Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasai Megam...
Aasai Megam...
Aasai Megam...
Ebook437 pages3 hours

Aasai Megam...

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580109202826
Aasai Megam...

Read more from Infaa Alocious

Related authors

Related to Aasai Megam...

Related ebooks

Reviews for Aasai Megam...

Rating: 4.583333333333333 out of 5 stars
4.5/5

24 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    I have done some negative reviews for some of your stories. But this time it’s absolutely positive... I hope, even though my reviews were negative, it would be constructive....

    This story is absolutely insane.... very good characterisations..... the moment the hero realised his mistake, he was back to his romantic mode.... extraordinary
    Thank you very much

Book preview

Aasai Megam... - Infaa Alocious

http://www.pustaka.co.in

ஆசை மேகம்...

Aasai Megam…

Author:

இன்பா அலோசியஸ்

Infaa Alocious

For more books

http://www.pustaka.co.in/home/author/infaa-alocious-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

மேகம் - 1

மேகம் - 2

மேகம் - 3

மேகம் - 4

மேகம் - 5

மேகம் - 6

மேகம் - 7

மேகம் - 8

மேகம் - 9

மேகம் - 10

மேகம் - 11

மேகம் - 12

மேகம் - 13

மேகம் - 14

மேகம் - 15

மேகம் - 16

மேகம் - 17

மேகம் - 18

மேகம் - 19

மேகம் - 20

மேகம் - 21

மேகம் - 22

மேகம் - 23

மேகம் - 24

மேகம் - 25

மேகம் - 26

மேகம் - 27

மேகம் - 1

சூரியன் கிழக்கில் தன் கதிர்களை வீசி எட்டிப் பார்க்க, அவன் விழிக்கும் முன்பே, எழுந்து, ஆதவனுக்கு காலை வணக்கம் கூறிக் கொண்டிருந்தான் அமர் என அனைவராலும் அழைக்கப்படும் அமர்நாத்.

தூய்மையான வெண்மை உடை, சிறுவர்கள் அனைவரும் பேண்ட் போட ஆசைப்படும் இந்த காலத்தில், அரைக்கால் சட்டையோடு, காலுக்கு வெண்மை நிற ரீபோக் ஷூவுடன், சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான்.

கடல் மணலில் கால் ஊன்றி, யாரைப் பற்றியும் சிறிதும் கவலை இல்லாமல், தன் உலகில் மூழ்கி இருந்தவன் முகத்தில் அமைதியையும் தாண்டி, ஒருவித அழுத்தம், பிடிவாதம் ஒளிர்ந்தது.

அமர்...., அமர்நாத் மீன் எக்ஸ்போர்ட் கம்பெனியின் எம்டி, அமர் அண்ட் கோ வின் பங்குதாரர். இப்படி அவனுக்கு பல முகங்கள். ஆறடி உயரம், அலையலையான சிகை, பிடிவாதமான கண்கள், கூர்மையான நாசி, கச்சிதமான மீசை, அழுத்தமான உதடுகள், தினமும் உடற்பயிற்சி செய்வதால், கட்டுக்கோப்பான தேகம் கொண்டவன்.

அவனைப் பற்றி இன்னும் சொல்வதாக இருந்தால்...., தன் முடிவுகளை தானே எடுப்பவன். தான் எடுத்த முடிவை எதற்காகவும், யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டான். எடுத்த முடிவில் உறுதியாக இருப்பான். இது அவனது பத்து வயது முதல் துவங்கிய பழக்கம்.

உதாரணமாக பத்து வயதில் அனைவரும் பால் பாயின்ட் பேனா, ஜெல் பேனா என கையில் வைத்துகொண்டு சுற்ற, இன்க் பேனா தான் வேண்டும் என அதை வாங்கி வைத்துக் கொண்டவன்.

பெரியவர்கள், இன்க் கொட்டிவிடும், கை பாழாகும் என அவனை சமாதானம் செய்ய முயல, நான் கவனமாக பார்த்துக் கொள்வேன், என உரைத்து, இன்றுவரை, பலவிதமான ஹீரோ ‘பென்’களோடு சுற்றுபவன்.

அந்த வயதில் எடுத்த முடிவையே மாற்றவில்லை என்றால்..., அவன் எப்படிப்பட்டவன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அவனோடு அவனது பிடிவாதமும், உறுதியும் சேர்ந்தே வளர்ந்தது. நான் இப்படித்தான் என இருப்பவன். அவனைச் சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் அவனைப் பற்றி தெரியும்.

அவன் எடுக்கும் முடிவுகள் சரியாகத்தான் இருக்கும் என அனைவரும் நம்புவார்கள். அது உண்மையும் கூட. எதையுமே தீர விசாரிக்காமல் செய்ய மாட்டான். பின்னர் நடப்பதை, முன்கூட்டியே கணிக்கும் வித்தகனும் கூட. எனவேதான் அவனால் திறம்பட ஒரு தொழிற்சாலையையே நடத்த முடிகிறது.

நிதானமாக தன் ஓட்டத்தையும், சூரிய நமஸ்காரத்தையும் முடித்தவன், தன் ஸ்கார்ப்பியோ நிறுத்தியிருக்கும் இடத்திற்குச் சென்றான். அதென்னவோ அவனது பென்ஸ் காரை விட, இந்த ஸ்கார்ப்பியோவை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அலுவலகத்துக்கு செல்லும் நேரம் தவிர, மற்ற இடங்களுக்கு இந்த ஸ்கார்ப்பியோ தான் அவனுக்கு மிகவும் வசதி.

காற்றில் உப்புக்காற்றின் சுகந்தத்தை அனுபவித்தவன், நிதானமாக ஸ்கார்ப்பியோவை செலுத்தியவன், வீட்டு போர்டிகோவின் ஓரத்தில் ஸ்கார்ப்பியோவை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

மாமா...., மழலையில் கூவியவாறு தன் கால்களை கட்டிக்கொண்ட பூங்கொத்தை, கைகளில் வாரி அணைத்துக் கொண்டான்.

பப்பிம்மா...., எப்போடா வந்தீங்க என் செல்லக் குட்டி. பாத்து எவ்வளவு நாள் ஆச்சு...., அவளை கைகளில் தூக்கிப் போட்டு பிடித்தவன், வயிற்றில் வாய் வைத்து ஊதினான்.

அந்த தேவதையோ கிளுக்கிச் சிரித்தவள்...., இப்போதா வந்தோம்..., அவன் கழுத்தை கட்டிக் கொண்டது.

ஒரு நிமிடம் குழந்தையிடம் நிலைத்து இருந்தவன், அடுத்த நிமிடம், பார்வையை சுழல விட்டவன், தன்னை நெருங்கி வந்த தங்கையிடம், வாம்மா காவ்யா...., எப்படி இருக்க? மாப்பிள்ளை எங்கே....?, அவளிடம் கேட்டான்.

நல்லா இருக்கோம்ண்ணா..., அவர் வரலை, காரில் எங்களை அனுப்பி வச்சாங்க. நீ எப்படிண்ணா இருக்க....?, அவள் பதிலில் புருவம் சுருக்கி ஒரு நொடி யோசனையை பிரதிபலித்தவன், அவள் கேள்வியை உணர்ந்தாலும், அதை உணராதவனாக பாவித்து,

எனக்கென்னம்மா குறைச்சல்..., சும்மா ராஜா மாதிரி  இருக்கேன்..., கையில் இருந்த குழந்தையை கொஞ்சியவாறே சோபாவில் அமர்ந்தான்.

ஆமா ராஜா..., பட்டத்து ராணியை எங்கேன்னு கேளு..., நொடித்தார் அவன் தாய் ரஞ்சிதம்.

தாயை அழுத்தமாகப் பார்த்தவன், அவருக்கு பதில் சொல்லத் தயாராக இருக்கவில்லை.

ஆனாலும்...., அதான் முறைப்பொண்ணு கையில் இருக்காளே, ஏய்..., இந்த மாமாவை கட்டிக்கிறியா....?, எவ்வளவு நாள் தாயிடம் முகம் காட்ட முடியும்? எனவே கேலியில் இறங்கினான்.

தாய் அவனை இப்பொழுது உறுத்து விழிக்க, ஐ..., நான் மாமாவை கட்டிக்கப் போறேனே..., அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கொஞ்சியது அந்த குருந்து.

ஏய்..., வாயை மூடுடி..., பேச்சைப்பார்..., காவியா கடிந்துகொள்ள,

அம்மா..., உங்க பொண்ணைப் பாருங்க. உங்க பையனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லுறா...?, தாயிடம் முறையிட்டான்.

நீ மட்டும் சரின்னு சொல்லு..., பொண்ணு ரெடியா இருக்கு..., காவியாவும் அவனுக்கு இசைந்தே பதில் கொடுத்தாள்.

அவளுக்கு பதில் கொடுக்க அவன் முனைய, மாமா...., ஒரு நிமிஷம்..., அம்மா நீங்க சும்மா இருங்க..., அனைவரையும் அடக்கிய சுட்டிப்பெண், அவன் இரு கன்னங்களிலும் அழுத்தமாக முத்தமிட்டாள்.

என்னடி பட்டு..., இந்த மாமா மேலே திடீர்ன்னு இம்புட்டு பாசம்...., அவள் தலையில் முட்டியவாறு அவன் கொஞ்ச,

அதெல்லாம் ஒண்ணும் இல்லை. உங்களைப் பார்த்த உடனே இதை கொடுக்கச்சொல்லி அத்தை சொன்னாங்க அதான்...., பொய் பேசத் தெரியாத குழந்தை உண்மையை உரைத்தது.

ஒரு நிமிடம் அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது.

ரஞ்சிதமும், காவியாவும் அவன் முகத்தையே இமைக்காமல் பார்க்க, மறந்தும் கூட தன் முகத்தில் எதையும் வெளிப்படுத்தாதவன் முகமோ இயல்பைத் தொலைக்கவே இல்லை.

அவன் இயல்பை தொலைத்திருந்தால் அவனால் எப்படி இவ்வளவு பெரிய மனிதனாக இருக்க முடியும்?

அங்கிருந்த அமைதியைக் கலைத்து, ஓ...., ஒரு மாதிரி குரலில் உரைத்தவன், சரி மாமா குளிச்சுட்டு வாரேன்..., நீங்க அம்மம்மா கிட்டே இருங்க சரியா...., முதலில் இருந்த உற்சாகம் சுத்தமாக வடிந்துவிட, அதை குழந்தையிடம் காட்டிக்கொள்ள மனமில்லாமல் அங்கிருந்து செல்ல முயன்றான்.

அவன் குரலில் இருந்த மாறுபாட்டை பெரியவர்கள் உணர்ந்து கொள்ள, குழந்தையோ..., மாமா..., நீங்களும் உம்மா தாங்க...., அவன் கழுத்தை கட்டிக்கொண்டு விட மறுத்தாள்.

பெரியவர்கள் அவன் பதிலுக்காக மூச்சடக்கி காத்திருக்க, அவனோ, மாமா இன்னும் குளிக்கவே இல்லடா செல்லம். குளிச்சுட்டு வந்து ப்ரெஷ்ஷா கொடுக்குறேன் சரியா....?, அதில் இருக்கும் மறுப்பை புரிந்துகொள்ள வயதில்லாமல் குழந்தை சமாதானமாகிவிட, பெரியவர்கள் முகங்களோ கவலையை பிரதிபலித்தது.

குழந்தைக்காக என்று கூட தன் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ளாமல் இருக்கும் அவனை, வேதனையாக பார்க்க முடிந்ததே தவிர, வேறு எதுவும் செய்ய முடியாமல் நின்றிருந்தார்கள்.

சோபாவில் இருந்து எழுந்தவன், வச்ச புள்ளியை கமாவா மாற்றும் ஐடியா எதுவும் எனக்கு இல்லை. நான் சொல்லுறது புரியும்னு நினைக்கிறேன், அழுத்தமாக அவர்களிடம் உரைத்தவன், தன் அறைக்குச் சென்றான்.

அவன் செல்லவே..., என்னடி இது...?, ரஞ்சிதம் கவலைக் குரலில் கேட்க, அம்மா..., அவரை அடக்கியவள்,

பாமாக்கா...., கொஞ்சம் சுவாதியை கூட்டிபோய் ஹார்லிக்ஸ் கொடுங்க..., குழந்தையை வேலைக்காரியிடம் ஒப்படைத்தவள், தாயின் பக்கம் திரும்பினாள்.

உங்க பேத்தி ரொம்ப உசாரு...., நாம என்ன பேசினாலும் அப்படியே அவ அத்தை கிட்டே வத்தி வச்சுடுவா. அதான் அவளை அனுப்பினேன்..., குறைபோல் பெருமைப் பட்டது அந்த தாயுள்ளம்.

ரஞ்சிதத்தின் முகம் கவலையில் இருந்து தெளியாமல் இருக்கவே, தாயின் கைபிடித்து சோபாவுக்கு அழைத்து வந்தவள், என்னம்மா...?, ஆதரவாக தோள் தொட்டு கேட்டாள்.

உங்க அண்ணன் இப்படியே இருந்துடுவானாடி....? என் வம்சம் அவனோடவே முடிஞ்சுடுமா...? என் பெத்த வயிறு பதறுதுடி.., ஒரு வருஷமா ரெண்டு வருஷமா..., நாலு வருஷண்டி..., இதைச் சொல்லும் முன்பே, அவர் கண்களில் கண்ணீர் உருண்டு ஓடியது.

மகனின் பிடிவாதத்தை குழந்தையில் இருந்தே உணர்ந்தவராயிற்றே, அவன் தன்னை மாற்றிக் கொள்வான் என்ற நம்பிக்கை இல்லாததாலேயே அவ்வாறு குமுறினார்.

என்னம்மா நீங்க...? அப்படில்லாம் எதுவும் ஆகாது..., அவள் குரலிலும் நம்பிக்கையின்மையே அதிகம் ஒலித்தது, அதை தாயிடம் காட்டினால் இன்னும் கவலைப்படுவார் என்பதால் அதை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டாள்.

"இல்லடி..., எனக்கு நம்பிக்கை இல்லை. உங்க அண்ணன் மனசு மாறுவான்னு எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்லை. அவன் இப்படி தனி மரமா நிக்கதை பார்க்கவா நான் இன்னும் உசுரோட இருக்கேன்...?

"சாப்பிடாமல் கொள்ளாமல், பேசாமல் இப்படி எதையாவது ப்ளாக் மெயில் செய்து அவனை வழிக்கு கொண்டு வரலாம்ன்னா..., அதுக்கும் முடியாமல், உன் கல்யாணத்தப்போவே தோத்துப் போய் தான் உனக்கு முதல்ல கல்யாணம் செய்து அனுப்பினோம்.

"அப்படி என்னடி பிடிவாதம் இந்த புள்ளைக்கு. அவளும் கட்டுனா இவனைத்தான் கட்டுவேன்னு இருக்கா. இவனோ எனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் என்ற ஒன்றே கிடையாதுன்னு சொல்லிட்டு அலையிறான்.

"இவனுக்காக பாக்குறதா...? இவனுக்காக காத்திருக்கும் அவளுக்காக பாக்குறதான்னு எதுவுமே புரியலையே..., அவளுக்கும் வயசு இருபத்தாறு ஆச்சு. அவ அப்பாம்மா முகத்தை பார்க்க முடியலை. இப்போகூட, அந்த பிஞ்சு கேட்டுதேன்னு கூட, அது கேட்டதை இவன் செய்யலை.

இவனா மனசு மாறுவான்னு என்னை நம்பச் சொல்லுற...? இவன் மனசு மாறணும்னு..., இந்த பனிமயமாதா சர்ச்சுக்கு கூட வேண்டுதல் வைத்திருக்கேன். ஏதாவது ஒரு சாமி கண்ணைத் தொறக்காதான்னு தான், இடைவிடாமல் புலம்பும் தாயை, என்ன சொல்லி சமாதானம் செய்யவென்று தெரியாமல் திணறினாள் காவியா.

அம்மா..., இப்படி கவலைப்பட்டு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க. கண்டிப்பா இந்த முறை ஏதாவது ஒரு முடிவு தெரியாமல் நாங்க இங்கே இருந்து கிளம்புறதா இல்லை. பாத்துக்கலாம்மா..., ஒப்புக்கு தாயிடம் பேசத்தான் அவளால் முடிந்தது. உள் மனமோ, அண்ணன் அவனாக மனது மாறாமல் எதுவும் செய்ய முடியாது என்பதை அவளுக்கு அழுத்தமாக எடுத்துக் கூறியது.

அறைக்குள் நுழைந்த அமரோ..., கதவை அறைந்து சாத்திய வேகத்திலேயே அவன் கோபம் தெரிந்தது. தன் கையை ஓங்கி சுவற்றில் குத்திக் கொண்டவன், உனக்கு உம்மா வேணுமா...? எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால்...., இப்படி கேட்டிருப்ப...? என் முன்னாடி வந்து கேட்டுப் பாருடி...., மீண்டும் சுவற்றில் தன் கைகளைக் குத்தினான்.

‘எங்கே..., உன் மனசில் கை வைத்து சொல்லு..., உன் முன்னால் நின்று அவள் அதைக் கேட்டால்..., நீ மறுப்பாயா...?’, மனசாட்சி குரல் கொடுக்க, அதை அவ கேட்டுப் பார்க்கட்டும்...., கண்கள் சிவக்க அவன் கத்த, அது அவன் ஆழமான ஆசையா...? இல்லை கோபமா என்பது அவனைப் படைத்த கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

*****

தன் கையில் இருந்த அலைபேசியை ஆயிரம் முறையாவது சரிபார்த்துவிட்டாள் அஞ்சு என அனைவராலும் அழைக்கப்படும் அஞ்சுகம். காலைக் கடன்கள் எதுவும் முடிக்காமல், அலைபேசியோடு அமர்ந்து விட்டாள்.

‘ஒரு வேளை சிம் சரியா இல்லையோ...?’, வேகமாக அதைக் கழட்டி பொருத்தியவளால் அடுத்த ஐந்து நிமிடம் கூட பொறுமையாக இருக்க முடியவில்லை.

‘ஒரு வேளை சைலன்ட்ல இருக்கோ...?’, அதுவோ புல் வால்யுமில் இருப்பதைக் காட்ட, மனம் சோர்ந்து போனது.

அப்படியே அது சைலன்ட்டில் இருந்தால் கூட, மிஸ் கால் இருக்குமே என்ற புரிதல் எதுவும் அப்பொழுது அவளிடம் இருக்கவில்லை.

தான் எதிர்பார்த்த இடத்தில் இருந்து அழைப்பு வரவில்லை என்றாலும், தானாகவே அழைக்கும் தைரியம் அவளிடம் இருக்கவில்லை. ‘அங்கே என்ன சூழ்நிலையோ...?’, இதுதான் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

ஊருக்குப் போகும் முன்னர், இந்த முறை இதற்கு ஒரு முடிவு தெரியாமல் வர மாட்டேம்மா..., அண்ணன் கர்ணா தாயிடம் உரைத்துச் சென்றதே, காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

‘அண்ணா..., எதுவும் அவசரப்பட்டு பேசிடாதே...’, மனதுக்குள் மட்டுமே அவளால் புலம்ப முடிந்தது.

தனக்காக கவலைப்படும் அனைவரிடமும், எதையும் பேசிவிடும் தைரியம் இப்பொழுது இருக்கவில்லை. மகளின் காதலை எத்தனை பெற்றோர் சாதாரணமாக எடுத்திருக்கிறார்கள்? ஆனால் என் பெற்றோர் எடுத்தார்களே, அவர்களுக்கு நான் என்ன செய்தேன்?

தங்கையின் காதல் விவகாரம் தெரிந்தும், எந்த அண்ணன் பொறுமையாக இருப்பான்...? என் அண்ணன் இருந்தானே... அவனது நிம்மதிக்காக எதுவும் நான் திரும்ப செய்யவில்லையே..., இந்த உணர்வே அவளை இப்பொழுது அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

அம்மா..., ஐயா உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க..., சுந்தரியின் குரல் வெளியே ஒலிக்க, அப்பொழுதுதான் நேரம் ஒன்பதைத் தாண்டி, நாற்பது நிமிடங்கள் கடந்திருப்பதையே அவள் உணர்ந்தாள்.

‘ச்சே..., ஏதோ நினைப்பில் அப்பாவை காக்க வச்சுட்டனே...’, குற்றவுணர்வு எட்டிப் பார்க்க, இதோ வரேன் சுந்தரி..., குரல் கொடுத்தவள், அடுத்த பதினைந்து நிமிடங்களில் குளித்து, கிளம்பி அவர்முன் அமர்ந்தாள்.

சாரிப்பா..., எழ கொஞ்சம் நேரமாயிடுச்சு அதான்..., அவர் கண்களைப் பார்க்காமல் உரைக்க,

நிஜமாவே எழதுக்குத்தான் நேரமாச்சா...?, தேவி பாத்திரத்தை நங்கென வைக்க, அதுவே அவரது கோபத்தின் அளவை உரைத்தது.

ஏய்..., நீ போ அங்கிட்டு..., புள்ளையை குறை சொல்லலன்னா இவளுக்கு பொழுதே போகாது. அம்மாடி..., தலையை ஒழுங்கா துவட்டிக்கிறது தானே. சளிப் பிடிச்சுக்கும்மா..., மனைவியைக் கடிந்தவர், மகளிடம் அக்கறையாக கேட்டார்.

தந்தையின் கரிசனத்தில் கண் கலங்கியவள், சாப்பிட்டு துவட்டிக்கிறேன்பா. இன்னைக்கு கொஞ்சம் லேட்டா ஆபீஸ் வாரேன். நீங்க அந்த எக்ஸ்போர்ட் ஆர்டரை கொஞ்சம் கவனிங்க..., தந்தையிடம் உரைத்தாள்.

அவர்கள் பேச்சைக் கேட்ட தேவிக்கு கோபம் தலைக்கேற..., ஆமா ஆமா..., வாழ்க்கையை விட, அந்த ஆர்டர் தான் பெருசு. இங்கே ஒருத்தி கேள்வி கேட்டாளே..., அவளுக்கு பதில் சொல்லணும்னு இருக்கா...?.

நான் உன்னை போன்னு சொன்னேன்..., முருகன் கோபமானார்.

ஆமா..., என்னையவே அடக்குங்க. உங்க பொண்ணை அடக்காதீங்க. புருஷன் வீட்டில் நாட்டாமை பண்ண வேண்டிய வயசில், வீட்டில் உக்காந்திருக்கா..., அவர் மேலே பேசும் முன்னர், முருகன் அவரை அடிக்க கை ஓங்கிவிட்டார்.

அப்பா...., தந்தையைத் தடுத்தவள், அவங்க மனசுக்குள் இருப்பதை பேசி கொட்டிடட்டும்ப்பா. அவங்களாலாவது அது முடியுதே. அதை நினைச்சு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான்..., அவர்களுக்கு வேதனையை மட்டுமே கொடுப்பதால், தாயின் கோபத்தை எப்பொழுதுமே பெரிதாக அவள் எடுத்துக் கொள்ள மாட்டாள்.

அம்மாடி...., தேவி மகளை இழுத்து அணைத்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து கண் கலங்க, ஆமா..., இதுக்கு எதுக்கு அவளை குறை சொல்லணும், இப்படி அழணும்..., ராஜாத்தி..., நீ போய் ரெஸ்ட் எடு, உங்க அம்மா சாப்பாட்டை ரூமுக்கு கொண்டு வருவா..., மகளை அனுப்பிய அவர் குரலும் நெகிழ்ந்து இருந்தது.

முருகன், தன் தாயின் பெயரான அஞ்சுகத்தையே தன் மகளுக்கும் வைத்திருப்பதால், அவள் பிறந்தது முதல், இன்றுவரை அவளை பெயர் சொல்லியே அழைத்தது கிடையாது.

அம்மாடி..., ராஜாத்தி..., கண்ணு..., இப்படியே அழைத்து பழகிவிட்டார்கள். அதிலும், அஞ்சு பிறந்த பிறகுதான்..., அவருக்கு இந்த வசதி வாய்ப்புகள் வந்தது என்பதால், அவள்மேல் தனிப் பிரியம்.

பாசம் முழுவதையும் அவள்மேல் கொட்டி வளர்த்தார். மகன் கர்ணா மீது கூட அவருக்கு அவ்வளவு பாசம் கிடையாது. அஞ்சு கேட்டால், ஆசைப்பட்டால் எதையும் நடத்திக் கொடுத்து விடுவார். அந்த சுதந்திரம் அந்த வீட்டில் அவளுக்கு மட்டுமே இருந்தது.

முருகன் தன் மனைவியிடம் கூட எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார். தன் சொத்துக்கள் எவ்வளவு, வருமானம் எவ்வளவு, என்ன தொழில் செய்கிறோம்? எதுவும் தேவிக்குத் தெரியாது. கர்ணாவுக்கே அவன் பெயரில் ஒரு தொழிலை ஒப்படைத்த பிறகுதான் அதில் வரும் வருமானம் அவனுக்குத் தெரியும்.

ஆனால்..., அஞ்சுவிற்கு..., அவர் ஆரம்பிக்கும் தொழில் அனைத்தும் முதலில் அவளுக்குத்தான் தெரியும். அவள் கையால் எதையும் வாங்காமல் அவர் ஒரு தொழிலில் காலடி எடுத்து வைக்க மாட்டார்.

அவள் பேனா எடுத்துக் கொடுக்காமல், எதிலும் கையெழுத்து கூட போட மாட்டார். மகள் மனம் நோக எதையும் யோசிக்கக் கூட தயங்குவார். இவ்வளவு செய்தாலும்..., முடிவெடுக்கும் நிலை வந்தால், இறுதி முடிவு அவருடையதாக மட்டுமே இருக்கும்.

இப்படி ஒரு தந்தை தன்மேல் வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்றத் தானே இவ்வளவு போராட்டம்...’, என்பதை எண்ணும்பொழுது, அஞ்சுவின் கண்கள் வெந்நீரை வடித்தது.

அவர்தான் மகளது வாழ்க்கை இப்படி இருக்க மறைமுகக் காரணம் என்பதை அறிந்தால்..., அவரது மனம் என்ன பாடுபடும் என்பதை உணர்ந்து, அதற்காகவும் கலங்கியது அஞ்சுவின் மனம்.

மேகம் - 2

அலுவலகம் செல்ல கிளம்பி கீழே இறங்கி வந்தவன், தங்கை குழந்தை முதல் அனைவரும் தனக்காக காத்திருப்பதைப் பார்த்து அலுப்பாக உணர்ந்தவன், ‘இன்று மட்டும் என்ன புதுசா...?’, என எரிச்சல் கொள்ளவும் மறக்கவில்லை.

அதைவிட...., வழக்கத்துக்கு மாறாக, அவனது தந்தை தேவதத்தன் அங்கிருப்பதைப் பார்த்தவனது விழிகள் கூர்மையாக, அவர்களைக் கண்டுகொள்ளாமல், வாயில் பக்கம் திரும்பினான்.

அமர்..., தங்கச்சி வந்திருக்கா..., அவகூட ஒரு வேளை சாப்பாடு உட்கார்ந்து சாப்பிடாமல், அப்படி என்ன வேலை..., ரஞ்சிதத்தின் குரல் அவனைத் தடுக்க, தான் இப்பொழுது போனால்..., எப்பொழுது வீட்டுக்குள் வருவோம் என்பது அவனுக்கே தெரியாததால், மறுக்காமல் வந்து அமர்ந்தான்.

அவன் முன்னால் தட்டை வைத்த ரஞ்சிதம், அவன் ப்ளேட்டில் புட்டும், கடலைக் கறியும் பரிமாறியவர், கணவனின் புஜத்தில் கையால் இடித்தார். அத்தோடு..., ‘பேசுங்க...’, என அவரைத் தூண்டவும் செய்தார்.

‘இருடி...’, மனைவிக்கு கண்களால் சமாதானம் சொன்னவர், அமரின் முகத்தை பார்ப்பதும், சாப்பாட்டை பார்ப்பதுமாக தவித்தார்.

அவருக்கு புட்டும், கறியும் என்றால் அவ்வளவு பிடிக்கும், அதைக் கொடுத்துவிட்டு, சாப்பிட விடாமல் செய்யும் மனைவியை கடிந்து கொள்ளவும் முடியாமல், மகனிடம் பேசவும் முடியாமல் திண்டாடினார்.

தந்தையின் தவிப்பைப் பார்த்த காவ்யா, பொங்கிய சிரிப்பை இதழ்களுக்குள் பதுக்கியவள், அவரை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள்.

இவற்றைப் பார்த்தும் பாராதவனாக பாவித்தவன், சாப்பாட்டில் கவனமானான்.

மகனுக்கும், மனைவிக்கும் இடையில் திண்டாடிய தத்தன், முதலில் வயிற்றை சமாதானம் செய்வோம் என்ற முடிவோடு, சாப்பாட்டில் அவர் கையை வைக்க, வேகமாக அவர் கை பற்றி தடுத்தார் ரஞ்சிதம்.

அவரோ பரிதாபமாக மனைவியை நிமிர்ந்து பார்க்க, கண்களால் மகனைக் காட்ட, ‘இவ பேசாமல் விட மாட்டா...’, என்ற முடிவிற்கு வந்தவர், மகனிடம் பேசும் முடிவிற்கு வந்தார்.

அவருக்கு ஏற்கனவே தெரியும், மகன் ஒரு முடிவெடுத்தால், பதினைந்து வயதிலேயே அவனிடம் அதைப் பற்றி கேட்க முடியாது, அப்படி இருக்கையில், முப்பது வயதில் அவனிடம் கேள் என்றால்..., அவரும் என்னதான் செய்வார்...?

ஒரு வழியாக மனதை திடப்படுத்தியவர், பிறகு.., அமர்..., உன் பாக்டரி எல்லாம் எப்படி போகுது...?, பேச்சை மெதுவாகத் துவங்க, ரஞ்சிதமோ ‘என்ன பேசச்சொன்னால்..., மனுஷன் எதைப் பேசுறார் பார்...’, எண்ணியவர், தலையிலேயே அடித்துக் கொண்டார்.

‘அட இரேண்டி...’, மனதுக்குள் சடைத்தவர், மகனின் முகம் பார்த்தார்.

அதுக்கென்ன...? நல்லாத்தான் போகுது. உங்களுக்கு என்ன கேக்கணுமோ நேரா கேளுங்க. சும்மா.. சுத்தி வளைச்சு பேசாதீங்க..., நேரடியாக கேட்டான்.

ஒரு நொடி தடுமாறியவர், அதை நொடியில் சம்மாளித்துக் கொண்டு, அது ஒண்ணுமில்ல.., நம்ம காவியா ஒரு சம்பந்தம் கொண்டு வந்திருக்கா..., மகனது முறைப்பை பார்த்தவர்,

அது.. அவ நாத்தனார் கிடையாது. நீதான் அவள கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டியே, பிறகும் நாங்க அதையே பேசுவோமா....? இது இங்கேயே  நம்ம உப்பள மத்தாயியோட மகள் தான்., மகனது கண்களில் தெரிந்த கனலில், வார்த்தையை அத்தோடு நிறுத்தினார்.

என்ன..., ரொம்ப புத்திசாலித்தனமா பேசுறோம்னு நினைப்போ...? புது டெக்னிக்கா இருக்கு. இத பத்தி நான் இன்னொரு முறை பேசத் தயாரா இல்லை. இனிமேல் இந்த பேச்சு பேசுறதா இருந்தால், நீங்க யாரும் இங்க இருக்க வேண்டாம். சென்னைக்கே போய்டுங்க..., இரக்கமே இல்லாமல் பேசினான்.

பொதுவாக இப்படி பேச்சு வந்தால்..., மகன்கள்தான் வீட்டை விட்டு போய்விடுவேன் என மிரட்டுவார்கள். ஆனால்..., அமர் இதிலும் வித்தியாசமானவனாக இருந்தான்.

என்னடா பேசுற...? நீயும் அவளை கட்ட மாட்ட. உனக்கு கல்யாணம் ஆகாமல் அவளும் யாரையும் கட்ட மாட்டேன்னு இருக்கா. எங்களுக்கு நீ இப்படி இருக்கதைப் பத்தி கவலையில்லை, ஆனா...., உனக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கை அழிஞ்சு போறதை பாத்துட்டு எங்களால் சும்மா இருக்க முடியாது...., ரஞ்சிதம், கோபமானார்.

எல்லாம் இவ வேலை தானா...?, தங்கையை அவன் முறைக்க,

ரஞ்சிதம்..., அதான் நான் பேசிட்டு இருக்கேன் இல்ல. நீ எதுக்கு வாயக் கொடுக்கற, தத்தன் இடைபுக, இனிமேல் நான் பேசிக்கறேன்..., நீங்க சும்மா இருங்க, கணவனிடம் சாடியவர், மகனிடம் திரும்பினார்.

"அவளை ஏண்டா குத்தம் சொல்லுற...? உனக்கே மனசாட்சின்னு ஒண்ணு இருந்தால் யோசிச்சு பார். இதுவே வேற வீடா இருந்தால்..., உன் அண்ணன் என் தங்கச்சியை கட்டிக்கிற வரைக்கும், நீயும் உன் அம்மா வீட்டிலேயே உக்காருன்னு அனுப்பி இருப்பாங்க.

ஆனா அவங்க அப்படி செய்தாங்களா? அதுக்குன்னு நாமளும் அவங்க முதுகுலே ஏறி மிதிக்க கூடாது. வைக்கப் போரில் நாய் மாதிரி, தானும் திங்க மாட்டேன்..., மாட்டுக்கும் கொடுக்க மாட்டேன்னா..., என்ன மனுஷண்டா நீ...?.

அம்மா...., தாயின் வாயில் இருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்பாராத அமர், அதிர்ந்து போய் அழைத்தான். அதுவும் தன்னை நாயோடு..., நினைக்கவே நெஞ்சம் ஆறவில்லை.

ரஞ்சிதம், தானுமே இப்படி பேசிவிட்டோம் என்பதை நம்ப முடியாமல் நின்றுவிட்டார். தன் பேச்சுக்கு..., காவியா இன்று உரைத்த வார்த்தைகள்தான் காரணம் என்பதை நன்கு உணர்ந்துகொண்டார். ஆனால் கொட்டிவிட்ட வார்த்தைகளை திரும்ப அள்ள முடியாதே, எனவே அமைதியாகிவிட்டார்.

மனமோ, காவியா உரைத்ததையே சுற்றி வந்தது. "அம்மா..., வீட்டில் அஞ்சு கிட்டே கல்யாண பேச்சை யாரும் எடுப்பதில்லையே தவிர, எல்லோருக்கும் மனசுக்குள் மலையளவு வருத்தம் இருக்கு. ஆனா..., யாரும் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவது கிடையாது.

"எனக்குத்தான் அவளைப் பாக்கும்போதெல்லாம் மனசு கிடந்து அடிச்சிக்குது. ஒவ்வொரு முறை நான் இங்கே வந்துட்டு போகும்போதும், அவங்க எப்படி இருக்காங்கன்னு அண்ணனைப் பத்தி கேட்கும்போது, அடிவயிறு கலங்குது.

"எப்படி இருக்க வேண்டிய பொண்ணு. மகாராணி மாதிரி அவளை அங்கே வைத்திருக்க, இங்கே அண்ணாவோட கையில் இருந்து கிடைக்கும் தாலிக்காக அவ காத்திருக்கான்னு நினைக்கும்போது, இங்கே அவளோட நினைப்பு இருக்கா, இல்லையான்னே

Enjoying the preview?
Page 1 of 1