Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aboorva Raagangal
Aboorva Raagangal
Aboorva Raagangal
Ebook436 pages3 hours

Aboorva Raagangal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

இது ஒரு அழகான குடும்பக் கதை... காதலால் ஒரு குடும்பத்தில் என்னெல்லாம் பிரச்சனைகள் வந்து அந்தக் குடும்பமே பிரிகிறது... பிரிந்த குடும்பம் மீண்டும் எப்படி மற்றொரு காதலால் இணைகிறது என்பதே கதை. கல்லூரி கலாட்டா, காதல் என்று சுவாரஸ்யமான விஷயங்களோடு படித்து மகிழுங்கள்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580134406392
Aboorva Raagangal

Read more from Latha Baiju

Related to Aboorva Raagangal

Related ebooks

Reviews for Aboorva Raagangal

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aboorva Raagangal - Latha Baiju

    https://www.pustaka.co.in

    அபூர்வ ராகங்கள்

    Aboorva Raagangal

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    http://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ராகம் - 1

    ராகம் - 2

    ராகம் - 3

    ராகம் - 4

    ராகம் - 5

    ராகம் - 6

    ராகம் - 7

    ராகம் - 8

    ராகம் - 9

    ராகம் - 10

    ராகம் - 11

    ராகம் - 12

    ராகம் - 13

    ராகம் - 14

    ராகம் - 15

    ராகம் - 16

    ராகம் - 17

    ராகம் - 18

    ராகம் - 19

    ராகம் - 20

    ராகம் - 21

    ராகம் - 22

    ராகம் - 23

    ராகம் - 24

    ராகம் - 25

    ராகம் - 26

    ராகம் - 27

    ராகம் - 28

    ராகம் - 1

    கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே...

    உத்திஷ்ட நரசர்தூல கர்த்தவ்யம் தெய்வமானிக்ஹம்...

    காலையில் ஒலிக்க தொடங்கி விட்டது எம். எஸ்.அம்மாவின் இனிய குரல். பாடலைக் கூடவே முணுமுணுத்துக்கொண்டே காலைப்பணிகளைத் தொடங்கி விட்டிருந்தார் சாரதா. அந்த வீட்டின் கிரீடமில்லாத மஹாராணி. தெய்வீகமான முகம். அமைதி தவழும் கண்கள். அவரைக் கண்டாலே ஒரு மரியாதை தோன்றியது.

    சாரு... சாரு...

    அன்பு மனைவியை அழைத்துக்கொண்டே வந்தார் மாதவன். அந்த வீட்டின் மஹாராஜா. பொதுப் பணித் துறையில் தலைமை எழுத்தராகப் பணி புரிந்து வருகிறார். லேசாக எட்டிப் பார்க்கும் நரையுடன் கம்பீரமாக இருந்தார். காலை நடைப் பயிற்சிக்கு புறப்பட்டு நின்றிருந்தார்.

    என்னங்க... காலையிலேயே என்னை ஏலம் போடறீங்க... இருங்க... இதோ வந்துட்டேன்... என்றபடியே காபிக்கோப்பையுடன் வந்தார்.

    கிளம்பிட்டீங்களா... இந்தாங்க காபி எடுத்துக்கோங்க... என்று ஒரு கப்பை எடுத்து நீட்டினார்.

    சாரும்மா... வரும்போது என்ன காய்கறி வாங்கனும்னு சொல்லு... வாங்கிட்டு வந்துடறேன்...

    நீங்களா பார்த்து எல்லாமே கொஞ்சம் வர்ற மாதிரி வாங்கிட்டு வந்திடுங்க...

    சரிம்மா... எங்கே உன்னோட அருமை பசங்களை காணோம்...

    அதைக்கேட்டதும் அவர் முகத்தில் ஒரு புன்னகை.

    அபூர்வா யோகா க்ளாஸ்க்கு கிளம்பி போயிட்டாங்க... ஆகாஷ் ஜிம்முக்கு போயிருக்கான்...

    ஹோ... அப்போ நான் தான் லேட் போல இருக்கு... சரிம்மா... நான் கிளம்பறேன்... என்று கிளம்பி விட்டார்.

    அழகான அந்த குடும்பத்தில் தன்னுடைய புன்னகை ததும்பும் முகத்தால் என்றும் வெளிச்சத்தை தருபவர் சாரதா... மனைவியை பெற்ற தாயைப்போல மரியாதையுடன் பார்ப்பவர் மாதவன்...

    அவர்களின் ஈடற்ற அன்புக்கு அடையாளமாய் இரண்டு குழந்தைகள்... 

    மூத்தவன் ஆகாஷ்... தாய் தந்தையரை தெய்வமாய் நினைப்பவன்... அதிர்ந்து பேசவும் கூட தெரியாத மென்மையானவன்... தங்கையை தன் உயிராய் நினைப்பவன்... 

    மெக்கானிக்கல் எஞ்சினீரிங் முடித்துவிட்டு அரசுத் தேர்வெழுதி தேர்வாகி இருந்தான். போஸ்டிங் வரும்வரை தற்காலிகமாக மாதவனுக்கு தெரிந்த ஒரு கார் ஸ்பேர் பார்ட்ஸ்

    தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறான்.

    இரண்டாவதாய் பிறந்தவள் அபூர்வா.

    உண்மையிலேயே அபூர்வமான குணத்தை உடையவள்... அவளைப் பெற்றவுடன் நர்ஸ்கள் சொன்னதைக் கேட்டு சந்தோஷத்துடன் இந்தப் பெயரை அவளுக்கு வைத்தனர் அவளது பெற்றொர்கள்... பொதுவாக பூமிக்கு வந்தவுடன் எல்லா குழந்தைகளும் அழத்தான் செய்யும்... இவளோ... பிறந்தவுடன் அழவும் இல்லை... அசைவும் இல்லை... அதைப் பார்த்து பயந்து விட்ட நர்ஸ்கள் குழந்தையை மெதுவாக கிள்ளிப் பார்த்தார்கள்...

    அவர்கள் கிள்ளியதும் குழந்தை அழாமல் அழகாய் பொக்கை வாயைத் திறந்து சிரித்தது... அதைப் பார்த்து அதிசயித்துப் போயினர் அவர்கள்... அபூர்வமான குழந்தையம்மா இது... கிள்ளியதும் அழாமல் சிரிக்கிறது...

    ரோஜாப்பூக்களை குவியலாக்கிக் கையில் கொடுத்தது போலிருந்த தங்கள் அழகு மகளைக் கண்ணெடுக்காமல் ஆசையில் நோக்கினர் அந்த அன்புத் தம்பதியர்.

    சாரு... உன்னையே உரித்து வைத்தாற் போலிருக்கிறாள் பார் நமது குழந்தை... என்று மிகவும் சந்தோஷப்பட்டார் அவளது ஆசைக் கணவர்.

    ரவி, இங்கே பாரடா என்னுடைய மகளை... பிறந்தவுடன் சிரிக்கின்ற அழகைப் பாரடா... என்று தன்னுடன் மருத்துவமனைக்கு வந்திருந்த தன் நண்பனிடம் கூறி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

    குழந்தையைப் பார்த்த யாருக்குதான் அதைப்  பிடிக்காது... அதுவும் ரோஜா இதழ்களின் மென்மையோடு இருக்கும் இந்தக் குழந்தையை பிடிக்காமல் இருக்குமா.

    சாரதா மென்மையாக சிரித்தார். அவருக்கும் மனம் கொள்ளா பூரிப்பு தான்... தன் மகளின் சிரிப்பைக் கண்டவர் உலகத்தையே மறந்து அவளையே நோக்கினார்.

    பொதுவாக எல்லா வீட்டிலும் பெண்கள் அப்பாவின் செல்லமாக தான் இருப்பர். ஆனால் இவளோ அப்பாவை விட  அவள் அம்மாவிற்க்கு தான் அதிக செல்லம்.

    பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த சாரதாவை அம்மா என்ற மகன் ஆகாஷின் குரல் நினைவுலகத்திற்கு கொண்டு வந்தது...

    அம்மா என்ன பண்ணீட்டிருக்கீங்க...

    அப்பா கூட கனவுல டூயட்டா... என்ன சொல்றார் மாதவன்... கிண்டலடித்துக் கொண்டே வந்த மகனை வாத்சல்யத்துடன் நோக்கினார் சாரதா.

    உனக்கு எப்பவும் கிண்டல் தான்டா... இரு உனக்கு ஒட்ஸ் எடுத்திட்டு வருகிறேன்... என்று எழுந்து போனார்.

    அவனுக்கு ஜிம்முக்கு போய் வந்ததும் ஒட்ஸ் வேண்டும்...

    அப்பா வாக்கிங் முடிச்சிட்டு இன்னும் வரலயாம்மா...

    வரும் நேரம் தான்ப்பா... இந்தா ஒட்ஸ்...

    அபூ எப்போ வருவா... என்று கேட்டு முடிக்கும் முன்பு...

    ஹாய் அண்ணா, வந்துட்டியாடா... என்ற அபூர்வாவின் குரல் கேட்டது.

    யேய் வாலு... உங்கிட்டே எத்தனை முறை சொல்லி இருக்கேன்... அண்ணாவை டா போட்டு கூப்பிடாதேன்னு...

    சரி சாரு... இனி உன் பையனை நான் டா போட்டு கூப்பிடலை சரியா... டீ போட்டு கூப்பிடட்டுமா...! எப்படி வசதி... என்றபடியே நைசாய் நழுவினாள்...

    ஹஹஹா...! என்று வாய்விட்டு சிரித்தான் ஆகாஷ்...

    இவளை என்னதான் பண்ணுறது... அலுத்துக்கொண்டார் சாரதா...

    விடுங்கம்மா... எனக்கு அவள் எப்படி கூப்பிட்டாலும் சந்தோஷமே... என்றான் அவளுடைய அருமை அண்ணன்.

    சரிம்மா... நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்... எனக்கு காலைல பால் மட்டும் போதும்... இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமே கிளம்பனும்... என்று கூறிவிட்டு சென்று விட்டான்...

    சாரதா காலை வேலைகளை கவனிக்க அடுக்களைக்குள் சென்றார்.

    சாரும்மா... டிஃபன் ரெடியா... என்றபடியே வந்தாள் அபூர்வா...

    மாதவன் சாரதாவை விளிப்பதைப் பார்த்து சிறு வயது முதலே அவளும் இப்படித்தான் அழைப்பாள். காதலித்து வீட்டை எதிர்த்து கல்யாணம் புரிந்த அந்த ஜோடிப் புறாக்களுக்கு அவர்களுக்கு கிடைத்த நட்புகள் மட்டுமே உறவுகள். மாதவன் சாரதாவின் மீது தன் உயிரையே வைத்திருந்தார். சாரதாவும் அப்படியே.

    மகளைத் திரும்பி பார்த்த சாரதா புன்னகையுடன் அவளையே பார்த்தார். ஆகாய நீலத்தில் வெள்ளைப்பூக்கள் எம்ராய்டரி செய்த சுரிதாரில் சாதாரண ஒப்பனையில் புடம் போட்ட தங்கமாய் ஜொலித்தவளை பார்க்கும்போது எப்பொழுதும் தோன்றுவது போல் இன்றும் தோன்றியது.

    இவளுக்கு பற்றிய ராஜகுமாரன் எங்கிருக்கிறானோ என்று.

    ஹலோ...! மிஸஸ் மாதவன்... என்னை சைட் அடித்தது போதும்... எனக்கு பசிக்குது... எதாவது சாப்பிடக் குடுக்கறீங்களா?

    உக்காருடா... இதோ டிஃபன் வைக்கறேன்... அண்ணாவையும் கூப்பிடு...

    அண்ணா... டேய் அண்ணா... சாப்பிட வா... அம்மா கூப்பிடறாங்க...

    சாரு... என்றபடியே வந்தார் மாதவன்...

    என்னங்க இன்னைக்கு இவ்வளவு நேரமாயிடுச்சு... என்றபடியே அவர் வாங்கி வந்திருந்த காய்கறிகளை கையில் வாங்கிக் கொண்டார்.

    வர்ற வழியில நம்ம ரவியைப் பார்த்தேண்டா... கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்... அதான் லேட்...

    சரிங்க... குளிச்சிட்டு வாங்க டிஃபன் எடுத்து வைக்கறேன்...

    சரிம்மா... இதோ வந்துடறேன்... என்றவர் குளிக்க கிளம்பினார்.

    அட அபூ செல்லம் காலேஜ்க்கு ரெடியாயாச்சு போலிருக்கே... என்றபடி மகளின் தலையில் மிக மெதுவாய் தட்டினார். அபூ பிஎஸ்சி கடைசி வருடம் படிக்கிறாள்...

    போங்கப்பா... உங்களோட நான் டூ விட்டிருக்கேன்... என்னோட பேச வேண்டாம்... என்றாள்...

    என்னடா செல்லா... அப்பா மேல உனக்கு என்ன கோபம்

    எனக்கு ஸ்கூட்டி வேணும்னு எத்தனை நாளாக கேட்டுட்டே இருக்கேன்... நீங்க வாங்கி தரவே மாட்டீங்கறீங்கள்ள... என்று கொஞ்சினாள்...

    ஸ்கூட்டி தானே... அது வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பா வரும்டா... இதுக்காகவா அப்பாவோட டூ விட்டே...

    சும்மா சொன்னேன் பா... எனக்கு தெரியும் நீங்க வாங்கி தருவீங்கன்னு... சமாளித்தாள்.

    சரிடா... நான் போய் குளிச்சிட்டு வறேன்... நீ சாப்பிடு என்றபடி நகர்ந்தார்...

    அம்மா எனக்கு பால் குடுங்க நான் கிளம்பறேன்... என்றபடி வந்தான் ஆகாஷ்.

    இந்தாப்பா உனக்கு பால்... அபூ... என்னடா ரெண்டு இட்லியோட எழுந்துட்டே இன்னும் ரெண்டு சாப்பிடு என்றபடியே இன்னும் இரண்டு இட்லிகளை அவளது தட்டில் வைத்தார் சாரதா...

    ம்ம்ம்... என்னதான் இருந்தாலும் சாரதா இட்லியே... இட்லிதான்... என்னா டேஸ்ட்... ம்ம்... என்றபடியே அதையும் உள்ளே தள்ளி விட்டு எழுந்து கொண்டாள்... அம்மா என்னோட டிஃபன் பாக்ஸ் ரெடியா...

    ரெடியா இருக்கு... எடுத்துக்கோ டா... உனக்கு பிடிச்ச மாதிரி இட்லி உப்புமா செய்து வெச்சிருக்கேன்... முழுவதும் சாப்பிடு... சரியா...

    ஓ... லவ் யூ சாரும்மா... என்றபடி கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள். ஏய்... எச்சில் பண்ணாதேடி... செல்லமாக சலித்துக் கொண்டாள் அன்னை.

    அண்ணா, நான் ரெடிடா... போலாமா...

    போலாம்டா... அம்மா நாங்க கிளம்பறோம்... அப்பா சாயந்திரம் அபூவை நீங்க கூட்டிட்டு வந்திடுங்கப்பா... எனக்கு வேலை இருக்கு... என்றபடியே பைக் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினர்.

    சரிப்பா... பார்த்துப்போங்க... ஆகாஷ்... மெதுவா போடா... என்றபடியே விடை கொடுத்தனர் பெற்றோர்...

    ஏங்க... நீங்களும் வாங்க... நம்மளும் சாப்பிட்டா நான் மதிய சாப்பாட்டு வேலையை தொடங்குவேன் என்றபடி அவர்களுடைய வேலையை பார்க்கத் தொடங்கினர்...

    ***

    தன் கல்லூரித் தோழிகளிடம் அவளது ஜோக்குகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தாள் அபூர்வா...

    ஓடினாள்... ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்... ஓடிக்கொண்டிருந்தவள் சட்டுனு நின்னுட்டா... ஏன் தெரியுமா?

    ஏன்???

    வாழ்க்கையோட காம்பௌண்ட் சுவர் வந்துடுச்சு அதான்... தோழிகள் சிரித்தார்கள்...

    இன்னொன்னு சொல்லுடி… என்றனர்.

    அபூ யோசித்துவிட்டு சொன்னாள்... ஆத்தா ஆடு வளர்த்தா… கோழி வளர்த்தா… ஆனா நாயை மட்டும் வளர்க்கல, ஏன் தெரியுமா?

    தோழிகள் விழித்து விட்டு தெரியலை என்றார்கள்...

    அந்த ஆத்தா ஏற்கனவே தெரு நாய்கிட்டே கடி வாங்கி தொப்புளை சுத்தி பதினாறு ஊசி போட்டுகுச்சு... நாய்ன்னா பயம் அதான்... என்றாள்.

    சிரித்தார்கள்... அவர்கள் சிரித்த சிரிப்பில் அருகிலிருந்த சரக்கொன்றை மரத்திலிருந்த பூக்கள் அவசர அவசரமாய் உதிர்ந்தன. எதைப்பற்றியும் கவலையில்லாத கல்லூரிப்பருவம். அதனை அவர்கள் நன்றாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

    ஏய்... அபூ... இன்னும் சொல்லேண்டி

    ம்... இன்னிக்கு ஸ்டாக் இவ்ளோதான்... நடங்க, ஐஸ் க்ரீம் பார்லர்க்கு போகலாம்...

    எழுந்தார்கள்.

    இன்னிக்கு யார் வாங்கி குடுக்க வேண்டிய டர்ன்...?

    லாவண்யா...!

    என்ன லாவ்... பணம் கொண்டு வந்திருக்கியா...

    ம்...

    "எவ்வளவு...?

    அவள் இருநூறு ரூபாயை பர்ஸிலிருந்து எடுத்துக் காட்டினாள்..."

    அந்த ஐவர் படை ஐஸ் க்ரீம் ஆர்டர் செய்து சாப்பிடத் தொடங்கியது...

    ஐவர் படை என்று அந்தக் கல்லூரியில் செல்லமாக அழைக்கப்படும் அவர்களில் தலைமைப் பொறுப்பில் இருந்தது சாட்சாத்... நம்முடைய அபூ தான்...

    அபூ, லாவண்யா, ஷீலா, கவிதா, ரேணுகா... இவர்கள் தான் அந்த பஞ்ச பாண்டவிகள்...

    வாருங்கள்... அவர்கள் ஐஸ் க்ரீம் சாப்பிடும் வரை அவர்களைப் பற்றி பார்ப்போம்...

    அபூ - நமது நாயகி... இதுவரை கண்ணீர் என்பது என்னவென்றே அறியாதவள்... அவள் இருக்கும் இடத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும்...

    லாவண்யா - தந்தையை ஒரு விபத்தில் இழந்துவிட்டு அண்ணனின் தயவில் வாழ்ந்து கொண்டிருப்பவள்... அன்னை வீட்டில் இருக்கிறார்...

    ஷீலா - மூன்று அண்ணன் களுக்கு அடுத்து பிறந்த கடைக்குட்டி... அதனால் அந்த வீட்டின் செல்லக்குட்டி... ஓரளவுக்கு நல்ல வசதி படைத்தவள்...

    கவிதா - கவிக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படும் இவளுடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு தங்கை... இதில் தங்கை சிறிது மன நிலை சரியில்லாதவள்... அப்பா அரசாங்க உத்யோகத்தில் இருப்பவர்...

    ரேணுகா - குட்டி குஷ்பூ என்று செல்லமாக அழைப்பர்... கொஞ்சம் பூசினாற் போன்ற உடல் வாகு... அவளுக்கு ஒரு அண்ணன் மட்டுமே... அவளும் வீட்டிற்கு செல்லம் தான்...

    "ம்ம்ம்… சரி வாங்க… அவங்க என்ன பேசிக்கிட்டு இருக்காங்கன்னு பார்ப்போம்...

    ஏய் இந்த வாரம் சூர்யா படம் ரிலீஸ் ஆவுதாண்டி... சண்டே போகலாமா...

    ம்... நான் ரெடிப்பா… நம்ம எல்லோரும் சேர்ந்து வெளில போயி எவ்ளோ நாளாச்சு... என்றாள் ஷீலா. எல்லோரும் ஒத்துக் கொண்டனர். சண்டே சினிமா செல்ல முடிவெடுத்தனர்.

    அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கல்லூரி ஆபீஸ் ப்யூன் பழனிசாமி குரல் கொடுத்துக் கொண்டே வந்தான்...

    அபூம்மா... அபூம்மா... 

    வர்ராண்டி... மைக்கேல் மதன காம ராஜன்...

    தலைல வழுக்கையைப் பாரு... லாமினேஷன் போட்ட மாதிரி மின்னுது...

    பாவம், வயசானவர்... ஏண்டி கமெண்ட் பண்ணறீங்க...

    ம்… இவனா வயசானவன்... சரியான ஜொள்ளு பார்ட்டி… கேர்ள்ஸ் வாலிபால் விளையாடும் போது கண்ணை இமைக்காமல் நின்னு பார்ப்பான்...

    பழனிசாமி பக்கத்தில் வந்தான்.

    அபூம்மா... உங்களை ப்ரின்ஸி மேடம் வர சொன்னாங்க...

    அப்படியா... எதுக்கு...?

    "தெரியலை... கூட்டிட்டு வர சொன்னாங்க... காத்திட்டிருக்கார்... வர்றீங்களா...?

    பழனி சாமிக்கு பின்னால் சென்றவள் மனதில் யோசனை அலைந்தது.

    ப்ரின்சிபால் ஷாலினியின் அறைக்குள் நுழைந்தாள் ஆபூர்வா. கம்பீரமாய் தீர்க்கமான பார்வையுடன் அமர்ந்திருந்தார் ஷாலினி. அங்கங்கே எட்டிப்பார்க்கத் தொடங்கிய நரை அவருக்கு மேலும் ஒரு நிமிர்வைக் கொடுத்தது...

    குட் ஆஃப்டர்னூன் மேடம்...

    வா... அபூ...! உட்கார்...

    தேங்க்யூ மேம்... எதோ சொல்லனும்னு வர சொன்னிங்களாம்...

    ம்... இன்னும் 2 மாசத்துல உங்களுக்கு செமஸ்டர் வரப்போகுது... லாஸ்ட் வருஷம் வேற... அதான் ஒரு டூர் ப்ளான் பண்ணலாம்னு இருக்கோம்...

    ரொம்ப சந்தோஷம் மேம்… எங்கேன்னு தெரிஞ்சுக்கலாமா...?

    வயநாடு, கேரளா... 3 நாள்... நோட்டீஸ் போர்டில் எழுதிப் போட்டுடு... ஆர்வம் உள்ளவங்க இந்த வாரத்துக்குள் அவுங்க க்ளாஸ்ல பெயர் கொடுக்கணும்னு சொல்லிடு...

    ஷோபா மேம், சவிதா மேம், ராஜு ஸர், சுந்தர் ஸர் உங்களை கைடு பண்ணுவாங்க...

    சரி... மேம்... நான் போர்டுல எழுதிடறேன்... என்றாள்.

    ஓகே... நீ போகலாம்...

    தாங்க் யூ மேம்... என்று விடை பெற்றாள்...

    திரும்பி அவள் க்ளாஸிற்கு சென்ற போது அவளது தோழிகள் மொய்த்துக் கொண்டனர்.

    "ஏய்... அபூ... எதுக்குடி அந்த் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் உன்னை வர சொல்லுச்சு...?

    அதுவா... அது வந்து... அது வந்து... ஒரு...

    "சொல்லுடி, எதாவது பிரச்சனையா...? பதறினர்...

    ம்... நம்மெல்லாம் டூர் போகப் போறோம்... என்று குதித்தாள்.

    வாவ்... சந்தோஷித்தனர், அனைவரும்.

    அதன் பிறகு எங்கு, எப்போது எப்படி என்று கதைக்கத் தொடங்கினர்...

    மல்லிகைப் பூக்களை அழகாய் தொடுத்து முடித்து எடுத்து வைத்து விட்டு மாலை சிற்றுண்டிக்கு கொழுக்கட்டை செய்யத் தொடங்கினார்... சாரதா...

    நினைவுகள் பின்னோக்கி சென்றது... ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சாரதா வீட்டிற்கு ஒரே பெண்... ஒரு மழைக்காலத்தில் விழுந்த இடி தோழியின் வீட்டிற்கு சென்றிருந்த சாரதாவை விட்டு வீட்டிலிருந்த தாய், தந்தை இருவரையும் ஒன்றாக எடுத்து சென்று விட்டது... தாங்க முடியாமல் துவண்டிருந்த வேளையில் கை கொடுத்து ஆதரவு கொடுத்தது அவரது தோழி யமுனாவின் குடும்பமே... அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் இழப்பின் வேதனை அவரைத் துவட்டி எடுத்தது தாங்காமல் அவரை கோவையில் உல்ல ஒரு நிறுவனத்தில் டைப்பிஸ்ட்டாக சேர்த்தி விட்டார் யமுனாவின் தந்தை... அங்கிருந்த ஒரு லேடிஸ் ஹாஸ்ட்டலில் தங்கி வேலை செய்து வந்தவர் ஒரு நாள் மருதமலைக்கு தோழிகளுடன் சென்றிருந்த போது மாதவனின் கண்ணில் பட்டார்... பழைய நினைவுகளில் ஆழ்த்திருந்த சாரதாவை பால் குக்கர் விசிலடித்து கூப்பிட்டது...

    பாலை இறக்கி வைத்து சூடான கொழுக்கட்டையை இட்லித் தட்டில் இருந்து ஹாட் பாக்ஸில் மாற்றி டைனிங் டேபிளில் வைக்கும் போது அபூர்வாவின் குரல் கேட்டது...

    ஹாய்... சாரு... என்ன பண்ணறே... என்றபடி தந்தையுடன் உள்ளே வந்தவள், பாத்திரத்தை திறந்து பார்த்து ஹை... கொழுக்கட்டை..." என்று குதூகலித்தாள்...

    வாடா செல்லா... போயி குளிச்சிட்டு வா... பூஸ்ட் கலந்து வைக்கறேன்... என்றபடியே கணவனின் கையிலிருந்த ல்ன்ச் பேகை கையில் வாங்கிக் கொண்டார்...

    என்னங்க டயர்டா இருக்குறீங்க... காப்பி தரட்டுமா... இல்லே குளிச்சிட்டு வறீங்களா...?

    காப்பி வேண்டாம் டா... ஒரு ப்ளாக் டீ குடு... போதும்...!

    சரிங்க... என்றபடி ப்ளாக் டீ கலந்து கொடுத்தாள்... அதைக் குடித்துவிட்டு நான் கொஞ்சம் வெளில போயிட்டு வறேன்மா... என்றபடி கிளம்பினார்...

    அதற்குள் அங்கு வந்த அபூ, அப்பா, எங்களை காலேஜ்ல வயனாடு டூர் கூட்டிட்டு போறாங்கப்பா... நானும் போகட்டுமா என்றாள்...

    அதைக் கேட்டதும் ஒரு நொடி முகம் மாறியவர், பிறகு முகத்தை சரி செய்து கொண்டு "சரிம்மா... போயிட்டு வா... எத்தனை நாள் என்று மற்ற விவரங்களை எல்லாம் கேட்டுக்கொண்டார்...

    மூவரும் அமர்ந்து சிற்றுண்டியை முடித்துவிட்டு எழுந்தனர்...

    "சரிம்மா... நான் கிளம்பறேன்... என்று மாதவன் கிளம்பி விட்டார்.

    அபூ, மல்லிகை கட்டி வெச்சிருக்கேன்... தலை வாரி புறப்பட்டு வா... வெச்சு விடறேன்... பக்கத்துல மாரியம்மன் கோவில்ல இன்னைக்கு பூச்சாட்டு... போயிட்டு வந்துடலாம்... என்றார்...

    சரிம்மா... என்றபடி அவள் கிளம்பி வந்தாள்...

    இருவரும் கோவிலுக்கு கிளம்பினர்...

    சிறிது தூரத்தில் இருந்த மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வரும் வழியில் அன்னையிடம் இந்த வாரம் சண்டே நாங்க ஐந்து பேரும்  சினிமாக்கு போகலாம்னு இருக்கோம்... அவுங்கள்ளாம் நம்ம வீட்டுக்கு வந்திடுவாங்க... அண்ணாகிட்டே சொல்லி டிக்கெட் புக் பண்ணி தர சொல்லுங்கம்மா..." என்றாள்...

    நீ சொன்னா உன் அண்ணன் முடியாதுன்னா சொல்ல போறான்... அண்ணாவையும் கூட துணைக்கு கூட்டிட்டு போங்கடா... என்றார்...

    ஐயே... அண்ணா எங்களுக்கு டிக்கட் மட்டும் எடுத்து குடுத்தால் போதும்மா... நாங்களே வந்திடுவோம்... நாங்க என்ன சின்ன புள்ளைகளா... என்று சிணுங்கினாள்.

    இருவரும் வீட்டிற்கு திரும்பி வரும்போது ஆகாஷும் மாதவனும் திரும்பி வந்திருந்தனர்...

    அவர்களிடம் எல்லா விவரங்களும் சொல்லிவிட்டு சினிமாவின் காரியமும் சொல்லி விட்டு... சரிம்மா... எனக்கு கொஞ்சம் படிக்கறதுக்கு இருக்கு... நான் ரூமுக்கு போறேன்... என்று அவளது ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்...

    ஒன்பது மணிக்கு அன்னை வந்து அழைத்ததும் வந்து இரவு உணவை அனைவரும் சேர்ந்து உண்டனர்... அண்ணனோடு கலகல வென்று சிரித்து பேசிக் கொண்டு நால்வருமாய் உண்டெழுந்து அவரவர் ரூமிற்கு சென்றனர்...

    ரூமிற்கு வந்த அபூர்வா ஒரு நாவலை எடுத்து படித்துக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்...

    ஹாய்... நான் அபினவ்... என்று கூறி கை நீட்டிய அந்த உருவத்தின் முகத்தைப் பார்க்கும் முன்பு திடுக்கிட்டு நெட்டி எழுந்தாள். அந்த ஆண்மையான அழுத்தமான குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை பரவசமாக்கியது. என்னவென்று சொல்ல முடியாத ஒரு தவிப்போடு அந்த உருவத்தின் முகத்தை நினைவுப்படுத்தி நோக்கினாள்... முகம் கிடைக்கவே இல்லை. அந்தக் குரல் அவளது உயிர் வரை உலுக்கியது...

    என் கனவில் வந்தவனே...

    என் மனதில் நிறைந்தவனே...

    உன் குரலில் வசியம் என்ன வைத்தாய்...

    உன் மேல் பரவசமாகிப்போனேனே...

    என் கண் முன்னில் வருவாயோ...

    கை சேர்த்துக் கொள்வாயோ...

    காத்திருக்கிறேன்...அடுத்த கனவிற்காய்...

    ராகம் - 2

    அபினவ் கிருஷ்ணா கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தான்...

    சுருள் சுருளான அடர்த்தியான முடிகள் சீப்பின் பற்களுக்கு சிக்காமல் சுருண்டன. அபினவின் ஹேண்ட்சமுக்கும் பர்சனாலிட்டிக்கும் இந்த சுருள் கிராப் ஒரு பிரதானமான அம்சம். கோதுமை நிறம்... சிறிய கூர்மையான கண்கள்... அழகாய் ட்ரிம் செய்யப்பட்ட அளவான மீசை... புன்னகைத்தால் கன்னத்தில் விழுகின்ற குழி எந்தப் பெண்ணின் மனசையும் லேசாய் சுண்டும்...

    அபி... அபி... என்னப்பா பண்ணிட்டிருக்கே...  சாப்பிட வா...

    அன்னை அபிராமி அழைத்தார்...

    இதோ வந்துட்டேம்மா...

    முழுக்கை சட்டையின் கையை மடித்து விட்டுக்கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தான்.

    இன்னைக்கு என்னம்மா ஸ்பெஷல்...

    ரவா தோசையும் வெண் பொங்கலும் பண்ண சொன்னேன்பா... உனக்கு பிடிக்குமே...

    வீட்டில் நான்கைந்து வேலைக்காரர்கள் இருந்தாலும் அபினவ்க்கு எப்பொழுதும் அவன் அன்னை தான் பரிமாற வேண்டும்...

    அம்மா நீங்களும் உட்காருங்கம்மா...

    நீ உட்காருப்பா... இதோ நானும் உட்காருகிறேன்

    அவனுக்கு பரிமாறிவிட்டு தானும் அமர்ந்து கொண்டார்.

    அபினவின் அன்னைக்கு கம்பீரமான சிறிது தடித்த உருவம்... நெற்றியில் மங்கலத்தை இழந்திருந்தாலும் அவரது தோற்றம் ஒரு மரியாதையை கொடுத்தது...

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவரை ஓர் விபத்தில் இழந்திருந்தார்... அத்தனை பெரிய வீட்டில் அம்மாவும் மகனும் சில பணியாள்களும் மட்டுமே...

    அபி, நாம ஏலக்காய் தோட்டம் வாங்கற விஷயமா புரோக்கர் கிட்டே சொல்லி இருந்தோமே... ஏதாவது சரியாகி இருக்கா...?

    ரெண்டு மூணு இடம் சொல்லி இருக்காரும்மா...! மூணாறிலும்... வயனாடிலும்... போயி பார்க்கணும்... பார்த்து பேசிட்டு தான் முடிவு பண்ணனும்...!

    சரிப்பா... அவசரப்பட வேண்டாம்... நிதானமாக செய்தால் போதும்...

    சரிம்மா... அடுத்த வாரம் போயி பார்க்கலாம்னு நினைக்கறேன்...

    சரிப்பா... நீ கிளம்பிட்டியா...

    எஸ் மாம்...! என்னன்னு சொல்லுங்க...

    என்னை போகிற வழியில் அம்மன் கோவில்ல இறக்கி விட்டுடுப்பா...

    சரிம்மா... வாங்க போலாம்...

    இதோ நான் கார் சாவி எடுத்திட்டு வந்துடறேன்...! இருவரும் கிளம்பினர்...

    அபினவ் ஒரு பெரிய பின்னலாடை நிறுவனத்தை நடத்தி வருகிறான்... மூணாறில் ஒரு தேயிலைத் தோட்டமும் டீத்தூள் தயாரிக்கும் ஒரு பாக்டரியும் உள்ளது. அங்கேயும் அவ்வப்போது சென்று கவனித்துக் கொள்வான். தாத்தாவின்

    தேயிலையின் மீதான காதல் அவனுக்கும் இருந்தது... தந்தையின் மறைவுக்குப் பின் அவர் நடத்தி வந்த அபினவ் எக்ஸ்போர்ட்ஸ் பின்னலாடை நிறுவனமும் அவன் பொறுப்பிலானது... MBA முடித்ததும் தொழிலில் இறங்கியவனுக்கு அதுவும் ஏறுமுகமாகவே இருந்தது...

    அன்னையை கோவில் வாசலில் இறக்கி விட்டு பூஜை முடிந்தவுடன் டிரைவரை அழைத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு அவன் கிளம்பி விட்டான்...

    வாங்க அபிராமிம்மா... நன்னா இருக்கேளா... எப்போதும் வருகின்ற கோவில் ஆதலால் ஐயர் விசாரித்தார்...

    எனக்கென்ன கடவுள் புண்ணியத்துல க்ஷேமமாய் இருக்கிறேன்...

    என் பையனுக்கு இருபத்தேழு வயசு தொடங்குது... அதான் அவன் ஜாதகத்தை பார்க்கத் தொடங்கலாமேன்னு பூஜை பண்ண எடுத்துட்டு வந்தேன்...

    இந்த ஜாதகத்தை சாமி காலில் வைத்து பூஜை பண்ணிக் கொடுங்க...

    அப்படியா... க்ஷேமமாய் பண்ணிட்டா போச்சு... குடுங்கோ... அவனுக்கு இருபத்தேழு வயசில் தான் கல்யாண யோகம் வரதுன்னு நான் சொல்லி இருந்தேனோ...

    ம்... இனி பார்த்துட வேண்டியது தான்...

    பூஜையை முடித்துவிட்டு அபிராமி கோவிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்தார்.

    சாரும்மா... வர்ற திங்கள் கிழமை நம்ம ஷீலுவைப் பெண் பார்க்க அவளது மாமா வீட்லருந்து வர்றாங்களாம்... எங்களையும் வர சொல்லி இருக்கா...

    போகட்டுமா...? கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு அமர்ந்திருந்த அபூர்வாவும் சாரதாவும் பேசிக்கொண்டு இருந்தனர்...

    நீங்கல்லாம் எதுக்குடா... அப்புறம் உங்களையும் சுயம்வரம் மாதிரி நிக்க வெச்சுட போறாங்க...! சாரதா கிண்டலடித்தார்...

    "சாரு... வரவர நீயும் உன் பொண்ணைப் பார்த்து ரொம்ப வாயாடி ஆகிட்டே... வேண்டாம்... இதெல்லாம் சரியில்லை... இந்த உலகத்துக்கு ஒரு அபூ போதும்...

    எனக்கு நீ போட்டிக்கு வந்து என்னை காண்டாக்காதே சொல்லிட்டேன்...

    ஹஹஹா... உன்னைப் போல நீ மட்டும் தாண்டி இருக்க முடியும்... உனக்கு போட்டியா இன்னொரு ஆளா...

    இருவரும் சிரித்துக்கொண்டனர்.

    லவ் யு சாரு டியர்... என்று அன்னையை கொஞ்சி கொண்டாள்.

    ஹேய்... விடுடி... கோவில்ல வந்து கொஞ்சிட்டு இருக்கா... யாரவது பாத்து சிரிக்க போறாங்க... எனும்போதே

    ஹாஹஹா...! என சிரிக்கும் சப்தம் கேட்டது. இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அபிராமி தான் தாள முடியாமல் சிரித்து விட்டார். அந்த சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்த இருவருக்கும் கூச்சமாகி விட்டது. அபிராமியே சிரிப்பை நிறுத்தி விட்டு அவர்களோடு பேசினார்.

    கேக்கனும்னு நினைச்சு கேட்கல... ஆனாலும் நீங்க பேசினது காதிலே விழுந்தது... எனக்கு சிரிப்பு தாளலை... வீட்டுக்கு போயி சுத்திப் போடுங்க... என் கண்ணே பட்டிருக்கும்...

    அம்மாவும் பெண்ணும் போலவா பேசறீங்க... தோழிகள் மாதிரி ஒருத்தருக்கொருத்தர் கிண்டல் பண்ணிட்டு பார்க்கவே சந்தோஷமா இருக்கு மா... என்று கூறிக்கொண்டே அபுவின் மீது பார்வையைப் பதித்தார்...

    புதுச் சூரியனின் இளம் மஞ்சள் நிறத்தை அப்படியே பெற்றிருந்தாள். பளபள வென்றிருந்த தலைப் பிரதேசத்திலிருந்து  ஒரு கொத்து முடிக்கற்றை அவள் கன்னப்பரப்பில் வந்து விழுந்து, முகத்துக்கு ஒரு தனிக்கவர்ச்சியை கொடுத்துக் கொண்டிருந்தது...

    நீண்ட அழகிய கண்கள். எடுப்பான நாசி. சின்ன நெற்றியில் கண்ணுக்கு தெரியாதது போல் ஒரு ஸ்டிக்கர் போட்டு. கழுத்தில் ஒரு சின்ன டாலரோடு கூடிய செயின். ஒரு மேக் அப்பும் இல்லாமலே அழகாய் ஜொலித்தாள்.

    அபூ மனதிற்குள்ளேயே புலம்பினாள். இந்தம்மா என்ன இப்படி மார்க் போடற மாதிரி அளவெடுக்குது... இந்த சாரு வேற இடிச்சு வெச்ச புளி மாதிரி அப்படியே இளிச்சுட்டு நிக்குதே...

    அவள் மனதிற்குள் அன்னைக்கு அர்ச்சனை நடத்தும்போதே சாரதா என்ற சிலைக்கு உயிர் வந்தது.

    "அம்மா, நீங்க... உங்களை நான் எங்கேயோ

    Enjoying the preview?
    Page 1 of 1