Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nishaptha Mozhigal
Nishaptha Mozhigal
Nishaptha Mozhigal
Ebook505 pages5 hours

Nishaptha Mozhigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதலால் பிரிந்த குடும்பங்கள் மீண்டும் காதலால் எப்படி இணைந்தனர் என்பதைக் காதலோடு சொல்லும் கதை... காதல் என்றாலே இன்றும் பெற்றோருக்கு கசப்பாகத் தான் இருக்கிறது... ஆனாலும் பிள்ளைகள் அதை ஏற்றுக் கொள்வார்களா என்ன... கல்கியின் கதாபாத்திரப் பெயர் கொண்ட இந்தக் கதாபாத்திரங்களும் காதலை எப்படி வெற்றி கொண்டனர் என்பதைக் கதையில் படித்து தெரிந்து கொள்வோம்...
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580134406607
Nishaptha Mozhigal

Read more from Latha Baiju

Related authors

Related to Nishaptha Mozhigal

Related ebooks

Reviews for Nishaptha Mozhigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nishaptha Mozhigal - Latha Baiju

    http://www.pustaka.co.in

    நிஷப்த மொழிகள்

    Nishaptha Mozhigal

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    1

    கலபம் தராம்...

    பகவானென் மனசும் தராம்...

    மழப்பக்ஷி பாடும் பாட்டில்

    மயில்ப்பீலி நின்னே சார்த்தாம்...

    உறங்காதே நின்னோடெந்தும்

    சேர்ந்திரிக்காம்...

    கலபம் தராம்...

    பகவானென் மனசும் தராம்...

    சித்ராவின் தேனை விழுங்கிய குரல் ஸ்பீக்கரில் பகவானை வேண்டி மலையாளத்தில் ஒலித்துக் கொண்டிருக்க, அடர்ந்திருந்த இருட்டை ஹெட் லைட் வெளிச்சத்தால் விரட்டிக் கொண்டு மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது திருச்சூரிலிருந்து சென்னை புறப்பட்டிருந்த அந்தப் பேருந்து.

    பயணிகள் அவரவருக்கான இருக்கை, படுக்கையிலாய் நிறைந்திருக்க சில இருக்கைகள் மட்டும் காலியாய் பயணிகள் வருகைக்கு காத்திருந்தன.

    தனக்கான இருக்கையில் செட்டிலாகியிருந்த அருள்மொழி வர்மன் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

    வண்டி புறப்பட்டு பத்து நிமிடம் ஆகியிருக்க வழியில் பஸ் நிறுத்தம் அருகே ஒரு பெண் நின்று கை காட்டினாள். வண்டியை நிறுத்திய கண்டக்டர், ஸ்லீப்பர் சீட் இல்லா... என்று மலையாளத்தில் சொல்ல, சீட் கிட்டியால் மதி... என்றாள் அவளும் மலையாளத்தில்.

    ம்ம்... கயறிக்கோ... என்றவர் அவள் ஏறியதும் விசிலை ஊத வண்டி நகரத் தொடங்கியது.

    எவிடேக்கா...

    சென்னை... அவள் நீட்டிய ஐநூறை வாங்கி டிக்கட்டுடன் மீதிப் பணத்தைக் கொடுத்துவிட்டு ஒரு சீட்டைக் காட்டி அமர்ந்து கொள்ள சொன்னார். தனக்கு முன்னில் இருந்த காலி சீட்டில் வந்தமர்ந்த சுரிதார் பெண்ணை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வெளியே பார்த்தான் நம் நாயகன்.

    அருள்மொழி வர்மன் சிவில் எஞ்சினியரிங் முடித்துவிட்டு, சென்னையில் தந்தையின் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியிலேயே இணைந்து கொண்டான். அவனது வரவுக்குப் பிறகு கல்கி பில்டர்ஸ் இன்னும் மேல் நோக்கி கால் பதித்திருந்தது.

    அருள்மொழிவர்மன் அளந்து பேசும் சுபாவக்காரன். தேவை இல்லாமல் எந்தப் பிரச்சனையிலும் தலையிட மாட்டான். தங்கை குந்தவை கல்லூரியில் படிக்க, அம்மா சகுந்தலா முழுநேர கதைப் பைத்தியம். வீட்டில் ஒரு குட்டி லைப்ரரியே வைத்திருந்தார். பொன்னியின் செல்வன் கதையின் தீவிர வாசகி. எனவே அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயரையே பிள்ளைகளுக்கும் வைத்திருந்தார். கணவனின் பெயரைக் கேட்டு அவரை சுந்தர சோழராகவே கற்பனை செய்து மணந்தவர். தனது பெற்றோர் சகுந்தலா என்று பெயர் சூட்டியதை நினைத்து எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டு கஜட்டில் கொடுத்து மாற்றி விடலாமா என்று வரை யோசித்தவர், பெற்றோர் வைத்த பெயரை மாற்றுவது பாவம் என்று விட்டுவிட்டார்.

    இந்த வசதி வாய்ப்பும், பவுசும் எல்லாம் மனைவியின் பிறந்த வீட்டிலிருந்து வந்ததன் காரணமாய் அவர் செய்யும் பைத்தியக்காரத்தனத்தை எல்லாம் சுந்தரம் கண்டு கொள்ள மாட்டார். பொதுவே பிள்ளைகள் உட்பட எல்லாரிடமும் மிகவும் கண்டிப்பான குணமுடையவர் என்றாலும் மனைவியிடம் மட்டும் அவருக்கு தனி நேசம் இருந்தது. தன்னுடைய வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டு வந்தவள் என்ற மதிப்பு இருந்தது. அதனால் அவரது இஷ்டப்படியே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு கூட கல்கியின் பெயரை வைக்க சம்மதித்திருந்தார்.

    திருச்சூரில் உடன் படித்த நண்பன் ஒருவனின் கல்யாணத்தில் கலந்து கொண்டு அருள்மொழிவர்மன் திரும்ப சென்னைக்கு பஸ் ஏறியிருந்தான்.

    அழகாய் வெட்டப்பட்டிருந்த கிராப் காற்றில் பறக்க, மாநிறமாய் இருந்தாலும் தீட்சண்யமான கண்கள், கூர் நாசி, அளவான மீசையுடன் களையாய் கம்பீரமாய் இருந்தான்.

    பேருந்து சிட்டியைக் கடந்து ஹைவேயில் கலக்க வேகம் எடுத்தது. வெளியே எங்கும் இருட்டு மட்டுமே நிறைந்திருக்க பார்வைக்கு ஒன்றுமில்லாமல் பாகில் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்து விரித்து வைத்துக் கொண்டான்.

    முன்னில் அமர்ந்திருந்த பெண் கொண்டு வந்திருந்த பாகை காலுக்கடியில் வைத்துவிட்டு அலைபேசியில் யாரையோ அழைக்க முயன்று கொண்டிருந்தாள். நிமிர்ந்து அவளைப் பார்க்காவிட்டாலும் அவள் செய்வதெல்லாம் அவனுக்குத் தெரியவே செய்தது.

    அவர்களுக்கு வலது பக்கத்தில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களின் பார்வை இவள் மீது படிவதும் தங்களுக்குள் கிசுகிசுப்பதுமாய் இருக்க அதுவும் அவன் கவனத்தில் படவே செய்தது.

    பச்ச்... அலைபேசியில் முயன்று கிடைக்காமல் அந்தப் பெண் ஏமாற்றத்துடன் தலையாட்டி டென்ஷனாய் இருந்தாள்.

    எந்தா பேரு... (பேரென்ன) அவளையே பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிரிப்போடு கேட்க அவள் முறைத்தாள்.

    ஹா, நோக்கிப் பேடிப்பிக்கல்லே... எவிடயோ கண்ட போல உண்டு... அதா சோதிச்சது... (அட பார்த்து பயப்படுத்தாத... எங்கயோ பார்த்த போலருக்கு... அதான் கேட்டோம்...) அவர்கள் சொல்ல முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அதைக் கேட்டு அவளை ஏறிட்ட அருள்மொழி வர்மன் அப்போதுதான் சரியாய் பார்த்தான்.

    தனுஷ் படத்தில் வரும் பாட்டு ஒன்று நினைவு வந்தது.

    இவளை வெள்ளாவி வச்சு தான் வெளுத்திருப்பாங்களோ... இவ்ளோ கலரா இருக்கா... என நினைத்தவன் அவள் கவனிக்காத வண்ணம் அவளை நோட்டமிட்டான்.

    கறுத்து சுருண்ட முடிக் கற்றைகள் காற்றில் படபடக்க சுண்டினால் ரத்தம் வரும் நிறத்தோடு சோகமாய் அமர்ந்திருந்தாள். முகத்தில் ஸ்டிக்கர் பொட்டு மட்டும். பவுடர் கூட இல்லை. அவளது வெளுத்த முகம் டென்ஷனால் மேலும் சிவந்திருக்க, பாவம், என்ன பிரச்சனையோ... என நினைத்தவன் மீண்டும் புத்தகத்தில் கண்ணைப் பதித்தான்.

    பேருந்து சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருக்க பாட்டின் சத்தத்தைக் குறைத்திருந்தனர்.

    ஸ்லீப்பர் வசதியுள்ளவர்கள் வசதியாய் படுத்துக் கொண்டிருக்க முன்னில் மட்டும் செமி ஸ்லீப்பர் என்பதால் சீட்டை அட்ஜஸ்ட் செய்து சாய்வாய் அமர்ந்து கொண்டான் அருள்மொழி வர்மன்.

    அந்தப் பெண் இருட்டை வெறித்துக் கொண்டிருக்க கண்கள் கலங்கியிருந்தது.

    என்னவென்று கேட்கலாமா... என யோசித்தவன், எதுக்கு வம்பு, வேண்டாம்... என்று கண்ணை மூடிக் கொண்டான்.

    குட்டி எந்தெங்கிலும் பிரஸ்னத்தில் ஆனோ... (ஏன்மா, நீ எதுவும் பிரச்சனைல இருக்கியா...) அந்த இளைஞர்கள் கேட்பது காதில் விழுந்தது.

    ப்ச்... ஒண்ணும் இல்லா... (அதெல்லாம் ஒண்ணுமில்ல)

    பின்ன எந்தினா கரையுந்த... பேடிக்காண்ட பரயுந்தே... (அப்புறம் எதுக்கு அழறே... பயப்படாம சொல்லுமா...)

    அவள் பதில் சொல்லாமல் இருக்க, அவர்கள் தொடர்ந்தனர்.

    குட்டி ஒற்றைக்கானோ... ஞங்கள் கோயம்பத்தூர்... குட்டி எங்கோட்டா... (தனியாவா வந்திருக்க... நாங்கள் கோயம்பத்தூர்.. நீ எங்க போற...)

    அவளிடம் மீண்டும் அமைதி.

    இங்கன ஒற்றைக்கு போரடிச்சு இரிக்காதே, எந்தெங்கிலும் பர... இதொக்கே ஒரு ரசல்லே... அல்லடா... நண்பனிடம் கேட்க, அவனும் தலையாட்டினான்.

    (இப்படி தனியா உக்கார்ந்திருந்தா போரடிக்கும்ல... ஏதாச்சும் பேசிட்டுப் போனா நல்லர்க்குமே... இல்லடா நண்பா...)

    பின்ன... குட்டி விஷமிக்காதே... ஏது பிரஸ்னத்தினும் ஒரு தீர்மானம் உண்டாகும்... கடல் போல உள்ள பிரஸ்னங்கள் ஒரு ஒற்ற ராத்திரியில் மஞ்சு போலே மாறிப் போகும்... (பின்ன, நீ கவலைப்படாதேம்மா... எந்த ஒரு பிரச்சனைக்கும் முடிவு இருக்கும்... கடல் போல ராத்திரியில் தோனுற பிரச்சனை ஒரே ராத்திரியில் பனி போல மறைஞ்சு போகும்...) அவர்கள் வேதாந்தம் பேசிக் கொண்டிருக்க அவள் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

    சென்ட் தோமஸ் காலேஜ்லானோ படிச்சது... கண்டது போலுண்டே... (சென்ட் தாமஸ் காலேஜ்லயா படிச்ச... பார்த்த போலருக்கு...) அதற்கும் அவளிடம் பதிலில்லாமல் போக,

    சரி விடடா... சம்சாரிக்கான் இஷ்டமில்லா தோணுந்து... (பேசப் பிடிக்கல போலருக்கு...) ஒருவன் சொல்ல மற்றவனும் அமைதியானான்.

    அவர்களின் தொணத்தல் நின்று போக இங்கே நடக்கும் எதையும் கண்டு கொள்ளாமல் கண் மூடி சாய்ந்திருந்த அருளின் மேல் அவளது பார்வை படிந்தது.

    ம்ம்... கஷ்டம் தன்னே... அடுத்து நடக்கனது அறயாதே இங்கனயும் ஒரு ஜென்மம்... (ம்ம்... கஷ்டம் தான், பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூடத் தெரியாம இப்படி ஒரு ஜென்மம்...) என மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் நிமிர்ந்திருந்த சீட்டை சரியாக்கி சுடிதார் துப்பட்டாவை இழுத்து போர்வை போல் சுற்றிக் கொண்டு உறங்குவதற்கு தோதாய் சாய்வாய் அமர்ந்து கொண்டாள்.

    மனதுக்குள் சற்று பயமாய் இருந்தது. நினைத்து வந்த காரியம் நல்லபடி நடக்கவேண்டுமென்று குருவாயூரப்பனிடம் வேண்டுதல் வைத்துவிட்டு கண்ணை மூடிக் கொண்டாள்.

    சலசலவென்ற பேச்சுக் குரல்கள் நின்று போயிருக்க பேருந்தில் டிரைவர், கண்டக்டர் தவிர அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். ஆலத்தூரில் பேருந்து நிற்க சிலர் ஏறி காலியாய் இருந்த சில இருக்கையில் நிறைந்தனர். அடுத்து பாலக்காட்டில் சிலர் இறங்க, சிலர் ஏறிக் கொள்ள பஸ் சீராய் வேகமெடுத்தது. பேருந்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அருள் கண் விழிக்க அதன் அன்னை தமிழில் சமாதானப் படுத்தும் குரல் கேட்டது.

    தொட்டில்ல தான் தூங்குவேன்னு அடம் பிடிச்சா நான் எங்க போறது... ப்ளீஸ் டா செல்லம்... தூங்குடா... அவள் கெஞ்சிக் கொண்டிருக்க கணவன் அதட்டினான்.

    பாப்பா, பேசாம தூங்கு... இப்படி சத்தம் போட்டு அழுதா பஸ்ல இருந்து இறக்கி விட்டிருவாங்க... அப்புறம் நாம வீட்டுக்குப் போக முடியாது... என்று சொல்ல குழந்தை, தொத்தி வேணும்..." என்று அடம் பிடித்து அழத் தொடங்க அங்கங்கே சிலர் உறக்கம் கெட்ட கடுப்பில் பார்த்தனர்.

    ஓடுற பஸ்சுல தொட்டிலுக்கு எங்க போறது... குழந்தையின் அன்னை புலம்பிக் கொண்டே தோளில் போட்டுக் கொண்டு நடக்க அது தேம்பலுடன் கண்ணை உருட்டி முழித்துக் கொண்டு எல்லாரையும் வேடிக்கை பார்த்தது.

    இதுக்குதான் கட்டில்ல படுக்க வச்சுப் பழக்குன்னு சொன்னேன்... இப்பவும் தொட்டில்லயே படுக்க வச்சா இப்படி தான் அழுது அடம் பிடிக்கும்... கணவன் மனைவியைத் திட்ட அவள் பரிதாபமாய் பார்த்தாள்.

    அதைக் கேட்ட அருளுக்கு பாவமாய் இருந்தது. எழுந்தவன், ஒரு சேலையோ, லுங்கியோ இருந்தா ரெண்டு கம்பிலயும் கட்டி படுக்க வைங்க... என்றான்.

    அந்த மாதிரி எதுவும் இல்லையே... அந்தப் பெண் கையைப் பிசைய அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவள் ஓ... அப்ப இவன் ஊமையல்ல... என்றாள் மனதுக்குள்.

    அந்த இளைஞர்கள் பேகிலிருந்து போர்வை ஒன்றை எடுத்துக் கொடுக்க தொட்டில் போல கட்டி படுக்க வைத்த பிறகே குழந்தை உறங்கத் தொடங்கியது.

    தேங்க்ஸ் தம்பி... குழந்தையின் அன்னை சொல்ல, ஹேய், தேங்க்ஸோ, சாரமில்ல சேச்சி... என்று சிரித்தான்.

    ஏதாயாலும் பிரதர்ட ஐடியா கொள்ளாம்... நான் சதீஷ்... அருளிடம் கை நீட்ட புன்னகையுடன் பற்றி குலுக்கினான்.

    அருள்... என்றவனிடம் மற்றவனும் கை நீட்டி, நான் ராஜீவ்... தமிழ் ஆனல்லே... எங்கள்க்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்... என்றதும் அருள் சிரித்தான்.

    பின்னே எந்தா செய்யுந்த... அவன் கேட்கவும் முழித்தான்.

    ஜோலி, ஜாப் எந்தானு...

    நான் சிவில் எஞ்சினியர், சென்னைல ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சிருக்கேன்..

    ஓ நைஸ், வீ ஆர் பாஷன் டிசைனர்ஸ்... என்றவன் ஆவஸ்யம் (தேவை) உண்டெங்கில் விளிக்கனே..." என்று அவர்களின் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.

    வாங்கிக் கொண்ட அருள் தனது கார்டையும் கொடுக்க ஆண்களுக்குள் மிக இயல்பாய் நட்பு உருவாகி இருந்தது.

    அருள் மொழி வர்மன்... இதென்னா, இத்தர வலிய பேரு... சிரிப்புடன் கேட்ட ராஜீவ் ஆனாலும் நல்லார்க்கு கிட்டோ... பேரிலு ஒரு கம்பீரம் இருக்கு... அரைகுறை தமிழில் அவன் சொல்ல புன்னகைத்தவன், அது அம்மாவுக்குப் பிடிச்ச பேரு... என்றதும், ஓ... தாய் சொல்லை தட்டாதே, தாயில்லாமல் நானில்லை... தமிழ்ல அம்மா சென்டிமென்ட் ஜாஸ்தி இல்லையா... என்று கேட்க, சகஜமாய் பேசிக் கொண்டிருந்தனர்.

    சற்று நேரத்தில் ஒரு பெட்ரோல் பங்கு அருகே பேருந்து நின்றது.

    பஸ் இவிடே கொஞ்சம் நேரம் நிக்கும்... பாத்ரூம் போனவர், சாய, காபி குடிக்கனவர் போயிட்டு வாங்க... இரண்டு பாஷையும் கலந்து சொல்லிவிட்டு கண்டக்டரும், டிரைவரும் இறங்கிச் சென்றனர்.

    அருளுக்கு பாத்ரூம் போக வேண்டும் போலிருக்க எழுந்தவன் போய்விட்டு அருகிலிருந்த டீக்கடையில் பிளாஸ்டிக் கப்பில் காப்பியை வாங்கிக் கொண்டு நின்றான். அந்த இளைஞர்கள் இருவரும் பாத்ரூம் சென்றுவிட்டு அங்கே வர, சேட்டா, மூணு சாயா... என்றதும் டீக்கடை சேட்டன் மூன்று பிளாஸ்டிக் கப்பில் டீ கொடுக்க, மூணு எதுக்கு, நான் காபி வாங்கிட்டேன்... என்றான் அருள்.

    அடுத்திருந்த குட்டிக்கு... (பக்கத்திலிருந்த பொண்ணுக்கு) என்றவன் பேருந்துக்கு சென்று ஜன்னல் வழியே அந்தப் பெண்ணை அழைக்க, அவள் வேண்டாமென்று மறுப்பதை அருள் கவனித்தான்.

    எல்லாரும் சீப் அல்ல குட்டி... ஞங்களே பிரதராய் கண்டா மதி... (எல்லாரும் மோசம் இல்லைம்மா... எங்களை உன் பிரதரா நினைச்சுக்க...) என்றபடி அவன் நீட்ட மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

    அவர்கள் செய்தது தனக்குத் தோணாத குற்றவுணர்ச்சி அருளுக்குத் தோன்றினாலும் குடித்து முடித்து மூவரும் பேருந்துக்கு சென்று அமர்ந்தனர்.

    அவர்களை நோக்கிப் புன்னகைத்த அந்தப் பெண், சேட்டா, ஒண்ணு ஸ்ரத்திக்கனே... (அண்ணா, கொஞ்சம் பார்த்துக்கோங்க...) நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வராம்... என்றவள் அவர்களிடம் சொல்லிவிட்டு இறங்க திரும்பி வரும்போது நான்கு சிப்ஸ் பாக்கெட்டுடன் வந்தாள்.

    அவர்களிடம் நீட்ட மறுக்காமல் வாங்கிக் கொள்ள அருள் வாங்க தயங்கினான்.

    வாங்கிக்கோ பிரதர்... மனுஷ்யனே மனுஷன் சம்சயிச்சிட்டே இருந்தால் எப்பளானு சிநேகிக்கான் சமயம் உண்டாவுகா... (மனுஷனை மனுஷன் சந்தேகப் பட்டுட்டே இருந்தா எப்பதான் நேசிக்க டைம் இருக்கும்...) அவர்கள் சாதாரணமாய் ஒரு பெரிய கருத்தை சொல்லிவிட்டு சிரித்து பேசிக் கொண்டே சிப்ஸை நொறுக்கிக் கொண்டிருக்க கோவை நெருங்கிக் கொண்டிருந்தது.

    ஓகே... கோயம்பத்தூர் எத்தி... நெக்ஸ்ட் டைம் திருச்சூர் வரும்போல் விளிக்கு... காணாம்... (கோயம்பத்தூர் வந்திருச்சு... அடுத்த தடவை திருச்சூர் வரும்போது கால் பண்ணுங்க, பார்க்கலாம்...) அவனிடம் சொன்னவர்கள், ஓகே குட்டி... (ஓகே மா...) ஹாப்பி ஜர்னி... என்று இறங்க ரெடி ஆகினர்.

    சேட்டா, எண்ட பேரு வானதி... சென்னைக்கு போகுவா... (அண்ணா, என் பேரு வானதி, சென்னைக்குப் போறேன்...) என்றவளை நோக்கி அவர்கள் புன்னகைக்க, அருள் வியப்புடன் பார்த்தான்.

    அதுவரை அவர்களை சந்தேகப் பார்வையுடன் நோக்கி எதற்கும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவளுக்கு அவர்கள் செயல் நம்பிக்கையைக் கொடுத்திருக்க புன்னகைத்து விடை கொடுத்தனர்.

    கோவையில் அவர்கள் இறங்க ஒரு தம்பதியர் அந்த இடத்தில் வந்து அமர்ந்தனர். இப்போது பேருந்து நிறைந்து இருக்க நேரம் நள்ளிரவைத் தாண்டி இருந்தது. பயணிகள் அனைவரும் உறக்கத்தில் இருக்க பேருந்து ஹைவேயில் வழுக்கிக் கொண்டு வேகமாய் சென்று கொண்டிருந்தது.

    விடியல் நெருங்கிக் கொண்டிருக்க சென்னையை எட்டிப் பிடிக்கும் முயற்சியில் வேகமெடுத்தது பேருந்து.

    நம் உடலின்

    எந்த பாகங்கள்

    நிசப்தமாய் இருந்தாலும்

    இதயம் மட்டும்

    நிசப்தமாவதில்லை...

    அதன் சப்தம் நின்று

    போனால் எல்லாமே

    நின்று போகிறது...

    அப்படிதான்

    சில உறவுகளும்...

    2

    சுகமான காற்று இதமாய் தாலாட்ட தொட்டில் போல அசைந்தாடி சென்று கொண்டிருந்த பேருந்து சட்டென்று சடன் பிரேக்கிட்டு நிற்கவும் உறக்கம் கலைந்த பயணிகள் திடுக்கிட்டனர்.

    முன்னில் வேகமாய் சென்ற சரக்கு லாரி ஒன்று நடுவில் இருந்த டிவைடரில் தட்டி நின்று கொண்டிருக்க அதன் பின்னில் வந்த வண்டிகள் சட் சட்டென்று பிரேக்கிட்டன. நல்ல உறக்கத்தில் இருந்த அருள்மொழி வர்மன் திடுக்கிட்டு விழிக்க வானதி அரக்கப் பறக்க எழுந்து ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அதிகாலை மூன்று மணியின் இருட்டு விடியலைக் காத்திருக்க நின்றிருந்த வண்டிகளின் வெளிச்சம் அதை விரட்ட முயன்று கொண்டிருந்தது. கண்ணைக் கசக்கிக் கொண்டு வெளியே பார்த்தவன் வானதி ஜன்னல் வழியே பார்ப்பதைக் கண்டு அவளிடம் கேட்டான்.

    என்னாச்சு... அவன் குரலில் திரும்பியவள் உதட்டைப் பிதுக்கி, ஆக்சிடன்டா தோணுந்து... எனவும் அதற்குள் பஸ்சிலிருந்த பயணிகள் கீழே இறங்கி என்னவென்று பார்க்க விரைந்து கொண்டிருந்தனர்.

    லக்கேஜ் இருப்பதால் போகலாமா, வேண்டாமா என அவன் யோசித்துக் கொண்டிருக்க, வானதி வேகமாய் கீழே இறங்கி அங்கிருந்த மலையாளிப் பெண் ஒருத்தியிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள்.

    சற்று நேரத்தில் திரும்பி வந்தவள் பெருமூச்சுடன் தனது இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

    என்னவென்று அவளிடம் கேட்கலாமா என அவன் யோசிக்க, பாவம் டிரைவர், உறக்கக் கலக்கத்தில் டிவைடரில் கொண்டு இடிச்சு தோணுந்து... அவளே சொல்லவும் கவனமாய் கேட்டதால் அவனுக்குப் புரிந்தது.

    ஓ... யாருக்காச்சும் அடி பட்டிருக்கா...

    ம்ம்... டிரைவர்க்கு நல்ல அடி... ஆம்புலன்ஸ் வரணம்...

    ம்ம்... அவன் அமைதியாக சில நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது. அடி பட்டவர்களை எடுத்துக் கொண்டு விரைய, பயணிகள் அவரவர் இடத்தில் வந்து அமர்ந்தனர். சிறிது நேரத்தில் அங்கே எல்லாம் கிளியராகி இருக்க பேருந்து புறப்பட்டது.

    மீண்டும் பயணிகள் நித்திரையைத் தொடர சிலர் மட்டும் உறக்கம் கலைந்து அமர்ந்திருந்தனர். ஐந்து மணிக்கு மீண்டும் ஒரு பெட்ரோல் பங்கில் பேருந்து நின்றது. வண்டி அரை மணி நேரம் அங்கே நிற்கும் என்றார் கண்டக்டர்.

    அருள் எழுந்திருக்கவும், நெளிந்து கொண்டே அமர்ந்திருந்த வானதி தயக்கத்துடன் அவனை ஏறிட்டாள்.

    நான் பர்ஸ்ட் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரட்டே, ப்ளீஸ்... முகமும் உதடும் சுளித்து அவள் சொன்னது அவளது அவசரத்தை சொல்ல தலையாட்டியவன் அமர்ந்திருந்தான்.

    பத்து நிமிடத்தில் திரும்பி வந்தவள் முகம் கழுவி தலையை ஒதுக்கி பளிச்சென்று இருந்தாள்.

    தேங்க்ஸ், நிங்கள் போயிக்கோ... அவள் சொல்லவும் எழுந்து சென்றவன் பாத்ரூம் சென்றுவிட்டு இரண்டு காபியுடன் பேருந்துக்கு திரும்பினான்.

    அவளிடம் நீட்ட புன்னகைத்து தேங்க்ஸ்... சொல்லி வாங்கிக் கொண்டாள் வானதி. அமைதியாய் இருவரும் குடித்து முடித்தனர். வெளியே சென்றவர்கள் ஒவ்வொருவராய் அவரவர் சீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். டிரைவர் புகை இழுத்துக் கொண்டு கண்டக்டரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

    சூரியன் கிழக்கு திசையில் கடமைக்குத் தயாராகிக் கொண்டிருக்க அதிகாலைக் காற்று சில்லென்று தேகம் தழுவி குளிர வைத்தது. சென்னை எத்தர மணிக்கு போகும்... வானதி கேட்கவும் வெளியே பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பினான்.

    என்ன கேட்டிங்க...

    சென்னைக்கு பஸ் எப்ப ரீச் ஆகும் கேட்டது...

    ஒன்பது மணி ஆகிடும்... என்றான் அவன்.

    என்னது, ஒம்பதா... என்டே ஈஸ்வரா... அவள் தலையைக் குலுக்கிக் கொள்ள அவன் கேட்டான்.

    எதுவும் எமர்ஜன்சி வொர்க்கா...

    ஹா, அங்கனயும் பரயாம்... நிங்கள் சென்னையில் எவிடயா...

    தாம்பரம்... என்றதும் ஆச்சர்யமாய் ஏறிட்டாள்.

    தாம்பரம்... ஆஹாங், நானும் அங்கோட்டு தன்னே... என்றவள் மலர்ச்சியுடன் அடுத்த கேள்விக்குத் தயாராக, ஓ... என்றவன் மேலே பேச தயங்கி மொபைலை எடுத்து நோண்டத் தொடங்கினான்.

    தாம்பரத்தில் எவிடயா... அவளது கேள்வியை கவனிக்காத போல மொபைலில் கவனமாய் இருக்க, அவனுக்கு பேச விருப்பமில்லை என்று புரிந்தவள் அமைதியானாள்.

    சாலையில் காலை நேர பரபரப்பு தொடங்கியிருக்க பால் வண்டிகளும் இரு சக்கர வாகனங்களும் சாலையில் பறந்து கொண்டிருந்தது. அடுத்து பள்ளி வாகனங்களும் பணிக்கு செல்வோரின் வாகனங்களுமாய் சாலை நிறையத் தொடங்கியது. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த வானதி பிறகு அவனிடம் பேசவில்லை. சரியாய் ஒன்பது பத்துக்கு சென்னையைத் தொட்டு இயக்கத்தை நிறுத்திக் கொண்டது பேருந்து.

    அதுவரை அமைதி காத்த பயணிகளுக்கு சட்டென்று இறங்க என்ன அவசரமோ முன்னில் போய் நின்று கொண்டிருந்தனர். வானதியும் தனது பாகை எடுத்துக் கொண்டு சுற்றிலும் பயப்பார்வை பார்த்துக் கொண்டே இறங்கினாள். அவளுக்குப் பின்னில் வந்த அருள்மொழி வர்மனும் தனது பேகைத் தோளில் போட்டுக் கொண்டு உற்சாகமாய் இறங்கினான்.

    அந்த சேச்சி அடுத்து ஏதாவது மலையாளத்தில் சம்சாரிக்கும் முன்னாடி இடத்தைக் காலி பண்ணுவோம்... என நினைத்தவன் பைக்கை பார்க் செய்திருந்த டூவீலர் ஸ்டாண்டை நோக்கி நடந்தான். தனது பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கிப் பறந்தான்.

    அப்போ நினைச்சேன்... ஒண்ணு நீ என்னைக் கல்யாணம் பண்ணனும் இல்ல நீ கல்யாணமாகாமயே இருந்துடனும்னு...

    மல்லிகா மணிவண்ணனின் ஆன்கோயிங் தொடர் ஒன்றில் ஆர்வமாய் மூழ்கி இருந்தார் சகுந்தலா. மொபைலை படிக்க வசதியாய் பிடித்துக் கொண்டு குனிந்த தலை நிமிராத குமரிப்பெண் போல் அடுக்களையில் நின்று கொண்டிருந்தவர் அடுத்து என்னவென்று படிப்பதற்குள் கணவரின் குரல் இடையிட்டு கதையோட்டத்தை தடைப்படுதியது.

    சகு, டிபன் எடுத்து வை... பூஜையறையில் கணவரின் குரல் கேட்க, சரிங்க... குரல் கொடுத்தார் சகுந்தலா.

    அடுப்பை பற்றவைத்து ஹார்லிக்ஸ் கலக்க பாலை சூடாக்க வைத்துவிட்டு ஒரு கையில் மொபைலில் மீதித் தொடரைப் வாசித்துக் கொண்டிருக்க மகளின் குரல் கேட்டது.

    என்னம்மா, டிபன் எடுத்து வைக்காம மொபைலை நோண்டிட்டு இருக்க... அப்பாகிட்ட சொல்லட்டுமா...

    கிண்டலாய் கேட்ட மகளிடம் முறைப்புடன் திரும்பியவர், மகளாடி நீ... இல்ல, நீ எனக்கு மகளான்னு கேக்கறேன்... என் மாமியார் கூட இப்படில்லாம் என்னை விரட்டினதில்லை... நான் இப்பதான் மொபைல கைல எடுத்தேன்... அதுக்குள்ள பொறுக்கல... போ, போயி டேபிள்ள உக்காரு... கொட்டிக்க எடுத்திட்டு வரேன்... என்றவர் தோசைக்கல்லை அடுப்பில் சிம்மில் வைத்துவிட்டு ஹார்லிக்ஸை கலக்கினார்.

    ஆவி பறக்கும் இட்லியோடு இரண்டு வகை சட்னியும் காத்திருக்க இடுப்பில் வேஷ்டி, மார்பில் ஒரு துண்டுடன் வந்தமர்ந்தார் சகுந்தலாவின் கணவர் சுந்தரம்.

    அவருக்கு தட்டை வைத்து இட்லி, சட்னியைப் பரிமாற, அருள் போன் பண்ணினானா... என்றார் சாப்பிட்டுக் கொண்டே.

    ஆமாங்க, கொஞ்ச நேரத்துல வந்திருவேன்னு சொன்னான்... என்றார் சகுந்தலா.

    அப்பா என்னை காலேஜ்ல டிராப் பண்ணிடறீங்களா... மகள் கேட்கவும், "ம்ம்... என்றவர் இட்லியில் கவனம் வைத்தார். அவளுக்குத் தட்டை வைத்து இட்லியை வைக்க முகம் சுளித்தாள் குந்தவை.

    இன்னைக்கும் இட்லிதானா... என்பது போல் அன்னையை பார்த்தாலும் தந்தை இருந்ததால் கேட்கவில்லை. குழந்தைகளுக்கு தந்தையிடம் உள்ள பயம் தெரியுமாதலால் மகளை நோக்கி பழிப்புக் காட்டினார் சகுந்தலா.

    சகுவின் கை மணத்தில் இட்லி பஞ்சு போல இருக்க திருப்தியாய் சாப்பிட்டவர் எழுந்தார். நல்ல ஒரு மனைவிக்கு கணவனின் வயிற்றை முதலில் நிரப்பத் தெரிந்திருக்க வேண்டும்... அப்போதுதான் ஈஸியாய் அவர் மனதை நிரப்ப இயலும்... சகுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

    தந்தை சென்றதும், இன்னும் ஒண்ணு வச்சுக்க குந்தவை... என்ற அன்னையை முறைத்தவள், பிடிக்காத இட்லியை ரெண்டு தின்னதே பெருசு... இதுல இன்னும் ஒண்ணா... போதும் போதும்... என்றபடி எழுந்திருக்க, உனக்கு வேணும்னா தோசை சுட்டுத் தரவா... என்று ஆசை காட்டினார் அன்னை.

    உடனே மலர்ந்தவள் வேகமாய் தலையாட்டி, ம்ம்... சீக்கிரம் மா... அப்படியே சாரல் மாதிரி இட்லிப் பொடியை தூவி நெய் ஊத்திக் கொண்டு வாம்மா... என்று கொஞ்சினாள் மகள்.

    ம்ம்... நல்லா நாக்கை வளர்த்து வச்சிருக்க... உன்னைக் கட்டிக்கப் போற வந்தியத்தேவன் எங்கிருந்து வரப் போறானோ... சொல்லிக் கொண்டே தோசையை ஊற்ற, இம்சை பண்ணாத மா... அந்தப் பேருல மட்டும் நீ எனக்கு மாப்பிள்ளை பார்த்தேன்னு வை... நான் அவ்வையாரே ஆனாலும் சரி, கல்யாணத்துக்கு மட்டும் சம்மதிக்க மாட்டேன்... படிக்கணும், படிக்கறது எனக்கும் பிடிக்கும் தான்... ஆனா பைத்தியமாகுற அளவுக்கு படிக்கக் கூடாது...

    யாருடி பைத்தியம்... போடி, ரசனை கெட்டவளே... நான் கதைக் களஞ்சியம் டி... போ, உனக்கு தோசை கேன்சல்... என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள, அச்சோ, சரி சரி... இந்த வீட்டின் கதைக் களஞ்சியமே... நான் சொன்னது தப்பு... தோசையைக் குடு... என்று வேகமாய் வாங்கிக் கொண்டு மேசையில் இருந்து மொக்கத் தொடங்கினாள் மகள்.

    நீ என்ன பேசினாலும் உன் சமையலை அடிச்சுக்க ஆளே இல்ல மா... ப்ளீஸ், இன்னொரு தோசை மா... தலையை சரித்து உதட்டை சுளித்து கேட்ட மகளின் அழகில் அடுத்த தோசை தயாராகிக் கொண்டிருந்தது.

    அது பிளேட்டுக்கு வந்ததும், உஸ்ஸ்... ஒரு தோசைக்கு இந்தம்மாவை எப்படிலாம் ஐஸ் வைக்க வேண்டிருக்கு... என்று சொன்னபடி உள்ளே தள்ளியவள், லவ் யூ சகு...

    என்று கன்னத்தில் முத்தமிட, ஏய்... ச்சீ போடி... என்று கடிந்தபடி துடைத்துக் கொள்வது போல் காட்டினாலும் அன்னையாய் அவர் மனம் குளிர்ந்திருந்தது. சுந்தரம் உடை மாற்றி தயாராகி வர, அவருடன் கிளம்பினாள் குந்தவை. இருவரும் காரில் கிளம்பியதும் சிறிது நேரத்திலேயே வாசலில் பைக் சத்தம் கேட்டது.

    ஆஹா, பிள்ளை வந்துட்டான் போலருக்கு... என்றபடி வாசலுக்கு வர மகனைக் கண்டதும் மலர்ந்தார்.

    வாப்பா... பஸ் லேட்டா...

    இல்லம்மா லேட் ஆகும்னு தான் நினைச்சேன்... ஆனா டிரைவர் நல்ல ஸ்பீட்... கரக்ட் டைமுக்கு வந்தாச்சு... என்றவன் போர்ட்டிகோவில் வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும், தங்கையும் கிளம்பியாச்சா... நீங்க சாப்டிங்களா... செம பசிம்மா... குளிச்சிட்டு வந்திடறேன்... சாப்பிட்டு பேசிக்கலாம்..." என்றபடி அவனது அறைக்கு செல்ல அவனுக்கு தோசை ஊற்ற சென்றார் சகுந்தலா.

    அதென்னவோ குழந்தையா இருக்கும்போதும், பெரியவங்க ஆகும்போதும் விரும்பி சாப்பிடற இட்லி, இளமைப் பருவத்துல சில பிள்ளைகளுக்குப் பிடிக்காம போயிடுது... அதே தோசைன்னா விரும்பி சாப்பிடறாங்க... மனதுள் நினைத்தபடி மகனுக்குப் பிடித்தவாறு முறுகலாய் தோசை வார்க்கத் தொடங்கினார்.

    மூன்று படுக்கை அறைகள் வசதியுடன் ஒரு குட்டி சைஸ் பங்களா அவர்களின் வீடு... முன்னில் கார் பைக் வைக்க போர்ட்டிகோ. இப்போது அதைவிடப் பெரிதாய் கட்டும் அளவுக்கு வருமானம் இருந்தாலும் முதன் முதலில் அவர்களுக்காய் பார்த்துக் கட்டிய வீடு என்பதால் வேறு யோசிக்க மனம் வரவில்லை. மகன் குளித்து தலையில் ஈரத்துடன் வர, இவ்ளோ வளர்ந்தாச்சு... இன்னும் சரியா துவட்ட தெரியலை... என்றபடி கையிலிருந்த டவலை வாங்கி துவட்டி விட்டார்.

    பிஜூ கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா...

    ம்ம் மா... உன்னைக் கூட்டிட்டு வரலைனு கோச்சுகிட்டான்... சரி, ஒய்பைக் கூட்டிட்டு சென்னைக்கு விருந்துக்கு வாடா... அம்மாகிட்ட வாழ்த்து வாங்கிக்கலாம்னு சமாளிச்சேன்...

    ம்ம்... நல்ல பிள்ளை... இங்க ஹாஸ்டல்ல இருக்கறப்ப நம்ம வீட்டுக்கு வரும்போது அம்மா, அம்மான்னு வாய் நிறைய கூப்பிடுவான்... உன் அப்பா பத்தி தான் உனக்கு தெரியுமே... உன்னை திருச்சூர் அனுப்பினதே பெருசு... நானும் போறேன்னு சொல்லியிருந்தா உன்னையும் அனுப்பிருக்க மாட்டார்... ஹூம்... ஒரு பெருமூச்சுடன் சொல்லிக் கொண்டே தோசையை எடுத்து வந்தவர் அதற்குப் பின் மௌனமாகிவிட்டார். அன்னையின் மௌனத்தின் காரணம் அருளுக்குப் புரிய அமைதியாய் சாப்பிட்டு எழுந்தான்.

    எங்க போயி விதவிதமா சாப்பிட்டாலும் என் அம்மா கையால சாப்பிட்டா தான் வயிறோட மனசும் நிறையுது... சொல்லிக் கொண்டே எழுந்தவனை நோக்கி புன்னகைத்தார்.

    இப்ப இப்படிதாண்டா மகனே சொல்லுவிங்க... கல்யாணமாகி பொண்டாட்டி வந்துட்டா அப்புறம் அம்மா சமையல் பிடிக்காமப் போயிடும்... என்று சிரிக்க அவன் முறைத்தான்.

    யார் வந்தாலும் என் அம்மா சமையலை அடிச்சுக்க முடியாது... இப்படில்லாம் சொன்னா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்... என்றான் அவன் வேண்டுமென்றே.

    அடடா, நான் சும்மா சொன்னேன்டா... அப்படியே என் மருமக என்னை விட நல்லா சமைச்சா, இந்தாடிம்மா... நீயே இனி எல்லாத்தையும் பார்த்துக்கன்னு சந்தோஷமா அவ கைல கொடுத்திட மாட்டேனா... என்றார் சகுந்தலா.

    ஓ... புரியுதும்மா, அப்ப உன் மருமகளை சமையல்காரி ஆக்கலாம்னு பிளான் போடற... என்றான் அவன் சிரிப்புடன்.

    இதென்னடா வம்பாப் போச்சு... வராத பொண்டாட்டிக்கு இப்பவே வக்காலத்து வாங்கிட்டு இருக்க... போயி கொஞ்சம் ரெஸ்ட் எடு... நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்...

    ம்ம்... நான் வேணும்னா வண்டில டிராப் பன்னட்டுமாம்மா...

    வேண்டாம்டா அருளு... ராத்திரி பஸ்ல சரியா தூங்கிருக்க மாட்ட... நீ தூங்கு... நான் நடந்து போயிக்கறேன்...

    சரிம்மா, பத்திரமா போயிட்டு வாங்க... என்றவன் ரெஸ்ட் எடுக்க செல்ல சகுந்தலா கோவிலுக்கு கிளம்பினார்.

    நான்கு வீதி தள்ளியிருந்த மாரியம்மன் கோவிலை நோக்கி நடந்தவர் காலை வெயில் சுள்ளென்று அடித்ததில் முகம் சிவக்க வேகமாய் நடந்தார். சகுந்தலா மஞ்சள் நிறத்தில் சற்று பூசிய உடல்வாகுடன் கம்பீரமாய் அழகாய் இருந்தார்.

    உடலில் சக்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் எல்லாம் குடி இருக்கத் தொடங்கி சில வருடங்கள் ஆகியிருந்தது.

    பூஜைக்குத் தேவையான பொருட்களை முன்னிலிருந்த கடையில் வாங்கிக் கொண்டு அம்மன் கோவிலுக்குள் நுழைந்தார்.

    தாயே, மகமாயி... அம்மனை அழைத்துக் கொண்டே உள்ளே சென்றவர் அருள் வடியும் முகத்துடன் அழகான புன்னகையுடன் நின்று கொண்டிருந்த அன்னையை மனமுருக வேண்டி நின்றார்.

    அம்மா, எனக்கு என்ன வேணும்னு உனக்குத் தெரியும்... என் மனசுல ரொம்ப நாளா இருக்கற ஒரே ஒரு குறையைத் தவிர சந்தோஷமா தான் இருக்கேன்... அந்தக் குறையையும் நீ சீக்கிரமே தீர்த்து வச்சிடு தாயே... கை கூப்பி நின்றவரின் கண்கள் பனிக்க மணியின் ஒலியையே அம்மனின் வாக்காய் நினைத்து சந்தோஷமாய் கண்ணைத் திறந்தவர் திரும்பிப் பார்த்தார்.

    சுரிதார் அணிந்த பெண்ணொருத்தி சற்று உயரத்தில் இருந்த கோவில் மணியை எம்பி அடித்துக் கொண்டிருந்தாள். சந்தோஷ சகுனத்தில் மனம் நிறைய தீபாராதனையைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு பிரகாரத்தை வலம் வந்து மற்ற கடவுள்களையும் வணங்கிவிட்டு வெளியே வந்து அமர்ந்தார்.

    மனதுக்குள் ஏதேதோ சம்பவங்கள் வழக்கம் போல் மாறி மாறி சந்தோஷமும் துக்கமுமாய் மனதை அழுத்தியது. சிறிது நேரம் அமர்ந்திருந்தவர் வீட்டுக்கு செல்ல எழுந்திருக்க தலை சுற்றி அப்படியே சாய, பிரகாரத்தை சுற்றி வந்த சுரிதார் அணிந்த பெண் வேகமாய் தாங்கிக் கொண்டாள்.

    அச்சோ, ஆன்ட்டி... என்றவள் அவளது நெஞ்சில் அவரை சாய்த்துக் கொள்ள வேறு சில பெண்களும் ஓடி வந்தனர்.

    என்னாச்சு மா... என்று கேட்க, கொறச்சு வெள்ளம்... என்று சைகையில் கேட்க, ஒரு பெண்மணி வேகமாய் தன்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலை நீட்டினார்.

    கண் மூடி மயக்கத்தில் இருந்த சகுந்தலாவின் முகத்தில் சட்டென்று நீர்த்துளிகள் விழவும் உணர்வு திரும்ப கண்ணைத் திறக்க முயல வாயில்

    Enjoying the preview?
    Page 1 of 1