Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Infaa Alociousyin Sirukathaigal
Infaa Alociousyin Sirukathaigal
Infaa Alociousyin Sirukathaigal
Ebook44 pages25 minutes

Infaa Alociousyin Sirukathaigal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109202985
Infaa Alociousyin Sirukathaigal

Read more from Infaa Alocious

Related authors

Related to Infaa Alociousyin Sirukathaigal

Related ebooks

Reviews for Infaa Alociousyin Sirukathaigal

Rating: 4.6 out of 5 stars
4.5/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Infaa Alociousyin Sirukathaigal - Infaa Alocious

    http://www.pustaka.co.in

    இன்பா அலோசியஸ்யின் சிறுகதைகள்

    Infaa Alociousyin Sirukathaigal

    Author:

    இன்பா அலோசியஸ்

    Infaa Alocious

    For more books

    http://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அவரவர் நியாயங்கள்...

    காதலர் தினம்.

    திருப்புமுனை - 1.

    துணை

    நட்பு...

    வாழ்க்கைப் பாடம்.

    அவரவர் நியாயங்கள்...

    காலையில் எழுந்தது முதலே..., அமைதியின்றி இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்த மனைவியை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான் ராஜேஷ்.

    நிறைமாத வயிற்றை அவள் சுமக்க முடியாமல் சுமப்பதும் பார்வையில் விழ, பரிதாபமாகத்தான் இருந்தது. அதைவிட, அவள் மனதுக்குள் ஓடும் எண்ணம் என்னவென்று அவனுக்குத் தெரியாதா என்ன?

    இன்று அவள் பிறந்தநாள்..., அந்த சந்தோசம் அவள் முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. தாய்மைக்குரிய பூரிப்பு இருந்தாலும், உற்சாகம் அவள் முகத்தில் கொஞ்சம் கூட இல்லாததைக் கண்டவனுக்கு பரிதவிப்பாகத்தான் இருந்தது.

    ஆனால்..., இதில் தான் செய்யக்கூடியது எதுவும் இல்லையென்று அவனுக்குத் தெரியுமே.

    என்னங்க..., கோவிலுக்குப் போகணும்னு சொல்லிட்டு இப்படியே உக்காந்து என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? முதல்ல போய் கிளம்புங்க... அவனை விரட்டினாள்.

    கோவிலுக்குச் சென்று கடவுளிடம் வேண்டினாலும்..., அவள் மனதுக்குள் அமைதி என்பதே நிலைக்கவில்லை. கோயில் பிரகாரத்தில் அமர்ந்தவள், மெளனமாக கணவனின் கையை பற்றிக் கொண்டாள்.

    அடுத்து வரப்போவது என்னவென்று அறிந்தவனாக..., அமைதியாகவே அவளை ஏறிட, என்னங்க..., நான் ஒண்ணு கேக்கவா...? நீங்க கோச்சுக்க கூடாது..., அவன் மெளனமாக தலை அசைத்தான்.

    அம்மா வீட்டுக்கு போயிட்டு..., இல்ல..., நீங்க வேண்டாம்னு சொன்னால் நான் கேக்கலை... அவன் அமைதியைக் கண்டு வேகமாக உரைத்தாள்.

    "ப்ரியா..., இன்னைக்கு வரைக்கும் நீ கேட்டு நான் எதையாவது மறுத்து இருக்கிறேனா? தாராளமா போகலாம்..., ஆனா..., அங்கே போயிட்டு..., அவங்க பேசலன்னா..., நீ வருத்தப்பட மாட்டேன்னு மட்டும் சொல்லு..., இப்போவே

    Enjoying the preview?
    Page 1 of 1