Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Naanavena?
Naan Naanavena?
Naan Naanavena?
Ebook457 pages4 hours

Naan Naanavena?

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

மிக மிக இளம்பெண்ணான நாயகி பற்பல இன்னல்களுக்கு உள்ளாகிறாள். தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களால் அவள் மீட்சி அடைகிறாளா? அல்லது மேலும் துன்பத்துக்கு உள்ளாகிறாளா? என்பதே கதை.

Languageதமிழ்
Release dateJan 7, 2022
ISBN6580160209343
Naan Naanavena?

Read more from Gloria Catchivendar

Related to Naan Naanavena?

Related ebooks

Reviews for Naan Naanavena?

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Naanavena? - Gloria Catchivendar

    https://www.pustaka.co.in

    நான் நானாவேனா?

    Naan Naanavena?

    Author:

    குளோரியா கட்சிவேந்தர்

    Gloria Catchivendar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gloria-catchivendar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஜோதி 01

    ஜோதி 02

    ஜோதி 03

    ஜோதி 04

    ஜோதி 05

    ஜோதி 06

    ஜோதி 07

    ஜோதி 08

    ஜோதி 09

    ஜோதி 10

    ஜோதி 11

    ஜோதி 12

    ஜோதி 13

    ஜோதி 14

    ஜோதி 15

    ஜோதி 16

    ஜோதி 17

    ஜோதி 18

    ஜோதி 19

    ஜோதி 20

    ஜோதி 21

    ஜோதி 22

    ஜோதி 23

    ஜோதி 24

    ஜோதி 25

    ஜோதி 26

    ஜோதி 01

    திருநெல்வேலி... இந்தியாவின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நகரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி பழமையான நகரம் என்பதற்கு அரிச்சநல்லூர் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த முதுமக்கள் தாழியே சிறந்த சான்று. இவ்வளவு சிறப்பு மிகுந்த நகரத்தில் அம்பாசமுத்திரத்தில் தொடங்குகிறது இன்றைய விடியல், பல புதிர்களை தன்னுள் அடக்கியபடி!

    அம்பாசமுத்திரத்தின் புறநகர் பகுதி ஒன்றில், ‘வீ கேர்’ (we care) என்ற சிறிய தனியார் மருத்துவமனை அந்தப் பகல் நேரத்திலும் மிகவும் பரபரப்பாக இருந்தது. அந்தப் பகுதியிலிருந்த நடுத்தர மக்கள் மத்தியில் கைராசியான மருத்துவமனை என்ற பெயரோடு, புகழையும், மக்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.

    அங்கே தலைமை மருத்துவராக இருந்த டீன் ரத்தினவேல் அவர்களின் உழைப்பில் உருவானது தான் அந்த மருத்துவமனை! அதற்குத் தோள் கொடுத்தவர் அவர் மனைவி கௌரி! இதோ, இப்போது தங்கள் அறையில் தன் எதிரே இருந்த நர்ஸிடம் மஜோ வந்தாச்சா? வந்ததும் என்னைப் பார்க்கச் சொல்லுங்க என்ற கௌரி தன் வேலையிலே கவனமாக இருக்க,

    டாக்டர், அவங்களுக்கு ரெண்டு நாளா தொடர்ந்து நைட் ட்யூட்டி! ஸோ, இன்னைக்கு மதியம் தான் வருவாங்க என்றதும்

    யோசனையாக ஒ.. அப்போ துளசி வந்தாச்சா?

    ம்ம்ம்.. வந்துட்டாங்க டாக்டர்

    அப்போ அவங்களை வரச் சொல்லுங்க என்றவர், ‘நீ போகலாம்’ என்ற பாவனையில் தன் வேலையைப் பார்க்க, அந்த செல்வி நர்ஸின் முகம் கடுப்புக்கு சென்றது. அதே கடுத்த முகத்தோடு துளசியைத் தேடிப் போக

    அவள் எதிரே வந்த ஒரு பெண்மணி சிஸ்டர், மஜோ சிஸ்டர் எப்போ வருவாங்க? என் பொண்ணு தேடிட்டே இருக்கா எனவும்

    முயன்று சிரிப்பை வரவழைத்துக் கொண்ட செல்வி மதியம் வந்துடுவாங்க; ஏன் என்ன விஷயம்? என்று உதவும் நோக்கில் கேட்கவும்

    இல்லை சிஸ்டர்.. நேத்து பாப்பா, ஆபரேஷனுக்குப் போக முன்னே ரொம்ப பயந்தா; மஜோ சிஸ்டர் தான் கூட இருந்து தைரியம் சொல்லி, விளையாட்டுக் காட்டி ஆபரேஷன் தியேட்டருக்கு அனுப்பி வைச்சாங்க. அதான், பாப்பா கண்ணு முழிச்சதில் இருந்து அவங்களைத் தேடுறா

    முகம் சுருங்க ஹோ.. அவங்களுக்கு இன்னைக்கு மதியம் தான் ட்யூட்டி, அப்போ வந்து பார்ப்பாங்க என்றவள் கடுத்த முகத்தோடு அவர்களைத் தாண்டிச் செல்ல, எதிரே வந்த நர்ஸ் அவளைத் தடுத்து செல்வி என்று ஆரம்பிக்கும் போதே,

    என்ன? நீயும் மஜோவைத்தான் தேடுறியா? இங்கே அவ நர்ஸா வந்து ரெண்டு வருஷம் கூட ஆகலை; எல்லோரும் அவளைக் கொண்டாடுறாங்க! இந்த ஹாஸ்பிட்டலில் அவ மட்டும் தான் நர்ஸா? நாமெல்லாம் யாரு? அவ நர்ஸா.. இல்லை இந்த ஹாஸ்பிட்டலுக்கே மகாராணியா? என்று கடுகாய் பொரிய

    அவளைப் புன்னகையோடு பார்த்த அந்த நர்ஸ் சொன்னாலும் சொல்லாட்டியும் அவ இந்த ஹாஸ்பிட்டலுக்கு ராணி தான்! அவ குணத்தால!! நாம்ப வேலையா பார்க்கும் இந்தத் தொழிலை அவ உணர்வுபூர்வமா செய்யுறா! நீ வந்து ஒரு வருஷம் தான் ஆகுது ; அவளுக்கும் இந்த ஹாஸ்பிட்டலுக்கும் ஏழு வருஷ பந்தம்! அதெல்லாம் உனக்குப் புரியாது; அதுமட்டும் இல்லாம, டாக்டர் கெளரிக்கு அவ செல்லப் பொண்ணு! என் கிட்ட உளறி வச்ச மாதிரி யார் கிட்டேயும் உளறாதே, என்று கடிந்தாள்.

    இங்கே எல்லோராலும் மகாராணி என்று போற்றப்பட்ட மஜோ என்கிற மகரஜோதி.. இருபத்திரண்டு வயது மங்கை. வயதுக்கே உரிய செழுமையோடு, கோதுமை நிறம், ஆளை விழுங்கும் கண்கள், சிறிய கூர்மையான நாசி, உதட்டோரம் சிறிய மச்சம், சிரித்தால் குழி விழும் கன்னம், என்று காண்போரை வசீகரிக்கும் தோற்றம்! செய்யும் தொழில் கொடுத்த முதிர்ச்சியும், எவ்வித அலங்காரமும் இன்றி அறிவுச் சுடர் விடும் பெண்ணாக மின்னினாள்!

    இப்போது தன் எதிரே இருந்த ஆறு வயது சிறுமியோடு மல்லுக்கட்டி கொண்டு இருந்தாள். அம்மு செல்லம், ஒவ்வொரு திங்கட்கிழமையும் நீ இப்படி தான் பண்ணுற; தலையை ஒழுங்கா காட்டு; ஏற்கனவே ஸ்கூலுக்கு ஒரு மணி நேரம் லேட்! ஒவ்வொரு திங்கட்கிழமையும் உன் டீச்சர் கிட்ட நான் தான் திட்டு வாங்குறேன் என்று தலை சீவ அடம்பிடிக்கும் பெண்ணிடம் கெஞ்ச,

    அந்த வாண்டோ முகத்தை சுருக்கிய படி போ சித்தா! நீயும் பேட் (bad), அம்மாவும் பேட் (bad)! இந்த வாரமும் நான் தூங்கிட்டு இருக்கும்போது அம்மா என்னை தூக்கிட்டு வந்துட்டாங்க என்றவள் உதடு பிதுங்க அழுகைக்கு போக

    இல்லை அம்மு, வெண்மதி பாப்பா குட் கேர்ள் தானே? ஸ்கூலுக்குப் போகும்போது அழ மாட்டாங்களே? என்று சமாதானம் செய்ய

    சிறு பிள்ளை அவள் கன்னத்தைப் பற்றி சித்தா, ப்ளீஸ்! நான் அப்பா கூடவே இருக்கேனே! அங்கே அப்பா, தாத்தா, அப்பத்தா, சித்தப்பா, சித்தா, விச்சு அண்ணா, கிச்சு அண்ணா, அத்தை, மாமா, லில்லி அக்கா எல்லோரும் இருக்காங்க; நான் அங்கே படிச்சா, அப்பத்தா தினமும் ஸ்கூலுக்கே சாப்பாடு எடுத்து வருவாங்களாம், இங்கே யாரும் இல்லை! என்று சோகமாகச் சொல்ல,

    மஜோவுக்கு கண்கள் கலங்கியே போனது! ஏன் செல்லம், உனக்கு அம்மா, சித்தா கூட இருக்க வேண்டாமா?

    கேட்டவளை, ‘வேண்டும்’ என்பது போல இறுக அணைத்த குழந்தை, வேணும் சித்தா! ஆனா நான் அங்கேயே இருக்கேன்; நீங்க வீக் எண்டு வந்து பாருங்க, என்று தீர்வு கிடைத்த பாவனையில் சொல்ல,

    தந்தையின் அன்புக்கு ஏங்கும் குழந்தையைப் பார்த்தபோது, ‘தன்னால் தான் தாயும் தந்தையும் பிரிந்து இருக்க, இந்தப் பிள்ளை வாடுகிறதோ?’ என்று தோன்ற, அது உண்மையே என்று மெய்பிப்பது போல சித்தா, அப்பத்தா உன்னை அப்பா கிட்ட திட்டுனாங்க; உனக்காக தான் அம்மா இங்கே இருக்காங்களாம், உன்னால தான் நிம்மதி போகுதாம், அப்படியா? கேட்ட குழந்தையின் பேச்சை கவனிக்காதவள் போல

    அதன் ஸ்கூல் பையை கையில் எடுத்துக்கொண்டு குழந்தையோடு வீட்டைப் பூட்டிவிட்டு வீதியில் இறங்கியவள் அம்மு, பெரியவங்க நிறைய பேசுவாங்க, அதை எல்லாம் குட்டிப் பிள்ளைங்க கவனிக்க கூடாது ; அது தப்பு, புரியுதா? என்றுவிட்டு குழந்தையின் கவனத்தை வேறு புறம் திருப்பியவள், அதை ஸ்கூலில் விட்டு விட்டு அவள் வகுப்பு ஆசிரியரிடம் தாமதமானதுக்கு வழக்கமாக வாங்கும் திட்டையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தவளுக்கு மனம் சோர்ந்தே போனது.

    போதாதற்கு, முந்தின நாள், இரவு ட்யூட்டி பார்த்ததால், கண்கள் தூக்கத்திற்குக் கெஞ்ச, மெல்ல வீட்டை நோக்கி வந்தவளின் மனம் குழந்தையைச் சுற்றி வந்தது.

    பாவம் சின்னக் குழந்தை! துளசியின் ஒரே செல்லக் குழந்தை! துளசியின் கணவரின் ஊர் கொண்டமங்கலம்! அம்பாசமுத்திரத்தில் இருந்து இரண்டு மணி நேரத் தொலைவு. துளசியின் வேலை நிமித்தமாக அவள் இங்கேயும், கணவர் மணிமாறன் அங்கேயும், இருக்க வேண்டி ஆகிவிட்டது, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சாயங்காலம் துளசி அங்கே சென்று விடுவாள். அதே போல ஞாயிறு சாயங்காலம் அங்கிருந்து கிளம்பி வருவாள்.

    இப்போது பிள்ளை வளர வளர அதில் தடை; சந்தோஷமாக தந்தை குடும்பத்தைப் பார்க்கப் போகும் பிள்ளைக்கு, திரும்ப மனம் வராது; கிளம்ப மாட்டாமல் அழுது அடம் பிடிக்கும் பிள்ளையை, திங்கள் அதிகாலை உறக்கத்திலேயே தூக்கி வரும் துளசி, ஒய்வு இல்லாமல் வேலைக்கு ஓட, குழந்தையின் தூக்கத்தைக் கலைத்து கிளப்பி பள்ளிக்கு கொண்டு விடும் பொறுப்பு மஜோவுக்கு!

    அதிலும் இப்போது, மணிமாறனின் தொழில் நன்றாகவே போக, அவர்கள் குடும்பத்தாருக்கு, துளசி வேலைக்குப் போவதில் சற்றும் விருப்பம் இல்லாமல் போக, அது கோபமாக மஜோ மேல் திரும்ப ஆரம்பித்து இருந்தது.

    நினைவுகளோடு வீட்டுக்கு வந்தவளுக்கு, இரவுப் பணியின் நிமித்தமாக உறக்கம் கண்களைக் கட்டி இழுக்க, படுக்கையில் தலை சாய்த்தவளை செல்லின் ஓசை இழுக்க, மணிமாறனின் நம்பரைக் கண்டதும் புன்னகையோடு எடுத்தவள் மாமா எப்படி இருக்கீங்க? என்றாள் துள்ளலாக

    நல்லா இருக்கேண்டா; துளசி வேலைக்கு போயிட்டாளா?

    ம்ம்ம்.. மாமா! வழக்கம் போல பிள்ளையை வாசலிலே என் கிட்ட கொடுத்துட்டு, போனாங்க

    நீ எப்படி இருக்க மஜோ? எப்போ ட்யூட்டி?

    எனக்கு என்ன மாமா? நல்லா இருக்கேன்! மதியம் ட்யூட்டிக்குப் போகணும்

    ஹோ.. மஜோ, நான் சொல்லுறதுக்கு, எடுத்ததும் வேண்டாம்னு சொல்லாதே; ரெண்டு வரன் வந்திருக்கு, ஒரு மாப்பிள்ளை மலேசியா, இன்னொண்ணு ஆஸ்திரேலியா! உனக்கு எது பிடிக்குதுன்னு சொன்னா..

    மாமா ப்ளீஸ், என்னை விட்டுடுங்க; இப்போதைக்கு இந்த வேலை இருக்கு; அது மட்டும் தான் என் வாழ்க்கை மாமா! வேற எதுவும்..

    கோபத்தை அடக்கிய குரலில் மஜோ, நான் மறுத்து பேசாதேன்னு சொன்னேன் தானே? உனக்கு அம்பத்திரண்டு வயசு ஆகலை; இருபத்திரண்டு வயசு தான் ஆகுது! வாழ்ந்து முடிச்சா போல பேசாதே! உனக்கு ஒரு வாழ்வை அமைச்சுக் கொடுக்காம உன் அக்கா உன்னை விட்டு வர மாட்டா.. அதுவும் இல்லாம எங்களுக்கும் நீ குடும்பமா வாழணும்னு ஆசை இருக்காதா?

    ப்ளீஸ் மாமா.. எனக்கு அந்த ஆசை இல்லை; அக்காவை நான் சமாதானப்படுத்தி அம்முவோட அங்கே அனுப்பி வைக்கிறேன்

    ஹோ.. அப்போ நீ? உன்னை, எப்படியாவது இருந்துக்கோன்னு, எங்களை சுயநலமா விடச் சொல்லுறியா?

    மாமா நான்.. என்றும் போதே அந்த பக்கம் டேய்.. ஃபோனை என் கிட்ட கொடு, அவ கிட்ட எதுக்கு கெஞ்சிட்டு இருக்கே? என்று ஃபோனை வாங்கி இந்தாடி, இப்போ அவன் ரெண்டு மாப்பிள்ளை போட்டோவையும் உனக்கு அனுப்புவான், யாரைப் பிடிச்சு இருக்குன்னு மட்டும் சொல்லு; வேற எதுவும் சொல்ல உனக்கு அனுமதி இல்லை என்று கம்பீரமாக உத்தரவிட்டார் மணிமாறனின் அன்னை வரலக்ஷ்மி.

    குரல் அடங்க அத்தை ப்ளீஸ், எனக்கு கல்யாணம் வேண்டாம்,

    திரும்ப கீறல் விழுந்த ரெக்கார்ட் போல அதையே சொல்லாதே! ரெண்டு மாப்பிள்ளையில் யாரைப் பிடிச்சு இருக்குன்னு மட்டும் சொல்லு, வர முகூர்த்தத்தில் கல்யாணம் அதிரடியாக அறிவிக்க

    அத்தை, எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படிச் சொன்னா நான் என்ன பண்ணுவேன்? எனக்கு இந்த வேலை பிடிச்சு இருக்கு, மனசுக்கு ஆறுதலா இருக்கு, இதைத் தாண்டி, வாழ்க்கை, குடும்பம்னு யோசிக்க என்னால முடியலை. அக்காவோட வாழ்க்கைக்கு நான் தடையா இல்லை; நான் வேணா கண் காணாம வேற ஏதாவது ஊருக்குப் போயிடுறேன்

    நெருப்புக்கோழி பூமிக்குள்ள தலையைப் புதைச்சுக்கிட்டா அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாதா? இப்படி எவ்வளவு நாள் ஒளிஞ்சு பயந்து வாழ்வே மகி? இந்த வெளிநாட்டுப் பையனைக் கட்டிக்கோ, எல்லாம் தெரிஞ்சு வராங்க, அங்கே போய் சுதந்திரமா வாழு, உனக்குப் பிடிச்ச நர்ஸ் வேலையைக் கூடத் தேடிக்கோ

    அத்தை..

    இங்க பார்.. ஒண்ணு, எது வந்தாலும் பரவாயில்லைன்னு வாழு! இல்லை, நான் சொல்லுறதைக் கேட்டு கண்ணாலம் கட்டிட்டு செட்டில் ஆகு! ரெண்டும் இல்லாம உன்னை இப்படி அம்போன்னு விட எங்களால முடியாது எங்களுக்கும் மனசாட்சி இருக்கு என்று தீர்மானமாக சொல்லிவிட்டு ஃபோனை வைக்க

    அதையே கொஞ்ச நேரம் வெறித்தவளுக்கு உறக்கம் எட்டாக்கனியாகப் போய் விட, நேரத்தை நெட்டித் தள்ளி, மருத்துவமனைக்கு கிளம்பினாள். அவளின் சரணாலயம் அது தானே! அந்த செவிலியர் ஆடையை அணியும்போது அவளுக்கு கிடைக்கும் நிறைவும், அந்த வேலை கொடுக்கும் நிம்மதியும், அவளுக்கு வேறு எதிலும் கிட்டாது என்பது ஐயம்திரிபட தெளிவாகப் புரிந்தது அவளுக்கு!

    ஆடையை மாற்றிக்கொண்டு, முதல் வேலையாக, உணவு உணவும் அறையில் இருந்த துளசியைப் பார்க்க போனவள். காலையிலிருந்து ஆரம்பித்த நிகழ்வுகளாக, வெண்மதியில் தொடங்கி துளசியின் மாமியார் வரை அனைத்தையும் சொல்ல,

    துளசியோ மஜோ, அத்தை சொல்லுறது ரொம்பவே சரி! உன்னை நல்லா புரிஞ்சுக்கிட்டவனா கிடைச்சா ஏன் வாழ்க்கையை ஏத்துக்க கூடாது? கேட்டவளை

    கண்கலங்கப் பார்த்த மஜோ அக்கா, நீயே இப்படிச் சொன்னா எப்படி? என்னால கல்யாணம் குழந்தைன்னு வாழ முடியுமா? நினைச்சாலே வெறுப்பா, அருவருப்பா இருக்கு அக்கா

    முட்டாளா நீ? எதையும் அனுபவிக்காமலே இப்படிச் சொல்லாதே

    அக்கா.. என்றவளை நிறுத்தும்படி கை காட்டிய துளசி முதலில் பழசை மற! இல்லை, அதை தைரியமா எதிர்க்க கத்துக்கோ! உனக்குத் தேவை தைரியம் தான்! உன்னை கௌரிம்மா வந்து பார்க்கச் சொன்னாங்க, போ என்றவள், உணவு டப்பாவை மூடி வைத்துவிட்டு தன் வேலையைப் பார்க்கத் துவங்கினாள்.

    பெருமூச்சோடு அங்கிருந்து டாக்டர் கௌரியின் அறைக்குப் போன மகரஜோதி, அனுமதி பெற்று உள்ளே போக, இவளைக் கண்டதும் தாய்மை மேலோங்க வாடா மஜோ, ஒழுங்கா தூங்குனியா? கண்ணு சிவந்து இருக்கு? விசாரித்தவருக்கு, புன்னகையையே பதிலாகத் தர

    எல்லாத்துக்கும் சிரிச்சுக்கோ! அப்புறம் மஜோ, நம்ப ஹாஸ்பிட்டலுக்கு புதுசா ஒரு ஆர்த்தோ டாக்டர் ஜாயின் பண்ணி இருக்கார்; நம்ப ரவியோட மச்சான், (ரவீந்தர், கௌரி-ரத்தினவேல் தம்பதியின் மகன், புதிதாகத் திருமணம் ஆனவன், அவன் மனைவி சுபத்திரா), சுபத்திராவோட பெரியம்மா பையனாம்; கல்யாணத்தப்போ வெளிநாட்டில் இருந்தாராம்; இங்கே வேலை செய்ய ரவி கேட்டுக்கிட்டதால, இங்கே வரார்; இன்னையில் இருந்து நீ அவருக்கு அசிஸ்ட் பண்ணு என்ற கௌரிக்கு, சம்மதமாக தலையசைத்தவள் வெளியே செல்லத் திரும்ப

    மஜோ, ஒரு நிமிஷம் ! நீ எப்பவும் வேலையில் சரியாய் இருப்பே, இப்பவும் அப்படியே இரு! வேற எதையும் போட்டுக் குழப்பிக்காதே; பெர்சனல் வேற, வேலை வேற! அந்தத் தெளிவோட இரு என்றவரைக் குழப்பத்துடன் பார்த்தவள் யோசனையுடன் தலையசைத்தபடி வெளியே வந்து, ஆர்த்தோ டிபார்ட்மென்ட்டை நோக்கி மெல்ல நடந்தாள்.

    அது என்னவோ, அந்த ஆர்த்தோ பகுதிக்கு மட்டும் நிலையாக ஒரு மருத்துவர் கிடைக்காமல், வெளி ஆஸ்பத்தரியில் இருந்து அவசரத்துக்கு மருத்துவர்கள் வந்து பார்ப்பார்கள். இப்போது தான் நிலையாக ஒரு மருத்துவர் பணியில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்! ‘ஆள் எப்படியோ?’ என்ற யோசனையோடு, டாக்டர் அறையின் கதவைத் தட்ட,

    எஸ்.. கம்மின் என்ற வார்த்தைக்கு உள்ளே சென்றவள்

    ஆளைத் தேட, ப்ளீஸ் வெயிட் என்ற குரல், பேஷன்ட்டை சோதனை செய்யும் அறையில் இருந்து வர, டாக்டரது டேபிள் மேல் இருந்த ‘ஜெகவீர வர்மா’ என்ற பெயரைக் கண்டு உறைந்து போனவள் அதையே வெறிக்க,

    கைகளைத் துடைத்தபடி வந்தவன் புன்னகை முகமாக, கொஞ்சம் நக்கலும் தெறிக்க ஹாய் மகரஜோதி, நீ தானே எனக்கு அசிஸ்ட் பண்ண வந்த நர்ஸ்? சீஃப் டாக்டர் கௌரி சொன்னாக என்று அவளை நோக்கி ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி கை நீட்டியவனை வெறுப்புடன் பார்த்தவள், அவனையும் அவனது பெயர் பலகையையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, முகம் எரிச்சலில் மின்ன, அவனைத் திரும்பியும் பார்க்காமல் வேக வேகமாக வெளியேறியவளின் மனம் உலைக்களமாக கொதித்தது.

    கௌரி அம்மா பேசியதன் அர்த்தம் மெல்லப் புரியத் துவங்க, ‘இவன் கிட்ட எப்படி வேலை செய்ய முடியும்? அம்மா ஏன் இப்படிப் பண்ணாங்க?’ என்ற தவிப்போடு டாக்டர் கௌரியின் அறையை நோக்கிச் சென்றாள் மஜோ என்கிற திருமதி. மகரஜோதி ஜெகவீர வர்மா!!!

    ஜோதி 02

    தன் எதிரே பிடிவாதக் குழந்தையைப் போல முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு இருக்கும் மஜோவை அலுப்புடன் பார்த்த கௌரி, கண்டிப்பான குரலில் மஜோ, நீ இப்படி பிடிவாதம் பிடிப்பது சரி இல்லை; வேலை வேற, பெர்சனல் வேற, அதை முதலில் மனசில் பதிய வச்சுக்கோ என்றவருக்கு, எவ்வித பதிலும் சொல்லாமல் அவள் அமைதியாக இருக்க,

    மஜோ, நான் பேசிட்டே இருக்கேன், நீ இப்படி அழுத்தமா இருந்தா எப்படி? இன்னும் எவ்வளோ நாளைக்கு பயத்துலேயே வாழப் போற? கொஞ்சம் கொஞ்சமா பிரச்சனையை எதிர்கொள்ளப் பழகு

    கலங்கும் கண்களை முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தவள் கௌரியின் முகத்தைப் பார்க்காமல் நான் பயப்படுறேன் தான்! என்னால துளசி அக்கா கஷ்டப்படக்கூடாதுன்னு, உங்களுக்கு பிரச்னை வரக்கூடாதுன்னு பயப்படுறேன்! தப்பா?

    முட்டாள்! அப்படியே பிரச்சனை வந்தா நாங்க பார்த்துக்கிறோம். நீ உன் வழியைப் பார்

    அம்மா, ப்ளீஸ்.. இப்போ அது பிரச்சனை இல்லை; என்னால அந்த டாக்டருக்கு அசிஸ்ட் பண்ண முடியாது; தயவு செஞ்சு துளசி அக்காவை அனுப்புங்க

    மஜோ, அவருக்குன்னு ஒரு நர்ஸ் அப்பாயின்ட் பண்ணுற வரை நீ டெம்பரரியா அசிஸ்ட் பண்ணு. நீ இங்கே நர்ஸ்!, நான் சொல்வதைக் கேட்டுத்தான் ஆகணும்; உன் பெர்னல் ஃபீலிங்ஸை வேலைக்குள் கொண்டு வராதே என கண்டிப்பாகச் சொல்ல

    அவர் சொன்னதை மறுதலிக்கும் விதமாக சாரிம்மா! என்னால நீங்க சொல்லுவதைக் கேட்க முடியாது

    இப்படி பயந்து பயந்து கோழையா வாழப் போறியா?

    நான் தைரியமானவளா கோழையா என்பது இப்போ கேள்வி இல்லை. எனக்குப் பிடிக்கலை.. அவ்வளோதான்! அந்த நிழல் கூட என் மேல படியறதை நான் விரும்பலை

    விரும்பலைன்னா என்ன அர்த்தம்? அவ்வளோ வெறுப்பு இருக்கிறவ எதுக்கு அந்தப் பேரை உன் பேர் பின்னால் சேர்த்து வச்சுக்கிட்டு இருக்க? கோபம் கட்டுக்கடங்காமல் கேட்டார் கௌரி.

    மஜோ கண் கலங்க ஏன் உங்களுக்குத் தெரியாதா? என் அழிவுக்கு காரணமான அந்தப் பெயர் தான், நான் வாழ மன உறுதியையும் கொடுக்குது! எது வந்தாலும் பார்த்துக்கலாம்னு தைரியத்தைக் கொடுக்குது! இனி ஒருவனை நம்பி என் வாழ்வை அடமானம் வைக்க கூடாதுன்னு நிமிஷத்துக்கு நிமிஷம் எனக்கு சொல்லிக் கொடுக்குது! எல்லாத்தையும் தாண்டி, இன்னொருவனை என் வாழ்வில் நுழைய விடாமல் பாதுகாப்பு தருது!!

    அப்போ, இன்னொரு வாழ்வு வேண்டாம்னு உறுதியா இருக்கியா? உனக்குன்னு ஒரு துணை வேண்டாமா மஜோ?

    வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்!! எனக்கு.. நீங்க, இந்த வேலை, இது போதும்! நான் பொறந்தது, நோயால வதைபடுறவங்களுக்கு சேவை செய்யத்தான். என்னை இப்படியே விட்டுடுங்க! வேற எதிலும் எனக்கு ஆசை இல்லை என்று தன்னிலை மறந்து கத்த,

    அவளை உன்னிப்பாக கவனித்தவர் சரி மஜோ, டென்ஷன் ஆகாதே! நீ போய் துளசியை டாக்டர் ஜெகனுக்கு அசிஸ்ட் பண்ணச் சொல்லு, நீ அவங்களோட ட்யூட்டிக்கு சார்ஜ் எடு என்றவரை

    கடுப்பாக பார்த்தவள் கௌரிம்மா, நான் அக்காவை வரச் சொல்லுறேன்.. அதை நீங்களே அக்கா கிட்ட சொல்லிடுங்க; எனக்கு அந்தப் பேரைச் சொல்லக் கூட விருப்பம் இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்ல

    மேஜையை ஓங்கித் தட்டிய கௌரி என்ன நினைச்சுக்கிட்டு இருக்க மஜோ? நீ இங்கே வேலை செய்யற! அந்த நினைப்பு இருக்கட்டும்! நீ என் பொண்ணுன்னு செல்லம் கொஞ்சுறது எல்லாம் ஆஸ்பிட்டலுக்கு வெளியே.. இப்போ நான் சொன்னதை செய் என்று கத்தவும்.

    கண்கலங்க ஆமோதிப்பாக தலையசைத்தவள் அங்கிருந்து விலக, உடனே கான்ஃபரன்ஸ் காலில் தன் மகன் ரவி மற்றும், தன் தங்கை ராஜியை கௌரி அழைக்க,

    இருவரும் ஃபோனை எடுத்ததும் டேய் ரவி, இதெல்லாம் சரி வரும்னு எனக்குத் தோணலை. உன் மச்சான் இங்கே இருப்பது சரி வராது, அவன் கிட்ட பக்குவமா சொல்லி, இங்கே தொடர விடாம பண்ணு என்றவர்

    தன் தங்கையிடம் ராஜி, மஜோவுக்கு இன்னமும் கவுன்சலிங் தேவை போல! அவ நார்மலா இல்லைன்னு தோணுது என்று படபடக்க

    ராஜி அமைதியாக அக்கா, இப்போ நீ ரொம்ப எமோஷனலா இருக்கே. கூல்! என்ன ஆச்சுன்னு பொறுமையா சொல்லு என்றதும் நடந்ததை சொன்னவர் நீயும் ரவியும் தான், அந்தப் பையனை இங்கே வரவழைக்கிறது சரின்னு சொன்னீங்க; சரி வராதுன்னு நான் அப்போவே சொன்னேன்

    ரவி இப்போது சாந்தமாக அம்மா, அதுக்காக அவளை அப்படியே விட முடியாது; என்னிக்காவது ஒரு நாள் அவ பிரச்னையை சந்திச்சுத் தான் ஆகணும்; மொத்தமா ஒரு நாள் எதிர்கொண்டு சமாளிக்க முடியாம அவ திணறுவதை விட இப்போலேர்ந்தே கொஞ்சம் கொஞ்சமா பிரச்சனையை அவ சந்திக்கட்டும்

    இப்போது ராஜி ஆமா அக்கா, ரவி சொல்லுறது தான் சரி. இது நாம எதிர்ப்பார்த்தது தானே? அதே சமயத்துல, மஜோ இன்னைக்கு ரொம்ப டிஸ்டர்ப்டா இருப்பா; ஸோ, அவளுக்கு கவுன்சலிங் தரணும், நான் அவ கிட்ட பேசிப் பார்க்கிறேன்

    கௌரி ஆதங்கமாக ம்ம்ம்.. எனக்கு என்னமோ, இன்னிக்கு அவ கிட்ட பேசினப்போ, அவ இன்னமும் சரி ஆகலைன்னு தான் தோணுச்சு, அதான் இந்த நிலையில் அந்தப் பையன் இங்கே இருக்க வேண்டாம்னு...

    அவர் பேச்சை தடை செய்த ரவீந்தர் அம்மா, அவ வெறுக்கிற விஷயமே கூட அவ காயத்துக்கு மருந்தா இருக்கலாம்! எனக்கு தெரிஞ்சு ஜெகன் நல்லவன். நான் துளசி சிஸ்டர் கிட்ட சொல்லி இருக்கேன். மீதியை அவங்க பார்த்துப்பாங்க. அதே போல ஜெகன் கிட்டேயும் பேசி இருக்கேன், நீ எதையும் குழப்பிக்காதே என்றவன் அத்துடன் பேச்சை முடித்துவிட்டான்.

    மஜோவின் மனம் நிலையில்லாமல் தவித்தது! நேற்றுவரை அவளுக்கு அமைதி அளித்த இடமானது, இன்று ஏனோ தன்னுள் புதைகுழிகளை அடக்கி வைத்து இருப்பது போன்ற உணர்வைத் தந்தது! அந்த ஆஸ்பத்திரியின் பாதைகள் அனைத்தும், ஆர்த்தோ பகுதியை நோக்கியே செல்வதாக ஒரு பிரமை ஏற்பட்டது.

    எந்தப் பக்கம் திரும்பினாலும், ‘நான் ஜெகவீர வர்மா’ என்று சிரித்தபடி கை கொடுக்க வந்தது அவன் உருவம்! அந்த பிம்பத்தைக் கண்டு நடுங்கி ஒடுங்கிப் போனாள் பெண்! அதற்கும் மேல் அங்கே இருக்க மனம் இல்லாமல், வேலை செய்யவும் பிடிக்காமல், முதன் முறையாக, உடல்நிலை சரி இல்லை என்று காரணம் சொல்லி அரை நாள் விடுப்பு எடுத்தவள், சாயந்திரம் ஆறு மணி வாக்கில் வீட்டை நோக்கி வேகமாகப் போனாள் .

    ட்யூட்டியை முடித்துவிட்டு அவளுக்கு முன்னதாகவே வந்து இருந்த துளசி, சமையலில் மும்முரமாக இருக்க, அவளைத் தேடிச் சென்ற மஜோ அக்கா, என்ன.. சமையல் வாசம் இழுக்குது.. என்றவள் பார்வையைச் சுழல விட்டபடி எங்கே மதி குட்டியைக் காணோம்?

    அவ இருக்கட்டும்! நீ என்ன இந்த நேரத்தில்? உனக்கு ட்யூட்டி இன்னைக்கு பத்து மணிக்குத் தானே முடியுது?

    முகம் சுருங்க ம்ம்ம்.. மனசு சரி இல்லை, லீவ் சொல்லிட்டேன்

    யோசனையாக ஒ.. உலக அதிசயமா இருக்கு!! என்ன நடந்தாலும் ஆஸ்பிட்டலை விட மாட்டயே?

    அழுத்தமான குரலில் அக்கா.. மதி எங்கே?

    பெருமூச்சோடு அவ பிரெண்ட்ஸ் கூட விளையாடப் போய் இருக்கா. நீ போய் கொஞ்சம் காய்கறி வாங்கிட்டு வரியா? டேபிள் மேல லிஸ்ட் வச்சு இருக்கேன், நானே கிளம்பி போகலாம்னு இருந்தேன். நீ ஒரு எட்டு போயிட்டு வந்துடேன்

    அவளுக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவாறே லிஸ்ட்டை எடுத்து அதில் பார்வையை ஒட்டியவள் என்னக்கா ஏதாவது ஸ்பெஷலா? லிஸ்ட் அமர்க்களமா இருக்கு? மதி குட்டி கேட்டாளா? என்றபடி பதிலை எதிர்பாராமல் வீட்டை விட்டு வந்தவளின் பார்வையில் பக்கத்து வீடு தென்பட, அது வரை காலியாக இருந்த வீட்டுக்கு, யாரோ குடித்தனம் வருவதற்கு அறிகுறியாக பொருட்களை ஆட்கள் எடுத்து வந்து, அந்த வீட்டு பெல்லை அடித்துவிட்டு காத்திருப்பதைக் கண்டு இவள் ஒதுங்கி லிஃப்ட் அருகே வர,

    அங்கேயும் லிஃப்ட் நிறைய பொருட்களோடு ஆட்கள் இருக்கவும், மூன்று மாடிப் படிக்கட்டுகளையும் இறங்கி வந்தவளுக்கு அப்பார்ட்மெண்ட் வாசலில் மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் லாரி நிற்பதும் அதில் இருந்து ஆட்கள் பொருட்களை இறக்ககுவதும் தெரிய

    ‘சரிதான் இப்போ தான் திங்க்ஸை இறக்குறாங்க போல; நாம்ப திரும்ப வந்தாலும் படி ஏறித்தான் போகணும் போல’ என்று புலம்பியபடி அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தவள், துளசி கேட்டிருந்த பொருட்களை வாங்கிக் கொண்டு வந்த பின்னும் ஆட்கள் பொருட்களை இறக்கிக் கொண்டு இருக்க

    லிஃப்டுக்காக காத்திருக்காமல் படியேற ஆரம்பித்த மஜோவின் மனம் ‘அம்மாடியோ! பெரிய குடும்பம் போல! எவ்வளோ பொருள்? நிறைய குட்டீஸ் இருக்கும் போல! பிரச்சனை வராம இருந்தால் சரி’ என்ற நினைப்போடு மூன்று மாடியையும் கடந்து அவள் வீட்டை நோக்கிப் போனவளை, கட்டி இழுத்தது வெண்மதியின் சிரிப்புச் சத்தம்.

    அதுவும் பக்கத்து வீட்டில் இருந்து வரவும், யோசனையாக அந்த வீட்டு வாயிலில் நின்று பார்த்த மஜோ உறைந்தே போனாள்!! அந்த வீட்டில், ஆட்கள் பொருட்ளை ஒரு புறம் ஒழுங்குப் படுத்திக் கொண்டு இருக்க, மறுபுறம் அங்கிருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்திருந்த ஜெகனின் மடியில் உட்கார்ந்திருந்த மதி, அவன் காட்டும் விளையாட்டுக்கு, சதங்கையாக ஒலியெழுப்பிக் கொண்டிருந்தாள்!

    மஜோ உறைந்து நின்றது ஒரு நொடி கூட இருக்காது! மின்னலாக அவன் வீட்டினுள் நுழைந்து குழந்தையைப் பிடுங்கியவள், சுற்றுப்புறத்தை உணராமல் டேய், எங்க வீட்டுக் குழந்தையோட உனக்கு என்ன வேலை? இன்னொரு தடவை உன் பார்வை, பாப்பா பக்கம் வந்துச்சு... கொன்னுடுவேன்.. பொறுக்கி என்றவள்

    அவன் பதிலை எதிர்பாராமல் மதி செல்லம், பிரெண்ட்ஸ் கூட விளையாடப் போறேன்னு தானே சொல்லிட்டு வந்தே? இப்படி முன்ன பின்ன தெரியாதவங்க கிட்டே எல்லாம் பேசக் கூடாதுன்னு சித்தா சொல்லி இருக்கேன் இல்ல? என்று அவள் பேசப் பேச, ஜெகனின் முகம் கறுத்துக் கொண்டே வந்தது! அங்கிருந்த அனைவரும் அவனையே பார்க்க, அவன் அவர்களை முறைத்ததும், அனைவரும் அவர்கள் வேலையில் இறங்கினர்.

    மஜோ, மதியிடம் பேசியபடி நிமிரவும் அவளை உக்கிரமாக முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் துளசி!

    கோபத்துடன் குழந்தையை மஜோவிடம் இருந்து வாங்கியவள் ஜெகனை நோக்கி சாரி டாக்டர், இவ... என்றவளை, அவன் நிறுத்தும்படி கை காட்ட, துளசி பொறுக்க முடியாமல் மஜோ, உனக்கு அறிவு இல்லை? நான் தான் பிள்ளையை இவர் கூட அனுப்பினேன்

    அக்கா இந்த ஆள்.. கோபத்துடன் மஜோ ஏதோ சொல்ல வரவும், அவளைத் தடுத்து நிறுத்திய துளசி என் குழந்தை அவ! அவளை யார் கிட்ட விளையாட அனுப்பணும்னு எனக்குத் தெரியும், நீ வீட்டுக்குப் போ என்றதும், மஜோ கண் கலங்க அங்கிருந்து சென்றாள்.

    துளசி தயங்கியபடி டாக்டர், சாரி! அவ இமோஷனல் ஆயிட்டா! அதான் யோசிக்காம.. என்று இழுக்கவும்

    புன்னகை முகமாக நீங்க எதுவும் சொல்ல வேண்டாம், விடுங்க! கொஞ்ச நாளில் சரி ஆகிடும் என்ற ஜெகன் அழுத்தமாக சரி பண்ணிடலாம்!! என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னவன், அடுத்த நொடி முகபாவனையை மாற்றிக்கொண்டு உங்க தங்கச்சி பண்ண வெட்டி அலம்பலுக்கு பயந்து சாப்பிட வரமாட்டேன்னு நினைக்காதீங்க, கண்டிப்பா வருவேன் என்றவனைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து போனது துளசிக்கு.

    மஜோ இவ்வளவு அசிங்கப்படுத்தியும் அதை கணக்கில் எடுக்காமல் சகஜமாக இருக்கிறானே என்ற பிரமிப்பில் கண்டிப்பா டாக்டர், இன்னும் அரைமணி நேரத்தில் ரெடி ஆகிடும், வாங்க என்றவள் பிள்ளையை அவனிடமே விட்டுவிட்டு வீட்டுக்கு வர

    அங்கே அழுதபடி இருந்த மஜோ, துளசி தனியாக வருவதைக் கண்டு மீண்டும் கோபமாக அக்கா, பாப்பா எங்கே?

    அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் துளசி சமையல் வேலையைத் தொடர அக்கா, பேச மாட்டியா? நீ கூட என்னைப் புரிஞ்சுக்க மாட்டியா? என்றவளை

    முறைத்த துளசி நீ புரிஞ்சுக்கிட்டியா? உன்னால நான் என்ன நிலையில் இருக்கேன்னு தெரியுமா? ஒவ்வொரு தடவை வீட்டை விட்டுக் கிளம்பும்போதும், ‘அடுத்த தடவை வரும் போதாவது நிரந்தரமா என் கூட இருக்கிற மாதிரி வா’ன்னு என் புருஷன் கையைப் பிடிச்சிக்கிட்டு கெஞ்சுறார்; எனக்கு ஆசை இல்லையா? ஆனா உனக்காக மனசை கல்லாக்கிக்கிட்டு வரேன்; ஆனா நாளுக்கு நாள் உன் பைத்தியக்காரத்தனம் அதிகமா ஆகுது! இப்போ அந்த மனுஷனை நாலு பேர் எதிரில்... இப்படியே நடந்துக்கிட்டயானா ஒரு நாள் இல்ல ஒரு நாள் ‘சீ போடி, என் கிட்ட பேசாதே’ன்ற மாதிரி ஏதாவது திட்டிடப் போறேன் என்றவள் தன் வேலையை கவனித்தாலும், அவள் கண்ணில் இருந்து அருவியாக நீர் வடிந்தது.

    பதில் எதுவும் சொல்ல முடியாமல் தன் அறைக்குள் வந்து அழுது கொண்டே படுத்த மஜோவின் கண்கள் அப்படியே

    Enjoying the preview?
    Page 1 of 1