Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manasellam Mathappu...!
Manasellam Mathappu...!
Manasellam Mathappu...!
Ebook149 pages1 hour

Manasellam Mathappu...!

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580106004914
Manasellam Mathappu...!

Read more from Jaisakthi

Related to Manasellam Mathappu...!

Related ebooks

Reviews for Manasellam Mathappu...!

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manasellam Mathappu...! - Jaisakthi

    http://www.pustaka.co.in

    மனசெல்லாம் மத்தாப்பு...!

    Manasellam Mathappu...!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 1

    ஆரம்பமே கோலாகலமாக இருந்தது!

    தன்னுடைய இண்டிகா காரை ஓட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தாள் நந்தினி. முகப்பிலேயே தோரணங்களெல்லாம் தொங்க விட்டிருந்தார்கள். அது ஒரு கல்யாண மண்டபம். அந்த கிளப் உறுப்பினர்களில் ஒருவருக்குச் சொந்தமானது. வழக்கமாக நட்சத்திர ஹோட்டல் ஏதாவது ஒன்றிலே தான் அவர்கள் மீட்டிங்கை வைப்பார்கள். இந்த முறை அந்த உறுப்பினர்தான் சொன்னார். எதற்காக ஓட்டலுக்கு வெட்டியாகக் காசைக் கொட்டிக் கொடுப்பது? நம்ம கல்யாண மண்டபமே கல்யாணம் இல்லாத நாள்லே ஃப்ரீயாத்தான் இருக்கும். அப்ப வச்சுக்கலாமா?" என்றார்.

    உடனே இன்னொருவர் கேட்டார். கல்யாண மண்டபம் ஃப்ரீயா இருக்கும். சரி. கல்யாண மண்டபத்தை ஃப்ரீயாக் கொடுப்பீங்களா? என்று. அதற்குக் கல்யாண மண்டபத்தின் சொந்தக்காரர் ஐய்யோ, அதைத்தானே நான் சொல்றேன். ஃப்ரீயா கொடுக்கறேன்னுதானே சொல்றேன்! என்றார்.

    'ஃப்ரீயா கொடுக்கறேன்' என்றவுடனே எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். சொந்த மண்டபம் என்பதால் கொஞ்சம் செலவு செய்து அலங்காரம் செய்தார் நல்ல சிவம், கல்யாண மண்டப உரிமையாளர். நந்தினி சந்தோஷமாக உள்ளே நுழைந்தாள். இந்த முறை குடும்ப உறுப்பினர்கள் கூட வந்திருந்தார்கள். புதிதாக ஒன்றிரண்டு முகங்கள் தென்பட்டன. அதிலே ஒரு முகம் வசீகரமாகவே இருந்தது.

    தன்னுடைய அம்மாவிடம் கேட்டாள். அம்மா நிறைய பேர் புதுசா வந்திருக்காங்களே? என்றார். அம்மா தீபலட்சுமி அந்த இளைஞனைக் கை காட்டி அவரையா சொல்றே? என்றார்.

    ஆமா! என்றாள் அவள். அவரு ஷ்யாம்மா. ஷ்யாம் தம்பி. கொஞ்சம் ஃபேமஸான ஆளு. அவங்க அப்பா நம்ம கிளப்ல மெம்பரா இருக்காரு. அவங்க சித்தி மெம்பரா இருக்காங்க. அப்பாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. சமீப காலமாக வரலை. இந்தத் தம்பியோட சித்தி ஷோபனாதான் வருவாப்ல. இன்னைக்கு ஏதோ ஷோபனாவுக்கு உடம்பு சரியில்லையாம் ஷ்யாம் அதிசயமா வந்திருக்காப்ல! என்றாள்.

    அது என்ன? அதிசயமான்னு சொல்றீங்க? என்று கேட்டாள் நந்தினி. ஷ்யாமுக்கு இந்த மாதிரிப் பொழுது போக்கறதெல்லாம் பிடிக்காது. ஆமா, மூணு நாலு மணி நேரத்தை வெட்டியா போக்குவீங்க. ஒரு இத்துனுண்டு செலவு பண்ணிட்டு பெரிசா தம்பட்டம் அடிச்சுப்பீங்கன்னு கிண்டல் பண்ணுவாப்ல! என்றாள்.

    ஓஹோ! என்றாள் நந்தினி. சரி, அப்ப அவரு பொழுதே போக்க மாட்டாரா? பொழுது போக்குக்கு என்ன செய்வாராம்? என்று கேட்டாள். அவன் ஒரு வித்தியாசமான பையன்மா. ஹார்ஸ் ரைடிங் பண்ணுவான். நீச்சலுக்குப் போவான். அப்புறம் அநாதை விடுதி அது இதுன்னு அங்கெல்லாம் போயிட்டு வருவான்! என்று சிரித்தாள் தீபலட்சுமி.

    கொஞ்சம் வித்தியாசம்தான்! என்று எண்ணிக் கொண்டாள் நந்தினி. அதே சமயத்தில் ஷ்யாம் அவர்களை நோக்கி வந்தான். தீபலட்சுமி ஹலோ! ஷ்யாம் என்னப்பா அதிசயம்? என்று கேட்டார். சும்மாதான். உங்களுக்கெல்லாம் ஷாக்கா இருக்கட்டுமேன்னுதான்! என்று சிரித்தான் அவன்.

    ஷ்யாம், நீ வந்தா எங்களுக்கு எதுக்குப்பா ஷாக்கா இருக்கப் போகுது? என்றார் தீபா. இவன் வந்தான்னா கொஞ்சம் ஷாக்காத்தான் இருக்கும்ப்பா! என்றார் நந்தினியின் அப்பா மாதவன்.

    அப்படிச் சொல்லுங்க அங்கிள்! என்று அவன் அதை ரசித்துச் சிரித்தான். ஏம்பா அப்படிச் சொல்றீங்க? என்றாள் நந்தினி.

    அப்பொழுதுதான் ஷ்யாம் அவளைக் கவனித்தான் இது யார்? என்பது போல அவர்களைப் பார்த்தான். இதாம்ப்பா எங்க பொண்ணு நந்தினி. இவ்ளோ நாள் படிப்பு படிப்புன்னு பிஸியா இருந்தா இப்பத்தான் கொஞ்சம் ஃப்ரீயா ஆயிருக்கா. அழைச்சுட்டு வந்தோம்! என்றார்.

    ஹலோ! என்றான் அவன். அவளும் ஹலோ! என்றாள். மாதவன் விட்ட இடத்தைப் பிடித்தார். அது ஒண்ணும் இல்லம்மா, இவன் வந்தா ஏகப்பட்ட கேள்வி கேட்பான் அதான்

    ஷ்யாம் கலகலவென்று சிரித்தான். பிறகு நோ அங்கிள். சித்தி சொல்லியே அனுப்பிச்சாங்க. நீ ஜஸ்ட் என்னோட ரெப்ரசென்ட்டேட்டிவ். அங்கே போய் எல்லோரோடவும் பேசிப் பழகு. என்ஜாய் பண்ணிட்டு வந்துடு, நோ கொஸ்டீன்ஸ்னு சொல்லியே அனுப்பிச்சாங்க! என்றான்.

    மறுபடியும் சிரித்தார்கள். அதற்குள்ளாக வேறு ஏதோ குடும்பத்தினர் அவனை அழைத்தார்கள். ஃபர்ஸ்ட் டைமா வந்ததினாலே எல்லாரையும் பார்க்கணும். பார்த்தர்றேன்! என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

    ஒரு முறை பார்வையைச் சுழற்றியதிலேயே நந்தினிக்குத் தெரிந்தது. இளம் பெண்களை வைத்திருக்கிற நிறையப் பெற்றோர்கள் அவனை மொய்க்கிறார்கள் என்று.

    தீபா அவள் பார்வையைப் பார்த்து விட்டு சிரித்தாள். என்னம்மா பார்க்கறே? ரொம்ப ஹார்ட் வொர்க்கிங். கெட்டிக்காரன். வசதியானவன் வேற. விடுவாங்களா? ஆளுக்கு ஆளு மொய்க்கிறாங்க! என்றார். நந்தினி உச்சுக் கொட்டினாள்.

    போங்கம்மா. பணம் பணம்னுட்டு! என்றாள். தீபலட்சுமியும் மாதவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதே நேரத்தில் ஷ்யாம் தன்னுடன் பேச வருகிற இளம் பெண்களிடம் அளவாக ஓரிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு நகர்ந்து கொள்வதையும் அவள் ஒரு சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அந்த விழாவெல்லாம் சிறப்பாக நடந்தது. உறுப்பினர்கள் என்னமோ நாற்பது பேர் தான். ஆனால் அவர்கள் குடும்பத்தினர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நூறு நூற்றைம்பது பேர் அளவுக்கு வந்திருந்தது.

    ஏதோ ஒரு அநாதை இல்லத்துக்கு அங்கே ஒரு தொகை கொடுத்தார்கள். அங்கு கொடுத்தது ஒரு நல்ல தொகைதான். அப்படித் தொகை கொடுக்கும் பொழுது அந்த அநாதை இல்லத்தின் பொறுப்பாளர் வந்து காசோலையை வாங்கிக்கொள்ளும் பொழுது தன்னையும் அறியாமல் நந்தினி ஷ்யாமைப் பார்த்தாள்.

    ஷ்யாமின் இதழ்களில் ஒரு நிமிடம் இகழ்ச்சிப் புன்னகை ஓடி மறைந்தது மாதிரி இருந்தது. 'ரொம்பத்தான்!' என்று எண்ணிக் கொண்டாள். பிறகு தன்னையே உலுக்கிக் கொண்டாள்.

    தான் எதற்காக இந்த இளைஞனை கவனிக்கிறோம்? அவனுடைய உணர்வுகள், சிந்தனைகள் எதற்காக நம்மை பாதிக்க வேண்டும் என்று தன் மனத்தை தானே திசை திருப்பிக் கொண்டாள்.

    விழா முடிந்து பூஃபே சிஸ்டத்தில் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். நான்கு பேர் ஐந்து பேராக சாப்பிட்டுக் கொண்டு நகர்ந்து நகர்ந்து ஒவ்வொரு இடமாக பேசிக்கொண்டு ஓட்டிக் கொண்டிருந்தாள்.

    அந்த நேரத்திலே மண்டப வாசலிலே ஒரு இளைஞன் வந்து நின்றான். சாயலைப் பார்த்த பொழுது ஷ்யாமுக்கு சகோதரனாக இருக்க வேண்டும் என்று நந்தினிக்கு தோன்றியது. ஏனென்றால் ஷ்யாம் அவனைப் பார்த்தவுடனே முகம் மாறிப் போய் அவனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.

    தான் சாப்பிட்டு முடித்த தட்டை அங்கே இருந்த கூடையில் போட்டு விட்டு கையைக் கழுவிக்கொண்டு கர்ச்சீஃபை எடுத்து முகத்தையும் வாயையும் துடைத்துக்கொண்டு அவனை நோக்கிப் போனான்.

    அவனுடைய முகத்தில் கோபம் கொப்பளித்தது. நேராகப் போனான். அவன் கையைப் பிடித்து சற்று மறைவாக அழைத்துக்கொண்டு போனான்.

    அப்போதுதான் நந்தினிக்கு அந்த எண்ணம் தோன்றியது. மற்றவர்களை எல்லாம் கவனித்து விட்டு யாரும் கவனிக்கவில்லை என்றவுடன் அவளும் இயல்பாக வெளியே போகிறவள் போல போய் அந்தக் கதவைத் தாண்டி நின்றாள்.

    இவள் நிற்பதை அவன் கவனிக்கவில்லை. முதுகைக் காட்டியவனாக அவன் அந்த இன்னொருவனிடத்திலே பேசினான். இங்கே எதுக்காக வந்தே ராகவ்? என்றான். பின்னே என்னடா ஷ்யாம்? உன்னை எங்கேயுமே பிடிக்க முடிய மாட்டேங்குது. ஆஃபீஸ்லயும் பார்க்க முடியலை. வீட்டுக்கும் வர விடறதில்லை. உன்னை எங்கேதான் பார்க்கறது? என்றான் அவன் கெஞ்சாத குறையாக. அவன் தோற்றத்தைப் பார்த்தாலே கொஞ்சம் கஷ்டத்தில் இருக்கிறவனைப் போலத் தோன்றியது.

    எல்லாம் நீ வரவழைச்சுக்கிட்டது. நானும் உன்னை மாதிரி இருந்தா வேலை ஆகுமா? எனக்கு எத்தனை தொழில் இருக்கு. அப்பாவோடதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியதிருக்கு. உன்னை மாதிரி நான் கைய வீசிகிட்டு அலைய முடியுமா? என்று கேட்டான் இவன்.

    சரிடா ஷ்யாம், முடிஞ்சது முடிஞ்சு போச்சு. இன்னும் ஏண்டா என்னைக் குத்திக் காமிச்சுகிட்டே இருக்கே? என்றான் அவன். நான் ஒண்ணும் உன்னைக் குத்திக் காட்டலை. நான் கைவீசிட்டு நடமாட முடியுமா? அப்புறம் எல்லாம் படுத்துக்கும்! என்றான் இவன் கோபமாக.

    சரிடா ப்ளீஸ், எனக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுடா! என்றான். "இங்கே பாரு, அஞ்சு நிமிஷம் டைம் கொடுக்கறதோ பத்து நிமிஷம்

    Enjoying the preview?
    Page 1 of 1