Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engal Thozhi Kamali
Engal Thozhi Kamali
Engal Thozhi Kamali
Ebook174 pages1 hour

Engal Thozhi Kamali

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டாலும் சரி, பூவுலகில் பெரியோர்களாலும் இஷ்ட மித்ர பந்துக்களால் தீர்மானிக்கப்பட்டாலும் சரி, அல்லது காதல் திருமணமாக கடிமணம் புரிந்தாலும் சரி, திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை என்பது எப்படி அமையும் என்பது தீர்மானிக்க முடியாமல் தான் இருக்கிறது.

பெண் என்பவள் நாற்றங்கால் போல என்கிறார்கள். ஓரிடத்தில் வளர்க்கப்பட்டு இன்னொரு இடத்தில் ஊன்றப்படும் உயிர் ஜீவன் அவள். பிறந்த வீடு, புகுந்த வீடு என்று இருவேறுபட்ட வாழ்க்கையையும்எதிர் கொண்டுதன் ஆற்றலால் ஒன்றாக்க முனையும் பிறவி அவள். ஒத்துப் போதல், விட்டுக் கொடுத்தல், அன்பு, அனுசரிப்பு என்று அடுக்கப்படும் உபதேசங்கள் அவளை நோக்கியே நீளும் மந்திர உச்சாடனங்கள். எது எப்படியிருப்பினும் திருமண பந்தத்தின் நோக்கம் இன்னொரு குடும்ப நீட்சிக்கான ஆயத்தமே என்று பார்க்கும் பொழுது அந்தக் குடும்பத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பெண்கள் கையில்தான் பத்திரமாக இந்த சமூக அமைப்பில் ஒப்படைக்கப் பட்டிருப்பது புரியும்.

இந்தக் கதையின் நாயகி கமலிக்கு ஏற்பட்ட திருமணத்திற்குப் பின்னான வாழ்க்கை அனுபவங்களோ வேறு மாதிரியானவை. அவள் அதை எப்படி எதிர்கொள்கிறாள், தன் ஆற்றலால் ஏற்படும் பிரச்னைகளுக்கு எப்படித் தீர்வு காண்கிறாள் என்பவை தான் இந்த நாவலாக ரூபம் கொண்டிருக்கிறது...

வித்தியாசமான இந்தப் புதினத்தைவாசித்துத் தான் பாருங்களேன்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580118702953
Engal Thozhi Kamali

Read more from Jeevee

Related to Engal Thozhi Kamali

Related ebooks

Reviews for Engal Thozhi Kamali

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engal Thozhi Kamali - Jeevee

    http://www.pustaka.co.in

    எங்கள் தோழி கமலி

    Engal Thozhi Kamali

    Author:

    ஜீவி

    Jeevee

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jeevee

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    ***

    1

    சாப்பாட்டு நேரம்.

    ஆபிஸே காலியாக வெறிச்சோடிக் கிடக்கிறது. டிபன் பாக்ஸில் கொண்டு வந்திருந்த சாப்பாட்டைக் கமலி சாப்பிட்டு விட்டாள். நேற்று கூட இந்த நேரத்தில் தான் கமலி ஆபிஸ் டெலிபோனில் சாரங்கனுடன் பேசினாள். போன ஞாயிறு வழக்கமாக அவள் பார்க்கும் அந்த ஆங்கில செய்தித் தாளில் தான் 'மணமகள் தேவை' தலைப்பில் அந்த விளம்பரத்தைப் பார்த்தாள். அந்த விளம்பரத்தோடு தன் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தான் சாரங்கன். முந்தாநாள், நேற்று என்று இரண்டு தடவைகள் அவனோடு பேசியாயிற்று. அவனது விளம்பர வாசகங்களும், தொலைபேசி உரையாடல் களில் அவன் தன்னைத் தனித்துக் காட்டிக் கொண்ட வித்தியாசமும் அவளை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இன்றைக்காவது நேரில் அவனைப் பார்த்தால் தேவலை என்று அவளுக்குத் தோன்றியது. அது தான் இன்றைக்கும் அவள் அவனுடன் பேச முனைந்தற்குக் காரணமும் ஆயிற்று.

    கமலி டெலிபோன் ரிஸீவரை எடுத்து சாரங்கனின் எண்ணைச்சுழற்றுகிறாள். இந்த இரண்டு நாள் பேச்சில் அவன் தொலைபேசி எண்ணே அவளுக்கு மனப்பாடம் ஆகியிருந்தது. போய்க்கொண்டிருந்த ரிங் சட்டென்று கட்டாகி மறுமுனையில் யாரோ டெலிபோனை எடுப்பது தெரிந்ததும், ஹலோ, மிஸ்டர் சாரங்கன் இருக்கிறாரா? என்று மென்மையாகக் கேட்கிறாள் கமலி.

    கமலி, நான் தான். உங்களோட டெலிபோனுக்காகத் தான் காத்திண்டு இருக்கேன் என்று சொல்லி விட்டு இனிமையாகச் சிரிக்கிறான் அவன்.

    அவன் அப்படிச் சொல்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. முதல் இரண்டு நாட்களில் இல்லாத ஒரு சுதந்திரம் அவளிடம் இன்று அவனுக்குக் கிடைத்த மாதிரி இருந்தது. இப்படியெல்லாம் பேசுபவர்களைப் பற்றி அவளுக்கென்று ஒரு கணிப்பு இருந்தது. அவனும் அப்படி இருந்து விடக் கூடாதே என்கிற ஆயாசத்தில் மனம் தொய்ந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், இயல்பாகப் பேச்சைத் தொடர்கிற தோரணையில் ஓ... அப்படியா? சாப்பிட்டாச்சா? என்று கேட்கிறாள்.

    முடிச்சிட்டேன்... நீங்க?...

    நானும் ஆச்சு.

    கமலி, இன்னிக்கு காலைலே உங்க ஆபிஸ் பக்கம் வந்தேன். உள்ளே நுழைஞ்சு சர்ப்ரைஸா உங்களைப் பாத்திட்டுப் போகலாம்ன்னு தீர்மானம். ரிஸப்ஷன் வரை கூட வந்திட்டேன். அப்புறம் தான் அந்த ஞானோதயம் வந்தது. பத்து பேருக்கு நடுவே, திடுதிப்புன்னு நான் அங்கே வந்து உங்களைப் பார்த்தா அதுனாலே உங்க கொலீக்ஸ் மத்திலே உங்களுக்கு சங்கடமாப் போயிடுமேன்னு திரும்பிட்டேன். ஆம் ஐ கரெக்ட்?...

    "அப்படீன்னு இல்லேனாலும், நீங்க செஞ்சது சரிதான். ஏன்னா, நாம இதுவரை ஒருத்தரை ஒருத்தர் நேர்லே பாத்திண்டது இல்லை தானே?... அந்த மாதிரி நேரிடையான அறிமுகம் இல்லாம, அலுவலகம் மாதிரி இடங்கள்லே புதுசா அறிமுகப்படுத்திண்டு சந்திக்கறது நமக்கு ஓக்கேனாலும்,

    பாக்கறவங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும், இல்லையா, அதுக்காகச் சொன்னேன்" என்கிறாள் கமலி.

    குட். ஏறக்குறைய நீங்க நினைக்கற மாதிரி தான் நானும் நினைச்சேன். அதனாலே தான் திரும்பிட்டேன்

    அவன் அப்படிச் சொன்னது கமலிக்கு நிறைவாக இருக்கிறது. நாகரிகம் தெரிந்தவர் என்று நினைத்துக் கொள்கிறாள்.

    அவனைப் பற்றி அவசரப்பட்டு அப்படி நினைத்தது விட்டோமோ என்று அவள் நினைக்கற மாதிரி அடுத்து சாரங்கன் அவளிடம் கேட்கிறான். கமலி, உங்க ஆபீஸூக்குப் பக்கம் தானே? ஈவினிங் உங்களுக்கு செளகரியப்படும்ன்னா 'அபிராமி'லே சந்திக்கலாமா?

    சட்டென்று அவன் அப்படிக் கேட்டதும் கமலி லேசாகத் துணுக்குறுகிறாள். இப்பொழுது மறுபடியும் அவனைப் பற்றி அவன் குணநலன்களை பற்றி மனசில் குழப்பம். முன்பின் பார்த்திராத பெண்களை முதன் முதல் ஒரு சினிமாவில் வைத்து சந்திக்கும் ஆணாக அவன் இருந்துவிடக் கூடாது என்பதை மிகவும் விரும்பியதைப் போல அவள் குரல் தழைகிறது... சினிமா வேண்டாம்... என்று கத்தரித்தாற் போலச் சொல்லி விட்டு, அதற்கு மேல் எப்படித் தொடர்வது என்று ஒரு வினாடி யோசித்து. அடுத்த வினாடியே, ஒண்ணு செய்யலாமா? என்கிறாள்.

    சொல்லுங்க... எதிர்முனை குரலில் இருந்த லேசான பதட்டம் அவளுக்கு புரிபடுகிறது.

    நான் கூட உங்களைச் சந்திக்கறதிலே ஆர்வமா இருக்கேன். சில முக்கியமான விஷயங்களைப் பத்தி உங்ககிட்டே பேசணும். அதுக்காகத் தான் இந்த சந்திப்பு. அதற்கப்புறம் தான் மத்ததெல்லாம். இன்னிக்கு சாயந்தரம் ஸ்பென்ஸருக்கு வந்திடறீங்களா?... காஃபி ஷாப் பக்கத்திலே. கரெக்டா அஞ்சரைக்கு. மிஸ் பண்ணக் கூடாது... என்று சொல்கையில் அவள் குரல் அவளுக்கே என்னவோ போல் இருப்பதை உணர்கிறாள்.

    நானா... உங்களுக்கு முன்னாடியே அங்கே இருப்பேன். அது சரி, நாம தான் இதுக்கு முன்னாடி ஒருத்தரை ஒருத்தர் பார்த்ததே இல்லையே, நாம எப்படி அடையாளம் கண்டுக்கறது?... ம்... ஸப்போஸ் வேற யாராவது ஒரு மிஸ்ஸோட தோளைத் தட்டி 'கமலி'ன்னு ஆசையோட நா கூப்பிட்டுட்டு அவ செருப்பைக் கழட்டிட்டா... என்று அவன் பிதற்றிச் சிரிக்கும் போது அவனுடைய அந்த மட்டரகமான ஹாஸ்யம் அவளுக்கு எரிச்சலை ஊட்டினாலும், நேரில் பார்த்துப் பேசித்தான் எல்லாத்தையும் தீர்மானிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மனசு தவிக்கிறது.

    அவளது அந்த வினாடி மெளனத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல், எப்படி உங்களை நான் அடையாளம் கண்டுக்கறது? என்று மறுபடியும் சாரங்கன் கேட்கிறான்.

    ஒரு சகஜ நிலைக்கு வந்து விட்ட தோரணையில் கமலி லேசாகச் சிரிக்கிறாள். அடையாளம் தானே... ரொம்ப ஈஸி. நா இன்னிக்கு சிவப்பு ஸாரி கட்டியிருக்கேன். தோள்லே தோல் பை. வலது கையிலே வாட்ச்... ஓ. கே... அடையாளம் போதுமா?

    சிவப்பு ஸாரின்னு நீங்க சொன்னது ஒண்ணே போதும். மத்தவங்கள்லேந்து பிரிச்சுத் தனியாக் காட்டிடும். நா இன்னிக்கு சிமிண்ட் கலர் பாண்ட்;ஒயிட் ஷர்ட்டை இன் பண்ணியிருப்பேன். கொஞ்சம் மாநிறமா, உயரமா, கர்லிங் ஹேர்ஸோட இருப்பேன்... இதுலே என்ன கமலி பெரிய சிரமம் இருக்கு... இன்னிக்கு சரியா அஞ்சரைக்கு ஸ்பென்ஸர்லே...

    தயவு செஞ்சு தோளை மட்டும் தட்டிடாதீங்க... நான் கொஞ்சம் என்ன, நிறையவே சென்ஸிடிவ்...

    ஸாரி... ஒரு பேச்சுக்கு நகைச்சுவையா அப்படிச் சொன்னேன்... நீங்க நெஜம்ன்னு நெனைச்சிட்டீங்களா? என்ற குரலில் ஏமாற்றம் வழியறது.

    பின்னே... நெஜம் ஒண்ணையே பேசத் தெரிஞ்சவளுக்கு மத்தவங்க பேசற எல்லாத்தையும் அப்படித் தான் நெனைக்கத் தோணும். இல்லையா?

    Again ஸாரி... நேர்லே பாக்கும் பொழுது ஸ்பெஷலா மன்னிப்பு கேட்டுக்கறேன்... ஓக்கேவா

    'உரிமை எடுத்துக் கொண்டு உள்மனசில் நுழைய முயற்சிக்கற பேச்சு. அத்துமீறும் பொழுது சுட்டிக்காட்டினால், சட்டுனு பின்வாங்கற சாமர்த்தியம். எந்த அளவுக்கு எடுத்துக்கறதுன்னு தெரிலே; பாக்கலாம்' என்று கமலியின் சிந்தனை ஓடுகிறது.

    என்னங்க... பேச்சு மூச்சே காணோம்... கோபமா?

    ம்... அதெல்லாம் ஒண்ணுமில்லே என்கிறாள் கமலி. அவனை ரொம்பவும் காய்ச்சி விட்டோமோ என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் இந்த மாதிரி ஒட்டாமல் இருப்பது நல்லதுக்குத் தான் என்று இன்னொரு மனம் ஜாக்கிரதை உணர்வைக் கூட்டுகிறது. அப்போ பாக்கலாம், வந்திடுங்க... என்று ஒருவரியில் முடித்துக் கொள்ள முயற்சிக்கிறாள்...

    சரிங்க, ஸீ யூ... என்று அவனும் போனை வைக்கிறான்.

    காண்டினுக்குப் போனவங்க, சின்ன குட்டி தலை சாய்த்தல் ஆசையில் Dormitory ரூம் போனவங்க என்று ஒவ்வொருவராக திரும்பி அவரவர் ஸீட்டை நிறைக்கத் தொடங்கி விட்டார்கள். கமலியும் டேபிளில் கிடந்த ஃபைல்களில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறாள்.

    நாலரைக்கு கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று மூணு மணியை அலுவலக பெரிய சுவர்க் கடியாரம் காட்டிய பொழுது தோன்றுகிறது.

    எதற்காக இந்த சந்திப்பு என்று நினைத்தவுடன் நெஞ்சம் கசந்தாலும், அடுத்த வினாடியே கமலியின் மனசில் அலாதியான ஒரு உறுதி வந்து உட்கார்ந்து கொள்கிறது. அந்த உறுதி கொடுத்த தெம்பில் புத்துணர்ச்சி கிடைத்து முகம் பிரகாசமாகிறது.

    ***

    2

    அவளை முதலில் அடையாளம் கண்டு கொண்டது அவன் தான்.

    ஹே... கமலி... என்று தனது காதுகளுக்கருகில் கரகரத்த அந்த ஆண்மை கலந்தக் குரலைக் கேட்டு ஒருவிதக் கூச்சத்தோடு கொஞ்சம் நகர்ந்து, அந்த அந்நிய ஆடவனை அரைகுறையாக நோட்டமிடுகிறாள் அவள்.

    நான் எதிர்பார்த்ததுக்கு மேலேயே, யூ ஆர் ஸோ ப்யூட்டிபுல்... என்று தொடர்ந்த அவனது புகழுரைகள் தன்னைக் கிறக்கப் படுத்தாமல் ஸ்பென்ஸர்ஸின் உள்வட்ட நடைபாதை தாண்டி எக்ஸ்லேட்டர் வரை பார்வையால் அளந்து

    Enjoying the preview?
    Page 1 of 1