Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Un Nizhalil Naan - Part 2
Un Nizhalil Naan - Part 2
Un Nizhalil Naan - Part 2
Ebook315 pages3 hours

Un Nizhalil Naan - Part 2

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

பவித்ரன்... வாழ்க்கையை அதன் போக்கில் வாழப் பழகிக் கொண்டவன். பல ஊர்களை சுற்றி வருவதும், நாடுகளைச் சுற்றி வருவதையுமே பொழுதுபோக்காகக் கொண்டவன். அவனது உற்ற தோழி ரோஷினி.

ரோஷினியே அவனுக்கு அண்ணியாக வர, அவள் தன் அண்ணனின் வாழ்வுக்குள் வந்த பிறகே தன் அண்ணன் ரிஷியின் மறு பக்கம் தெரிய, செய்வதறியாமல் திகைத்துப் போகிறான். ரோஷினிக்கும் அதே நிலையே இருக்க, அவர்களது வாழ்க்கை சிக்கலை சரி செய்ய போராடும் பவித்ரன்.

அதை அவன் சரி செய்தானா? இல்லையென்றால் அந்த சுழலுக்குள் பவித்ரனே சிக்கிப் போனானா? இதில் ரோஷினியின் நிலை என்ன? விடை அறிய படியுங்கள், “உன் நிழலில் நான்”.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580109206717
Un Nizhalil Naan - Part 2

Read more from Infaa Alocious

Related authors

Related to Un Nizhalil Naan - Part 2

Related ebooks

Reviews for Un Nizhalil Naan - Part 2

Rating: 4.090909090909091 out of 5 stars
4/5

11 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Un Nizhalil Naan - Part 2 - Infaa Alocious

    https://www.pustaka.co.in

    உன் நிழலில் நான்... பாகம் 2

    Un Nizhalil Naan… Part 2

    Author:

    இன்பா அலோசியஸ்

    Infaa Alocious

    For more books

    https://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நிழல் – 19

    நிழல் – 20

    நிழல் – 21

    நிழல் – 22

    நிழல் – 23

    நிழல் – 24

    நிழல் – 25

    நிழல் – 26

    நிழல் – 27

    நிழல் – 28

    நிழல் – 29

    நிழல் – 30

    நிழல் – 31

    நிழல் – 32

    நிழல் – 33

    நிழல் – 34

    நிழல் – 35

    நிழல் – 36

    நிழல் – 19

    ஹாஸ்டலில் படுக்கையில் படுத்திருந்த ரோஷினிக்கு உறக்கம் என்பது மருந்துக்கும் நெருங்கவில்லை. நினைவு முழுவதையும் பவித்ரனே ஆக்கிரமித்து இருந்தான். சிந்தை எல்லாம் அவன் செய்த செயலிலேயே நிலைத்திருக்க, அவளால் ஒரு போட்டு கூட உறங்க முடியவில்லை.

    இமைகளை மூடினாலே, அவனது வெதுவெதுப்பான இதழ்கள், தன் இதழ்களை அழுத்தமாகத் தீண்டும் உணர்வே எழ, அவளால் எப்படி இமைகளை மூட முடியுமாம்?

    ‘ஏன் அப்படிச் செய்தார்? எதற்காக அப்படிச் செய்தார்?’ மனம் முழுவதும் கேள்விகளே வியாபித்து இருந்தது.

    தனது நிலையை உபயோகப்படுத்திக்கொள்ள முயன்றானோ? என அவளால் ஒரு சதவீதம் கூட நினைக்க முடியவில்லை. அவன் அப்படி நடந்துகொள்வதாக இருந்தால், இரண்டு வருடங்கள் அவளைப் போற்றி பாதுகாத்திருக்கத் தேவையே இல்லை.

    அவன் அப்படி அவளை அடைய நினைத்திருந்தால், அவனை யாராலும் தடுக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியாதா என்ன? அவ்வளவு ஏன் அது அவளாலேயே முடியாதே. அப்படியே அவன் வரம்பு மீறினாலும், அவனை எதிர்த்து கேட்பது யாராம்?

    அப்படி இருக்கையில், அவ்வளவு கீழ்த்தரமான வேலையை அவன் செய்வான் என்றே அவளுக்குத் தோன்றவில்லை. ஆனாலும், அவன் நடந்துகொண்ட விதத்தை எண்ணி தனக்கு ஏன் கோபம் வரவில்லை என தன்மீதே அவளுக்கு கோபம் வந்தது.

    ‘அவர் என்னை நெருங்கி அணைத்த பொழுதே, கன்னம் பழுக்கும் அளவுக்கு அறைந்திருக்க வேண்டுமோ?’ தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

    ‘அப்படிச் செய்ய என்னால் முடியுமா என்ன?’ மற்றொரு மனம் அவளிடமே திருப்பிக் கேட்டது.

    ‘அணைப்புக்கே அப்படி என்றால்... அந்த முத்தத்துக்கு?’ அதை நினைக்கையிலேயே முகம் முழுவதும் அவனது இதழ்கள் ஓடிய உணர்வு எழுந்து அவளை அலைக்கழித்தது.

    ‘செய்யறதையும் செஞ்சுட்டு, எதுவுமே சொல்லாமல் ஹாஸ்டல்ல விட்டுட்டு போயாச்சு. இதுக்கு என்ன அர்த்தமாம்?’ அதை நினைக்கையிலேயே சட்டென கண்ணீர் உற்பத்தி ஆனது. தன் அருகில் இருக்கும் கவிதாவின் நினைப்பில் அதை அடக்கினாள்.

    ஹாஸ்டலுக்கு வந்தது முதலே, தன் முகத்தைப் பார்த்துவிட்டு, அவள் கேட்ட எந்த கேள்விக்குமே பதில் சொல்லாமல், டீ குடிக்காமல், சாப்பிடாமல் படுக்கையிலேயே விழுந்து கிடக்க, அவளும் எவ்வளவுதான் பொறுப்பாள்?

    முடிந்த வரைக்கும் கேட்டுவிட்டு, தான் வாயைத் திறக்கவே போவதில்லை என்பது புரிந்த பிறகுதான் விட்டுப் போனாள். இரண்டு வருடங்களாக அவளுடன் ஒரே அறையில் இருந்தாலும், அவளிடம் கூட ரோஷினி நெருங்கிப் பழகவில்லை.

    பழகக் கூடாது என்பது இல்லை, அப்படிப் பழகினால் தன் விஷயங்களை எல்லாம் எங்கே உளறிவிடுவோமோ என்ற அச்சம்தான் காரணம். ஆனாலும் அந்த ஓட்டவாய் கவிதா அவளிடம் விடாமல் பேசிக்கொண்டுதான் இருப்பாள்.

    சொல்லப்போனால் அவள் அப்படி பேசுவதாலேயோ என்னவோ அறையில் இருக்கையில் தேவையற்ற எண்ணங்கள் பெரும்பாலும் அவளைத் தாக்குவது இல்லை. கூடவே அவள் நல்ல படிப்பாளியும் என்பதால், இருவரும் ஒரு வகுப்பு என்பதாலும் படிப்பதிலும் அவளது துணை அலாதியாக இருந்தது.

    நேரம் நள்ளிரவைக் கடந்த பிறகும் ரோஷினிக்கு உறக்கம் என்பது வரவே இல்லை. விடாமல் ஒளிர்ந்து கொண்டிருந்த தன் அலைபேசியை திரும்பிப் படுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

    "ரோஷினி... அந்த போன் விடாமல் வைப்ரேட் ஆகிட்டே இருக்கு. ஒண்ணு அதை அணைச்சு தூக்கிப்போடு, இல்லையா... அதை அட்டன் பண்ணிப் பேசு. என் தூக்கத்தை ஏன் கெடுக்கற? புருஷன் பொண்டாட்டிக்கு நடுவில் பிரச்சனைன்னா, நீ தூங்காமல் முழிச்சுகிட்டு இரு.

    "ஒய் மீ...? இந்த கல்யாணம் பண்ணவங்க ரூம்மேட்டா இனிமேல் போகவே கூடாதுடா சாமி. ஒண்ணு வீடியோகால் பேசியே கொல்ல வேண்டியது. இல்லையா... பேசாமல் நம்மளையும் சேத்து சாவடிக்க வேண்டியது.

    "ரோஷினி, இப்போ நீ அந்த போனை அட்டன் பண்ணலன்னா, நானே அதை தூக்கிப் போட்டு உடைப்பேன். உன் கால்ல வேண்ணா விழறேன், என்னைக் கொஞ்சம் தூங்க விடேன்... மணி ரெண்டாகுதுடி... அந்த மனுஷனும் ஆயிரம் காலாவது பண்ணி இருப்பார்.

    என்னதான் கோபம்னாலும், சண்டை போடதுக்காவது அவர்கிட்டே பேசுடி. இப்படி நீ எடுக்காமலே இருந்தால் அவர் என்னன்னு நினைப்பார். நீ ஒண்ணுகிடக்க ஒண்ணு பண்ணிகிட்டியோன்னு பயப்பட மாட்டார்? சொல்றதை செய்டி... கவிதா சொல்ல, அப்பொழுதுதான் அப்படி ஒரு கோணத்திலேயே அவள் சிந்தித்தாள்.

    ‘பயந்துட்டு இருப்பாங்களோ? ஆமா வேகமா கொண்டுவந்து விட்டுட்டு போயிட்டு’ கோபமாக எண்ணிக் கொண்டாலும், அதற்கு மேலே அவளால் அந்த அலைபேசியை எடுக்காமல் இருக்க முடியவில்லை. அவனிடம் பேசாமல், அவன் தூங்கவும் மாட்டான், அவளாலும் நிம்மதியாக இருக்க முடியாது என்பது புரிய, அலைபேசியை எடுத்தாள்.

    அதை ஆன் செய்தவள், அதுவுமே பேசாமல் இருக்க, ரோஷி, ரோஷி லைன்ல இருக்கியா? ஏதாவது பேசு... காட்... ரோஷி... அவள் அமைதியாக இருக்கவே, அவன் அதிகம் தவிப்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

    இருக்கேன்... அவள் சொல்ல, சில நொடிகள் இரு பக்கமும் சட்டென ஒரு அமைதி நிலவியது.

    ஏன் அப்படிப் பண்ணீங்க...? அவன் பேசப்போவதில்லை எனப் புரியவே அவளே கேட்டாள்.

    ஏன் உனக்குப் புரியலையா? அவளிடமே திருப்பிக் கேட்டான். அவன் அவ்வாறு கேட்கவே, இதயம் வெகுவாகத் துடிக்க, அவன் கேட்டதன் அர்த்தத்தை யோசிக்க கூட அவளுக்குப் பயமாக இருந்தது.

    விட்டுட்டுப் போய்ட்டு, இப்போ எதுக்கு விடாமல் போன் பண்றீங்களாம்? அவன் கேட்டதை விடுத்து, வேறு விஷயத்துக்குத் தாவினாள். அதென்னவோ அந்த பேச்சை தொடர்வதற்கே அச்சப்பட்டாள்.

    அவள் அந்த பேச்சை மாற்றுவது அவனுக்கு சிறு கோபத்தை அளித்தது. ஆனாலும் அதை விடுத்தவன், அப்படிப் போயிருப்பேன்னு நினைக்கறியா? அவன் கேட்க, முழுதாக அதிர்ந்து போனாள்.

    சீனியர்... அவள் அழைக்க, அலைபேசியை அவன் பட்டென வைத்துவிட்டான்.

    அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடியவள், அவர்கள் ப்ளோரில் இருந்த மாடிப்படி வராண்டாவில் நின்று சாலையை எட்டிப் பார்த்தாள். அவள் அங்கே வந்து பார்ப்பாள் என சரியாக கணித்திருந்தவன், ஜீப்பில் இருந்து இறங்கி வெளியே நின்றான்.

    அதைப் பார்த்தவள், வேகமாக அலைபேசியில் இருந்து அவனை அழைத்தாள். முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்றவன், கீழே மரத்தடிக்கு வா... உன்கிட்டே பேசணும் சொன்னவன் அலைபேசியை அணைத்து விட்டான்.

    ஹாஸ்டலின் மெயின் கேட்டில்தான் செக்கியூரிட்டி இருப்பார், சைடில் இருக்கும் சின்ன கேட்டில் யாரும் இருப்பது இல்லை. ஒரு சிறிய பூட்டு மட்டுமே போட்டிருக்கும். கூடவே எகிறி குதிக்கும் அளவுக்குத்தான் உயரமும் இருக்கும் என்பதால் சுலபமாகவே அவன் உள்ளே நுழைந்தான்.

    அவள் அந்த மரத்தடிக்கு வருவதற்கும், அவன் வருவதற்கும் சரியாக இருந்தது. கிட்டத்தட்ட ஓடி வந்தவள், அவன் அருகே நின்று மூச்சு வாங்க, அவனோ அவளைப் பார்த்தவாறே நின்றிருந்தான். அவனது கலைந்து கிடக்கும் தலைமுடி, ஒரு பேண்டுக்குள் அடக்கமாகி இருந்தது.

    அவளது கண்கள் கலங்கி கண்ணீர் விட, அதைப் பார்த்தவன் அவளை இழுத்து அணைத்துக்கொள்ள முயன்றான். அவன் தன்னை நெருங்குவது புரிய, வேகமாக இரண்டடி பின்வாங்கி நின்றாள். அவளது அந்த செய்கையே அவனைத் தேக்க, மரத்தடியில் கிடந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டான்.

    அவளுமே அவன் அருகே அமர, உன்னை அழக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா? இப்போதைய அவளது அழுகை தன் செய்கையால் நேர்ந்தது என்கையில் அவனுக்கு மனதைப் போட்டு வாட்டியது.

    எனக்கு அழ வருது, நான் என்ன செய்யட்டும்? அவனிடம் நியாயம் கேட்டவள், அவனுக்கு அருகே அமர்ந்துகொண்டாள்.

    "இன்னும் ரெண்டு மாசத்தில் படிப்பு முடிஞ்சுடும், பிறகு என்ன செய்யப் போற? அம்மா வீட்டுக்குப் போவேன்னு சொல்லாத, அதுக்கு நான் அலவ் பண்ண மாட்டேன். நான் கேக்கறதுக்கும் பதில் சொல்ல மாட்டன்னா என்னதான் செய்யட்டும்?

    புரியாதவங்களுக்கு சொல்லி புரிய வைக்கலாம். புரியாதது மாதிரி நடிக்கிறவங்களுக்கோ, புரிஞ்சுக்கவே மாட்டேன்னு பிடிவாதமா இருக்கறவங்களுக்கோ நம்மளால் எதுவுமே செய்ய முடியாது. நிஜமாவே நான் கேட்டது உனக்குப் புரியலன்னு சொல்லு பாப்போம் தன் கட்டியிருந்த முடியை அவிழ்த்து விட்டவன், தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான்.

    பிளீஸ் அதைப்பத்தி பேச வேண்டாமே... அவள் கெஞ்ச,

    ஏன் என்னைப் பிடிக்கலையா? நேரடியாகவே அவளிடம் கேட்டுவிட, வெலவெலத்துப் போனாள். மதியம் முதலே அவள் யோசிக்கத் தயங்கிய விஷயம். சற்று நேரத்துக்கு முன்னர் கூட அவள் யோசிக்க கூட விரும்பாத விஷயம். அவன் நேரடியாக கேட்க, அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

    பிளீஸ்... பிளீஸ்... சீனியர்... அதென்னவோ அவனைப் பற்றிய நினைப்பு அவள் மனதுக்குள் ஒரு சதவீதம் கூட வேறாக இல்லாத பொழுது, அவனது இந்த கேள்வியை எதிர்கொள்ள பெரும் துன்பமாக இருந்தது.

    சரி, வேற மாப்பிள்ளை பாக்கறேன்... நீ முடியாதுன்னு சொன்னாலும் விட மாட்டேன். உனக்கான முடிவுகளை என்னை எடுக்கச் சொல்லி நீ சொல்லி இருக்க, அது ஞாபகம் இருக்கு தானே... கொஞ்சம் கூட இளக்கமே இன்றி கேட்டான்.

    என்னது... வேற மாப்பிள்ளை பாக்கறீங்களா? உங்ககிட்டே நான் மாப்பிள்ளை பாத்து கட்டி வைங்கன்னு சொன்னேனா? அவனிடம் ஆத்திரத்தில் வெடித்தாள். அப்படி ஒரு திருமணத்தை எல்லாம் அவள் எதிர்பார்க்கவே இல்லையே.

    இதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்... எதையும் யோசிக்காமல் போய் நிம்மதியா படுத்து தூங்கு. ஆனா நீ ரெண்டு மாசம் கழிச்சு வீட்டுக்கு வர்றப்போ மாப்பிள்ளை ரெடியா இருப்பான்னு மட்டும் மனசில் வச்சுக்க. இப்போ போ... அவன் சொல்ல கெஞ்சலாக அவனை ஏறிட்டாள்.

    ‘முதல்ல கேட்டதென்ன? நான் மறுத்த உடனே வேற மாப்பிள்ளை பாக்கறேன்னு சொல்றது என்ன? அப்போ இரக்கப்பட்டு வாழ்க்கை கொடுப்பாராமா? இல்லன்னா அவங்க அண்ணா செஞ்ச தப்பை சரி பண்ண நினைக்கறாரா? அப்படி ஒரு கல்யாணம் அவசியமா?’ தனக்குள் போட்டு குழம்பித் தவித்தாள்.

    அவன் தன்னைப் பிடிக்கும் எனச் சொல்லிக் கேட்டிருந்தால் எப்படியோ? ஆனால், அவனது இந்த பேச்சுக்கள் அவளை வாட்டியது. அவனுக்கோ, பிடிவாதமாக சொல்லத் தயக்கமாக இருந்தது. அவள் ஒரு வார்த்தை முடியாது என முடிவாகச் சொல்லிவிட்டால், அதை மீற முடியாது என்பதால், அவளைக் குழப்பி மீன் பிடிக்க முயன்றான்.

    அவனுக்குத் தெரியும், அவளது அடி மனதில் தன்னை விட்டு போக முடியாத, அவளுக்கே அறியாத தன்மீதான நேசத்தை அவன் உணர்ந்தே இருந்தான். அதையும் அவள் அன்று வெளிப்படுத்தி இருந்தாளே. முதல்நாள் அந்த தலையணையால் அடித்தது அறிகுறி என்றால், இன்று அணைத்து முத்தமிடுகையில் எதிர்ப்பின்றி இருந்தது எதனாலாம்?

    இதுவே அவனது இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அப்படித்தான் நடந்து கொண்டிருப்பாளாமா? தன்னைத் தவிர வேறு ஆண்மகனை அவள் நம்பி இருப்பாளா? இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் இருக்கிறாளே என அவனுக்கு கோபமாக வந்தது.

    பட்டென சிமெண்ட் பெஞ்சில் இருந்து எழுந்தவள், அவனது நெஞ்சிலேயே தன் கையால் குத்தினாள். அவன் கொஞ்சம் கூட அசையாமல் நிற்கவே, படிப்பை முடிச்ச பிறகு நான் ஊருக்கு வரவே மாட்டேன். இப்படியே எங்கேயாவது வேலையை தேடிட்டு போய்டறேன். எனக்காக நீங்க எதையும் செய்ய வேண்டாம்... அவள் சொல்ல, அவளது உரிமை செய்கையையும், பேச்சில் இருக்கும் முரணையும் எண்ணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

    என்னவோ மீண்டுமாக அவளை இறுக அணைத்து, அவள் இதழ்களில் தொலைந்து போகச் சொல்லி அவன் உணர்வுகள் போராட, அதை அடக்கியவாறே நின்றிருந்தான்.

    ஓய் ஜூனியர், உன்னை அப்படியெல்லாம் விட்டுடுவேனா என்ன? இப்போ போய் நிம்மதியா தூங்கு போ. நானும் ஜீப்பிலேயே கொஞ்ச நேரம் தூங்கிட்டு பிறகு கிளம்பறேன் அவள் அடிகளை வாங்கியவாறே அவன் சொல்ல, அடித்து ஓய்ந்தவள், அவனை முறைத்தவாறே நின்றாள்.

    மணி மூணாகப் போகுது, பிறகு கிளாஸ்ல தூங்கி வழிந்தால் சிரிக்கப் போறாங்க அவன் புன்னகை சிந்த, அவளால் அவனைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

    அவனைப் பார்த்தவாறே அவள் செல்ல, மேலே வராண்டாவில் அவளைப் பார்க்கும் வரைக்குமே அங்கே நின்றிருந்தவன், அதன் பிறகே ஜீப்புக்குச் சென்றான். அதற்குப் பிறகு படுக்கையில் விழுந்தவள், தன்னை மீறி உறங்கி இருக்க, காலையில் அவள் கண் விழிக்கையில் நேரம் ஒன்பதைக் கடந்திருந்தது.

    அவள் படுக்கையில் அசைவதைப் பார்த்தவள், "புருஷன்கிட்டே பேசி சமாதானம் ஆன உடனே என்ன சொகுசா தூக்கம் வருது பாத்தியா? முதல்ல எழுந்து முகம் கழுவிட்டு சாப்பிடு. உன் ஆளு காலைலேயே போனைப் போட்டு என் பொண்டாட்டியை சாப்பிட வை’ன்னு சொல்றார்.

    எனக்கு நல்ல வேலைன்னு நினைச்சுகிட்டேன். சரி, காலேஜ்க்கு வர்றியா இல்ல தூங்கப் போறியா? அவள் கேட்க, பவித்ரனின் நினைவுதான் முதலில் எழுந்தது.

    வேகமாக ஓடி வராண்டாவில் சென்று பார்க்க, அவனது ஜீப் இருப்பதைப் பார்த்துவிட்டு, அடுத்த அரைமணி நேரத்தில் குளித்து, கிளம்பி, சாப்பிட்டுவிட்டு காலேஜுக்கு தயாராகிவிட்டு அவனைக் காண ஓடினாள். என்னவோ அவனை அதிகம் படுத்தி வைப்பதுபோல் இருந்தது.

    அவனுக்கு இருக்கும் வேலைகளுக்கு நேற்றுமுதலே அவன் இங்கேயே இருந்தால், அவனது வேலைகளை எல்லாம் யார் பார்ப்பதாம்? சீனியர், நீங்க இன்னும் கிளம்பலையா? சாரி... என்னால் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் மெதுவாக முனகினாள்.

    ம்... ஆமா... ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு இரட்டை அர்த்தத்தில் அவன் சொல்ல, அவளோ ஒரு அர்த்தத்தில் புரிந்துகொண்டவள் வருத்தப்பட்டாள்.

    சரி நான் கிளம்பறேன், பாத்து பத்திரமா இரு... சொன்னவன் கிளம்பிவிட்டான்.

    அடுத்து வந்த வார இறுதியில் அவளை வந்து பார்க்க அவனுக்கு நேரம் இருக்கவில்லை. ரிஷி செய்துவைத்த குழப்பத்தில் வசமாக சிக்கிக் கொண்டான். ரிஷி தேயிலை பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், இறங்கியதில், ஒரு வருடத்துக்கு முன்னர் கொரியாவில் இருந்து டீ பேக்கிங் மெஷின் ஒன்று ஆர்டர் செய்திருந்தான்.

    இங்கே அரசாங்க சிக்கலின் காரணமாக அவனது கனவு பாதியிலேயே நிற்க, ஆர்டர் செய்திருந்த மெஷின் பொருட்கள் அனைத்தும் கப்பலில் வந்து இறங்கி விட்டது. சொல்லப்போனால் உடனடியாக அவற்றை இறக்கி கொண்டுவந்து எங்கே வைப்பது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை.

    ஆடிட்டர் மூலமாக அந்த விஷயம் பவித்ரனுக்குத் தெரியவர, ரிஷியின் முட்டாள்த்தனத்தை எண்ணி கொதித்துப் போனான். வந்த மெஷின்களை வேண்டாம் எனத் திருப்பி அனுப்பவும் வழியில்லை. மொத்தமாக பணம் கொடுத்து வாங்கிய பொருள், அவன் திருப்பி வாங்கிக் கொண்டாலும் பணம் எப்படி வருமாம்?

    எனவே முதலில் அவற்றை செட் செய்வது ஒன்றே வழியாக இருக்க, அதை கஸ்டம்ஸ் கிளியர் செய்து ஊட்டிக்கு கொண்டு வரவே இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. அவற்றை அப்படியே போட்டு வைக்கவும் முடியாது. அப்படிச் செய்தால் நஷ்டம் என்பது ஒரு பக்கம் என்றால், மெஷின் பழுதாகத் துவங்கிவிட்டால் மொத்தமும் பாழாகிப் போகும்.

    பாட்டனார், தாத்தா, அப்பா ஏற்படுத்திய தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானான். ஏற்கனவே இருக்கும் தங்கள் தேயிலை மில்லின் ஒரு பகுதியை ஒதுக்கி, அடுத்த ஒரு வாரத்தில் அதை நிறுவினான்.

    அடுத்ததாக, தேயிலை பிரேண்டுக்கான பெர்மிஷன் துவங்கி, அடுத்த கட்ட வேலைகள் என அவனை இழுக்க, மொத்தமாகப் போட வேண்டிய முதலுக்கென பேங்கை அவன் அணுக வேண்டி இருந்தது. லோன் என்ன உடனே கிடைக்கும் விஷயமா என்ன?

    அதன் பின்னால் அலைந்து, அவர்கள் பகுதி எம்எல்ஏவை வரச் சொல்லி, அவனுக்குத் தேவையான உதவிகளைக் கேட்டான். அதன் விலையென அவன் கேட்ட கட்சி நிதி என சில கோடிகளை அவன் கொடுத்து அனுப்ப, பூபாலனுக்கு தலை சுற்றிப் போனது எனலாம்.

    பவித்ரனின் இந்த அதிரடி, தொழில் நுணுக்கம், அறிவு இதையெல்லாம் அவர் எதிர்பார்த்திருக்கவே இல்லையே. தன் மகன் மூன்று வருடங்களாக திணறும் விஷயத்தை, இவன் இரண்டே மாதங்களில் துவம்சம் செய்தால் அதிராமல் என்ன செய்வார்?

    பவித்ரனின் இந்த விஸ்வரூபம் அவரைப் பொறாமைத் தீயில் பொசுங்கச் செய்தது. தாங்கள் கேட்கையில் எல்லாம் ஆயிரம் சாக்கு சொல்லும் ஆடிட்டரும், வக்கீலும், பல கோடிகளை இவனுக்கு அசால்ட்டாக செலவழிக்க எப்படி அதிகாரம் கொடுத்தார்கள் என்று அவருக்குப் புரியவே இல்லை.

    பொதுவாகவே வரவு செலவுகள் அனைத்தையும் பூபாலனும், ரிஷியும் பார்ப்பதுபோல் இருந்தாலும், முழு அதிகாரமும் வேறு யார் கரத்திலேயோ இருப்பதுபோல் அவருக்குத் தோன்றும்.

    அந்த உறுத்தல் இப்பொழுது உறுதியாகும் உணர்வு. ஆனால் யாரிடம் இதைப்பற்றி கேட்பது என்று எதுவும் புரியவில்லை. அதே நேரம், மெஷின்களை சிறிய அளவில் வெள்ளோட்டமாவது விட வேண்டும், அதற்கு முன்னர் பூஜை போட்டு பால் காய்ப்பது என முடிவெடுத்தார்கள்.

    அப்படி அவர்கள் பூஜை போடும் நேரத்தில் தன் மகனை வர வைத்து, அவனையும் ரோஷினியையும் ஒன்றிணைக்க பூபாலன் முடிவெடுத்தார். எனவே அந்த பூஜைக்கு செல்லக் கூடாது என மனம் நினைத்தாலும், தான் நினைக்கும் காரியம் நடக்க வேண்டி மகனை வரச் சொன்னார்.

    ரோஷினிக்கும் படிப்பு முடிந்துவிட்டதால், அவளும் ஊட்டிக்கே மொத்தமாக வருவது அவருக்குத் தெரியும். பூஜையறையில் இருக்கும் திருமாங்கல்யம் வேறு அவரது கண்களையும், மனதையும் உறுத்திக் கொண்டே இருந்தது.

    சொல்லப்போனால் கடந்த இரண்டு மாதங்களில் பவித்ரனின் முகமே ஊருக்குள் வேறாக பதியத் துவங்கி இருந்தது. அவனது நீள முடி கட் செய்து அலை அலையாக அவன் தலையில் கச்சிதமாக இருந்தது. மீசையும் தாடியும் அளவாக ட்ரிம் செய்து ஒரு மகாராஜாவாக மிளிர்ந்தான்.

    அவன் இந்த வேலைகளில் பிசியாகவே, ரோஷினியை அவனால் சென்று பார்க்கவே முடியவில்லை. அவனது வேலைகளுக்கு ஒரு அசிஸ்டென்ட் வேண்டும் என வரதன் என்பவனை வேலைக்கு எடுத்திருந்தான். அவனுமே எம்பிஏ பட்டதாரிதான்.

    பவித்ரனின் தேவைகள் அறிந்து கச்சிதமாக அனைத்தையும் செய்து கொடுப்பான். அங்கே தானும், தன் மகன் ரிஷியும் செல்லாக்காசாகிப் போன உணர்வு.

    ரோஷினிக்கோ பரீட்சை எல்லாம் முடிய, அவளை அழைத்துச் செல்ல வரதன் வந்திருப்பதைப் பார்த்தவளுக்கு தான் எப்படி உணர்ந்தாள் என்றே சொல்வதற்கு இல்லை. கடந்த இரண்டு மாதமாக

    Enjoying the preview?
    Page 1 of 1