Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanintha Mana Deepangalai! Part - 3
Kanintha Mana Deepangalai! Part - 3
Kanintha Mana Deepangalai! Part - 3
Ebook306 pages2 hours

Kanintha Mana Deepangalai! Part - 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580106006363
Kanintha Mana Deepangalai! Part - 3

Read more from Jaisakthi

Related to Kanintha Mana Deepangalai! Part - 3

Related ebooks

Reviews for Kanintha Mana Deepangalai! Part - 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanintha Mana Deepangalai! Part - 3 - Jaisakthi

    http://www.pustaka.co.in

    கனிந்த மனத் தீபங்களாய்!

    பாகம் - 3

    Kanintha Mana Deepangalai!

    Part - 3

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    வாழ்வு கனிந்தது

    அத்தியாயம் 1

    கல்லூரியில் பிறர் பாரா வண்ணம் எல்லாக் குறும்பும் செய்கிற குந்தவியைக் கண்டு சிவநாதன் ரசித்துக் கொண்டான்.

    ஒரு முறை 'சிவா…' என்று அவசரமாக வந்தாள் 'என்ன?' என்றான். 'காணோம்... சிவா... தேடிக்கொடுங்கள்' என்றாள் 'என்ன கண்ணம்மா?' என்றான். 'என் இதயம்தான்' என்றாள்.

    லைப்ரரியில் 'ஜர்னல்ஸ்' அறையில் அவன் குறிப்பெடுக்கையில் யாருமில்லை எனவும் எதிரில் வந்து அமர்ந்து 'என்ன சிவநாதா படிக்கிறாயாக்கும்?' என்றாள் அடிக்குரலில் அவனைப் போலவே. அன்று பிற்பகல் பகலுணவுக்குச் செல்ல அவனுக்காக லைப்ரரி வாயிலில் நின்று கொண்டிருக்கையில் அவன் நடந்து வருவதைப் பார்த்துக் கிங்ஸ்லியிடம் ஏதோ சொல்லிச் சிரித்தாள். ஒரு நிமிடம் அதிர்ந்து போய்ப் பார்த்துவிட்டு அவன் சிரிப்பதைப் பார்த்துவிட்டு 'என்னடா, சொன்னா?' என்று கேட்டான். அண்ணிகிட்டயே கேட்டுக்க என்று போய்விட்டான். கேட்டான் 'கிங்ஸ்லி வர்றதைப் பாருங்க. சிரிப்புச் சிவநாதன் மாதிரி உலகத்தை நம்ப வைக்கிற சிறுத்தைச் சிவநாதன்னேன் தப்பா?' என்றாள்

    அவன் வீட்டில் தங்கள் அறையில் அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டு 'போதும் கண்ணம்மா விட்ரு' என்று குலுங்கிச் சிரித்தான்.

    ஏன், நடப்பதற்கு நான் பொறுப்பில்லேன்னு மிரட்டுவிங்களே என்றாள்.

    மிரட்டி என்ன செய்ய அதெல்லாம் தாண்டியாச்சு என்றான்.

    ஒன்று மட்டும் சொன்னதைச் செய்தீர்கள். சிவா பெண் மலரச் செய்வேன்னு சொன்னீங்களே அதை சிவா... நா எப்படி சிவா… இப்படியானேன் என்று அவள் வெட்கப்படவும்,

    தட்ஸ் லவ்லி கண்ணம்மா... இப்படியேயிரு என்றான்.

    என்ன கண்ணம்மா, இன்னைக்கு என்ன ப்ரோக்ராம் என்றான் சிவநாதன்.

    நீங்கதான் சிவா சொல்லணும் என்றாள் குந்தவி. அருணகிரிக்கு தலைவாரிவிட்டுக் கொண்டு,

    ஹால் வேலை நடக்குது கண்ணம்மா, போய்ப் பார்க்கலாம். உன்னோட லலிதா ஹால் வேலை நடக்குது அதையும் பார்க்கணும் என்றான்.

    திட்டமிட்டுக் கொண்டார்கள் வார விடுமுறையைச் செலவழிக்கத் தேவையான அளவுக்கு அவர்களுக்கு வேலைகளும் இருந்தன.

    சிவா, இன்னைக்கு முழுக்க சின்னக் கண்ணன் நம்மோட தான் என்றாள்.

    சரி கண்ணம்மா... ஏதோ பெரிய கண்ணனையும் அப்பப்பக் கவனிச்சா சரி

    ஹால் பெரிய அளவில் உருவாகிக் கொண்டிருந்தது கிங்ஸ்லியின் திருமணம்தான் முதலில் நடத்துவது என்று முடிவெடுத்தார்கள். கிங்ஸ்லி ஒரு பெரிய தொகை நன்கொடையாகக் கொடுத்தான். ஒரு பாதிக்கு மட்டும் கான்கிரீட் கூரை போட்டு அதன் முதல் தளத்தில் செஸ் கிளப்புக்கு ஒரு சிறிய ஹாலும், லைப்ரரிக்கு ஒரு பெரிய ஹாலும் ஒதுக்கினார்கள். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. சிவநாதனுடைய பழைய மாணவர்கள் பலரும், நகரில் முக்கியப் பிரமுகர்களும் உதவ முன் வந்தார்கள் வேலை வேகமாகவே நடந்தது.

    குந்தவி லலிதாமணி தனக்கென்று ஒதுக்கியிருந்த ஒரு ஏக்கரில் ஒரு ஓரத்தில் ஐம்பது பேர் பயிற்சி எடுத்துக் கொள்கிற மாதிரி ஒரு சிறிய ஹால் முப்பதுக்கு எண்பது என்ற அளவில் முதலில் பர்ணசாலை மாதிரி அமைத்துக் கொடுத்தாள் மாதத்தில் பதினைந்து நாட்கள் அங்கு தியானப் பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.

    நேரம் கிடைக்கும் போது சிவநாதனும் குத்தவியும் போய்க் கலந்து கொள்வார்கள். அறக்கட்டளை உறுப்பினர்கள் எல்லாரும் ஏதாவதொரு வீட்டில் பத்து நாட்களுக்கொருமுறை கூடுவார்கள் சற்று நேரம் அளவளாவிவிட்டு வேலைகளைப் பகிர்ந்து கெள்வார்கள். எப்படியிருந்தாலும் இரவு நேரங்களில் வீட்டில் இருக்கிற மாதிரிப் பார்த்துக் கொள்வான்.

    ஒரு நாள் இரவு சிவநாதன் சாப்பிடும்போது அம்மா உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். முகம் சற்று வாட்டமாக இருந்தது.

    என்னம்மா ஒருமாதிரி இருக்கே? என்று கேட்டான்.

    சிவநாதா, நீயும் அவளும் எப்பவும் பிஸியாய் இருக்கீங்க. எனக்குப் பொழுதே போகமாட்டேங்குது. பொன்னம்மா இருக்கறதுனால அருணகிரியைப் பார்த்துக்கறா பிரச்சினையில்லை நீ பேசாம அந்த குமரகுருவைக் கொண்டு வந்து சேர்த்து என்றார்.

    பார்கறேன்ம்மா – என்றான்.

    பார்க்காதே. செய் என்றார் அம்மா.

    குந்தவி அன்று சற்று நேரம் அத்தையின் அறையில் இருந்து பேசிக் கொண்டிருந்தாள். பிறகுதான் மேலே வந்தாள். சிந்தனையிலிருந்தாள்.

    சிவநாதன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்தான்.

    என்ன கண்ணம்மா? என்றான்.

    சிவா... குமரகுரு... என இழுக்கவும் -

    ஆமா... கண்ணம்மா... எனக்கும் ஆச்சரியமாயிருக்கு அம்மா ரொம்பக் குறிப்பாக் கேக்கறாங்க. நம்ம கல்யாணத்தன்னைக்கே சொன்னாங்க. நா பெருசா எடுத்துக்கலை. மாமியார், மருமகள் ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டீங்க... என்று சிரித்தான்.

    சிவா... இது விளையாட்டு விஷயமில்லை. எதுக்கும் எல்லார்கிட்டயும் பேசிடுங்க... முக்கியமா பரிமளாகிட்ட... குழந்தை மனசு சிவா... வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் அவன்கிட்ட வித்தியாசம் காட்டினா நொறுங்கிடும் என்றாள்.

    உண்மைதான் கண்ணம்மா... என்றான். அவள் சொன்னது போலவே பரிமளாவிடம் பேசினான். அண்ணி உன் சம்மதம் வேணுங்கறா... எல்லாரும் அவனை ஏத்துக்கணும்கிறா என்று சொல்லவும் பரிமளா குளிர்ந்து போனாள்.

    ஒரு நல்ல நாளில் ஆசிரமத்துக்குச் சென்று விண்ணப்பம் கொடுத்துவிட்டு வந்தார்கள். அப்போதாவது அந்தக் கடிதம் பற்றிப் பேசலாமா என நினைத்தான். ஆனால் வாழ்க்கை இவ்வளவு இலகுவாய்ப் போய்க் கொண்டிருக்கையில் அதைக் கெடுத்துக் கொள்வது எந்தவிதத்திலும் புத்திசாலித்தனமில்லையென்று தோன்றியது.

    தஞ்சாவூரிலிருந்து வந்ததிலிருந்து சிவநாதனும், குந்தவியும் தங்கள் தனிப்பட்ட தேரத்தை விளையாட்டும், குறும்புமாய்க் கழித்துக் கொள்வார்கள்.

    ஹேய்... உயிருள்ள பரிசு கொடுக்கிறேன். பரிசு ஒண்ணும் கிடையாதா? என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

    லீவு நாள்ன்னா. ஆரம்பிச்சிடுவீங்களே போய்க் குளிச்சிட்டு வாங்க சிவா, வேலை நிறைய இருக்கு என்று விரட்டினாள்.

    ஹேய்... நீ என்ன இப்படி விரட்டறே என்று எரிச்சலாகப் போனான். குந்தவி... டவல் என்று குரல் கொடுத்தான். கொண்டுபோய்க் கொடுத்தாள் பிறகு ஹேய் கண்ணம்மா சோப் என்று மறுபடியும் குரல் கொடுத்தான்.

    அங்கே போய்ப் பார்த்தால் ஏற்கனவே ஒரு சோப் உரித்த கோழி போல் உட்கார்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து சிவா. என்று திரும்பினாள். இதுதானே வேண்டாங்கறது என்று முறைத்தவளை அவன் மேலே பேசவிடல்லை.

    சற்று நேரம் கழித்து உடை மாற்றிக் கொண்டு வந்தவள் அவன் டிரஸிங் டேபிள் முன்னால் நடனம் ஆடிக் கொண்டு தலை வாரிக் கொண்டிருந்ததைப் பார்த்து சிரித்துக் கொண்டாள். அருணகிரி விழித்தெழவும் அவனைக் கவனிக்கப் போனாள்.

    அவன் உல்லாசமான மனநிலையில் வம்புகள் செய்யும் போது அவளும் அவள் குறும்பு செய்கிற மனநிலையில் இருக்கும் போது அவனும் ரசித்துச் சிரித்துக் கொள்வார்கள். அன்றைக்கு அவன் முறையாக இருந்தது.

    அருணகிரிக்கு ஒரு வயது நிறைவாகி இருந்தது. பிறந்த நாளைக் காலையில் வீட்டில் கொண்டாடினார்கள். பிறகு பிற்பகலில் ஆசிரமம் போனார்கள்.

    பெரியவர் அன்புடன் வரவேற்றார். குமரகுருவை அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகளில் இருப்பதாகச் சொன்னார். பிறகு குந்தவி… இங்கே வா என்று ஒரு இடத்துக்கு அழைத்துப் போனான். அங்கே ஒரு அழகான ரோஜாச் செடி சற்றே பெரியதாய் பூத்துக் குலுங்கியபடி நின்றது.

    எந்த இடம் தெரியுதா கண்ணம்மா? என்றான்.

    அவள் முதல் முதலாக அவனுக்குப் பரிசு தந்த இடமாம். அவள் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு ரசித்து மகிழ்ந்தான்.

    அந்த அதிரடித் தாக்குதலை மட்டும் மறக்கவே முடியாது கண்ணம்மா என்று கலாட்டா செய்தான். பிறகு தீவிரமாகிப் பெரியவரிடம் அடுத்த ஆண்டில் செய்ய வேண்டிய முன்னேற்றங்கள் பற்றி விவாதித்துக் கொண்டான்.

    மேலும் பத்துக் குழந்தைகள் சேர்ந்திருந்தார்கள். அவன் பெரியவருடன் பேசிக் கொண்டே கீழ்க்கண்ணால் குந்தவி அந்த ரோஜாச் செடியின் அருகில் சென்று நின்று கொண்டு அதனை லயித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு சிரித்துக் கொண்டான்.

    அந்த வாரத்தில் இளவரசியின் கவிதை பின்வருமாறு அமைந்தது.

    'சின்ன மலர்கள்

    சிரிப்பில் அசைவில்

    அன்பைக் குவித்துச்

    சொன்ன மலர்கள்

    சொர்ண மலர்கள்

    சொந்தம் ஆகுமென்றே

    சொல்லி மலர்ந்த

    வண்ண மலர்கள்

    அந்த ரோஜா மலர்கள்

    அன்புக் கண்மணி மலர்கள்.

    எண்ண மலர்கள்

    என்னைக் கொஞ்சம்

    எண்ணுக என்றே

    கொஞ்சும் மலர்கள்

    குறும்புப் பார்வையில்

    விஞ்கம் மலர்கள்

    அரும்புச் சிரிப்பில்

    அள்ளும் மலர்கள்

    அந்த ரோஜா மலர்கள்

    அன்புக் கண்மணி மலர்கள்

    பார்வைக்கு அழகு

    பார்க்கும் அழகு

    நேர் நிற்கையிலோ

    நிரம்ப அழகு

    கூர்வேல் போலுயிர்

    குடிக்கும் அழகு

    மார்பில் சூட

    மயக்கும் அழகு

    அந்த ரோஜா மலர்கள்

    அன்புக் கண்மணி மலர்கள்

    இந்தக் கணத்தில் இதயம்

    இறங்கி ஆளும் மலர்கள்...'

    அந்தக் கவிதை படித்த அன்றைக்கு அவன் தன்னை மறந்து இழைந்தான். ஹேய் குந்தவி. உண்மையைச் சொல்லு. எதை வச்சு எழுதினே? என்றான்.

    ம்... என்று குழைந்து சிரித்த அவள் ஏன் ரோஜாப் பூக்கள்... ஆசிரமத்துக் குழந்தைகள்... அப்புறம்... உங்களோட இந்தக் கிறக்கப்பார்வை... எல்லாந்தான்... என்று சன்னக்குரலில் சிரித்தாள்.

    போச்சுரா... சிலேடைச் சிவநாதன்ங்கறதும் போச்சா... மூணு அர்த்தமா என்று சிரித்தான். ஆனா நீ மட்டும் ஒவ்வாரு நாளைக்கு ஒரு அர்த்தம் சொல்லும் புதுக்கவிதை கண்ணம்மா... என்றான் அதே குரலில்.

    உளறாதீங்க சிவா... என்றாள்.

    இது உளறல் காலம்... கண்ணம்மா... ஏற்கனவே நான் சொல்லலே... இது நமக்குக் காதல் ஆண்டு என்று... உயிர் குடிக்கும் அழகுங்கறே... இதயம் இறங்கி ஆளச் சொல்றே... அது மட்டும் உளறல் இல்லையா? நீங்க உளறினாக் கவிதையாக்கும்? என்று மயங்கிச் சிரித்தான்.

    அந்த வாரத்தில் வந்தியத் தேவன்

    'பூக்களில் நான்

    சொன்ன சேதிக்குப்

    பாக்களில் பதில்

    சொல்லிப் பார்க்கிறாள்.

    கண்ணில் மலர்ந்த

    காதல் முத்துக்கள்

    எண்ணி மாலையாய்

    நினைவில் கோர்க்கிறாள்.

    கொஞ்சம் விரிவுரை

    விளங்கச் சொல்ல

    கொஞ்சி நெருங்கினால்

    மட்டுமேனோ வேர்க்கிறாள்.

    பார்வைப் பதிவில்

    பனியிதழ்க் குவிப்பில்

    நேரடிப் பதிலில்

    அன்பே உருகி வார்க்கிறாள்.

    - என்று எழுதினான். கல்லூரியில் ராதிகாவும், அம்பிகாவும் செய்த கலாட்டாவில் குந்தவி சிக்குண்டு திணறிப் போனாள்.

    அறக்கட்டளையின் முறையான கூட்டம் கூட்டப் பெற்றது. முறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வைக்கப்பெற்றன. வரிவிலக்குப் பெற வேண்டும் என்றான் அருண்.

    ஓரளவு மலிவான பொருட்களை வைத்தே கட்டிடங்கள் கட்ட ஆலோசனைகள் வைத்தாள் குந்தவி.

    ஜூன் மாதத்தில் பொருளாதார வசதியற்ற குழந்தைகளுக்காக ஒரு ப்ளே ஸ்கூல் துவங்கும் திட்டம் வைத்தான் சிவநாதன். பொருளாதார வசதி உள்ளவர்கள் வந்தால் மிதமாக கட்டணம் வைக்கலாம் என்றும் பேசினார்கள்.

    கூட்டம் முடிந்த அன்று பிற்பகல் உணவின்போது அம்மாவிடம் விவரம் சொல்லிக்கொண்டிருந்தான் சிவநாதன். அப்போது வத்சலா அங்கிருந்தாள்.

    அண்ணா பேசாம என்னையே பிரின்சிபாலாப் போட்டுருங்க. ரவீந்திரனையும் எடுத்துட்டு வந்துடறேன் என்றாள்.

    நல்ல ஐடியா இல்லே குந்தவி என்றான். ஏற்றுக் கொண்டார்கள். வத்சலா ஆர்வமாகக் குழந்தைகள் பற்றிய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தாள்.

    சமையலறையில் அத்தைக்கு மும்முரமாய் உதவி செய்து கொண்டிருந்தாள் குந்தவி.

    குந்தவி... ரோட்ரிக்ஸ்... ஃபோனில் என்று குரல் கொடுத்தான் சிவதாதன். போய்ப் பேசினாள். ஃபோனை வைத்து விட்டுத் திரும்பியவள் சிவநாதன் பரபரப்பாக இருப்பதைப் பார்த்துவிட்டு என்ன சிவா?" என்றாள்.

    குந்தவி... நீயும் நானும் சேர்ந்து தமிழ்நாட்டுக் கோயில்கள் பற்றி எழுத வேண்டுமாம்

    செய்யலாம் சிவா... குறைந்தது ஒரு வருஷமாவது தயார் செய்யத் தேவைப்படுமே அப்புறம் உங்க காதல் ஆண்டு என்ன ஆவதாம்? என்றாள்.

    அது பாட்டுக்கு... அது... ஒத்துக்கொள்ளலாம் கண்ணம்மா. எத்தனை கோவில்களில் வௌவால் பறக்குது தெரியுமா? பாப்புலரைஸ் செஞ்சா டூரிஸம் டெவலப்பாகும். பராமரிப்புக்கும் வருமானம் கிடைக்கும். கிடைக்கிற வருமானம் டிரஸ்ட்டுக்கும் தேவையாய் இருக்கிறது.

    அவள் மீண்டும் அப்புறம்... என்னைக் குறை சொல்லக் கூடாது என்றாள்.

    ஹேய்... ரெண்டு பேரும் போகப் போறோம். எல்லாத்துக்கும் திட்டம் போட்டுக்கலாம். கலந்துக்கலாம் கண்ணம்மா... என்று சிரித்தான்.

    லொள்ளு... சிவா என்று சிரித்தாள் பிறகு புகழ் பெற்ற கோவில்கள் மட்டும் அல்லாமல் புகழ் பெற வேண்டிய கோயில்களையும் சேத்துக்கலாம் சிவா... என்றாள்.

    பொறுக்கியெடுத்து ஒரு முப்பது கோவில்களைப் பற்றி விரிவாக சேகரிக்க முடிவெடுத்துக் கொண்டார்கள்.

    அப்ப ஹெச் ஆர்டி தீஸிஸ் என்னவாகிறது? என்றாள்.

    அதுவும் பாத்துக்கலாம் கண்ணம்மா. எங்க போனாலும் கண்ணனைக் கூட எடுத்துக்கலாம். இன்னும் ஒன்றரை வருஷத்துக்குப் பிறகுதான் மணிமொழி பத்தின பேச்சே... இடையில் இந்த மேஜர் வொர்க் முடிச்சுரலாம்... ஆனா ஒரு வாரம் இடையில லண்டன் வரச் சொல்றான் ரோட்ரிக்ஸ்

    கண்ணனை விட்டுட்டா? முடியாதும்மா...

    ஒரே வாரந்தான். எனக்கு மட்டும் அவனை விட்டுட்டு இருக்கறது கஷ்டமில்லையா? போகலாம் கண்ணம்மா என்று கன்வின்ஸ் செய்தான்.

    லண்டன் போனார்கள். பழைய புத்தகத்துக்கு ஒப்பந்தம் புதுப்பித்தார்கள். புதிய புத்தகத்துக்கு ஒப்பந்தம் போட்டார்கள்.

    லண்டன் பிரிட்ஜ் பக்கிங்ஹாம் பேலஸ், வார்விக் மற்றும் விண்ட்ஸர் கோமகன்களின் அரண்மனை எல்லாம் பார்த்தார்கள். தேம்ஸ் நதியில் உலாவந்து வோர்ட்ஸ்வொர்த்தின் கவிதை பேசி மகிழ்ந்தார்கள்.

    வந்தவுடன் ஆசிரியர் ஃபோன் செய்து என்னப்பா... வாழ்க்கையே கவிதையாகி விட்டது போலிருக்கு... அடுத்த மேஜர் வொர்க்கா? செய்ங்க. செய்ங்க... என்றார்.

    இரண்டு பேரும் சின்னதாக ஒரு கையேடு வைத்திருப்பார்கள். எப்போது கவிதை தோன்றினாலும் குறித்து வைத்து விடுவார்கள். அதனால் வாரந்தோறும் கவிதைகள் பாட்டுக்கு வெளிவந்து கொண்டிருந்தன.

    திரும்ப வந்தவுடன் சிவநாதன் சொன்னான். இன்னும் நான்கைந்து மாதங்களுக்கு வெளியே கிளம்ப வேண்டாம். நாம் எடுத்துக் கொள்கிற கோவில்களின் தலவரலாறு அமைப்பு பற்றிய புத்தகங்களைத் திரட்டிப் படித்துக் கொள்ளலாம். அதற்குள் கண்ணனுக்கு ஒன்றரை வயதாகி விடும் எடுத்துச் செல்லலாம் என்றான். செய்திகள் திரட்ட ஆரம்பித்தார்கள்.

    அத்தியாயம் 2

    அன்றைக்குக் குமரகுரு வீடு வந்து சேர்ந்தான். பழகும் வரைத் தன் பொறுப்பில் வைத்துக் கொள்வதாய்ச் சொன்னார் லலிதா. வந்து இரண்டு மாதம் ஆகியிருக்கும். பரிமளா பிரசவத்துக்காக வந்திருந்தாள். ஒரு நாள் மாலை சிவநாதன் குழந்தைகளோடு செலவழித்துக் கொண்டிருந்தான்.

    ரவீந்திரன், பிரதீப், அருணகிரி, குமரகுரு எல்லோரையும் மாற்றி மாற்றி முதுகில் அமர வைத்து யானையாகி இருந்தான். குமரகுருவுக்கும், ரவீந்திரனுக்கும் ஏற்பட்ட போட்டியில் குமரகுரு போடா நாந்தான் இப்ப என்று ரவீந்திரனைக் தள்ளி விட்டான். எதிர்பாராத விதமாக அவன் கீழே விழுந்து விட்டான்.

    குந்தவி ரவீந்திரனைப் போய் அள்ளி எடுத்தாள். வத்சலா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். தலையிடவில்லை. அனால், பரிமளா சட்டென்று போய்க் குமரகுருவின் முதுகில் ஒன்று வைத்தாள். நாங்க பாத்து வரவிட்ட பையன் நீ அவனைத் தள்ளறியா? என்றாள்.

    வத்சலா, குந்தவி, அம்மா எல்லாரும் திகைத்தார்கள்.

    சிவநாதன் சங்கடமாக அம்மாவைப் பார்த்தான். சட்டென ரவீந்திரனைத் தான் வாங்கி கொண்டு குந்தவி, குருவைச் சமாதானப்படுத்து என்று அம்மாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டான்.

    குமரகுரு குரலெடுத்து அழ ஆரம்பித்தான். குந்தவி ஒண்ணுமில்லடா ராஜா, அத்தைதானே அடிச்சாங்க பரவாயில்லை. நீ அவனைத் தள்ளியது தப்புதானே... சரி வா... என்று அணைத்தபடி சோஃபாவில் வந்து அமர்ந்தாள். ரவிகிட்ட சாரி சொல்லு... என்றாள். அவன் சொன்னான். பிறகு அழுதான். பிறகு சடாரென்று அழுகையை நிறுத்த விட்டு ஏன் அத்தை அப்படி சொல்றாங்க. அவங்க சரின்னு சொன்னதுனாலதான் என்னைக் கூட்டிட்டு வந்தீங்களா? என்றான்.

    குந்தவி ஒரு கணம் திகைத்துப் போனாள் பிறகு "ஆமா ராஜா சின்னத்தை சரின்னு சொன்னதுக்கப்புறம்தான் அம்மாவையே அப்பா

    Enjoying the preview?
    Page 1 of 1