Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enna Solla Pogirai...?
Enna Solla Pogirai...?
Enna Solla Pogirai...?
Ebook355 pages3 hours

Enna Solla Pogirai...?

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

நிரஞ்சனும், இளவஞ்சியும் வாழும் அந்த வாழ்க்கை, அதன் அழகு... வாழ்க்கையின் முழு அர்த்தம், அந்த புரிதல், காதல்... என அனைத்தையும் இந்த கதையில் நீங்க பார்க்கலாம். இந்த உலகத்தில் பிறக்கும் அத்தனை பிள்ளைகளும் தாயின் வயிற்றில் இருந்துதான் பிறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில பிள்ளைகள் தாயின் இதயத்தில் இருந்தும் பிறக்கலாம்... இதற்கான அர்த்தம் என்னவென்று இந்த கதையைப் படித்து தெரிஞ்சுக்கோங்க.

Languageதமிழ்
Release dateApr 6, 2024
ISBN6580109210954
Enna Solla Pogirai...?

Read more from Infaa Alocious

Related authors

Related to Enna Solla Pogirai...?

Related ebooks

Reviews for Enna Solla Pogirai...?

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enna Solla Pogirai...? - Infaa Alocious

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    என்ன சொல்லப் போகிறாய்...?

    Enna Solla Pogirai...?

    Author:

    இன்பா அலோசியஸ்

    Infaa Alocious

    For more books

    https://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

    பொருளடக்கம்

    பகுதி – 1.

    பகுதி – 2.

    பகுதி – 3.

    பகுதி – 4.

    பகுதி – 5.

    பகுதி – 6.

    பகுதி – 7.

    பகுதி – 8.

    பகுதி – 9.

    பகுதி – 10.

    பகுதி – 11.

    பகுதி – 12.

    பகுதி – 13.

    பகுதி – 14.

    பகுதி – 15.

    பகுதி – 16.

    பகுதி – 17.

    பகுதி – 18.

    பகுதி – 19.

    பகுதி – 20.

    பகுதி – 21.

    பகுதி – 22.

    பகுதி – 23.

    பகுதி – 24.

    பகுதி – 1.

    நிரஞ்சன், காலையில் எழுந்து அலுவலகத்துக்குச் செல்ல கிளம்பிக் கொண்டு இருக்கையில், அறைக்கு வெளியே தாயின் குரல் ஓங்கி ஒலிப்பது கேட்டது.

    ‘இவ்வளவு காலையிலேயே அம்மா யார்கிட்டே இப்படி சத்தமா பேசறாங்க? இப்போ யார் சிக்கினாங்கன்னு தெரியலையே...’ எண்ணியவாறு தன் லேப்டாப் பேகையும், அலைபேசியையும் எடுத்துக் கொண்டு அறைக்கு வெளியே வந்தான்.

    அங்கே, ‘என்னைக் காப்பாத்துடா நண்பா...’ என்னும் பாவனையோடு பலியாடுபோல் தாய்க்கு முன்னால் அமர்ந்திருந்தான், நிரஞ்சனின் நண்பன் நவீன்.

    பொங்கிய சிரிப்பை தன் வாய்க்குள் அதக்கிக் கொண்ட நிரஞ்சன், அம்மா, டிபன்... கேட்டவாறு அங்கே இருந்த சாப்பாட்டு மேஜையின் முன்னால் அமர்ந்தான்.

    நண்பா... நவீன் பலகீனமாக குரல் கொடுக்க, அவன் அவனைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை.

    டேய்... நான் சொல்றது உனக்கு கேக்குதா இல்லையா? நீ என்ன செய்வியோ தெரியாது... இவன் இந்தப் பொண்ணை பார்க்க வர்றான். இல்ல... என்ன செய்வேன்னே தெரியாது... நிரஞ்சனின் தாய் பரிமளா கோபமாக சொல்லிவிட்டுச் செல்ல, இவனோ பரிதாபமாக விழித்தான்.

    ‘இந்தம்மா பையன் பொண்ணு பார்க்கப் போகலையாம்... அதுக்கு என்னை ஏறு ஏறுன்னு ஏறிட்டு போகுது. ஏன் அவங்க பையன் குத்துக்கல்லாட்டம் இவங்க கண்ணு முன்னாடி தானே நிக்கறான். சொல்ல வேண்டியது தானே...’ எண்ணியவன் தன் நண்பனை முறைத்தான்.

    அதோ அவனே வந்துட்டான் ஆண்ட்டி... நவீன் நண்பனை சுட்டிக் காட்ட,

    நான் உன்கிட்டே சொன்னதை அவன்கிட்டே சொல்ற... அவ்வளவுதான் சொன்னவர் அவனை விட்டு விலக, ‘அப்பாடா...’ ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.

    ‘எல்லாம் உன்னால் டா...’ நவீன் அவனை பார்வையாலேயே எரித்தான்.

    அவன் அப்படி முறைக்கவே, ‘சேதாரம் அதிகமோ?’ என்னும் பார்வை பார்த்தவன், நீயும் சாப்பிட வாடா... அவன் அழைக்க, வேகமாக அவனுக்கு அருகே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

    பரிமளா டிபனை எடுக்க உள்ளே செல்ல, "ஏன்டா... உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா? நீ பொண்ணு பார்க்க போகாததுக்கும், எனக்கும் என்னடா சம்பந்தம்?

    வேண்ணா சொல்லு, நானே கூட இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறேன்... உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்ல, என்னை எதுக்குடா பலியாடு ஆக்கற? அவன் விடாமல் புலம்ப, நிரஞ்சன் அவனைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை.

    டேய்... நான் கேட்டுகிட்டே இருக்கேன்டா... ஏதாவது பதில் சொல்லு அடிக்குரலில் அவனிடம் சீறினான்.

    நண்பா, ஏதாவது சொன்ன? இப்படிக் கெட்டவனை கொலைவெறியில் முறைத்தான்.

    "உனக்கெல்லாம் மனசாட்சியே கிடையாது இல்ல? நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி, நான் எங்க அம்மாகிட்டே திட்டு வாங்கினா பரவாயில்லடா. எனக்கு கல்யாணமாகி ஒரு வருஷமாகுதுடா.

    "அதில் இருந்து என்னைப் பாக்கும்போதெல்லாம், உங்கம்மா வறுத்து எடுக்கறாங்க. நீ கல்யாணம் பண்ணிக்காததுக்கு நான் உங்க அம்மாகிட்டே தினமும் திட்டு வாங்கறது என்னடா நியாயம்?

    அந்த கல்யாணத்தை பண்ணித் தொலைச்சாத்தான் என்ன? எதுக்கு இப்படி என் கழுத்தை அறுக்கற? பரிமளா அவனிடம் காட்டிய கோபத்தை எல்லாம், மொத்தமாக அவனிடம் கொட்டினான்.

    நவீன் சொன்னதற்கு கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காமல், கூலாக அவனைப் பார்த்த நிரஞ்சன், ஒரு சிரிப்பு சிரிக்க, நவீன் காற்று போன பலூன் போலானான்.

    நான் இவ்வளவுதூரம் கத்தினதுக்கு இதுதான் உன் ரியாக்ஷனாடா? அட நல்லவனே... கத்தி வருதுடா... அவனது தாய் பரிமளா கையில் உணவுப் பாத்திரங்களோடு வர, வேகமாகச் சொன்னான்.

    நீ எங்க அம்மாவை ‘கத்தி’ன்னு சொல்றதை அவங்க கிட்டே சொல்லவா? நிரஞ்சன் சின்னக் குரலில் கேட்க,

    அதுக்கு பதிலா, நீயே உன் கையால் இந்த சாப்பாட்டில் எனக்கு கொஞ்சம் விஷம் வச்சு கொன்னுடுடா அவன் முனக, நிரஞ்சன் வாய்விட்டே சிரித்தான்.

    அவனைப் பார்த்த பரிமளாவின் முகம் அப்படியே கனிந்து போக, நிரஞ்சா, இந்த பொண்ணு ஃபோட்டோவை கொஞ்சம் பாரேன் அவர் மென்மையாகச் சொல்ல, நவீன் அவரை எட்டாவது அதிசயத்தைப் பார்ப்பதுபோல் பார்த்து வைத்தான்.

    அவன் அப்படிப் பார்ப்பதைப் பார்த்த நிரஞ்சன், ‘வாயை மூடுடா...’ என்னும் விதமாக அவன் காலைத் தட்ட, படக்கென வாயை மூடிக் கொண்டான்.

    பரிமளாவின் இந்த அமைதியான மாற்றத்துக்கு காரணம் ஒன்றுதான்... நிரஞ்சனிடம் எத்தனைதான் கோபம் காட்டினாலும், வெறுப்பை காட்டினாலும், கண்டிப்பை காட்டினாலும் அவனது எதிர்வினை ஒன்றாகத்தான் இருக்கும்... அது... அமைதி.

    அவனிடம் பேசும் எதிராளிதான் அத்தனை உணர்வுகளையும் அவனிடம் வெளிக்காட்டி, இறுதியாக தோல்வியடைந்து திரும்ப நேரிடும். எனவே அவனைப் பெற்ற தாய்க்கு, அவனிடம் எப்படிப் பேச வேண்டும் எனத் தெரியாதா என்ன? எனவேதான் பொறுமையைக் கையாண்டார்.

    நண்பா... உங்க அம்மாவுக்குள்ளே நாலு நடிகர் திலகம் பாய் போட்டு படுத்திருக்காங்கடா. எந்த நேரம் யார் வேணுமோ, அவன் படக்குன்னு எழுந்து வந்து பெர்ஃபாம் பண்ணிட்டு, மறுபடியும் தூங்கப் போயிடறான்... யப்பா... நவீன் வாய்பிளந்து சொல்ல, நிரஞ்சனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

    அதை கொஞ்சமும் மறைக்காமல் கடகடவென அவன் வாய்விட்டே சிரித்து வைக்க, டேய், இது உன் வேலையா? கேட்ட பரிமளா அவனை எட்டிப்பார்த்து முறைக்க, கப்பென வாயை மூடிக் கொண்டான்.

    முக்கியமான விஷயம் பேசும்போது என்னடா சிரிப்பு காட்டிகிட்டு இருக்க? வாயை மூடிகிட்டு சாப்பிடுடா மேலும் அவர் பேச,

    ‘வாயை மூடிகிட்டு எப்படி சாப்பிடறது?’ என தீவிரமாக சிந்தித்தவன்,

    துரோகி... என்னை ஏன்டா கத்தி கிட்டே மாட்டி விடற? அடிக்குரலில் கேட்டுவிட்டு, பரிமளா நீட்டிய புகைப்படத்தைப் பார்த்தான். நிரஞ்சனும் அதில் பார்வையை பதித்தவன், அவளது தெற்றுப்பல் சிரிப்பில் ஒரு நொடி கவரப்பட்டான்.

    அந்த சில நொடிப் பார்வையை, பரிமளா கண்டுகொண்டாரோ இல்லையோ, நவீன் கண்டுகொண்டான்.

    ‘நண்பனுக்கு இந்த பொண்ணை பிடிச்சிருக்கு...’ அதை தன் மனதுக்குள் குறித்துக் கொண்டான்.

    பொண்ணு பேர் என்னம்மா...? நவீன் கேட்க, நிரஞ்சனின் பார்வை அவனைத் தொட்டு நிற்க, இதழ்களுக்குள் புன்னகைத்தான்.

    இளவஞ்சி’ப்பா... பேர் கூட ரொம்ப வித்தியாசமா நல்லா இருக்கு அவர் சொல்ல, ‘இளவஞ்சி...’ நிரஞ்சன் முதல் முறையாக ஒரு பெண்ணின் பெயரை தன் மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

    நண்பாபாபா... உன்னை நான் கண்டுகொண்டேன் என்னும் விதமாக அவனை அழைக்க, அவனை ஒரு எச்சரிக்கும் பார்வை பார்க்க, நவீன் அமைதியாக அமர்ந்து கொண்டான்.

    பரிமளா இளவஞ்சியைப் பற்றி சொல்லிக்கொண்டே போனார். பொண்ணு உனக்கேற்ற ஜோடிப்பா... ஜாதகம் கூட பக்காவா பொருந்தி இருக்கு. ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துட்டோம்ன்னா, பேசி முடிச்சுடலாம்... தாய் சொல்ல, அதை தான் கேட்டுக்கொண்டதாக அவரை ஒரு பார்வை பார்த்தான் அவ்வளவுதான்.

    அம்மா, என் கண்டிஷன் என்னன்னு உங்களுக்கே தெரியும்... சொன்னவன் உணவை முடித்துக்கொண்டு எழுந்துவிட, பரிமளாவுக்கு தலைவலியாகப் போயிற்று.

    நீ சொல்றது மாதிரி எல்லாம் அப்படி பட்டுன்னு முடிக்க முடியாது நிரஞ்சா. முதல்ல போய் பார்க்கணும், பேசணும்... நம்ம எதிர்பார்ப்பு எல்லாம் சொல்லணும்... அதுக்கு அவங்க ஒத்துவரணும்... எவ்வளவு இருக்கு அவர் சொல்ல, அதற்கு அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்துகொண்டான்.

    அவன் கை கழுவச் செல்ல, நவீனும் அவன் பின்னால் எழுந்து சென்றான்.

    நாங்க கிளம்பறோம்மா... வர்றேன்... சொன்னவன் தன் காருக்குச் செல்ல, பரிமளா அவன் பின்னாலேயே வந்தார்.

    நிரஞ்சா, நான் கேட்டதுக்கு பதிலே சொல்லாமல் போறியே... இந்த இடமும் கைவிட்டுப் போய்விடக் கூடாதே என்ற கவலை அவருக்கு.

    தாயைப் பார்த்து புன்னகைத்தவன், காரைக் கிளப்ப, அவருக்கு குட்டிச் சுவற்றில் மோதும் உணர்வு. அவனும் கோபப்பட்டு, கத்தி, முடியாது என முரண்டு பிடித்தால், பதிலுக்கு அதே வித்தையை கையில் எடுக்கலாம்.

    இங்கே என்ன சொன்னாலும் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக்கினால் அவரும் என்ன செய்ய? அவரது முகம் கவலையைக் காட்ட, அவனோ காரைக் கிளப்பிக்கொண்டு சென்றான்.

    அவன் காரில் செல்ல, நிரஞ்சனைப் பற்றி பார்க்கலாம். இந்திய ஆண்களுக்கே உரிய சராசரி உயரத்தில், கட்டுடலோடு, மேன்லியான தோற்றத்தில் கோதுமை நிறத் தோற்றத்தோடு, மற்றவர்களை வசீகரிக்கும் விதத்தில் இருந்தான்.

    அவர்களது தாத்தா சைக்கிளில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்திருக்க, துவக்கத்தில் தவணைக்கு பொருட்கள் கொடுத்து ஒரு சின்ன கடையைப் பிடித்து ஆரம்பித்த அவர்களது கடை, அவனது அப்பா காலத்தில் ஒரு படி வளர்ந்து கொஞ்சம் பெரிய ஷோரூம் ஆகி இருக்க, இவனோ அதை மூன்று நான்கு கிளைகளாக அதை மாற்றி இருந்தான்.

    நாகர்கோவில், மார்த்தாண்டம், திருநெல்வேலி என மூன்று இடங்களில் அவர்களது ஹோம் அப்ளையன்சஸ் ஷோரூம் பரவி இருக்க, பணத்துக்கு சிறிதும் பஞ்சமில்லாத வாழ்க்கைக்கு சொந்தக்காரன்.

    ‘அஞ்சுகிராமத்தில்’ அவனது வீடு, அதாவது பங்களா அமைத்து இருந்தது. சுமார் பத்து அறைகள் கொண்ட பங்களா அது. அப்பா ஆனந்தன், அம்மா பரிமளா, தங்கை ஆதிரா அவளது கணவன் கௌஷிக் இதுதான் அவனது குடும்பம்.

    ஆதிராவை கட்டிக்கொடுத்த கௌஷிக்கின் குடும்பமும், பரம்பரை பரம்பரையாக ரப்பர் எஸ்டேட் வைத்திருந்தார்கள். கூடவே இப்பொழுது ஒரு பெட்ரோல் பங்கும் துவங்கி நடத்திக் கொண்டிருந்தார்கள்.

    கார் சாலையில் பயணிக்க, நண்பா... பொண்ணை பிடிச்சிருக்கு போல... பிறகு ஏன்டா பிடிவாதம்? அம்மாகிட்டே சொல்ல வேண்டியது தானே? அவங்களும் சந்தோஷப்பட்டிருப்பாங்க நவீன் சொல்ல, அவனை ஒரு பார்வை பார்த்தான்.

    ‘என் அம்மாவைப்பற்றி தெரியாமல் பேசுகிறாயே...’ என மனதுக்குள் எண்ணியவன், சாலையில் கவனமானான்.

    கேக்கறதுக்கு பதில் சொல்லு நிரஞ்சா... இப்படி சிரிச்சு மழுப்பலாம்னு பாக்காதே அவன் கேட்க, காரை வளைவில் லாவகமாகத் திருப்பியவாறே தன் திருவாய் மலர்ந்தான்.

    "நான் எங்கே அம்மாகிட்டே ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான் சொல்லி இருக்கேன். நான் நேரில் பார்க்கும் பொண்ணு யாரா இருந்தாலும், அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன், இல்லன்னா மாட்டேன்னு சொன்னேன்.

    "எனக்கு இப்படி நேர்ல போய் பொண்ணைப் பாத்துட்டு, ‘பிறகு சொல்றோம்’ ‘தகவல் அனுப்பறோம்; எயப்படி எதையும் சொல்லிட்டு வர விருப்பம் இல்லை. ‘எனக்கு புடிச்சிருக்கு, கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்?’ இந்த வார்த்தையைத்தான் பேசுவேன்னு சொல்லி இருக்கேன்.

    அதுக்கு அவங்க இன்னும் ஒத்துக்காமல் ஆயிரம் பொண்ணு பாத்துட்டாங்க. சரி பார்க்கட்டும்னு அவங்க விருப்பத்துக்கே விட்டுட்டேன் அவன் தோளைக் குலுக்க, அவனை அதிசயமாகப் பார்த்தான்.

    அதான் இந்த பொண்ணை பிடிச்சிருக்கே... பிறகு என்ன சொல்ல வேண்டியது தானே...? புரியாமல் கேட்டான்.

    எனக்கு பிடிச்சிருக்கு சரி, அவளுக்குப் பிடிக்க வேண்டாமா? ஒரு வேளை அவ மனசில் வேற யாராவது இருந்தா? ரிஸ்க் தானே... சோ... அவன் இழுக்க,

    சோ... நவீனும் இழுத்தான்.

    முதல்ல ஆதிக்கு போனைப் போடுவோம்... சொன்னவன், காரில் இருந்த ப்ளூட்டூத் இணைப்பு வழியாக அவளுக்கு அழைத்தான்.

    அண்ணா... எப்படிண்ணா இருக்க? அம்மா எப்படி இருக்காங்க? ஏதோ ஒரு பொண்ணைப்பத்தி வாய் ஓயாமல் பேசிட்டு இருக்காங்க. எனக்கும் போட்டோ அனுப்பி இருந்தாங்க, பொண்ணு நல்லாத்தானே அண்ணா இருக்கா... பார்க்கலாமே... அவள் படபடவென பேச, அவள் கேட்டு முடிக்கும் வரைக்கும் பொறுமை காத்தான்.

    நாங்க எல்லாம் நல்லா இருக்கோம்... நீ மாப்பிள்ளை எல்லாம் எப்படி இருக்கீங்க?.

    நாங்க எல்லாம் நல்லா இருக்கோம், நான் கேட்டதுக்கு பதில் சொல்லுண்ணா. இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப் போற? உன் வயசு பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி, குழந்தையே இருக்கு... அவள் படபடக்க, இவனிடம் நிதானம் மட்டுமே இருந்தது.

    அதுக்குத்தான்ம்மா போன் பண்ணேன்... அம்மா சொன்ன பொண்ணு ‘இளவஞ்சி’யா? அவன் தெளிவுபடுத்திக்கொள்ள கேட்டான்.

    ஆமாண்ணா... அவங்களேதான்... அண்ணாணாணா... ஹையோ... எனக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியலையே... அவன் இன்று வரைக்கும் எந்தப் பெண்ணைப் பற்றியும் கேட்டது இல்லை என்பதால், அவள் முடிவே செய்துவிட்டாள்.

    ரொம்ப அவசரப்படாதம்மா... எனக்கு அவங்க அட்ரஸ், போன்நம்பர்... இப்படி ஏதாவது வேணுமே... அவன் கேட்க,

    ரெண்டே நிமிஷத்தில் உனக்கு அவங்க அட்ரஸ் அனுப்பறேன்ண்ணா... அவங்கதான் என் அண்ணின்னு நான் ஃபிக்ஸ் ஆயிட்டேன்... அவள் சொல்ல, சின்ன சிரிப்போடு அலைபேசியை வைத்தான்.

    எனக்கென்னவோ இதுதான் முடியும்ன்னு தோணுதுடா... அவன் சொல்ல, நிரஞ்சன் அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

    நான்கு வருடங்களுக்கு முன்னர் அவனது அப்பா மாரடைப்பில் இறந்துவிட, திடீரென நேர்ந்த அவரது இழப்பில் நிரஞ்சன் சற்று தடுமாறிப் போயிருந்தான். அந்த நேரம் அவனது நண்பன் நவீன் அவனுக்கு தக்க சமையத்தில் கை கொடுக்கவே, GM பதவி கொடுத்து அவனைத் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

    இருவரும் ஒன்றாக கடைக்குச் செல்ல, "என்ன சார்... உங்க காரை எங்கே? நவீனிடம் அங்கே வேலை செய்பவன் கேட்டான்.

    என்னோட கார் சர்வீஸுக்கு போயிருக்கு... அதான் பாஸ் கூட வந்தேன் சொன்னவன் தன் வேலையைப் பார்க்கப் போனான். கடைக்கு வெளியே இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும், கடைக்கு உள்ளே அதை அவன் காட்டிக் கொள்ளவே மாட்டான்.

    மற்றவர்கள் முன்னால், ‘பாஸ்’ என்ற அழைப்பைத் தவிர எதையும் அழிக்க கூட மாட்டான்.

    இருவரும் அவரவர் அறைக்குச் சென்றுவிட, நிரஞ்சனின் அலைபேசிக்கு இளவஞ்சியின் வீட்டு விலாசம் வந்து சேர்ந்து இருந்தது.

    அது அவனது வீட்டுக்கு மூன்று நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த, வட்டகோட்டையாக இருக்க, மனதுக்கு நெருக்கமாகவும் உணர்ந்தான்.

    அவன் அலைபேசியை கீழே வைப்பதற்கு முன்னர், ஆதிரா மீண்டுமாக அழைக்க, அவளது அழைப்பை ஏற்றான்.

    சொல்லு ஆதி... என்க,

    "அண்ணா... அண்ணி பேரு இளவஞ்சி, படிப்பு பிஈ டிசைனர்... அவங்க ஒரு ஆர்ட்டிஸ்டும் கூட. அவங்க அப்பா, எழுத்தாளருக்கான அக்காடமி விருது வாங்கின மிஸ்டர் குணசேகர். அவரும் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர்.

    "நாகர்கோவில்ல ஒரு சின்ன கம்பெனியில் டிசைனரா வேலை பார்க்கறாங்க. அவங்களுக்கு ஒரு அண்ணா... அவங்க சித்தப்பா, பெரியப்பா குடும்பம் எல்லாம் ஒண்ணா, ஒரே காம்பவுண்டுக்குள் தனித்தனியா வீடு கட்டி இருக்காங்க.

    "சித்தப்பா பெரியப்பா பசங்கன்னு ரெண்டு அண்ணா, ஒரு அக்கா, ஒரு தங்கை, தம்பின்னு இவங்களுக்கு எக்கச்சக்க உடன்பிறப்புகள் இருக்காங்க. சிலர் கூடவே இருக்காங்க, பலர் வெளியூர், வெளிநாட்டில் இருக்காங்க.

    அவங்க வேலை பார்க்கற அந்த கம்பெனி அட்ரசும் உங்களுக்கு அனுப்பி இருக்கேன். பாத்துக்கோண்ணா... அவள் சொல்ல, சற்று அசந்துவிட்டான்.

    இதென்ன மொத்த தகவலும் சேகரிச்சுட்ட? அவன் வியக்க,

    அம்மாகிட்டே ஜஸ்ட் கேட்டேன் அவ்வளவுதான்... மொத்த தகவலும் கொட்டிட்டாங்க அவள் சொல்ல, புன்னகைத்துக் கொண்டான்.

    சரிம்மா, நான் பாத்துக்கறேன்... சொன்னவன் அலைபேசியை வைத்துவிட்டு, அவளது அலுவலக முகவரியைப் பார்த்தான்.

    அது அங்கே இருந்து பக்கத்திலேயே இருக்க, அவனுக்கு அவளை நேரில் பார்க்க மனம் பரபரத்தது.

    உடனடியாக இண்டர்காமை எடுத்து நவீனுக்கு அழைத்தவன், உடனே என் கேபினுக்கு வாடா... சொல்லிவிட்டு அவன் தொலைப்பேசியை கீழே வைக்கும் முன்பாக, நவீன் அவன் முன்னால் இருந்தான்.

    சொல்லு நண்பா... அவன் கேட்க,

    நாம உடனே வெளியே போகணும்... என்னோட வா... சொன்னவன் கார் கீயை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

    எங்கடா போறோம்? நவீன் கேட்க, அவன் எந்த பதிலும் சொல்லவே இல்லை.

    கொஞ்ச நேரம் பேசாமல் இருடா... சொன்னவன், அங்கே இருந்த பில்டிங்கை பார்வையால் நனைத்தான்.

    ‘ஒரு வேளை அவ முன்னாடியே ஆபீஸ்க்கு வந்திருந்தா?’ எண்ணியவன் ஹேண்டில்பாரில் தாளம் போட்டவாறு இருக்க, நவீன் அவனை வித்தியாசமாகப் பார்த்தான்.

    காரைக் கொண்டுவந்து இங்கே நிறுத்திட்டு... அவன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே இளவஞ்சியும், அவளுக்குப் பின்னால் ஒரு பெண்ணுமாக ஆக்டிவா வண்டியில் அந்த காம்பவுண்டுக்குள் செல்ல, நவீன் வாயை மூடிக் கொண்டான்.

    ‘இளவஞ்சி...’ அடர் நீல வர்ண சுடிதாரில், அந்த வெள்ளை நிற ஆக்டிவாவில் பயணிக்க, பின்னால் இருந்த தோழி எதையோ கேட்கவே, அவள் பக்கம் கொஞ்சமாகத் திரும்பி ஏதோ பதில் சொன்னவள், தன் தெற்றுப்பல் தெரிய சிரித்தாள்.

    அந்த சிரிப்பை இமைக்க மறந்து ரசித்திருந்தான் நிரஞ்சன். அவனது தாய் அவனிடம் எத்தனையோ பெண்களின் புகைப்படங்களைக் காட்டி இருக்கின்றார். அதை எல்லாம் பெயருக்கு என்று கூட அவன் பார்த்ததே இல்லை.

    ஆனால் இந்த இளவஞ்சி அவன் நெஞ்சைக் கொள்ளை கொண்டதோடு, அவனது நாளை மிகவும் அழகாக்கினாள்.

    நண்பா... நீ நடத்து... உள்ளே ஏதும் போகணுமா? அவன் நக்கல் குரலில் கேட்க,

    இல்ல... நாளைக்கு காலையில் அவ வீட்டுப் பக்கம் போகணும், ஆறு மணிக்கெல்லாம் வந்துடு அவன் சொல்ல, நவீனுக்கு அத்தனை ஆச்சரியம்.

    பகுதி – 2.

    மறுநாள் அதிகாலையிலேயே நிரஞ்சனும், நவீனும் அவளது வீடு இருக்கும் பக்கம் செல்ல, ஒரு காம்பவுண்டுக்குள் ஒரே வர்ணத்தில், ஒரே மாடலில் மூன்று வீடுகள் வரிசையாக இருக்க, ‘இதில் எது அவ வீடுன்னு தெரியலையே...’ எண்ணியவாறு அவர்கள் வீட்டையே பார்த்திருந்தான்.

    அவன் அப்படிப் பார்த்திருக்க, ஹல்லோ...நீங்க யார்...? உங்களுக்கு என்ன வேணும்? எதுக்கு எங்க வீட்டையே பாத்துட்டு இருக்கீங்க? அங்கே வந்த ஒருவன் கேட்க, நவீன் சற்று தடுமாறிப் போனான்.

    இங்கே ஆனந்தன் வீடு எதுன்னு உங்களுக்குத் தெரியுமா? நிரஞ்சன் கேட்க, அங்கே நின்றவன் சில நொடிகள் யோசித்தான்.

    ஆனந்தனா? அந்த காண்ட்ராக்டரை கேக்கறீங்களா? இல்லன்னா ஷோரூம்ல வேலை செய்யற பையனைக் கேக்கறீங்களா? தன் புருவம் சுருக்கி கேட்டான்.

    அந்த ஷோரூம்ல வேலை செய்யற ஆனந்தன் தான்....

    ஓ அந்த பையன் வீடு... இங்கே இருந்து நாலு வீடு தள்ளி, ஒரு க்ரீம் கலர் பெயிண்ட் அடிச்ச வீடு... அதுதான்... அவன் சொல்ல,

    ரொம்ப தேங்க்ஸ்... இங்கே யாரோ சாகித்ய அக்காடமி விருது வாங்கின பெரியவர் இருக்கார்ன்னு அவன் சொன்னான். அது எந்த வீடுன்னு உங்களுக்குத் தெரியுமா? தன் வண்டியைக் கிளப்பியவாறே அவனுக்கு சந்தேகம் வராத விதத்தில் கேட்டான்.

    அது அந்த லாஸ்ட் வீடு தான்... எதுக்கு கேட்டீங்க?.

    நம்ம ஊருக்குள் ஒரு சாகித்ய அக்காடமி விருது வாங்கினவர் இருக்கார்ன்னா, அவர் எவ்வளவு பெரிய ஆள். ஜஸ்ட் ஒரு முறை அவரை நேர்ல பார்க்கணும், அதுக்குத்தான்... ஒரு ஆட்டோகிராப் வாங்க... நிரஞ்சனின் பேச்சா, இல்லையென்றால் அதில் இருந்த மென்மையா, ஏதோ ஒன்று எதிரில் இருந்தவனை மெஸ்மரைஸ் செய்தது.

    அது எங்க சித்தப்பாதான்... வேண்ணா உள்ளே வாங்களேன், சித்தப்பாவை பாத்துட்டு போகலாம்... அவனது தோற்றம் மற்றவனை நம்பத் தூண்டியது.

    இல்ல, இவ்வளவு காலையில் வந்து அவரை டிஸ்டப் பண்ண விரும்பலை. இன்னொரு நாள் கொஞ்சம் லேட்டா வந்து அவரைப் பார்க்கறேன். உங்க பேர்....

    சந்தோஷ்... அவன் சொல்ல, நிரஞ்சன் நவீனை ஒரு பார்வை பார்க்கவே, அவனது பைக்கின் பின்னால் ஏறிக் கொண்டான்.

    நிரஞ்சன் வண்டியைக் கிளப்பிக்கொண்டு செல்ல, அப்பொழுதுதான் அவன் நிம்மதியாக மூச்சு விட்டான்.

    ஹப்பா... எனக்கு இப்போதான் நிம்மதியா இருக்கு. எங்கே சிக்கி சின்னாபின்னமாயிடுவோமோ பயந்தே போயிட்டேன்... தன் நெஞ்சில் கை வைத்தவாறு ஆசுவாசமானான்.

    சரி, எப்படி நண்பா நீ டக்குன்னு அந்த ஆனந்தனை இதுக்குள்ளே இழுத்த? அவன் இந்த ஏரியாதான்னு உனக்கு முன்னமே தெரியுமா?.

    ஒரு இடத்துக்கு வர்றோம்னா, ப்ளான் இல்லாமல் வர முடியுமா? அவன் கேட்க, நவீன் அசந்தான்.

    இப்போ தெரியுதுடா... நீ எப்படி அந்த கத்தியை சம்மளிக்கறன்னு அவன் சொல்லிவிட்டு சிரிக்க, தன் நண்பனை கொஞ்சமாக முறைத்தான்.

    அந்த சந்தோஷ் சொல்லி அனுப்பிய, ஆனந்தனின் வீட்டின் முன்னால் பைக்கை நிறுத்தியவன், வண்டியில் இருந்து இறங்கினான்.

    இங்கே எதுக்குடா நிப்பாட்டுற?.

    பின்னாடி அவன் நின்னு நம்மளைப் பாத்துட்டே இருக்கான்... சோ... சொன்னவன் வண்டி கீயை எடுத்துக்கொண்டு கீழே இறங்க, நவீனும் இறங்கி நின்றவன், வெறுமே பார்வையை சுழற்றுவதுபோல் அவன் அங்கே நிற்கின்றானா? எனப் பார்க்க, சந்தோஷ் அங்கே நின்று இவர்களைப் பார்ப்பது தெரிந்தது.

    ‘அம்மாடியோ... சிஐடியை விட பெரிய ஆளா இருப்பான் போல’ அவன் நினைக்க, தங்கள் வீட்டின் முன்னால் ஒரு வண்டி வந்து நிற்கவே, உள்ளே இருந்து, ஆனந்தனின் சாயலில் இருந்த ஒருவர் வேகமாக கேட்டுக்கு விரைந்தார்.

    உங்களுக்கு யார் வேணும்? அவர் கேட்கவே,

    ஆனந்தன் இருக்கானா? நவீன் அவரிடம் கேட்டான்.

    இருக்கான்... நீங்க உள்ளே வாங்க... அவர் அழைக்கவே, இவர்கள் உள்ளே சென்ற பிறகுதான், சந்தோஷ் அங்கே இருந்து அகன்றான்.

    ஆனந்தா... உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க பார் அவனது அப்பா குரல் கொடுக்க, தூக்க கலக்கத்தில், அவிழ்ந்து விழுந்த

    Enjoying the preview?
    Page 1 of 1