Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poo Pookkum Osai
Poo Pookkum Osai
Poo Pookkum Osai
Ebook146 pages1 hour

Poo Pookkum Osai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466268
Poo Pookkum Osai

Read more from Geetharani

Related to Poo Pookkum Osai

Related ebooks

Related categories

Reviews for Poo Pookkum Osai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poo Pookkum Osai - Geetharani

    14

    1

    குளு குளுவென்று சரீரம் தொட்டு மெல்ல நழுவிச் செல்லும் மலைகளின்ராணிக் காற்றும், சின்னச் சின்ன வெளிச்சப் பொட்டுகளாய் கண் தொலைவு மட்டும் மினுங்கும் மக்கள் வாசஸ்தலங்களின் இருப்பு அறிவிப்பும், இரவின் ஆளுமையினை அழகோவியமாய் திரும்பின பக்கமெல்லாம் இயற்கையின் பொலிவும் காணக்காண மிக அற்புதமாயிருந்தது

    எத்தனை நேரம்தான் சுற்றுப்புறச் சூழலையும், அவ்வப்போது சாலையில் விரையும் வாகனங்களையும், மனிதத் தலைகளையும் பார்ப்பது...? ஏன் வரவில்லை இந்த சிவா...?

    வருவதாகத்தானே சொன்னான்...? அவன் வருவான் என்று எதிர்நோக்கி வீட்டின் அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி கொடைக்கானலில் ரூம் புக் செய்து இரண்டு நாள் முழுசாய் நாற்பத்தெட்டு மணி நேரங்களாயிற்று. இன்னும் வரவில்லை... வரவே மாட்டானா...? அவனை நம்பி தான் வந்தது முட்டாள் தனமா...? எதற்கு இந்த அலைமோதல், உள்ளக் குமைச்சல்...? அவன் மீது வைத்த கண்மண் தெரியாத நேசத்தினால் தானா...?

    மலர்... உனக்கு போன் கால்... ரிஷப்ஷனிஸ்ட் இண்டர்காம்ல சொன்னார். மாடியேறி வந்தது மூச்சிறைக்குது... புவனி ஸ்வெட்டரை நன்றாக இழுத்துவிட்டவாறு வந்து நின்றாள்.

    ஒருவேளை சிவாவாக இருக்குமோ...? இருக்காதே... என் கையில் தான் செல்போனிருக்கிறதே... ஒருவேளை டவர் கிடைக்காததினால் காட்டேஜின் தொலைபேசியில் அழைத்திருக்கிறானோ...?

    அடுக்கடுக்காய் சிந்தனைகள் கேள்விகள் தொடர படிச்சுழலில் இறங்கி வரவேற்புக் கூடம் தொட்டாள்.

    மேடம்... இன்னும் ஒரு ரெண்டு நிமிசத்துல கூப்பிடறதாச் சொல்லி லைன் இப்போத்தான் டிஸ்கனெக்ட் ஆனது...!

    ஹோ... ஐ ஸீ. ம்... போன்ல பேசினவங்க பேர் எதும் சொன்னாங்களா...?

    ஸாரி... மேம். எதும் கேட்கலை நான்...

    ஓ.கே... என்றவளாய் மலர்விழி வரவேற்புக் கூடத்தின் குஷன் இருக்கையில் அமர்ந்தாள். பஞ்சுப் பொதிகளாலான அந்த மென்மையான குஷன் இருக்கை ஒரு மலர்ப்பந்தை சுமக்கிறதில் பெருமிதம் கொண்டிருந்தது.

    நீலநிற டிஸ்டம்பர் பூச்சுடன் மிளிரும் சுவற்றின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக ‘ரூசோ’வின் ரோஜா மங்கை ஓவியம் உலகப் பிரசித்திப் பெற்ற படைப்பின் பிரதி கண்ணைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது ஜாஜ்வல்யமான சர மின்விளக்கொளியில்.

    தொலைபேசி அழைப்பொலி கொடுத்த அடுத்த நொடியே மலரின் கவனம் சரட்டென்று திசைமாறிற்று. எழுந்து விரைந்தாள்.

    மே... ம்... இட்ஸ் ஃபார் யூ... வரவேற்பாளினி இள ரோஜா சிவப்புச் சாய உதடுகள் மலர ரிசீவரை மலர்விழியிடம் நீட்டினாள்.

    ஹ... லோ... மலர்விழி லேசாய் மூச்சு வாங்கினாள்.

    ஸாரி... டார்லிங் மூட் அவுட் பண்ணிட்டேனா...? ரியலி ஐ எக்ஸ்ட்ரீம்லி ஸாரி. வரணும்ன்னு தான் நான் ட்ரை பண்ணினேன். முடியலைடா டார்லிங்...!

    யூ... ஷிட்... எனக்கு வர்ற கோபத்துக்கு என்ன பண்ணுவேன்னே தெரியாது. விளையாடறியா சிவா. முழுசா ரெண்டு நாள் என்னை சித்ரவதைப் பண்ணிட்டே. ஏன்... ஒரு போன் கூட பண்ண முடியலையா...? எவ்வளவு ரிஸ்க் எடுத்து வந்திருக்கேன் நான்...!

    ஐ... நோ... ஐ... நோ... என்னோட நிலையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ ப்ளீஸ். திடீர்ன்னு ஊர்லயிருந்து அப்பா வந்துட்டார். ‘ஹாண்ட் அரெஸ்ட்’ மாதிரி ஆயிட்டது. அதான்...

    என்ன பொல்லாத பொடலங்கா நிலைமை. அதானே... நொதானேன்னுட்டு. ச்சே... நான் பேக் அப் பண்ணிட்டுக் கிளம்பறேன். இனி... உங்களோட பேசினா ஏன்னு கேளுங்க...!

    கொடைக்கானல் சிகரம் எங்கேயும் இடம் பெயர்ந்து விடாது என் காதல் கண்மணியே... அது போல என் இதயச் சிகரத்தின் இடம் பெயரயியலா இனிய சுகந்தம் நீதான்...!

    வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்க சிவா. நான் போனை வெச்சுடறேன்...! சொன்னவள் பட்டென்று ரிசீவரை வைத்தவள், நாலெட்டு விடு விடென்று நடந்தாள். பின், என்ன நினைத்தாளோ திரும்பி வந்து வரவேற்பாளப் பெண்மணியிடம் நின்று பேசினாள்.

    எக்ஸ்க்யூஸ்மி... மறுபடியும் இந்த லைன் வந்தா எனக்கு கனெக்ட் பண்ண வேண்டாம். நான் நாளைக்கு யேர்லி மார்னிங் ரூம் வெகேட் பண்றேன். பில் செட்டில்மெண்ட் டீட்டெய்ல்ஸ் அனுப்பிடுங்க...

    ஓ.கே. மே... ம் வித் ப்ளஸர்...!

    தேங்க்யூ வெரி மச் ஃபார் யுவர் கைண்ட் கோஆபரேசன்... பை... என்று செயற்கையாய்ப் புன்னகைத்து சுழல் படிகளில் ஏறி அறை எண் இருநூற்றுப் பதினொன்றை அடைந்தாள்.

    போன்ல யாரு மலர்... சிவாவா...? ஆர்வமாய் எதிர் கொண்டாள் புவனி.

    ம்... சிவா தான்...!

    சிவாவோட பேசின மாதிரி தெரியலையே முகம். பவர் கட்டான ஏரியா மாதிரி இருக்கு. வாட் ஹாப்பண்ட்...? தாடையைப் பற்றி நிமிர்த்தினாள் புவனி.

    ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கலை. ரொம்ப ரொம்ப கூலா கவிதை வாசிக்கிறான் போன்ல. அவங்க அப்பா வந்துட்டாராம் வர முடியலையாம். கொடைக்கானல் இடம் பெயர்ந்து எங்கேயும் ஓடிடாதாம். ஜஸ்ட் ஒரு போன் கால்... ஒரேயொரு போன் கால் கூட பண்ண முடியலை. இவனை... இவனை நம்பி நான் ரிஸ்க் எடுத்து வந்தேன் பாரு எம்புத்தியை எதால அடிச்சாலும் தகும்... பேச்சுவாக்கில் சூட்கேஸினைத் திறந்து உடமைகளைச் சீராய் அடுக்குவதில் ஆழ்ந்தாள்.

    மலர்... கோபத்திலே கூட நீ ஒழுங்கா வேலை செய்யறே...

    ம்... உன்னை வரவேற்புப் பத்திரம் வாசிக்கச் சொன்னேன் பாரு. பெரிசா பேச வந்துட்டா... வயிறெரியுது...?

    ம்... பின்னே காதல்ன்னா சும்மாவா...? புவனி கிண்டலடித்தாள்.

    நக்கலு... எனக்கு வேணும்டி. என்னோட திஸீஸ் கமிஷனையும் விட்டுட்டு விழுந்தடிச்சுட்டு பெரிசா பிளான் பண்ணி வீட்ல அம்மா, அப்பாவை ஏமாத்திட்டு வந்ததுக்கு எனக்கு வேணும்...!

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்றது இதைத்தானோ... டி இவளே... புவனி சொல்லி முடிக்கும் முன்னே மலர் பாய்ந்து வந்து வலதுபுறக் கன்னக்கதுப்பைக் கடித்து விட்டாள்.

    ஐயோ... டி பிசாசே வலி உயிர் போறது. திடீர்ன்னு இப்படியா கடிச்சுத் தொலைப்பே...? வலித்த கன்னத்தைப் பற்றிக் கொண்டு முறைத்தாள் புவனி.

    மேலே பேசினே... வலிக்கிறதுன்னு கத்த வாயிருக்காது ஆமா...

    சிவா மேலே இருக்கிற கோபத்தைக் காட்ட நான்தான் கிடைச்சேனா... சேர்த்து வெச்சு மொத்தமா வாங்குடி. அதை விட்டுட்டு என்னைப் போயி கடிச்சு வெச்சு. ச்சீ... சனியனே சதை கன்னிப் போச்சு பாருடி முண்டம்...!

    ம்... பேசினது போதும். உன் துணிமணிகளை எல்லாம் மடிச்சு வைக்கப் பாரு. காலையிலெ கிளம்பறோம்...!

    ஏய்... லேக் போட்டிங் போகணும்ன்னே...? என்றவளைச் சுட்டு விடுவது போல முறைத்தாள்.

    ம்... வம்பை விலை கொடுத்து வாங்க நானென்ன முட்டாளா...?

    புவனி... நைட் டிஃபன் அயிட்டம் எதாவது ஆர்டர் பண்ணு ஆஸ் யுவர் சாய்ஸ்...! என்றவள் பர்ஸைத் திறந்து பணத்தைச் சரி பார்ப்பதில் ஆழ்ந்தாள்.

    புவனி மேற்கொண்டு எதுவும் பேசாதவளாய் இண்டர்காமில் டிஃபன் அயிட்டத்தைச் சொல்லி விட்டு, அறையிலிருந்த டி.வி.யை ஆன் செய்து வால்யூம் குறைத்து வைத்து படம் பார்ப்பதில் ஆழ்ந்து போனாள்.

    டிஃபன் வந்ததும் சாப்பிடு. நான் லான்லெ வாக் பண்ணிட்டிருக்கேன். என்றவளாய் மலர்விழி வலது பக்கவாட்டிலிருந்த லானில் வந்து நின்றாள்.

    மனசு ஆறவில்லை. சிவாவையே சுற்றிச் சுற்றி வந்தது. ‘சிவா... நல்லவனா, கெட்டவனா ஏமாற்றுப் பேர்வழியா இல்லை விளையாட்டுத் தனமாக செய்கிறானா... ஒன்றும் புரியவில்லை. இருபத்து நான்கு வயது வரை வளர்த்து ஆளாக்கின பெற்றோர்களின் கண்ணில் மண்ணைத் தூவ வைத்து ‘காதல்’ இத்தனை தூரம் இழுத்து வந்து நிறுத்தியிருக்கிறதா...? இதன் பெயர் தான் காதலா...? வருவான் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறிப்போன இந்த நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கே இத்தனைத் துடிப்பு இருக்குமென்றால், இருபத்தி நான்கு வயது வரை வளர்த்த பெற்ற நெஞ்சங்களுக்கு எத்தனை எதிர்பார்ப்புகள் இருக்கும். அவர்களை இந்தக் ‘காதல்’ என்ற கண்ணாமூச்சி விளையாட்டில் ஏமாற்றினால் எத்தனை துடி துடிக்கும்...? இது தேவையா உனக்கு...? யோசிப்பதற்குக் கூட பகுத்தறிவைப் பயன்படுத்தத் தெரியாமல், விழித்து நிற்கும் நிலைக்கா நீ முனைவர் பட்டம் பெற முயன்று கொண்டிருக்கிறாய்...?

    இதே சிவா தைர்யமாய் வீட்டுப் படியேறி வரட்டும். உங்கள் பெண்ணைக் கொடுங்கள் என்று கேட்கட்டும். அதுதான் உண்மையான காதல். மற்றதெல்லாம் வெறும் கண்ணா மூச்சியாட்டம். இந்த கண்திறந்த மாயக் கண்ணா மூச்சியாட்டத்தில் முழுசாய் நீ தொலைந்து விடாதே. பொறு... பொறு...’

    மனம் கேள்வியையும், பதிலையும் முன் வைத்து சமனப்பட்டது.

    மலர்... சாப்பிடலாம் வா... ஸ்... ஷீ... எலும்பைக் கிடுகிடுக்க வைக்கிறது குளிர். என்ன மனுஷியோ... எப்படிதான் நிற்கறியோ...? புவனி வந்து கைப்பற்றினாள்.

    "முதல்ல கொஞ்ச

    Enjoying the preview?
    Page 1 of 1