Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannaadi Thirai
Kannaadi Thirai
Kannaadi Thirai
Ebook62 pages30 minutes

Kannaadi Thirai

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

R.Geetharani, an exceptional Tamil novelist, written over 150 novels, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… She has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateFeb 17, 2019
ISBN9781043466428
Kannaadi Thirai

Read more from Geetharani

Related to Kannaadi Thirai

Related ebooks

Reviews for Kannaadi Thirai

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannaadi Thirai - Geetharani

    12

    1

    பெருமாள்சாமி ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர்.

    எட்டு மாதங்களுக்கு முன்னால் ரிலீஸான ஒரு படத்தில், ஒரே ஒரு காட்சியில் தோன்றிய பெருமாள்சாமி சொன்ன ஒரு வார்த்தை தமிழகம் முழுக்கப் பிரபலம்.

    ஹீரோ மேல் கோபமாயிருக்கும் ஹீரோயின், ஹோட்டல் ஒன்றின் வெய்ட்டரிடம் அந்தக் கோபத்தைக் காட்டுவதாக ஸீன்.

    வெய்ட்டராக நடிக்க இருந்த துணை நடிகன், முதல் நாளிரவு ஓசி கல்யாண விருந்துக்குப் போய் வந்திருப்பான் போல. வெய்ட்டர் உடுப்போடு அடிக்கடி பாத்ரூம் போய் மிகவும் சோர்ந்துவிட்டான். மானிட்டர் பார்க்கும் நேரத்தில் கிட்டத்தட்ட பாதி மயங்கியிருந்த அவனை, டைரக்டர் ஓர் அறை கொடுத்து முழுதாய் மயங்க வைத்தார்.

    கழட்டுடா அந்தப் பன்னாடை டிரஸ்ஸை... - கத்திவிட்டு மாற்று ஆள் தேடிச் சுழன்ற அவரின் கண்களில் பெருமாள்சாமி பட்டு விட்டான்.

    டேய் இங்க... வா... எரியும் சிகரெட்டைத் துப்பாக்கி போல் நீட்டிக் கூப்பிட்டார். இந்த ஸீன் நீதான் பண்றே... மறுக்க வாய்ப்பே இல்லாத தொனி.

    போ... போய் சவரம் பண்ணிட்டு வா... சீக்கிரம். தனது தாடிப் பயிர் ஊடுருவிய கன்னத்தைத் தடவிப் பார்த்து நொடியில் வெளியே வந்தான். பெருமாள்சாமிக்கு வெய்ட்டர் உடை தரப்பட்டது.

    பெருமாள்சாமி அதை அணிந்துகொண்டு அவர் முன் வந்து நின்றான்.

    பரவாயில்லையே... வித்தியாசமா நடக்கறே... நீ... என்றவரின் கரங்களிலிருந்த சிகரெட் இப்போது பூங்கொத்து போலத் தெரிந்தது. ‘ஷாட்லே’யும் இதையே மெய்ன்டெய்ன் பண்ணு."

    ஹீரோயின் வந்தாள். நெஞ்சைத் தாலாட்டி உட்கார்ந்தாள். விசேஷ நடையுடன் வந்து நின்ற பெருமாளிடம் பீட்ஸாவும் கோக்கும் ஆர்டர் செய்தாள். க்ளிவெஜ் தெரியுமளவிற்குக் குனிந்து தலைமுடி ஒதுக்கிக் கொண்டாள். அதுவரை ஓ.கே. அடுத்து அவற்றைக் கொண்டு வரும் காட்சியில்தான் பெருமாள் சற்றே சொதப்பி விட்டான்.

    பீட்ஸா கொண்டு வரும்போது - லேசாய்த் தடுமாறி - ஹீரோயினின் க்ளிவெஜ் பள்ளத்தில் மிகச் சரியாய்த் தண்ணீர் க்ளாஸைக் கவிழ்க்க வேண்டும். பதற்றத்தில் பெருமாள்சாமி ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் கவிழ்த்து விட்டான்.

    ஹீரோயின் நிஜமாகவே கோபமாகி, தன்னைத் தொட்டுத் தரையைத் தொட்ட பிட்ஸாவைக் குனிந்து எடுத்து, பெருமாள் சாமியின் முகத்தில் ஒரு அப்பு அப்பினாள்.

    அந்தத் திடீர் தாக்குதலில் கண் முழியெல்லாம் பிதுங்கிப்போன பெருமாள் பீட்ஸா நிறைந்த வாயுடன் - கை கால்களைப் பறவை போலப் பரப்பி லுலுலுலேய்... என்றோர் ஓலம் எழுப்பினான்.

    யூனிட் மொத்தமும் சிரித்து விட்டது.

    படம் வெளிவந்தபோது மொத்த தமிழகமும் சிரித்தது. ‘லுலுலுலேய்’ என்கிற அந்த வார்த்தை கல்லூரி மாணவர்களின் கிண்டல் அகராதியில் உடனடியாய் இடம் பிடித்தது.

    துணிந்து முறைக்கும் பெண்களுக்கு லுலுலுலேய்... துணிக்குள் துடிக்கும் முயல்களுக்கு லுலுலுலேய்... என்று புதிய தலைமுறைக் கவிஞர் எழுதிய பாட்டு சூப்பர் ஹிட்டானது.

    சின்னப் பசங்களைக் கவரும் சாக்லேட் நிறுவனமொன்று, அந்தப் பெயரில் ஒரு சாக்லேட் வெளியிட்டது.

    ஒரு விளம்பரத்தில், பழசை மறக்காத தலை நரைத்த தாத்தா, தன் மனைவிக் கிழவியை ‘லுலுலுலேய்’ என்று கிண்டலடித்தார்.

    ஆனால், படம் முப்பதே நாட்களில் ஊற்றிக்கொண்டது.

    ஆமா, அது என்னய்யா லுலுலுலேய்...? ‘திரவ’ ஆட்சியிலிருந்த டைரக்டர், பெருமாளின் தொடை தட்டிக் கேட்டார்.

    பெருமாள் கூச்சமாகச் சிரித்தான். "சரியா சில்லி

    Enjoying the preview?
    Page 1 of 1