண்டு.

    அவள் தலையை ஒரு முட்டு முட்டி விட்டு படி ஏறி அவள் அறையை அடைந்தாள். நல்லவேளையாக அவளுடைய அறையை அவளுடன் பகிர்ந்து கொள்ளும் நம்ருதா முன்பே வந்து அறையில் ஏசியை போட்டு வைத்திருந்தது அவளுக்கு இதமாக இருந்தது.

    ‘அப்பாடா’ படுக்கையில் தொப்பென்று விழுந்தாள். நிவேதிதா ஒரு மல்டி நேஷனல் கம்பனியில் மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கிறாள். சீனியம்மாவை பொறுத்தவரை மார்கெட்டிங் என்பதெல்லாம் பெரிய வேலை இல்லை. புரியவும் புரியாது. ஐ.டி கம்பனி தான் உசத்தி. அதனால் அவளுக்கு புரிய வைப்பதை விட அவளும் கம்ப்யூட்டர் கம்பனி தான். ஆனால் உண்மையிலேயே நம்ருதா ஐ.டி யில் தான் பணி புரிகிறாள். நல்ல உயரமாக சுருட்டை முடியுடன் அம்சமாக இருப்பாள். பழகுவதற்கு இனிமையானவள். திருச்சி பக்கத்தில் சொந்த ஊர். இவளுடன் கடந்த மூன்று வருடங்களாக ஒரே அறையில் தங்கி வருபவள். இவள் குண விசேஷம் புரிந்தவள்.

    இன்றைக்கு ரொம்ப வெயில் என்ன நிவி

    ம்!

    என்ன இன்றைக்கு சீக்கிரம் வந்துட்டே?

    இதோட மூன்றாவது ஆள். ஒருநாளைக்கு சீக்கிரம் வரக்கூடாது என்று ஏதேனும் சட்டமா?

    எதுக்கு இப்படி கோவித்து கொள்கிரே?

    பின்னே என்ன?

    அறை கதவு தட்டப்பட்டது. நமரு போய் கதவை திறந்து வெளியே நின்று கொண்டிருந்த மணியிடம் டீக் கப்பை வாங்கி கொண்டு உள்ளே வந்தவள் சரி எழுந்திரு. டீயை குடி என்றாள்.

    எனக்கொண்ணும் வேண்டாம்.

    ஏய், நீ தானே டீ கேட்டே. எழுந்து குடி.

    அவளுடைய அதட்டலில் எழுந்து வாங்கி கொண்டு சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து குடித்தாள். ஆமாம் நமரு, இன்றைக்கு நீ கூட தான் சீக்கிரம் வந்து விட்டாய்

    இவள் விஷயம் தெரிந்து கொண்டே நம்மை ஆழம் பார்க்கிறாள் என்பது நம்ருவிற்கு புரிந்தது. எவ்வளவு தூரத்திற்கு வம்பு இழுக்கிறாள் பார்ப்போம். அவளுடைய கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் சற்று நேரம் நிவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்.

    நிவி, இன்றைக்கு காலையில் உங்க அம்மா எனக்கு போன் பண்ணினாங்க

    பண்ணிட்டாங்களா. அதானே பார்த்தேன். அவர்களால் சும்மா இருக்க முடியாதே

    ரொம்ப அலுத்துக்காதே. அவ அவ வீட்டில் கல்யாணம் செய்து வைக்க மாட்டேன்கரான்களே என்று தவிக்கிறாங்க.

    சரி விடு, என்ன சொன்னார்கள்.?

    இன்றைக்கு மாலை ஆறுமணிக்கு மாப்பிள்ளை வீட்டில் வருகிறார்களாம்.

    போட்டோ அனுப்பி இருந்திருக்கலாம் இல்லே

    எதுக்கு.? எதுக்குன்னு கேக்கறேன்?ஆவேசமாக கேட்டவள், பிறகு இவளிடம் இந்த நேரம்

    சண்டை போட்டு அவளுடைய மூடை கெடுத்து விடக்கூடாது. நல்லநாளே துற்குணி அதிலும் இப்போது கர்ப்பிணி என்பது போல இந்த கல்யாணத்தை நிறுத்த வழி தேடுகிறவளுக்கு தானாக வலிய ஒரு காரணத்தை கொடுக்க கூடாது என்று தீர்மானித்து கொண்டு அவளிடம் மிகவும் பொறுமையுடனே பதில் சொன்னாள். போட்டோவை பார்த்து விட்டு இது சொத்தை அது சொள்ளை என்று சொல்லவா?

    உண்மையை தானே சொல்ல முடியும்?

    எது உண்மை.? நான் தெரியாமல் தான் கேட்கிறேன். இதுவரைக்கும் போட்டோவை பார்த்து விட்டு நீ கொஞ்சம் பேச்சா பேசியிருக்கே? அந்த மாப்பிள்ளை பையன்கள் காது கொடுத்து கேட்டிருந்தாங்கன்னு வெச்சிக்க, தூக்கு போட்டு கொண்டு தொங்கி இருப்பாங்க.

    ஏய், என்னப்பா ரொம்ப தான் பில்ட் அப் பண்றே?

    அடடா, நீ மோசமா கமென்ட் அடித்ததில்லை?

    அப்படி என்ன கமென்ட் அடித்தேனாம்?

    திருச்சியிலிருந்து ஒரு எஞ்சினீயர் மாப்பிள்ளை வந்தானே. அவன் போட்டோவை பார்த்து விட்டு அவனுக்கு முன் மண்டையில் முடி குறைவாக இருக்கிறது. அதனால் அவனுக்கு கூடிய சீக்கிரம் தலையில் வழுக்கை விழுந்து விடும் என்று சொல்லவில்லை.

    ஆமாம். அப்படி தானே இருந்தது அந்த ஆள்

    இப்போது வழுக்கையாக இருந்திருந்தால் தேவலை. நா....ளை.....க்..கு வழுக்கை விழும் என்று இன்றே அவனை வேண்டாம் என்று சொன்னாய்

    அதெல்லாம் ஒரு தீர்க்கதரிசனம். ஒரு கால்குலேஷன். ஒரு கலை.

    மண்ணாங்கட்டி. உன் குணம் தெரிந்து தான் உன் அம்மா இந்த வரனுடைய போட்டோவை அனுப்பவில்லை.

    வேறே என்ன சொன்னார்கள்?

    இது தான் உனக்கு கடைசி சந்தர்ப்பம். இதற்கு நீ சம்மதம் சொல்லி தான் ஆக வேண்டும் என்று நேரிடையாக சொல்லாமல் ஆனால் கிட்டத்தட்ட மிகவும் உறுதியாக சொன்னார்கள்

    நீ என்ன சொன்னே?

    நான் என்ன சொல்லணும்

    சொல்லியிருந்திருப்பியே, அம்மா, அம்மா அவளை எப்படியாவது இன்றைக்கு சம்மதிக்க வைக்கிறேன் என்று நம்ரூ பேசுவது போலவே நிவி மிமிக்கிரி செய்தாள்.

    இப்போது நம்ருவிற்கு உண்மையில் ரொம்ப கோபம் வந்து விட்டது. ஏய், நீ எப்படியோ போ. என்னை விடு சொன்னவள் கோபத்துடன் படுக்கையில் நீட்டி நிமிர்ந்து படுத்து விட்டாள்.

    சரி விடுப்பா, ரொம்ப கோவித்து கொள்ளாதே. எங்க வீட்டில் பண்ற அலும்புக்கு உன்னிடம் கோவித்து கொள்வதில் பயனில்லை.

    நிவி, நான் கேட்கிறேன் என்று தப்பாக நினைக்காதே. படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்து ரொம்ப தன்மையாக தணிவாக கேட்டாள்.

    இல்லை, கேள். உன்னை நான் தப்பாக நினைப்பேனா?

    நீ யாரையாவது காதலிக்கிறாயா? வீட்டில் சொல்ல பயமாக இருக்கிறது அப்படி என்றால் நான் வேண்டுமானால் சொல்லட்டுமா?

    "நீ இப்படி ஏதாவது தான் கேட்பாய் என்று தெரியும். நானும் தெரியாமல் தான் கேட்கிறேன். ஒரு பெண் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால் ஒன்று

    Enjoying the preview?
    Page 1 of 1