Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagin Muzhumathi Neeye...! - Part - 1
Azhagin Muzhumathi Neeye...! - Part - 1
Azhagin Muzhumathi Neeye...! - Part - 1
Ebook548 pages5 hours

Azhagin Muzhumathi Neeye...! - Part - 1

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

துளசியின் வாழ்க்கையில், முதலில் நுழையும் கதிர். அவளது சொத்துக்காக அவளை அடைந்து, அவளை ஏமாற்றிக் கொண்டிருக்க, அதை சிறிதும் அறியாத துளசியோ அவன்மேல் கண்மூடித்தனமான நேசம் வைக்க, அந்த நேசம் முழுதாக உடைகையில் அவளது நிலை என்னவாகும்?

அவளது சொத்தை அபகரித்தது மட்டுமல்லாமல், அவளை கயவர்கள் கையில் கதிர் ஒப்படைக்க, அதில் இருந்து அவள் எப்படி மீண்டாள்? அவளை யார் மீட்டார்கள்? அவளது வாழ்வில் வசந்தம் வந்ததா? அதை அவளால் முழுமனதோடு ஏற்க முடிந்ததா என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580109205001
Azhagin Muzhumathi Neeye...! - Part - 1

Read more from Infaa Alocious

Related authors

Related to Azhagin Muzhumathi Neeye...! - Part - 1

Related ebooks

Reviews for Azhagin Muzhumathi Neeye...! - Part - 1

Rating: 4.533333333333333 out of 5 stars
4.5/5

15 ratings2 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    What an awesome novel really loved it really loved it ♥️

    1 person found this helpful

  • Rating: 5 out of 5 stars
    5/5
    I loved it I loved it I loved it ?????????

    1 person found this helpful

Book preview

Azhagin Muzhumathi Neeye...! - Part - 1 - Infaa Alocious

http://www.pustaka.co.in

அழகின் முழுமதி நீயே...!

பாகம் - 1

Azhagin Muzhumathi Neeye...!

Part - 1

Author:

இன்பா அலோசியஸ்

Infaa Alocious

For more books

http://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

அத்தியாயம் 17

அத்தியாயம் 18

அத்தியாயம் 19

அத்தியாயம் 20

அத்தியாயம் 21

அத்தியாயம் 22

அத்தியாயம் 23

அத்தியாயம் 24

அத்தியாயம் 25

அத்தியாயம் 26

அத்தியாயம் 27

அத்தியாயம் 28

அத்தியாயம் 29

1

சாப்பாட்டு மேஜை முன்னால் அமர்ந்து, அங்கே இருந்த உணவு வகைகளை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி துளசி. அவளைச் சுற்றி இருக்கும் பெற்றவர்களின் முகத்தில் இருக்கும் கவலையோ, படபடப்போ அவளை கொஞ்சம் கூட கலைக்கவில்லை.

இந்த உலகிலேயே அவள் மிகவும் ரசித்து, அனுபவித்து செய்யும் ஒரே விஷயம் உணவு உண்பது. சொல்லப்போனால் அது அவளது மிகப்பெரும் பலவீனம் என்றே சொல்லலாம்.

அதுவும் நான்வெஜ் அயிட்டம், சாக்லேட், ஐஸ்கிரீம், பொரித்த உணவுவகைகள் என்றால் உயிரையே விட்டுவிடுவாள். மூச்சுவிடாமல் இருக்கச் சொன்னால் கூட இருந்து விடுவாள். ஆனால், சாப்பிடாமல் இருக்கச் சொன்னால், அது அவளால் முடியவே முடியாது.

சேர்ந்தார்போல் ஒரு மணி நேரம் கூட வாயில் எதையும் போடாமல் இருக்க மாட்டாள். அவர்களது கம்பெனிக்குச் செல்கையில் கூட, கையில் இரண்டு சாக்லேட் சகிதமாகத்தான் செல்வாள்.

அவளது சின்ன வயதிலேயே பாட்டி, தாத்தா பராமரிப்பில் வளர்ந்தவள். தாயும் தந்தையும், பணத்தின் பின்னால் ஓட, அவளை முற்றாக கவனித்துக் கொண்டது அவளது பாட்டி தெய்வநாயகி தான். பேத்தியின் நலன் நாடுவதும், அவள் வயிறு வாடாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே அவரது முழு வேலையாக இருக்க, அதை வஞ்சனை இல்லாமல் பார்த்தார்.

அதன் விளைவு, ஐந்தாம் வகுப்பு படிக்கையிலேயே நாற்பது கிலோ வெயிட்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியைப் போன்ற உடல் வளர்ச்சியோடு இருந்தாள் துளசி.

சின்ன வயதில்தான் அப்படி இருந்தாள், வளர்ந்து கல்லூரிக்குச் சென்றால் தன் உடல் பற்றிய அக்கறை வரும் எனப் பார்த்தால், ‘இஞ்சி இடுப்பழகி’ அனுஷ்கா போல், மாறினாளே தவிர, உடல் எடையைக் குறைக்க மறுத்தாள், மறந்தாள்.

அதுவே அவளைப் பெற்றவர்களுக்கு சிறு வருத்தத்தை அளித்தாலும், பெரிதாக அதைக் கண்டுகொள்ளவில்லை. சொல்லப்போனால் துளசிக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை தேடும் வரைக்குமே அவளது உடல் எடையைப் பற்றிய கவலை அவர்களுக்கு கொஞ்சமும் இருக்கவில்லை.

அவளது பாட்டி தெய்வநாயகியின் மரணத்துக்குப் பிறகுதான், அவளது தந்தை மேகனாதனும், தாய் பாரிஜாதமும் தங்கள் ஓட்டத்தை கொஞ்சமாக குறைத்துக் கொண்டார்கள். பணம் ஒன்றே குறிக்கோளாக ஓடியிருக்க, அடுத்த குழந்தை வேண்டும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவே இல்லை.

பெற்றவர்களின் இருப்பு அவளோடு இல்லை என்பதை அவள் உணராமல் இருக்க, ஒற்றை குழந்தை, அவள் கேட்டது, பார்த்தது என அனைத்தையும் வாங்கிக் கொடுத்து செல்லமாக வளர்த்தார்கள்.

இந்தியாவிலேயே பெயர் பெற்று விளங்கும் ‘துளசி’ ஊறுகாய், மசாலாபொடி கம்பெனியின் ஏக வாரிசு துளசி. மகள் இப்படி தன் உடம்பை கவனிக்காமல் இருக்கிறாளே என்ற கவலை பெற்றவர்களுக்கு கொஞ்சம் கூட இருக்கவில்லை.

தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் பெயரும், புகழும், பணமும் மகளுக்கு தேவையான அனைத்தையும் வஞ்சனை இல்லாமல் வழங்கும் என நினைத்தார்கள்.

ஆனால், அது அப்படி இல்லை என அவர்கள் உணரும் நேரமும் வந்தது. அதுதான் துளசியின் திருமணம். தங்கள் ஸ்டேட்டசுக்கு ஏற்ற மணமகனை அவர்கள் தேட, பணம் இருந்தாலும், அவர்களுக்கு, சற்று அழகும் தேவைப் பட்டது.

அதற்காக துளசி ஒன்றும் அழகில்லாதவள் எனச் சொல்லிவிட முடியாது. வட்ட முகம், நீள் விழிகள், அளவான நாசி, சற்று கீற்றான மேலுதடு, கொஞ்சமே கொஞ்சம் தடிமனான கீழ் உதடு என பார்ப்பவரை அவளது முகம் வசீகரிக்கவே செய்யும்.

அவளது உடலோடு, அவள் தலையை ஒப்பிடுகையில், சற்று கார்டூன் கேரக்டர் போலவும் இருப்பாள். உடல் மட்டும் சற்று அளவுக்கு அதிகமாக பெருத்திருக்க, ‘இவ கொஞ்சம் ஒல்லியா இருந்தால் சூப்பரா, அழகா இருப்பாள்’ என பார்ப்பவர் அனைவரையும் ஒரு நொடியாவது சிந்திக்க வைத்து விடுவாள்.

அவள் சாப்பாட்டு மேஜையின் முன்னால் அமர்ந்து உணவை ஒரு கை பார்த்துக் கொண்டிருக்க, அவளது பெற்றவர்கள் தங்கள் முன்னால் அமர்ந்திருந்த தரகரிடம் லட்சம் முறையாக தங்கள் மகளுக்கு வரன் என்ன ஆனது என கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

என்ன தரகரே.., போன முறையே பாப்பாவுக்கு சரியான வரனோட வர்றேன்னு சொல்லிட்டு போனீங்க. இப்போ வந்து அந்த இடத்துக்கு வேற ஜாதகம் பொருந்தி போய்டுச்சு, அதனால் அந்த வரன் கைவிட்டு போய்டுச்சுன்னு சொன்னால் என்ன அர்த்தம்? மேகநாதன் தரகரை வார்த்தையால் சாடிக் கொண்டிருந்தார்.

அவனோ, மடியில் இருந்த மடிக்கணினியை உயிர்ப்பித்தவாறே, சற்று ஒடுங்கிய சிரிப்போடு அவரை ஏறிட்டவன், சார், உங்களுக்குத் தெரியாதது இல்லை.., நம்ம பாப்பாவோட போட்டோவைப் பார்த்தாலே அவன் முழுதாக சொல்லாமல் இழுத்து நிறுத்த, அவனை கோபமாக இடையிட்டார் மேகநாதன்.

நீ வேற பேசுய்யா.. அவர் சாட,

தரகரின் பார்வையோ, மாரி, எனக்கு இன்னும் ரெண்டு பூரி வேணும் வாயில் அதக்கிய முழு பூரியோடு தன் வீட்டில் வேலை செய்யும் மாரியிடம் கேட்டுக் கொண்டிருந்த துளசியைத் தழுவி மீண்டது.

அவன் பார்வை சென்ற திக்கையும், அவன் மனதுக்குள் ஓடும் எண்ணத்தையும் படித்தவராக, மனதில் பொங்கிய கோபத்தை அடக்கும் வழி தெரியாமல், மேகநாதன் அவனிடம் பாய்ந்தார்.

யோவ், உன்கிட்டே இந்த விளக்கமெல்லாம் நான் எதுவும் கேக்கலை. என் பொண்ணுக்கு நான் கேட்ட வரன் என்ன ஆச்சு? எனக்கு அதுதான் தெரியணும். நீ சொல்ற கதையெல்லாம் கேக்க எனக்கு நேரம் இல்லை சுள்ளென விழுந்தார்.

பட்டென தன் பார்வையை துளசியின் மேலிருந்து திருப்பியவன், "நான் சொல்றேன்னு நீங்க தப்பா நினைக்க கூடாது. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம்னு சொல்வாங்க. நான் உங்களை பொய்யெல்லாம் சொல்லச் சொல்லலை.

ஒரே ஒரு சின்ன காம்ப்ரமைஸ், அதை செய்தால் போதும். மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன். எல்லாம் நமக்கு பிடிச்ச மாதிரியே அமையுமா..? அதனால்.. அவன் தயங்க,

சொல்ல வந்ததை சொல்லித் தொலை. இப்படி பாதி முழுங்கி முழுங்கி பேசாதே எரிச்சலானார்.

பையன் படிச்சிருக்கணும், சொந்தமா பிஸினஸ் பாக்கணும், வசதியா இருக்கணும், இப்படி எல்லாம் இருக்கணும்னு எதிர்பார்த்தால், அப்படி ஒரு வரன் அமைய நாள் ஆகும்தான். இல்ல, உடனே என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும்னா நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க அவன் சொல்ல,

அவனை, ‘நீயே சொல்’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தாரே தவிர வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.

அவருக்குத் தெரிகிறதே, எப்படியும் தன் மனதுக்குப் பிடிக்காத மாதிரிதான் எதையோ சொல்லப் போகிறான் என, எனவே அமைதியாக அவனை ஏறிட்டார்.

அவரது அமைதியே அவனுக்குப் போதுமானதாக இருக்க, "என் கைவசம் ஒரு மாப்பிள்ளை இருக்கான். கொஞ்சம் பாவப்பட்ட குடும்பம், பாக்க லட்சணமா இருப்பான். நல்ல படிப்பு, ஓரளவுக்கு நல்ல வேலை.., என்ன அவனோட தங்கச்சிக்கு உடனே கல்யாணம் பண்ண வேண்டிய சூழல்,

அதுக்கு மட்டும் நீங்க ஏதாச்சும் பாத்து செஞ்சீங்கன்னா போதும், மறு வார்த்தை பேசாமல் உங்க பொண்ணு கழுத்தில் தாலியைக் கட்டுவான். என்ன நான் சொல்றது? கண்களில் ஆசை மின்ன, தன் மடியில் இருந்த மடிக் கணினியை பார்வையால் மொய்த்தான்.

மேகநாதன் முகத்தில் சிந்தனைக் கோடுகள். இன்னும் ஒரு மாதத்தில் துளசிக்கு இருபத்தைந்து வயது முடியப் போகிறது. இன்றைக்கு வரைக்கும் ஒரு வரனும் தகையவில்லை. இன்னும் எத்தனை நாள், மாதம், வருடம் செல்லும் எனவும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

தரகரை பிடித்து கொஞ்சம் விரட்டினால், எப்படியும் தன் மகளுக்கு ஒரு வரனை கொண்டு வருவான் என்பதால், தரகனை பிடித்து விரட்டிக் கொண்டிருந்தார்.

அவ்வளவு நேரமாக அவர்களது பேச்சைக் கேட்டவாறு அமைதியாக இருந்த பாரிஜாதம், என்னங்க.., ஒரு நிமிஷம் உள்ளே வாங்க கணவனை அழைக்க, மனைவியைப் பார்த்தவாறு, மறுக்காமல் எழுந்து உள்ளே சென்றார்.

தொழிலில் பாரிஜாதம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாக இருக்கும் என்பதால், இதையும் சரியாக கணிப்பார் என நம்பினார்.

அறைக்குள் நுழைந்தவுடன், "என்னங்க, பையனுக்கு வசதி மட்டும்தானே இல்லை. மத்தபடி படிப்பு இருக்கே. வேலை கூட இனிமேல் அவசியம் இல்லை. நமக்குப் பிறகு நம்ம கம்பெனியை திறமையா எடுத்து செய்யும் ஒருத்தன்தான் நமக்கு மருமகனா வேண்டும்.

"சோ.., வசதியைப் பத்தி யோசிக்காமல், அவனுக்கு நம்ம பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முழு சம்மதமான்னு மட்டும் கேட்டுகோங்க. நம்மகிட்டே இல்லாத பணமா? என்னவோ அவன் தங்கைக்கு ஏதோ செய்யணும் அவ்வளவு தானே.

நம்மகிட்டே இல்லாத பணமா? தாராளமா அதைச் செய்யறோம், ஆனா, அவன் வீட்டோட மாப்பிள்ளையா வரணும்னு சொல்லிடலாம். எனக்கென்னவோ இது சரியா வரும்னு தோணுது பாரிஜாதம் சொல்ல, சற்றே சிந்தனை வயப்பட்டார்.

அவ்வளவு யோசித்தவர்கள், அப்படி அவன் தங்கைக்கு உடனே திருமணம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்று ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். அப்படி கேட்க மறந்ததுக்குக் காரணம் விதியின் சதியோ? வெளியே வந்தவர்கள் தங்கள் சம்மதத்தை சொல்ல, உடனடியாக அவனது புகைப்படத்தை அவர்களிடம் காட்டினான்.

இவன்தான் பையன்.., பேர் கதிர்.., எம்ஈ முடிச்சு, இஞ்சினியரிங் காலேஜ் லெச்சரா வேலை பாக்கறான். இருக்கறது வாடகை வீடுதான், ஒரே தங்கை, காலேஜ் முடிச்சுட்டு வீட்டில் இருக்கா. அவளுக்கு முதல்ல கல்யாணம் முடியணும், முடிஞ்ச உடனே அவன் கல்யாணம்தான் அவர்கள் முகங்களை ஆராய்ந்தவாறே விஷயங்களை சொல்லி முடித்தான்.

தரகனின் கண்களில் இந்த சம்பந்தத்தை முடித்துக் கொடுத்தால், மொத்தமாக கிடைக்கப்போகும் லட்சம் ரூபாய் பணம் கண்முன் நிழலாடியது. அந்த லட்சங்களை பெற்றுவிடத்தான் இவ்வளவுதூரம் நடையாக நடக்கிறான்.

இல்லையென்றால் அவன் துளசிக்கு வரன் பார்ப்பானா என்ன? இதுவே அவள் சாதாரண வீட்டுப் பெண்ணாக இருந்திருந்தால் என்றைக்கோ, ‘பொண்ணோட வெயிட்டை குறைக்கச் சொல்லுங்க, பிறகு பார்க்கலாம்’ என தயங்காமல் சொல்லியிருப்பான்.

பையன் லச்சணமா இருக்கான்.. பாரிஜாதத்தின் குரலில் கலைந்தவன் மடிக்கணினியை பார்த்தான்.

கதிர்.., நடிகன் ஸ்ரீகாந்த் சாயலில், அம்சமாக இருந்தான். அந்த முகவெட்டும், மெல்லிய தாடியும், ட்ரிம் செய்த மீசையும் ஒரு ஆணழகனாகவே அவர்கள் கண்களுக்கு காட்சி அளித்தான். துளசியின் பெற்றவர்களது பார்வை ஒருவரை ஒருவர் பார்வையால் தொட்டு மீண்டது.

சுமாராக இருந்த ஆண்மகன்களே தங்கள் மகளை திருமணம் செய்ய தயங்கியிருக்க, இவன் எப்படி தங்கள் மகளை திருமணம் செய்ய சம்மதிப்பான் என்பதே அவர்கள் எண்ணமாக இருந்தது.

நாங்க இவர்கிட்டே பேசணும்.. பாரிஜாதம் சொல்ல,

அதுக்கென்னம்மா, நாளைக்கே அதுக்கு ஏற்பாடு பண்றேன். என்னைப் பொறுத்த வரைக்கும், அவங்க பக்கம் எந்த மறுப்பும் இருக்காது. நீங்க என்னை நம்பலாம் தன் மடிக்கணினியில் இருந்த அந்த புகைப்படத்தை, அவர்கள் மொபைலுக்கு அனுப்பியவன், உறுதியாக சொன்னான்.

போட்டோவை பாப்பாகிட்டே காட்டுங்க, சந்தோஷப் படட்டும். இந்த கல்யாணத்தை நல்லபடியா முடிச்சு வைக்க வேண்டியது என் பொறுப்பு. அப்போ நான் உத்தரவு வாங்கிக்கறேன் தன் மடிக்கணினியை அணைத்துவிட்டு நிமிர்ந்தவன், அவர்கள் முகம் பார்த்தான்.

அவன் பார்வைக்கான பொருள் புரிய, உன் அக்கவுண்டுக்கு பணம் வந்துடும் நீ கிளம்பு. மாப்பிள்ளையை எப்போ பாக்கலாம்னு கேட்டு சொல்லு அவர் சொல்ல, வாயெல்லாம் பல்லாக கிளம்பிச் சென்றான்.

***

அதே நேரம், கதிரின் வீட்டில் நிலைமையே தலைகீழாக இருந்தது. கதிரின் தங்கை வண்ணநிலா ஒரு மூலையில் உக்காந்து அழுது கொண்டிருக்க, கதிரின் தாய் அவளை காலால் எட்டி உதைத்துக் கொண்டிருந்தார்.

தாய், தன் தங்கையை அடிப்பதைப் பார்த்தாலும், இருக்கையில் இருந்து கொஞ்சம் கூட அசையாமல் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். வீட்டில் நிலைமை களேபரமாக ஆகத் துவங்கியவுடனேயே, அவர்களது தந்தை சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார்.

அதையும் ஒரு வெறுப்புடனே பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, அவரை தடுக்கவோ, கேள்வி கேட்கவோ இல்லை.

ஏண்டி.., ஏண்டி.., இப்படி என் வயித்தில் வந்து பொறந்த? படிப்புதான் தலையில் ஏறலைன்னா, இது மட்டும் எப்படிடி..? கேட்டவர் அடங்க மாட்டாமல் மீண்டும் அடிக்க, கத்தி ஓலமிட வழியின்றி, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு தன் அழுகை கேட்டுவிடாதவாறு கையால் தன் வாயை அழுத்தமாக மூடிக் கொண்டாள்.

"காதலிச்சது தான் காதலிச்ச, ஒரு நல்லவனை காதலிக்க மாட்ட? இன்னும் அம்மா முந்தானையை புடிச்சுட்டு தொங்குறவனை காதலிச்சு, இப்போ, உன்னைக் கட்டணும்னா நூறு பவுன் போடணுமாம்.., கூசாமல் கேக்கறானே.

"நூறு பவுனுக்கு நான் எங்கே போவேன்? உன்னை அவன் காதலிக்கிறான்னு தெரிஞ்சப்போ அம்பது பவுனா இருந்தது, இப்போ.., நீ வயித்தில் வாங்கிட்டு இருக்கன்னு தெரிஞ்ச உடனே நூறு பவுன் ஆயிடுச்சு.

எல்லாம் உன்னாலதாண்டி.., இந்த வீட்டு படி தாண்டி அவனோட பழக உனக்கு எப்படிடி தைரியம் வந்தது? கேட்டவர், தன் ஆத்திரமும், கோபமும் ஆற்றாமையும் மீற, மீண்டுமாக அவளைத்தான் அடித்தார். தன் இயலாமையைக் கொட்ட அவருக்கு வேறு வழி தெரியவில்லை.

கதிருக்கு தங்கை ஒருவனை நம்பி கெட்டுபோய் நிற்கிறாள் என்பதே பெரும் இடியென்றால், அவளை தங்கள் வீட்டு மருமகளாக ஆக்க, நூறு பவுன் வேண்டும் என அவர்கள் கேட்ட உடனேயே இடிந்து போய் வீட்டுக்கு வந்து அமர்ந்தவன்தான். அவனால் நூறு பவுன் என்பதை கனவில் கூட எண்ணிப் பார்க்க முடியவில்லை.

இப்பொழுது தங்கம் விற்கும் விலைக்கு, இருபத்தைந்து பவுன் போடுவதே அவர்கள் சக்திக்கு அதிகம்தான். ஐம்பது பவுன் கேட்டபொழுது எப்படியாவது கடன் வாங்கியாவது சம்மாளித்துவிடலாம் என எண்ணியவனுக்கு, நூறு பவுன் என்பது குருவியின் தலையில் பனங்காயாகத் தெரிந்தது.

இந்த மாப்பிள்ளை இல்லையென்றால் வேறு ஒருவன், என தேட முடியாத நிலையில் தங்களை நிறுத்திய தங்கையின்மேல் ஆத்திரமாக வந்தது. ஆனால், தன் ஆத்திரத்தை காட்ட முடியாமல் மனதுக்குள் புழுங்கியவாறு அமர்ந்திருந்தான்.

‘அந்த நாய் கொஞ்சம் ஸ்டெடியா இருந்தால் பரவாயில்லை.., ஆனா?’ தங்கையின் காதலன் விக்னேஷை மனதுக்குள் வறுத்தெடுத்தவன் அவனை கொன்று போடும் வேகத்தை, தங்கள் சூழ்நிலை கருதி அடக்கினான்.

‘தப்பு செய்யும்போது அம்மாவை கேட்டுவிட்டா செய்தான்? இப்போ கல்யாணத்துக்கு மட்டும் தாயின் சம்மதம் வேண்டுமாம்... யாரிடம் கதை விடுகிறான்?’ அவனால் மனதுக்குள் மட்டுமே பல்லைக் கடிக்க முடிந்தது.

‘இங்கே தவறு அவன் பக்கம் மட்டும் இல்லையே, அவர்கள் பக்கமும் இருக்கிறதே...’ எண்ணியவன் ஆழமாக மூச்செடுத்து தன்னை நிதானத்துக்கு கொண்டுவர போராடினான்.

‘ஒரு பெண் எப்படி திருமணத்துக்கு முன், தான் உயிராய் மதிக்கும் கற்பை ஒருவனை நம்பி விட்டுக் கொடுக்கிறாள்? அதுவும் நம்பிக்கைக்கு சிறிதும் அருகதையற்ற ஒருவனிடம்?’ அவனுக்குப் புரியவே இல்லை.

அதே நேரம், வண்ணநிலாவும் அதைத்தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள். தன்னை தொடும் வரைக்கும், அவளையே சுற்றி வந்தவன், வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்தவன், உருகியவன், தன் தேவை தீர்ந்தவுடன், ஒரே நாளில் மாறிப்போன விந்தை?

‘நான் சரியானவனை தேர்ந்தெடுக்கவில்லையோ?’ காலம் கடந்து சிந்தித்தாள்.

தன்னை சந்திக்கையிலேயே ஒளிந்து மறைந்து சந்தித்தவன், தனிமையில் சந்திக்கும் நேரங்களில், தன்னை, தன் மனதை தீண்டுவதை விட, உடலைத் தீண்டுவதில் ஆர்வமாக இருந்தவன் வேறு எப்படி இருப்பான் என அவள் சிந்தித்திருக்க வேண்டுமோ?

திருமணம் பற்றிய பேச்சை எடுத்தாலே அவன் தவிர்த்த விதம், தன் கேள்வியை புறக்கணித்த விதம், அனைத்தும் இப்பொழுது நினைவுக்கு வந்ததே தவிர, அவனோடு பழகுகையில் ஒரு சதவீதம் கூட மனதை உறுத்தவில்லை.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சும்மா வீட்டில் இருக்கையில் பயனுள்ளதாக எதையும் செய்யாமல், கற்பனையில் வாழ்ந்ததன் பலன், அதை இன்று அனுபவித்துக் கொண்டிருந்தாள். கற்பனைக்கும் எதார்த்தத்துக்குமான வேறுபாட்டை உணர அவள் கொடுத்த விலை மிகவும் அதிகமே.

கோவிலுக்குச் செல்கையில், காதல் என சொல்லிக் கொண்டு, வாரம் தவறாமல் அவனும் பின்னால் சுற்ற, அதை தெய்வீகக் காதல் என எண்ணியது எவ்வளவு பெரிய பிழை? காலம் கடந்த ஞானம். அவனிடம் நாக்கைப் பிடுங்கும் அளவுக்கு கேள்வி கேட்கலாம் என்றால், அவனைக் கண்ணிலேயே காண முடியவில்லை.

வீட்டில் அமர்ந்து கதை புத்தகம் படிக்கும்பொழுதெல்லாம், தனக்கும் இப்படி ஒரு காதல், காதலன் வேண்டும் என ஏங்கியதும், அப்படி ஒரு காதலன் தனக்கு கிடைத்துவிட்டான் என அக மகிழ்ந்ததும், அவனோடு தன் உணர்வுகளைப் பகிர்ந்தபொழுது எதையோ வென்றுவிட்ட மமதை கிடைத்ததையும் எண்ணியவளுக்கு, இப்பொழுது தன்னையே பிடிக்கவில்லை.

கதை புத்தகமும், வாழ்க்கையும் வேறு என நிஜம் பொட்டில் அறைந்து உரைத்திருக்க, அந்த உண்மை இவ்வளவு கசக்கும் என அவள் என்ன கனவா கண்டாள்.

‘நான் சரியானவனை தெரிந்தெடுக்கவில்லையோ?’ லட்சம் முறையாக தனக்குள் கேட்டுக்கொண்ட வினா. இனிமேல் அதற்கான விடை கிடைத்தாலும் பலன் பூஜ்யம் எனத் தெரிந்தும் மனம் அதையே சுற்றி வந்தது.

ஒரு மனமோ, ‘பணம் நகை கேட்டாலும், என்னைக் கை கழுவாமல் திருமணம் செய்ய சம்மதித்தானே, அதுவே போதும்’ என சிந்திக்க, ‘அப்படியென்றால் அவன் செய்கையை நான் நியாயப்படுத்துகின்றேனா?’ ஒரு கட்டத்தில் அந்த நினைப்பு கூட அவளைச் சுட்டது.

அவனை மறந்து, தன் வயிற்றை கழுவிவிட்டு வேறு திருமணம் செய்துகொள்ள அவளது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. செத்துவிடலாம் என்றால், வயிற்றில் இருக்கும் குழந்தை அதற்கு அனுமதிக்கவில்லை.

விக்னேஷ் செய்த வேலையால் மனம் வெகுவாக ரணப்பட்டிருக்க, தாய் கொடுத்த அடிகளால் தேகம் ரணப்பட்டு கிடந்தது. தாய் அடிக்கும் அடிகள், மிதிகள் அனைத்தும் வலித்தாலும், அனைத்தையும் அமைதியாக ஏற்றுக் கொண்டு சுருண்டு விழுந்து கிடந்தாள்.

ஆனமட்டும் அவளை அடித்து ஓய்ந்த ரம்பை, தன் மகனிடம் வந்தார். மகளின்மேல் கட்டுக்கடங்காமல் கோபம் இருந்தாலும், அவளைக் கரையேற்ற வேண்டுமே என்ற கவலை அவருக்கும் மனதுக்குள் இருக்கும்தானே.

இம்புட்டு அடிக்கறேன்... வாயைத் திறந்து ஏதாவது பேசுறாளா பார்? அம்புட்டு அழுத்தம். இவ என் வயித்தில்தான் பொறந்தாளான்னே எனக்கு சந்தேகமா இருக்கு... புலம்பியவாறே மகனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தவர், அவன் முகம் பார்த்தார்.

கணவன் சரியாக இருந்தால் அவரிடம் பேசலாம்... அவரே வெட்டி நியாயம் பேசிக்கொண்டு ஊர் சுற்றித் திரிகையில், மகனிடம் தானே வந்து நிற்க வேண்டும். கதிர்... தயக்கமாக அழைக்க, விழிகளை அழுத்தமாக மூடி வைத்திருந்தவன் பட்டென திறந்தான்.

ஒரு வார்த்தை கூட பேசாமல் அழுத்தமாக தாயை ஏறிட, என்னப்பா முடிவு பண்ணியிருக்க? குரல் எழும்பாமல், கூனிக் குறுகி கேட்க, அவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

"என் தலையை அடமானம் வச்சுட்டு எவனாவது பணம் தருவான்னா அதைச் செய்யக் கூட நான் தயாரா இருக்கேன். ஆனா, என்னை வச்சுகிட்டு எவனும் பணம் தரத் தயாரா இல்லை. இப்போ இருக்கும் நிலையில், அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து ஒருத்தன் செருப்பை துடைக்கச் சொன்னா கூட செய்வேன்.

ஆனா.., அந்த வேலைக்கு கூட என்னை எவனும் எடுக்க மாட்டான். இப்போ சொல்லுங்க, நான் என்ன செய்யட்டும்? இருக்கும் கோபம் மொத்தமும் வெடித்து சிதற, உக்கிர மூர்த்தியாக, இயலாமையும், கோபமும் போட்டிபோட வெடித்தான்.

ரம்பை புடவைத் தலைப்பால் வாயை மூடியவர், மூலையில் சுருண்டிருந்த தன் மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, குலுங்கி அழுதார்.

அதே நேரம், கதிர்... வீட்டின் வெளியே அவனை அழைக்கும் குரல் கேட்கவே, எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே என வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தான். கிரில் கேட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தான் தரகர்.

என்னடா தரகா இந்தப் பக்கம்? போயிட்டு பிறகு வா வீட்டின் நிலைமை சரியில்லாமல் இருக்கவே அவனை அனுப்பிவிட முயன்றான்.

அட முதல்ல கிரில்லை தொற... நல்ல விஷயம் சொல்ல வந்தால் இப்படி வெளியிலேயே நிறுத்தி வைக்கறியே. உன் அம்மா வீட்டில் இல்லையா? கேட்டவனது பார்வை கதிரின் முதுகின் பின்னால் அலைந்தது.

அதற்குள் அவன் குரலைக் கேட்டு விட்டு முகத்தை தன் முந்தானையால் அழுத்தமாக துடைத்த ரம்பை, மகளை அறைக்குள் போகச் சொல்லிவிட்டு, வேகமாக கூடத்தைக் கடந்து வெளியே வந்தார்.

வாப்பா... அவனை அழைத்தவர், கதிர், கிரில்லை திறந்து விடு அவனிடம் சொல்லவே, புருவ மத்தியில் முடிச்சு விழ, தாய் சொன்னதைச் செய்தான்.

‘வீடு இருக்குற நிலைமையில் இந்த அம்மா எதுக்காக இவனை வரச் சொல்லியிருக்காங்க? ஒருவேளை வண்ணநிலாவுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கவா? அதற்கு வாய்ப்பே இல்லையே’ மனதுக்குள் எண்ணியவாறே அவனுக்கு விலகி வழி விட்டான்.

கூடத்துக்கு வந்த தரகன், அங்கே இருந்த பிளாஸ்டிக் சேரில் அமர, என்னப்பா, நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு? சற்று ஆர்வமாக கேட்டார்.

சொல்றேன்... அதைச் சொல்லத் தானே வந்திருக்கேன். உக்காரு கதிர்.. அவன் சொல்ல, ‘இவன் எதுக்கு இந்த நேரம் வந்திருக்கான்? இந்த அம்மா வேற தேவையில்லாத நேரத்தில் அவனை கூடத்தில் உக்கார வச்சு வேடிக்கை பாக்கறாங்க’ மனதில் எழுந்த கேள்வியோடு அவன் எதிரில் அமர்ந்தான்.

பார்வை தாயிடம் கேள்வி கேட்க, அவரோ, நான் தண்ணி எடுத்துட்டு வர்றேன் உள்ளே நழுவினார். அந்த தரகன் வேறு யாரும் இல்லை, கதிரின் பள்ளித் தோழனே. அவனது தந்தை செய்துவந்த தொழிலை, சற்று மேம்படுத்தி, இப்பொழுது அவன் செய்து வருகிறான்.

என்னடா இந்தப் பக்கம்? தங்கைக்கு வரன் கொண்டு வந்தியா? அதெல்லாம் எதுவும் வேண்டாம்... நீ முதல்ல கிளம்பு அவனை அனுப்பிவிட முயன்றான்.

உன் தங்கைக்கு இல்லடா... உனக்கு... அவன் சொல்ல, அதே நேரம், அங்கே பிரசன்னமானார் ரம்பை.

என்னடா உளர்ற? கதிர் கேட்க,

"உளறலை மச்சான், அம்மா.., நீங்க இவன்கிட்டே சொல்லவே இல்லையா? பெரிய புளியங்கொம்பையே உனக்கு வேண்டி புடிச்சுட்டு வந்திருக்கேன்டா.

அம்மா, நீங்க கேட்டதுக்கு குறையாத இடம். பொண்ணுக்கு கோடி, கோடியா கொட்டிக் கொடுக்க ரெடியா இருக்காங்க. நீங்க என்ன சொல்றீங்க? அவன் தாயிடம் கேட்க, தன் தாயை முறைத்தான் கதிர்.

அவங்க பொண்ணுக்கு செய்யிறது இருக்கட்டும், எங்களுக்கு கையில் எவ்வளவு தருவாங்க? அதை பேசிட்டியா? ரம்பை திருப்பி கேட்க, அவர்கள் புரியாத பாஷையில் பேசுவதுபோல் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.

அதைப் பேசாமல் இருப்பேனா? பொண்ணு யார்ன்னு நீங்க கேக்கவே இல்லையே? சொன்னால் அப்படியே அசந்து போய்டுவீங்க அவன் சிலாகிக்க கடுப்பானான்.

இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கும் கொஞ்சம் சொல்றீங்களா? இடை புகுந்தான் கதிர்.

அம்மா, மாப்பிள்ளைக்கு அவசரத்தைப் பாத்தீங்களா? தரகன் கண்ணன் சொல்ல, அவனை முறைத்தான். இவ்வளவிலும் ரம்பை மகனை நேருக்கு நேர் பார்க்க மறுத்தார்.

டேய், எட்டி மிதிக்க முன்னாடி என்ன விஷயம்னு சொல்லிடு. இல்ல, உன் பொட்டியெல்லாம் தூக்கி வெளியே எறிஞ்சிடுவேன் பயங்கர கடுப்பானான்.

"அம்மா, நீங்க இன்னும் இவன்கிட்டே விஷயத்தை சொல்லவே இல்லையா? டேய் மச்சான், அதிஷ்டம் எல்லாருக்கும் கதவைத்தான் தட்டும்னு சொல்றாங்க, உனக்கு கூரையை பிச்சுகிட்டே கொட்டுது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோ.

இரு, உனக்கு இப்படி சொன்னால் புரியாது, காட்டறேன் தன் அலைபேசியை இயக்கி, அதில் இருந்த துளசியின் புகைப்படத்தை அவன் முகத்துக்கு நேராக நீட்டினான்.

அதில் பார்வையை பதித்தவன், யாருடா இந்த ரோட் ரோலர்? அவன் கேட்க, மனதுக்குள் எழுந்த அதிர்வை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டான் தரகன் கண்ணன்.

மாப்பிள்ளைக்கு ரொம்ப குசும்பு. அம்மா, நீங்க பாருங்க உங்க வீட்டு மருமகளை. இது யார் தெரியுமா? நீங்க ஆசையா வாங்கி சாப்பிடுவீங்களே துளசி ஊறுகாய், அதோட முதலாளியம்மா... இப்போ சொல்லுங்க, அதிஷ்டம் கூரையைப் பிச்சுட்டு கொட்டுதா இல்லையா? அவன் சொல்லிக்கொண்டே போக, கதிர் தன் இருக்கையில் இருந்து பட்டென எழுந்து கொண்டான்.

நான் வெளியே போன்னு சொல்ல முன்னாடி நீயே போய்ட்டா உனக்கு நல்லது சேரை காலால் எட்டி உதைத்தவன் உரைக்க, கண்ணன் எழுந்து கொண்டான்.

அம்மா, நீங்க அவன்கிட்டே சொல்லி புரிய வைங்க. நான் பிறகு வர்றேன் அவன் சென்றுவிட, தாயை விரக்தியாக ஏறிட்டான்.

ஏம்மா, பொண்ணு வாழ்க்கைக்கு வேண்டி, என்னை விக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களா? விக்க முன்னாடி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமேம்மா... உரைத்தவன் வீட்டை விட்டு வெளியேற, சிலைபோல் நின்றிருந்தார் ரம்பை.

2

ஆர்ப்பரித்துக் கொட்டும் கடல் அலையை கொஞ்சம் கூட ரசனையே இல்லாமல் வெறித்துக் கொண்டிருந்தான் கதிர். அதை ரசிக்கும் மனநிலையில் நிச்சயம் அவன் இல்லை. கடலின் அலையை விட, மனதில் அதிக அலை ஆர்ப்பரித்துக் கொட்டிக் கொண்டிருந்தது. இதற்கு முன்னர் அங்கே வருகையில் எல்லாம் மனம் நிம்மதியடையும்.

இன்று அதற்கு மாறாக, மனம் அமைதியடைய மறுத்து முரண்டியது. ‘இந்த உலகத்தில் யாருக்குமே இப்படிப்பட்ட வாழ்க்கை அமையக் கூடாது. நான் மட்டும் என்ன சாபம் வாங்கி வந்தேன்?’ மனதுக்குள் கோபம் பெருகியது.

மனதுக்குள் காதல் இல்லையென்றால், அமையப்போகும் இந்த வாழ்க்கை எப்படி இருந்திருக்குமோ? ஆனால், மனதுக்குள் ஒருத்தியை வைத்துக் கொண்டு, அவளே தன் வாழ்க்கைத் துணை, எதிர்காலம் என கனவுகளை வளர்த்த பிறகு, அது கருகும் வலி.

அதையும் தன் கையாலேயே வெட்டி எறியும் நிலை... என்னதான் முயன்றாலும் மனம் துவண்டு போவதை தடுக்க முடியவில்லை.

தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனைமரத்தில் நெறி கெட்டிய கதையாக, யாரோ செய்த தவறுக்கு தன் காதல் பலியாகும் கொடுமை, இமைகளை அழுத்தமாக மூடி அதன் வலியை அனுபவித்தான். ‘அவளுக்கு என்ன பதில் சொல்வது?’ கோடி முறையாக மனதில் எழுந்த வினாவுக்கு இந்த நொடி வரைக்கும் விடை இல்லை.

தன் தங்கையின் திருமணத்துக்காக, அதை நடத்துவதற்காக, தன் தலையையே அடமானம் வைக்க தயாராக இருக்கிறேன் என சொன்னவன்தான். ஆனால், வாய் வார்த்தையாக சொன்னபொழுது சுலபமாக இருந்த விஷயம், நடைமுறைக்கு வருகையில், இதயத்தை வெட்டி வெளியே வீசியதைபோல் வலிக்கிறதே.

ஒரு வேளை அப்படி ஒன்று நடக்க வாய்ப்பே இல்லை என்பதால் சுலபமாக சொல்லிவிட்டானோ என்னவோ.

முதலில் தன் தாய் சொன்ன விஷயத்தைக் கேட்டு வானுக்கும் பூமிக்கும் குதித்தான்தான். ஆனால், அவனுக்கு முன்பாக இரு வழிகள் இருந்தால் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். இருப்பதோ ஒரே வழி, அதன் சாவியும் அவன் கரத்தில்,

அப்படி இருக்கையில், சாவியை கையில் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? அதுவும் தாமதிக்கும் அளவுக்கு அவனிடம் நேரம் இருந்தால் கூட பரவாயில்லை. அவன் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தங்கையின் நிலை மோசமாகிக் கொண்டிருக்க, உடனே முடிவெடுக்கும் நிலையில் இருந்தான்.

பொதுவாக, கடவுள் ஒரு வழியை அடைத்தால் மறு வழியை திறப்பானாம், நமக்கெல்லாம் ரூமுக்குள் நம்மளை வச்சு பூட்டிட்டு சாவியை தொலைச்சுட்டான் போல, விரக்தியாக எண்ணிக் கொண்டான்.

தாயிடம் எத்தனை சண்டைகள், போராட்டங்கள், அத்தனைக்கு நடுவிலும் அவனுக்கு ஒரு உண்மை புரிந்தே இருந்தது, அது, தன் முன்னால் இருக்கும் அந்த வழியைத் தவிர தனக்கு வேறு ஆப்ஷனே இல்லை என்பது தெளிவாக புரிந்தது.

துளசியை எண்ணினாலே ஒருவித அருவருப்பு எழுவதை தடுக்கவே முடியவில்லை. அவளுக்கு அருகில் தான் இருந்தால், அவளுக்கு தம்பிபோல் இருப்போம் எனத் தோன்ற, கழுத்து வரைக்கும் கசந்து வழிந்தது.

‘ச்சேய்.., தார் டின் மாதிரி மூஞ்சியும், பேரல் மாதிரி உடம்பும்..’ எண்ணுகையிலேயே குமட்டியது. இவ்வளவு வெறுப்புடன் அவளை திருமணம் செய்தே ஆக வேண்டுமா? மனசாட்சி கேட்க, அதற்கு பதில் கொடுக்கும் அளவுக்கு அவன் நல்லவனா என்ன?

அவ்வளவு பிடித்தமில்லாமல் இருப்பவன், ரோஷக்காரனாக இருந்திருந்தால், தன்மானம் உள்ளவனாக இருந்திருந்தால், அவளை திருமணம் செய்ய முடியாது என பிடிவாதமாக மறுத்திருப்பான். அல்லது எந்த நிமிடம் அவளை திருமணம் செய்யலாம் என முடிவெடுத்தானோ,

அந்த நிமிடமே, அவள்மேல் உண்மையான நேசம் கொள்ள துவங்கியிருக்க வேண்டும். இல்லையா, அதற்கு சிறிதளவாவது முயற்சி செய்திருக்க வேண்டும். இவன் மனம் முழுவதும் ஒருவித வெறுப்பையே வளர்த்துக் கொண்டான்.

என்னவோ அவளாகவே வந்து பிடிவாதமாக அவனை திருமணம் செய்ய ஒற்றை காலில் நிற்பதுபோல் இருந்தது அவனது செய்கை. ‘இவ இப்படி இல்லையென்றால் என்னையெல்லாம் சீண்டியிருக்க மாட்டார்கள் தானே’ அவன் எண்ணம் இப்படித்தான் போனது.

‘ஆளும் அவ மூஞ்சியும்’ அவள் முகம் கண்ணுக்குள் மின்னி மறைய, கைநிறைய கொள்ளாத பர்க்கரோடு காட்சியளிக்க, அவனை அறியாமலே ஒரு பெருமூச்சு எழுந்தது.

‘சரியான தீனிக்கு பொறந்தவளா இருப்பா போல. இவ திங்கவே அவ அப்பன், ஆத்தா கம்பெனி நடத்தறாங்க போல’ கசப்பாக எண்ணிக் கொண்டான்.

‘இன்னும் சில நொடிகளில் மானசா வந்துவிடுவாள்... அவளுக்கு என்ன பதில் சொல்வது?’ தன் காதலியை எண்ணி தன் சிந்தையை துளசியின் மேல் இருந்து திருப்பிக் கொண்டான்.துளசியை நினைக்கக் கூட அவனுக்குப் பிடிக்கவில்லை.

அதே நேரம், என்ன கதிர், என்னைக்கும் என்னை காக்க வச்சுட்டுதான் வருவீங்க. இன்னைக்கு எனக்கு முன்னாடியே வந்திருக்கீங்க கேட்டவாறே அவன் அருகில் அமர்ந்தாள் மானசா.

உலக அதிசயமா சீக்கிரம் வந்துட்டு பெருமூச்சு வேற விடறீங்க? கேலியாக கேட்டவள் அவன் தோளை தன் தோளால் இடிக்க, வெறுமையாக அவளை ஏறிட்டான்.

என்னப்பா அப்படி பாக்கற? அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவன் மூளைக்குள் எதுவோ ஓடுவதை உணர்ந்து கொண்டாள்.

அவன் மனமோ, மானசாவையும், துளசியையும் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. துளசி ஒல்லிபெல்லி அனுஷ்காவாக தெரிந்தாள் என்றால், மானசா நடிகை லைலா போல் இருந்தாள். நிஜத்தில் அப்படி இருந்தாளா எனத் தெரியாது, ஆனால், அப்போதைக்கு அவன் பார்வைக்கு அப்படிதான் இருந்தாள்.

கதிர், நான் கேட்டுட்டே இருக்கேன், நீங்க ஏன் இப்படி வச்சகண் வாங்காமல் என்னைப் பார்த்தால் என்ன அர்த்தம்? கன்னங்களில் மெல்லியதாக சூடேற, மெதுவாக அவன் முகத்துக்கு நேராக கையை ஆட்டினாள்.

ரொம்ப அழகா இருக்க மானு.. அவன் அவளை அழைக்கும் செல்லப் பெயர், இறுதி முறையாக என எண்ணிக் கொண்டு சிறு ஆசையாகவே அவள் பெயரைச் சொன்னான்.

தினமும்தான் என்னைப் பாக்கறீங்க, இன்னைக்கு என்ன புதுசா? காதலன் தன்னைப் புகழ்கையில் பெண்ணவளுக்கு பிடிக்காமல் போகுமா? போலியாகவே தன் மறுப்பை வெளியிட்டாலும், முகத்தில் ஒரு பெருமித புன்னகை.

அதைப் பார்த்தவன், ‘இங்கே எதுவும் வேண்டாம், யாரும் எப்படியும் போகட்டும் என, இவளை அழைத்துக் கொண்டு எங்காவது சென்று விடுவோமா?’ ஒரு நொடி சிந்தித்தான்.

அடுத்த நொடியே, அப்படி எண்ணியதற்காக வெட்கப் பட்டான். சிறு வயது முதலே, எங்களது எதிர்காலம் நீதான் எனச் சொல்லி வளர்த்த தாய். உன் தங்கையை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட தாய், ஊதாரி, பொறுப்பற்ற தந்தையை நம்பி அவர்களை விட்டுச் செல்வதா?

‘அவ்வளவு சுயநலவாதியா நான்? எப்பொழுது இப்படி மாறிப் போனேன்? இப்பொழுது நான் இங்கிருந்து போய்விட்டால், என் தங்கையின் நிலை?’ அதை எண்ணியவன், நெகிழும் தன் மனதை அடக்க, மானசாவின் முகத்தில் இருந்து பார்வையைத் திருப்பி கடலை வெறித்தான்.

அவன் முகத்தில் இருக்கும் குழப்பத்தைப் பார்த்தவள், என்ன கதிர், காலேஜில் ஏதாவது பிரச்சனையா? ஏன் முகமே சரியில்லை? வழக்கமா நீங்க இப்படி கிடையாதே அவன் தோளைத் தொட்டு உலுக்கினாள்.

ம்ச்... காலேஜில் எந்த பிரச்சனையும் இல்லை அவன் அவள் கரத்தை மெதுவாக விலக்க,

காலேஜில் பிரச்சனை இல்லன்னா, என்னப்பா... தங்கச்சிக்கு அலையன்ஸ் பாக்குறாங்கன்னு சொன்னீங்களே, அது எதுவும் செட் ஆகலையா? தங்கள் வீட்டு பிரச்னையை அவளிடம் கூட முழுதாக அவன் சொல்லியிருக்கவில்லை. எனவே அவளுக்குத் தெரியாது என்பதால் கேட்டாள்.

சட்டென மனதை ஒரு அதிர்வு தாக்க, அவள் முகத்தை திரும்பி பார்த்தவன், வரன் செட் ஆயிடுச்சு... ஆனா... அவன் இழுக்க,

"என்ன நகை, பணம் அதிகமா எதிர்பாக்கறாங்களா? முன்ன பின்ன ஆனாலும் முடிச்சுடுங்க, கடன் வந்தாலும் பரவாயில்லை, நான் உங்களுக்கு துணையா இருக்கேன். நம்ம கல்யாணத்துக்கு பிறகு எங்க வீட்டில் போடும் நகையெல்லாம் வைத்து கடனை அடைக்கலாம்.

அதுக்காக நீங்க மூட் ஃஆப் ஆகாதீங்க. ஒரு கல்யாணத்தை நடத்துவது என்பது சின்ன விஷயமா? அதில் சில பல பிரச்சனைகள் வரத்தான் செய்யும் தன் பிரச்சனைக்கு தீர்வாக, ஏதாவது ஆறுதல் சொல்வாளா என்றுதானே அவளைத் தேடி வந்திருக்கிறான் என்று நினைத்து ஆறுதல் சொன்னாள்.

அவள் சொல்லச் சொல்ல, அவனுக்குத்தான் தவிப்பாக இருந்தது. அவளிடம் பிரிவைச் சொல்ல வந்தால், அவள் தனக்கு ஆறுதல் சொல்கிறாளே, இவளிடம், இவள் முகத்துக்கு நேராக எப்படி உண்மையைச் சொல்வேன்?

மனம் தவித்தவன், மானு... கொஞ்சம் அலையில் அப்படியே நடக்கலாமா? கேட்டவன், மணலில் இருந்து எழுந்து, தன் பின்னால் ஒட்டியிருக்கும் மணலை கைகளால் தட்டி விட்டுக் கொண்டான்.

எனக்கு ஹெல்ப் பண்ணுப்பா அவள் அமர்ந்தவாறே கை நீட்ட அவளுக்கு கை கொடுத்து எழுப்பி விட்டான்.

என்ன இது? இன்னைக்கு எல்லாமே புதுசா இருக்கு. தண்ணியில் கால் வைக்கலாம்னு நான் கூப்பிட்டா கூட வர மாட்டீங்க. இன்னைக்கு நீங்களே கூப்பிடறீங்க ஆச்சரியமாக கேட்டவள் அவனோடு நடந்தாள்.

கடல் ஓரத்தில், அலைகள் அவர்கள் காலை மெல்லியதாக நனைக்கும் அளவுக்கு கரையில் நடக்கத் துவங்கினான். பேண்டை கொஞ்சமாக மடக்கி விட்டவன், கடல்நீரின் குளுமை மனதின் கொதிப்பை அடக்குமா? என்ற எதிர்பார்ப்பில் மெதுவாக நடந்தான்.

சில நிமிடங்கள் அமைதியில் கழிய,

Enjoying the preview?
Page 1 of 1