Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Margazhi Maatha Nila!
Margazhi Maatha Nila!
Margazhi Maatha Nila!
Ebook331 pages2 hours

Margazhi Maatha Nila!

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

வணக்கம்.

என்னுடைய நாவலான மார்கழி மாத நிலா! மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கொஞ்சம் பெரிய கதையாக எழுதுங்களேன் என்று நிறைய வாசகிகள் அன்புத் தொல்லை செய்தீர்கள்.

அதனால் உருவானதுதான் இந்தக் கதை.

இந்தக் கதையின் நாயகி ஆஷிகா. நாயகன் ரித்திஷ் பெண்கள் நிறையப் பேசுவார்கள். They love to talk என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தப் பெண் ஆஷிகா.

கொஞ்சம் குறும்பு, வம்பு, நிறையப் பேச்சு இவை எல்லாம் சேர்ந்த அழகான கலவை ஆஷிகா. ரித்திஷிற்கும் ஆஷிகாவிற்கும் இடையே எப்படி நட்பு சுவாரசியமாக ஆரம்பிக்கிறது என்பது உங்கள் மனதில் கண்டிப்பாக இடம் பெறும்.

ஆஷிகா பேசும் விஷயங்கள் எல்லாமே உங்கள் மனதுக்குப் புத்துணர்வு ஊட்டும். இந்த நாவலைப் படித்த பின்பு you will feel good. அந்த நம்பிக்கையோடு தற்காலிகமாக உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். உங்கள் கருத்துக்களை கைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் தெரிவித்து வரும் எல்லா வாசகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580140906953
Margazhi Maatha Nila!

Read more from Lakshmi Sudha

Related to Margazhi Maatha Nila!

Related ebooks

Reviews for Margazhi Maatha Nila!

Rating: 3.5 out of 5 stars
3.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Margazhi Maatha Nila! - Lakshmi Sudha

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மார்கழி மாத நிலா!

    Margazhi Maatha Nila!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    முன்னுரை

    வணக்கம்.

    என்னுடைய நாவலான மார்கழி மாத நிலா! மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    கொஞ்சம் பெரிய கதையாக எழுதுங்களேன் என்று நிறைய வாசகிகள் அன்புத் தொல்லை செய்தீர்கள்.

    அதனால் உருவானதுதான் இந்தக் கதை.

    இந்தக் கதையின் நாயகி ஆஷிகா. நாயகன் ரித்திஷ். பெண்கள் நிறையப் பேசுவார்கள். They love to talk என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தப் பெண் ஆஷிகா.

    கொஞ்சம் குறும்பு, வம்பு, நிறையப் பேச்சு இவை எல்லாம் சேர்ந்த அழகான கலவை ஆஷிகா. ரித்திஷிற்கும் ஆஷிகாவிற்கும் இடையே எப்படி நட்பு சுவாரசியமாக ஆரம்பிக்கிறது என்பது உங்கள் மனதில் கண்டிப்பாக இடம் பெறும்.

    ஆஷிகா பேசும் விஷயங்கள் எல்லாமே உங்கள் மனதுக்குப் புத்துணர்வு ஊட்டும். இந்த நாவலைப் படித்த பின்பு you will feel good.

    அந்த நம்பிக்கையோடு தற்காலிகமாக உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். உங்கள் கருத்துக்களை கைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் தெரிவித்து வரும் எல்லா வாசகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    அன்புடன்,

    லட்சுமி சுதா.

    lakshmisudha@yahoo.com

    1

    உன்

    நிழலைக்

    கண்டு

    பொறாமைப்

    படுகிறேன்!

    உன்

    கூந்தலில்

    உள்ள

    ஒற்றை

    ரோஜாவாக

    மாற

    முடியாதா?

    ஏங்குகிறேன்

    நான்

    ...

    எங்கே

    தேடுகிறேன்!

    ...

    நதியின்

    மடியில்

    நான்

    ...

    நெல்லை எக்ஸ்பிரஸ் ட்ரெயின் அதிவேகமாகப் போய்க் கொண்டு இருந்தது. ரித்திஷின் எண்ண அலைகள் அதைக் காட்டிலும் வேகமாகத் திக்குத் தெரியாமல் போய்க் கொண்டு இருந்தன.

    ட்ரெயினில் ‘த்ரீ டையர் ஏஸியில்’ பயணம் செய்து கொண்டு இருந்தான் அவன். சக பயணிகளில் ஒருவன் லேப் டாப்பில் மூழ்கி இருந்தான்.

    இன்னொரு பெண் கைப்பேசியில் ஹெட்போன் வழியாகப் பாடலை ரசித்துக் கேட்டுக் கொண்டு இருந்தாள். தாயின் மடியில் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தது ஒரு குழந்தை.

    இந்தக் குழந்தையைப் போல் எப்பவும் இருந்திருக்கலாமே… எந்தக் கவலையும் இல்லாமல், எந்தப் பொறுப்பும் இல்லாமல்… எப்படியும் யாராவது நம்மைக் கவனித்துக் கொள்வார்கள்.

    தேவையானவை எல்லாமே எப்படியும் கிடைத்துவிடும். உணவு, உடை, உறக்கம் என எல்லாமே கிடைத்துவிடும்.

    இதைத் தவிர முக்கியமான ஒன்று இருக்கிறது. எந்தப் பிரச்சனைகளும் குழந்தைகளை அணுகாது. அப்படியே அணுகினாலும் பிரச்சனைகளைக் கவனித்துக் கொள்ள யாராவது இருப்பார்கள்.

    ஜுரம் வந்தால் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்வதற்கு யாராவது இருப்பார்கள். ஸ்கூலில் ஏதேனும் பிரச்சனை என்றால் பிரின்சிபாலிடம் பேசுவதற்கு யாராவது இருப்பார்கள்.

    தன் மனதில் ஓடும் எண்ணங்களைக் கண்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது.

    ஸார்… டின்னர் வேணுமா?

    வெஜிடேரியன் என்ன இருக்கு? என்றான் லேப் டாப்பில் மூழ்கி இருந்தவன்… பார்வையை லேப் டாப்பில் இருந்து எடுத்தபடியே.

    ஸார்… இட்லி சாம்பார் இருக்கு!

    சரி… ஒரு பிளேட் இட்லி சாம்பார் எனக்கு.

    சரி ஸார்… கொண்டு வந்திடறேன்.

    எத்தனை மணிக்குச் சாப்பாடு வரும்?

    ஒன்பது மணிக்குள்ள வந்திடும் ஸார்!

    தேங்க்ஸ்… என்று மீண்டும் லேப் டாப்பில் மூழ்கினான் அவன்.

    ஸார்… உங்களுக்குச் சாப்பாடு வேண்டுமா?

    வேண்டாம்… என்று முனகினான் ரித்திஷ்.

    பசித்தது. ஆனால் சாப்பிடப் பிடிக்கவில்லை. தன்நிலைகண்டு அவனுக்கே கோபம் வந்தது. கண் மூடினான். மூடிய விழிகளுக்குள் ப்ரியா தோன்றினாள்.

    சே! என் மனம் ஏன் இன்னும் அவளையே நினைக்கிறது? வெட்கம் கெட்ட மனசு… என்று தன்னையே கடிந்து கொண்டான் ரித்திஷ்.

    அவன் கண்கள் கலங்கின. ட்ரெயின் நின்றது. சட்டெனக் கண்களைத் துடைத்துக் கொண்டான் அவன்.

    மதுரை வந்திடுச்சா என்ன…? என்றாள் அருகில் இருந்த ஒரு பயணி.

    இல்லை… சிக்னல் போல… என்றான் லேப் டாப்பில் மூழ்கி இருந்தவன்.

    ஸார்… சாப்பாடு வந்திடுச்சு… இந்தாங்க! இருபத்து ஐந்து ரூபாய் கொடுங்க! என்றான் ரெயில்வே ஊழியன்.

    ம்… இந்தாங்க… என்று பர்ஸிலிருந்து இருபத்து ஐந்து ரூபாயை அவனிடம் நீட்டினான் லேப் டாப் ஆசாமி.

    இட்லியைப் பல் தெரியாமல் ஸ்டைலாகச் சுவைத்துச் சாப்பிட்ட லேப் டாப் ஆசாமியைப் பார்த்த ரித்திஷுக்குச் சிரிப்பு வந்தது.

    ஸார்… நீங்க சாப்பிடறீங்களா? என்றாள் உணவுப் பொட்டலத்தைப் பிரித்தபடியே எதிர் சீட்டில் இருந்த அந்தக் குழந்தையின் தாய்.

    தேங்க்ஸ் மேடம்… வேண்டாம், நீங்க சாப்பிடுங்க! என்றான் ரித்திஷ்.

    அந்தப் பெண்ணின் மடியில் இருந்த குழந்தை அப்பொழுதுதான் கண் விழித்தது. லேசாக அழத் தொடங்கியது.

    சாப்பிடும் பொழுது கரெக்டா மணி அடித்தாற்போல் இவள் சத்தம் போடுவாள். எப்படித்தான் இவளுக்குத் தெரியுதோ? என்று அலுத்துக் கொண்டாள் அந்தப் பெண்.

    ரித்திஷைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தாள். எங்கே தன் மடியில் இருக்கும் குழந்தையைத் தன்னிடம் கொஞ்ச நேரம் வைத்துக் கொள்ளும்படி சொல்லி விடுவாளோ என்று பயந்த ரித்திஷ், பார்வையை விலக்கிக் கொண்டான்.

    ட்ரெயின் புறப்படத் தொடங்கியது. கம்பார்ட்மெண்ட்டில் ஒன்று இரண்டு விளக்குகள் மட்டுமே ஒளிர்ந்து கொண்டு இருந்தன.

    அந்தப் பெண் தூங்கிவிட்டால், நிம்மதியாகத் தான் செய்ய வேண்டிய காரியத்தை முடிக்கலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ரித்திஷ்.

    அவன் அவசரம் தெரியாத அந்தப் பெண் நிதானமாகச் சாப்பிட்டபடி இருந்தாள். குழந்தையின் வாயில் ஒரு பால் புட்டியைத் திணித்து இருந்தாள் அந்தப் பெண். அதனால் குழந்தை அரைத் தூக்கத்தில் இருந்தது.

    ஒரு வழியாக அந்தப் பெண் சாப்பிட்டு முடித்து விட்டு லைட்டை அணைத்தாள். அப்பாடா என்ற நிம்மதிப் பெருமூச்சு ரித்திஷிடமிருந்து வெளிப்பட்டது.

    லேப் டாப் ஆசாமி நன்றாகத் தூங்கத் தொடங்கிவிட்டான். அவனிடமிருந்து வெளிப்பட்ட குறட்டை ஒலியே அதற்குச் சாட்சி.

    ரித்திஷ் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ஒன்பதே முக்கால் என்று சொல்லியது கைக்கடிகாரம். ட்ரெயின் மீண்டும் நின்றது.

    அடச் சே! அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்து விட்டதா? என்ன ஸ்டேஷன் இது? மதுரை போல… என நினைத்தபடியே ஸீட்டில் உட்கார்ந்து இருந்தான்.

    ஹலோ! இது பி. ஸெவன் தானே! என்று ஒரு பெண் குரல் கேட்டது.

    ரித்திஷ் மௌனமாக இருந்தான்.

    ஹலோ… நான் உங்களைத்தான் கேட்கிறேன்! என்று ரித்திஷ் அருகே வந்து சத்தமாகக் கத்தினாள்.

    லுக்… உங்களுக்கு டவுட் இருந்தால் டி.டி.ஆரைக் கேளுங்கள்!

    அவர் எங்கே என்று தெரியவில்லை!

    தேடிக் கண்டுபிடியுங்கள்.

    ம்… அதற்குள் ட்ரெயின் கிளம்பி விடும். நான் அப்புறம் லக்கேஜைத் தூக்கிக் கொண்டு நடக்கணும்! லக்கேஜில் பாதி சாப்பாட்டு ஐட்டம். ஆல் டேஸ்டி ஃபுட். என்ன, என்ன தெரியுமா? தேன் குழல், முந்திரி கேக், சூடாகப் பக்கோடா… தென் ஒரு ப்ளாஸ்க்கில் ஃபில்டர் காபி… அப்புறம்… என்று முடிப்பதற்குள் அவன் குறுக்கிட்டான்.

    ராத்திரி நேரத்தில் இந்த மாதிரிப் பேசித் தொல்லை செய்வது பேஸிக் மேனர்ஸ் கிடையாது! என்றான் இறுகிய முகத்தோடு ரித்திஷ்.

    அட… அப்பப் பகல் நேரத்தில் தொல்லை செய்யலாமா? அது உங்களுக்கு ஓ.கே.வா! என்றாள் சீரியஸாக அவள்.

    இந்த மாதிரிப் பேசிப் பேசித் தொல்லை செய்வது உன்னுடைய பழக்கமாக இருக்கலாம். பட் எனக்கு அது பிடிக்காது. நான் தனிமையாக அமைதியாக இருக்க விரும்புகிறேன். ஸோ வில் யூ ஷட் அப்?

    ம்… தனிமையை அமைதியை விரும்புகிறவங்க தனியா சார்ட்டட் ப்ளேனில் போக வேண்டும். ஏற்கெனவே இந்த ஏஸி கோச்செல்லாம் எப்பொழுதும் அழுது வடியும். இதில் பயணம் செய்பவர்களுக்கெல்லாம் ஏற்கெனவே அறிவு ஜீவிகள் என்று நினைப்பு.

    ஷேர் மார்க்கெட் பற்றி, இந்தியாவின் பொருளாதாரம் பற்றி, அப்புறம் லஞ்சம் பற்றி நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு வருவார்கள். ஆனால் நீங்கள் அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

    எனக்கு உங்களைப் பார்த்தால் நரசிம்ம ராவ் ஞாபகம் வருகிறது. அவரை எல்லாரும் ‘மௌனி பாபா’ என்று அழைப்பார்கள். அவர் சிரிக்கக்கூட மாட்டார். நீங்களும் அப்படித்தானா? அப்புறம்… என்று அவள் முடிக்கும் முன்பு அவன் குறுக்கிட்டான்.

    ஏய்…! ஏன் இப்படிப் பேசிப் பேசி அறுக்கற? நான் டி.டி.ஆரை அழைத்து உன்னை வெளியில் தள்ளவா?

    கூல்… கூல்… ஏன் இவ்வளவு டென்ஷன் உங்களுக்கு? உங்களுக்கு லோ பி.பி-யாக இருக்கும் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் பசியாகக்கூட இருக்கும். மனிதனுக்குப் பரம எதிரி யார் தெரியுமா? பசிதான். இந்த உடலை ஜாக்கிரதையாக வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால் காலி. ஹாஸ்பிடலுக்கு அள்ளிக் கொடுக்க வேண்டும்…

    சே… என்ன கொடுமை இது! என்று முணு முணுத்தவன், தலையில் கை வைத்து உட்கார்ந்தான்.

    ஹலோ… எனக்கு ஒரு சின்ன ஹெல்ப்…

    என்ன?

    டி.டி.ஆர். வரும்வரை நான் இங்கேயே உட்கார்ந்து கொள்ளவா?

    சரி… ஆனால் வாயை மூடிக்கொண்டு உட்கார வேண்டும்.

    ம்… அது கொஞ்சம் கஷ்டமாச்சே!

    அப்ப உனக்கு இங்கே இடம் கொடுப்பதும் கஷ்டம்!

    இல்லை… மிஸ்டர்… நான் பேசமாட்டேன். பிகாஸ்… நான் இப்பச் சாப்பிடப் போறேன். அதனால் வாயை மூடிக் கொள்ள முடியாது. அதைத்தான் அப்படிச் சொன்னேன். அப்புறம்… உங்க பெயர் என்ன? என் பெயர் ஆஷிகா! என்றாள் தேன்குழலைக் கடித்தபடியே.

    என் பெயர் உனக்கு எதற்கு?

    இந்தப் பழைய காலத்துப் படத்தில் வருவது போல்… சரோஜாதேவி எம்.ஜி.ஆரை ‘மிஸ்டர்…’ என்று கூப்பிடுவது போல் நான் உங்களைக் கூப்பிடுவது அவ்வளவாக நன்றாக இருக்காது. அதற்காகத்தான் உங்கள் பெயர் என்னவென்று கேட்டேன். அதனால்… ரொம்பப் பிகு செய்து கொள்ளாமல் சொல்லுங்க!

    ரித்திஷ்… அதுதான் என் பெயர்!

    ஓ… அப்படியா? படிக்கிறீர்களா?

    ஹலோ… என்னைப் பார்த்தால் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கிறதா?

    அப்படி இல்லை ரித்திஷ்!

    என்னது…? இப்படிப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறாய்?

    நான் உங்கள் பெயரை முழுசாகத்தானே கூப்பிட்டேன். ஏதோ சுருக்கமாகச் செல்லமாக ரிஷி என்று கூப்பிட்டது போல் கோபித்துக் கொள்கிறீர்கள். நானே ரொம்ப மனம் வெம்பி நொந்து நூடுல்ஸ் ஆகி வந்திருக்கேன். நீங்க வேற சும்மா கடுகடுன்னு இருக்கீங்களே! என்றாள் தணிந்த குரலில்.

    அவன் மௌனமாக இருந்தான்.

    அட! ரித்திஷ்… என்ன நீங்க இப்படி இருக்கீங்க? எனக்கு என்ன ப்ராப்ளம் அப்படின்னு கேட்கமாட்டிங்களா?

    லுக்! உனக்கும் எனக்கும் என்ன உறவு இருக்கிறது? நான் ஏன் உன் ப்ராப்ளம் பற்றிக் கேட்க வேண்டும்? ஆர் யூ மேட்? உன் மண்டையில் ஏதோ செல்கள் செயல் இழந்துவிட்டன போல… என்று படபடத்தான் அவன்.

    அப்பாடா… இப்பதான் கொஞ்சம் பேச ஆரம்பித்து இருக்கிறீர்கள். தட்ஸ் குட். இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களும் நம் சொந்தமே. என் வீடு, என் தெரு, என் ஊர் என்பதை எல்லாம் விட்டு விடுங்கள். உலகமே என் ஊர் என்று நினைக்க வேண்டும். இதை நான் சொல்லவில்லை. யார் சொன்னார்கள் தெரியுமா…? ஆஷிகா, தான் காற்றோடு பேசிக் கொண்டு இருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தாள். எப்ப இவன் எழுந்து போனான் என்று யோசித்தபடியே எழுந்தாள்.

    2

    மார்கழி

    மாதத்துக்

    குளிர்

    மனம்

    உன்னை

    நினைக்கிறது!

    ...

    சுட்டெரிக்கும்

    அக்னி

    நட்சத்திரம்

    மனம்

    உன்னை

    நினைக்கிறது!

    ...

    அடைமழை

    பொழிகிறது

    ஐப்பசியில்

    ...

    மனம்

    உன்னை

    மட்டுமே

    நினைக்கிறது...

    ஏன்?

    கதவு அருகே நின்று கொண்டு இருந்தான் ரித்திஷ். சிகரெட் ஒன்று அவன் கையில் இருந்தது. அவன் வாயில் இருந்து புகை ட்ரெயின் புகைக்கு இணையாக வெளியேறியது.

    யோசனையில் மூழ்கி இருந்தவனைக் கலைத்தது டி.டி.ஆரின் குரல்.

    என்ன இது? ட்ரெயினில் ஸ்மோக் செய்யக்கூடாது. இதுகூடத் தெரியாதா? பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க! பட்… இந்த மாதிரி பிஹேவ் செய்யறீங்க!

    ஸாரி ஸார்… வெரி ஸாரி!

    இல்ல… நீங்க ஃபைன் கட்டணும்!

    சரி ஸார். நான் செய்தது தப்புதான். நான் எவ்வளவு ஃபைன் கட்டணும்னு சொல்லுங்க!

    இந்தாங்க இந்த ஸ்லிப்… ஃபைன் அமௌண்ட் இதில் இருக்கு!

    அதைக் கையில் வாங்கினான் ரித்திஷ்.

    இருங்க ஸார்… ஒரு நிமிஷம். உள்ள பையில்தான் பர்ஸ் இருக்கு! என்றவன், மீண்டும் தன் இடத்திற்குப் போனான்.

    அங்கே ஸீட்டில் இருந்த பையின் ஜிப்பைத் திறந்தான். கையை விட்டவன், துழாவியபடியே இருந்தான் சில விநாடிகள்.

    என்ன இது…! இங்கேதானே வைத்தேன்! என்று முணுமுணுத்தபடியே மொத்தப் பையையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசினான்.

    ஆனால் பர்ஸ் அவன் கையில் சிக்கவே இல்லை. ‘அடச் சே! இங்க இருந்தது எங்க போச்சு?’ என்றபடியே அங்கு உட்கார்ந்து இருந்த ஆஷிகாவைப் பார்த்தான், சந்தேகமாக.

    என்ன ரித்திஷ்… எனி ப்ராப்ளம்?

    ம்… நீ வந்ததிலிருந்தே ப்ராப்ளம்தான்!

    உன் பிரச்சனைக்குக் காரணம் நீ. உன் தோல்விக்கு, வெற்றிக்கு எல்லாவற்றுக்கும் காரணம் நீதான். வேறு யாரும் இல்லை. சொன்னது கிருஷ்ணர். பகவத் கீதையின் சாராம்சம் அது. அது மட்டும் இல்லை… என்று முடிக்கும் முன்பு கத்தினான் ரித்திஷ்.

    வில் யூ ஷட் அப்? எப்பப் பார், ஏதாவது பேசிட்டு… சே… சரியான நான்சென்ஸ்!

    என்ன… ஃபைன் அமௌண்ட் கொடுக்கிறேன்னு இங்கே வந்து சண்டை போட்டுண்டு இருக்கீங்க? உங்க சண்டை எல்லாம் வீட்டில் போய் வெச்சுக்கோங்க! என்று டி.டி.ஆர். கத்தினார்.

    ஸாரி ஸார்… பர்ஸை எங்கேயோ மிஸ் செய்திட்டேன் நான்.

    வித் அவுட் கேஸா? இறங்கு கீழ!

    ஸார்… என் பெயர் ரித்திஷ். என் பெயரில்தான் டிக்கெட் எடுத்தேன். உங்க ரெக்கார்டை வேண்டுமானால் நீங்கள் செக் செய்து பாருங்கள். இந்தப் பெயரில்தான் புக்கிங் இருக்கும்.

    என்னுடைய வேலையைச் செய்ய எனக்குத் தெரியும். நீ அடுத்த ஸ்டேஷனில் இறங்கு… வா என்னோட! என்று அவன் தோளில் கை வைத்தார் டி.டி.ஆர்.

    ஸார்… கை எடுங்க!

    வித் அவுட்டில் வருபவர்களுக்குக் கம்பளம் போட்டு வரவேற்க வேண்டுமா? வா என்னோடு… நேரமாகிவிட்டது!

    எக்ஸ்கியூஸ் மீ அங்கிள்! ஃபைன் எவ்வளவு என்று சொல்லுங்கள்… ரித்திஷின் சார்பில் நான் கட்டிவிடுகிறேன்.

    முதலில் உங்க டிக்கெட்டைக் காட்டுங்க மேடம்!

    இந்தாங்க… அங்கிள்!

    ம்… இந்த மிடில் பர்த் உங்களுடையதுதான் மேடம்.

    தேங்க்ஸ் அங்கிள். ஒரு சின்ன ரிக்வெஸ்ட்…

    என்ன மேடம்?

    என்னை ஆஷிகா என்று கூப்பிடுங்கள். நோ ‘மேடம்’ ப்ளீஸ்! மேடம் என்றால் எனக்கு ஸ்கூல் ஞாபகம் வருது. குறிப்பாக என் கணக்கு மிஸ்… பெயர் காஞ்சன மாலா. நான் அவங்களுக்கு வெச்ச பெயர் ராட்சஸ மாலா!

    அந்த டி.டி.ஆர். அதைக் கேட்டுக் கலகலவெனச் சிரித்தார்.

    ரொம்பச் சுவாரசியமாப் பேசுற ஆஷிகா நீ… நைஸ் கேர்ல். உன்னோட பேசினால் நேரம் போவதே தெரியவில்லை. ஆனால் கடமை அழைக்கிறது!

    பரவாயில்லை… நீங்க உங்க வேலை எல்லாம் முடித்து விட்டு வாங்க! எனக்கும் பேசுறதுக்கு ஒரு ஆள் கிடைச்ச மாதிரி இருக்கும்.

    சரி ஆஷிகா… பை…

    அங்கிள்… ரித்திஷுக்கு ஃபைன் எவ்வளவு என்று சொல்லுங்கள்!

    அட… அதை மறந்திட்டேன் பார். ரித்திஷ் உனக்கு என்ன உறவு ஆஷிகா?

    பல்லைக் கடித்தபடி அங்கு நடப்பதை எல்லாம் பார்த்தபடி இருந்தான் ரித்திஷ்.

    அங்கிள்… யாதும் ஊரே யாவரும் கேளிர்! அன்பே எங்கள் உலகத் தத்துவம்! இதுதான் என் பாலிஸி. தப்பு இல்லைதானே!

    நோ வே. ரொம்ப நல்ல பாலிஸி. சரி, நான் ஃபைன் அமௌண்ட் எவ்வளவு என்று சொல்கிறேன்.

    சரி அங்கிள்… மறந்திடாதீங்க!

    மறக்க மாட்டேன் ஆஷிகா… மறந்தாலும் நீ ஞாபகப்படுத்தி விடுவாய் தானே! சரி… இவனுக்கு நீ கண்டிப்பாக ஃபைன் கட்டப் போகிறாயா?

    யெஸ் அங்கிள்… பார்க்கப் பாவமாக இருக்கு. ஏற்கெனவே ஆள் ரொம்ப டல்லா இருந்தார். இப்ப… கூடவே பர்ஸ் தொலைந்த சோகம் வேறு… முகம் பார்க்க அன்ஸகிக்கபிள்! என்று மெதுவாகக் கிசுகிசுப்பான குரலில்தான் டி.டி.ஆரிடம் சொன்னாள் ஆஷிகா.

    ஆனால் அது ரித்திஷின் காதில் விழுந்தது. சே! திமிர் பிடித்த பெண்ணாக இருக்கிறாளே இவள்! என் முகம் ‘அன்ஸகிக்கபிளாக’ இருக்கிறதா?

    என்ன செய்வது இவளை? மனக் கண்ணில் அவள் தலையில் ‘ணங்ணங்’ என்று குட்டு வைத்தான் ரித்திஷ். அவனை அறியாமல் ஒரு ஆனந்தம் பரவியது அவன் மனதில்.

    அவன் இதழ்களில் புன்முறுவலாக அவனை அறியாமல் வெளிப்பட்டது அந்த ஆனந்தம்.

    பாருங்க அங்கிள்… இப்பத் தானா சிரிக்கிறதை! என்று அவனை டி.டி.ஆரிடம் சுட்டிக் காட்டி மெதுவாகக் கிசுகிசுத்தாள் அவள்.

    ஆமாம் ஆஷிகா. ஸம்திங் இஸ் ராங் வித் ஹிம்!

    "ஆமாம் அங்கிள்! எனக்கும் அப்படித்தான் தெரிகிறது. சரி… நான் எதற்கும் இவனை க்ளோஸாக வாட்ச் செய்கிறேன்.

    Enjoying the preview?
    Page 1 of 1