Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasaiyil Ore Kaditham
Aasaiyil Ore Kaditham
Aasaiyil Ore Kaditham
Ebook248 pages2 hours

Aasaiyil Ore Kaditham

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

தன் தோழி தாமரையின் திருமணத்திற்கு செல்லும் மித்ரா திடீர் மணமகளாக... அவளை திருமணம் செய்து கொள்ளும் அனிருத்தன்.

எதற்குமே ஆசைப்படாத மித்ரா, அவனை விட்டு விலகிச் செல்லவும் சுலபமாக முடிவெடுக்க, அதற்கு அவன் சம்மதித்தானா?

அவளது பெற்றவளை கண்டு கொள்ளும் இடம், அக்கா நிஷாவின் வாழ்க்கைக்கு அவள் உதவும் விதம்...

அனைத்தையும் எவ்வாறு சமன்செய்து வாழ்க்கையை காத்துக் கொண்டாள் என தெரிய தொடர்ந்து படியுங்கள்.

Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580109204775
Aasaiyil Ore Kaditham

Read more from Infaa Alocious

Related authors

Related to Aasaiyil Ore Kaditham

Related ebooks

Reviews for Aasaiyil Ore Kaditham

Rating: 4.1875 out of 5 stars
4/5

16 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Beautiful love. Very refreshing to read. Interesting story

    1 person found this helpful

Book preview

Aasaiyil Ore Kaditham - Infaa Alocious

http://www.pustaka.co.in

ஆசையில் ஓர் கடிதம்

Aasaiyil Ore Kaditham

Author:

இன்பா அலோசியஸ்

Infaa Alocious

For more books

http://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

1

லண்டன் மாநகரின் அந்த குளுமையை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள் ஜீவிதா. பெரும் ஆசையாக, பரவசமாக, அந்த உல்லன் உடைகளுக்குள், ஜெர்க்கினுக்குள் புகுந்துகொண்டு அந்த குளுமையை அனுபவிக்க அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்.

இந்த லண்டன் மாநகருக்கு வந்து முழுதாக ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் என்னவோ நேற்றுதான் வந்தாற்போல் ஒரு நினைப்பு. அதுவும் அந்த ஏகாந்த வேளையில், தனிமையில் தன்னை மறந்து நிற்க அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்.

இந்த இதத்தை குளுமையை இன்னும் சில நாட்களில் இழக்கப் போகிறோம் என நினைக்கும் பொழுதே கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஆனால், அந்த வருத்தத்தையும் மீறி, தன் சொந்த நாட்டுக்கு சென்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் போகின்றோம் என நினைக்கையிலேயே அவள் இதழ்களில் ஒரு அழகான புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

ஆயிரம்தான் இருந்தாலும் சொந்த நாட்டில், தாய் மண்ணில், தாய்மொழியை பேசும் அந்த ஆத்ம திருப்தி இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், கோடி கோடியாக சம்பாதித்தாலும் கிடைக்காதே.

நுனி நாக்கு ஆங்கிலமும், நாகரீக வாழ்க்கையும், நாசூக்கு பாணியும், யாரிடமும் சட்டென ஒட்டிக் கொள்ள முடியாமல் சற்று எட்டவே இருந்து பழக வேண்டிய நிலையும், மனதுக்குள் நினைப்பதை எல்லாம் சரியான வார்த்தை தெரிவுகளோடு வெளியே கொட்ட முடியாத வருத்தமும் என அவளுக்கு மனதுக்குள் ஆயிரம் குறைகள் இருக்கிறதுதான்.

ஆனால், அதையெல்லாம் மீறி, தன் காலில் தனியாக நிற்க முடியும் என்ற தைரியத்தையும், இந்த உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் தன்னால் திடனாக சம்மாளிக்க முடியும் என்ற பெரும் தன்னம்பிக்கையையும் விதைத்த அவளது இந்த படிப்பின்மேல், வேலையின்மேல் அலாதி காதல் என்றே சொல்லலாம்.

தன் பெயருக்குப் பின்னால் இருக்கும் அந்த M.B.B.S என்ற அந்த நான்கு எழுத்துக்களுக்கு வேண்டி அவர்களது குடும்பம் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பெண்ணான அவளுக்கு M.B.B.S  என்பது மிகப்பெரும் கனவுதான்.

ஒரு சாதாரண கவர்மென்ட் கிளார்க்கான அவளது தந்தைக்கு தன் மகளை ஒரு பிஎஸ்சி படிக்க வைத்து, ஒருவனின் கரத்தில் பிடித்து கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருக்க, மகளோ மருத்துவர் ஆகவேண்டும் என சொன்னதை எண்ணி சற்று கலங்கித்தான் போனார்.

மெரிட் சீட் என்பதால் பீஸ் குறைவாக இருந்தாலும், அதன் பிறகு.., புத்தகங்கள், பரீட்சை ஃபீஸ், அடிஷனல் செலவுகள் என அனைத்தையும் நினைக்கையில் அவருக்கு தலை சுற்றிப் போனது. அது மட்டுமா அவள் படித்து முடித்த பிறகு,  அவளுக்கு சமமான வரனை தேடுவது, அதற்கு இணையான சீர் கொடுப்பது என அடுக்கடுக்காக எண்ணுகையிலேயே பெரும் பீதியாக உணர்ந்தார்.

அவர்கள் வீட்டில் எந்த முடிவாக இருந்தாலும் அனைவரும் சேர்ந்தே எடுப்பார்கள் என்பதால், வீட்டில் இதைப் பற்றிய பேச்சு எழ, அவளோ கொஞ்சம் கூட தயங்காமல், அவர்கள் பார்க்கும் எந்த வரனுக்கும் சம்மதம் சொல்வேன் என உரைத்தவள், எந்த காலத்திலும் மருத்துவம் படித்தவன்தான் மணாளனாக வேண்டும் என கேட்க மாட்டேன் என உறுதி கொடுத்த பிறகே சற்று நிம்மதியாக மூச்சு விட்டார்கள்.

அன்று தனிமையில் அவளது அண்ணன் சரவணன் பேசியது இன்றும் அவளுக்கு நினைவில் இருக்கிறது.

"ஜீவி.., உன் ஆசைக்கு குறுக்கே நிற்க வேண்டாம்னு தான் அம்மாவும் அப்பாவும், நானும் இதற்கு சம்மதிக்கிறோம். எந்த காலத்திலும் எங்க நம்பிக்கைக்கு துரோகம் மட்டும் பண்ணிட கூடாது. கல்லூரி காலத்தை ரொம்ப சந்தோஷமா அனுபவி. அதே நேரம்.., மனசை அலைபாய விடாதே.

சப்போஸ்.., அப்படி ஏதாவது இருந்தால், தயவு செய்து இந்த அண்ணாகிட்டே மட்டுமாவது உண்மையை சொல்லிடணும் ஒரு அண்ணனாக அவனது பயம் புரியவே செய்தது.

நீங்க பார்த்து சொல்லும் மாப்பிள்ளைக்கு நான் மறுக்காமல் சம்மதம் சொல்லுவேண்ணா.. அவள் உரைத்த பிறகே சற்று நிம்மதியானான். ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கே உரிய பயம் அது. சில நடைமுறை சிக்கல்களை அவர்களால் எந்த நேரத்திலும் யோசிக்காமல் இருக்க முடியாதே.

கூடவே.., வீட்டின் நிலையும் புரிய, தான் படித்து முடித்த பிறகு, அவர்கள் செலவழித்த தொகையை, அவர்களுக்கு சம்பாதித்து கொடுத்த பிறகே தன் திருமணத்தை பற்றி யோசிக்க வேண்டும் என முடிவெடுத்தாள்.

அவளது கனவை நனவாக்க அவளது மொத்த குடும்பமும் அவளுக்குப் பின்னால் நின்றதே, அதை எப்படி அவளால் மறக்க முடியும்? தந்தையின் மொத்த சேமிப்பு, தாயின் நகைகள், அண்ணனின் எம்எஸ் படிப்பு என அனைத்தையும் தியாகம் செய்து கிடைத்த பட்டம் ஆயிற்றே.

பட்டத்துக்கு வேண்டி மட்டுமா? அந்த வேலையின்மேல், சேவையின்மேல் இருந்த அசைக்க முடியாத தாகம், அவளை முனைப்போடு செயல்படத் தூண்டியது. இரவு பகல் பாராமல் அயராது படித்து அதற்காகவே பாடுபட்டாள்.

'அம்மாடி, படித்தது போதும், கொஞ்ச நேரம் தூங்கு' என தாய் தந்தை, தனையனை எல்லாம் கெஞ்ச விட்டிருக்கிறாள்.

அவளுடன் சேர்ந்து அவர்களும் உறக்கம் தொலைத்த நாட்கள் எத்தனையோ உண்டு. டீ போட்டு கொடுக்க, அவளது களைப்பை போக்க என அவர்கள் செய்த தியாகங்களும் எத்தனையோ உண்டு. அதையெல்லாம் மனதில் வைத்து தானே அந்த M.B.B.S  பட்டத்தை அவுட்ஸ்ட்டேன்டிங் மாணவி என்ற பெயரோடு வாங்கினாள்.

அவளது திறமையைப் பார்த்து அவளது பேராசிரியர்கள் எல்லாம் மேல் படிப்பு படிக்கச் சொன்ன பொழுது கூட, கழுத்தளவுக்கு ஆசை இருந்த பிறகும், தன் பெற்றவர்களுக்கு இதற்குமேல் எந்த கஷ்ட்டத்தையும் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே வேலைக்குச் செல்ல முடிவெடுத்தாள்.

அதே நேரம் வீட்டின் நிலையும் அவளுக்குப் புரியவே, ஆன்லைனில் அவளாகவே விண்ணப்பித்து லண்டன் மருத்துவமனைக்கு வேலைக்கு சேர்ந்தாள். அவளை வெளிநாடு அனுப்ப அவளது பெற்றவர்கள் எவ்வளவோ யோசித்தார்கள்.

ஆனால், அவர்களை எல்லாம் சம்மாளித்து, அவள் அதை ஒற்றையாகச் செய்யவில்லை, அவளது உடன்பிறவா அண்ணன் பாஸ்கரோடு இணைந்து அதை சாதித்திருந்தாள். சாதித்தாள் என அவ்வளவு சுலபமாகவெல்லாம் சொல்லிவிட முடியாது.

போராடியே அதை சாதித்தாள் என்றே சொல்ல வேண்டும். லண்டனில் வேலை செய்தால் மாதம் நான்குலட்சம் சம்பளம் என்ற அந்த வார்த்தைகள் கூட அவர்களை கொஞ்சமும் அசைக்கவில்லை.

மாறாக, 'வயசுப் பொண்ணை தனியா வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு நான் எப்படி நிம்மதியாக இருப்பேன்? உனக்கு இப்பொழுதே ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து திருமணம் செய்து வைத்து விடுகிறேன். திருமணம் செய்து கொண்டு நீ எங்கே வேண்டுமானாலும் போ' என அவளது தாயார் ஒரே பிடியாக நின்றாரே.

அம்மா, உங்க பொண்ணை நீங்க நம்பவில்லையா? நம் வீட்டு நிலை தெரிந்த பிறகும், உங்கள் நம்பிக்கையை எல்லாம் பொய்யாக்கிவிட்டு நான் எதையாவது செய்து விடுவேன் என நீங்கள் எண்ணுகிறீர்களா? அவள் வருத்தமாக கேட்க, அவளது தாய் அசைந்தே கொடுக்கவில்லை.

என் பொண்ணை நான் நம்புவேன், ஆனா அவளோட வயசு, சூழ்நிலை, இதையெல்லாம் நம்ப நான் தயாராக இல்லை அப்படி அடித்துப் பேசினார்.

அப்பா, நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்கப்பா. இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நிறைய அனுபவம் கிடைக்கும். தன்னம்பிக்கையாக சொந்த காலில் நிற்க ஒரு பயிற்சியாக இருக்கும் தாயிடம் ஒரு அளவுக்கு மேலே பேச முடியாமல், தனக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் பெற்றவரிடம் கெஞ்சினாள்.

இந்த அப்பாவுக்கு உன்னை திருமணம் செய்து கொடுக்க திராணி இல்லை என்பதால், பணம் சம்பாதிக்க வேண்டி, இப்படி ஒரு முடிவுக்கு வந்தாயா ஜீவி? அவளது தந்தை வருத்தமாக கேட்க விக்கித்துப் போனாள்.

அவளுக்கு தன் வீட்டின் நிலை தெளிவாகத் தெரியும். நிச்சயம் அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டார்கள் என்றால், தந்தை தனது ஒரே அரசாங்க வேலையையும் விருப்ப ஓய்வுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு பணம் பெற கொஞ்சம் கூட தயங்கவே மாட்டார்.

அதேபோல் தன் அண்ணனும், இதுவரை போட்டிருக்கும் பெர்சனல் லோனுக்கு மேலே, யாரிடமாவது வட்டிக்கு கடன் வாங்கக் கூட அவன் தயங்கவே மாட்டான். ஆனால், அவளால் அப்படி சுயநலமாக யோசிக்க முடியுமா என்ன?

தன் கனவுகள் அனைத்தும் நனவாக நின்றவர்களுக்கு வாழ்நாள் முழுமைக்குமான சுமையை அவளால் கொடுக்க முடியுமா? அவ்வளவு சுயனலமானவளா அவள்?

"அப்பா, என்னப்பா நீங்களே இப்படிப் பேசறீங்க? என் அப்பாவைப் பற்றி நானே அவ்வளவு கீழாக நினைப்பேனா? என்னை வெற்றிப் படியில் ஏற்றி விட்டு அழகு பார்க்கும் என் அப்பாவுக்கு, என்னால் முடிந்த ஒரு சின்ன செய்கையை செய்ய நினைப்பது அவ்வளவு தவறாப்பா?

"இதுவே அண்ணன் இப்பொழுது வெளிநாடு செல்கிறேன் என்றால் உடனே சம்மதித்து இருப்பீர்கள் தானே. அப்படியென்றால் உங்களுக்கும் மகன் என்றால் ஒரு விதமாகவும், மகள் என்றால் ஒரு விதமாகவும் நடத்த வேண்டும் என்ற நினைப்புதான் இருக்கிறதா?

அப்படியென்றால் சரி, உங்களுக்கு என்ன விருப்பமோ அதையே செய்யுங்கள். ஆனால் என்ன ஆனாலும், என் திருமணத்துக்கு நான் உடனேயே சம்மதிக்கப் போவதில்லை. ஐந்து வருடங்கள் என்பது பத்து வருடங்கள் ஆனாலும், நான் உங்கள் பொண்ணாகவே உங்களோடு மட்டும்தான் இருப்பேன் அவள் முகத்தை மூடிக்கொண்டு அழ அவர்கள் அசைந்தே கொடுக்கவில்லை.

அப்படியே இருந்தாலும், நீ எங்களோடு தானே இருப்பாய். அந்த நிம்மதியாவது எங்களுக்கு இருக்கும் அவளது தாய் பிரேமா உரைக்க, சோர்ந்து போனாள்.

அந்த நேரம் அவளுக்கு பெரும் நம்பிக்கையாகத் தோன்றியவன் அவளது உடன்பிறப்பு அண்ணன்  சரவணன் தான். அடுத்ததாக அவள் சென்று நின்றது அவனிடம்தான். பெரியவர்கள் அனைவரும் பாசத்தோடு மட்டுமே போராட, எதார்த்தத்தை புரிந்து கொள்ளும் நிலையில் இருப்பவன் அவன் மட்டுமே என்பது அவளது எண்ணம்.

எனவே அடுத்ததாக அவள் சென்று நின்றது தனது அண்ணன் சரவணனிடமே. தங்கை தன்னிடம் பேச வேண்டும் என சொன்ன உடனேயே, அவள் எதைப்பற்றி பேச விரும்புகிறாள் என அவனுக்குத் தெரிந்து போனது.

அவள் மாடிக்கு தன்னைத் தேடி வந்த உடனேயே, அம்மா, அப்பா, எல்லாம் இவ்வளவு வருத்தப் படுகிறார்கள். அவர்களை எல்லாம் கஷ்டப்படுத்தி விட்டு, உனக்கு அப்படி வெளிநாடு போய்த்தான் ஆக வேண்டுமா? அவளிடம் நேரடியாக கேட்டான்.

நான் இங்கேயே வேலைக்குச் செல்வதால், நம் வீட்டின் பொருளாதாரம் மாறிவிடும் என நீ நினைக்கின்றாயா அண்ணா? அவனிடம் கேட்க, அவளை ஆழமாகப் பார்த்தான்.

அப்படியென்றால், நீ வேலைக்குச் செல்கிறேன் என சொல்வதன் காரணம், பணம்தான் இல்லையா? அவளிடம் நேரடியாக கேட்க, ஆழமாக மூச்செடுத்து அவள் தன்னை சரி செய்து கொண்டாள்.

நம் வீடு இப்பொழுது இருக்கும் நிலைக்கு, நான் திருமணம் செய்துகொண்டு போய் விட்டால், இந்த வீட்டின் நிலை என்ன? அவனிடம் முழுதாக பேசி விடுவது என முடிவெடுத்தாள்.

வீட்டின் நிலைக்கு என்ன? மலைபோல் உன் அண்ணன் நான் இருக்கின்றேன். நமக்காகவே ஓடி ஓடி உழைக்கும் அப்பா இருக்காங்க, இதற்குமேல் உனக்கு என்ன வேண்டும்? அவனுக்கு சற்று கோபம் வந்தது.

"நீங்கள் இருவரும் எனக்காகவே ஓடி ஓடி உழைத்தீர்கள் என்றால், நீங்கள் இருவரும் எப்பொழுது ஓய்வு எடுப்பீங்க? உனக்கு இப்பொழுது திருமண வயது ஆயிற்று அது உனக்குத் தெரிகிறதா? அப்பாவுக்கு இது ஓய்வெடுக்கும் வயது. இப்பொழுது இன்னும் வேகமாக அவரை ஓடச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

"உனக்கென ஒருத்தி வருகையில், அவளையும் சந்தோஷமாக பார்த்துக் கொள்ள வேண்டியது உன் கடமை ஆயிற்றே. அதை விடுத்து, என் தங்கைக்காக நான் நிற்காமல் ஓடிக் கொண்டே இருப்பேன் எனச் சொன்னால், உன் வாழ்க்கையை நீ வாழ்வது எப்பொழுது?

"இதையே காலம் முழுவதும் உன் மனைவியிடம் சொன்னால், உன் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என நினைக்கின்றாயா? எனக்காக மட்டுமே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், தன்னை அறியாமலேயே என்மேல் அவர்களுக்கு ஒரு வெறுப்பு வந்துவிடாதா?

"என் லட்சிய படிப்பை படித்தேன் என்ற ஒரே காரணத்துக்காக, நம் வீட்டின் மொத்த நிம்மதியையும், சந்தோஷத்தையும் குழி தோண்டி புதைத்துவிட்டு, என்னால் மட்டும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும் என எப்படி நீங்கள் எல்லாம் நினைக்கின்றீர்கள்? என் மனதைப் பற்றியும் கொஞ்சம் யோசிங்களேன்.

"அதிக காலமெல்லாம் இல்லை, சரியாக ஐந்தே வருடம்... என்னால் செய்ய இயல்வதை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன். இதை நான் செய்யாமல் போனால், என்னை என்னாலேயே மன்னிக்க முடியாது அண்ணா.

"என்னையும் கொஞ்சம் புரிந்துகொள்ள முயற்சி செய்யேன். அவர்கள் பெரியவர்கள், அவர்களுக்குத்தான் நான் சொல்வது புரியவில்லை சரி. ஆனால், நான் சொல்ல வருவது உனக்கே புரியவில்லை என்றால் எப்படி அண்ணா?

நான் ஆசையாகப் படித்த இந்த படிப்பாலேயே என் குடும்பத்தின் நிம்மதி மொத்தமும் இப்படி அழிந்து போகும் என கனவிலும் நான் நினைக்கவில்லையே. அப்படித் தெரிந்திருந்தால் நிச்சயம் இந்தப் படிப்பை நான் படித்திருக்கவே மாட்டேன் அவள் அவ்வளவு வேதனையாக உரைக்க, திகைத்துப் போனான்.

ஜீவிதா, என்னம்மா இது? ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்? பதறினான்.

வேறு எப்படி பேசச் சொல்கிறாய். என்னால் முடியும் ஒரு விஷயத்தை கூட செய்ய முடியாமல், நான் இப்படி... அவள் அழுதுவிட, அதற்குமேல் அவனால் அதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.

இப்பொழுது என்ன, நீ லண்டனுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் அவ்வளவு தானே, நான் அம்மா அப்பாவிடம் பேசுகிறேன் அவளுக்கு உறுதி கொடுத்தான்.

ஆனாலும் அடிமனதில் ஒரு சிறு பயம் இருக்கவே செய்தது. நீ என்னதான் சொன்னாலும், தெரியாத ஒரு நாட்டுக்கு எப்படி உன்னை நாங்கள் தனியாக அனுப்புவது? அவளிடம் கேட்க, அவனைப் போலியாக முறைத்தாள்.

கூடவே, பாஸ்கர் அண்ணா கூட அங்கே அனைத்தையும் விசாரித்து சொல்லி விட்டாங்க. நீயே வேண்டுமென்றால் அண்ணாவிடம் கேள் அவள் சொல்ல, அவனும் பாஸ்கருக்கு அழைத்து பேசினான்.

ஆயிரம்தான் இருந்தாலும் தன் தங்கையை அந்நிய தேசத்துக்கு அவ்வளவு சுலபமாக அனுப்பிவிட அவனால் முடியுமா என்ன? சரவணன் அழைத்த உடனேயே, "சரவணா, ஒன்றும் பயப்படுவதற்கு இல்லை, என்னுடன் படித்த இருவர் அங்கே அருகிலேயே இருக்கின்றார்கள். அவர்களை வைத்து அனைத்தையும் விசாரித்து விட்டேன்.

"கூடவே அவள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாட்டையும்

Enjoying the preview?
Page 1 of 1