Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhigalukku Vilangidu
Vizhigalukku Vilangidu
Vizhigalukku Vilangidu
Ebook262 pages2 hours

Vizhigalukku Vilangidu

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

பழைய நினைவுகளை மறந்திட்ட நாயகன்... நாயகியின் விழிகளால் மிகவும் தடுமாறுகிறான்... அந்த விழிகள் அவனில் ஏதேதோ நினைவுகளை விதைக்க இறுதியில் நினைவு திரும்புகிறது... தான் நேசித்த பெண் வேறொருவனை மணந்து தனக்கு துரோகம் செய்து விட்டாளோ எனத் தவிக்கிறான்.. இறுதியில் நாயகனும் நாயகியும் இணைந்தார்களா... விலங்கான விழிகள் விடை தந்ததா என்பதே கதை..

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134405612
Vizhigalukku Vilangidu

Read more from Latha Baiju

Related to Vizhigalukku Vilangidu

Related ebooks

Reviews for Vizhigalukku Vilangidu

Rating: 3.3333333333333335 out of 5 stars
3.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhigalukku Vilangidu - Latha Baiju

    http://www.pustaka.co.in

    விழிகளுக்கு விலங்கிடு

    Vizhigalukku Vilangidu

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    http://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    விழி – 1

    விழி – 2

    விழி – 3

    விழி – 4

    விழி – 5

    விழி – 6

    விழி – 7

    விழி – 8

    விழி – 9

    விழி – 10

    விழி – 11

    விழி – 12

    விழி – 13

    விழி – 14

    விழி – 15

    விழி – 16

    விழி – 17

    விழி – 1

    "விழிகளுக்கு

    விலங்கிடு பெண்ணே...

    ஓயாமல் என்னை

    சிறை எடுக்கிறது..."

    அந்தப் பெரிய மண்டபம் முழுதும் நிறைந்திருந்த நாதஸ்வரத்தின் கம்பீரமான இசை அனைவரின் காதுக்குள் நுழைந்து ஒரு பரவசத்தைக் கொடுத்தது.

    புத்தாடை சரசரக்க கழுத்து நிறைய ஆபரணங்களை சுமந்திருந்தாலும் மற்றவரின் ஆடையிலும் நகையிலுமாய் கண்ணைப் பதித்திருந்தனர் கல்யாணத்திற்கு வந்திருந்த பெண்கள். கலகலவென்ற பேச்சுக்களும், குழந்தைகளின் ஆரவாரமும் அங்கிருந்த உற்சாகத்தை மேலும் கூட்டின. அனைவரின் முகத்திலும் குதூகலம்.

    மணப்பெண் அறையில் அமர்ந்திருந்த ரிதன்யாவுக்கு இத்தனை விஷயங்களும் தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருந்தாலும் தான் மட்டும் எங்கோ ஒரு தனித்தீவில் தனிமையில் இருப்பது போல பிரமை தோன்றியது. அவளுக்கும், அவளது அண்ணன் கைலாஷுக்கும் ஒரே மண்டபத்தில் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. தன்னுடைய கல்யாணம் என்ற உணர்வே இல்லாமல் ஒரு ஒட்டாத உணர்வு தோன்றியது அவளுக்கு. குடும்பத் தோழியர் அவளை அலங்காரம் செய்து கொண்டிருக்க கடனே என்று அமர்ந்திருந்தவள் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றினாள்.

    இது மட்டும் அண்ணனுக்கு தெரிந்தால் எத்தனை வருத்தப் படுவான்... இத்தனை நாட்கள் எனக்கு கல்யாணம் முடிந்து தான் அவனது கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் அந்த யசோதாவைப் பார்த்ததும் பிடித்துப் போனதால் தானே அப்பா சொன்னதும் கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டான்... அந்த யசோதாவும் அண்ணனின் சுபாவத்துக்கு ஏற்றார் போல அழகாய் அடக்கமாய் இருக்கிறாள்... என் அண்ணியாய் அவள் வருவதில் எனக்கு சந்தோஷமே... ஆனால் என்னை எதற்கு இந்த அப்பா கல்யாணத்திற்கு வற்புறுத்த வேண்டும்... பெண் கொடுத்து பெண் எடுக்காவிட்டால் அவளது அண்ணனுக்கு வேறு பெண் கிடைக்காமலா போய் விடும்...

    இந்த அப்பாவுக்கானால் அப்படியொரு பிடிவாதம்... இத்தனை நாள் கல்யாணம் வேண்டாம் என்று நான் சொன்னதைப் பொறுத்துக் கொண்டாராம்... இனி என் சம்மதத்திற்காய் காத்திருக்க முடியாதாம்... அவரது பால்ய சிநேகிதனைப் பார்த்த கையுடன் பிள்ளைகளுக்கு கல்யாணம் பேசி முடிக்க வேண்டிய கட்டாயம் என்ன... அண்ணனுக்கு அந்த யசோதயைப் பிடித்திருந்தால் அவன் கல்யாணத்தை நடத்தினால் போதாதா... என்னை எதற்கு இப்படி பாடாய் படுத்துகிறார்கள்...

    அப்பா வாக்கு கொடுத்துவிட்டால் மாற்ற மாட்டார் என்று சொல்லியே இந்த அம்மா வேறு அழுது கரைந்து என் தலையாட்டலை வாங்கி விட்டார்கள்... அப்பாவுக்கு வாக்கு தவறினால் அவமானமாகிப் போகுமாம்... சிநேகிதர் முன் தலைகுனிவு வந்தால் எப்போதும் அதையே சொல்லிக் குத்திக் காட்டுவாராம்... அப்பாவின் சுபாவம் அப்படிதான் என்று எனக்கும் தெரியும்தான்...

    அதற்காக யாருக்கும் என்னுடைய விருப்பம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லையா... ஏன் இல்லை... அண்ணன் எத்தனை முறை கேட்டான்... அவனுக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தாலும் எனக்கும் மாப்பிள்ளையைப் பிடிக்க வேண்டும் என்று கூறினானே... என் கல்யாணம் முடியாமல் தன் கல்யாணத்தைப் பற்றி யோசிக்க மாட்டேன் என்று இத்தனை நாள் காத்திருந்தவன்... இப்போது ஒரு பெண்ணின் மீது விருப்பம் தோன்றினாலும் எனக்கு வேண்டாம் என்று சொல்லியிருந்தால் இந்த கல்யாணத்தையே நிறுத்திவிடுவதாகக் கூறினானே... அப்பா ஒன்று நினைத்துவிட்டால் அதை நடத்தாமல் விட மாட்டார்... இருந்தாலும் அப்பாவிடம் எப்படியாவது பேசுகிறேன்... உன் மனதில் யாரும் இருக்கிறார்களா... இல்லாவிட்டால் கல்யாணம் செய்து கொள்வதில் என்ன பிரச்னை என்று எப்படி உருக்கமாய் கேட்டான்... என்னால் அவனது மனதுக்குப் பிடித்த பெண்ணை விட்டுவிட்டு அவனும் வருத்தப் பட வேண்டுமா... அண்ணன் ஆவது சந்தோஷமாய் இருக்கட்டும்... என்று நினைத்து தான் அன்னையின் கண்ணீருக்கும் தந்தையின் அதட்டலுக்கும் சம்மதித்து தலையாட்டினேன்...

    எனது கனவுகள்தான் காற்றில் கலைந்த மேகமாய் கரைந்துவிட்டது... அவனது கனவுகளாவது நினைவாகட்டுமே... ஏதேதோ மனதுக்குள் யோசித்துக் கொண்டிருந்தவள் தலையில் பூ வைக்கும்போது மண்டையில் ஹேர்பின் குத்தி வலியாகவே, ஆ... என்று முகத்தை சுளித்தாள்.

    கொஞ்சம் பொறுத்துக்கொள் ரித்து... உன் அடர்த்தியான தலை முடியில் பின் சீக்கிரமே வளைந்து விடுகிறது... என்று கூறிக் கொண்டே மற்றொரு பின்னைக் குத்தினாள் அந்த உறவுக்காரப் பெண். அப்போது ரிதன்யாவின் அன்னை மீனாட்சி உள்ளே நுழைந்தார்.

    என்னம்மா... அலங்காரம் முடிந்து விட்டதா... அங்கே மாப்பிள்ளையை மேடைக்கு அழைத்து வந்து விட்டார்கள்... என்று கேட்டுக் கொண்டே மகளது அலங்காரத்தைப் பார்த்து திருப்தியுடன் புன்னகைத்தவர், என் செல்லம்... என் கண்ணே பட்டுடும் போலருக்கு... என்று கன்னத்தைத் தடவி திருஷ்டி கழித்தார்.

    ஹூக்கும்... இதுக்கொன்றும் குறைச்சல் இல்லை... வேண்டாம் என்று சொல்ல சொல்ல எனக்கு கல்யாணமா பண்ணி வைக்கிறீர்கள்... இதற்கான பலனை நீங்கள் அனுபவிக்க தான் போகிறீர்கள்... என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் அவளது அன்னையைக் காணவும் அவளுக்குப் பாவமாய் தான் இருந்தது. எப்போதும் கணவரின் வார்த்தைக்கு தலையாட்டியே பழகிவிட்டார்... அவரை எதிர்த்துப் பேசியோ மனதில் உள்ளதை சொல்லியோ அவருக்குப் பழக்கம் இல்லை.

    ரிதன்யாவின் அப்பா சங்கரனும் அப்படி ஒன்றும் முரடன் இல்லை. மனைவி பிள்ளைகள் மேலும் மிகுந்த அன்புடையவர்... ஆனால் மனதில் ஒன்று நினைத்துவிட்டால் மட்டும் அதை முடிக்காமல் விட மாட்டார்... அத்தனை பிடிவாதம்... அவர் செய்யும் எந்த செயலும் குடும்பத்திற்கு நன்மையிலேயே முடிவதால் அவரது எந்த முடிவுக்கும் மீனாட்சியும் மாற்றுக் கருத்து யோசித்ததில்லை.

    ஒரு தூரத்து உறவினரின் கல்யாண விசேஷத்திற்கு மனைவி மகனுடன் சென்றவர் தனது பால்ய சிநேகிதனான பார்த்திபனை அங்கு கண்டதும் மிகவும் மகிழ்ந்து போனார். தனது சிறுவயதில் அவரது குடும்பம் செய்த உதவிகளையும், உபகாரங்களையும் மனைவி, மகனிடம் சொல்லி மகிழ்ந்தவர், பார்த்திபனுடன் வந்திருந்த அவரது மகள் யசோதையை மகனது கண்கள் ஆவலுடன் நோக்குவதைக் கண்டதும் நண்பனிடம் அவரது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்.

    மனைவி நான்கு வருடம் முன்பு விஷக் காய்ச்சலில் இறந்திருக்க மகன் குமார் சென்னையில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்துவதாகவும் மகள் படிப்பை முடித்துவிட்டதால் இருவருக்கும் ஒரே குடும்பத்தில் சம்மந்தம் தேடுவதாகவும் கூறிய பார்த்திபன் சங்கரனின் மகன், மகளைப் பற்றியும் விசாரித்தார்.

    சங்கரா... உனக்கு ஒரு மகனும் மகளும் ஆயிற்றே... மகளுக்கு கல்யாணம் முடிந்துவிட்டதா... என்று ஆர்வத்துடன் கேட்க அவரது எண்ணம் சங்கரனுக்கும் புரிந்தது.

    மகளின் நட்சத்திரத்துக்கு மாமியார் இல்லாத வீடுதான் பொருத்தமாய் இருக்கும் என்று ஜோசியர் சொன்னதும் நினைவில் வர அதுவரை கல்யாணம் வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்த மகளின் விருப்பத்தை மதித்தவருக்கு இந்த நல்ல சம்மந்தத்தை விட மனம் வரவில்லை.

    மகன் கைலாஷ் படிப்பு முடிந்ததும் தந்தையின் வீட்டு உபயோக சாதனப் பொருட்கள் விற்கும் கடையில் பொறுப்பெடுத்துக் கொண்டு தனது புதிய யோசனைகளாலும் முயற்சியாலும் கடையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து நல்ல முன்னேற்றத்தைக் காட்டினான். மிகவும் பொறுப்பானவன் மட்டுமல்லாது பெற்றோர், சகோதரி மீது மிகுந்த அன்பும் கொண்டவன்.

    ரிதன்யாவும் கைலாஷும் மிகுந்த தோழமையுடன் பழகியதால் இருவரும் ஒருவருக்கொருவர் மற்றவர் விருப்பங்களை உணர்ந்து விட்டுக் கொடுத்து செல்லுவர்... அதனால் அவர்களுக்குள் சண்டையும் வராது... பிள்ளைகளை பொறுப்புடன் வளர்த்திருந்த பெருமையும் சந்தோஷமும் அந்த அன்புத் தம்பதியரின் முகத்தில் எப்போதும் காணலாம்.

    குடும்பத்தில் எந்த விசேஷமானாலும் அவர்களின் பிள்ளைகளைப் பற்றிய பாராட்டைக் கேட்கலாம்... பிள்ளைகள் என்றால் சங்கரனோட பிள்ளைங்க மாதிரி இருக்கணும்... எத்தனை அருமையாய் வளர்த்திருக்கிறார்... இரண்டு பிள்ளைகளும் முத்துக்கள்... என்று சபை நடுவில் கேட்கும்போது அவருக்கு தலையில் கிரீடம் வைத்தது போலக் குளிர்ந்து போவார். மக்களிடம் அதிர்ந்து பேசக் கூடத் தேவை இல்லாமல் பொறுப்பாய் நடந்து கொள்ளும் பிள்ளைகள்.

    ஆனால் கல்யாண விஷயத்தைத் தொடங்கியது முதலே ரிதன்யாவின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள். எப்போதும் பெற்றவர்களின் பேச்சுக்கு எதிர்ப் பேச்சுப் பேசாதவள் இப்போது கல்யாணம் வேண்டவே வேண்டாம் என்று உறுதியாகக் கூறியதும் பெற்றோர்களின் மனதில் சிறு தீ எரியத் தொடங்கியது.

    கைலாஷும் தங்கையிடம், யார் மேலாவது விருப்பம் இருந்தால் சொல்லுடா... அப்பா அம்மாவை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு... என்று கூடக் கேட்டுப் பார்த்துவிட்டான். அதற்கும் அவள், அப்படி எதுவும் இல்லையண்ணா... என்று மறுத்து விட்டாள்.

    ஆனாலும் அவளது சிரிப்பைத் தொலைத்த சிந்தனை முகத்தை சில மாதமாய் அவனும் கவனித்து தான் வருகிறான். எப்போதும் கலகலப்பாய் இருப்பவள் இப்போது தனக்குள்ளேயே யோசித்து ஒதுங்கிக் கொள்ளுவது போல அவனுக்கும் தோன்றத்தான் செய்தது. அதைப் பற்றி தங்கையிடம் விசாரித்தாலும் அவள், எப்போதும் போலத்தான் இருக்கிறேன் அண்ணா... என்று சிரித்து மழுப்பி விட்டதால் அவனும் விட்டுவிட்டான்.

    ரிதன்யா எப்போதும் தனது தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பாள். எளிமையான கண்ணை உறுத்தாத ஆடைகள் அணிந்தாலும் அதற்குப் பொருத்தமாய் எளிமையான ஆபரணங்களையும் அணிந்து கொள்வாள். அவளைப் பார்த்ததுமே ஒரு மரியாதை தோன்றுமாறு தன் தோற்றத்தில் கவனமாய் இருப்பவள். இப்போதெல்லாம் அதில் கூட கவனம் இல்லாமல் ஏனோ தானோவென்று இருப்பது போல கைலாஷுக்குத் தோன்றியது.

    கடந்த ஒரு வருடமாக அவள் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதை உணர்ந்து அண்ணனின் பார்வை அவ்வப்போது தன் மீது யோசனை கலந்த கவலையுடன் படிவதை ரிதன்யாவும் அறிந்து தான் இருந்தாள்.

    தன்னை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டிருந்தவளுக்கு அண்ணனுக்கு யசோதயைக் கண்டதும் பிடித்துவிட்டது புரிந்ததும் தான் மறுத்தால் இந்த சம்மந்தம் நடக்காது என்ற காரணம் புரிய தன் மனதில் உள்ளதை சொல்ல முடியாமல் தவித்தாள். மகளுக்கு ஏன் இன்னும் கல்யாணம் முடிக்காமல் இருக்கிறீர்கள் என்ற கேள்வி வரும்போதெல்லாம் பதில் சொல்ல முடியாமல் மீனாட்சியும் திணறித்தான் போனார்.

    எதற்கு இதெல்லாம்... என்று தன்னை வருத்தத்துடன் நோக்கும் அன்னையின் பார்வையை சிறு சிரிப்புடன் கடந்து விட்டாலும் அந்த அன்னையின் வேதனையை அவள் அறியாமல் இல்லை. இந்த சமூகத்தைப் பொறுத்தவரை பிரச்சனையை எதிர்கொள்பவருக்கு உள்ள வருத்தத்தை விட அவரைச் சுற்றி உள்ளவர்களுக்குதான் அதிக வருத்தம் இருக்கும் போலிருக்கிறது... என்று நினைத்துக் கொண்டே கடந்து விடுவாள் ரிதன்யா.

    தனது கல்யாணத்தில் முழு மனதுடன் கலந்து கொள்ள முடியாமல் அவள் மனதில் பழைய நினைவுகள் குமிழ் விட்டுக் குவிந்தன. அந்த நினைவுகள் தந்த வருத்தத்திலேயே வீட்டில் நடக்கும் அந்த கோலாகலமான சந்தோஷத்தில் அவளால் முழுமனதுடன் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று.

    அவளது கனவுகள்... கை கூடாமல் கலைந்து போய் விட்ட அவளது கனவுகள்... அது நிஜமாயிருந்தால் அவளது கல்யாணத்திற்கு இப்படியா இருந்திருப்பாள்.

    அவன்... அவன் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் பொய் தானா... என் கனவுகளின் காரணமாய் இருந்தவனே அதைக் கனவாக்கிப் போனானா... எப்படி முடிந்தது அவனால்... எல்லாம் மறந்து அவன் புது ஜீவிதம் தேடிக் கொண்டிருப்பானா... அப்படி நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையே... ஆனால் நடக்கும் நிகழ்வுகள் அதைத்தானே உணர்த்துகின்றன..."

    "கானலான காட்சியை

    கண்ணில் கண்டு

    கனவுகளுடன்

    காத்திருக்கிறேனே...

    கை கூடுமா..."

    அவள் மனது புலம்பித் தவித்தது.

    நான்தான் அவனைப் பற்றி சரியாய் புரிந்து கொள்ள வில்லையா... அவன் சொன்னதை எல்லாம் நம்பிக் காத்திருந்தேனே... கடவுளே... இந்தத் தவிப்புகளில் இருந்து என்றாவது எனக்கு விடுதலை கிடைக்குமா... சுய கழிவிரக்கத்தில் கலங்கிய ரிதன்யாவின் மனதுக்குள் சட்டென்று ஒரு எண்ணம் உதித்தது.

    என் காத்திருப்புக்கு பயன் இல்லாதபோது காத்திருத்தலில் என்ன சுகம்... என்னைப் பற்றி நினைக்காமல் எங்கோ சென்று ஒளிந்து கொண்டவனுக்காய் நான் ஏன் கலங்க வேண்டும்... தன்னை தேற்றிக் கொள்ள முயன்றவள் மீண்டும் மனதை ஆக்கிரமித்த அவன் நினைவுகளைத் தவிர்க்க முடியாமல் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றினாள்.

    மகளையே ஆதங்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியின் முகத்தில் யோசனையின் ரேகைகள். அங்கிருந்த உறவுப் பெண்கள் அவளது அலங்காரம் முடிந்ததால் மேடையில் அமர்ந்திருந்த மணமகனை நோக்கிக் கொண்டிருந்தனர்.

    மகளது கையை பரிவுடன் பற்றிக் கொண்ட மீனாட்சி, ரித்துமா... அப்பா எது செய்தாலும் நம்ம குடும்ப நன்மைக்கு தானே செய்வார்... உனக்கு அந்த நம்பிக்கை இல்லையா... அண்ணன் எத்தனை சந்தோஷமா கல்யாணத்துக்கு தயார் ஆகிட்டு இருக்கான் தெரியுமா... அவனுக்கு உன் அண்ணியை அத்தனை பிடிச்சிருக்கும் போலருக்கு... அதும் இல்லாம உன் நட்சத்திரத்துக்கு மாமியார் இல்லாத வீட்ல தான் மாப்பிள்ளை எடுக்கனும்னு நம்ம குடும்ப ஜோசியர் சொல்லி இருக்கார்... எத்தனை பொண்ணுங்க வயசாகியும் சரியான சம்மந்தம் கிடைக்காம இருக்காங்க தெரியுமா... இது நல்ல சம்மந்தம்... சம்மந்தி ரொம்ப வெள்ளந்தியான மனுஷன்... பிள்ளைங்க மோசமாவா இருப்பாங்க... நீ ஏன் பிடிவாதமா மாப்பிள்ளை போட்டோ கூட பார்க்க மறுக்கறேன்னு எனக்குப் புரியலை... அவரும் நல்ல சுபாவமா தான் தெரியறார்... நந்து தம்பி உனக்கு போன் பண்ண முயற்சி செய்தப்போ நீ பேசவே மாட்டேன்னு சொல்லிட்டே...

    இத்தனை நாள் மணமகன் பெயரை குமார் என்று தானே சொல்லிக் கொண்டு இருந்தார்கள்... இதென்ன அம்மா இப்போது நந்து என்கிறார்... ஹா... ஒரு வேலை அவனது பெயரே நந்த குமாராய் இருக்குமோ... அப்படிதான் இருக்கும்... என்னிடம் சிக்கிக் கொண்டு அவன் நொந்து நூடுல்ஸ் ஆகத்தானே போகிறான்... பேரும் பொருத்தமாய் தான் இருக்கிறது... என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் மகள்.

    இதெல்லாம் அப்பாவுக்குத் தெரிஞ்சா பொண்ணை எப்படி வளர்த்திருக்கே பாருன்னு என்னைக் குத்தம் சொல்லியே கொன்னு போடுவார்... குழப்பத்தை எல்லாம் தள்ளி வச்சுட்டு தெளிஞ்ச மனசோட உன் கல்யாணம் நடக்கணும் டா... என்றவர் மகளின் கையில் அழுத்தமாய் அமர்த்திவிட்டு கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.

    அன்னையும் தன் பேச்சைக் கேட்கவில்லையென்று அவருடன் மௌன விரதம் இருந்தவளுக்கு அன்னையின் கலக்கம் கண்டதும் உருகிப் போனது. அலைபாய்ந்து கொண்டிருந்த மனதைக் கட்டுப் படுத்திக் கொண்ட ரிதன்யா, அம்மா... என்று கண்கலங்க, அவளை அன்போடு அணைத்துக் கொண்டார் மீனாட்சி.

    "நான் சொன்னதெல்லாம் புரிஞ்சதா... உன்னோட வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது நாங்களா இருக்கலாம்... ஆனா வாழப் போறது நீதான்... மாப்பிள்ளை மனசு கோணாம, மாமனார் மனசுக்கு ஏத்த மருமகளா நடந்துக்கடா செல்லம்... உனக்கு சொல்ல வேண்டியதில்லை... நீ தங்கம்... உன் மனசுல எந்த குழப்பம் இருந்தாலும் எல்லாத்தையும் ஒதுக்கிவச்சுட்டு சந்தோஷமா மணமேடைக்கு வரணும் டா... ரெண்டு பிள்ளைகளோட கல்யாணத்தையும் ஒண்ணா பாக்குறது எவ்ளோ பெரிய குடுப்பினை தெரியுமா... சின்னப் பையன் மாதிரி உன் அப்பா உற்சாகத்தோட ஓடியாடி வேலை

    Enjoying the preview?
    Page 1 of 1