Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathodu Ondragum Uravaley...
Manathodu Ondragum Uravaley...
Manathodu Ondragum Uravaley...
Ebook311 pages2 hours

Manathodu Ondragum Uravaley...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் ஆபத்துக் காலங்களில் எல்லாம் உடன் இருக்கும் வசுதாவை மணமுடித்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்பி அவள் பெற்றோரிடம் பெண் கேட்கிறான். தர மறுக்கிறார் அவர். அவரை மீறி வசுவால் வெளியே வர முடியவில்லை. தன் முதலாளியின் ஒரே மகளும் வசுதாவின் உயிர் தோழியுமான மாயாவை சந்தர்ப்பவசத்தால் மணம் முடிக்கிறான். மீண்டும் வசு அவன் வாழ்வில் இடைப்படுகிறாள். அவளை திருமணம் செய்ய வலியுறுத்துகிறாள் மாயா. மது மாயாவின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் மாயாவை பிரிகிறானா? வசுவை மணக்கிறானா? இனி கதைக்குள் போவோமா!

Languageதமிழ்
Release dateOct 21, 2023
ISBN6580147210253
Manathodu Ondragum Uravaley...

Read more from G. Shyamala Gopu

Related to Manathodu Ondragum Uravaley...

Related ebooks

Reviews for Manathodu Ondragum Uravaley...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathodu Ondragum Uravaley... - G. Shyamala Gopu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனதோடு ஒன்றாகும் உறவாலே...

    Manathodu Ondragum Uravaley...

    Author:

    G. சியாமளா கோபு

    G. Shyamala Gopu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/g-shyamala-gopu

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    முன்னுரை

    தன் ஆபத்துக் காலங்களில் எல்லாம் உடன் இருக்கும் வசுதாவை மணமுடித்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்பி அவள் பெற்றோரிடம் பெண் கேட்கிறான். தர மறுக்கிறார் அவர். அவரை மீறி வசுவால் வெளியே வர முடியவில்லை. தன் முதலாளியின் ஒரே மகளும் வசுதாவின் உயிர் தோழியுமான மாயாவை சந்தர்ப்பவசத்தால் மணம் முடிக்கிறான். மீண்டும் வசு அவன் வாழ்வில் இடைப்படுகிறாள். அவளை திருமணம் செய்ய வலியுறுத்துகிறாள் மாயா. மது மாயாவின் வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் மாயாவை பிரிகிறானா? வசுவை மணக்கிறானா? இனி கதைக்குள் போவோமா!

    என்னுரை

    இதோ ஒரு புதிய கதையுடன் வந்துவிட்டேன். சிறந்த எழுத்தளார் விருதுக்கான கதை. வழக்கம்போல உங்கள் ஆதரவை விமர்சனங்களாலும், காயின்களாலும் என்னை பின் தொடர்வதாலும் எதிர்பார்க்கிறேன். நன்றி.

    1

    தை மாதத்தில் தரையே குளிரும் என்பது பழமொழி. சாதாராணமான தரையே குளிரும்போது மலைகளின் ராணியான ஊட்டி எவ்வளவு குளிரக்கூடும்! அதுவும் முந்திய நாள் மாலையில் வழக்கத்தில் இல்லாத வழக்கமாக சாரல் மழை அடித்து சுற்றுவட்டாரமே சில்லென்று ஆன பிறகு சொல்லவும் வேண்டுமோ? நடு இரவில் குளிரின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கவே போர்த்தியிருந்த ரசாயையை இன்னும் இழுத்து முகத்தை நன்றாக போர்த்தி கொண்டான் மது என்று அழைக்கப்படும் மாதேஸ்வரன். ஆனாலும் அவன் தூக்கத்தை கெடுப்பதற்கென்றே கங்கணம் கட்டிக்கொண்டார் போல் கட்டிலின் பக்கவாட்டு மேசையில் இருந்த கைப்பேசி நிசப்தத்தை கிழித்துகொண்டு அவனை எழுப்பியது. ரசாயை விலக்கி கையை நீட்டி தூக்கமும் எரிச்சலுமாகவே அதை எடுத்தான்.

    ஹல்லோ

    என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?

    ம்

    ஹல்லோ

    ம்

    தூங்கறீங்களா

    அட அநியாயமே. தூங்கறவனை எழுப்பி விட்டுட்டு தூங்கறியான்னு கேக்கறியே. உனக்கே நியாயமா?

    என்னப்பா. ரொம்பத்தான் அலுத்துக்கறே. இப்போ டைம் என்ன

    என்ன?

    உங்களை...! இன்னைக்கு என்ன நாள்

    என்ன நாள்

    ஏங்க இப்படி வம்புபண்றீங்க?

    யாரு? நானு? தூங்கறவனை தூங்கவிடாம வம்பு பண்றது நீயா நானா?

    சரிப்பா. சாரி. இந்த நாள் உங்களுக்கு ஞாபகம் இருக்குமேன்னு நெனச்சேன்

    நீயே சொல்லு

    இன்னைக்கு வாலெண்டைன்ஸ் டே பிறந்தாச்சு

    ம். அப்படியா

    மணி பன்னண்டாச்சு

    அதற்கு மேல் தூங்க முடியவில்லை அவனால். போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டு கட்டிலில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்தான். இனி அவள் தூங்கவிடுவாளா? விடிய விடிய பேசுவாள் வசு என்கின்ற வசுமதி.

    ஹாப்பி வாலண்டைன்ஸ் டே வசு

    தேங்க்ஸ் டார்லிங். சேம் டூ யு

    திரும்ப நான் தேங்க்ஸ் சொல்லனுமா இப்போ?

    வேண்டாம். ஆனால் இந்த நாளை நினைவிருக்கிறதா உங்களுக்கு?

    அதை கேட்கத்தான் இந்த இரவில் என்னை எழுப்பினாயா?

    கோபமா?

    இல்லை வசு. உன்னிடம் மட்டும் என்னால் எப்பவுமே கோபப்பட முடியாது

    எப்பவும் நீங்கள் இப்படி சொல்வதுதான். இன்னைக்கு மட்டும் புதுசா என்ன?

    சரியாக சொன்னாய். ஆங். என்ன கேட்டே. இந்த நாளை மறக்க முடியுமா என்றா?

    ஆமாம். இந்த நாளை உங்களால் மறக்க முடியுமா? மீண்டும் கேட்டவளின் குரலில் ஒரு உற்சாகம் இருந்தது.

    மறக்ககூடியதா அது? என்றவனின் குரலில் அவளுடைய உற்சாகம் பிரதிபலித்தது.

    பெப்ரவரி பதினான்கு.

    போன வருடம். இதே நாள். காதலர் தினம். ஒரு குறிப்பிட்ட மதவாத கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. இன்றைய தினம் தமிழ்நாட்டில் எங்கேனும் காதலர்கள் ஜோடியாக தென்பட்டால் அங்கேயே அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிடுவது என்று. அதற்கு எதிர்ப்பும் ஆதரவும் என்று இரு வேறு தொலைகாட்சியில் வாதங்கள் நடந்து கொண்டிருந்தது.

    அன்று திருமண முகூர்த்தநாளும்கூட. பத்திரப்பதிவு அலுவலகம் ரொம்பவே பிசியாக இருந்தது. அன்றைக்கு நான்கைந்து பத்திரபதிவும் ரெண்டு கல்யாணமும் பதிவிட காத்திருந்தது. காலையில் ஏதோ கல்யாணத்திற்கு போய்விட்டு வழக்கத்திற்கும் சற்று தாமதமாகவே பதிவாளர் வந்ததும் கல்யாண முகூர்த்த நேரம் முடிந்து விடக்கூடும் அதற்குள் கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்று அந்த ஜோடிகளைச் சார்ந்தவர்கள் பரபரத்து கொண்டிருக்கவே மற்ற பதிவுகள் அனைத்தும் மதியத்திற்கு மேல்தான் என்று அலுவலகத்தில் அறிவித்துவிட்டிருந்தார்கள்.

    அதுவரை அங்கே காத்திருந்த வசுமதி மதிய உணவு இடைவேளையில் எதிரே இருந்த பூங்காவில் போய் அமர்ந்தாள். அந்த மலையின் மேலே மேற்கு பகுதியில் ஒரு சிறு எஸ்டேட்டின் உரிமையாளரான அன்பழகனின் மகள்தான் வசுமதி. அவர்கள் எஸ்டேட்டின் அருகில் இருந்த ஒரு வீட்டுமனையை கிரயம் முடிக்கவென்று வந்திருந்தாள். அவளோடு வந்திருந்தவர்கள் அத்தனை பேருமே ஆண்கள் ஆதலால் அவர்களுடன் உணவிற்கு போவதற்கு இஷ்டமில்லாமல் அவர்களை மட்டும் அனுப்பிவிட்டு தன் வரை இங்கே பூங்காவில் இருப்பது நலமென வந்து அமர்ந்தாள்.

    அவள் அமர்ந்துகொண்ட, மூவர் அமரக்கூடிய இருக்கையின் வலது ஓரத்தில் ஒரு வாலிபன் அமர்ந்திருந்தான். இவள் வந்து அமருவதை கவனிக்காமல் கைப்பேசியில் கவனமாக இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அமருவதற்கு தோதாதாக வேறு இடம் கிடைக்காமல் வேறு வழியில்லாமல் அவளும் அதே இருக்கையின் இடது ஓரத்தில் உட்கார்ந்தாள். அன்று பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியதால் கிடைத்த இடத்தை விட்டுவிடக் கூடாது என்பது அவள் எண்ணம்.

    அப்போது மிகவும் வயதான ஒரு மனிதர் அவளிடம் வந்து அவளை சற்று நகர்ந்து அமரும்படி சொன்னார்.

    நீங்கள் இப்படி உட்காருங்கள் தாத்தா இன்னும் ஓரத்தில் நகர்ந்து இருவருக்கும் இடையில் இடம் விட்டாள்.

    இல்லம்மா. நீ அந்த பக்கம் தள்ளி உட்காரேன்

    அவன் புறம் திரும்பி பார்த்தாள். அவனோ இங்கே நடப்பது எதையும் அறியாதவனாக கைப்பேசியில் மிகவும் பிசியாக இருந்தான்.

    ஆனாலும் அந்த வயதானவரைப் பார்த்து மீண்டும் சொன்னாள். தாத்தா, இங்கே வந்து உட்காருங்க ப்ளீஸ்.

    இல்லம்மா வாயிலே வெத்தில பாக்கு இருக்கு. ஒவ்வொரு தடவையும் எழுந்து எழுந்துபோய் துப்ப முடியாது. நீ அங்கிட்டு தள்ளினியானா நான் இங்கிட்டு உட்காருவேன். அப்படியே சுளுவா துப்பிக்கிட முடியும் அவள் சூழ்நிலை புரிந்தாலும் இன்றைய கூட்டத்தில் அமருவதற்கு வேறு இடம் இல்லாததால் அவளிடம் சற்றே கெஞ்சியது போல கேட்டார். சரி இவன் அருகில் அமருவதினால் என்ன ஆகி விடப்போகிறது என்று நினைத்து சற்று தள்ளி அவருக்கு இடம் கொடுத்து விட்டு அவனருகில் நெருங்கி அமர்ந்தாள்.

    அவன் கைப்பேசியில் சுற்றம் மறந்து பேசி முடித்துவிட்டு திரும்பி சூழ்நிலையை பார்த்தான். மிகவும் அருகில் அவள் இருந்தாள். என்ன இப்படி? யார் இது? இத்தனை அருகில்? என்ற புதிராய் பார்க்கும் அவன் பார்வையை தவிர்க்க வேறுபுறம் திரும்பிக் கொண்டாள் அவள். இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். வாயில் வெத்திலைப்பாக்குடன் நடுநடுவே பேச முற்பட்ட வயதானவரின் பேச்சு புரியாமல் ஏதோ அவ்வப்போது அவருக்கு தலையாட்டிக் கொண்டிருந்தாள் வசுமதி. தந்தையும் மகளும் போலும் என்று எண்ணிக்கொண்டான் அவன். எனவே அந்த வயதானவரும் அவளும் ஒன்றாக வந்திருப்பவர்கள் போலும் என்று எண்ணி தன் கவனத்தை வேறுபுறம் திருப்பினான் அவன்.

    அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

    2

    ஒரு கூட்டமாக கையில் வண்ண நிற கொடி ஏந்தி வந்த பெருங்கும்பல் பூங்காவின் உள்ளே ஜோடி ஜோடியாக அமர்ந்திருந்தவர்களிடம் ஏதோதோ வாக்கு வாதத்தில் ஈடுபட்டது. அதை கேள்விப்பட்டு தனியார் தொலைக்காட்சி சேனல்களும் வந்து குவிந்துவிட்டது.

    அதில் தலைமை ஏற்று இருப்பவர் போன்று காணப்பட்டவன் இவர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் வந்து அவனிடம் என்னவோ கேட்டான். தன் வரையில் ஏதோ கவனமாக இருந்தவன் அந்த கும்பலின் தலைவன் என்ன கேட்கிறான் என்பதை புரியாமலேயே அவனை நிமிர்ந்து பார்த்தான்.

    என்னடா பார்க்கிறே? இந்த பொண்ணோட இங்கே குசாலா வரத்தெரியுது. அவளுக்கு தாலி கட்டச் சொன்னால் மட்டும் கட்டுவதற்கு கசக்குதோ?

    உண்மையிலேயே அவன் திகைத்துதான் போனான். அவளைத் திரும்பி பார்த்தான். அவளுமே இங்கே என்ன நடக்கிறது என்பது புரியாமலே அந்த கும்பல் தலைவனிடம் கேட்டாள்.

    என்ன சார்? என்ன சொல்றீங்க?

    நீ என்னம்மா இவ்வளவு ஷாக் காட்டறே?

    நீங்க என்ன பேசறீங்கன்னே புரியலை

    எங்களுக்கு புரியுதே என்றவன் திரும்பி அவனுடைய கூட்டத்தைப் பார்த்து என்னங்கடா உங்களுக்கு புரியுதா? என்றான்.

    ஓ. புரியுதே. ரொம்பவே நல்லா புரியுது தலைவா கோரசாக கோராமையாக இளித்தார்கள். இவர்களின் அடாவடித்தனத்தால் டென் சனாகி போனவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். அவன் அந்த வாலிபன் அது தான் மது என்கின்ற மாதேஸ்வரன் ஒரு ஸ்டெப் முன்னே வந்து தைரியமாக கேட்டான்.

    என்ன சார் புரிஞ்சி போச்சு உங்களுக்கு இப்போ?

    அடங் கொய்யாலே. பார்றா. சாருக்கு கோபம் வருது. ம். அவனை தோளைப் பிடித்து பின்னால் தள்ளியவாறு சொன்னான்.

    உன் லவரை கூட்டிகிட்டு குசாலா சுத்த தெரியுது. நாங்க தான் எச்சரிக்கை செஞ்சிருந்தோமே. காதலர் தினம் அது இதுன்னு இன்னைக்கு எவனாவது ஜோடியா திரிஞ்சிங்கீனா புடிச்சி கண்ணாலம் கட்டி வச்சிருவோம்னு. பக்கலையா?

    இதெல்லாம் படிக்க நேரமேது? மேலும் இன்னைக்கு காதலர்கள் தினம்னு இப்போ நீங்க சொன்னதுக்குப் பிறகுதான் தெரியுது

    நீ தெனம் இத்தை இழுத்துகினு சுத்து. நான் கேட்கலை. ஆனால் நம்ம கலாசாரத்துக்கு எதிரா இன்னைக்கு காதலர் தினம்னு வெளியே சுத்தறது ஒத்தை ரோசாப்பூ வாங்கி தருவது, பொது இடத்திலே அசிங்கம் பண்ணுவது இதெல்லாம் வெச்சிக்கிட்டீங்கன்னா பார்க்க இடத்திலேயே தாலியைக் கொடுத்து கண்ணாலம் கட்டி வெச்சிரமாட்டோமா?

    பேச்சு எங்கேயோ போவதை உணர்ந்து இருவரில் முதலில் சுதாரித்து கொண்டவள் வசுமதி தான். மது இன்றைக்கு காதலர் தினம் என்று தெரியாது என்று சொல்வதினால் மறைமுகமாக நாங்கள் காதலர்கள் என்று சொல்வதாக அர்த்தமாகிறது. ஆனால் இவன் யாரோ. நான் தேவையில்லாமல் இந்த வம்பில் மாட்டிக் கொள்ளக் கூடாது.

    சார். உங்கள் புனிதமான எண்ணம் பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் நாங்கள் காதலர்கள் இல்லையே

    சுதாரித்து கொண்ட மது வசுவுடன் சேர்ந்து அவனிடம் மல்லுக் கட்டினான் அதானே. ஏன் சார் நீங்களாகவே எங்களை காதலர்கள் என்று நினைத்துக் கொள்வீர்களோ?

    ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்திலே உட்கார்ந்திருக்கீங்க. உங்களைப் பார்த்தாலே லவர்ஸ்னு தெரியுது. இந்த வேலை எல்லாம் எங்களிடம் ஆகாது

    ஏன் சார். பக்கத்து பக்கத்தாலே உட்கார்ந்திருந்தால் காதலர்களா?

    இல்லையா? கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தால்தான் காதலர்களா?

    சார் அசிங்கமா பேசாதீங்க வசு கோபத்தின் உச்சியில் இருந்தாள்.

    நான் பேசுவதுதான் அசிங்கம். நீங்க செய்றது அசிங்கம் இல்லை

    அதற்குள் டீ.வி.சேனல்ஸ் வந்து இவர்களை சுற்றிக்கொண்டது. பெரிய களேபரமாக இருந்தது அந்த இடம். காலையில் இருந்து இந்த சுற்றுலா தலம் முழுதும் சுற்றி வந்தும் ஒரு ஜோடிகூட கண்ணில் சரியாக அகப்படவில்லை. இவர்களுடைய அராத்தலுக்கு பயந்து தானோ என்னவோ இன்றைக்கு என்று ஒரு காதல் ஜோடிகூட அங்கே இல்லை. அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை அந்த கும்பலால். அவர்கள் வலிமையானவர்கள் என்பதை இங்கே இப்போது காட்டுவதற்கு அவர்களுக்கு கிடைத்த ஒரே சந்தர்ப்பம் இது தான். அதனால் அதை தவற விடும் மூடில் இல்லை. போதாக்குறைக்கு டி.வி சேனல் வேறு முழு கவரேஜ் செய்கிறது. என்ன ஒரு அரிய பொன்னான வாய்ப்பு. இன்றைக்கு பண்ணுகிற அலப்பறையில் வருகிற உள்ளாட்சி தேர்தலில் குறைந்தபட்சம் ஒரு கவுன்சிலர் சீட்டாவது வாங்கி விட வேண்டாமா?

    அருகில் இருந்த வயதானவர் நான் வரும்போது ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கத்தில்தான் இருந்தார்கள். ரெண்டு பேரும் நீங்கள் சொல்வது போல் காதலர்கள் எல்லாம் இல்லை

    யோவ் பெரிசு. நீ வாயை மூடிக்கிட்டு கம்முனு இரு

    தம்பி தெரியாமல் பேசாதே

    தெரியும். தெரியும். நல்லாவே தெரியும். நீ தான் இவங்களுக்கு மாமா வேலை செய்றேன்னு

    அதற்கு மேல் அவரால் அவர்களுடைய ஏச்சையும் பேச்சையும் பொறுத்துகொள்ள முடியவில்லை. அங்கே இருந்து நகர்ந்தார் அவர். ஆனால் ராமபிரானுக்கு பாலம் கட்ட உதவிய சின்ன பிராணியான அணிலைப் போல போகும் வழியில் சிக்னலில் நின்றிருந்த போலீஸ் வண்டியின் அருகில் போய் உள்ளே நடக்கும் அக்குருமத்தை நைசாக அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் சொல்லி விட்டே சென்றார். அங்கே விரைந்து வந்த போலீசைக் கண்டும் அந்த கும்பல் பயந்து கலைந்து ஓடாமல் அங்கேயே நின்று அவர் முன்னாலேயே மல்லுக்கட்டி கொண்டிருந்தது.

    என்னம்மா. நீங்கள் லவர்சா?

    இல்லை சார்

    நீ சொல்லுயா?

    இவங்களை யாருன்னே எனக்குத் தெரியாது சார்

    பின்னே ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் எதுக்கு இங்கே உக்காந்திருந்தீங்க?

    என்ன சார் அநியாயமா இருக்கு. ரெண்டு பேரும் ஒண்ணா உக்காந்திருந்தால் லவர்ஸ் ஆயிடுவாங்களா?

    ஒண்ணா உக்காந்திருந்தால் லவர்ஸ் கிடையாது. நானும் ஒத்துக்கறேன். ஆனால் நீங்க ரெண்டு பேரும் எப்படி நெருக்கமா உக்காந்திருந்தீங்க

    சார். இந்தாளு வந்ததிலிருந்து அசிங்கமாகவே பேசறாரு

    ஏன்மா. நான் பேசறதுதான் அசிங்கம். நீங்க செய்யறது அசிங்கம் இல்லை. அப்படியா?

    யோவ். நீ சும்மா இருய்யா. நான் விசாரிக்கிறேன் இல்லே

    சார் நாங்க அப்படியே லவர்ஸ் ஆ இருந்தாலும் இவுங்களுக்கு என்ன சார்?

    வாடி என் ராஜாத்தி. உண்மையை ஒப்புகிட்டேயே. அதுபோதும். இந்தா இந்த தாலியைப் பிடி. அவனை கட்டச் சொல்லு

    சார். தாலி கட்டிக்கிடுவதும் கட்டிகிடாததும் எங்க இஷ்டம். உங்களுக்கு என்ன வந்தது இப்போ?

    அது சரி. பொது இடத்திலே அசிங்கம் பண்ணினால் பார்த்துகிட்டு சும்மா இருப்போமா?

    என்ன இன்ஸ்பெக்டர் சார். இவரு பேசறதையே பேசிக்கிட்டு இருக்காரு.

    என்னப்பா. ரொம்பத்தான் ஜிம்பரே. பள்ளிகூடத்து பையனாட்டம் இன்ஸ்பெக்டர்ட்ட கோள் சொல்லிட்டா ஆச்சா?

    சார். இந்த மேடம் யாருன்னே எனக்குத் தெரியாது சார். இங்கே பாருங்க. நான் இன்னைக்கு அதோ எதிர்லே இருக்கே ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ் அதுக்கு கிரையத்துக்கு வந்தேன்

    கிரயம் பண்ண வந்தவங்களுக்கு பார்க்கில் என்ன வேலை?

    யோவ். கொஞ்சம் சும்மா இரு. விசாரிக்கிறேன் இல்லே

    சார், நானும் அதேபோல கிரயத்துக்குத்தான் வந்தேன். இங்கே பாருங்க. ஸ்டாம்ப் பேப்பர்ஸ். காலையில் இருந்து அங்கே கல்யாண கூட்டம் இருக்கவே மதிய சாப்பாட்டிற்குப் பிறகு வரச் சொல்லி இருக்காங்க. அதுவரைக்கும் இப்படி நிழலா வந்து உட்காரலாமே என்று வந்தேன். அதற்குள் இத்தனை களேபரம்

    அதே தான் சார் நானும் சொல்ல வந்தது. இதோ பாருங்க என்னுடைய பேப்பர்ஸ்

    இருவர் நீட்டிய பேப்பர்ஸை வாங்கிப் பார்த்தார். பார்த்துவிட்டு மதுவிடம் கேட்டார். நீங்க வாணி எஸ்ட்டேட் மேனேஜரா?

    ஆமாம் சார். உங்களுக்கு எங்க எஸ்டேட்டைத் தெரியுமா?

    தெரியும். மேற்கொண்டு என்னவோ சொல்லப் போனவரை இடைமறித்து அந்த கும்பலின் தலைவன் கூப்பாடு போட்டான்.

    சார். நீங்க ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணா. சார் அனாவசியமா நீங்க இதிலே தலையிடாதீங்க

    என்னையா பண்ணுவே?

    சார். இவங்களை நாங்கள் நம்பலை. எங்களிடம் அவர்களை விட்டுவிடுங்கள். நாங்கள் பார்த்து கொள்கிறோம்

    அதற்குள், லைவ் டெலிகாஸ்ட் ஓடிக்கொண்டிருந்ததினால் கேமிரா முன் அங்கே கூடியிருந்த மக்கள் நாட்டில் சுதந்திரமே இல்லாமல் போச்சு என்று அங்கலாய்ப்பதை காட்டிக் கொண்டிருந்தார்கள். சுற்றுலா ஸ்தலமானதால் கூட்டம் வேறு அதிகமாக இருந்தது. ட்ராபிக் ஜாம். இவர்களுக்கு கல்யாணம் ஆகுமா ஆகாதா என்று இந்நேரம் உலகமெங்கும் வர்ணஜாலம் காட்டும் தொலைகாட்சிகளில் தமிழர்கள் பார்த்து கொண்டிருந்தார்கள். அந்நேரம் இன்ஸ்பெக்டரின் கைப்பேசி அழைத்தது. உயர் அதிகாரி பேசியிருந்திருப்பார் போலும். சரிங்க சார். நான் பார்த்துக்கிறேன் என்று முடித்துவிட்டு கூட்டத்தைக் கலைக்க சொல்லி உடன் வந்திருந்த காவலர்களைப் பணித்தார். அதற்குள் அந்த கும்பலின் தலைவன், இந்நேரம் டிவியில் வரும் தன்னை கவுன்சிலர் லெவலில் இருந்து மந்திரி லெவலுக்கு கற்பனை செய்து கொண்டு பெரிய தோரணையுடன் இன்ஸ்பெக்டரை மிரட்டும் தொனியில் மீண்டும் சொன்னான்.

    சார். அவங்களை என்னண்டை விடுங்க. நான் இன்னைக்கு அவர்களுக்கு கல்யாணம் பண்ணாமல் விடப்போவதில்லை. கொஞ்சம் தள்ளி நின்னு இங்கே என்ன நடக்குதுன்னு மட்டும் பாருங்க

    நான் பார்ப்பது அப்புறம் இருக்கட்டும். முதலில் நீ உன்னை சுற்றிப்பாரு

    அவர் சொன்னதும்தான் டீவி கேமிராவை விட்டு மக்கள் கூட்டத்தில் தன் பார்வையை திருப்பினான். மக்கள் அவனிடமும் அவன் கும்பலிடமும் கொந்தளித்துப் போயிருந்தார்கள். உள்மனசிலே மந்திரி கனவு கலைந்து கொஞ்சம் ஜெர்க் ஆனான்.

    ந்யுசென்ஸ் கேசில் உன்னை கைது பண்றேன்

    என்னது?

    உன்னை கைது பண்றேன்

    ஆங். நான் யாருன்னு தெரியாம பேசாதே. என் தலைவரிடம் பேசு

    யோவ். உன் தலைவர்தான் டிவியில் லைவ் ஷோ பார்த்துட்டு உன் அராத்தலையும் மக்களின் வெறுப்பையும் பார்த்துட்டு உன்னை அரெஸ்ட் பண்ணச்சொல்லி போன் பண்ணினாரு

    "பொய். டேய் இவனுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1