Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Thotta
Kaadhal Thotta
Kaadhal Thotta
Ebook391 pages3 hours

Kaadhal Thotta

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நேர்மையான ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்வில் வரும் போராட்டங்களையும் பிரச்சனைகளையும் சொல்லும் கதை... அவன் வாழ்வில் மலரும் காதலும் தங்கையின் காதலன் குடும்பத்தில் உள்ள குற்றப் பின்னணியும் அவனது நேர்மைக்கு சவாலாக அதை எப்படி நேரிட்டு கடந்து வருகிறான் என்பதே காதல் தோட்டா...

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134405615
Kaadhal Thotta

Read more from Latha Baiju

Related to Kaadhal Thotta

Related ebooks

Reviews for Kaadhal Thotta

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Thotta - Latha Baiju

    http://www.pustaka.co.in

    காதல் தோட்டா

    Kaadhal Thotta

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    http://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    1

    சுக்லாம் பரதரம் விஷ்ணும்

    சசிவர்ணம் சதுர்ப்புஜம்

    பிரசன்ன வதனம் த்யாயேத்

    சர்வ விக்நோப சாந்தயே...

    அர்ச்சனை இருந்தா சொல்லுங்கோ... கம்பீரமாய் வீற்றிருந்த விநாயகருக்கு பூவிட்டு அர்ச்சனை பண்ணிக் கொண்டிருந்த குருக்கள் கேட்கவும், நகுலன், பரணி நட்சத்திரம், அர்ச்சனை பண்ணிடுங்க சாமி... குரல் கொடுத்த வைதேகி அருகில் நின்ற மகனைப் பெருமையுடன் பார்த்து புன்னகைத்துக் கொண்டார். அவர் அர்ச்சனையை முடித்து பூஜைத் தட்டைத் திருப்பிக் கொடுக்கவும், வாங்கி கண்ணில் ஒற்றிக் கொண்டார்.

    என்ன, இன்னைக்கு எல்லாரும் குடும்பத்தோட சாமியப் பார்க்க வந்துட்டேளே... நர்சம்மா கூட வந்திருக்கா, வீட்ல ஏதானும் விசேஷமா... விசாரித்துக் கொண்டே தீபாராதனைத் தட்டை நீட்ட, கண்ணில் ஒற்றிக் கொண்ட சத்யமூர்த்தி புன்னகையுடன் கூறினார்.

    ஆமா குருக்களே, மகனுக்கு SI டிரைனிங் முடிஞ்சுது... இப்ப தேனி சின்னமனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சப் இன்ஸ்பெக்டரா நியமிச்சு ஆர்டர் வந்திருக்கு... புது ஊரு, பெரிய பொறுப்பு... அதான் கோவிலுக்கு வந்து பூஜை போட்டுட்டு அனுப்பி வைக்கலாம்னு வந்தோம்... என்றார்.

    நல்ல காரியத்துக்கு பகவானோட அருள் எப்பவும் துணை இருக்கும்... என்றவர், உங்க அப்பா சத்யமூர்த்திங்கற பேருக்குத் தகுந்தாப் போல சத்யவானா இருந்தவர்... அவருக்கு பெருமை சேர்க்கறா மாதிரி நீங்களும் நேர்மையான போலீஸ் அதிகாரின்னு பேரேடுக்கணும்... என்று வாழ்த்த, நிச்சயமா குருக்களே... தந்தையைப் பெருமையோடு பார்த்துக் கொண்ட நகுலனின் தோளில் புன்னகையுடன் தட்டிக் கொடுத்தார் சத்யமூர்த்தி.

    சத்யமூர்த்தி நேர்மை, நாணயம், கடமை, கட்டுப்பாடு என்னும் காவல்துறைக் கொள்கையில் இருந்து சிறிதும் மாறாதவர். அவரது நேர்மைக்கு பதிலடியாய் பல இன்னல்கள் வந்தபோதும் தாங்கிக் கொண்டு மாறாமல் நின்றவர். ஹெட் கான்ஸ்டபிளாய் இருந்து பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் முன்னரே SI ஆக பதவி உயர்வு பெற்றாலும் அந்த ஒரு வருடத்தில் முடிந்த அளவில் கடமைகளை சரியாய் முடித்தவர். சத்யமூர்த்தி, வைதேகி தம்பதியரின் மூத்த மகன்தான் நகுலன். திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் அவர்களைக் காக்க வைத்துப் பிறந்த தலைமகன். அடுத்து நான்கு வருடங்கள் கழித்துப் பிறந்த செல்ல மகள் நந்தினி. அழகான அன்பான குடும்பம்.

    தந்தையை உயர் அதிகாரிகள் அதிகாரம் செய்யும் போதெல்லாம் அவனது பிஞ்சு மனதில் தானும் சற்று உயர்ந்த பதவி உள்ள போலீஸ் அதிகாரியாய் வரவேண்டும் என்ற எண்ணம் ஆழமாய்ப் பதிந்தது. படித்து முடித்து காவல் துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியும் முடிந்து இப்போது முதன்முறையாய் அவனுக்குக் கீழ் இயங்கும் ஒரு காவல் நிலையத்துக்கு பொறுப்பேற்கப் போகிறான்.

    நகுலனின் தங்கை நந்தினி நர்ஸிங் படித்துக் கொண்டிருந்தாள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் உள்ள ஈடுபாடும், நேசமும் அவளை இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வைத்தது. பொறுமையும், மாறாத புன்னகையும் அவளது பிளஸ் பாயிண்ட்ஸ். பிள்ளைகளை அருமையாய் வளர்த்துவிட்ட பெருமை வைதேகிக்கு எப்போதும் உண்டு. பெற்றோர்களின் வார்த்தைக்கு மறுபேச்சுப் பேசாமல் அவர்களின் மனம் அறிந்து நடக்கும் பிள்ளைகள்.

    பிள்ளைகன்னா வைதேகி பிள்ளைங்கதான்... அருமையா ரெண்டு பேரையும் வளர்த்திருக்கா... என்று மற்றவர்கள் பாராட்டுவதைக் கேட்டு அவருக்கு மிகுந்த சந்தோஷம். கையில் இருந்த விபூதியை கண்ணை மூடிப் பிரார்த்தித்துவிட்டு மகன் நெற்றியில் அழகாய் வைத்து விட்ட வைதேகி, நல்ல பேரும் புகழும் வாங்கி நல்ல ஆயுளோட நல்லாருக்கணும் கண்ணா... என்று வாழ்த்திய அன்னைக்கு புன்னகையைப் பரிசளித்தான் நகுலன்.

    அம்மா எனக்கு... புன்னகையுடன் கேட்ட மகளின் நெற்றியிலும் வைத்துவிட்டார். வைதேகியின் மனதில் சந்தோசம் இருந்தாலும் அதே அளவு கலக்கமும் இருந்தது. மகன், மகளை பிரகாரத்தை சுற்றி வரும்படி கூறிவிட்டு இருவரும் ஒரு ஓரமாய் அமர்ந்தனர்.

    என்னங்க, அந்த ஊரைப் பத்தி விசாரிச்சிங்களா... தங்கறதுக்கு வசதி எல்லாம் இருக்கா... இவன் மட்டும் தனியா கஷ்டப் படுவானோன்னு கவலையா இருக்கு... சொன்ன மனைவியை ஆறுதலாய் பார்த்த சத்யமூர்த்தி,

    நீ கவலைப்படாதமா, அந்த ஊருல நம்ம வெங்கிக்கு சொந்தக்கார குடும்பம் இருக்கு... அவன்கிட்ட சொல்லி அவங்க மூலமா வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொடுக்க சொல்லிடலாம்... அப்புறம் நம்ம ஏட்டு ஏகாம்பரமும் அந்த ஸ்டேஷன்ல தான் இருக்கறதா கேள்விப்பட்டேன்... பார்த்துக்கலாம்...

    ஓ... ஏகாம்பரம் அண்ணனா... ரொம்ப நல்லதுங்க... ஆனா, இவன் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவானோ, ஹோட்டல்ல சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்குவான்... நந்தினியை விட்டுட்டு நாம போகவும் முடியாது... என்ற மனைவியின் கவலையைப் புரிந்து கொண்டவர்,

    வைதேகி, நம்ம புள்ள இன்னும் சின்னப் பையன் இல்லை... ஒரு பொறுப்பான அதிகாரியா ஒரு ஊரையே பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கு... அவனுக்கு அவனைப் பார்த்துக்கத் தெரியாதா... நீ தேவையில்லாம ஒவ்வொண்ணும் யோசிச்சுக் கவலைப் படாதம்மா... ஆறுதல் கூறினார்.

    அதற்குள் பிள்ளைகளும் வந்துவிட அன்னையின் முக வாட்டத்தைக் கண்ட நகுலன், என்னப்பா, அம்மா என்ன சொல்லறாங்க... ஏன் முகம் வாடியிருக்கு... என்றான்.

    உன்னைத் தனியா புது ஊருக்கு அனுப்பனுமேன்னு மறுபடியும் கவலைப் பட ஆரம்பிச்சுட்டா...

    என்னம்மா நீங்க, என் வாழ்க்கைல நான் ஒவ்வொரு ஸ்டெப் முன்னாடி எடுத்து வைக்கும்போதும் சந்தோஷப் படுற முதல் ஆள் நீங்கதான்... நீங்களே இப்படிக் கலங்கினா எப்படி... இந்த ஆர்டருக்காக நான் எவ்ளோ நாளா காத்திருக்கேன்... இப்போ, கிளம்பும்போது நீங்க வருத்தப்பட்டா எப்படி... என்று நிமிர்வுடன் கேட்ட மகனைப் பெருமையுடன் நோக்கியவர்,

    எல்லாம் சரிதான் கண்ணா... பிள்ளைகளுக்கு சிறகு முளைச்சு சுதந்திரமாப் பறக்கறதைப் பார்க்கறது ஒவ்வொரு தாய்க்கும் எத்தனை சந்தோஷமோ அதே போல அவங்களைப் பிரியுற வருத்தமும் இருக்கும்... அம்மா, இங்க இருக்குற தேனிக்குப் போகப் போறேன்.. நினைச்சா, பார்க்கப் போறோம்... எதுக்கு இத்தனை கவலை... என்றவன், உங்க கவலை என்னன்னு தெரியும், நான் என்னைக் கவனிச்சுக்கணும், அதானே... கண்டிப்பா பார்த்துக்கறேன்... போதுமா... எங்கே சிரிங்க... என்றவன், கன்னத்தைப் பிடித்து ஆட்ட புன்னகைத்தார்.

    அண்ணா, நீ எப்ப டியூட்டில ஜாயின் பண்ணனும்...

    நாளைக்கு மா... காலைல நேரமா தேனி கிளம்பணும்...

    ம்ம்... சிங்கம் சூர்யா மாதிரி கலக்குண்ணா... அடுத்தடுத்து பிரமோஷன் வாங்கி சீக்கிரமே உயர் அதிகாரி ஆகிடணும்... என்ற தங்கையின் தலையில் செல்லமாய் குட்டியவன், சரி வீட்டுக்கு கிளம்பலாமா... என்றான். அனைவரும் வீட்டுக்கு செல்ல நகுலன் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை பாக் செய்து கொண்டிருந்த அன்னைக்கு உதவினாள் நந்தினி. கூகிளில் சின்னமனூர் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தான் நகுலன்.

    சுகமான சொப்பனம் ஒன்றைக் கண்டு இதழில் நெளிந்த புன்னகையுடன் உறங்கிக் கொண்டிருந்த தாமிராவை யாரோ தட்டி எழுப்ப, விருப்பமில்லாமல் முகத்தை சுளித்துக் கொண்டே கண்ணைத் திறந்தாள்.

    அவளது அண்ணி ரேவதி தான் வெகுநேரமாய் அழைத்துப் பார்த்துவிட்டு அவள் கையில் தட்டிக் கொண்டிருந்தாள்.

    என்ன அண்ணி, இவ்ளோ சீக்கிரம் எழுப்பறீங்க... நான் தூங்கணும்... சிணுங்கிக் கொண்டே போர்வையை இழுத்தவளின் கையில் இருந்து அதைப் பிடுங்கியவள், சீக்கிரம் எழுந்திரு, தாரும்மா... போயி வாசலைக் கூட்டி கோலத்தைப் போடு...

    என்னது இவ்ளோ சீக்கிரமா.... நான் மாட்டேன் குளிருது... என்றவளை விடாமல் எழுப்பி அமர வைத்த ரேவதி, நீ இப்ப எழுந்து போகலைன்னா உனக்குப் பிடிச்ச பால்பணியாரம் இன்னைக்கு கட்... சொல்லிவிட்டு செல்ல, உதட்டைப் பிதுக்கியவள் எழுந்து அமர்ந்தாள்.

    ச்சே.... இந்த வீட்டுல தூங்கக் கூட சுதந்திரம் இல்லை... இந்த அண்ணி ஹிட்லருக்கு தங்கச்சி போலருக்கு... என்னை எப்படில்லாம் பிளாக் மெயில் பண்ணுது... புலம்பிக் கொண்டே அவிழ்ந்திருந்த கூந்தலைக் கட்டிக் கொண்டு வாசலுக்கு செல்ல அங்கே அண்ணன் தமிழரசன் திண்ணையில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தான்.

    தாரா செல்லம்... எழுந்துட்டியா டா... கேட்ட அண்ணனின் அருகில் சிணுங்கிக் கொண்டே சென்று அமர்ந்தவள்,

    அண்ணா, உன் பொண்டாட்டி என்னை ரொம்ப கொடுமை படுத்துறாங்க... பேசாம அவங்களை டைவர்ஸ் பண்ணிடு... எனவும் திகைத்துப் போனவன், என்னடா சொல்லறே..." என்றான் அதிர்ச்சியுடன்.

    பின்ன என்னண்ணா, நடுராத்திரி என்னை எழுப்பிவிட்டு வாசல் கூட்டி கோலம் போடுன்னு சொல்லுறாங்க... எனக்கு காத்து சேராம சளிப் பிடிக்கும்ல... கொடுமை பண்ணுறாங்க... என்றாள் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு.

    ரேவதி, இங்க வா... உள்ளே நோக்கிக் குரல் கொடுக்க, இதோ வர்றேங்க... என்றாள் ரேவதி.

    மகனின் குரலைக் கேட்டு வெளியே வந்த பாண்டியன், என்னடா, காலைலயே பஞ்சாயத்தை ஆரம்பிச்சுட்டாளா உன் தங்கச்சி... என்று கேட்க, ஆமாம், பஞ்சாயத்து தான்... நீங்க எப்பவும் உங்க மருமகளுக்கு தான சப்போர்ட்டு... என்று மூஞ்சியைத் திருப்ப, அதற்குள் அங்கே வந்த ரேவதி,

    என்னங்க... எதுக்கு கூப்பிட்டிங்க... என்றாள்.

    நீ எதுக்குமா, நடுராத்திரி இவளை எழுப்பி வாசல் தெளிக்க சொல்லறே... என்ற அப்பாவிக் கணவனை நோக்கி முறைத்தவள், அவ சொல்லுறான்னு நீங்களும் கேளுங்க... நான் இப்போதான் எழுப்பி விட்டேன், ஆறு மணிக்கு... அது அவளுக்கு நடுராத்திரியாம்... என்று தலையில் அடித்துச் செல்ல திகைப்புடன் தங்கையை நோக்கினான் அவன்.

    அப்படியா... என்பதுபோல் அவளைப் பார்க்க, அவள் ஒன்றுமறியாத அப்பாவியாய் முகத்தை வைத்திருந்தாள். பெருசா தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணே... இப்படி இருந்தா அவ விளங்கின மாதிரிதான்... இன்னொரு வீட்டுக்கு மருமகளாப் போக வேண்டிய பொண்ணு... வளர்த்து வச்சிருக்காங்க பாருன்னு நம்மைதான் குத்தம் சொல்லுவாங்க... அவளுக்கு ஓவரா செல்லம் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்காம, நல்ல புத்தி சொல்லிக் கொடுக்குற வழியப் பாரு... என்று சொல்லிக் கொண்டே பாண்டியன் செல்ல அண்ணனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள் அவள்.

    அவங்க கிடக்கறாங்க தாரும்மா... நீ தூக்கம் வந்தாப் போயி தூங்கு... என்று அண்ணன் சொல்லவும், பளிச்சென்று சிரித்தவள்,

    ஹஹா... நான் சும்மா உங்களை டெஸ்ட் பண்ணேன் அண்ணா... உங்க மூணு பேருல யாருக்கு என் மேல பிரியம் அதிகம்னு... எப்பவும் என் பாசமலர் அண்ணன்தான்னு நிரூபிச்சுட்டிங்க... அண்ணி எப்பவும் நல்லதுக்கு தான் சொல்லுவாங்க... நான் போயி செய்யறேன்... சொல்லிவிட்டு உற்சாகமாய் வாசலுக்கு சென்றவளை அதிசயமாய்ப் பார்த்தான் தமிழரசன்.

    காபியைக் குடித்துவிட்டு கிளாசைக் கொடுக்க வந்த கணவனைப் பார்த்து சிரித்த ரேவதி, என்ன பாசமலரே... உங்க தங்கச்சி என்ன சொன்னா... என்று சிரித்தாள்.

    ஹாஹா, இப்பவும் குழந்தையாவே விளையாடிட்டு இருக்கா... நீ சொன்னா சரியா இருக்குமாம்... அம்மா இல்லாத அவளுக்கு நீதான் அம்மாவா இருந்து எல்லா நல்லது கெட்டதும் சொல்லிக் கொடுக்கணும் ரேவதி... அவ, நாம சொல்லுறதுக்கு ஏறுக்கு மாறாப் பேசுற போல தோணினாலும் நாம சொல்லுறதைத்தான் செய்வா... உன்மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கா... என்றான்.

    ம்ம்... எனக்குத் தெரியுங்க... கல்யாணமாகி வந்த இந்த மூணு வருஷத்துல அவளை ரொம்ப நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கேன்... வளர்ந்தாலும் அவ இன்னும் குழந்தை மாதிரிதான்... நமக்கு பிறக்கலைன்னாலும் என் மூத்த பொண்ணாதான் அவளைப் பார்க்கறேன்... என்று சொன்னவளை நெகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டான் தமிழரசன். அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை.

    அண்ணி, எனக்கு காபி... சொல்லிக் கொண்டே வந்தவளின் குரல் கேட்டு வேகமாய் விலகிக் கொண்டனர். காபியைக் கலந்து கொடுத்த ரேவதி, தாரும்மா, இந்த காப்பியை சின்ன அண்ணனுக்கு கொடுத்திரு... என்றவள், காலை டிபனுக்கான வேலையை கவனிக்கத் தொடங்கினாள். சின்ன அண்ணன் கலையரசனின் அறைக்கு செல்ல அவன் எதோ எழுதிக் கொண்டிருந்தான்.

    டேய் அண்ணா, இந்தா காப்பி... என்றவளை முறைத்தவன், அதென்ன என்னை மட்டும் டேய்னு கூப்பிடறே... ஒழுங்கா அண்ணான்னு சொல்லு... சிடுசிடுத்தான்.

    அதென்ன மாயமோ தெரியலை... ஒவ்வொரு முறையும் உன்னை அண்ணான்னு சொல்ல தான் வாயைத் திறப்பேன்... ஆனா டேய்னு தான் வருது... மானுபேக்சரிங் டிபக்ட்... என்ன பண்ணுவேன்... என்றவளை, உன்னை... என்று காதைத் திருக வர நழுவி ஓடினாள்.

    திரும்பி நின்று பளிப்பு காட்டியவளைக் கண்டு சிரித்துக் கொண்டே காபியைக் குடிக்கத் தொடங்கிய கலையரசன் சொந்தமாய் ஒரு ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்திருந்தான். கல்லூரியில் தனது ஜூனியரான யாமினியை காதலித்து மணம் புரிந்தவன். அவர்களும் தூரத்து சொந்தம் ஆதலால் இரு குடும்பத்தின் சம்மதத்தோடு திருமணம் முடிந்தது.

    தந்தை பாண்டியனுக்கு உதவியாய் அண்ணன் தமிழரசனும் விவசாயமே செய்து வந்ததால் கல்யாணத்திற்கு முன்பே கலையரசனிடம் சொந்தமாய் தொழில் தொடங்க வேண்டும் என்று சொல்லி விட்டாள்.

    கலையரசனுக்கும் அதுவே விருப்பமாய் இருந்ததால் படிப்பு முடிந்த கையோடு கடையைத் தொடங்கிவிட்டான். யாமினி இப்போது பிரசவத்துக்காய் அவள் பிறந்த வீட்டுக்கு சென்றிருக்கிறாள்.

    தாமிரா சிறு பெண்ணாய் இருக்கும்போதே அன்னை இறந்துவிட மூத்தவன் தமிழரசன் தான் தங்கையை கவனித்துக் கொள்வான். தாயை நினைத்து அழும் தங்கையை ஒரு தாயாய் தேற்றியவன் அவனே.

    அதனால் தந்தை, சின்ன அண்ணனைவிட எப்போதும் அவனிடம் தாமிராவுக்கு ஒட்டுதல் அதிகம். படிப்பது மிகவும் கசப்பானதால் தாமிரா திக்கித் திணறி ஒருவழியாய் பிளஸ்டூவை முடித்தவள், அதற்கு மேல் படிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டாள்.

    நடுநிசியின் காரிருளில்

    எங்கோ தெரியும்

    தூரத்து வெளிச்சமாய்

    எனக்கான உன்னைத் தேடுகிறேன்...

    சடுதியில் கொட்டிச்

    செல்லும் மழையாய்

    என்னில் சந்தோஷச் சாரலை

    வீசப் போகும் என்னவனே...

    உன்னில் என்னைத்

    தொலைக்கவே காத்திருக்கிறேன்

    எனை ஊடுருவும்

    உன் கண் துளைப்புக்காய்....

    2

    தோட்டா தெறிக்க தெறிக்க

    வேட்டா வெடிக்க வெடிக்க

    பாட்டா படிக்க படிக்க

    வாரான் புழுதி பறக்க

    தெர்றி... வா... வா...

    இப்ப வா... தெர்றி...

    அமைதியாய் ஓடிக் கொண்டிருந்த போலீஸ் ஜீப்பில் சட்டென்று ஒலித்த அலைபேசியின் ரிங் டோனைக் கேட்டு நகுலன் திகைப்புடன் திரும்ப, அவனைப் பார்த்துக் கொண்டே சிறு பதட்டத்துடன் அதை எடுத்தார் டிரைவர் இருக்கையில் இருந்த கான்ஸ்டபிள் சிங்காரம்.

    இயற்கை வாரித் தெறித்திருந்த பச்சைப் பசுமைகளைக் கண்ணுக்குள் நிறைத்துக் கொண்டே சாலையின் இருபுறமும் அழகாய் வளர்ந்து காற்றில் தலையாட்டிக் கொண்டு நின்றிருந்த சோளக் கதிர்களைப் பார்த்துக் கொண்டிருந்த நகுலன் புன்னகையுடன் திரும்பினான்.

    அவனை நோக்கி அசட்டுச் சிரிப்புடன், சாரி சார்... என்று சொல்லிக் கொண்டே வேகமாய் அலைபேசியை சைலன்ட் ஆக்கினார் சிங்காரம்.

    என்னண்ணே, விஜய் ரசிகரா...

    அ... அதெல்லாம் இல்ல தம்பி... ச...சாரி, சார்... என்று திருத்திக் கொண்டவர், வீட்டுல இந்தப் புள்ளைங்களுக்கு என்ன வேலை... அவங்களுக்குப் பிடிச்ச ஏதாச்சும் பாட்டை செட் பண்ணி விட்டிருதுங்க... திடீர்னு இடம், பொருள் இல்லாம இது ரிங் ஆச்சுன்னா பக்குன்னு இருக்கு...

    அவர் சொல்லவும் மீண்டும் புன்னகையை உதிர்த்துவிட்டு, பார்வையை சுற்றுப் புறத்தில் பதித்தான் நகுலன். சற்றுத் தள்ளி ஒரு வரப்பில் கூட்டமாய் இருக்கவும், கண்ணைச் சுருக்கியவன், அண்ணே, அங்கே ஏதோ கூட்டமா இருக்கு, வண்டியை ஓரமா நிறுத்துங்க... எனவும், நிறுத்தினார்.

    கீழே இறங்கியவன் புத்தம் புதிய காக்கி சட்டையில், சிவப்பு ஷூக்கள் காலை அலங்கரிக்க, தோளில் இரண்டு நட்சத்திரங்கள் மின்ன கம்பீரமாய் இருந்தான். நெஞ்சில் குத்தி இருந்த பாட்ஜ் ச. நகுலன், சப் இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் என்று பளபளப்பைக் காட்டியது. இடுப்பில் புதியதாய் இருந்த சிவப்பு பெல்ட்டை சரியாக்கிக் கொண்டே கண்ணில் இருந்த கூலரைக் கழற்றி அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தான்.

    அவனது உடுப்பைக் கண்டதும் பவ்யமான பொது மக்கள், நம்ம ஊரு ஸ்டேஷனுக்கு வரப் போறதா சொன்ன புது SI இவர்தான் போலருக்கு... என்று கிசுகிசுத்து,

    வணக்கம் சார்... என்று ஒதுங்கிக் கொண்டனர். சிறு புன்னகையுடன் தலையசைத்து, என்ன இங்கே கூட்டம்... என்றான் அங்கே இருந்த பெரிய கிணறை ஆராய்ச்சிப் பார்வையுடன் பார்த்துக் கொண்டே.

    அதுவந்து, ஆட்டுக்குட்டி ஒண்ணு கிணத்துக்குள்ள விழுந்திருச்சு சார்... என்றார் பெரியவர் ஒருவர்.

    ஓ... அதைக் காப்பாத்த முயற்சி பண்ணாம எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க... எனவும், இல்ல சார்... ஆட்டுக்குட்டி கிணத்துல விழுந்ததைப் பார்த்ததுமே எங்க சிங்கக் குட்டியும் அதைக் காப்பாத்தக் குதிச்சிருச்சு...

    என்னங்க இது, ஆட்டுக்குட்டியைப் காப்பாத்த சிங்கக் குட்டியா... என்று வியப்புடன் கேட்டவனைப் பார்த்து சிரித்த அந்தப் பெரியவர்,

    அங்கே பாருங்க சார்... என்று கைகாட்ட, திரும்பினான். கிணற்றின் பக்கவாட்டில் இருந்த பாசி படர்ந்த படிக்கட்டுகளில் கவனமாய் கால் பதித்து, அணிந்திருந்த பாவாடை தாவணி உடலோடு ஒட்டிப் பிடித்திருக்க, தலையில் வழியும் நீருடன், கையில் நனைந்து வெடவெடக்கும் ஆட்டுக்குட்டியை பத்திரமாய் பிடித்துக் கொண்டு மேலே ஏறிவந்தாள் தாமிரா.

    அவளைக் கண்டு கண்கள் வியப்பில் விரிய, சிங்கக்குட்டின்னு சொன்னாங்க, ஆனா, ஒரு முயல்குட்டி தான் கையில ஆட்டுக்குட்டியைப் பிடிச்சிட்டு வருது... மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும், முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் மிச்சமிருந்த அந்தப் பெண்ணைத் திகைப்புடன் பார்த்து நின்றான்.

    யாரையும் சட்டை செய்யாமல் ஒரு ஓரத்தில் அழுது கொண்டிருந்த சிறுமியின் அருகில் சென்றவள், ஏய் செவ்வந்தி, ஆட்டுக்குட்டிக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, அம்மா அடிப்பாங்கன்னு அழ மட்டும் தெரியுது, அதை பத்திரமா பார்த்துக்கத் தெரியாதா... இந்தா, எடுத்திட்டு கிளம்பு... என்று கூறி அந்தப் பெண்ணிடம் கொடுத்தாள்.

    தேங்க்ஸ்க்கா... என்று அந்தப் பெண் கண்ணைத் துடைத்துக் கொண்டு ஆட்டுக்குட்டியை முத்தமிட்டு வீட்டை நோக்கி நடக்க, தாவணியின் முந்தானையைப் பிழிந்து தோளோடு போர்த்தியவாறு போட்டுக் கொண்டவள், நிமிரவும் காக்கிச் சட்டையோடு நின்றிருந்த புதியவனைக் கண்டு முகம் யோசனையாய் மாறினாலும் நனைந்த உடையுடன் அவன் முன்னில் நிற்கப் பிடிக்காமல் வேகமாய் வீட்டை நோக்கி சென்றாள்.

    யாருண்ணே அந்தப் பொண்ணு... ரொம்ப சூட்டிப்பா இருக்கு... கேட்டுக் கொண்டே ஜீப்பில் அமர்ந்தவனிடம் புன்னகையுடன் பதில் சொன்னார் சிங்காரம்.

    அது நம்ம ரத்னவேல் பாண்டியன் ஐயா பொண்ணு தான் சார்... அவங்க வீட்டுல ஒரு போர்ஷனைத்தான் உங்களுக்கு தங்கறதுக்கு நம்ம ஏட்டையா ஏற்பாடு பண்ணி இருக்கார்... நம்ம ஸ்டேஷன்ல சார்ஜ் எடுத்ததும் பாண்டியன் ஐயா வீட்டுக்குப் போயி தங்கறதுக்கு அந்த இடம் சரிவருமான்னு பார்த்திடலாம் தம்பி, சார்... அவர் திணறவும், எதுக்குண்ணே இந்த தடுமாற்றம்... நீங்க என்னைவிட வயசுல மூத்தவர் தானே... தம்பின்னே கூப்பிடுங்க... என்று தோளைக் குலுக்கினான் நகுலன்.

    அது, நீங்க ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதிங்க... இங்கே எல்லாரையும் தம்பின்னே கூப்பிட்டுப் பழகிருச்சு... உங்களைப் பார்த்தாலும் பழைய ஆபீசருங்க மாதிரி விலகி நிக்க தோண மாட்டேங்குது... அதான் உரிமையா தம்பின்னு வாயில வந்திருது...

    அதுக்கு என்னண்ணே... அப்படியே கூப்பிடுங்க, நம்ம ஸ்டேஷனுக்கு இன்னும் எவ்ளோ தூரம் போகணும்... என்று வெளியே பார்த்துக் கொண்டே கேட்டான்.

    இதோ இன்னும் பத்தே நிமிஷம் தான் தம்பி... என்றவர் வண்டி ஓட்டுவதில் கவனத்தைப் பதிக்க, நகுலன் வெளியே பார்வையைப் பதித்தான். பிரம்மாண்டமாய் இருந்த பூலாநந்தீஸ்வரர் திருக்கோவிலைக் கண்டதும் வியப்புடன் நோக்கினான். சின்னமனூர் நகராட்சி வேகமாய் வளர்ந்து வரும் ஒரு நகராகும்.

    சின்னமனூர் காவல் நிலையம்.

    முகப்பில் பெரிய பெயர்ப்பலகையுடன் இருந்த அந்தக் கட்டிடத்தில் காக்கி உடையில் விறைப்பாய் இருந்த காவல் அலுவலர்கள் பரபரப்புடன் காத்திருந்தனர்.

    யோவ்... என்னய்யா, இன்னும் சாரைக் காணோம்... கேட்டுக் கொண்டே கையிலிருந்த கடிகாரத்தைப் பார்த்துக் கொண்ட ஏட்டு ஏகாம்பரம் உருவத்திலும் நடிகர் விவேக்கை நினைவு படுத்தினார்.

    தெரியலியே சார்... நியாயமா இந்நேரத்துக்கு வந்து சேர்ந்திருக்கணும்... ரொம்ப நாள் யூஸ் பண்ணாம வச்சதுல நம்ம ஜீப்பு எங்காச்சும் நின்னுருச்சோ... என்றார் ஒட்டடைக்குச்சிக்கு காக்கி உடை போட்டது போல் மெலிந்து நீண்டிருந்த கான்ஸ்டபிள் ஆறுமுகம். அதெல்லாம் நம்ம சிங்காரம் செக் பண்ணிட்டு தான் வண்டிய எடுத்திட்டுப் போனார்...

    ஏம்மா சாரதா, உனக்கு சொன்னதெல்லாம் நினைவிருக்கு தானே... சார் வந்ததும் நீதான் மாலை போட்டு வரவேற்கணும்... என்றார் அந்த பெண் போலீசிடம்.

    அதுக்கென்ன சார்... போட்டுட்டாப் போச்சு... என்றாள் கோவை சரளாவை ஒத்திருந்த அந்த லேடி கான்ஸ்டபிள்.

    ம்ம்... இத்தனை நாளா நம்ம ஸ்டேஷன் நாதன் இல்லாத வீடு போல அனாதையால்ல கிடந்துச்சு... இப்பதான் நமக்குன்னு ஒரு சப் இன்ஸ்பெக்டரைப் போட்டிருக்காங்க, சார் ஆளு எப்படி, விசாரிச்சிங்களா...

    ம்ம்... இப்பதான புதுசா நியமனம் பண்ணி இருக்காங்க... வளைஞ்சு கொடுத்துப் போகாம இந்த காக்கிச்சட்டையை போட்டுட்டு எந்த ஊருல நிலையா இருக்க முடியும்... அவரோட அப்பா சத்யமூர்த்தி, நீதி, நேர்மை தான் தன்னோட ரெண்டு கண்ணுங்கன்னு வாழ்ந்தவர்... அத்தனை வருஷ அனுபவம் இருந்தும் ரிட்டயர்டு ஆகுற நேரத்துல தான் SI ப்ரமோஷன் வந்துச்சு...

    ம்ம்... இதுக்கு முன்னாடி நம்ம பாஸ்கரன் சார் இருந்தப்ப இப்படிதான் நேர்மையா இருந்தார்... எந்தக் கேஸ் வந்தாலும் உடனடியா ஆக்சன் எடுத்து பிரச்சனையைத் தீர்த்து வைப்பார்... அவரை இந்த ஊர்ல வேலை பார்க்க விட்டாங்களா நம்மூர் அரசியல்வாதிங்க... எட்டே மாசத்துல வேற ஊருக்கு மாத்திட்டாங்க, அதுக்குப் பிறகு இதுவரைக்கும் அதிகாரி இல்லாத போலீஸ் ஸ்டேஷனா தானே இருக்கு... இனி இவரை எத்தனை மாசத்துல எங்க மாத்துவாங்களோ... என்று அங்கலாய்த்த சாரதா,

    ம்ம்... எல்லாம் பணத்தோட விளையாட்டு... என்றார்.

    "ஆமாம்.... ஆளுங்கட்சி ஆளுங்க பண்ணுற தப்பெல்லாம் தெரிஞ்சாலும் கேப்பாரில்லாமத் தானே கிடந்துச்சு... ரெண்டு மாசத்துக்குப் பிறகு தேனி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரை தற்காலிகமா நியமிச்சாங்க... அவர் ஆடிக்கொரு முறை,

    Enjoying the preview?
    Page 1 of 1