Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kai Valaivil En Kanavu
Kai Valaivil En Kanavu
Kai Valaivil En Kanavu
Ebook190 pages1 hour

Kai Valaivil En Kanavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அடுத்த ஊர்காரன் ஒருவனால் வேப்பந்தட்டை என்னும் கிராமத்தில் செங்கோடன் தன் மனைவியை கொலை செய்ய நேரிட, அதனால் அந்த கிராமத்தின் கட்டுப்பாடுகளும் அதை மீறும் வெளியூராருக்கு நடக்கும் கொடுமைகளும் அதை தலைமையேற்று நடத்தும் துரைராசு, அவன் முறைப்பெண் மதுவிற்கும் வெளியூர்காரன் அபிமன்யுவிற்கும் இடையில் பூத்த மெல்லிய காதலும் அதனால் அபிமன்யுவிற்கு ஏற்பட்ட அவமானமும் அதற்கு அவன் பழி தீர்த்துக் கொண்ட விதமும், இருவரும் சேர்ந்தார்களா கிராமத்தின் கட்டுப்பாடுகள் என்னவாயிற்று என்பதும் தான் கதை.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580147207415
Kai Valaivil En Kanavu

Read more from G. Shyamala Gopu

Related to Kai Valaivil En Kanavu

Related ebooks

Reviews for Kai Valaivil En Kanavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kai Valaivil En Kanavu - G. Shyamala Gopu

    https://www.pustaka.co.in

    கை வளைவில் என் கனவு

    Kai Valaivil En Kanavu

    Author:

    G. ஷியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    வடக்கிலிருந்து மேற்கு நோக்கி வளையும் சாலையில் திரும்பி நின்றது அந்த பேருந்து. அந்த நிறுத்ததிற்கு வேப்பந்தட்டை என்று பெயர். இருமருங்கும் வேப்பமரங்கள் அதிகமாக வளர்ந்திருந்தது. கடலை ஒட்டி செல்லும் உள்பக்க சாலை ஆதலால் அந்த காலை பொழுதிலேயே வேப்பமரங்களை அசைத்து சிலுசிலுவென்று காற்றுடன் இளஞ்சூரியன் கைகோர்த்து கொண்டு உலா வர தொடங்கிருந்தது.

    அந்த சாலையில் பேருந்து நிறுத்தத்தின் அருகில் ஒரு அய்யனார் சிலை மேல் கூரை இல்லாமல் வானம் பார்த்து இருந்தது. உள்ளே சின்னதாக அம்மன் சிலையுடன் கூடிய கோயில் இருந்தது. அந்த கோயில் வாசலில் நெற்றியில் பெரிய குங்கும பொட்டு வைத்து தன் நீண்ட கூந்தலை அள்ளி செருகி காவி வேட்டி கட்டி இருந்த பூசாரி தன் அருகில் பூஜை சாமான்களையும் குங்கும தட்டையும் வைத்து கொண்டு உட்கார்ந்திருந்தார். அருகில் ஆட்டை அவிழ்த்து விட்டு விட்டு ஒரு வயதான அம்மாள் உட்கார்ந்திருந்தாள்.

    அந்த காலை நேர பேருந்து, நவ்வாக்காடு என்று வழக்கத்தில் உள்ள நாவல்க்காடு என்னும் பெரிய கிராமத்தில் இருந்து அருகில் உள்ள பட்டுக்கோட்டை நகரத்திற்கு படிக்க செல்லும் மாணவ மாணவிகளாலும் அரசு ஊழியர்களாலும் நிறைந்திருந்தது. அதிலும் கோடை விடுமுறைக்கு பிறகு அன்று தான் பள்ளிகள் தொடங்குவதால் என்றைக்கும் இருக்கும் நெரிசலை விட அன்று அதிகப்படியான கூட்டத்தால் அந்த பேருந்து திணறி கொண்டிருந்தது.

    நீண்ட நாட்கள் கழித்து கூட்டாளிகளை கண்ட சந்தோஷ மிகுதியினால் ஒருவரை ஒருவர் கூப்பிட்டு பேசுவதும் ஒரே நேரத்தில் எல்லோரும் பேசுவதுமாக ஒரே பரபரப்பாக இருந்தது.

    எப்போதும் போல நடத்துனர், வண்டியில் ஏறி இருந்த எல்லோரையும் முன்னே போகும்படியும், இறங்குபவர்களுக்கு முதலில் வழி விடும்படியும் கூவி கொண்டே இருந்தார்.

    நேரம் நீண்டு கொண்டிருந்தது.

    எல்லா பேருந்து நிறுத்ததிலும் நிற்கும் நேரத்தை விட இந்த இடத்தில அதிகபடியான நேரம் நின்று கொண்டிருந்தது அந்த பேருந்து.

    பேருந்தின் வலதுபுறம் தூரத்தில் மரக்கூட்டதின் ஊடே தெரிந்த சிவன் கோயில் கோபுரத்தை பார்த்து அவன் படித்து கொண்டிருந்த தஞ்சை பிரகாஷ் சிறுகதை தொகுப்பை சற்றே கீழே தாழ்த்தி வலது கையால் கன்னத்தில் போட்டு கொண்டான் அபிமன்யு.

    அவனுடைய பின் இருக்கையில் அமர்ந்திருந்த இரு வாலிபர்களில் ஒருவன் நீண்ட நேரமாகியும் பேருந்து கிளம்பாததினால் எரிச்சல் உற்று கேட்டான் மற்றவனிடம், "என்ன தங்கராசு, பஸ்

    இவ்வளவு நேரமா இங்கே நிக்குது"

    ஸ்ஸ்ஸ். மெல்ல பேசு. ஏன் கத்துறே?

    அட நீ வேறே, எரிச்சலை கிளப்பிகிட்டு. எதுக்கு இந்த இடத்தில இவ்வளவு நேரமா நின்னு கிட்டு இருக்கோம்னு கேட்டா. உள்ளூர்காரனாச்சே தெரிஞ்சிருக்குமேன்னு கேட்டேன்.

    அவன் அந்த தங்கராசு பேருந்தின் வலதுபுறம் திரும்பி பார்த்து கொண்டிருந்தவன்,

    ம், இப்போ பஸ் கிளம்பிரும் என்று ஆருடம் சொன்னான். அவன் பார்த்த திசையில் இவனும் பார்த்தான். ஒரு இளம்பெண் கல்லூரி மாணவி போலும் ஓடி வந்து கொண்டிருந்தாள். பேருந்தை சுற்றி கொண்டு வாயில் வழியாக ஏறி விட்டாள்.

    மாமா, போயிட்டு வரேன். என்று கீழே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபனை நோக்கி கையை அசைத்து விடை பெற்றாள்.

    கையை அசைத்து விடை கொடுத்த அந்த வாலிபன், நல்ல உயரமாக சிவந்த நிறத்தில் இருந்தான். தலைமுடி முன் நெற்றியில் விழுந்து அவன் முகத்திற்கு ஒரு முதிர்வை கொடுத்திருந்தது. மூக்கின் கீழே இருந்த மீசை நறுக்கபட்டிருந்த விததில் ஒருவித தெனாட்டல் தென்பட்டது . கண்களில் புலி பார்வை. மொத்தத்தில் யாருக்குமே அவனிடன் நெருங்கி நின்று பேசும் தைரியம் ஏற்படாதவாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ட்ராக் சூட் கையில்லாத பனியன் ரீபோக் ஷூ போட்டிருந்தான். தோளில் தேங்காய்பூ துண்டு போட்டிருந்தான். கழுத்தில் தடிமனான் தங்க சங்கிலியில் மீன் பதக்கம் போட்டு மாட்டிருந்தான். விரல்களில் துரைராஜ் என்று பொறிக்கப்பட்டிருந்த மிக கனமான மோதிரம் அணிந்து இருந்தான்.

    நிம்மதி பெருமூச்சு விட்ட நடத்துனர் ஒரு நீண்ட விசில் அடித்து தன் இயலாமையை காட்டி கொண்டார். அவள் தூரத்தில் ஓடி வருவதை வழி மேல் விழி வைத்து பார்த்து கொண்டிருந்த டிரைவர் விசில் சத்தம் காதில் விழுந்ததும் பேருந்தை அடித்து பிடித்து கிளப்பினார்.

    இதை எல்லாம் கவனித்து கொண்டிருந்தவன் தங்கராசுவிடம் கேட்டான்.

    "ஏண்டா, இந்த பெண் வந்து ஏறுவதற்காகவா நாம இவ்வளவு நேரம் காத்து கிடந்தோம்.?

    ஸ். மெல்ல பேசுடா. அந்த பொண்ணு காதில் விழுந்து விட போகிறது?

    டேய், இதென்ன அநியாயமாக இருக்கு. பாக்க போனா அவளாலே நமக்கு தாமதம் ஆயிருச்சுன்னு நாம தான் அவ கிட்ட கோபபடணும். மாறா,நீ என்னமோ அதுகிட்ட இப்படி பயப்படறே?

    அவன் தலையை குனிந்து கொண்டு யாருக்கும் காதில் விழாதவண்ணம் மெல்ல சொன்னான்.

    அவளுக்கு பயப்படலே

    பிறகு

    கீழ நின்னுகிட்டு இருந்தானே ஒருத்தன். அவனை பார்த்தியா.

    ஆமாம். பார்த்தேன். அதுக்கு என்ன?

    அவன் தான் அவளோட மாமன் .

    இருக்கட்டும். அதற்காக அவள் வந்து ஏறும் வரை பஸ் நின்னுகிட்டு இருக்கனுமா.? என்னடா இது அராஜகமா இருக்கு.

    எரிச்சல் படாதே. கொஞ்சம் பொறுமை. நீ வெளி ஊர்காரன். அதும் சென்னையிலிருந்து வந்திருக்கே. அதான் இந்த பக்கம் சமாசாரம் தெரியாமல் பேசறே.

    என்னடா ரொம்ப பில்ட் அப் கொடுக்கிறே.

    அவனை மீறி இந்த பஸ் போகாதுடா. அவன் பெரிய பிரச்சினை பண்ணிருவான் என்று எல்லோருக்குமே பயம்.

    அவன் இந்த ஊர் தாதாவா?

    தாத்தாவோ, பாட்டியோ. நமக்கேன் வீண் வம்பு?

    என்னடா இப்படி பயப்படறீங்க? என்னவோ கிராமத்தில் தான் வீரம் விளைந்து இருக்கு என்று பெருமை பேசுவீங்க.

    ஆமாம், பெரிய வீரம்.

    என்னப்பா,ரொம்ப சலிச்சிக்கிரே?

    உனக்கு என்ன தெரியும் இந்த ஊரை பத்தி?

    ஏன், என்ன இந்த ஊருக்கு?

    பரியாசம் பூரணமாக இருந்தது அவன் குரலில். தங்கராசு அவனை பார்த்து முறைக்கவும் ரொம்ப பயந்தவன் போல் நடித்து

    ஏ, அப்பா..ரொம்ப முறைக்காதே. சினிமாவில் வரும் வில்லன் மாதிரி அந்த ஊரையே அந்த ஆள், அது தான் அந்த பொண்ணோட மாமன் தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு அராஜகம் செய்கிறானா?’

    இவன் ஒருத்தன் அராஜகம் செய்தால் தேவலையே.

    பிறகு..? இப்போது அவனுக்குமே ஒன்றும் புரியவில்லை.

    அந்த ஊரை பற்றி உனக்கு தெரியாது. மொத்த ஊருமே அராஜகம் பிடித்தவர்கள் தான்.

    அது தான்..

    அவனை மேல்கொண்டு பேச விடாமல் தடுத்து சொன்னான். அப்பா, உனக்கு புண்ணியமாக போகட்டும். உன் திருவாயை மூடி கொண்டு கொஞ்சம் அமைதியாக வா. பிறகு நான் உனக்கு எல்லாம் விளக்கமாக சொல்கிறேன்

    அதோடு பேச்சை நிறுத்தி விட்டு அக்கம் பக்கம் வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டான் அவன்.

    பேருந்திற்குள் ஏறிய அந்த பெண்ணுக்கு அவளுடைய தோழிகள் பின் இருக்கையில் நகர்ந்து உட்கார இடம் கொடுத்தார்கள்.

    அவளுடைய நெருங்கிய தோழியும் சிறுவயது முதல் அவளுடன் பள்ளி படிப்பை முடித்தவளுமான அமுதா அவளிடம் சினந்து கொள்ள தொடங்கினாள். பார்க்க போனால் அவளிடம் அமுதா தவிர வேறு யாராலும் அப்படி எல்லாம் கோபபட்டு விட முடியாது. "ஏன் மது, ஒருநாளை போல தினம் இப்படி தாமதமாக வருகிறாயே. கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?’

    சீக்கிரம் வரணும் என்று தான் நினைப்பது. முடியவில்லை அசால்ட்டாக சொன்னவள் உதடு பிதுக்கி தோள்களைக் குலுக்கிக் கொண்டாள்.

    உனக்காக உன் மாமன் பஸ் புறப்படாமல் நிறுத்தி வைத்து விட்டார். எல்லாருக்கும் காலை நேரத்தில் தாமதமாகிறது.

    இல்லைப்பா. இன்னைக்கு தலை குளித்தேனா, அதான்..!

    ஏய், இந்த நொண்டி சாக்கெல்லாம் சொல்லாதே. பஸ் நிறுத்தி வைக்க உங்க மாமன் இல்லைன்னா இப்படி லேட்டா வருவியா?

    நானா அவரை பஸ்ஸை நிறுத்த சொன்னேன்?

    ஓ... நொடித்தாள். நீ சொல்லாமலே இவ்வளவு அராஜகம் செய்யுதே உங்க மாமன். இதிலே நீ சொல்ல வேற சொல்லிட்டேன்னு வை. அவ்வளவு தான்.

    சரிப்பா. விடுப்பா.

    கொஞ்சம் சீக்கிரம் வர பாரு. எங்களுக்கு தர்ம சங்கடமா இருக்கு. என்று பேருந்திற்குள் சுற்றுமுற்றும் ஒரு பார்வைப் பார்த்துக் கொண்டாள்.

    சரி. சரி. இனிமே சீக்கிரம் வந்துடறேன்

    இதே பேச்சை நீயும் எத்தனை வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கே.

    மேல்கொண்டு அவள் பேச முனையும் முன் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது.

    ஊருக்குள் நுழையும் முன் சாலையின் வலது புறம் இருந்தது அந்த பெண்கள் கல்லூரி. பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் எல்லோரும் இறங்கும் வரை பொறுமையுடன் நின்று கொண்டிருந்தது அந்த பேருந்து.

    வலது புறம் சென்று கொண்டிருந்த மதுவை அதாவது மதுமிதாவை பார்த்து கொண்டிருந்த தங்கராசுவின் சென்னை நண்பன் ரசனையுடன் சொன்னான். இவளுக்காக காத்து இருந்தாலும் தகும். எவ்வளவு அழகாக இருக்கிறாள். அவள் பின்னலை பாரேன். எத்தனை நீண்ட முடி. இடுப்பிற்கு கீழே எத்தனை அடர்த்தியாக இருக்கிறது. ம்..சென்னையில் இப்படி எல்லாம் பார்க்க முடிகிறது இல்லை. சிம்பிளா ஒரு காட்டான் சுடிதார் தான் போட்டிருக்கிறாள். ஆனாலும் நறுவிசாக அவளுக்கு மிகவும் பொருத்தமாக! அடடா, எ...ன்ன அழகு. இத்தனை நேரம் பேசிக்கொண்டும் எச்சரித்து கொண்டும் வந்ததை மறந்து கொஞ்சம் சத்தமாகவே சொன்னான் அவன்.

    அதுவரை தான் படித்து கொண்டிருந்த புத்தகத்திலிருந்து கண்களை உயர்த்தி கல்லூரியை நோக்கி சென்று கொண்டிருந்த மதுவை பார்த்தான் அபி என்கின்ற அபிமன்யு.

    சுடிதாரின் கழுத்து அவள் முதுகில் நன்றாக இறக்கி தைக்கபட்டிருந்தது. காலையில் குளித்த தலையை பின்னாமல் அப்படியே விட்டு நடுவில் மட்டும் சுடிதாருக்கு பொருத்தமாக ஒரு ரப்பர்பேண்ட் போட்டிருந்தாள்.

    அபியும் மனதிற்குள் அவனை ஆமோதித்தான் உண்மை தான். எத்தனை அழகாக இருக்கிறாள்

    அந்த ஊர் நிலவரப்படி இந்த நினைப்பு அபிக்கு நல்லதில்லை. அது அவனுக்கு மிக நன்றாகவே தெரியும்.

    என்ன செய்ய.?

    எப்போதுமே சூழ்நிலைகளுக்கு கட்டுபடுவதில்லையே மனம். அதற்கு ஒத்தாற்போல சூழ்நிலையை உருவாக்கி கொள்வதில் தன் முனைப்பு காட்டுவது என்பது தான் தொன்று தொட்டு மனதிற்கு உண்டான இயல்பு.

    அவன் மட்டும் விதிவிலக்கா என்ன?

    என்னவோ இந்த ஊரை பற்றி ரொம்ப பயம் காட்டினாயே. இப்போது சொல்.கேட்போம். உன் பில்ட் அப்பை.

    தங்கராசு அவனை தீர்க்கமாக

    Enjoying the preview?
    Page 1 of 1