Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthithai Pirantheaney...
Puthithai Pirantheaney...
Puthithai Pirantheaney...
Ebook307 pages3 hours

Puthithai Pirantheaney...

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

இந்த உலகத்துல பெண் குழந்தைகள் மட்டும் சில அத்துமீறல்களுக்கு ஆளாகலை, சில இடங்களில் ஆண் குழந்தைகளும் அப்படியான அத்துமீறல்களுக்கு உள்ளாகுறாங்க.

கதையின் நாயகன் “ஜேம்ஸ்” அப்படி ஒரு சூழலில் சிக்கி வெளிவர முடியாமல் தவிக்க, அவனுக்குள் ஒரு காதல் வந்தால்?

இவனுக்கு ஒரு அடாவடி நாயகி “சுஹானசா” கிடைத்தால்? அவன் வாழ்க்கை எப்படி மாறும்? தெரிந்துகொள்ள கதைக்குள் பயணியுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580109207987
Puthithai Pirantheaney...

Read more from Infaa Alocious

Related authors

Related to Puthithai Pirantheaney...

Related ebooks

Reviews for Puthithai Pirantheaney...

Rating: 4.166666666666667 out of 5 stars
4/5

6 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Very heavy theme . Beautifully written. One of the best book written by the author

Book preview

Puthithai Pirantheaney... - Infaa Alocious

C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

https://www.pustaka.co.in

புதிதாய் பிறந்தேனே...

Puthithai Pirantheaney...

Author:

இன்பா அலோசியஸ்

Infaa Alocious

For more books

https://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

பகுதி – 1

பகுதி – 2

பகுதி – 3

பகுதி – 4

பகுதி – 5

பகுதி – 6

பகுதி – 7

பகுதி – 8

பகுதி – 9

பகுதி – 10

பகுதி – 11

பகுதி – 12

பகுதி – 13

பகுதி – 14

பகுதி – 15

பகுதி – 16

பகுதி – 17

பகுதி – 18

பகுதி – 19

பகுதி – 20

பகுதி – 21

பகுதி – 22

பகுதி – 23

பகுதி – 24

பகுதி – 25

பகுதி – 26

பகுதி – 1

அதிகாலையில் காதுக்குள் ரீங்காரமிட்ட அலைபேசியின் அலாரத்தை நிறுத்திய ஜேம்ஸ், படுக்கையில் எழுந்து அமர்ந்து சோம்பல் முறித்தான். தனக்குள் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச சோம்பலையும் உதறித் தள்ளியவன், படுக்கையில் இருந்து இறங்கி, குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

வேகமாக ப்ரெஷ் செய்தவன், ஒரு கையில்லாத பனியனும், ட்ராக் பேண்டும் அணிந்துகொண்டு, தன் அப்பாட்மென்டில் இருந்து வெளியேறி தரைத்தளத்துக்கு வந்தான். அங்கே நிறுத்தியிருந்த தன் சைக்கிளை எடுத்துக் கொண்டான்.

தன் அலைபேசியில் தனக்குப் பிடித்த பாடலை ஒலிக்கவிட்டவன், ப்ளூடூத்தை காதில் பொருத்திக் கொண்டு, அலைபேசியை பேக்கெட்டில் திணித்துக் கொண்டான். ஆளில்லாத அந்த சாலையில் செலுத்த துவங்கினான்.

சென்னை ஈசிஆர் சாலையில் கொஞ்சம் உள்ளே அமைந்திருந்தது அவனது கட்டிடம். அவன் வேலை செய்யும் ஐடி நிறுவனம் அங்கே இருந்ததால், அதன் அருகிலேயே இருந்த அப்பாட்மெண்டை விலைக்கு வாங்கிக் கொண்டான்.

சென்னை வெயில் காலையிலேயே கதிர்களை விரிக்கவில்லை என்றாலும், நான் கொளுத்த காத்திருக்கிறேன் என சூழ்நிலை அவனுக்கு உணர்த்தியது.

அவனது வீடு இருக்கும் ஏரியாவை விட்டு வெளியேறியவன், உள் இடத்தை சுற்றிலும் இருந்த தெருக்களில் சைக்கிளை விரைந்து செலுத்தினான். அனைவரும் ஓட்டம், நடைபயிற்சி என மேற்கொள்ள, அவனுக்கு என்னவோ சைக்கிளிங் மிகவும் பிடித்திருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த இடத்தை சுற்றி வந்தவன், இறுதியாக, பால், பேப்பர் வாங்கும் கடைக்குச் சென்று சைக்கிளை நிறுத்தினான்.

அவனைப் பார்த்த கடைப் பையன், வாங்கண்ணே… ஹிந்துவா? எடுத்துக்கோங்க… பால் பேக்கட் இதோ தர்றேன்… நானே வீட்டுக்கு கொண்டுவந்து கொடுக்கறேன்னு சொன்னாலும் வேண்டாம்னு சொல்றீங்க. நான் என்ன உங்களுக்கு மட்டும் தனியாவா எடுத்துட்டு வந்து தரப் போறேன்? சொன்னவன் அவனிடம் கொடுக்க, பதில் பேசாமல் அதை வாங்கிக் கொண்டான்.

ஒரு மெல்லிய புன்னகையை மட்டுமே அவனுக்கு பதிலாக்கியவன், சைக்கிளை வீட்டுக்குத் திருப்பினான்.

ஒத்த வார்த்தை பேச மாட்டாரே… எப்படித்தான் வேலை பாக்கற இடத்தில் இருக்காரோ? வாய்விட்டே புலம்பிய கடைப் பையன், தன் வேலையைப் பார்க்க, பை நிறைய பால் பேக்கெட்டுகளும், ஒரு அடி உயரத்துக்கு பேப்பர் கட்டையும் தூக்கிக்கொண்டு சென்றான்.

அந்த பையன் புலம்பியதைப் பற்றி எந்த கவலையும் இன்றி, சைக்கிளை கீழே நிறுத்தியவன், தன் வீட்டுக்கு வந்து பாலை அடுப்பில் வைத்துவிட்டு, அது காய்ந்தவுடன், பாலை பதமான சூட்டுக்கு ஆற்றிவிட்டு ஹாலில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தான்.

கெல்லாக்ஸ் ஒரு பவுலில் எடுத்து வந்தவன், பாலை அதில் ஊற்றி கலக்கியவாறே அன்றைய தினசரியைப் புரட்டினான். அதற்கு முன்னர் தொலைக்காட்சியில் ‘வேளாங்கண்ணி லைவ் மாஸ்’ போட்டுக்கொள்ள தவறவில்லை.

நிதானமாக ஸ்பூனால் அதைப் பருகியவாறே செய்தித்தாளில் மூழ்கினான். அடுத்த அரைமணி நேரம் அதில் கழிய, எழுந்து கிச்சனுக்கு சென்றவன், மதியத்துக்கு சாதம் வைத்தவன், கடையில் இருந்து வாங்கி வைத்திருந்த புளியோதரை மிக்ஸ் போட்டு கலந்து எடுத்து டிபன் பாக்ஸில் வைத்துக் கொண்டான்.

வேலையை முடித்துவிட்டு, குளித்துவிட்டு வந்தவன், நல்ல டீக்காக உடை அணிந்தவன், கண்ணாடியில் முகம் பார்த்தான்.

‘ஜேம்ஸ்’ கேரளா தாய்க்கும், தமிழ்நாட்டு தகப்பனுக்கும் பிறந்தவன். சரசாரிக்கும் சற்று கூடுதலான நிறம்… தாயைக் கொண்டு பிறந்திருந்தான். ஆனால், உடல்வாகும், ஜாடையும் அப்படியே தகப்பனை ஒத்திருக்க, கொஞ்சம் ஆணழகன் தான்.

அதுவும் முழு நேரமும் ஏசியிலேயே அமர்ந்து இருப்பதால், வெயில் காணாத உடம்பு, இன்னும் நல்ல நிறமாகவே இருந்தான். பார்க்கும் பெண்கள் எல்லாம் நிச்சயம் மறுபடி பார்க்கும் ஹேண்சம் மேன்.

ஆறடிக்கு கொஞ்சம் குறைவான வளர்த்தி… போதிய உணவு உண்பது இல்லை என்றதாலோ என்னவோ, கொஞ்சம் அதிக ஒல்லியாக இருந்தான். அப்படி ஒல்லியாகவும், அதிக வளர்த்தியாகவும் இருப்பதால், கொஞ்சம் கூன் போட்டு நடக்கிறானோ எனத் தோன்றும்.

அளவான ட்ரிம் செய்த மீசையும், தாடியும் அவனுக்கு கம்பீரத்தை சேர்த்தது என்றே சொல்லலாம். கண்ணாடியில் தன்னைப் பார்த்து தன்னம்பிக்கையாக புன்னகைத்துக் கொண்டவனின் கண்களில் சிறு எதிர்பார்ப்பு மிளிர்ந்தது.

‘இன்னைக்கு அவளைப் பார்ப்பேனா? அவ என்னைப் பார்ப்பாளா?’ எண்ணம் உள்ளுக்குள் எழ, கண்ணாடிக்கு அருகே, சுவரில் மாட்டியிருந்த தன் தாயின் புகைப்படத்தை ஒரு நொடி ஏறிட்டான்.

அம்மா… எனக்கு அவளைப் பிடிச்சிருக்கும்மா… அவளுக்கு என்னைப் பிடிக்குமா? ஆனா எனக்கு அவகிட்டே பேச தைரியமே இல்லையே… தாயிடம் வாய்விட்டே உரைக்க, தாய் புன்னகைக்கும் உணர்வு.

அவனது தாய், அவனுக்கு பதிமூன்று வயது இருக்கும்பொழுதே அவனை விட்டு சென்றுவிட்டார். தாயின் இறப்புக்குப் பிறகு அவன் ஒரு அனாதைதான்.

நினைப்புக்கள் எங்கேயோ சுற்றப் பார்க்க, அதை இழுத்து பிடித்தவன், ஆழமாக மூச்செடுத்தான்.

அதே நேரம் அவனது அலைபேசி இசைத்து அவனைக் கலைக்க, பார்வையை அதில் பதித்தவனின் முகம், பெரும் இறுக்கத்துக்குச் சென்றது.

‘அதான் நான் விலகி நிக்கறேன் தானே… பிறகு ஏன் இப்படி விடாமல் தொல்லை செய்யணும்?’ கோபமாக எண்ணியவனுக்கு எவ்வளவு முயன்றும் அந்த அழைப்பை தவிர்க்க மனம் வரவில்லை.

அவர்களால் பெரிதாக அவன் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவசியமான நேரத்தில் அவன் பக்கம் நின்றதாலோ என்னவோ, கொஞ்சமாக அவர்மேல் மரியாதை எழுந்தது.

மரியாதை இருந்ததே தவிர, பாசமோ, மதிப்போ எழவில்லை. ‘எல்லாம் இவர்களால் தானே…’ என்னதான் மறக்க முயன்றாலும், இந்த ஜென்மம் முழுவதற்கும் நினைவில் நிற்கும் விஷயமல்லவா.

ஆழமாக மூச்செடுத்தவன், விருப்பமின்றியே அழைப்பை ஏற்றான். ம், சொல்லுங்க… என்ன? நேரடியாக விஷயத்துக்கே வந்தான்.

எப்படிப்பா இருக்க? வேலைக்கு நேரமாச்சா? நான் பேசிட்டு வச்சுடறேன்… அது… இங்கே உன் அப்பாவுக்கு… அவர் தயங்கி இழுக்க,

அந்த ஆள் என் அப்பா இல்ல… அது பல வருஷத்துக்கு முன்னாடியே அத்துப் போச்சு. அந்த ஆளைப்பத்தி பேசறதுக்கா இருந்தா, எனக்கு கால் பண்ணவே செய்யாதீங்க கோபத்தில் ஆத்திரமாகவே கத்தினான்.

அப்பாவாம் அப்பா… அடக்க முடியாமல் அவன் முனக, அதையெல்லாம் அந்தப்பக்கம் அவர் கேட்டுக் கொண்டே இருந்தார்.

எங்கேயோ இருக்கும் கோபத்தை, இவரிடம் வெளிப்படுத்துகிறோம் என்றெல்லாம் அவன் யோசிக்கவே இல்லை. ‘எல்லாத்துக்கும் இவங்கதான் காரணம்…’ மனம் மன்னிக்க மறுத்தது.

உன் கோபம் எனக்குப் புரியுதுப்பா… அது நியாயமானதும் கூட. ஆனா, உனக்கு ஒரு வார்த்தை சொல்லலைன்னு வரக்கூடாதே அதான்… வேற யார் போன் பண்ணாலும் நீ எடுக்கவும் மாட்டேங்கற… ஆதங்கமாக அவர் நீட்டி முழக்க, இறங்கிய கோபம் ஏறி அவனை ஆட்டிப் படைத்தது.

அந்த ஆள் செத்தா கூட எனக்குச் சொல்ல வேண்டாம் போதுமா? இப்போ போனை வைங்க மேலே அவரைப் பேச விடாமல் அலைபேசியை பட்டென வைத்துவிட்டான். அவ்வளவு நேரமாக இருந்த இதம் மொத்தமும் தொலைந்துபோன உணர்வு.

‘ச்சே… இந்த போனை எடுத்திருக்க கூடாது’ தன்னைத் தானே திட்டிக் கொண்டவன், அருகே பாட்டிலில் இருந்த தண்ணீரைக் குடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

அறையை விட்டு வெளியேறி, ஹாலில் வந்து அமர்ந்து கொண்டான். ஏனோ அதே மனநிலையில் கிளம்பி வெளியே செல்ல முடியவில்லை. மற்றபடி, ‘தந்தைக்கு என்னவோ?’ என்றெல்லாம் மனம் பதறவெல்லாம் இல்லை.

‘அந்த ஆளுக்கு என்ன ஆனா எனக்கென்ன?’ எண்ணியவன், இமைகளை மூடி அப்படியே சில நொடிகள் அமர்ந்திருந்தான். உள்ளுக்குள், பல வருடங்களுக்கு முன்னர் நடந்தவை எல்லாம் உலா போக, துக்கம் நெஞ்சை அடைத்தது.

எவ்வளவு நேரம்தான் அப்படியே இருக்க முடியும்? ஒரு வழியாக தன்னைத் தேற்றிவிட்டு, ‘அவளை மட்டும் இப்போ நினைச்சுக்கோ, ஏன் தேவையில்லாததை எல்லாம் நினைக்கற?’ தனக்குத் தானே அவன் சொல்லிக் கொள்ள, இதயத்தில் இதம் பரவியது.

இமைகளைப் பிரித்து, கடிகாரத்தைத் திருப்பி நேரம் பார்த்தவன், அலுவலகத்துக்குச் செல்ல இன்னுமே தாராளமாக நேரம் இருப்பதைப் பார்த்துவிட்டு, நிதானமாகவே கிளம்பி வெளியே வந்தான்.

தன் அப்பாட்மெண்டை பூட்டி, சாவியை பாக்கெட்டில் போட்டுக் கொண்டவன், இடதுபக்கம் இருந்த லிப்ட்டை நோக்கி நடந்தான். அதன் அழைப்பு பொத்தானை அழுத்தியவன், லிப்ட் வரவே, வேகமாக உள்ளே செல்லப் போனவன் பட்டென தயங்கி நின்றான்.

உள்ளே இருந்த இரு பெண்களும் அவனைக் கேள்வியாக ஏறிட, அவர்களுக்கு பதில் கூட சொல்லாமல் வேகமாக படிக்கட்டின் பக்கம் நடந்துவிட்டான்.

இவன் இப்படியேத்தான் பண்றான்… கொஞ்சம் அழகா இருக்கானே, கரெக்ட் பண்ணலாம்னு பாத்தா ரொம்பத்தான்… உள்ளே இருந்த பெண்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டது எல்லாம் அவனுக்கும் தெரிந்துதான் இருந்தது.

ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவன் கவலையே படவில்லை. அவனுக்கும் பெண்களுக்கும் என்றால் ஆகவே ஆகாது. அதற்காக சண்டை போடுவான், முரடன், பிடிக்காது என்றெல்லாம் இல்லை. இது முழுக்க முழுக்க வேறு விஷயம்.

அவனுக்குள் பொதிந்து கிடக்கும் அந்த விஷயம் அவனைத் தவிர இன்னும் இருவருக்கு மட்டுமே தெரியும். ஒன்று அவனது அப்பாவின் அக்கா, ஞானசெல்வம், சற்று நேரத்துக்கு முன்னாடி அலைபேசியில் பேசியது அவர்தான். இன்னொன்று சிஸ்டர் ஜூலியட்.

‘எதுக்குத்தான் வாழறேனோ?’ இப்படி எண்ணிக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்த அவனுக்கும் வாழவேண்டும் என்ற ஆசையைக் கொடுத்தவள் அவள்… ‘சுஹானசா…’.

பெண்கள் என்றாலே அஞ்சி நடுங்கிய அவனை, ஏறிட்டு பார்க்கச் செய்தவள். அவன் வாழ்க்கையில் தனக்கென எந்தப் பெண்ணும் வர வாய்ப்பே இல்லை என அவன் எண்ணியிருக்க, ‘அவள் வேண்டும்’ என எண்ண வைத்தவள்.

ஒரு மாதத்துக்கும் மேலாக அவளை கவனித்து வருகிறான். ஆனால், இன்று வரைக்கும் இப்படி ஒருவன் இருப்பதே அவளுக்குத் தெரியாது. அப்படி அவளுக்குத் தெரியவில்லையே என அவன் வருத்தமும் படவில்லை.

‘அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தால் போதும்’ என்ற நிலையில் அவன் இருந்தான். ஆனால், நாளுக்கு நாள், அவள்மீதான அவன் நேசம் அதிகரிப்பதை அவனாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அலுவலக நேரத்துக்கு அரைமணி நேரத்துக்கு முன்பாகவே அலுவலக பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவன், அலுவலகம் செல்லாமல், தன்னவளுக்காக காத்திருந்தான். அவன் உடல்மொழியில் இல்லாத பரபரப்பும், அலைப்புறுதலும் அவன் விழிகளில் வழிந்தது.

நொடிக்கொருமுறை கை கடிகாரத்தைப் பார்ப்பதும், அலுவலக வாயிலைப் பார்ப்பதுமாக அவன் இருக்க, அவனது தேவதைப்பெண் அன்ன நடையிட்டு நடந்து வந்தாள்.

அவ்வளவு நேரமாக அலட்டாமல் இருந்தவனின் தேகத்தில் பெரும் படபடப்பு ஓட, அவள் லிப்டுக்குள் நுழைய, ஓடிவந்து அவளோடு ஏறிக் கொண்டான். அவளுக்குப் பின்னால் நின்றிருந்தவன், அவளைக் காண வேண்டும் என்றே தவம் இருந்தவன், இப்பொழுது அவளை ஏறிட்டும் பார்க்கவில்லை.

சுஹானசா… சுத்த மலையாளிப் பெண். நல்ல மஞ்சள் நிறத்தில் கன்னத்தில் குழி விழ, சுருட்டைத் தலைமுடியோடு பார்க்க கொள்ளை அழகாக இருந்தாள். அவளது தோழி, தன்வியோடு சிரித்துப் பேசியவாறு அவள் இருக்க, அவளையே பாராமல் பார்த்திருந்தான்.

இந்த ஒரு மாதமாக இருவரையும் தனித்தனியாக அவன் பார்த்ததே இல்லை. தன்வி சுஹானசாவின் நிறத்தை வாயைப் பிளந்துகொண்டு பார்த்தாள் என்றால், சுஹானசாவோ, தன்வியின் நீள கூந்தலை சற்று ஏக்கப் பெருமூச்சு விட்டு பார்த்தாள்.

இதுக்கு நீ என்ன போட்டு வளக்கற? தன்வியின் கூந்தலை சுட்டிக்காட்டி அவள் கேட்க, புன்னகை முகம் காட்டினாள்.

நீ எப்படி இவ்வளவு கலரா இருக்க என்ன போடறியோ அதேதான் நானும் போடறேன் தன்வி பதில் சொல்ல, வாய்விட்டு சிரித்தாள்.

கொள்ளாம்… (நல்லா இருக்கு) அவள் சொல்ல, இருவரும் சிரித்துக் கொண்டார்கள். அந்த கம்பெனியில் இருவரும் ட்ரெயினியாக சேர்ந்து இருந்தார்கள். ஜேம்ஸ் அந்த கம்பெனியில் ஐந்து வருடங்களுக்கும் மேலாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

சுஹானசா படித்தது முழுவதுமே கோயம்புத்தூர் என்பதால் தமிழ் நன்றாகவே பேசுவாள். ஆனாலும், மலையாள வாடை சற்று தூக்கலாகவே வீசும். இடை இடையே இப்படி நிறைய மலையாள வார்த்தைகள் கலந்து பேசுவாள்.

அவள் தமிழே பேசினாலும், அவள் பேசத் துவங்கிய அந்த நொடியே, ‘இவள் மலையாளி’ என அனைவரும் கண்டு கொள்வார்கள். கொஞ்சம் கூட கவலையற்று அவள் இருக்க, அவளை நினைத்து சுற்றிக் கொண்டிருந்த ஜேம்சுக்குத்தான் அவளை நெருங்கும் வழி சுத்தமாகத் தெரியவில்லை.

பகுதி – 2

ஜேம்ஸ், சுஹானசாவின் நிழல் போலவே தொடர, இப்படி ஒருவன் தன்னைத் தொடர்வது அவளுக்குத் தெரியவே இல்லை. தோழிகள் இருவரும் ஒன்றாக ட்ரெயினிங் செல்வதும், ஹாஸ்டல் செல்வதுமாக இருக்க, அப்பொழுதுதான் தன்வி, முகிலனின் காதல் துவங்கியது.

காதல் என வந்துவிட்டாலே, நட்புக்கு இடையில் சிறு இடைவெளி விழுவது சகஜம் தானே. இருவரும் ஒரே ஹாஸ்டல் ஒரே அறையில் இருந்தாலும், சென்று சேரும் நேரம் வேறாக இருக்க, அன்று தன் வேலையை முடித்த சுஹானசா அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தாள்.

வயிறு குரல் எழுப்பி அதன் இருப்பை அவளுக்கு உணர்த்த, ‘வெஷக்குந்நு’ (பசிக்குது) எண்ணியவள், ‘ஹாஸ்டல் போனா, இன்னைக்கும் அதே தோசையைப் போட்டு கொல்லுவாங்க… தனு தப்பிச்சுட்டா, நாமளும் தப்பிப்போம்’ எண்ணியவளது கால்கள், ஹாஸ்டல் பக்கம் நகராமல், எதிர் வரிசையில் இருந்த கேரளா ரெஸ்ட்டாரண்டை நோக்கி நடை போட்டது.

‘தனியா போக ஒரு மாதிரிதான் இருக்கு… ஆனா என்ன பண்றது?’ எண்ணியவள் அந்த எண்ணத்தை விடுத்து பத்தே நிமிடங்களில் ஹோட்டலில் இருந்தாள்.

ஆப்பமும் முட்டை கறியும் ஆர்டர் செய்தவள், தன் அலைபேசியில் பார்வையைப் பதிக்க, எதுவோ தன் முதுகைத் துளைக்கும் உணர்வு. புலன்கள் எல்லாம் விழிப்படைய, சட்டென நிமிர்ந்தவள், தன்னைச் சுற்றி பார்வையைப் பதித்தாள்.

அவளைக் கண்ட நாள் முதல், அவளது நிழல் போலவே தொடரும் ஜேம்ஸ், சட்டென அவளது முதுகின் பின்னால் மறைந்துகொள்ள, அவனை அவளால் கண்டுகொள்ள முடியவில்லை. பார்வைக்கு எதுவும் தட்டுப்படவில்லை என்றாலும், சுஹாவின் உள்ளுணர்வு எதையோ உணர்த்திக் கொண்டே இருந்தது.

‘இதென்ன இப்படி…? அதுவும் கொஞ்ச நாளா தனியா இருக்கும்போது யாரோ என்னை ஃபாலோ பண்ற மாதிரி… யாரோ என்னை பாக்கற மாதிரி ஒரே படபடப்பா இருக்கே’ தனக்குத் தானே எண்ணிக் கொண்டாள்.

அதே நேரம் அவளைப் பின்தொடரும் ஜேம்சுக்கோ, அவள் தன்னை உணர்வதில் கொள்ளை ஆனந்தம் கொண்டான். ‘எப்படியும் நானாகப் போய் அவளிடம் பேசப் போறதில்லை. அவளாகவாவது என்னை உணரட்டுமே’ தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அவன் முன்னால் வந்து நின்ற வெயிட்டரிடம், சுஹாவை சுட்டிக் காட்டி, அவள் ஆர்டர் செய்த உணவு வேண்டும் எனச் சொல்ல, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாலும், அவன் கேட்டதை கொண்டுவந்து கொடுக்க மறக்கவில்லை.

அவள் உணவை முடிக்கும் முன்பே, தன் உணவை முடித்துக் கொண்டவன், அவளுக்காக காத்திருந்தான். அவள் வெளியே வர, தன் பல்சரை தள்ளிக்கொண்டு அவள் பின்னால் சற்று இடைவெளி விட்டு பின்தொடர்ந்தான்.

அவளது சுருட்டை தலைமுடியும், அவள் அணிந்திருந்த அடர் நீல வர்ண குர்தாவும், இளம் நீல வர்ண டைட் ஜீன்சும் என அவன் பார்வைகள் அவளை அளவிட்டுக் கொண்டிருந்தது. அவசரமே இல்லாத நிதான நடையில், அவளது கால் கொலுசு கொஞ்சமாக சிணுங்கி துணை செல்ல, அதை உள்ளுக்குள் ரசித்தவாறே நடந்தான்.

அவனது ரசனையில் இடையிட்டது அவளது அலைபேசி ஒலி.

அச்சா…(அப்பா) என அவள் மலையாளத்தில் துவங்கி, அவள் பேசிய பேச்சுக்கள் எல்லாம், அவனுக்குள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பதியப்பட்டது.

அவனது தாயும் மலையாளி என்பதால், பதிமூன்று வயதுவரைக்கும் அவனும் மலையாளம் பேசிப் பழகியவந்தான். அதை வாய்விட்டு பேசி பல வருடங்கள் கடந்திருந்தாலும், அவனது தாய்மொழி அத்தனை சீக்கிரம் அவனுக்கு மறந்து போகுமா என்ன?

எப்படி இருக்கீங்க? அம்மா எப்படி இருக்காங்க? நானா… லீவுக்கா… இன்னும் ரெண்டு மாசம் ஆகும்… ம்… வேலை எல்லாம் நல்லா போகுது அவள் அலைபேசியில் பேசியவாறே நடக்க, அவனும் அவள் பேச்சில் ஒரு காதும், அவள்மேல் ஒரு கண்ணுமாக நடந்து கொண்டிருந்தான்.

அவளோ திடுமென, எந்தா… செக்கனை கண்டு வச்சுட்டு உண்டுந்தோ (என்ன மாப்பிள்ளை பாத்திருக்கீங்களா? அவளது அதிர்ந்த குரலில் தன் கையில் இருந்த வண்டியைத் தவறவிட்டு, சரிந்து, இறுதி நொடியில் சுதாரித்து கால் ஊன்றி நின்றான்.

எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்… மூணு நாலு வருஷம் போகட்டும் அவள் உறுதியாக உரைக்க, அந்தப்பக்கம் என்ன சொல்வார்கள் என, சுஹானசாவை விட, ஜேம்ஸ் அதிக பதட்டத்தோடு காத்திருந்தான்.

ம்… செரி… கழிச்சு(சாப்ட்டேன்) அம்மா எங்கே? அலைபேசி கை மாற, அலைபேசியில் பேசியவாறே நடையைத் தொடர்ந்தாள். அவளது ஹாஸ்டலை அவள் நெருங்கி இருக்கவே, அவள் பிரிந்து செல்லும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்தவன், வண்டியில் ஏறி அமர்ந்தவன், அதை ஸ்டார்ட் செய்து அவளைத் தாண்டிச் சென்றான்.

அவளைத் தாண்டிச் செல்கையில், அவள் முகத்தில் கவலையோ, சோகமோ, கோபமோ, பிடித்தமின்மையோ ஏதோ

Enjoying the preview?
Page 1 of 1