Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pesi Pesi Kollathey!!!
Pesi Pesi Kollathey!!!
Pesi Pesi Kollathey!!!
Ebook400 pages4 hours

Pesi Pesi Kollathey!!!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாயகன் பார்த்திபன், இந்தியாவில் பிறந்து பக்கா கிராமத்தில் வளர்த்து, படித்து, அமெரிக்காவுக்கு வேலைக்குப் போனாலும் தன் மனதுக்குள் இருக்கும் கிராமத்தானுக்கு தீனி போட்டு வளர்ப்பவன்! நாயகி ஹெலன் நந்தனா, பிரான்ஸில் பிறந்து அங்கேயே வளர்ந்த தமிழ் பெண்! இப்படி இரு மாறுபட்ட கலாச்சாரம், மொழி, வாழ்க்கை முறையில் வாழ்ந்த இரு துருவங்கள் இணைந்தால் என்ன ஆகும் என்பதை சொல்லும் நகைச்சுவை கதை. இருவருக்கும் தினமும் நடக்கும் யுத்த காண்டமே! அதில் தீயை மூட்டி ‘ஸ்வாஹா’ சொல்லி வளர்க்க நான்!(?). மீதியைக் கதையில் பேசலாம்.

Languageதமிழ்
Release dateJan 21, 2023
ISBN6580160209345
Pesi Pesi Kollathey!!!

Read more from Gloria Catchivendar

Related to Pesi Pesi Kollathey!!!

Related ebooks

Reviews for Pesi Pesi Kollathey!!!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pesi Pesi Kollathey!!! - Gloria Catchivendar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பேசிப் பேசிக் கொல்லாதே!!!

    Pesi Pesi Kollathey!!!

    Author:

    குளோரியா கட்சிவேந்தர்

    Gloria Catchivendar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gloria-catchivendar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    முன்னுரை

    ஹாய் மக்களே...

    இது, நீங்கள் வழக்கமாகப் படித்து சலித்த கதை! அதை என் பாணியில் எழுதி இருக்கிறேன் என்று சொல்லுவேன்!! ஆனால் இந்தக் கதை எனக்கும் உங்களுக்கும் ரொம்ப ரொம்ப புதுசு! இது வரை இப்படி ஒரு கதையை நீங்க படிச்சிருக்க மாட்டீங்க... அப்படி ஒரு கதை!

    கூடவே ஒரு புது முயற்சியை செய்திருக்கிறேன்!

    வழக்கமா நான் இன்ட்ரோவில் கதையைப் பத்தி மூச்சு விட மாட்டேன், ஆனா இந்தக் கதையோட ஓன் லைன் சொல்லுறேன். சரி, கதை என்னன்னா...

    விருப்பம் இல்லாமல் திருமணத்தில் இணையும் இரு உள்ளங்கள், ஒரே சிந்தனை!! ஒரே கருத்து!!, ஒரே ஒரு புள்ளியில்? மாறுபடுகிறார்கள், சோ எதிரும் புதிருமாக, எலியும் பூனையுமாக அடிச்சுக்கிட்டு இருக்க, இந்த ஜோடிக்குள் எப்படி காதல் மலருது? நாட்டின் ஜனத்தொகையைக் கூட்டும் பொறுப்பில் எப்படி அடியெடுத்து வைக்கப் போறாங்க என்பது தான் கதை!

    எடு தொடப்பக்கட்டையை!! இது தான் நீ சொன்ன புதுமையான கதையா?ன்னு நீங்க துப்புவது எனக்கு நல்லா தெரியுது(?)! துடைச்சுக்கிட்டே சொல்லுறேன்! கொஞ்சம் யோசிச்சு பாருங்க... இது எனக்குக் கொஞ்சமும் பழக்கம் இல்லாத கதைக்கரு என்று என்னோட ரெகுலர் வாசகர்களுக்குத் தெரியும்! இந்தக் கருவை வைத்து ஆயிரம் கதைக்கு மேல படிச்ச ஒரே அனுபவத்தை வச்சு எழுதப் போகிறேன்!

    சரி, அது என்ன புது முயற்சி?

    கதையில் முக்கியமான மூணு கேரக்டர்... ஹீரோ, ஹீரோயின் மற்றும் நான்... எஸ்... நானே!!

    இல்லை...இல்லை...பயப்படாதீங்க!! கதைக்குள்ளே நான் இல்லை! கதைக்கு வெளியே தான் இருக்கேன்! எப்படின்னு பார்க்கறீங்களா? ரொம்ப நாளா, கதைகளுக்கு விமர்சனங்கள் (ரிவ்யூக்கள்) எழுதாம உள்ளங்கை அரிக்க ஆரம்பிச்சிடுச்சு!(?) அதான் ஒவ்வொரு அத்தியாயத்தின் கடைசி பகுதியும் கதைக்கான ரிவ்வியூவா இருக்கும்! கதையில் ஹீரோ ஹீரோயின் என் கிட்ட சிக்கிட்டு இருக்காங்களா, இல்லை நான் அவங்க கிட்ட சிக்கிட்டு இருக்கேனான்னு சொல்ல வேண்டியது உங்க பொறுப்பு மக்களே!!

    இதில், ஹீரோ, ஹீரோயினுடன், நான் பேசும் பகுதிகளை வித்தியாசப்படுத்தி காண்பிப்பதற்காகவும், உங்களுக்கு எளிதாகப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கவும், ஒவ்வொரு அத்தியாயத்திலும், கடைசி 2 அல்லது 3 பக்கங்களை நீல வண்ண எழுத்துக்களாக கொடுத்திருக்கிறேன். இரண்டாம் அத்தியாயத்திலிருந்து இப்படித் தொடரும்.

    மற்றொரு புதிய முயற்சியாக, பிரான்ஸ் நாட்டில் வளர்ந்த தமிழ் பெண்ணான ஹீரோயின் பேசும் சில பிரெஞ்சு வார்த்தைகளுக்கு, உங்களுக்கும் புரியும் வகையில் பக்கத்திலேயே அதன் அர்த்தங்களையும் கொடுத்திருக்கிறேன். ஏதேனும் புரியலை என்றால் கேட்கலாம். அதுக்காக பித்தி பத்தியா பிரெஞ்ச் வராது, நாம எப்படி தங்லீஷ் பேசுறோமோ அப்படி, இங்கே வசிப்பவர் தமிழ் பிரெஞ்ச் கலந்து இருக்கும், இங்கேயே பிறந்து வளர்ந்த பெண் எப்படி தமிழ் பேசுவாளோ அப்படி, என் பிள்ளைகள் பேசுவதை வைத்து நாயகி நந்தனா பேசுவதை வடிவமைத்து இருக்கிறேன்.

    இதனால், கதை முடியும் தருவாயில் உங்களுக்கும் ஓரளவு பிரெஞ்சு மொழி பரிச்சயம் ஆகியிருக்க வாய்ப்புகள் அதிகம் ….ஹி...ஹி...ஹி!!(?)

    இன்னொரு முக்கியமான விஷயம்! இந்தக் கதையின் மூலம் யாரையும் புண்படுத்தும் நோக்கம் நிச்சயம் இல்லை! வெகு சிலர் புண்படலாம்! அவர்கள் தயவு செய்து இதெல்லாம் நகைச்சுவைக்காக மட்டுமே என்று எடுத்துக் கொள்ளுங்கள்!

    இனி, நாயகன் பார்த்திபன், இந்தியாவில் பிறந்து பக்கா கிராமத்தில் வளர்த்து, படித்து, அமெரிக்காவுக்கு வேலைக்குப் போனாலும் தன் மனதுக்குள் இருக்கும் கிராமத்தானுக்கு தீனி போட்டு வளர்ப்பவன்! நாயகி ஹெலன் நந்தனா, பிரான்ஸில் பிறந்து அங்கேயே வளர்ந்த தமிழ் பெண்! எதிர்பாரா விதமாக வாழ்க்கையில் நுழையும் இருவருக்கும் நடக்கும் யுத்த காண்டமே கதை! அதில் தீயை மூட்டி ‘ஸ்வாஹா’ சொல்லி வளர்க்க நான்!(?). மீதியைக் கதையில் பேசலாம்.

    1

    PAARTHIBAN WEDS HELEN NANTHANAA

    ஒரு இருபதடி உயர கல்யாண ஃப்ளெக்ஸ் போர்டு உங்க வாழ்க்கையில் எமனா வருமா? வந்து இருக்கே எனக்கு!! எப்படி? இப்படித்தான்!! நானே சென்று வம்பில் மாட்டிய கதை இது.

    உறக்கமில்லா இரவுகள் கூட அழகு தான்... சிந்தனைகளை சிறகடிக்க வைக்கும், இதமான மனநிலையை கொடுக்கும். நம்மை நம் உலகில் முடிசூடா ராஜா ராணியாக்கி அழகு பார்க்கும் வல்லமை கொண்ட இரவுகள்... அப்படியான இந்த இரவு என்னை இப்படி ஒரு விபரீதத்தில் மாட்டி வைக்கும் என்று நான் (இந்த குளோரியா -gloria தான் ) கனவிலும் நினைக்கவில்லை.

    அடுத்த கதை என்னவென்று குழம்பிக் கொண்டு இருக்க, ஏனோ என் சிந்தனை வாய்க்கால் அடைத்துக் கொண்டதில், எப்படிப் புரண்டும் எந்த யோசனையும் கிடைக்காமல் போனது யார் குற்றம்? சரி அப்படியே எவ்வித சிந்தனைகளும் இல்லாமல் சற்று உலவிவிட்டு வரலாம்; மனம் நிர்மலமாக இருந்தால் சிந்தனைகள் அருவியாக கொட்டும் என்று நம்பி நேரம் பதினொன்றை நெருங்கும் நள்ளிரவில் வீட்டை விட்டு இறங்கிய என் மடத்தனத்தை என்னவென்று சொல்லுவது?

    அசட்டு தைரியம்!! அட போ!! இது நான் பிறந்து வளர்ந்த ஊர், என்னை என்ன செய்துவிடும் என்ற திமிர் தான்.

    புதுவை... தமிழ், பிரெஞ்சு இரண்டு கலாச்சாரமும் கலந்து கோலோச்சும் ஊர்! குட்டி பிரான்ஸ் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஊர்! இந்த ஊரில் எந்த ரோட்டில் கால் வைத்தாலும், அது முடியும் இடம் கடற்கரையாக இருக்கும்! பழக்கப்பட்ட தெரு, கால் போன போக்கில் நான்.

    அப்போதே எம்.ஜி.ஆர் பாடி இருக்கிறார் கண் போன போக்கில் கால் போகலாமா? கால் போன போக்கில் மனம் போகலாமா?ன்னு எங்கே இந்த பாட்டை எல்லாம் அர்த்தத்தோடு கேட்க தோணி இருக்கு?. பழைய பாட்டு என்று அலறி ஓடிய நானே அந்த இரண்டு ஜீவன்களை பார்த்த பிறகு தத்துவப் பாடல்களை தேடி கேட்பேன் என்று அப்போது நான் நினைத்துப் பார்க்கவேயில்லை.

    என் கால்கள் என்னையும் அறியாமல் ஜெயராம் திருமண நிலையம் முன் நின்றிருந்தது. நிமிர்ந்து மண்டபத்தை நோக்கிய என் மனதை அப்படியே ஈர்த்தது அங்கிருத்த அந்த இருபதடி ஃப்ளெக்ஸ் போர்டு!!

    பார்த்திபன் WEDS ஹெலன் நந்தனா

    வாவ்!! பேரே அள்ளுதே!! உள்ளே போய் அவங்களை பார்த்து ஜஸ்ட் ஒரு வாழ்த்து சொல்லலாம்னு நல்ல எண்ணத்தோட நினைச்சேன். அப்படி வாழ்த்து சொல்லப் போய் புதைகுழியில் நானே சிக்கிய கதை தான் இது!?

    வாழ்த்து சொல்லுவது எவ்வளோ பெரிய தப்புன்னு எனக்கு இந்த ரெண்டு ஜீவனும் புரிய வச்சாங்க! இப்போ தான் ரிசப்ஷன் முடிஞ்சு இருக்கும் போல... அந்த பரபரப்பு இன்னும் அடங்கலை. மறுநாள் கல்யாணத்திற்கு மேடையை அலங்கரிக்கும் பணி நடக்க,

    என் மனம் அனைத்து விஷயங்களையும் மறந்து, அந்த வேலைகளை ஆர்வமாக நோட்டமிட்டேன். அட! வந்த வேலையை மறந்தாச்சே... பொண்ணு மாப்பிள்ளைக்கு வாழ்த்து சொல்லவில்லையே என்று தோன்றவும்

    சரி, முதலில் பெண்ணை பார்த்து விஷ் பண்ணுவோம் என்றெண்ணி, மணமகள் அறையைத் தேடி அவள் அறைக்குள் போனேன்... அங்கே பிரம்மன் வடித்த சிலைக்கு நிகராக இருந்தாள் நந்தனா!

    சுருள் முடி அலையலையாக காற்றில் பறக்க, சந்தன நிறத்தில், ஆளை விழுங்கும் பெரிய விழிகளோடு, ரோஜா கன்னங்களோடு... சும்மா சொல்லக் கூடாது! ஆளை அசரடிக்கும் பெண்ணாக இருந்தாள்!!

    என்ன ஒன்று!! புலிக் கூண்டில் இரையாக அடைக்கப்பட்ட ஆடு போல இங்கும் அங்கும் பதட்டமாக நடந்துகொண்டு இருந்தாள்! ‘ஏன் இவளுக்கு இவ்வளவு பதட்டம்?’ என்ற நினைப்பில் அவள் அருகே சென்று

    என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஹேய் நந்தனா... நான்... என்றதுதான் தாமதம்... என்னைப் பேசவிடாமல் கடுப்பாக முறைத்தவள் வந்துட்டியா? ஏன் லேட்? என்று கடித்துத் துப்பவும், திடுக்கிட்டு போனேன்!

    ‘என்னை இவளுக்கு முன்னரே தெரியுமா? எப்படி? நான் இப்போது தானே இவளை முதன்முதலாக பார்க்கிறேன்! இவ்வளவு உரிமையா பேசுறாளே’ என்ற திகிலோடு, நடுங்கிய குரலில் என்னை தெரியுமா? எனக்காக காத்திருந்தியா ஏன்? என்ற எனக்கு வியப்பு! பொடனியில் தட்டி என் மூளையின் பதிவேட்டில் அவள் முகத்தை தேடத் தொடங்க

    அவளோ உன்னைத் தெரியாம!? இந்தக் கதையை ஆரம்பிச்சு வைப்பதே நீ தானே, அப்போ நீ இல்லாம எப்படி?

    நானா... நான் என்ன பண்ணேன்? இந்த கதைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

    வெளியே ஃப்ளெக்ஸ் போர்டை பாத்தியா?

    ஆமா பார்த்தேன்

    பார்த்துட்ட இல்ல, அப்போ கதையையும் நீ தான் ஆரம்பிக்கிற

    என்னது நானா? இங்கே என்ன நடக்குதுன்னே எனக்கு புரியலை என்று வயிற்றில் புளியை கரைப்பது போல புலம்பினேன்.

    ‘நீயெல்லாம் என்ன கதை எழுதி கிழிக்கிற?’ என்பது போல எரிச்சலாக பார்த்தவள் வெளியே போர்டை பார்த்த இல்ல? அதுல என்ன இருந்துச்சு?

    முகம் மலர அதுவா? ‘பார்த்திபன் வெட்ஸ் ஹெலன் நந்தனா’ ன்னு பார்த்தேன். அதான் வாழ்த்து சொல்லலாம்னு வந்தேன்

    வாழ்த்தா? உன்னைக் கொன்னுடுவேன்! ஃபிளக்ஸ் போர்டுல போட்டிருக்கிறதுக்கு மாறா இங்கே என்ன நடக்குது தெரியுமா? பொங்கியவளின் கண்ணில் கண்ணீர் முத்து திரள

    அவள் சொன்ன விதத்தில் நினைவுகள் எங்கெங்கோ போக, என் முகம் அதிர்வை கடன் வாங்க, நடுக்கமாக அப்போ, வழக்கம் போல மாப்பிள்ளை மாறி போச்சா? இல்லை, மாப்பிள்ளை ஓடி போயிட்டானா? என்று கேட்கும் போதே குரல் உடைந்து அழும் நிலைக்கு போனேன். ‘ஆசையா வாழ்த்தலாம் என்று நினைத்தால் இப்படி ஆகிப்போச்சே’ என்று மருகிப் போனேன்.

    எரிச்சலாக பார்த்தவள் கிழிச்சான்! பார்... உனக்கு கூட தெரியுது, கல்யாண மண்டபத்துக்கு வெளியே ஃபிளக்ஸ் போர்ட்ல இருக்குற பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் என்னிக்கும் கல்யாணம் நடக்காதுன்னு?! ஆனா இங்கே எல்லாமே தலைகீழா இருக்கு

    பரிதாபமாக என்ன சொல்லுற? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லேன்?

    என்ன புரியலை? இப்போ சமீப காலங்களில், எங்கயாவது, கல்யாணப் பத்திரிக்கையில் பேர் போட்டிருக்கும் பொண்ணுக்கும் பிள்ளைக்கும் கல்யாணம் நடந்து நீ கேள்விப்பட்டு இருக்கியா? இந்நேரத்துக்கு அந்த பையன், ‘எனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை’ன்னு சொல்லிட்டு ஓடிப்போய் இருக்க வேண்டாமா? இல்லைனா சுமாரான ஒரு பொண்ணு எங்கேர்ந்தோ திடீர்னு முளைச்சு, ‘இந்த பையன் என்னைக் கெடுத்து கைவிட்டுட்டான்’னு வயத்தில் நாலு மாசப் பிள்ளையோடு வந்து நின்னிருக்க வேண்டாமா? மண்டபத்தில் இருக்கும் கிழடுகள் எல்லாம் பேசி அந்த பெண்ணை மணமகள் ஆக்கி என்னை தப்பிக்க வச்சு இருக்க வேண்டாமா? இது எதுவுமே நடக்கலைனா எப்படி? இதெல்லாம் நடப்பது தானே இப்போதைய கலாச்சாரம்!(?) அதை எப்படி அந்த பையன் மாத்துவான்? இங்கே பார்... நீ தானே ரைட்டர், என்ன செய்வியோ எது செய்வியோ எனக்கு தெரியாது, மரியாதையா இந்த கல்யாணத்தை நிறுத்து ஆணையிட்டாள் அதிகாரமாக!

    நானோ திகைப்பாய் நானா... நான் எப்படி கல்யாணத்தை நிறுத்த முடியும்? நான் ஜஸ்ட் வாழ்த்து சொல்ல வந்தேன். இந்த பாவத்தை எல்லாம் என்னால செய்ய முடியாது

    அவளோ எரிச்சலாக அதெல்லாம் எனக்கு தெரியாது. எப்போ நீ மண்டபத்துக்குள் வந்துட்டியோ, இனி எல்லாம் உன் பொறுப்பு. ஒண்ணு, அவன் ஓடிப் போகணும்; இல்லை, இந்தா கயிறு... இதில் அவனைத் தொங்கச் சொல்லு என்று கயிற்றை என்னிடம் கொடுக்க பயத்தோடு வாங்கினேன்.

    என்ன பொண்ணுடா இது? இப்படி பேசுது! என்று யோசிக்கையில் மின்னலாக ஒரு எண்ணம்!! கதைகளில், பொண்ணு இப்படி இருந்தால், பையன் நிச்சயமா சாந்தமா இருப்பான், அது தானே காலம் காலமா கதைகளின் லாஜிக்!!

    சரி, அவனிடமே பேசிப் பார்ப்போம் என்று மணமகன் அறையைத் தேடி, அவன் அறைக்குள் நுழைய எத்தனிக்கையில், ஒரு கரம் நீண்டு வேகமாக என்னை உள்ளே இழுத்தது. போதாதற்கு, என்னைக் கடுமையாக முறைத்துவிட்டு, கூண்டில் அடைபட்ட புலியாக நடை போட ஆரம்பித்தது... அது பார்த்திபன்!

    ஆறடி உயரத்தில் அளவான தேகத்தோடு, ஹீரோவுக்குரிய லட்சணத்துடன் தான் இருந்தான். இவன் என்ன சொல்லப் போகிறோனோ என்ற பயம் நெஞ்சை அடைக்க பார்த்திபா என்றதும், ஒரு கையை உயர்த்தி நிறுத்த சொன்னவன், முறைத்த முறைப்பில் அரண்டு போய்விட்டேன்.

    ‘என்ன இது... எனக்கு வந்த சோதனை! எத்தனை பேரை கிண்டல் பண்ணி இருப்பேன்! கடைசியில் என் ஹீரோவும், கடுவன் பூனை போல, சிரிக்கத் தெரியாமல், ஏதோ அவசரம் போல அவஸ்தையாக முகத்தை வைத்துக் கொண்டு இருக்கிறானே; இவனை எப்படி சமாளிப்பது?’ என்ற யோசனையோடு அவனை அளவெடுக்க

    அவனோ என்னை கண்டு கொள்ளாமல், என் கையில் இருந்த கயிற்றை எரிச்சலுடன் பார்த்துவிட்டு நீ கூடவா எனக்கு துரோகம் செய்யுற? வந்த உடன் நேரா அவளை போய் பார்க்கிற? என்ன... பெண்ணுக்குப் பெண் ஆதரவா?

    அய்யய்யோ! அப்படி எல்லாம் இல்லை பார்த்திபா... உனக்கு என்ன பிரச்சனை சொல்லு?

    என்ன பிரச்சனையா? வெளியே போர்டை பார்த்த இல்ல? எனவும், ‘இங்கேயும் அதே கேள்வியா!?’ என்று நொந்து போன நான் ஆமோதிப்பாக தலையசைக்க

    அவனோ எரிச்சலாக அப்புறம் என்ன கேள்வி? இந்நேரத்துக்கு அந்த ராங்கி, மண்டபச் சுவர் ஏறி குதிச்சு காதலனோட ஓடி இருக்க வேண்டாம்? அது தானே தொன்றுதொட்டு நடக்குது!(?) அதை விட்டுட்டு உன் கிட்ட கயித்தை கொடுத்து அனுப்பி இருக்கா... எவ்வளோ திமிர் அவளுக்கு? மரியாதையா அவளை ஓடிப் போகச் சொல்லு; நடைமுறையை மாத்துவது எனக்கு பிடிக்காது!? இங்கே மண்டபத்துல, வந்திருக்கற சொந்தகார பொண்ணில், பயந்த சுபாவத்தோடு, அடக்க ஒடுக்கமா மகாலஷ்மி போல் ஒரு பொண்ணை தேடிப்பார்த்து கட்டிவைக்க ஏற்பாடு பண்ணு! நானும் ஆரம்பத்தில் கடு கடுன்னு இருக்கறாப்புல வேஷம் போட்டுட்டு, அப்புறம் ரொமான்ஸ்ல பிச்சு உதறுவேன்... நீயும் எங்கேயோ போயிடுவ... என்ன சொல்லுற?

    அவன் சொல்லச் சொல்ல, சலனத்தில் கண்கள் பளபளக்க, கற்பனையில் குவியும் பாராட்டுகளில் நனைந்தவளாக இப்போ நான் என்ன செய்யணும்? கேள்வியெழுப்பின எனது உதடுகள் என் அனுமதி இல்லாமல்!

    இங்கே பார்... நான் அவளைப் போல கொடூரமானவன் கிடையாது; அவளுக்கு எவ்வளோ கேடுகெட்ட புத்தி பார்... கயித்தை கொடுத்து அனுப்பி இருக்கா; நான் தூக்கில் தொங்கி, நாக்கு தள்ளி முழி பிதுங்கி கோரமா சாகணும், அவ அதை பார்த்து ரசிக்கணும்! இவளை கட்டுறதுக்கு தூக்கில் தொங்குறது எவ்வளவோ மேல் தான்... ஆனா, நான் எதுக்கு சாகணும்? இந்தா... இந்த தூக்க மாத்திரையை அவ கிட்ட கொடு; வலி இல்லாம, அழகு குலையாம, ஸ்லீப்பிங் பியூட்டியா போய் சேரலாம்னு சொல்லு என்று என் கையில் தூக்க மாத்திரையை கொடுக்க

    ஒரு கையில் கயிறு, மறு கையில் மாத்திரை... சற்றுமுன் ஏற்பட்ட சலனம் ஓடி ஒளிந்து கொள்ள, மனசோ, ‘அட கொலைகாரப் பாவிகளா? எதுக்குடா இப்படி மாட்டி விடுறீங்க? ஏண்டா எனக்கு இந்த பொழப்பு? இப்படியே ஓடிப் போயிடலாமா?’ என்று மனம் தவிக்கையில், கதை எழுதச் சொல்லி என்னை ஆட்டிவிக்கும் சாத்தான் எழுந்து 'அது எப்படி ஓடிப்போவே? இவங்களை எப்படியாவது சேர்த்து வை’ என்றுரைத்து, இந்த கதைக்கான பிள்ளையார் சுழியை போட்டு கட்டளையிட்டது.

    இருவரையும் சேர்த்து வைத்து பேச முடிவு செய்தேன். மண்டபத்து மொட்டை மாடியில் காற்று அள்ளிக் கொண்டு போனாலும் என் மனம் புழுங்கி கொண்டு இருக்க, இரண்டு தறுதலைகளும் எனக்கு இருப்பக்கமும் முதுகை காட்டி கொண்டு வானத்தை வெறித்துக்கொண்டும், என் கழுத்தை நெறிக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டும் இருக்க

    தொண்டையை செறுமி இருவரின் கவனத்தையும் ஈர்த்தேன்; இருவரும் கொல்லும் வெறியோடு என்னை முறைக்க, நானோ தைரியத்தை வரவழித்துக் கொண்டு இங்கே பார் நந்தனா... பிடிக்காத ரெண்டு பேர் கல்யாணம் பண்ணிக்கறது என்பது ரொமான்ஸ் கதையைப் பொறுத்தவரை குட் ஸ்டார்ட்!! அதனால இந்த கல்யாணம் நடக்கட்டுமே?

    வாயை மூடு! இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசாதே; அதெல்லாம் நீ ஃப்ளெக்ஸ் போர்டை பார்க்காம மண்டபத்துக்குள்ள வந்து இருந்தா மட்டும் தான் நீ சொன்னது போல நடக்க வாய்ப்பு இருக்கு. எப்போ நீ பிளக்ஸ் போர்டை பார்த்தியோ அப்போவே கதைகளின் விதிப் படி பொண்ணோ இல்லை மாப்பிள்ளையோ மாறி இருக்கணும்!?

    பார்த்திபா, நீ?

    பேசாதே... டோன்ட் பிரேக் தி ரூல்ஸ்

    ‘அட பக்கிங்களா! பிளக்ஸ் போர்டை பார்த்தது ஒரு குத்தமாடா?!! இப்படி வச்சு செய்யுறீங்களே’ என்று நொந்தபடி பார்த்திபா, நான் பண்ணது தப்பு தான்; அதுக்காக கல்யாணத்தை எல்லாம் நிறுத்துவது ரொம்ப தப்பு என்று கெஞ்சுதலாக சொல்லியும் பயபுள்ள இளக்கம் இல்லாமல் முறைக்க

    சரி, எப்பவும் பொண்ணுக்கு தானே இளகிய மனசு என்று நந்தனாவை நோக்கி நந்தனா... பார்த்திபன் உனக்கு ரொம்பவே பொருத்தம்; பார்க்க நல்ல பையனா இருக்கான், அவனை ஏன் உனக்கு பிடிக்கலை?

    அவனை பிடிக்கலைன்னு யார் சொன்னா? எனக்கு கல்யாணம் பிடிக்கலை என்று தலையை சிலுப்பியவளை வியப்பாக பார்த்துவிட்டு

    கல்யாணம்... பிடிக்கலையா? ஏன்?

    கல்யாணமே பிடிக்கலைன்னு இல்லை... என்னைப் பொறுத்தவரை, கல்யாணம் என்கிறது வாழ்க்கையில் ஒரு தடவை வருவது; கல்யாணம் பண்ணிட்டு பிள்ளை வந்த அப்புறம் பிடிக்கலைன்னு பிரிவது எனக்கு செட் ஆகாது. ஸோ, ஒரு தடவை நடக்கும் கல்யாணத்துக்கு, இவன் தான் கடைசி வரை வருவான்னு நான் உறுதியா நம்புறவனை தான் கல்யாணம் பண்ணிக்க முடியும்

    எனக்கு கண்கள் பனித்து விட்டது! ‘இந்த மாடர்ன் மங்காத்தாவுக்குள்ளே இப்படி ஒரு குத்துவிளக்கா? அதுவும் பிரான்சில் பிறந்து வளர்ந்த பொண்ணுக்குள்ள இப்படி ஒரு இந்திய குலகுத்துவிளக்கா?’ என்று உள்ளம் பூரிக்க நந்தனா... உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. இப்போ என்ன... பார்த்திபனுக்கு நான் கேரன்ட்டி! நல்ல பையன், கடைசி வரை கூட வருவான்

    அது உனக்கு எப்படி தெரியும்? திடீர்னு ஒருத்தனை காட்டி கல்யாணம் பண்ணச் சொல்லுறது முட்டாள்தனமா இல்லை? நான் பழகிப் பார்த்து உறுதியா நம்பணும்

    ஓ... நீ ரஜனி ரசிகை போல! பரவாயில்லை, கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள் வரை, தள்ளி இருந்தபடி பழகிப் பாருங்க! அப்புறம் வாழ்கையை ஆரம்பிங்க

    நான் முட்டாள் என்பது போல என்னைப் பார்த்தவள் நான் சொல்லுறது உனக்குப் புரியலை. எனக்குப் பிடிச்சவனோடு இருந்து பார்க்கணும், அவன் என்னை எப்படி பார்த்துப்பான்னு தெரியணும்... எல்லாவிதத்திலும்... கிட்ட தட்ட லிவ் இன் போல! அப்புறம் நம்பிக்கை வந்தா கல்யாணம்! இல்லன்னா நண்பர்களா பிரிஞ்சிடலாம். எப்படி? ஸோ, இப்பா கல்யாணம் வேண்டாம்

    எனக்குத் தலை கிறுகிறுவென சுத்த தொடங்க, 'அடிப்பாவி... உன்னை நல்லவிதமா நினைச்ச மனசை நெருப்பில் இட்டுத்தான் பொசுக்கணும்... இது தான் உன் பண்பாடா?' என்று உள்ளே ஒரு குரல் அலற 'என்ன பண்ணுறது? ஹீரோயினா ஃபிக்ஸ் பண்ணிட்டேன்... இந்த தறுதலையை சமாளிச்சுத்தான் ஆகணும்’ என்று அலறிய குரலின் குரல்வளையை நெறுக்கிவிட்டு

    ஈ என்று இளித்தபடி இப்போ என்னம்மா சொல்ல வர? கல்யாணம், குழந்தை, காதல்... என்கிற மரபை, காதல், குழந்தை, கல்யாணம்னு சொல்லுற... அதானே?

    தோளை அலட்சியமாக குலுக்கியவள் ஏன்... குழந்தையோடு கல்யாணம் பண்ணா தப்பா?

    வார்த்தைகளை முழுங்கியபடி தப்பே இல்லைம்மா!! பார்த்திபா, நீ என்னப்பா சொல்லுற?

    நான் இவளைப் போல லூசு மாதிரி உளற மாட்டேன். எனக்கு நல்ல அடக்கமான பொண்ணு வேணும்; நான் கட்டிக்கப் போற பொண்ணுக்கு, அவ பேசினா, சத்தம் அவ தொண்டையை விட்டுக் கூட வெளியே வரக் கூடாது

    ஆத்தி!! ஊமைப் பொண்ணு வேணுமா?

    பல்லைக் கடித்தபடி இல்லை... அப்படி மென்மையா பேசணும்! அவளை பார்த்தாலே கையெடுத்து கும்பிடத் தோணனும்; நிலம் பார்த்து நடக்கணும், நீண்ட முடி இருக்கணும், காலையில் எழுந்து குளிச்சு,தலையில் கட்டிய ஈரத் துண்டோட மஞ்சள் பூசிய முகத்தோடு என்னை எழுப்பி விடும்போதே இந்த வாழ்க்கை சொர்க்கம்னு என்னை நினைக்க வைக்கணும்... அப்படி ஒரு பொண்ணு வேணும்

    நீ என்னப்பா, அழிஞ்சு போன உயிரினத்தை தேடிக்கிட்டு இருக்கே? உனக்கு, இந்த ஜென்மம் இல்லை... அடுத்த ஜென்மத்தில் கூட பொண்ணு கிடைக்காது! ரெண்டு பேரும் கவனிங்க... இப்போ வரும் கதைகளில் இருக்கும் ஹீரோ ஹீரோயினுக்கு இருக்க வேண்டிய எல்லா பொருத்தங்களும் உங்களுக்கு இருக்கு... அதனால வெட்டிப் பிடிவாதம் பண்ணாம கல்யாணம் பண்ணிக்கோங்க

    பார்த்திபன் கடுத்த முகத்தோடு என்ன பொருத்தம் இருக்குன்னு சொல்லுற? ஹீரோயின்னா, முதல் பாயின்ட்... அனாதையா இருக்கணும்! இந்த பஜாரிக்கு, பாதி பாண்டிச்சேரியே சொந்தமா இருக்கு... இதை எப்படி கட்ட முடியும்? எனக்கு செட் ஆகாது

    டேய், யாருடா பஜாரி? உனக்கு அனாதை வேணுமா? ஹீரோன்னா, உலகத்துலே பெஸ்ட் யுனிவர்சிட்டில படிச்சு இருக்கணும்... இவன் திண்டுக்கல் பக்கத்துல ஒரு குக்கிராமத்தில் கார்ப்பரேஷன் ஸ்கூலில் படிச்சு இருக்கான்; பெஸ்ட் கார் வச்சு இருக்கணும், இவன் கிட்ட அம்பாசிடர் கார் கூட இல்லை. ஹீரோன்னா, அவன் கால் வைக்காத பிஸினெஸ்ஸே இல்லைன்னு சொல்லணும்... இவன் இப்போ தான் அமெரிக்காவில் ஏதோ ITயில் குப்பை கொட்டுறான்... இதெல்லாம் எனக்கு செட் ஆகாது என்று நந்தனா முகம் திருப்ப

    எரிச்சல் உச்சி மண்டைக்கு ஜிவ்வென்று ஏற சரி இப்படி எதிரும் புதிருமா இருந்தா எப்படி? உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணனும்னு யார் முடிவு பண்ணா?

    இருவரும் கோரஸாக யாரா? காஞ்சனா என்று ஒருமித்து சொல்ல

    அந்த காஞ்சனா யாராக இருக்கும் என்று யோசித்தபடி தெய்வங்களா, தயவு செஞ்சு உங்க ஃபிளாஷ்பேக்கை சொல்லித் தொலைங்க... என்னால முடியலை! என்று அவர்களைப் பற்றி விசாரிக்க, இருவரும் ஒருமித்து, ‘இது செட்டாகாது! கல்யாணத்தை நிறுத்தி, இந்தக் கதையை இங்கேயே நிறுத்து' என்று அலறினார்கள்.

    2

    வாசவன்... புதுவையை சேர்ந்த சொல்தா (retired military soldier) அதனால் பணத்துக்கு பஞ்சமில்லை. கூடவே பிள்ளைச் செல்வத்துக்கும் பஞ்சமில்லை. இவர் மனைவி காஞ்சனா. இவர்களுக்கு வரிசையாக நான்கு ஆண் பிள்ளைகள்..., குணா, செல்வம், குமரன், அருள்... எல்லாமே ஆண் பிள்ளையாக போயிற்றே என்று நீண்ட நாள் தவம் இருந்து வேண்டிப் பெற்ற ஒரே பெண் மங்கையர்க்கரசி.

    பிள்ளைகள் வழக்கம் போல பதினாறு வயதிலே பிரான்ஸ் சென்று விட, ஒற்றைப் பெண்ணை பொத்திப் பொத்தி வளர்த்தவர்களுக்கு, மங்கை மிகவும் செல்லம். பாண்டியிலே BAC (நம்ப ஊர் அந்தக் கால PUC போல) வரை படிக்க வைத்தவர்களுக்கு மேற்படிப்பு படிக்க பிரான்ஸுக்கு அனுப்ப விருப்பம் இல்லை.

    திருமணம் செய்து அனுப்பி வைக்கலாம் என்று படிப்பை நிறுத்தியவர்கள்... ஒரே செல்லப் பெண்ணுக்கு பொழுதும் போக வேண்டும், கல்யாணம் ஆகும் வரை வீட்டிலேயே அடைந்து கிடக்கவும் முடியாதே! எனவே கோவில் குளம் என்று செல்ல ஒரு காரை வாங்கி, அதற்கு, சொந்தத்திலே வசதி குறைந்த நம்பிக்கையான ஒரு டிரைவரையும் தேடி வைக்க...

    மங்கையோ டிரைவர் ரமணாவுடன் காதல் கொண்டு பார்க் பீச்சு என்று காதல் பக்தியில் மூழ்கிவிட்டார்! அப்போது பெரியவர் குணாவுக்கு திருமணம் ஆகி இரு ஆண் பிள்ளைகளும், அடுத்தவர் செல்வத்துக்கு திருமணம் ஆகி பிள்ளை இல்லாமல் இருக்க, அடுத்தவர் குமரனுக்கு இரு ஆண் பிள்ளையும் இருந்தனர்.

    எனவே வாசவன், மீதமிருந்த கடைசி பிள்ளைகளான மங்கைக்கும் அருளுக்கும், பெண் கொடுத்து பெண் எடுக்கும் படி ஒரு குடும்பத்துடன் திருமணம் ஏற்பாடு செய்தார். மங்கைக்கு காதலிக்கும் போது வராத பயம் அப்போது வந்தது.

    ‘அப்பா அம்மா ஒத்துக்க மாட்டாங்களே என்ன பண்ண? அதிலும், பெண் கொடுத்து பெண் எடுப்பது என்னும் பட்சத்தில் தனது விருப்பத்துக்கு மதிப்பிலாமல் போகுமே’ என்று யோசித்தவருக்கு... வீட்டில் சொல்லி போராட நேரமும் இல்லை தைரியமும் இல்லை... அதனால் திருமணத்தன்று டிரைவர் ரமணாவுடன் ஊரை விட்டு ஓடி விட்டார்!

    செல்லம் கொடுத்து வளர்த்த பெண் இப்படி தலையில் இடியை இறக்குவாள் என்று நம்பியிராத வாசவன் காஞ்சனா தம்பதியர் மனதொடிந்து போய்விட்டனர். அண்ணன்களுக்கும் இது பேரிடி. ஒரே செல்லத் தங்கை ஆயிற்றே! எனவே அனைவர்க்கும் ஒருமித்த கருத்தொன்றே மேலோங்கியது... அதாவது, தாங்கள் கொடுத்த அதீத செல்லம் தான் மங்கையை வழி தவற வைத்தது என்று உறுதியாக நம்பினர்... தங்களையே நொந்து கொண்டனர்.

    இதில் அதிகம் பாதிக்கப்பட்டது அருள் தான்! அவரது திருமணமும் நின்று போய்விட, நொந்து போனவர், இனி என் வாழ்வில் திருமணமே வேண்டாம் என்று,

    Enjoying the preview?
    Page 1 of 1