Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pattampoochi Para Para! Part-2
Pattampoochi Para Para! Part-2
Pattampoochi Para Para! Part-2
Ebook363 pages3 hours

Pattampoochi Para Para! Part-2

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

"பட்டாம்பூச்சி பற பற" - நாம் அன்றாடம் கடந்து செல்லும் மனிதர்களையும் நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் உள்ளடக்கிய எளியக் கதையே.

மாறி வரும் சமூகச் சூழலில் மனித உறவுகளிடையே ஏற்படும் சவால்களுக்கும், காலம் காலமாக அழுத்தமாக மனதில் ஊறிய பழமையான எண்ணங்களுக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு போர் நடந்துக்கொண்டே இருக்கிறது. அந்த யுத்தத்தின் சில கோணங்களைக் கதையின் போக்கில் லேசாகத் தொட்டு செல்ல முயன்றுள்ளேன்.

மெல்லிய காதல் உணர்வுகள் இழையோடும் இக்கதை உங்கள் மனதிலும் நீங்காது இடம்பிடிக்கும் என நம்புகிறேன். வாசித்து மகிழுங்கள்.

அன்புடன்,
ஹேமா ஜெய்

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580133106781
Pattampoochi Para Para! Part-2

Read more from Hema Jay

Related to Pattampoochi Para Para! Part-2

Related ebooks

Reviews for Pattampoochi Para Para! Part-2

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pattampoochi Para Para! Part-2 - Hema Jay

    https://www.pustaka.co.in

    பட்டாம்பூச்சி பற பற! பாகம் - 2

    Pattampoochi Para Para! Part - 2

    Author:

    ஹேமா ஜெய்

    Hema Jay

    For more books

    https://www.pustaka.co.in/home/author/hema-jay

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    வணக்கம்!

    பட்டாம்பூச்சி பற பற - நாம் அன்றாடம் கடந்து செல்லும் மனிதர்களையும் நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் உள்ளடக்கிய எளியக் கதையே.

    மாறி வரும் சமூகச் சூழலில் மனித உறவுகளிடையே ஏற்படும் சவால்களுக்கும், காலம் காலமாக அழுத்தமாக மனதில் ஊறிய பழமையான எண்ணங்களுக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு போர் நடந்துக்கொண்டே இருக்கிறது. அந்த யுத்தத்தின் சில கோணங்களைக் கதையின் போக்கில் லேசாகத் தொட்டு செல்ல முயன்றுள்ளேன்.

    மெல்லிய காதல் உணர்வுகள் இழையோடும் இக்கதையை வாசித்து உங்கள் விமர்சனங்களை hemajaywrites@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்துங்கள்.

    அன்புடன்,

    ஹேமா ஜெய்

    நன்றி!

    முதல் பதிப்பு – ஆகஸ்ட் 2016

    கீதாவின் குமுறல் எதனால்? சுஜா ஹர்ஷா காதலின் ஆயுள் இவ்வளவு தானா? கதிரின் உதவி எதுவரை தொடரும்? அறிந்து கொள்ள பட்டாம்பூச்சி பற பற - பாகம் – 2 ல் பயணிக்க வாருங்கள்.

    14

    இரண்டு நாட்களுக்கு முன்பான மாலை நேரத்தில் பெங்களூர் பசவனகுடியில் இருந்த தன் வீட்டுக்குக் கல்லூரி நூலகத்தில் இருந்து திரும்பி கொண்டிருந்தாள் கீதா.

    அன்று அவளுக்குக் கல்லூரி அரை நாள் தான். ரமேஷ் வழக்கம் போல அலுவலக வேலையாக ஊருக்குச் சென்று இருந்தான். அனேகமாக நாளையோ நாளைய மறுதினமோ திரும்புவேன் என்று சொல்லி விட்டு கிளம்பியிருந்தான்.

    நாள் முழுவதும் வீட்டில் தனியே இருக்கும் கொடுமையை சகித்துக் கொள்வதை விட ஏதாவது கதை புத்தகமாவது படிக்கலாம் என்ற எண்ணத்தில் மதியம் லைப்ரரியிலியே இருந்து விட்டு அப்போது தான் அவள் வீட்டை அடைந்தாள்.

    அவளைக் கண்டதும் பக்கத்தில் வந்த அந்தக் குடியிருப்பின் வாட்ச்மேன் அவரு நினகாகி காயுட்டிவே ..... என்று கைகளைக் காட்டி கன்னடத்தில் சொல்ல, யார் தனக்காக காத்திருப்பது என அவர் காட்டிய திசையைப் பார்த்தாள்.

    விலையுயர்ந்த வெளிநாட்டு காரின் அருகே நின்று கொண்டிருந்த இருவர் அவளைப் பார்த்தவுடன் அவளை நோக்கி வருவதை கண்டு, யாரென தெரியாத தயக்கத்துடன் அவர்கள் அருகே சென்றாள்.

    என் பேரு திவாகர். நீங்க தானே கீதா.... ரமேஷோட மிஸர்ஸ் ..... என்று அதில் ஒரு நபர் கேட்க, அவள் ஆம் என்று தலையாட்டினாள்.

    உங்க கூட கொஞ்சம் பேசணும்.... என்ற அந்த மனிதர், அருகில் நின்றிருந்த இளைஞனைப் பார்த்து டிரைவரை சாப்பிட சொல்லிட்டு நீங்களும் டின்னரை முடிச்சுக்கோங்க திலீப்... நான் கால் பண்ணினதும் வாங்க என்று கூற,

    உதவியாளன் போல இருந்த அந்த திலீப் ஓகே சார் என்றபடி காரில் ஏறி அங்கிருந்து அகன்றான்.

    "நீங்க அவரைப் பார்க்கணுமா....? அவரு ஊருல இல்லீங்களே....? என்று கீதா இழுத்தாள்.

    தெரியுங்க... நான் உங்களைப் பார்க்கணும்னு தான் வந்தேன்... இங்கேயே பேச வேண்டாம்... உங்க வீட்டுல உட்கார்ந்து பேசலாம் என்று அவர் சொல்ல, கீதா வேறு வழியில்லாமல் அவரை அழைத்துக் கொண்டு படிகளில் ஏறினாள்.

    காதோரம் மெலிதான நரை, கூர்மையான பார்வை, உயர்தர சபாரி உடை என்று பார்ப்பதற்கே கம்பீரமாகவும் செல்வ செழிப்புடனும் தெரிந்த அந்த மனிதர் தன் நடுத்தர வயதில் இருந்தார். அவர் வந்திருந்த வாகனமும், உதவியாளர், டிரைவர் என்ற தோரணையும் அவர் பெரிய ஆள் என்று காட்டியது.

    அதற்காக, வெளி தோற்றத்தை நம்பி தான் மட்டும் தனியாக இருக்கும் சமயத்தில் அந்நிய மனிதரை வீட்டுக்குள் அழைக்கவும் தயக்கமாக இருக்க, கீதா குழம்பியபடியே நடந்தாள். தினம் தினம் பேப்பரில் படிக்கும் விபரீத செய்திகள் அவள் பயத்தை தூண்ட, அவள் திரும்பி அவரை அளவிடுவது போலப் பார்த்தாள்.

    அவள் குழப்பத்தை உணர்ந்த திவாகர், உங்களுக்குக் கல்பனாவை தெரியுமா....? ரமேஷ் கூட வேலை பார்க்கிற கல்பனா....? நான் அ... என்று சொல்ல ஆரம்பிக்கவும், கீதாவின் முகம் தெளிந்தது.

    ஓ.... நீங்க கல்பனா அக்காவோட ஹஸ்பண்டா....? நான் உங்களை இதுவரைக்கும் பார்த்தது இல்ல. அதனால தான் இப்ப உங்களைப் பார்த்ததும் தெரிஞ்சுக்க முடியல. வாங்க... வாங்க... என்றபடி கதவை திறந்து அவரை உள்ளே அழைத்தாள்.

    உள்ள வாங்க... உட்காருங்கண்ணா.... என்று உபசரித்த கீதாவை அவர் பரிதாபம் மேலிட பார்த்தார். பார்த்த நிமிடம் அண்ணா என்று பாசத்துடன் அழைக்கும் ஒரு சிறு பெண்ணை தான் சந்திருக்க வந்திருக்கும் சூழ்நிலையை எண்ணி அவர் மனது கசந்தது.

    தன் மனதிலிருப்பதை வெளியே காட்டி கொள்ளாமல் கல்பனாவை நீங்க அடிக்கடி பார்ப்பீங்களோ....? என்று பொதுவாக அவர் கேட்க,

    ம்ம்...பார்ப்பேனே.... ஏதாவது ஆபீஸ் விஷயமா பேசுறதுக்கு இங்க வருவாங்க... இரண்டு வாரத்துக்கு முன்னாடிகூடக் கல்பனாக்கா வீட்டுக்கு வந்திருந்தாங்க... குனிகல் பக்கத்துல அவங்க பேங்க் பிரான்ச் ஒண்ணு புதுசா ஓபன் பண்ணிணாங்களே.... அதோட இனாகிரேஷனுக்குப் போகணும்னு இங்க வந்தாங்க.. நம்ம வீட்டுல டிபன் சாப்பிட்டுட்டு இவரை கூட்டிக்கிட்டு அவங்க காரில் தான் கிளம்பினாங்க.... அவருக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தபடி கீதா சொன்னாள்.

    வெள்ளந்தியாக பதில் சொல்லும் அவளைக் கண்டு இப்படி ஒரு பொண்ணை ஏமாத்த.....?. பொறு...... வாய்விட்டு சொல்ல முடியாத பல வசை வார்த்தைகளை உதட்டுக்குள் சொல்லியபடி திவாகர் பல்லை கடித்துக் கொண்டார்.

    என்ன சாப்பிடுறீங்க...டீ ...இல்லைன்னா...காபி? என்று தன்னை உபசரிக்கும் கீதாவை கைகளை நீட்டி தடுத்தவர்,

    எனக்கு ஒண்ணும் வேண்டாம். நீங்க கொஞ்சம் உட்காருங்க.... நான் சொல்றதை பொறுமையா கேளுங்க... என்று பீடிகை போட்டபடி அவர் அவளை அமர சொல்ல, அவள் புரியாமல் கேள்வியாகப் பார்த்தாள்.

    சட்டென்று தோன்றிய கற்பனையில் நெஞ்சு படபடத்துப் போக, என்ன பேசணும்....? அவரு நல்லா இருக்காரு இல்லையா....? மெல்லிய குரலில் அச்சத்துடன் வினவினாள்.

    ஊருக்குப் போயிருக்கும் தன் கணவனுக்கு ஏதுமா என்ற பயம் அவளுக்கு எட்டி பார்க்க, அப்படி ஏதேனும் இருந்தால் இவ்வளவு பொறுமையாகக் காத்திருந்து உட்கார்ந்து பேசி கொண்டிருக்க மாட்டார்கள் என்பது புத்திக்குப் புரிந்தாலும் மனதுக்குப் புரியாமல் பதட்டத்தை மறைத்துக் கொண்டு கேட்டாள்.

    கணவன் நலத்தை விரும்பும் மனைவியாக அவள் பதற, அவன் நல்லாதாங்க இருக்கான். நீங்க தான் நல்லா இல்ல.... பட்டென்று சொன்ன திவாகருக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் எரிச்சல் தான் வந்தது.

    பார்த்தா படிச்சா பொண்ணு மாதிரி தான் இருக்கு.... அந்த ராஸ்கல் பண்ணுற எதையும் புரிஞ்சுக்காம புருஷனுக்காக உருகுது... இந்த மாதிரி படிச்ச முட்டாளுங்க இருக்கிற வரை அந்த மாதிரி தத்தாரிங்களுக்கு வாழ்வு தான்... அவர் தனக்குள் பொருமி கொண்டார்.

    அவர் தன் ஆத்திரத்தை அடக்கி கொண்டு அவளை உட்கார சொல்லி தான் வந்த விஷயத்தை சொல்ல சொல்ல, கீதாவிற்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை. நம்ப முடியாமல் சந்தேகமாக அவரைப் பார்த்தாள்.

    நீங்க நினைக்கிற மாதிரி நான் கல்பனாவோட ஹஸ்பண்ட் இல்ல... இருங்க.. இருங்க... ஒரு காலத்துல அவ என் மனைவியா இருந்தா... நாலு வருஷம் முன்னாடியே நாங்க சட்டப்படி பிரிஞ்சுட்டோம்.. எங்களுக்குக் கல்யாணமான கொஞ்ச வருஷங்களிலே அவளோட நடவடிக்கை பிடிக்காம எங்களுக்குள்ள நிறைய கருத்து வேறுபாடு... தினம் தினம் பிரச்சனை.. சண்டைன்னு வாழ்க்கை நரகமா தான் இருந்திச்சு...எல்லாத்தையும் என் பையனுக்காக பொறுத்துக்கிட்டு இருந்தேன்...

    அவன் வளர்ந்து அவனுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்ச பின்னாடி இப்படி ஒரு அம்மா அவனுக்கு இருக்கிறதை விட இல்லாம இருக்கிறதே நல்லதுன்னு நினைச்சு லீகலா ப்ரோசீட் பண்ணிட்டேன்... என் பையனும் என்னை புரிஞ்சுகிட்டு எனக்கு ஆதரவா இருந்தான். இப்பவும் இருக்கான்.... என்ற அவர் இடையே அவளை ஏறிட்டு பார்த்துக் கொண்டார்.

    கல்பனா ரமேஷின் மேலதிகாரி என்பதும் இருவருக்கும் அலுவலகத்தையும் தாண்டி நல்ல நட்பு இருப்பதும், ரமேஷ் கல்பனாவை ரொம்ப மரியாதையுடன் நினைப்பதையும் கீதா அறிவாள்.

    நட்புடன் இங்கு வரும் கல்பனா தன் கணவன், குடும்பம், மணவிலக்குப் பற்றியெல்லாம் எதையும் சொன்னதாக கீதாவுக்கு நினைவில் இல்லை. ஒரு சமயம் தன் மகனை பற்றி அவன் படிக்கும் கல்வி குறித்து மட்டும் ஓரிரு வார்த்தைகள் சொல்லியிருக்கிறாள். அதுவும் கீதாவாக ஆர்வ மிகுதியால் கேட்ட பிறகு சொன்னாள். ஒருவேளை பர்சனல் வாழ்க்கையைப் பற்றி தான் கேட்பதை அவள் விரும்பாமல் இருக்கலாம் என்று எண்ணிய கீதா அதற்குப் பிறகு அவள் சொந்த விஷயங்களைப் பற்றி கேட்டதில்லை.

    அதையெல்லாம் தாண்டி கீதாவை பொறுத்தவரை கல்பனா ஒரு ஆதர்ஸமான பெண்மணி.

    இந்த வயதிலேயே பன்னாட்டு வங்கியில் உயர் பதவியில் இருந்த அவள், தன் நடை உடை பாவனை என எல்லாவற்றிலும் கம்பீரமாக ஒரு மெஜஸ்டிக் லுக்குடன் இருப்பாள். அலுவலக வேலைகளுக்காக வெளிநாடு, வெளியூர் என எல்லா இடங்களுக்கும் எந்த நேரத்திலும் பயணம் செய்வாள்.

    நடு இரவில் கூட எந்த பயமும் இல்லாமல் அவள் தன் காரை ஸ்டைலாக ஓட்டி கொண்டு வருவதையும் அலைபேசியில் நுனி நாக்கு ஆங்கிலத்தில் மிடுக்காக பேசுவதையும் பார்த்து கீதா பல முறை தனக்குள் வியந்திருக்கிறாள்.

    தங்கள் கல்யாண நேரத்தில் ரமேஷுக்கென நெருங்கிய உறவுகள் யாரும் அருகில் இல்லாததால் கல்பனா தான் அவன் சார்பாக எல்லா வேலைகளையும் எடுத்து கட்டி செய்தாள் என்பதை ரமேஷ் சொல்லியும் திருமண சமயத்தில் நேரில் பார்த்தும் அவளுக்குத் தெரியும். அதற்கு மேல் அவளுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி எல்லாம் அதிகம் தெரியாது.

    கல்பனா இங்கு வந்தாலும் கீதாவுக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு ரமேஷுடன் பேசி கொண்டிருப்பாள். சில நிமிடங்களில் அவனை அழைத்துக் கொண்டு அலுவலக வேலையாக வெளியே கிளம்பி விடுவாள்.

    அப்படியே இங்கே கொஞ்ச நேரம் இருக்க வேண்டி நேர்ந்தாலும் சில கான்பிடன்ஷியல் விஷயங்களைப் பேசணும் என்று ரமேஷின் அலுவலக அறைக்குள் சென்று இருவரும் மணி கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள்.

    இப்போது தன் முன்னிருக்கும் திவாகர் சொல்லும் தகவல்கள் அவளுக்குச் சிறு ஆச்சரியத்தை கொடுத்தாலும் இதையெல்லாம் ஏன் தன்னிடம் சொல்கிறார் என்று அவள் புரியாமல் பார்த்தாள்.

    ‘இப்போது கூடவா உனக்குப் புரியவில்லை....?" என்று அவர் அவளைக் கூர்ந்து பார்த்தார்.

    பார்த்தா விவரமான பொண்ணா தான் தெரியறீங்க... இத்தனை நாள் அவங்களோட நடவடிக்கைகளைப் பார்த்து உங்களுக்குச் சந்தேகம் வரலேன்னா எனக்கு ஆச்சரியமா தான் இருக்கு... அட்லீஸ்ட் ரமேஷோட ஆக்டிவிட்டீஸ் கூட உங்களுக்குக் கேள்வி எழுப்பலியா?

    உள்ளம் தாங்க முடியாமல் அவளுடைய மடத்தனத்தைக் கேள்வி கேட்டு விட்டு, ஒன்றும் புரியாமல் விழித்த அவளைக் கண்டு ‘சே பாவம்.." என்ற எண்ணம் தோன்ற அவர் மேலே தொடர்ந்தார்.

    இன்னுமா உங்களுக்கு விளங்கல...அவங்க இரண்டு பேரும் வெளிய சொல்லிக்க முடியாத உறவுல ரொம்ப நாளா இருக்காங்க... ரொம்ப நாளான்னா உங்க கல்யாணத்துக்கு முன்னயே.... அவர் அவள் தலையில் மின்னாமல் முழங்காமல் இடியை இறக்க, அவள் நம்ப முடியாத பாவனையுடன் அவரைப் பார்த்தாள்.

    அவர் சொன்னது அதிர்ச்சி அளித்தாலும், சொன்ன விஷயத்தை நம்ப முடியாமல் கீதா அருவருத்துப் போனாள். முன் பின் தெரியாத ஒரு நபர் தன் முன்னமர்ந்து அசிங்கமாக உறவுகளைக் கொச்சைபடுத்தி பேசுகிறார் என்ற எரிச்சல் தான் வந்தது.

    சே... சே.... என்ன பேசுறீங்க நீங்க...? ஒரு ஆணும் பொண்ணும் பேசி பழகினாங்கன்னா உடனே தப்பா பேசிடுவீங்களா....? அந்த அக்கா முதல் முதல்ல எங்க கல்யாணத்துக்கு எங்க ஊருக்கு வந்தப்ப தான் நான் அவங்களைப் பார்த்தேன்.

    யாரு இது....? மாப்பிள்ளை கூடவே இருக்காங்க...நம்ம சொந்தக்கார பொண்ணு இல்லையேன்னு எங்க உறவுல சில பேரு கேள்வி கேட்டப்ப, ரமேஷ் தனக்குத் தம்பி மாதிரி... அவனோட வீட்டுல அவனுக்குன்னு யாரும் இல்லாததால தான் முன்னாடி நின்னு எல்லாத்தையும் செஞ்சு கொடுக்கிறதா சொன்னாங்க....

    என்னோட ஹஸ்பண்ட் கூட என் அண்ணன்கிட்ட அக்கா மாதிரின்னு சொல்லி தான் அவங்களை அறிமுகப்படுத்தி வச்சாரு... அவ்வளவு பாசத்தோட இருக்கிற அவங்களையா இப்படி தப்பா பேசுறீங்க... கூட பிறந்தவங்க மாதிரி பழகுற அவங்களை வாய் கூசாம இப்படிச் சொல்லாதீங்க... அது நல்லதுக்கு இல்ல... கீதா கோபத்தில் பொரிந்து தள்ளினாள்.

    கசடாக பேசி கொண்டிருக்கும் இந்த ஆளையா சற்றுமுன் அண்ணா என்று அழைத்தோம் என்று அவளுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது.

    அவளுடைய சினத்தை கண்டு எள்ளலாக சிரித்த திவாகர்,நான் உங்க வாழ்க்கை கெட்டு நாசமா போகுதேன்னு என் வேலையெல்லாம் விட்டுட்டு உங்ககிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா எனக்கே அட்வைஸ் பண்றீங்க... தேவை தாங்க எனக்கு..... கேலியாகச் சொன்னாலும் அவளை புரிந்து கொண்ட பாவனையுடன் ஆதுரமாகப் பார்த்தார்.

    இங்க வர்றதுக்கு முன்னாடி நமக்கு எதுக்குத் தேவையில்லாத வேலைன்னு யோசிச்சேன். ஒரு சின்னப் பொண்ணு எதுவும் தெரியாம இன்னும் ஏமாந்துகிட்டே இருக்க கூடாதுன்னு தான் வந்தேன்... பரவாயில்ல.... என் டைம் வேஸ்ட் ஆகல.... உங்களை மாதிரி நல்ல பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போக கூடாது என்று சொன்னவரை அவள் கோபமும் குழப்பமுமாக நோக்கினாள்.

    நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும். முன்ன பின்ன உங்களுக்குத் தெரியாதவன் சொல்றதை நீங்க நம்பணும்னு அவசியமும் இல்ல.... இந்தாங்க... இதைப் பாருங்க.... தன் கைபேசியில் எதையோ திறந்து அவளிடம் கொடுத்தார்.

    சாரி... இதையெல்லாம் காட்டி உங்களை எம்பிராஸ் பண்ணணும்னு எனக்கு எண்ணம் இல்ல. நீங்க பாருங்க... ஒரு பைவ் மினிட்ஸ் நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வந்திடுறேன்.... என்று அவர் எழுந்து நாசுக்குடன் அங்கிருந்து அகல, அவர் கொடுத்ததை அவள் கைகள் நடுங்க வாங்கி பார்த்தாள்.

    அவரின் தொடுதிரையில் நிறைய போட்டோக்கள் இருக்க, கீதா மனம் தடதடக்க ஆட்காட்டி விரலால் அவற்றை தடவி பெரிதாக்கினாள். முதல் புகைப்படத்தில் அவள் கணவனும், கல்பனாவும் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டபடி தெரிந்தார்கள்.

    தன் நம்பிக்கையில் விழுந்த விரிசலை ஒதுக்கி தைரியத்தை கூட்டி கொண்டு அவளின் விரல்கள் அனிச்சையாக இமேஜசை புரட்ட, அவள் பார்த்த ஒவ்வொரு புகைப்படத்திலும் கல்பனாவும் ரமேஷும் நெருக்கமாக, மிக நெருக்கமாக, இன்னும் சில படங்களில் கண் கூச வைக்கும் அந்நியோன்யத்தில் இருக்க, அதை கண்ட கீதாவின் உள்ளம் நைந்து போனது.

    எதிர்பார்க்காத அருவருப்பிலும் தாங்க முடியாத அதிர்ச்சியிலும் அவளின் அடிவயிறு குழைந்தது. கண்களில் மளமளவென்று நீர் சேர, நெஞ்சம் குமுறி கொண்டு வந்தது.

    இவ்வளவு நாளாக ஏமாந்து போயிருக்கிறோமே என்ற துக்கத்திலும் ஏமாற்றத்திலும் கீதா மௌனமாகக் கண்ணீர் விட்டபடி தனக்குள் இறுகி போய் இருக்க, சில நிமிடங்களில் திவாகர் கதவை தட்டி சத்தமிட்டபடி உள்ளே வந்தார்.

    நிலை குலைந்து அமர்ந்திருப்பவளைக் கண்டு அவருக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும் அவரால் என்ன செய்து விட முடியும்?

    உங்களுக்கு இதைப் பார்த்தா அதிர்ச்சியா தான் இருக்கும்.... உங்களையே நீங்க கொஞ்சம் கேதர் பண்ணிக்குங்க.... என்று ஆறுதலாகச் சொல்லி அமர்ந்தார்.

    வெஸ்டர்ன் லைப் ஸ்டைல், பப், பார்ட்டி கலாச்சாரத்துல அப்படி இப்படின்னு இருந்த கல்பனா எங்க டைவர்ஸ்க்கு அப்புறம் ரமேஷ் கூட தீவிரமா ஒட்டிகிட்டா..... அவங்க இரண்டு பேருக்கும் இருக்கிற உறவு எனக்கு அரசல் புரசலா தெரிய வந்தாலும் அவகிட்ட இருந்து முழுசா விலகினதுக்கபுறம் நான் அதில தலையிட விரும்பல.

    வயசில பெரியவளோட தொடர்பு வச்சுக்கிட்டு தன்னோட வாழ்க்கைய பாழாக்கிக்கிற ரமேஷ நினைச்சா பரிதாபமா தான் இருந்துச்சு...அவனுக்குக் கல்யாணம் ஆகப் போறதைக் கேள்விப்பட்டப்ப, சரி இனிமே அவன் நல்ல வழில போயிடுவான்... இவகிட்ட இருந்து மீண்டுடுவான்னு நினைச்சேன்...

    முறைக்காதீங்க.... உங்க கோபம் எனக்குப் புரியுது.... வழி மாறி போயிருக்கிற சின்னவயசு பையன் கல்யாணம் பண்ணி தன் பொண்டாட்டிக்கு உண்மையா மாறிடுவான்னு நினைச்சேன்... ஆனா உங்க கல்யாணத்துக்கு அப்புறமும் அவங்க பழக்கம் ரொம்ப தீவிரமா ஆகவும் தான் எனக்குத் தெரிஞ்ச டிடக்டிவ் மூலமா ப்ரூப் கலெக்ட் பண்ணினேன்...

    நீ ஏன் இதையெல்லாம் சேகரிச்சு என்கிட்டே கொண்டு வந்து காட்டி மெனக்கிடணும்னு நீங்க யோசிக்கிறது எனக்குப் புரியுது. உங்களை இரண்டு மூணு தடவை காலேஜ்ல பார்த்திருக்கேன்.. உங்க காலேஜ் ட்ரஸ்ட்டீஸ்ல நானும் ஒருத்தன்.

    உங்க அட்மிஷன் டைம்ல ரமேஷோட சேர்ந்து உங்களைப் பார்த்தேன். பிறகு அப்ளிகேஷன்ல டீடைல்ஸ் பார்த்து அவன் வைப் நீங்கதான்னு கன்பார்ம் பண்ணிகிட்டேன்.. இன்னசண்டா நீங்க போறதையும் வரதையும் கவனிச்சு எனக்கு உறுத்தலா இருந்திச்சு... அவங்க இரண்டு பேரு மட்டும் உங்களை ஏமாத்தல... எல்லா விவரமும் தெரிஞ்ச நானும் வாயை மூடிக்கிட்டு இருந்தா நானும் ஏமாத்தின மாதிரி தான். என் மனசாட்சி என்னை மன்னிக்காதுன்னு நினைச்சு தான் உங்களைப் பார்க்க வந்தேன். என்று அவர் அவளை சந்திக்க வந்த நோக்கத்தைப் பற்றி விரிவாகச் சொன்னார்.

    அவருக்குச் செவிமடுத்தபடி கீதா கண்களில் நீர் மல்க பதுமையாகச் சமைந்து இருந்தாள். அவள் அவரிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. எந்த பதிலும் சொல்லவில்லை. அவளுடைய கண்ணீரும் நிற்கவில்லை.

    தான் சொல்வது எதிரில் இருப்பவள் காதில் விழுகிறதா என்ற சந்தேகம் எழும்ப அவர் கீதாவை நிமிர்ந்து பார்த்தார்.

    மனதில் விழுந்த அடியை தாங்க முடியாமல் கல்லாக இறுகி கன்னங்களில் நீர் சேர அமர்ந்து இருந்தவளைப் பார்க்கும்போது அவருக்கு வேதனையாகத்தான் இருந்தது. திருமணமான சில வருடங்களில் கல்பனாவின் தகாத வெளி பழக்க வழக்கங்களை முதன்முதலில் அறிந்தபோது தானும் இதைப் போலவே நிலை மறந்து அமர்ந்திருந்ததை அவர் நினைத்துப் பார்த்தார்.

    அவங்க அக்கா தம்பின்னு சொல்லிக்கிட்டதால நீங்க நம்பிட்டீங்க.... அது உங்க தப்பு இல்ல.. இப்ப உலகம் ரொம்பவே மாறி போயிட்டதை புரிஞ்சுக்க முடியாம இருந்திருக்கீங்க.... லவ்வரையே ப்ரோன்னும் அண்ணான்னும் கூப்பிடற காலம் இது. அந்த மாதிரி தானே சினிமா எல்லாம் எடுக்குறாங்க.... நம்மளை மாதிரி ஆளுங்க தான் கடைசியில ஏமாந்து ... முடிக்க முடியாமல் பெருமூச்சு விட்டவர்,

    இப்பயும் ஒண்ணும் கெட்டுப் போயிடல. பொறுமையா இதை ஹான்டில் பண்ணுங்க.... உங்க அம்மா அப்பாகிட்ட இதை பத்தி சொல்லி என்ன முடிவு பண்றதுன்னு பாருங்க என்று சொல்லி அவர் எழுந்தார்.

    தன் கார்டை எடுத்துக் கொடுத்து, ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம என்னை கூப்பிடுங்க... நான் உள்ள வந்தவுடனேயே என்னை அண்ணான்னு சொன்னீங்க... அந்த கேடு கேட்ட ஜென்மங்களை மாதிரி நினைச்சுடாதீங்க... நான் சகோதர உறவுகளை உயிரா மதிக்கறவன். ஒரு தங்கச்சிக்குச் செய்யற கடமையா உங்களுக்காக எதுவும் செய்ய தயாரா இருக்கேன்.... இப்ப தைரியமா இருங்க... உங்க வீட்டுக்கு பேசுங்க.. அவர் தன்னால் முடிந்த ஆற்றுப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்லி அவளிடமிருந்து விடைபெற்று கிளம்பினார்.

    திவாகர் கிளம்பியதை கூட உணர முடியாமல் கீதா மின் அதிர்ச்சியால் தாக்கப்பட்டவள் போல அமர்ந்து இருந்தாள்.

    ஒரு வேளை அந்த போட்டோஸ் எல்லாம் மார்பிங் பண்ணினதா இருந்தா? அந்த மாதிரி செய்யறது எல்லாம் இப்ப ரொம்ப ஈஸியாச்சே....வேணும்னே ஏதாவது குழப்பம் பண்ணணும்னு யாராவது செய்யுறாங்களோ....? அவளுக்கு வந்தவர் மேல் திடீரென சந்தேகம் வர, மனதில் சிறு துளி நம்பிக்கை துளிர்த்தது.

    ஒரு வேளை உண்மையா இருந்துச்சுன்னா.....? அவள் அப்படியும் நினைக்க முடியாமல் இப்படியும் நம்ப முடியாமல் அல்லாடினாள்.

    இதை இப்போதே உறுதி படுத்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வலுக்க, அவள் ரமேஷின் அலமாரியைக் குடைந்தாள். அவன் துணிகளை, டெஸ்க்குகளை லாக்கர்களைக் குடைய எதுவும் கிடைக்கவில்லை. எப்படி உண்மையா பொய்யா என்று கண்டுபிடிப்பது என்று தெரியாமல் சில கணங்கள் புரியாமல் அமர்ந்து விட்டாள்.

    ஏதோ தோன்ற, ரமேஷ் அலுவலக அறை என்ற பெயரில் உபயோகிக்கும் ரூமை திறந்து உள்ளே சென்றாள். அங்கேயே தான் அவன் பெரும்பாலும் தன் நேரத்தை செலவழிப்பான். இரவு வருபவன் வேலை இருப்பதாக சொல்லி தன் பணிகளைப் பார்த்து விட்டு அங்கேயே உறங்கியும் விடுவான். அலுவலக அறை என்பது வெறும் பேரில் தானே தவிர, அது அவனுடைய பர்சனல் ரூமாகத் தான் இருந்தது.

    அந்த அறைக்குள் சென்ற கீதா அவனுடைய கம்ப்யூட்டர் டெஸ்க்கை ஆராய்ந்தாள். அவன் தன்னுடைய லேப்டாப், டேப்(Tab) என்ற எலக்ட்ரானிக் பொருள்களைத் தன்னுடன் எடுத்துச் சென்றிருக்க, எல்லாமே கணினிமயம் என்ற இந்த காலகட்டத்தில் அவளுக்கு உருப்படியாக ஒன்றும் சிக்கவில்லை.

    ஒரு பக்கம் எதுவும் கிடைக்கவில்லை, வந்தவர் சொன்னது உண்மையில்லை என்ற சின்ன நிம்மதிக்கீற்று நெஞ்சத்தில் தோன்றினாலும், மறுபக்கம் ஏதோ உள்ளது... தேடிப்பார்... என்று உள்ளுணர்வு அவளை எச்சரித்து சோர்வடைய செய்தது.

    களைத்த உள்ளத்தை தேற்றி கொண்டு ஏதாவது கிடைக்குமா என்று மனம் தளராமல் அவள் தன் தேடுதல் வேட்டையை தொடர, நிறையப் பேப்பர்களுக்கு இடையில் ஒரு பென் டிரைவ் கிடைத்தது.

    அதை ஒதுக்கி விட்டு காகிதங்களை, பைல்களைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், ‘ஒருவேளை தான் தேடும் ஆதாரம் இதில் இருந்தால்.....? என்ற உணர்வு தோன்ற, ஓரமாக ஒதுங்கி இருந்த அந்த ஸ்டிக்கை கையில் எடுத்தாள்.

    அதில் என்ன இருக்கிறது என்று தன் சிஸ்டத்தில் அதை பொருத்தி பார்க்க, நிறைய போல்டர்கள் இருந்தன. ஒவ்வொரு கோப்பாக அவள் பிரித்துப் பார்க்க, நிறைய பைல்கள், தகவல்கள் என இருந்தன.

    உள்ளே உள்ளே என்று சென்று பார்க்க, மீஅண்ட்கல்ப்ஸ் என்ற பெயரில் ஒரு போல்டர் இருந்தது. அந்தப் பெயரே பாதியை விளக்கி விட, தடதடக்கும் மனதுடன் அதை பிரித்துப் பார்த்தாள்.

    அதில் நிறைய போட்டோக்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் புதுமண தம்பதிகளுக்குச்

    Enjoying the preview?
    Page 1 of 1