Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Niram Maarum Nilavey
Niram Maarum Nilavey
Niram Maarum Nilavey
Ebook603 pages2 hours

Niram Maarum Nilavey

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

காதல் யோசிக்க நொடி நேரமும் கொடுக்காமல் உள்ளே வந்து, யோசிக்க வைக்காமலே வாழ வைக்கும், வித்தைக்காரன் கையில் இருக்கும் மந்திரக் கோல் போன்றது!! ‘காதல் என்றால் என்ன?’ என்று குழந்தையிடம் கேட்டால் கூட, அது நாலு வரியில் நறுக்கென்று கருத்து சொல்லும் காலம் இது!! நீர், நெருப்பு, ஆகாயம், நிலம் இவற்றின் குணாதிசயங்களைக் கொண்ட நால்வரின் காதல்! இதில் ஐந்தாவது அதிசயம்..! காதல் இவர்களை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதே இந்தக் கதை. இதையே என் கதையின் கேரக்டர்ஸ் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580160209344
Niram Maarum Nilavey

Read more from Gloria Catchivendar

Related to Niram Maarum Nilavey

Related ebooks

Reviews for Niram Maarum Nilavey

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Niram Maarum Nilavey - Gloria Catchivendar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிறம் மாறும் நிலவே

    Niram Maarum Nilavey

    Author:

    குளோரியா கட்சிவேந்தர்

    Gloria Catchivendar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gloria-catchivendar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கதைக்கு முன் சில வரிகள்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    கதைக்கு முன் சில வரிகள்

    E:\Priya\Book Generation\Niram Maarum Nilavey\jj-min.jpg

    காதல் யோசிக்க நொடி நேரமும் கொடுக்காமல் உள்ளே வந்து, யோசிக்க வைக்காமலே வாழ வைக்கும், வித்தைக்காரன் கையில் இருக்கும் மந்திரக் கோல் போன்றது!! ‘காதல் என்றால் என்ன?’ என்று குழந்தையிடம் கேட்டால் கூட, அது நாலு வரியில் நறுக்கென்று கருத்து சொல்லும் காலம் இது!! இதையே என் கதையின் கேரக்டர்ஸ் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?

    ஜனார்த்: ‘என் உலகம் ஷைலஜா தான்! அவள் என் சுவாசம் போன்றவள். அவளைத் தக்க வைத்துக் கொள்ள, எந்த எல்லைக்கும் போவேன். யாரைக் கொல்ல வேண்டி வந்தாலும் தயங்காமல் செய்வேன். இந்த உணர்வுக்குப் பெயர் காதல் என்றால்... YES I LOVE SHAILAJA’ என்று, மென்மையான காதலை கூட வன்மையாக சொல்பவன். உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாதவன்! கடினமானவன்! நெருப்பைப் போன்றவன்.

    ப்ரிதீவ்: ‘ஒரு மனிதனின் நிம்மதியை நிர்ணயம் செய்வது வீடு. வீட்டில் நிம்மதி இருந்தா தான், எந்த ஒரு காதலும், உறவும் நிலைக்கும். காலம் முழுக்க ஒரு பெண்ணால் நிம்மதியை நிலைக்க வைக்க முடிந்தால்... கண்டிப்பா அந்தப் பெண் மேல் உண்டான காதலும் நிலைக்கும். அப்படி நிலைக்க வைக்கும் ஒரு பெண் கிடைத்தால்... YES, I WILL TRY TO LOVE HER’ என்று, காதலையும், குடும்பத்தையும் முடிச்சுப் போட்டு பார்ப்பவன். பிடிவாதக்காரன்! நிலத்தின் தன்மை கொண்டவன்.

    ஷைலஜா: ‘காதல் அழகானது, ரசிக்க வைப்பது! முகம் தெரியாத ஒருவனை மணப்பதை விட, முகம் தெரிந்த ஒருவனை காதலிப்பதில் தவறு என்ன? ஆனால், காதலில் மனங்கள் ஒன்று படலாம்... உணர்வுகள் ஒன்று படாது. உணர்வுகள் காயப்படாத வரை காதல் நல்ல விஷயமே!’ என்று எண்ணுபவள். காதல் என்பது மனமும், உணர்வும் பிரிக்க முடியாத பந்தம். இரண்டும் ஒன்றுபட்டால் தான் காதல் என்று புரிந்து கொள்ள முடியாமல், தன்னையும் குழப்பி, கூட இருப்பவர்களையும் குழப்பி விடுபவள். அவசரக்காரி! நீரைப் போன்றவள்.

    யாமினி: ‘காதல் சுத்த டுபாக்கூர்! பிள்ளைகளுக்கு என்ன வேணும்னு பெத்தவங்களுக்குத் தெரியாதா? தன்னையும் வருத்தி, பிறரையும் வருத்தும் காதல் எனக்கு வேண்டாம். காதல்... அது சிரிப்பில் ஆரம்பிச்சு கண்ணீரில் முடிவது! தற்காலிக சந்தோஷத்தை கொடுத்து விட்டு, நிரந்த வலியை கொடுக்கும் முட்டாள்களின் சொர்க்கம்!’ என்று அழுத்தமாக சொல்பவள். தான் நினைப்பது மட்டுமே சரி என்று நினைக்கும். அழுத்தக்காரி . காற்றின் குணம் கொண்டவள்.

    இவர்கள் நால்வரில், யாருடைய கருத்து நிலைத்து... எப்போது, யார், யாருடைய கருத்தை சரி என்று ஏற்று... அதன் படி முடிவெடுத்து... அதனால் வரும் விளைவுகளை எப்படி எதிர் நோக்கினார்கள், என்று நால்வருக்குள் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டியே இந்தக் கதை!!

    1

    என் இதயத்தில் இருப்பதை உன்னால் படிக்க முடிந்தால்

    உனக்கு என் கண்ணீரின் அர்த்தம் புரியும்

    மனதில் உற்சாகம் இருந்தால், உச்சி வெயில் கூட குளிர்ச்சியாய் தலையில் இறங்கும்! கருங்கல் பாதை கூட பூ மெத்தையாய் இருக்கும்!! அப்படி ஒரு மனநிலையில் இருந்தான் ப்ரிதீவ். கைகள் தன் இயல்பாய் காரைக் கையாள, கண்களோ நொடிக்கு ஒரு தடவை பக்கத்து இருக்கையில் இருந்த கல்யாண பத்திரிக்கைகளை தடவித் தடவி மீண்டது. உச்சந்தலையில் ஏறிய மகிழ்ச்சி, வாய் வழியே சீட்டியாக வெளி வந்தது. கையிலோ கார் மின்னல் வேகத்தில் பறந்தது.

    பகல் பத்து மணி வெயில் கூட பனிப்பொழிவாய் அவன் கண் எதிரே விரிந்தது. வேர்வையில் வெந்து எரிச்சலுடன் பாதையைக் கடந்தவர்கள் அனைவரும், அவன் கண்ணுக்கு பனிச்சறுக்கு விளையாடுபவர்களை போல் தெரிந்தனர். இருக்காதா பின்னே... இன்னும் இருபது நாளில் திருமணம்... அதுவும் அவன் ‘பிடித்திருக்கு’ என்று கை காட்டிய பெண்!

    அவன் விருப்பம் ஒன்றே போதும் என்று சின்ன முணுமுணுப்பு கூட இல்லாமல், பெற்றோர் சம்மதம் சொல்லி, எங்கேயும் சிறு தடங்கல் இல்லாமல்... இதோ பத்திரிக்கை வரை வந்து விட்டதே, பின் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்! மனம் முழுவதும் அவளின் மாய ஓவியம்... அவள் தான் ஷைலஜா!

    செல்லின் ஓசை, அவனுள் மலர்ந்திருந்த மன ஓவியத்தை, புகையாய் ஊதிக் கலைக்க... எரிச்சலுடன் அதை எடுத்தவன், முகம் மலர ஸ்பீக்கரை ஆன் செய்தப்படி, காரை ஓட்டிக் கொண்டே தன் பேச்சை தொடர்ந்தான்.

    டேய் ரகு, என்னடா மச்சி, இன்னைக்கு தான் உனக்கு என்னோட நியாபகம் வந்துச்சா?

    மாப்ஸ், இது நான் கேட்க வேண்டிய கேள்வி. ஏண்டா, இதுவரைக்கும் உன்னோட காதலைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி இருக்குறியா? எதுவுமே சொல்லாம, திடீர்னு கல்யாணம் வரைக்கும் வந்துட்டியே... நியாயமாடா? இப்போ கூட உங்க அம்மா சொல்லித்தான் எனக்கு தெரியுது

    "ஸ்டாப்... ஸ்டாப்... உன்னோட குதிரை தாறுமாறா ஓடுது, அடக்கு! நீ ஆஸ்திரேலியா போய் உட்கார்ந்துக்கிட்டு, நான் எதுவும் சொல்லலைன்னா எப்படி? உனக்கே தெரியும், எனக்கு லவ்ல எந்த நம்பிக்கையும் இல்லை. திருமணம் என்பது ஒரு ஜென்டில்வுமன் அன்ட் மென் அக்ரிமெண்ட் அவ்ளோ தான்! பரஸ்பரம் நம்பிக்கை தேவை. ஆனா லைஃப் ஃபுல்லா கூட வர பொண்ணு, எங்க குடும்பத்தோடு ஒத்து போறவளா இருக்கணும்னு நினைச்சேன். அப்படிப்பட்ட பொண்ணு தான் ஷைலு!

    நம்ப கஃபே பக்கத்துல இருக்குற காலேஜ் பொண்ணு. ஃபிரெண்ட்சோட கஃபேக்கு வருவா. கொஞ்சம் கொஞ்சமா அவளை கவனிக்க ஆரம்பிச்சேன். ஏனோ எனக்கு செட் ஆவான்னு தோணுச்சு. உனக்கே தெரியுமே, அம்மா அப்பா லவ் மேரேஜ் செஞ்சதால, உறவுகளே இல்லாம, தனித்தீவா இருக்கிறோம். ஃபிரெண்ட்ஸ் தான் உறவு. ஆனா இப்போ ஷைலு குடும்பமே எங்களுக்கு சொந்தமாக போகுது. அருமையான மனிதர்கள்… எப்படி நழுவ விடுவது? அம்மாக்கிட்ட சொன்னேன்... அவங்களுக்கும் பிடிச்சு போய்…, இப்போ எல்லாம் முடிஞ்சு பத்திரிகையை கையில கொடுத்துட்டாங்க... வாங்கியதில் இருந்து மனசு பரபரன்னு இருக்குடா..."

    மாப்ஸ்... மச்சக்காரண்டா நீ... என்னவோ முறுக்கு கேட்டேன், சுட்டுக் கொடுத்தாங்க என்பது போல சொல்லுற…! சரிடா... பொண்ணு எப்படி…? சிஸ்டர் போட்டோ இருந்தா அனுப்புடா...

    ஹா... ஹா... ‘பொண்ணு பார்வைக்கு லட்சணமா... பார்க்கும் போதே மனசுல ஒட்டிக்குற மாதிரி இருக்குறா’ன்னு அம்மா சொன்னாங்க… அக்காவோ..., ‘பொண்ணு சுமார் தான்’ன்னு சொன்னா... அப்பா..., ‘குடும்பம் நடத்த இந்த அழகு போதும்’ன்னு சொன்னார்... ஆனா எனக்கு அவ பேரழகியா தெரியுறா... என்றவன் கண்கள், கனவில் மின்னியது.

    டேய்... டேய்... போதுண்டா... போன் நனைஞ்சிடுச்சு... மரியாதையா பத்திரிக்கையையும், பொண்ணு போட்டோவையும் அனுப்பி வை... ரொம்ப வழியாதே...

    அடிங்... சரி அனுப்பி வைக்குறேன். ஒழுங்கா கல்யாணத்துக்கு வந்து சேர்...

    ப்ரிதீவ்... விளையாடதே மாப்ளே..., நான் என்ன பக்கத்து ஊரிலா இருக்கேன்..., உடனே கிளம்பி வருவதற்கு….!! அதுவுமில்லாம லீவ் கிடைக்கணும்… நீ வேற இருபது நாளில் கல்யாணம், வந்து சேர்ன்னு சொல்லுற...?

    மச்சி..., என்னடா இப்படி சொல்லுற...? எனக்கு இருக்குற ஒரே பெஸ்ட் ஃபிரெண்ட் நீதான்…! நீயே வரலைன்னா எப்படி…? ஓ… புரியுது புரியுது… டேய்… பிசுநாறி... நானே டிக்கெட் அனுப்புறேன், வந்து தொலை… அதுக்கு தானே என்னென்னவோ காரணம் சொல்லுற...

    ஹ... ஹா... இப்போ சொன்ன பார், குட் ஐடியா... முதலில் அதை செய்... சீக்கிரம் டிக்கெட் போடு... நீ இன்னும் மாறவே இல்லேடா..., அதே பிடிவாதம்… ஒண்ணு வேணும்னு முடிவு பண்ணிட்டா, எதையாவது செஞ்சு காரியத்தை சாதிக்கிறதும்…, வேண்டாம்னா வன்மம் வைக்குறதும்...! இன்னும் குழந்தை தான் நீ…! சிஸ்டர்கிட்ட இந்த குணத்தை காமிக்காதேடா… கொஞ்சம் மூட்டை கட்டி வை...

    அது என்றவன் செல்லில் இரண்டாவது அழைப்பு வந்தது... ஷைலஜா லைனில் காத்திருப்பதாக காட்ட... மச்சி... ஷைலு தான் கூப்பிடுறா, நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்... என்றவன்…, எதிர்முனை பாவி என்று அலற அலற அதை கட் செய்து விட்டு... ஷைலஜாவின் அழைப்புக்குக் காதைக் கொடுத்தான்.

    மனம் படப்படக்க உற்சாக குரலில் ஷைலு... என்றான். நிச்சயத்தின் போது கூட... கேட்கும் கேள்விக்கு மட்டுமே பதில்... அதுவுமில்லாமல் இடக்காக பதில் சொல்வது என்று இருந்தவள்... இப்போது அவளே கூப்பிடுகிறாள் என்றால், உற்சாகத்திற்கு கேட்கவும் வேண்டுமா…! .

    மனம் பூரிக்க எதிர்முனை குரலுக்கு காத்திருந்தான்... மௌனம் நீள... ஷைலு..., என்ன விஷயம் சொல்லுமா... என அவளை பேச தூண்டினான்.

    அது என்று சில நொடி தயங்கியவள்... தடுமாறி நா... நான் உங்கக்கிட்ட பேசணும்... என்று சொல்லி முடித்தாள்.

    சட்டென பிறந்த குறும்புடன்... இப்போ பேசிக்கிட்டு தானே இருக்க... பேசு... என்று சொல்லியப்படியே, காரை தன் கஃபே பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு இறங்கியவனின் பார்வை, கஃபேவை அளவெடுத்தது.

    அவனின் மனமோ, நிச்சயத்தின் போது, ‘என்ன... அந்த காஃபி கடை உங்களுதா’ என்று கஃபேவை காப்பி கடையாக மாற்றி, ஆச்சரிய பார்வையில் விழிகள் விரிய கேட்ட முகம் நினைவில் வந்து சிரிப்பைக் கொடுக்க, அதை மறைக்காமல்,...

    ஷைலு..., சொல்லும்மா... பேசணும்னு சொன்னே, இப்போ பேச வார்த்தையை எண்ணிக்கிட்டு இருக்குறே போல... என்ன பேசணும், எதுவாக இருந்தாலும் சொல்லுமா...

    அது... அது... நா... நான்... உங்கக்கிட்ட நேர்ல பேசணும்... என்றவள் குரல் பதட்டத்தை காட்டியதோ...! ஏதோ ஒன்று மனதை நெருட... கடிகாரத்தைப் பார்த்தவன்...

    ஷைலு..., மணி பத்தாக போகுது... இப்போ நீ எங்க இருக்க... எங்க பார்க்கலாம்னு சொல்லு, நானே வரேன்.

    இல்ல... இல்ல... இப்போ வேண்டாம்... எனக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு... நீங்க எங்க இருக்கீங்க...

    என்னை சந்திக்கறதை விட முக்கியமான வேலை இருக்கா என்ன...? நான் கஃபேல இருக்கேன்... அதான் உன் பாஷையில் காப்பி கடை...

    எத்தனை மணி வரை இருப்பீங்க...

    ஷைலு..., நான் நைட் பத்து மணி வரைக்கும் இங்க தான் இருப்பேன்... உனக்கு என்ன பிரச்சனை...

    ‘பிரச்சனையா…!! இவருக்கு எப்படி தெரிந்தது…? என்று மனதிற்குள் குழம்பியவளாக,... அதெல்லாம் ஒண்ணும் இல்ல... உங்களை பார்க்கணும். ஈவ்னிங் சிக்ஸ் தேர்ட்டிக்கு நான் அங்க வரேன், எங்கேயும் போய்டாதீங்க... எனக்காக காத்திருங்க... என்றவள், அவன் பதிலை எதிர் பார்க்காமல் கட் செய்தாள்.

    ‘எனக்காக காத்திருங்கள்’ என்று சொன்ன அவள் வார்த்தையே கோவில் மணி போல ஆயிரம் எதிரொலியை அவன் மனதில் எழுப்பி, அவனை சிறகில்லாமல் பறக்க வைத்தது. அதுவே அவன் கனவை தொடரவும் வைத்தது.

    ப்ரிதீவ் அழகன்... கலகலப்புக்கு பஞ்சம் இல்லாதவன்… தான் இருக்கும் இடத்தை புன்னைகையால் நிரப்பி, சோகத்தை விரட்ட தெரிந்த வித்தைக்காரன்... பேச்சில் வசியம் செய்யும் மாயக்காரன்… நல்லவனுக்கு நல்லவன்… நட்புக்கு தோள் கொடுப்பவன். அவனிடம் இருக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும் அடித்து நொறுக்கும் ஒரே கெட்ட விஷயம்… அவனின் பிடிவாதம்… அது பெற்றோருக்கு செல்லப்பிள்ளை என்பதால் கூட இருக்கலாம்.

    ***

    பொன் அந்தி மாலை...தன் ஒளிக்கரங்களை சுருக்கி, மேகத்துக்கு தங்க வர்ணம் பூசியப்படி, தான் வரைந்த ஓவியத்தின் அழகில் மெய் மறந்து, தயங்கி தயங்கி உலகின் மறு பகுதிக்கு ஒளி வெள்ளம் அனுப்பும் கடமையும் அழைக்க, மெல்ல மெல்ல இன்றைய நாளுக்கு பிரியா விடை கொடுக்க ஆரம்பித்த சூரியன்... மெல்ல மேற்கில் மறைய முயற்சித்தான். மறுபுறமோ... ‘டேய் மடையா, நீ போனா தான் நான் வர முடியும்’ என்பது போல் நிலவு முகம் காட்ட தவித்தது.

    உங்கள் விளையாட்டை தான், தினமும் பார்க்கிறோமே என்று கடல் அலைகள் ஒன்றையொன்று தொட்டுவிடும் ஆர்வத்துடன் அலை பாய்ந்த இனிய கடற்கரை... ‘அப்பா... அடிக்குற வெயிலுக்கு இதுதான் சொர்க்கம் என்று மக்கள் குவியல் குவியலாய் குமிய ஆரம்பித்தனர்... அங்கே படகின் ஓரத்தில் எதிரெதிர் திசையில் வெறித்தப் பார்வையுடன் அமர்ந்து இருந்தனர் ஷைலஜாவும், அவளது தோழி யாமினியும்…!

    உலகத்து சோகம் அனைத்தையும் குத்தகைக்கு எடுத்தது போல், ஷைலஜாவின் அழுது வீங்கிய முகம் இருந்தது. இன்றோடு தன் உலகம் முடிவுக்கு வந்து விட்டதோ என்று தவித்தாள்... ஓங்கி ஆர்ப்பாட்டத்துடன் பொங்கி எழும் கடல் அலைக்கு ஒப்பாக அவள் உள்ளம் தவித்தது... சிறு வயதில் கடற்கரைக்கு வரும் போது, அலைகள் ஒன்றை ஒன்று தொட முயற்சிப்பது, கண்ணாமூச்சு விளையாட்டு போல் தோன்றும்... அலைகளின் விளையாட்டை நேரம் காலம் இல்லாமல் ரசிக்க தோணும்... கூடவே விளையாடும் வயது அது... பருவ வயதிலோ, கடலரசன் தன்னை தேடி அலைகளை அனுப்புகிறான் என்று உருவகப்படுத்தி... நீரில் கால்களை நினைத்து... அவனுக்கு பதில் செய்தி அனுப்பி விட்டதாக ஆனந்தத்தில் ஆர்பரிக்கும் மனசு …!

    ஆனால் இப்போதோ அனைத்தையும் இழந்து, பரிதவிப்புடன் தான் இழந்ததை தேடி, கரையை கடக்க முடியாமல், நீர் குமிழாய் மறைந்து போகிறதோ இந்த அலைகள் என்று எண்ணி... தானும் அது போல மறைய வேண்டியது தானோ... தன் உலகம் ஒரு நாளில் முடிந்து விட்டதா... தன் ஆசை கனவுகள் எல்லாம் கலைந்து விட்டதா... காலையில் பத்திரிக்கையுடன் கிளம்பும் போது இருந்த துள்ளல் துடிப்பு எல்லாம் அடங்கி விட்டதே... ‘ஜனா’ என்ற இரண்டு எழுத்து என் வாழ்வை மாற்றிப் போட்டு விட்டதே... அவன் சொல்வது போல் நான் சுயநலவாதியா...? என்று பரிதவித்து அமர்ந்து இருந்தாள் ஷைலஜா.

    ஷைலு..., நீ போய் அவரைப் பார்த்தியா... என்றாள் முதலில் பேச்சை கலைத்த யாமினி... ஆம் என்பது போல் தலை அசைத்தவளைப் பார்த்து கோபம் மேலோங்க...

    உனக்கு அறிவு இருக்கா இல்லையா... ஏண்டி இப்படி பண்ணுற…? அவர் வேண்டாம்னு முடிவு எடுத்துட்டு, வேற ஒருத்தரோட கல்யாணத்துக்கும் சம்மதிச்ச பின்னாடி, இப்போ எந்த தைரியத்துல அவரைப் போய் பார்த்த... காலையில நான் அவ்வளோ சொல்லியும் நீ கேட்கலை... ஏண்டி இப்படி பண்ணுற... என்ன, அந்த ராஸ்கல் காலைப் பிடிச்சு அழுதானா…?

    அமைதியாக கடல் அலைகளை வெறித்துப் பார்த்தவள், பேசாமல் இருக்க... கடும் கோபத்துடன்... சனியனே... வாயைத் திற... எனக்கு இருக்குற கோபத்துக்கு கழுத்தைப் பிடிச்சு நெறிச்சிடுவேன்... படிக்கும்போதே லவ்... ஏண்டி உன்னோட வாழ்க்கையை நீயே சீரழிச்சிக்குற…? லவ் மேரேஜ் பண்ணிக்கிட்ட என்னோட அக்கா என்ன கதி ஆனான்னு தெரிஞ்சும்…, நான் அவ்ளோ சொல்லியும் கேக்கலை... சரி, அவர் சரி வர மாட்டார்னு நீயே ஒதுக்கியதும், நான் எவ்ளோ சந்தோஷப்பட்டேன்... இப்போ எதுக்கு திரும்பி அவரைப் போய் பார்த்த…? அவன் வர சொன்னானா…?

    இல்லை என்று தலை அசைத்தவளைப் பார்த்து, கண்களில் எரிச்சல் மின்ன… நீயா போய் பார்த்தியா... என்னத் தாண்டி செய்யப் போற... சொல்லித் தொலையேன்… இப்போ கொஞ்ச நாளா நீ பண்ணுற வேலைக்கு, உன்னை விட்டு விலகவும் முடியாம, ஒரு நல்ல ஃபிரெண்டா கூடவே இருக்கவும் முடியாம எரிச்சலா இருக்கு... என்றவள், எழப் போக,...

    அவளை கைப் பிடித்து அமர்த்திய ஷைலு, நான் ப்ரிதீவ்வை பார்க்க போறேன்… நீயும் கூட வரியா மினி…?

    அவரைப் பார்க்க, நான் எதுக்குடி உன் கூட வரணும்...

    ப்ளீஸ் மினி... ப்ரிதிவ் கிட்ட இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லணும்... எனக்கு தனியா போற தைரியம் இல்ல, துணைக்கு நீயும் கூட வாடி...

    ஷைலு சொன்ன செய்தியை உள்வாங்கியவாறே... ஒரு நொடி திகைத்தவள், மறுநொடி கோபமாக...

    ஷைலு..., என்ன முட்டாள் மாதிரி பேசுறே... இப்போ ஏன் இந்த கல்யாணத்தை நிறுத்தணும்…? ஜனா உனக்கு சரி வர மாட்டார் என்று யோசிச்சு முடிவு பண்ணித்தானே, இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட... இப்போ போய்…! வேணாம்டி... ஜனாவை விட ப்ரிதிவ் எல்லா வகையிலும் பெட்டர் சாய்ஸ்... சொல்லுறதை கேளு... வா வீட்டுக்குப் போவோம்... என்று கண்டிப்புடன் பேசினாள்.

    அவ்வளவு பேசியும் அசையாமல் கல் போல் அமந்து இருந்தவள் மேல், டன் கணக்கில் வெறுப்பு கிளம்பியது.

    ஏய்... அப்படி தெய்வீக காதல்னா ஏண்டி நிமிஷத்துக்கு நிமிஷம் மனசை மாத்திக்கிட்டு சாவடிக்கிறீங்க... ஷைலு..., இங்க பார்… ப்ரிதீவ்வை இன்னைக்கு பார்க்க வேண்டாம். அவசரத்துல எடுக்குற முடிவு சரி வராது... ரெண்டு நாள் பொறுமையா யோசி... அப்புறமும் உன் முடிவுல நீ நிலையா இருந்தா, நானே கூட்டிட்டுப் போறேன்... ஓகேவா என்றாள் கெஞ்சுதலாக...

    இல்லை…. இன்னைக்கே சொல்லிடுவோம் மினி...

    இன்னைக்கே பேசுற அளவுக்கு அப்படியென்ன குடி மூழ்கிடுச்சு...? என பல்லைக் கடித்தவளிடம், தன் கையில் இருந்த பையைக் கொடுத்தாள் ஷைலஜா.

    புரியாதப் பார்வைப் பார்த்தப்படி அதை வாங்கியவள், உள்ளே பார்வையை வீச, பட்டுப் புடவையையும், நகைகளையும் பார்த்தவள், புருவம் இடுங்க… என்னடி இது புடவை நகை...? நிச்சயப் புடவையா...? ப்ரிதீவ்கிட்ட கொடுக்கப் போறியா...? இல்லையே அது வேற கலராச்சே...! என்னத்தாண்டி சொல்ல வர… உயிரை வாங்காம சீக்கிரம் சொல்லி தொலை...

    நாளைக்கு காலையில பத்து மணிக்கு, ஜனா வீட்டு பக்கத்துல இருக்குற அங்காளம்மன் கோவில்ல எங்களுக்கு கல்யாணம்... அதான் ப்ரிதீவ்கிட்ட இப்போவே பேசணும்னு சொல்லுறேன்... என்றாள், யாருக்கோ கல்யாணம் என்ற பாவனையில்.

    "ஹே... என்ன சொல்லுறே…! கல்யாணமா…! என்று அதிர்ந்து,... வார்த்தைக்கு தடுமாறியவளாக கடலை வெறித்தாள்.

    அப்படியும் கோபம் குறையாதவளாக முட்டாள்... முட்டாள்... உன்னோட அம்மா, தங்கைங்க... எதையும்... யாரைப் பற்றியும் நீ யோசிக்கலையா…? யோசிக்காம உளறிக்கிட்டு இருக்க.

    இங்கே பாரு... ஜனா உன்னை மிரட்டுறாரா, சொல்லு... இல்ல... இதுல ஏதோ இருக்கு… நேத்து வரைக்கும் அவனைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டு, இன்னைக்கு ஏண்டி அவசரப்படுறே…! இது சரியில்லை ஷைலு... ராஸ்கல் புடவை நகைன்னு எல்லாம் கொடுத்து விட்டுருக்கான்... ஏன், உன்னோட வீட்டில் இருந்து துரைக்கு ஒரு தூசி கூட வேண்டாமா…? அப்போ, அஞ்சரை அடிக்கு உயரமா உன்னை வளர்த்து விட்டு இருக்காங்களே... நீயும் உங்க அப்பா அம்மாவுக்கு சொந்தமானவ தான்..., அது மட்டும் அவனுக்கு வேண்டுமா... என்ன லாஜிக் இது...

    மினி…, ப்ளீஸ்... நான் ஏதும் பேசுற மனநிலையில் இல்லை... இதை எப்படி ப்ரிதீவ் கிட்ட சொல்லுறதுன்னு மட்டும் தான் யோசிக்கிறேன்... என்னை வேறு எதுவும் கேட்காதே... ஆறரைக்கு அவரை பார்க்க வரேன்னு சொன்னேன்... மணி ஆகிடுச்சு, கிளம்பு... என்றவள் எழ…

    கூடவே எழுந்த மினி,... என்ன செய்வது என்று புரியாத பாவனையில்...ஷைலு..., உன்னிடம் ஒண்ணே ஒண்ணு கேட்கணும்... நீ ஜனாவை..., விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கப் போறியா…? உன் கண்ணுல வெறுப்பு மட்டும் தானே தெரியுது என்றாள் குரல் உடைய,

    கீழ்வானில் தன் கடைசி ஒளிக் கரங்களை உள்ளிழுத்தவாறே மறையும் சூரியனை வெறித்தப்படி... மினி..., உண்மையை சொல்லணும்னா, இந்த நொடி உலகத்திலேயே நான் அதிகம் வெறுக்கும் ஒரே நபர் ஜனா தான்... இன்னைக்கு காலையில கூட என் மனதின் ஓரத்தில் இருந்த காதல் இப்போ செத்துடுச்சு...

    என்னடி என்ன சொல்லுறே…? அப்படி பிடிக்காதவனை ஏன் கட்டணும்…? அவன் உன்னை ப்ளாக்மெயில் பண்ணுறானா…? சொல்லு... அப்பாக்கிட்ட சொல்லலாம், அவர் போலீஸ்தானே, சரி பண்ணிடுவார்டி... என்றவள் வழி கிடைத்த உற்சாகத்துடன் குதிக்க...

    உங்க அப்பா போலீஸ் தான்... ஆனா, உங்க அக்கா வாழ்க்கைக்கு அவரால் என்ன செய்ய முடிஞ்சுது…? சரி செய்ய முடியாத சில விஷயங்கள் வாழ்க்கையில இருக்கு… நானும் அப்படித்தான்... காதலிக்குறதுக்கு முன்னாடி ஆயிரம் தடவை யோசிக்கலாம்..., ஆனா காதல் வந்த பின்னாடி... எது பெட்டர் சாய்ஸ்ன்னு யோசிச்சு இருக்கக்கூடாது... இப்போல்லாம் தப்புக்கு உடனே உடனே தண்டனை கிடைக்குது... என் தப்புக்கு, என் காதலை பலிக்கொடுத்து... காதலனை கைப்பிடிக்க போறேன்... என விரக்தியாகப் பேசியவளைப் பார்த்து, மனம் தாங்காமல்...

    ஷைலு... என்னடி இது... ரெண்டு பேருக்கும் நிம்மதி இருக்காதே... ஏண்டி இப்படி ஒரு வாழ்க்கை...?. ஜனா என்னன்னு தாண்டி உன்னை மிரட்டுறார்... நான் வேணா பேசிப் பார்க்கவா...

    வேண்டாம் மினி... முதலில் இப்போ நாம ப்ரிதீவ்வை பார்க்கப் போகலாம்... இனி பேசி லாபம் இல்லை… வறண்ட வாழ்க்கையை தான் வாழணும்னு எனக்கும் ஜனாவுக்கும் விதிச்சு இருக்கு... ஏற்கனவே நாங்க பேசி முடிவு எடுத்து விட்டோம்... இனி பேச ஒண்ணும் இல்லை...

    அவள் மனம், ‘எங்கே பேசி முடிவு எடுத்தோம்...? என்னைத்தான் அவன் பேசவே விடலையே...! அவனோட முடிவுகளை என் மேல் திணித்து விட்டானே... என்னால் அதன் பாரம் தாங்க முடியுமா…? இனி காலம் முழுவதும் இந்த தவிப்பு என்னைத் தொடருமா…?’ என்று தவித்தப்படி விலகி செல்பவளை பரிதவிப்புடன் தொடர்ந்தது விதி...!!

    2

    எப்போதும் அழுகிறேன்,

    மனதை வெளிபடுத்த முயன்று தோல்வி அடைகிறேன்...

    இருந்தும் எப்போதும் சிரித்து கொண்டு இருக்கிறேன்

    ஆனால் உள்ளுக்குள் இறந்து கொண்டு இருக்கிறேன்...

    காத்திருப்பு போல் இம்சை தருவது வேறு எதுவும் இல்லை... வயிற்றுக்குள் இனிய சங்கடம் மெதுவாய் உருளும்... அது இனிய நினைவுகளை கொடுக்கும்... அதே நேரத்தில் தேவை இல்லாத பயத்தைக் கிளப்பி... நிலையில்லாமல் உலவ வைக்கும்... அப்படித்தான் தான் உலவிக்கொண்டு இருந்தான் ப்ரிதீவ்...

    ஆறு மணியில் இருந்தே தவிக்க ஆரம்பித்தான்... மனதுக்குப் பிடித்தவர் அருகில் இருந்தால் ஒரு நாள், ஒரு நொடியாய் போகும்... அதே அவர் வரவை எதிர்நோக்கும் போதோ... ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய் கழியும்... என்னவொரு இனிய அவஸ்தை இது என்று…? புரியாமல் நடை போட்டான்.

    அவன் மனம் முழுவதும் ஷைலுவின் பிம்பம், நிழற்படமாய் விரிந்தது... இரண்டு மாதங்களுக்கு முன் அவளை முதன்முதலாய் பார்த்த தினம், இன்றும் அவன் மனதில் பசுமையாய் காட்சியளிக்க... அவள் உருவமோ கல்வெட்டாய் பதிந்து இருந்தது... அவளின் நினைவுகள் அவனை அலைக்கழித்தது.

    ***

    அந்த நாள்... அவன் கஃபே வந்தப்போதே ரொம்ப லேட். இன்னொரு ஃபிராஞ்ச் ஆரம்பிக்கும் வேலை கழுத்தை நெறிக்க... வந்தவன் கடகடவென அன்றைய கணக்கு வழக்கைப் பார்க்க ஆரம்பித்தான்... அவன் கவனத்தை செல்லின் ஒலி கலைக்க... அதில் தன் தாயின் எண்ணைப் பார்த்துதும், அதை எடுத்து காதுக்கு கொடுத்தாலும்... கவனம் தன்னை மீறி எதிரே இருந்த லாப்டாப்பில் பதிய... அதை தவிர்க்கும் பொருட்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தான்.

    பேசிக்கொண்டே ஒரு மேஜையின் முன் அமர்ந்தவன்... பேரரிடம் ‘ஒரு காஃபி’ என்று சைகை செய்து விட்டு, தன் பேச்சைத் தொடர்ந்தான். ப்ளீஸ்... அம்மா, இன்னைக்கு வேலை அதிகம். அதான் மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர முடியலை... தேவையில்லாம நீ ஏன் ஓவரா கற்பனை பண்ணுற...

    இல்லைடா ராஜா..., காலையில உன்கிட்ட பொண்ணுங்க போட்டோ காட்டினேனே, அதுக்கு கோவிச்சிக்கிட்டியோன்னு நினைச்சேன்... என்றார் ப்ரிதீவின் தாயார் சகுந்தலா.

    இதுல கோபப்பட என்னம்மா இருக்கு…?, நான் என்ன கல்யாணமே வேண்டாம், சாமியாரா போகப் போறேன்னா சொன்னேன்…! நீங்க காமிச்ச எந்த பொண்ணுமே எனக்கு பிடிக்கலைம்மா… அந்த பொண்ணுங்ககிட்டே ஏதோ மிஸ்ஸிங்...மா

    மிஸ்ஸிங்கா..., என்னடா... மிஸ்ஸிங்…? எனக்கு ஒண்ணும் புரியல. எல்லாரும் பார்க்குறதுக்கு மகாலக்ஷ்மி மாதிரி தான் இருக்காங்க... என்ன, கொஞ்சம் மாடர்னா, காலத்துக்கு ஏத்தாப்போல இருக்காங்க... அவங்ககிட்டே ஒண்ணும் மிஸ் ஆகலை… நீதான் கல்யாணத்தை தள்ளிப் போட சாக்குப்போக்கு சொல்லுற

    ஊப்... ஹய்யோ அம்மா... புடவை கட்டுனா எல்லா பொண்ணும் மகாலஷ்மி தான்... மாடர்ன் டிரஸ் போடுறது தப்பு இல்லை... நான் எதிர் பார்க்குறது என்னன்னு உனக்கு எப்படி சொல்ல...! என்றவனின் பேச்சை, பக்கத்து டேபிளில் இருந்த பெண்களில் ஒருத்தியின் கிண்டலான குரல் தடை செய்தது...

    அவன் நிமிர்ந்து அவர்களைப் பார்க்க..., எதிரே அமர்ந்து இருந்தவள் ஹே... நிலா... அவதான் வீட்டுப் பறவைன்னு உனக்கு தெரியுமே... கடவுளே வந்தாலும், வீக்கெண்டுல வெளியே வரமாட்டா... என்றவள், தன் அருகில் இருப்பவளின் தோளைத் தட்டி சொல்லி விட்டு, ஜோக் சொன்னது போல் சத்தமாக சிரிக்க...

    அங்கே இருந்த அவர்கள் நால்வரையும் பார்த்த உடனேயே, பக்கத்து கல்லூரி மாணவிகள் என்று கண்டுக்கொண்டான்... அதில் மூவர் அவனுக்கு முகம் தெரிய அமர்ந்து இருக்க, ஒருத்தியின் முதுகு தான் தெரிந்தது. அவளைப் பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தனர் போல... அம்மாவிடம் பேசிவிட்டு, உடனே போனை கட் செய்தவன், ஏனோ அவர்கள் அறியாமல் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.

    மினி..., போதும்... வாரம் முழுவதும் உங்க கூட தானே காலையில் இருந்து சாயங்காலம் வரை குப்பைக் கொட்டுறேன்... வீக்கெண்டுல மட்டுமாவது முழுநேரமும் என்னோட குடும்பத்துடன் இருக்கணும்னு நினைக்கிறேன், அதுல என்ன தப்பு...

    அந்த மினியைப் பார்த்தவன், ‘ஷ்ஷப்பா... பேருதான் மினி, ஆனா ஆளு பீரோ சைஸ்ல இருக்கு... ஆளும் குரலும்…!! இந்தப் பொண்ணு முகம் காட்ட மாட்டேங்குதே, பேர் என்னவா இருக்கும்’ என்று யோசித்தவன் மேலும் அவர்கள் பேச்சைக் கவனித்தான்.

    என்னப்பா இது... நம்ப நிலாவுக்கு நாளைக்கு தானே பிறந்த நாள்... நாளைக்கு ஒரு நாள் எங்க கூட வாடி... ப்ளீஸ் நீ இல்லேன்னா போர் அடிக்கும்ப்பா. என்றாள் மற்றவள்.

    ஏய் சஞ்சு... விடுடி, ஏன் கெஞ்சுற...!! அம்மா நமக்குன்னா வர மாட்டாங்க... என எரிச்சல் குரலில் சொன்ன மினியை முறைத்தான் ப்ரிதீவ்.

    ‘இந்த பீரோ... இது பீரோ புல்லிங் பண்ணவும், ஊர் சுத்தவும் என்ன மாதிரி பேசுது பேய்...’ என்று நினைத்தவன், தலையில் கை வைத்தப்படி அமர்ந்து இருந்தவளைப் பார்த்ததும் மனம் தவித்தது. நேரம் ஆக ஆக அவள் முகம் பார்க்க ஆசை கொண்டது உள்ளம்... இது என்ன புதுவகை குழப்பம் என குழம்பினான்... அவள் அமைதியே, அவள் சோகமாக இருக்கிறாள் என்பதை உணர்த்த, புரியாத தவிப்பு அவனை வாட்ட துவங்கியது.

    மினி..., சஞ்சு..., விடுங்கப்பா. அவளைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவளை இங்கே கூட்டிட்டு வருவதே பெரிய பாடு... அவளை பத்தி தெரிஞ்சும், நாம இப்படி பிளான் போட்டு இருக்கக்கூடாது விடுங்கடி... இதெல்லாம் சரி தான்... நாளைக்கு இவளுக்கு கல்யாணம் ஆன பிறகு, ஒரு வாரமா உங்க முகத்தைப் பார்த்துட்டேன்னு சொல்லி, வீக்கெண்டு அம்மா வீட்டுக்கு வந்துடுவாளோ...! என்று சொல்லிய நிலா, மற்றவர்களுடன் சேர்ந்து சிரிக்க...

    போதும் நிலா... என்ன... இன்னைக்கு என்னை ஓட்டுவது என்று முடிவாகிடுச்சா…? இப்போ என்ன..., எனக்கு கல்யாணம் ஆனா, என்ன பண்ணுவேன்னு தெரியணும், அவ்வளவுதானே... சிம்பிள் பொறந்தவீடு புகுந்த வீடு ரெண்டுத்தையும் வீக்கெண்டுல ஒண்ணு சேர்த்துடுவேன்... பிரிச்சுப் பார்த்தா தானே பிரச்னை... எனக்கு என் குடும்பம் தான் முக்கியம் போதுமா...

    ஆமாண்டி... கட்டிக்கப் போறவன் அனாதையாக இருந்தா, இன்னும் வசதியா இருக்கும்... அப்படித்தானே ஷைலு என்று பேச்சில் நக்கலையும், பார்வையில் கோபத்தையும் அள்ளி வீசினாள் மினி.

    அது மற்றவளை கோபம் கொள்ள வைக்க, நாற்காலியை பின்னுக்கு தள்ளிவிட்டு எழுந்த ஷைலு... ஆமா அப்படித்தான்... அதுக்கு என்னங்குறே…? அப்படியே இருந்தாலும், அதுல உனக்கு என்னடி பிரச்சனை... வரவர நீ உன் லிமிட்டை தாண்டுற, நல்லா இல்ல மினி என்று கோபத்தை உள்ளடக்கிய குரலில் சொன்னவள், அவ்விடத்தை விட்டு விலக...

    ஏய் ஷைலு... நில்லுடி... ப்ளீஸ்... என்று கூப்பிட்டப்படி, அவளை பின் தொடர்ந்து போனாள் சஞ்சனா.

    அங்கு நடப்பதைக் கண்டு ஒரு நொடி திகைத்து போனான் ப்ரிதீவ்... அவள் பெயர் ஷைலுவா... ஐயோ...!! அவள் முகம் பார்க்கவில்லையே என்று பதறியது அவன் மனம்…!

    மினி, என்னடி இப்படி பண்ணிட்டே... நம்ப செட்ல நீயும் ஷைலுவும் தான் க்ளோஸ்... ஆனா இப்போல்லாம் உங்களுக்குள்ள தான் அடிக்கடி சண்டை வருது... என்று சோகமாக புலம்பியவாறே பில்லுக்கு உரிய பணத்தை நிலா வைக்க... இருவரும் எழுந்தனர்.

    விடுடி... அவளை ரெண்டு நிமிஷத்தில் சமாதானம் செய்துடுவேன்... என்றப்படி விலகியவர்களையே பார்த்தபடி அமர்ந்து இருந்தான்... ‘மனமோ, அந்த முகம் தெரியாதவளுக்காக தவித்தது. பாவம் அவள் மனம் நோகும்படி பேசி விட்டாளே என்று யோசித்தவனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது...!

    அந்த அவள், அவன் மேஜையை நோக்கி வந்துக்கொண்டு இருந்தாள்... அவன் கண்களுக்கு அவள் முகம் பிரகாசமாகவும், மற்ற இடங்கள் ஒளி மங்கியும் தெரிந்தது... சிறு புன்னகையுடன் வந்தவளின் முகம், அவன் மனதில் ஆழமாக பதிந்தது... அவள் அமர்ந்து இருந்த நாற்காலியின் பின்புறம் மாட்டி இருந்த பையை எடுக்கவும்...அவள் பின்னே வந்த மினி...

    இதை சொன்னா உனக்கு கோபம் தான் வருது. எல்லாத்திலேயும் அவசரம்... கொஞ்சம் கூட பொறுமை இல்லை... உனக்கெல்லாம் பட்டா தான் புத்தி வரும்… வா எடுத்துக்கிட்டியா... கடைக்கு வேற போகணும்... என்று பேசிக்கொண்டே வெளியேறியவர்களின் குரல் தேய... அவன் மனமோ ஷைலுவின் முகத்தை ஓவியமாய் மனதில் தீட்டிக் கொண்டது…!

    அதற்கு பின் அவர்களை தொடர்ச்சியாக கவனித்ததில்... அவன் அவர்களை பற்றி அறிந்துக் கொண்டது... அவர்கள் நால்வரும் பக்கத்தில் இருக்கும் உமன்ஸ் காலேஜில்... M.sc ஹோம் சைன்ஸ் ஃபைனல் இயர் ஸ்டூடன்ஸ்... வாரத்தில் ஒரு நாள், ஒவ்வொரு வெள்ளியும் ஒருவரின் ட்ரீட் என்று நால்வரும் இங்கே வருவது வழக்கம், என்பது வரை அறிந்தவன்... ஒவ்வொரு வெள்ளியும் அவளுக்காக காத்திருந்து, அவளைப் பார்த்தான்.

    பார்க்கப் பார்க்க ஷைலுவின் மென்மையான குணம், அமைதி , குடும்பம் என்ற அமைப்பின் மீது அவளுக்கு இருந்த பற்று, தன் குடும்பத்தின் மீது அவளுக்கு இருந்த பாசம்... திருமணம் ஆனாலும் எல்லோரையும் ஒன்று சேர்த்து பார்க்க நினைக்கும் மனசு… எல்லாம் சேர்ந்து அவளை, அவன் கண்ணுக்கு பேரழகியாகக் காண்பித்தது... தோழிகளுடன் பாராட்டும் நட்பு... அதிராமல் பேசும் பேச்சு என மொத்தமாக அவளை பிடித்தது… அவளை விட அவள் மனசு அவனுக்கு அழகாக தெரிந்தது...

    பலவிதத்திலும் நிறை குறைகளை யோசித்து இவளை மணந்தால் வீட்டில் அமைதி நிலைக்கும்... தன் தாயின் ஆசைக்கு ஏற்றப் பெண் என்று தோன்ற… மேலும் அவளைப் பற்றி விவரங்கள் சேகரித்தவன், அதன் பின் தன் அம்மாவிடம் சொல்ல... அன்றே அவர்கள் ஷைலுவின் அப்பா கோபிகிருஷ்ணனை அவர் அலுவலகத்தில் சந்தித்தனர்.

    இவன் மனதில் ‘அவர்களை விட நாம் பலமடங்கு வசதி, மறுப்பு சொல்ல என்ன இருக்கு’ என்றே நினைத்தான்... ஆனால் அவரோ, தன் பெண்ணிடம் கேட்பதாகவும், அவளுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே இது நடக்கும், இல்லையென்றால் இல்லை... தன் மகள் வாழ்க்கையை அவள் விருப்பம் போல அமைத்து கொடுப்பது தான் தன் கடமை, என்றும் சொல்லி விட்டார்… அவரின் இந்தக் குணம் ப்ரிதீவை மேலும் ஈர்த்தது…!

    ஷைலு சம்மதம் சொல்ல எடுத்துக் கொண்ட ஒரு வாரமும்... ப்ரிதீவ் தான் தவித்துப் போனான். அவள் மேல் காதல் என்று எல்லாம் உணரவில்லை... குடும்பப் பற்று உள்ளவள், தனக்கு மனைவியாக வந்தால் நல்லது என்ற எண்ணம்... அவன் மனதில் இருந்த அத்தனை எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்பவளாக இருந்தாள்...

    அவள் சம்மதம் சொல்லி... நிச்சயமும் நடந்தது முதல், அவள் மேல் ஒருவித உரிமை உணர்வு... பாசம் அலை அலையாக கிளம்பி அவனை ஆட்டுவித்தது... அவளுக்காக காத்திருக்க கூட இயலாமல் அவனை தவிக்க வைத்தது... கடிகார முட்கள் தான் சதி செய்கிறதோ என்று அதை சோதித்துப் பார்த்தான்...

    ***

    கடை இருக்கும் தெருவின் முன்பே வண்டியை நிறுத்திய மினி, கடைசியாக ஒரு முறை பேசிப் பார்த்து விடுவோம் என்ற பாவனையில் ஷைலு..., சொன்னா கேளு, வேண்டாம்... திரும்பி போய்டலாம். நீ ஏதோ தப்பா முடிவெடுத்து செய்யுற மாதிரி இருக்கு. உன்னோட தப்புக்கு, நானும் உடந்தையா இருக்கிறேனோன்னு உறுத்தலா இருக்கு... நீ ஜனாவை கல்யாணம் செஞ்சுக்கோ, ஆனா நாளைக்கே வேண்டாம். கொஞ்சம் பொறுமையா யோசிச்சு... என்று பேசி முடிப்பதற்குள்...

    நிறுத்துறியா... கூட வரியான்னு தான் கேட்டேன்..., குழப்ப வரியான்னு கேட்கலை... வண்டியை உள்ளே விடுறியா, இல்லே நான் இறங்கிப் போகவா என்று கறார் குரலில் சொன்னவளை, விழியிடுங்கப் பார்த்தவள்...

    உன்னையெல்லாம் திருத்த முடியாது... என்றப்படி ப்ரிதீவின் கஃபே வாசலை நெருங்கினார்கள் யாமினியும், ஷைலுவும்... முகம் முழுக்க புன்னகையுடன் நின்றவனைக் கண்டதும், யாமினியின் உள்ளம் பதறியது... ‘கடவுளே..., நல்லா, ஐயங்கார் பேக்கரி பன்னு மாதிரி இருக்கானே... சேதி தெரிஞ்சா காத்து போன பலூனா சுருங்கிடுவானே’ என்று நினைத்தப்படி, அவன் அருகில் வண்டியை நிறுத்தினாள் யாமினி.

    தூரத்திலேயே ஷைலுவின் வண்டியை கண்டவன் முகம் மலர... அதை யாமினி ஓட்டி வருவதைக் கண்டதும் முகம் சுருங்கியது. ‘சே இவளுக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லை... ஏன் தான் எங்க போனாலும் இந்த பீரோவை உருட்டிட்டு போறாளோ...’ என்று நினைத்தப்படி, வேண்டா வெறுப்பாக ஒரு புன்னகையை சிந்த...

    அவன் முகப்பாவனைகளை உற்றுக் கவனித்தப்படி வந்த யாமினி, கடுப்பின் உச்சிக்கே போனாள்... ‘அடிங் கொய்யாலே... தௌசன்ட் வாட்ஸ் பல்பு மாதிரி இருந்த முகம், என்னைப் பார்த்ததும் ஃப்யூஸ் போன பல்பு மாதிரி இருண்டு போகுது... இதுக்கு போய் பாவம் பார்த்தேனே…! டேய் பன்னு, இத்தோட சிரிப்பை மறந்துடுடா ராசா...’ என்று எண்ணியப்படி, அவளும் ஒரு சிரிப்பை உதிர்க்க, அவளைக் கண்டு கொள்ளாமல் அவன் பார்வை ஷைலுவை தழுவியது.

    முகம் மலர… ஒரு லட்சம் நல்வரவு தேவியர்களே…! என்று ஆங்கில பாணியில் குனிந்து நிமிர்ந்து சொன்னவனின் பார்வை, ஷைலுவின் முகத்தில் படிய... ஒரு நொடி திகைத்தவன்...

    வாங்க உள்ளே போய் பேசலாம்... என்று சொல்லியப்படி, தன் அறைக்கு அழைத்து சென்று, அவர்களை உட்கார வைத்துவிட்டு... இண்டர்காமை எடுத்தவன்...

    ரெண்டு காப்பச்சினோ, ஒரு கோல்ட் காபி... ரெண்டு வெஜ் இல்ல ஒரு வெஜ் பஃப், ஒரு எக் பஃப்... உடனே என்னோட ரூமுக்கு அனுப்புங்க... என்றவன், தன் இருக்கையில் அமர...

    இந்தளவுக்கு அவன் தங்களை தெரிந்து வைத்து இருக்கிறானா...! என்று வியந்த யாமினி, வியப்பான பார்வையை வீச... ஷைலுவோ இல்ல... அதெல்லாம் வேண்டாம் சார்... நேரம் ஆகுது... பேசிட்டு, நாங்க கிளம்புறோம்... என தயங்கி தயங்கி சொன்னவளைப் பார்த்தவன்...

    கூட ஒரு அஞ்சு நிமிஷத்தில் என்ன ஆகிடும் என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவன் கேட்டது வந்து சேர... அவற்றை எடுத்துக்கொள்ள சொன்னவன்… ஜன்னல் வழியே நீண்ட தெருவில் பார்வையை அலைய விட்டவாறே காஃபியை குடிக்கத் தொடங்கினான்.

    முதலில் சிறிது தயங்கினாலும், பின் இருவரும் சாப்பிட... ஷைலுவோ எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்தப்படி, வெஜ் பஃப்சை எடுத்துக் கடித்தாள்... சாப்பிட ஆரம்பித்ததும் தான், முதல்நாள் இரவில் இருந்தே, காலியாக இருந்த வயிறு தன் இருப்பை உணர்த்த, மற்ற நினைவுகளை ஒதுக்கி விட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

    அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தது போல... அவர்கள் எதிரில் வந்து அமர்ந்து, டேபிள் வெயிட்டை உருட்டிய வாறே ஷைலுவை உற்றுப் பார்த்தபடி... வெல்... அவர் பேர் என்ன ஷைலஜா... என்றான் நிதானமாக...

    இப்படி ஒரு கேள்வியை எதிர்பாராதவள், பயம் தூக்கியடிக்க... உதடுகள் தந்தி அடிக்க ஆரம்பித்தது... அ...அ...அது...

    கூல் கூல் ஷைலஜா... காலையில நீங்க போன் பண்ணும்போதே, கொஞ்சம் ஒட்டாம பேசின மாதிரி இருந்தது... இப்போ அழுது வீங்கிய உங்க முகம், ‘சார்’ என்ற அழைப்பு... கூட்டிக் கழிச்சுப் பார்த்தேன்... நானும் எத்தனை கதை, சினிமா பார்த்திருப்பேன்... என்றவனின் உதடுகள், சிரிப்பை சிந்தினாலும், முகமோ வேதனையில், ‘அப்படித்தான் என்று சொல்லி விடாதே’ என்ற எதிர்பார்ப்பில் சுருங்கி கிடந்தது.

    நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் மீண்டும் தலை குனிய... அப்புறம் ஏன் ஷைலஜா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்க... உங்க அப்பா உங்க விருப்பத்துக்கு எதிரா நடக்கிறவர் இல்லையே... நீங்க செஞ்சது... இதில் நான்... கோபத்தை கட்டுப்படுத்துவது போல அமைதியாக இருந்தவன்... அந்த அமைதியே அவனை வெறுப்பேற்ற...

    ஷைலஜா... உங்க அவ... அவர்... ரொம்ப கெட்டவரா...

    திடுக்கிட்டு... இல்லை... இல்லை... அப்படியெல்லாம் இல்லை... ரொம்ப நல்லவர்... கண்ணோரம் கலங்கி, ஒரு சொட்டு நீர் நிலத்தில் விழ தயாராய் நிற்க...

    "இல்லே, யாரோட கட்டாயமும் இல்லாம, நம்ம கல்யாணத்துக்கு நீங்க சம்மதிச்சீங்க, ஆனா திடீர்ன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1