Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaalaattum Poongaattru Naanallavaa
Thaalaattum Poongaattru Naanallavaa
Thaalaattum Poongaattru Naanallavaa
Ebook123 pages58 minutes

Thaalaattum Poongaattru Naanallavaa

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466275
Thaalaattum Poongaattru Naanallavaa

Read more from Geetharani

Related to Thaalaattum Poongaattru Naanallavaa

Related ebooks

Related categories

Reviews for Thaalaattum Poongaattru Naanallavaa

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaalaattum Poongaattru Naanallavaa - Geetharani

    11

    1

    "மஹா ரூபிணி மங்களேஸ்வரி

    மஹா ஸ்மிருதி மங்கள தாரிணி

    மஹா மாயா சாமுண்டி ப்ரணவ..."

    விடிந்தும் விடியாததுமான இளங்காலைப் பொழுது, சில்லென்று மேனிதொட்டு உயிரின் நரம்பை ஊடுருவி சிலிர்க்க வைக்கும் நவம்பர் மாதத்து அடைமழையின் ஈரக்காற்று. நெடிதுயர்ந்து நின்ற அந்த பாண்டிய மன்னர் காலத்திய கோபுரம் பழமையையும், அதன் கம்பீரமான தோற்றத்தையும், கலா ரசனை மிகுந்த சிற்ப வடிவமைப்பையும் பறைசாற்றிக் கொண்டிருந்தது. கோபுரத்தின் கலசங்களும், சுவர்களின் பகுதிகளும் நேற்று இரவு பெய்திருந்த மழையின் ஈரப்பதத்தை பறைசாற்றியது. சூரியக் கிரணங்களின் ஒளி தரிசித்து ஈர இறகுகளை உலர்த்த ‘கக்... கக்... கக்...’ என்று தவ்வலுடன் மாடப் புறாக்கள் கோவிலின் கோபுர மாடத்தில் மெல்ல எட்டி விடியல் தரிசித்து உலவின...

    ஸ்ரீ... வத்ஸா... நாழியாகறது... பாருப்பா... கோமதி குரல் கொடுத்தாள்.

    நந்தினி கோவிலின் பிரகார முன்வாயிலினை பெருக்கி நீர்த்தெளித்து மாக்கோலமிட்டு நிமிர்ந்தாள்.

    ஸ்ரீ வத்ஸன் குளித்து முடித்த ஈர வேஷ்டியுடன் நீர் சொட்ட சொட்ட அம்பாளுக்கு என்று பித்தளை தவலையில் தண்ணீர் சுமந்து குளக்கரை படியேறினான்.

    அவசர அவசரமாக இளம்பெண் ஒருத்தி படித்துறையில் இறங்குவதைக் கண்ணுற்றாலும், அதிகாலைப் பொழுதின் பூஜா காரியங்களை கவனிக்கும் சிரத்தையில் விர்ரென்று பிரகாரத்தினுள் நுழைந்து மூல விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்தை நோக்கி விரைந்தான்.

    குடத்தை திட்டில் வைத்து விட்டு அம்பாளுக்கு நேற்று சாற்றப்பட்ட சற்றே வாடிக் கிடந்த மலர்களை அப்புறப்படுத்தி நீராட்டினான்.

    அண்ணா... ஜலம் போறுமா...? நந்தினி குரல் கொடுத்தாள்.

    நந்தினி... செப்புத்தவலையில் இன்னும் ரெண்டு குடம் ஜலம் வேணும். இன்னைக்கு நிறைஞ்ச அமாவாசை வெள்ளி. அம்பாளுக்கு நல்லெண்ணெய் காப்பு குளிர சாத்தி நீராட்டணும்... ஸ்ரீ வத்ஸன் சொல்லிக் கொண்டே அம்பாளின் கற்சிலை விக்ரகத்திற்கு நல்லெண்ணெய் காப்பு சாற்றுவதில் முனைந்து போனான்.

    நந்தினி அண்ணன் சொன்னாற் போல் செப்புத் தவலையை எடுத்துக் கொண்டு குளத்துறை நோக்கி நடந்தாள்.

    படித்திட்டில் கறுப்பு நிற லெதர் பேக் ஒன்று இருந்தது. கண்ணுற்று... இத்தனை அதிகாலையில் யார் இங்கே வந்திபார்கள் என்று சிந்தை மேலிட்டாலும், குடத்துடன் அமைதியாய்ப் படியிறங்கி நீர் எடுத்துக் கொண்டு மேலேறினாள்.

    கோவில் வெளி வாசலில் டீக்கடை ஸ்பீக்கர்கள் மெல்லிய ஸ்தாயியில் பிரதான சமீப பாடல் ஒன்றை ஒலிபரப்பி தன் விழிப்பை வரவேற்புடன் தெரிவித்துக் கொண்டிருந்தது. பூக்கடை செல்லாயி தான் காலையில் குளித்து முடித்த சேதி தெரிவிக்க ஈரம் சொட்டின தலையுடன் நெற்றியிலிடப்பட்ட பெரிய சைஸ் குங்குமத் தீற்றல் பொட்டும், மஞ்சள் கிழங்கு அரைத்து பூசப்பட்டதை பகிரங்கமாக தெரிவிக்கும் கன்னக் கதுப்புகளுடன் கடை விரிப்பதற்கான முஸ்தீபில் ஈடுபட்டிருந்தாள். முல்லையும், ஜாதிச்சர மல்லிகையும் பூத்து விட்டிருந்த சேதியை காற்று சுமந்து திரிந்தது நாலாதிக்கும்.

    நந்தினி ‘கும்ம்...’மென்று மணக்கும், பூ மணத்தையும், அதிகாலைப் பொழுதின் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாதவொரு சுகந்தத்தையும், கோவில் பிரகாரத்திற்கென்றே உரித்தான தனித்த தெய்வீக நறுமணத்தையும் புத்துணர்வுடன் நுகர்ந்தவளாய் தண்ணீர் குடத்துடன் படியேறினாள்.

    என்ன... நந்தினி... நாழியாகலை... சீக்கிரமா வர்றது தானே...?

    மணி... ஆறு கூட ஆகலை. அதுக்குள்ளே ஏண்ணா அவசரப்படறே...? என்றவாறே இடுப்பிலிருந்த நீர்த் தவலையை இறக்கி வைத்துவிட்டு, வேறு ஒரு செப்புத் தவலையை சுமந்து குளத்துறையை நோக்கி நடந்தாள்.

    ஸ்ரீ...! அம்பாளுக்கு இன்னைக்கு சந்தனக்காப்பு அபிஷேகம் இருக்கு. அம்பலக்காரர் ஐயா வீடு நடத்தறதா இருக்கு. ஞாபகம் இருக்கோன்னோ...? கோமதி அம்பாளுக்கு சாற்றப்பட வேண்டிய பட்டும், வஸ்த்திரமும், மூங்கில் குடலை நிறைய கதம்ப பூச்சரங்களும் எடுத்து வந்து நின்றாள்.

    இருக்கும்மா...! சீக்கிரம் பிரசாதத்துக்கு தயார் பண்ணுங்கோ. நேரம் போறதே தெரியாது...

    சரி... சரி... நான் மடப்பள்ளியறை சீர் பண்ணி வேலையை ஆரம்பிக்கிறேன். கோனார் வந்தா பால் தூக்கை வாங்கி உள்ளறையில ஞாபகமா வெச்சிடு ஸ்ரீ...! இந்த நந்தினிக்கு ஒரு நேரம் போல இல்லை மனசும், நினைப்பும். அப்புறமா அவளைக் குறைப்பட்டுக்கிறதுக்கு முதல்லயே சமர்த்தா இருந்துக்கணும்... கோமதி பேசிக் கொண்டே மடப்பள்ளியறைக்குள் சென்று விட்டாள்.

    நந்தினி அடுத்த குடத்தில் நீர் முகர்க்கும் போது மனதிற்குள் ஒரு சின்ன சலனம்! படித்துறையில் இறங்கி வந்து குளத்தில் யாரோ நீராடியிருக்கிறார்கள்... ஆம்! சந்தேகமேயில்லை. நிச்சயம் குளத்தின் மையப் பகுதி வரை நீரின் அலையோட்டம் சுழல் சுழலாய் விரவிக்கிடக்கிறதே. ஒரு குடம் நீர் முகர்ந்தாலா அலையோட்டத்தின் சுழற்சி குளத்தின் மையப் பகுதி வரை விரவும்...? இருக்காதே... எண்ணங்கள் சுழல மறுபடியும் குளத்தின் மையப்பகுதியை பார்த்தவள் கறுப்பு நிறத்தில் ஒரு உருவம் உள்ளே அமுங்கி மீள்வதும் நீரினுள் அமிழ்ந்து உள்ளேயே நீச்சலிட்டு உள்நோக்கி விரைவதுமாய் தெரிந்தது. திகிலில் ஒருகணம் நெஞ்சம் உறைந்து போனது.

    கோவிலுக்கு என்றே உரிய குளம். யாரும் விபரம் அறிந்தவர்கள் அந்தக் குளத்தில் நீந்த வரமாட்டார்கள். தப்பி நீந்தினாலும் அடுத்து என்னாகுமோ... அது அங்கே குடி கொண்டிருக்கும் அம்பாளுக்கே வெளிச்சம். நந்தினிக்கு விபரம் தெரிந்த வரையில் யாரும் அதில் குளித்ததில்லை. குடிக்க நீர் எடுக்கவே ஒரு சிலர் அச்சப்பட்டுக் கொண்டு செல்வார்கள். அப்படியிருக்கையில் தைர்யமாக குளத்தின் மையப்பகுதியில் சென்று நீந்திக் குளிப்பது யாராகயிருக்கும்...?

    ‘அம்மா... காளிகாம்பா...’ - நந்தினிக்கு அந்த அதிகாலைப் பொழுதிலும் லேசாய் வியர்த்து விட்டிருந்தது.

    அண்ணா...! அ...ண்...ணா...! அழைத்தவாறே குடத்தை இறக்கி வைத்துவிட்டு பரபரப்பாய் ஸ்ரீ வத்ஸனை நெருங்கினாள்.

    என்ன... நந்தினி... ஏன் முகம் எல்லாம் என்னவோ மாதிரி இருக்கு...?

    "வந்து... நம்ம கோவில் குளத்துல யாரோ முங்கி முங்கி மைய்யத்துல நீச்சலடிச்சு போனாங்க... எனக்கு ஒரு கணம் ஆடிப் போய்ட்டதுண்ணா...!

    அப்படியா... நந்தினி... நிஜமாவா சொல்றே...? ஸ்ரீ வத்ஸனுக்கும் ஒரு கணம் ஆடிப்போய் தூக்கி வாரிப் போட்டது.

    அம்பாளுக்கு அபிஷேகத்தை பாதியிலேயே விட்டுப் போனால் ஏதாவது குறை நிகழுமோ என்ற எண்ணம் ஓட அவசர அவசரமாய் அபிஷேக, ஆராதனை வேலைகளைத் தொடர்ந்தான்.

    என்னண்ணா... நான் பாட்டுக்கு சொல்லிண்டிருக்கேன்...

    ஸ்சூ... ஆராதனை பண்றப்போ பாதியில விட்டுப் போனா தெய்வக்குத்தம்ன்னுவா... பேசாமலிரு நந்தினி... என்று ஸ்ரீவத்ஸன் விக்கிரகத்திற்கு நீல நிற பட்டாடை சாற்றி பொட்டு வைத்து பூச்சரங்கள் அணிவித்து தூபாராதனை காண்பித்தான்.

    நந்தினி சம்பிரமாய் நின்றிருந்தாலும் பார்வை அபிஷேக ஆராதனைகளில் குடிகொள்ளாது குளத்தை நோக்கி நோக்கி மீண்டு திரும்பிக் கொண்டிருந்தது.

    ‘யதி...பூர்ணா... தேவஸாம்ருதம்...ஜய பர்வதே...துர்கா... ஸ்ரீ... ஸம்ருத நவாப்யாஸசம் சமர்ப்பயாமே... ததி...’

    ஸ்ரீவத்ஸன் சமஸ்கிருத சுலோகங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

    தூபாராதனை மூல விக்ரகத்திற்கு அனுஷ்டிக்கப்பட்ட பின்னர் வெளி சுற்றுப் பிரகாரங்களில் அனுஷ்டிக்க வேண்டி மந்திர உச்சாடனங்களுடனும், ஒருமுகப்பட்ட பிரார்த்தனையுமாக வலம் வந்து கொண்டிருந்த பொழுது தான் -

    ‘திடும் திடும் திடும்...’ என்ற பாதக் கொலுசுகளின் சப்தங்களை மீறி

    Enjoying the preview?
    Page 1 of 1